மேலும் முஸ்லிம்களை அவமதிக்கும் வகையிலான காட்சிகளை படத்திலிருந்து நீக்குவதாகவும் கூறி இருக்கின்றார்கள்....இது சம்பந்தமாக முருகதாஸ்,விஜய்யின் அப்பா, தாணு ஆகியோர் கூறியதாவது "‘துப்பாக்கி படம் யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் எடுக்கப்படவில்லை. அப்படி யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் அதற்காக வருந்துகிறோம். பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்.
இது நமக்கு கிடைத்த வெற்றி..!முஸ்லிம்களை தவறாக காட்டிய படம் இனி இதுவே கடைசி படமாக இருக்கட்டும்...குட்ட குட்ட குனியாமல் திருப்பி குட்டினால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்....!
இஸ்லாமிய சகோதரர்கள் சொன்னதைக் கேட்டோம். உண்மையிலேயே மிகுந்த வேதனைக்குள்ளானோம். பிரச்சினைக்குரிய சில காட்சிகளை படத்திலிருந்து நீக்கிவிடுகிறோம். இந்தக் காட்சிகளை வேண்டுமென்றே நாங்கள் வைக்கவில்லை. தெரியாமல் இடம்பெற்று விட்ட இந்த காட்சிகளை நீக்குகிறோம்.
முஸ்லிம்கள் நமது தொப்புள்கொடி உறவுகள் என்பது கால காலமாக நிலவி வரும் சூழல். அதைக் காப்பாற்ற நாங்கள் உறுதுணையாக இருப்போம்," என்றனர்."இது நமக்கு கிடைத்த வெற்றி..!முஸ்லிம்களை தவறாக காட்டிய படம் இனி இதுவே கடைசி படமாக இருக்கட்டும்...குட்ட குட்ட குனியாமல் திருப்பி குட்டினால் என்ன ஆகும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம்....!
இனி முஸ்லிம்களை எந்த படத்திலாவது கிள்ளுகீரையாக பயன்படுத்தினால் இதுதான் முடிவு...முஸ்லிம்களை மட்டுமல்ல ஏனைய அனைத்து மதத்தினரையும் சினிமா எடுக்கிறேன் பேர்வழி என்று அவமதிக்கும் வகையில் இருக்க கூடாது என்பதற்கு இது ஒரு அழகான ஆழமான முற்றுபுள்ளி........
சினிமாகாரர்களே உங்கள் தொழில் சினிமா எடுப்பது மட்டுமே....அதை மட்டும் இனி பாருங்கள்..எந்த மதத்தையும் புண்படுத்தி இது போல வாங்கி கட்டி கொள்ளாதீர்கள்...
இதுவே தொடக்கம்...இனி எந்த படத்திலும் முஸ்லிம்களை தவறாக காட்டினால் இது போன்று போராட்டம் நடத்தி அவர்களுக்கு சவுக்கால் அடிகொடுக்க வேண்டும்.....
இந்த விசயத்தில் ஒற்றுமையாக செயல்பட்ட அனைத்து முஸ்லிம் அமைப்புகளுக்கும் நன்றி .......
மேலும் இது பற்றிய எனது முந்தய பதிவுக்கு ஆதரவு கொடுத்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் நன்றி....
| Tweet |
.jpg)



.jpg)
.jpg)
.jpg)














