29 பிப்ரவரி 2012

பயோடேட்டா :தமிழ்நாடு போலீஸ்


பெயர் : தமிழக காவல்துறை

தொழில்: மக்களை பாதுகாப்பது !?

கற்பழிப்பு : அதே மக்களிடம் அவ்வப்போது சில காட்டுமிராண்டி அதிகாரிகள் செய்வது

உபதொழில்:லஞ்சம் வாங்குவது

பொது அடையாளம் : தொப்பை

ஆளும்கட்சி: எஜமானர்கள்

எதிர்க்கட்சி:முன்னாள் எஜமானர்கள்

நேர்மை :ஒரு சில அதிகாரிகளிடம் மட்டும் இருப்பது

நல்லபெயர் : அந்த ஒருசில அதிகாரிகளால் கிடைப்பது

கெட்டபெயர்: மீதம் உள்ள மற்ற அதிகாரிகளினால் கிடைப்பது

அடிபணிந்து போவது : அரசியல்வாதிகளிடம்

அலட்சியம்,எரிந்து விழுவது : புகார் கொடுக்க வரும் சாமானியனிடம்

மறந்தது :கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு

மறக்காதது : மாமூல், லஞ்சம்,ஊழல்

கேப்டன் விஜயகாந்த்: பல படங்களில் மானத்தை காப்பாற்றியவர்

பொழுதுபோக்கு: தற்போதைக்கு எதிர்க்கட்சியினரையும்,சசி குருப்பையும் கைது செய்வது


சாதனை : என்ன ஆனாலும் குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடுவது

எதிரிகள்: பலசமயம் மனித உரிமை அமைப்புகள் ,சிலசமயம் வக்கீல்கள்

என்கவுன்டர் : தவறான நபர்களை தண்டிக்க எடுக்கும் சரியான(சர்ச்சையான )நடவடிக்கை

28 பிப்ரவரி 2012

பெண்களை செக்சி என சொன்னால் தவறில்லையாம் ...அழகிரி,ரஜினியின் ஒரு கோடி (நொறுக்கு தீனி)


யாராவது பெண்களைப் பார்த்து செக்ஸியாக இருக்கிறீர்கள் என்று சொன்னால் அதை பெரிதுபடுத்தத் தேவையில்லை. அது தவறான வார்த்தை கிடையாது. அதை பாசிட்டிவாகவே எடுத்துக் கொள்ள வேண்டும். அழகாக இருப்பதைத்தானே செக்ஸி என்கிறார்கள். எனவே அதில் தவறு ஒன்றும் கிடையாது..........இவ்வாறு கூறி இருக்கிறார் மம்தா சர்மா....இவர் யார் தெரியுமா? தேசிய மகளிர் ஆணையத் தலைவி ....அட கொடுமையே ...அட கொடுமையே....


பசங்க சும்மா இருந்தாலும் இந்த பாட்டி சும்மா இருக்காம தூண்டி விடுதே...இதெல்லாம் நமது நாட்டில் நடைமுறை சாத்தியமா?ஒருவேளை மம்தா சர்மாவின் குடும்பத்தில் உள்ளவர்களை அவ்வாறு சொன்னால் அவர் அதை பாசிடிவ்வாக எடுத்துகொள்வார் போல....இல்லை நாலு பேர் குடித்துவிட்டு போய் அவரிடமே நீங்கள் ரொம்ப செக்சியாக இருக்குறீர்கள் என சொன்னாலும் தவறாக எடுதுகொள்ளமாட்டார் என நிச்சயமாக நம்பலாம்...

அவர் வேற யாராக இருந்தது இந்த கருத்தை சொன்னாலும் அதை யாரும் பெரிதுபடுத்த போவதில்லை...அவர் இருப்பது ஒரு பெரிய பொறுப்பில்....என்னத்த சொல்றது....!

................................. ........................................... ...........................................


சங்கரன்கோவில் இடைத் தேர்தலில் திமுக வேட்பாளர் ஜவஹர் சூரியக்குமார் 20,000 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். மின் தடை காரணமாக வேட்பு மனுவைப் பார்க்கக் கூட தேர்தல் அதிகாரியால் முடியவில்லை. இதையே சொல்லி வாக்கு கேட்போம் என்று கூறியுள்ளார் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி.


உங்களை யார் சார் கரண்ட் இல்லாத நேரத்தில போய் மனுதாக்கல் செய்ய சொன்னது? ஹி ஹி...ஆனாலும் ரொம்ப தில்லுதான்...திரும்பவும் இத்தனை வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறி இருக்கிறாரே....பார்ப்போம் அஞ்சா நெஞ்சனின் பார்முலா என்ன ஆக போகிறது என்று..!

........................................ ................................................. .......................

ஒரு தொகுதியில் நடக்கும் இடைதேர்தலுக்காக 32 அமைச்சர்களை நியமித்து இருக்கிறார் ஜெயலலிதா....இவர்கள் எல்லாம் தமிழ்நாட்டுக்கு அமைச்சர்களா ?இல்லை சங்கரன்கோவிலுக்கு மட்டும் அமைச்சர்களா?எப்பாடு பட்டாலும் தோற்கக்கூடாது என ஜெ நினைக்கிறார்...இவ்வாறு நினைப்பதே அவருக்கு கிடைத்த தோல்வி....

................................................ ......................................... ...............................

ஒருவழியாக சென்னைக்கும் இப்போது இரண்டு மணி நேரம் பவர் கட்....நாங்கள் பெற்ற இன்பத்தை இப்போது சென்னை மக்களும் அனுபவிக்க போகிறார்கள் ....இதுவே தாமதம் என்கிறேன் நான்....

அது என்ன ஓரவஞ்சனை....எல்லாரும் இந்நாட்டு குடிமக்கள் என்றால் எல்லாவற்றையும் சேர்ந்துதானே அனுபவிக்க வேண்டும்? சென்னையில் மட்டுமா தொழிற்சாலைகள் இயங்குகின்றன...?சென்னையில் மட்டுமா பள்ளிகள் இருக்கின்றன?சென்னை தமிழகத்தின் தலைநகரமாக இருப்பதால் மற்ற இடங்கள் மாதிரி எட்டு மணிநேரம் மின் தடையிலிருந்து விதிவிலக்கு அளித்து இரண்டு மணி நேரம் பவர் கட் செயல்படுத்தி இருப்பது நல்லது..இதன் மூலம் தமிழகம் முழுக்க மின்தடை நேரம் குறையும் என எதிர்பார்க்கலாம்... !

............................. .................................. ................................................

நதிகள் இணைப்பு திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. இத்திட்டத்தைச் செயல்படுத்தவும் வழிகாட்டவும் உயர்நிலைக் குழுவை அமைத்தும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரொம்ப நல்ல விஷயம்....நல்லத சீக்கிரம் ஆரம்பிங்கப்பா...

உடனே பிடிங்கப்பா ரஜினியை....நதிகள் இணைப்புக்கு ஒரு கோடி ரூபாய் தருவதாக அவர் வாக்கு கொடுத்து இருக்கிறார்....அவர்தான் வாக்கு கொடுத்தா அதை செய்யாமல் விட மாட்டாரே !


ஒரே நாட்டில் இருந்தது கொண்டு தண்ணீருக்காக அடித்து கொள்வது எவ்வளவு கேவலமான விஷயம்..!இதன் மூலமாவது அதற்கு முற்றுபுள்ளி இப்ப இல்லாட்டியும் விரைவில் கிடைக்கட்டும்...

27 பிப்ரவரி 2012

இந்தியாவை திகைக்க வைத்த டாப் 10 ஊழல்கள்


இந்தியாவில் 12 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் மதிப்பு எவ்வளவு தெரியுமா... ரூ 80 லட்சம் கோடி! அதாவது ரூ 1.80 ட்ரில்லியன் என்று சமீபத்திய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.


இந்த பணம் இன்று இந்தியாவின் கஜானாவில் இருந்தால் இந்தியா ஒரு வல்லரசுதான்....


இதோ அந்த ஊழலில் சில 'துளிகளை' இங்கே பார்க்கலாம்:

1. 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் - ரூ 1.76 லட்சம் கோடி

( தமிழனாக இருந்து நமக்கு அந்த பெருமையை கொடுத்துள்ளார் ராசா )
இந்தத் தொகை, மன்மோகன் சிங்கின் ஆட்சிக் காலத்தில் நடந்த முறைகேடுகளின் மதிப்பு மட்டும்தான். ஆனால் 2001-ம் ஆண்டிலிருந்தே இதுபோல முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது. அதையும் சேர்த்தால் கிட்டத்தட்ட ரூ 3 லட்சம் கோடியைத் தாண்டும் ஊழல் அளவு என்கிறார்கள்.

2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்துள்ள இந்த ஊழல் குறித்து உச்ச நீதிமன்றம் அடித்துள்ள கமெண்ட் இது: 'இந்தியாவில் இதுவரை நடந்த ஊழல்களை வெட்கப்படச் செய்துள்ளது 2 ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு' ('The spectrum scam has put 'all other scams to shame!'.)

2. சத்யம் மோசடி -ரூ 14000 - 25,000 கோடி:

இவ்வளவுதான் ஊழல் நடந்தது என்று இன்னும் கூட அறுதியிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு தோண்டத் தோண்ட முறைகேடுகள் வரைமுறையற்று கொட்டிக் கொண்டே இருப்பது ராமலிங்க ராஜுவின் சத்யம் மோசடி ஸ்பெஷல்!

இது தனியார் துறையில் நடந்ததுதானே என்று விட்டுவிட முடியாது. பொதுமக்களின் பணம் சம்பந்தப்பட்டது.

இவ்வளவையும் செய்துவிட்டு, சிறையில் செல்போன், சாட்டிலைட் டிவி, பிராட்பேண்ட் இணைப்புடன் லேப்டாப், ஷட்டில்காக் விளையாட்டு என ராஜபோகத்தில் திளைத்துக் கொண்டிருக்கிறார் ராமலிங்க ராஜூ.

சின்னதாகத் திருடி மாட்டிக் கொள்பவர்களை செக்குமாடாய் அடித்தே கொல்கிறார்கள்!

3. எல்ஐசி - வங்கித் துறை கடன் ஊழல் - மதிப்பைக் கணிக்க முடியாத அளவு பெரும் தொகை!

மாணவர்கள் படிக்க கடன்கேட்டால், வீட்டுப் பத்திரம் தொடங்கி அனைத்தையுமே அடமானமாக பிடுங்கப் பார்க்கும் இந்திய வங்கித் துறை, பெரும் பணக்காரர்களின் டுபாக்கூர் நிறுவனங்களுக்கு பல்லாயிரம் கோடி ரூபாயை கடனாக வாரி வழங்கியுள்ளதை சிபிஐ கண்டுபிடித்தது. காரணம்... இந்தக் கடன்களில் குறித்த சதவீதம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு லஞ்சமாகக் கைமாறியதுதான்.

இன்னொரு பக்கம் எல்ஐசி எனும் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் வீட்டுக் கடன் பிரிவு பல ஆயிரம் கோடிகளை வாரி வாரி பெரும் தொழிலதிபர்களுக்கு வழங்கியுள்ளன. இந்தத் தொகைதான் ரூ 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கே முக்கிய அடிப்படை என்பதும் வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வங்கித் துறை - எல்ஐசி ஊழலில் கைமாறிய லஞ்சத் தொகை எவ்வளவு என்பதை இன்னும் கூட மத்திய அரசால் சொல்ல முடியவில்லை. இப்போதைக்கு உத்தேசமாக ரூ 1 லட்சம் கோடி என்கிறது சிபிஐ.

4. ஹர்ஷத் மேத்தா (ரூ 5000 கோடி)

லட்சம் கோடிகளில் ஊழலைப் பார்த்துவிட்டவர்களுக்கு, ஹர்ஷத் மேத்தாவின் இந்த ஊழல் 'ஜுஜுபி'தான். ஆனால் இந்த ஊழல் நிகழ்ந்த 1991-ம் ஆண்டில் இது மாபெரும் தொகை. இன்றைய ஸ்பெக்ட்ரமுக்கு நிகரானது என்றுகூடச் சொல்லலாம்.

அதிகப்படியான விலை ஏற்றத்தை உருவாக்கி பங்குகள் விலையை ஏற்றி மக்களின் பல ஆயிரம் கோடியை ஸ்வாஹா செய்தவர் இவர்.

2002-ல் ஹர்ஷத் மேத்தா செத்துப் போய்விட்டாலும், அந்த முறைகேடுகள் தொடர்பான வழக்குகள் இன்னும் முடியவில்லை.

5. ஹஸன் அலிகான் (ரூ 80,000 கோடி)

ஹவாலா பணம் கடத்தியது மற்றும் வரி ஏய்ப்பின் மூலம் மட்டுமே ரூ 39120 கோடி பணத்தை கொள்ளையடித்தவர் இந்த ஹஸன் அலி. புனே நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் பார்ட்டி.

பல்வேறு வெளிநாட்டு வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிக் கட்டாத வகையில் இதுதவிர ரூ 40000 கோடிக்கு செட்டில் செய்யுமாறு வருமான வரித்துறை இவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

6. வெளிநாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் (ரூ 21 லட்சம் கோடி)

கிட்டத்தட்ட தினத்தந்தியின் சிந்துபாத் கதை மாதிரி ஆகிவிட்டது, இந்திய விவிஐபிக்களின் கறுப்புப் பணத்தைக் கண்டறியும் முயற்சியும். சுவிஸ் வங்கி உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகள் மற்றும் நிதி அமைப்புகளிடம் இந்திய தொழிலதிபர்களின் பணம் ரூ 21 லட்சம் கறுப்பாக பதுக்கி வைக்கப்ட்டுள்ளது. இது நன்கு தெரிய வந்துள்ள தொகை. இன்னும் வெளியில் தெரியாத தொகை எத்தனை லட்சம் கோடி என்று தெரியவில்லை.

7. தேயிலை ஊழல் (ரூ 8000 கோடி)

தேயிலைப் பயிர் சாகுபடியில் முதலீடு என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களிடம் ரூ 8000 கோடிக்கு மேல் வசூலித்து நாமம் போட்ட இந்த ஊழல் பலருக்கு நினைவிருக்குமா என்று கூடத் தெரியவில்லை.


8. கேதன் மேத்தா (ரூ 1000 கோடி)

ஹர்ஷத் மேத்தான் இந்த கேத்தனுக்கு குரு. இவரும் பங்குச் சந்தையை ஆட்டிப் படைத்து பணம் குவித்தார். போலிப் பெயர்களில் பங்குகளை வாங்கி, செயற்கையான டிமாண்டை உருவாக்கி, விலையை உயர வைத்து பங்குகளை விற்றார் இந்த கேத்தன். இதில் அடிக்கப்பட்ட கொள்ளை ரூ 1000 கோடி.

9. உர - சர்க்கரை இறக்குமதி ஊழல் (ரூ 1300 கோடி)

உரம் மற்றும் சர்க்கரை இறக்குமதி மூலம் மட்டுமே ரூ 2300 கோடி ஊழல் நடந்துள்ளது தொன்னூறுகளில். மேலும் மேகாலயா வனத்துறை ஊழல் ரூ 300 கோடி, யூரியா ஊழல் ரூ 133 கோடி மற்றும் பீகார் மாட்டுதீவன ஊழல் ரூ 950 கோடி (லாலு - ராப்ரி தேவி சம்பந்தப்பட்டது).

10. ஸ்கார்பென் நீர்மூழ்கி ஊழல் (ரூ 18,978 கோடி)

பிரான்ஸிடமிருந்து 6 நீர்மூழ்கிகளை வாங்கிய வகையில் 1997-ல் நடந்த மிகப் பெரிய ஊழல் இது. இதே காலகட்டத்தில் ராணுவத்தில் மேலும் ரூ 5000 கோடி ஊழல் வெளிவந்தது. பீகார் நில மோசடி ஊழல் ரூ 400 கோடி, பீகார் வெள்ள நிவாரண ஊழல் ரூ 17 கோடி, சுக்ராம் டெலிகாம் ஊழல் ரூ 1500 கோடி, எஸ்என்ஸி லாவாலின் மின்திட்ட ஊழல் ரூ 374 கோடி... என ஊழல் மலிந்த ஆண்டாகத் திகழந்தது 1997.

இவை தவிர மேலும் சில ஊழல்களும் இந்த 12 ஆண்டுகளில் நடந்துள்ளன.


இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்டவர்களில் ஓரிருவருக்குத்தான் தண்டனை அறிவிக்கப்பட்டது. மற்ற பெரும் ஊழல்களில் சம்பந்தப்பட்டோர், பதவியை ராஜினாமா செய்து விட்டு ஜாலியாக வாழ்க்கையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்! மக்களின் பலருக்கு இந்த ஊழல்களில் பெரும்பாலானவை மறந்தே போய்விட்டது.

இங்கே பட்டியலிடப்பட்டுள்ள ஊழல்களைப் படித்த பிறகு, "இது எப்போ நடந்தது?" என்று கேட்கிற அளவுக்கு மரத்துப் போயிருக்கிறார்கள். அதிகார வர்க்கம் இதற்காகத்தானே ஆசைப்பட்டது... அனுபவிக்கட்டும். இப்போதைக்கு வேறொன்றும் செய்வதற்கில்லை!
நான் படித்து மலைத்து போய்விட்டேன்....நீங்களும் மலைக்க வேண்டாமா......அதற்காகத்தான் இதை பகிர்ந்துள்ளேன்........

26 பிப்ரவரி 2012

மாரடைப்பா இல்லை சாதாரண நெஞ்சுவலியா?எப்படி கண்டுபிடிப்பது..?
சாதாரணமாக நாம் நெஞ்சுவலி என்றாலே அது, மாரடைப்புதான் என்று எண்ணும் அளவுக்கே மருத்துவத்தை பலர் அறிந்து வைத்திருக்கிறோம்.

வலியின் தன்மையைப் பொறுத்து ஒருவருக்கொருவர் நோயின் தன்மை வேறுபடுகிறது. எனவே அறிகுறிகளை அறிந்து, அதற்கேற்ப உரிய மருத்துவர்களை அணுகி தகுந்த சிகிச்சையைப் பெற வேண்டும்.

அதைவிடுத்து, ஐயோ நெஞ்சுவலிக்கிறதே, மாரடைப்புதான் ஏற்பட்டு விட்டதோ என தவறான கணிப்பை உங்களுக்கு நீங்களே கொள்ள வேண்டாம்.

உடல் வலி, அழுத்தம், இறுக்கம் போன்றவை உடல் நலமின்மையை உணர்த்துகின்றன.

ஒருவருக்கு கடினமான நெஞ்சு வலி இருக்கும். ஆனால் அவருக்கு பெரிதாக ஒன்றும் இருக்காது. ஒரு சிலருக்கு லேசான வலி இருக்கும். ஆனால், நோய் தீவிரம் அதிகம் இருக்கக்கூடும்.

உங்களுக்குத் தோன்றும் அறிகுறிகளை மருத்துவப் பரிசோதனையின்போது மருத்துவரிடம் எடுத்துரைக்க வேண்டும்.

குறிப்பாக உடலின் எந்தப் பாகத்தில் வலி ஏற்படுகிறது? ஓய்வின்போது வலி குறைகிறதா? இரவு பகல் வேளைகளில் எப்போது வலி அதிகமாக உள்ளது? என்பன போன்றவற்றை சொன்னால், அதற்கேற்ப சிகிச்சை முறைகள் உள்ளன.

மாரடைப்பு நோயானது பல்வேறு விதமான அறிகுறிகளை உடையது. இதயத் தசைகள் இறந்து சிதைவுறுவதாலேயே மாரடைப்பு ஏற்படுகிறது. இதயத் தசைகளுக்குத் தேவையான ஆக்ஸிஜன் கிடைக்கப் பெறாததால் ஏற்படும் அறிகுறிகளாவன:

நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவது; அதிக வியர்வை; நெஞ்சு இறுக்கம்; மூச்சுத் திணறல்; இடது தோள்பட்டை கைகள், தாடை மற்றும் பற்களில்கூட வலி பரவுதல் போன்றவை.

ஆண்களுக்குப் பொதுவாக நெஞ்சுப் பகுதியில் அழுத்தம் அதிகமாவதுபோல் தோன்றும். பெண்களுக்கு மூச்சுத் திணறல், மேல்வயிறு எரிச்சல் தோன்றி வாந்தி, குமட்டலுடன் அதிக வியர்வை தோன்றக்கூடும்.

அறிகுறிகளைத் தெரிந்து கொண்ட பிறகு மருத்துவப் பரிசோதனைகளைச் செய்து கொள்ளலாம். இதற்காக மருத்துவமனையில் தங்க வேண்டிய அவசியம் இல்லை.

பரிசோதனைகளைச் செய்து கொள்வதன் மூலம் நோய் தீவிரமாவதைத் தடுக்கலாம்.

எனவே நெஞ்சுவலிக்கு ஏராளமான காரணங்கள் உள்ள நிலையில், அதனை மாரடைப்பு என்று தவறாக நினைத்து வருந்தத் தேவையில்லை.
நன்றி: பத்திரிக்கை செய்தி

25 பிப்ரவரி 2012

சோனியா காந்திக்கு என ஒரு தனி சட்டமா?


தகவல் அறியும் உரிமை சட்டத்தால் என்னை ஒன்றும் கேள்வி கேட்க முடியாது என அதை தூக்கி குப்பையில் போட்டுள்ளார் சோனியா காந்தி...

சென்னையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வி.கோபாலகிருஷ்ணன் என்பவர், "கடந்த 2001-2011 வரையிலான காலத்தில், காங்., தலைவர் சோனியா தாக்கல் செய்த வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.


இதையடுத்து சோனியாவுக்கு வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடிதத்துக்கு சோனியா அனுப்பியுள்ள பதில்

எனது சொத்து கணக்கு, வருமானவரி செலுத்திய விவரங்கள் தனிப்பட்ட விஷயம்.

பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான் அதை தேவையில்லாத 3-வது நபருக்கு பரிமாற முடியாது.

அது எனது தனிப்பட்ட பாதுகாப்பு விவகாரத்தில் தலையிடுவதாகும். தனி நபர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை.

1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 138-வது பிரிவின் கீழ் வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அதில் அவர் கூறியுள்ளார்.(நன்றி பத்திரிக்கை செய்திகள் )

இது மாதிரி அவர் தகவலை வெளியிட மறுப்பது இது இரண்டாவது தடவை....


நாட்டின் பாதுகாப்பை விபரங்களை தவிர்த்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது...சோனியா காந்தியின் வருமான வரி கணக்கு விபரங்களால் நாட்டிற்கு என்ன ஆபத்து வர போகிறது?

இந்தியாவின் பாதுகாப்புக்கும் சோனியாவின் வருமான வரி கணக்குக்கும் என்னய்யா சம்பந்தம்?


அவர் ஒழுங்காக வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இருந்தால் அதை வெளியிட வேண்டியதுதானே....அதில் என்ன தயக்கம்?அப்புறம் எதற்காக இந்த சட்டம்?

சாமானியனுக்கு பொருந்தும் இச்சட்டம் சோனியாவுக்கு பொருந்தாதா?

அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சோனியா காந்தியிடம் எதுவும் கேட்க கூடாது என ஒரு சட்டம் கொண்டு வந்தால் இந்த பிரச்சினையே வராது...

24 பிப்ரவரி 2012

மதகலவரம் புதிதல்ல :நரேந்திர கேடி,அமெரிக்காதான் பிரச்சினை ..பிரதமர் (நொறுக்கு தீனி)


மதகலவரம் ஒன்றும் குஜராத்திற்கு புதிதில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் நரேந்திர கேடி...

குஜராத் கலவரம் தொடர்பான வழக்கில் சிறப்பு புலனாய்வுக்குழு முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தார் கேடி...இந்த அறிக்கையின் விவரங்கள், அதாவது மோடி அளித்த வாக்குமூலம் குறித்தத் தகவல்கள் கசிந்துள்ளன.அந்த கேடியின் வாக்குமூலம் இதோ...

குஜராத்தில் 2002-ம் ஆண்டில் மட்டுமே மதக்கலவரம் நடக்கவில்லை. குஜராத்துக்கு மதக்கலவரம் புதிதும் அல்ல.{ஆமாம் ...இந்த கேடிக்கு வேணும்னா அது ரத்தத்தில் ஊறிப்போன விசயமாக இருக்கலாம்..) நான் பிறப்பதற்கு முன்பே, குஜராத்தில் பல முறை மதக்கலவரங்கள் நடைபெற்றுள்ளன.(ஓஹோ ..அதனால்தான் இந்த கேடி பிறந்ததற்கு பிறகு கலவரங்களை நடத்தி இன்பம் கண்டு இருக்கிறார் போலும் !) கி.பி. 1714-ம் வருடத்தில் இருந்து வரலாற்றை புரட்டிப் பார்த்தால், குஜராத்தில் ஆயிரக்கணக்கான மதக்கலவரங்கள் நடந்திருப்பது பதிவாகி இருக்கும் ..(அந்த வரலாற்றோடு இந்த கேடியின் பெயரும் இடம் பெற வேண்டும் என துடித்து இருக்கிறார் .)


ஓகே ..இப்ப அந்த அயோக்கியனே செய்த தவறை ஒப்புகொண்டதுபோல குஜராத்தில் மத கலவரம் ஒன்றும் புதிதில்லை....அதனால்தான் நானும் கலவரத்தை நடத்தி இன்பம் கண்டேன் என வாக்குமூலம் கொடுத்துவிட்டார்...ஆனால் தண்டனைதான் கிடைக்காது ........


.............................. ....................................... .....................................................

பிசியாக தூங்கி கொண்டு இருந்த நமது பிரதமரை சோனியாவின் பேரன் எழுப்பிவிட்டான் போலும்..."அமெரிக்காவை மையமாகக் கொண்டு செயல்படும் சில அரசு சாரா அமைப்புகள், கூடங்குளம் அணு மின் நிலையம் செயல்படுவதற்கு இடையூறு ஏற்படுத்துகின்றன' என, அதிர்ச்சி !! தரும் தகவலை கூறியுள்ளார் மன்மோகன் சிங் ....அப்புறம் ஏன்யா அமெரிக்காவுக்கு கொடி பிடிக்கிறீர்கள் எல்லா விசயத்திலும்?


................................. ..................................... .............................................


இந்தியாவில் ஓரின சேர்க்கையை அனுமதிக்க முடியாது என உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் அபிடவுட் தாக்கல் செய்துள்ளது...நல்ல விஷயம்...

ஆணுக்கு பெண் ,பெண்ணுக்கு ஆண் என் இறைவன் படைத்துள்ள நிலையில் (,நாத்திகர்களுக்கு அவர்கள் பாணியில் இயற்கை அளித்துள்ள !)ஏன் இந்த கருமம் பிடித்த ஜோடி மாற்றம்? இதற்கு ஒரு வழக்கு வேறு?!அதுவும் உயர்நீதிமன்றத்தில் ஓரின சேர்க்கை செல்லாது என தீர்ப்பளித்த பிறகும் உச்ச நீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்...வெட்கம் கெட்டவர்கள்...

.............................. .......................................... .....................................................


குடிபோதையில் வாகனம் ஓட்டி, மரணம் விளைவிக்கும் நபர் மீது, 10 ஆண்டுகள் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்டப் பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்ய, போலீசாருக்கு, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அப்ப இறந்து போனவர்கள் கதி?


அட போங்கப்பா....குடி போதையில் வாகனம் ஓட்டுவதற்கே ஒரு ஐந்து வருடம் தண்டனைன்னு சொன்னாலாவது குடித்துவிட்டு வண்டி ஓட்ட சிறிதாவது பயம் வரும்...விபத்துகள் குறையும்...விபத்து நடந்ததற்கு பிறகு பத்து வருடம் தண்டனை கொடுத்து என்ன பயன்?

23 பிப்ரவரி 2012

இதுதாண்டா போலீஸ்....வங்கி கொள்ளையர்கள் என்கவுன்டர் ...ஹாட்ஸ் ஆப் போலீஸ் ...


சென்னை பெருங்குடி பாங்க் ஆப் பரோடா மற்றும் கீழ்க்கட்டளை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஆகியவற்றில் துணிகரமாக கொள்ளையடித்த கொள்ளையர்கள் ஐந்து பேரையும் சென்னை போலீஸார் வேளச்சேரியில் வைத்து சுட்டு வீழ்த்தி சரிந்த தங்களது இமேஜை தூக்கி நிறுத்தியுள்ளனர்....

சென்னையில் கடந்த ஒரு மாதத்தில் நடந்த இரு பெரும் வங்கிக் கொள்ளைகள் தமிழகத்தையே பெரும் பரபரப்பில் ஆழ்த்தி விட்டது.

இந்த கொள்ளைச் சம்பவங்களை பெரும் சவாலாக கருதிய போலீஸார் விசாரணையை முடுக்கி விட்டனர். தனிக்கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டது. 40 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மேலும் பிறவங்கிகளில் பதிவான கண்காணிப்பு காமரா பதிவுகளையும் போலீஸார் ஆராய்ந்ததில் கொள்ளையர்கள் இருவர் குறித்த அடையாளம் தெரிய வந்தது. அவர்களில் ஒருவர் முன்னாள் மாணவர் என்றும் தெரிய வந்தது. இதையடுத்து கொள்ளையர்களை நெருங்கி விட்டதை உணர்ந்த போலீஸார் விசாரணையை மேலும் முடுக்கி விட்டனர்.

மேலும் கொள்ளையர்கள் குறித்த விவரத்தையும் வெளியிட்ட போலீஸார் கொள்ளைக் கும்பலின் தலைவன் என்று கருதப்படும் நபரின் புகைப்படத்தையும் வெளியிட்டனர். இதற்கு உடனடி பதில் கிடைத்தது.

சென்னை வேளச்சேரி பகுதியில் ஹவுசிங் போர்டு காலனி, ஏ.எல்.முதலி 2வது தெருவில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் கொள்ளையர்கள் பதுங்கியிருப்பதாக பொதுமக்கள் தரப்பிலிருந்து போலீஸாருக்குத் தகவல்கள் வந்தன.

இதையடுத்து பெரும் போலீஸ் படை அந்த வீட்டுக்கு விரைந்தது. உள்ளே பதுங்கியிருந்த கொள்ளையர்களை நாலாபுறமும் முற்றுகையிட்ட போலீஸார் கொள்ளையர்களை சரணடையுமாறு உத்தரவிட்டனர். ஆனால் கொள்ளையர்கள் வரவில்லை. மாறாக, போலீஸாரை நோக்கி துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து போலீஸார் தற்காப்புக்காக திருப்பிச் சுட்டனர். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக இந்த துப்பாக்கிச் சண்டை நடந்துள்ளது. இதில் ஐந்து கொள்ளையர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனர்.

இந்த சண்டையில் இன்ஸ்பெக்டர்கள் கிறிஸ்டியன் ஜெயசீலி மற்றும் ரவி ஆகியோர் காயமடைந்தனர். இருவரும் உடனடியாகமருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

போலீஸார் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் வினோத்குமார், வினய் பிரசாத், ஹரீஷ் குமார், அபே குமார் மற்றும் சரிகர் என்று அடையாளம் தெரிய வந்துள்ளது. இவர்களில் சரிகர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவன்.மற்ற நால்வரும் உ.பி. அல்லது பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

என்கவுண்ட்டர் நடந்த வீட்டிலிருந்து ரூ. 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நான்கு துப்பாக்கிகளும் கிடைத்தன. இந்தக் கும்பலின் தலைவனாக செயல்பட்டவன் எஸ்.ஆர்.எம். கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்தவன். படித்து முடித்து விட்டு ஊருக்குச் செல்லாமல் இங்கிருந்தபடி கொள்ளைச் சம்பவத்தை நடத்தியுள்ளான். (நன்றி பத்திரிக்கை செய்தி )


அப்பாடா...ஒருவழியாக தமிழ்நாடு காவல்துறை ஸ்காட்லாந்து யார்டுக்கு இணையான காவல்துறை என நிருபித்துள்ளது....!!(கொஞ்சம் ஓவர் புகழ்ச்சியோ!)

நேற்றுதான் காவல்துறையை பற்றி நானும்,சக பதிவர்களும் தாளித்து எடுத்தோம்....இன்று பாராட்டுகிறோம்....சபாஷ் போலீஸ்....

இது மாதிரி தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும்...இனி கொள்ளை அடிக்க கொஞ்சமாச்சும் யோசிப்பார்கள்....

இது மாதிரி என்கவுண்டர் மனித உரிமையை பாதிக்கும் செயல் என சிலர் சர்ச்சையை இனி கிளப்புவார்கள்.....ஆனால் இதுதான் சரி..அடுத்தவர்களின் பணத்தை மிரட்டி பிரித்த அவர்கள் மனிதர்கள் அல்ல...அப்புறம் எங்கே இருந்தது வரும் மனித உரிமை....பொது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்த அவர்கள் கொல்லப்பட்டது சரியான முடிவே....

22 பிப்ரவரி 2012

பணத்தட்டுப்பாடா ?தமிழகத்துக்கு வாங்க கொள்ளை அடிக்க....!என்னப்பா இது? நம்ம தமிழ்நாடா இது?சர்வசாதாரணமாக கொள்ளை அடிக்கிறார்கள்....

வாக்கிங் போற மாதிரி வந்து வங்கிகளில் கொள்ளை அடித்து போகிறார்கள்...

எந்த ரிஸ்க்கும் இல்லை....வங்கிக்கு சென்றால் ஈசியாக எந்த பிரச்சினையும் இல்லாமல் பணம் சம்பாரிக்கலாம் !என ரெக்கை கட்டி அலைகிறது கொள்ளை கும்பல்...இரண்டு துப்பாக்கி இருந்தால் போதும்..அது பொம்மை துப்பாக்கியாக கூட இருக்கலாம்....இப்படித்தான் இரண்டு நாட்களுக்கு முன்பு கூட சென்னையில் உள்ள ஒரு வங்கியில் கொள்ளை அடித்துள்ளனர்.....

இதற்கு ஒரு மாதத்திற்கு முன் இதேபோல ஒரு வங்கியில் கொள்ளை அடித்தவர்களை இன்னும் நம் போலீஸ் பிடிக்கவில்லை....


வங்கிகளில் கொள்ளை அடித்தவர்கள் இந்தி கலந்த தமிழில் ! பேசியதால் அவர்கள் வடநாட்டு கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீஸ் சந்தேகமாம்..யம்மாடி .உலக மகா கண்டுபிடிப்புடா இது.....


வீட்டில் இருந்தால் திருடு போகலாம் என்ற நம்பிக்கையில்தான் மக்கள் வங்கிகளில் பணத்தை போடுகிறார்கள்....அங்கும் கொள்ளை போனால்..?நேற்று என்னடான்னா திருப்பூரில் ஆலுக்காஸ் ஜுவல்லரியில் 38 கிலோ தங்கத்தை அலேக்காக தூக்கி சென்றுள்ளனர்....இப்பவெல்லாம் நகை கடையில் கொள்ளை அடிக்க நடந்தே வருவதுதான் கொள்ளையர்களின் ஸ்டைல் போலும்....

பின்புறமுள்ள கட்டடத்தின் வழியாககொள்ளையர்கள் மேலே
ஏறி, "வென்டிலேட்டர்' வழியாக உள்ளே நுழைந்துள்ளனர். அப்புறம் என்ன நகை எடு கொண்டாடுதான்...!ஒருகணம் யோசித்து பாருங்கள் ..உள்ளே நுழைந்தவுடன் எதை அள்ளுவது எதை விடுவது என கொள்ளையர்கள் திணறி போயிருப்பார்கள்....!அப்புறம் போனால் போகிறதென்று லாக்கரை உடைக்காமல் வெளியில் இருந்த நகைகளை அள்ளி சென்றுள்ளனர்...


இதில் என்ன கொடுமை என்றால் அந்த நகை கடையில் வாடிக்கையாளர்களை கண்காணிக்க கண்காணிப்பு கேமராக்கள் (சி.சி. "டிவி') பொருத்தப்பட்டுள்ளன. ஆனால் இரவு கேமராக்களை நிறுத்தி விடுவார்களாம்....அப்பறம் எதுக்கு கேமரா ?உங்க கடைக்கு நகை வாங்க வரும் வாடிக்கையாளர்களை நம்பாமல் அவர்களை கண்காணிக்க கேமரா ..ஆனால் கொள்ளை அடிக்க வருபவர்களுக்கு இலவச சர்விஸ் ....நல்லா இருக்குய்யா நியாயம்...!


இதையெல்லாம் பார்க்கும்போது " தான் பதவி ஏற்றவுடன் செயின் பறிப்பு திருடர்கள், பிக் பாக்கெட் அடிப்பவர்கள் எல்லாம் ஆந்திரா போன்ற அண்டை மாநிலங்களுக்கு ஓடி விட்டார்கள் என ஜெயலலிதா சொன்னதுதான் நினைவுக்கு வருகிறது....

அவர் சொன்னதும் உண்மைதான் போலும்....ஆமாம் செயின் பறிப்பவர்கள்,பிக் பாக்கெட் அடிப்பவர்கள் என சிறு திருடர்களைதானே அஞ்சி ஓடி விட்டதாக சொன்னார்..

வங்கிகளில்,நகை கடைகளில் கொள்ளை அடிப்பவர்கள் எல்லாம் மிக பெரிய கொள்ளையர்கள்தானே ...!

தொடர்ந்து நடந்து வரும் இதுபோன்ற கொள்ளைகளினால் மக்களுக்கு காவல்துறையினர் மீது உள்ள நம்பிக்கை குறைந்து வருகிறது.....கொள்ளை அடிப்பவர்களுக்கு அதே காவல்துறையினர் மீது நம்பிக்கை அதிகரித்து வருகிறது....தங்களை பிடிக்க மாட்டார்கள் என்று..!

21 பிப்ரவரி 2012

குமுதத்தின் ஜால்ராவும் ,கருத்துகணிப்பும் ,புடலங்காயும்


கருத்துகணிப்பு என்பது வெறும் ஐம்பது பேருக்கு மட்டுமே பந்தியில் சாப்பாடு போட்டுவிட்டு ஐந்தாயிரம் பேர் பந்தியில் சாப்பிட்டார்கள் என புளுகுவதற்கு சமமானது....


எட்டு கோடிக்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட தமிழ்நாட்டில் வெறும் எட்டாயிரம் நபர்களின் கருத்து எப்படி சரியாக இருக்கும்...?அதிலும் குமுதம் போன்ற பத்திரிக்கைகள் கருத்து கணிப்புகள் என்ற பெயரில் எதிர்கட்சிகளுக்கு பாதகமாகவும் ஆளும்கட்சிக்கு சாதகமாகவும் சமயத்துக்கு ஏற்ப ஜால்ரா அடித்து வருகின்றன....


குமுதம் ரிப்போர்ட்டரில் திமுகவின் அடுத்த தலைவருக்கு யார் பொருத்தமானவர் என சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்துகணிப்பை நடத்தி புகைந்து கொண்டு இருந்த அண்ணன் தம்பி சண்டை ஊதி பெரிதாக்கிவிட்டர்கள்...இதில் என்ன கொடுமை என்றால் தனிக்கட்சி நடத்தி வரும் வைகோவையும் திமுக தலைவர் போட்டியில் சேர்த்ததுதான்....!


அதே போல இந்த வார குமுதத்தில் ஒரு கருத்துகணிப்பை நடத்தி ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துள்ளார்கள்....


அது என்னடான்னா ஆளும்கட்சி கூட்டணியில் இருந்தது விஜயகாந்த் வெளியேறியதால் அவரின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறதா இல்ல சரிந்திருக்கிறதா என உலக மகா முக்கியமான விசயத்தை கையில் எடுத்து புள்ளி விபரத்தில் கரைத்து கொடுத்து இருக்கிறார்கள்...


அதில் விஜயகாந்த் செல்வாக்கு உயர்ந்து உள்ளது என 35 சதவீதமும்,சரிந்து உள்ளது என 37 சதவீதமும், மாற்றம் இல்லை என 28 சதவீதமும் முடிவாக எழுதி உள்ளனர்....விஜயகாந்தின் செல்வாக்கு சரிந்ததற்கும் , உயர்ந்ததற்கும் வித்தியாசம் வெறும் இரண்டு சதவீதம்தான்....ஆனால் கருத்து கேட்கபட்டவர்களில் விஜயகாந்த் கட்சியினரைவிட அதிமுகவினரே அதிகம் ...!


மொத்தம் 23550 நபர்களிடம் கருத்து கேட்டு இருக்கிறார்கள்....எட்டரை கோடிக்கும் இருபதாயிரத்துக்கும் எப்படிய்யா ஓட்டும்?

இதுவே முதல் தப்பு.....

அடுத்து என்னன்னா இந்த கருத்துகணிப்பில் கலந்து கொண்டவர்களில் தேமுதிக கட்சியை சேர்ந்தவர்கள் வெறும் 12 சதவீதம் மட்டுமே.....ஆனால் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் 27 சதவீதம்....என்ன கொடுமைய்யா இது? இதிலே பதினைந்து சதவீதம் அதிமுகவினர் கூட இருக்கின்றார்கள்....

விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் அவரின் செல்வாக்கு உயர்ந்திருக்கிறது எனவும் .அதிமுகவை சேர்ந்தவர்கள் சரிந்து உள்ளது எனவும்தானே கூறுவார்கள்?அப்படியானால் இந்த கருத்துகணிப்பில் அதிகபட்சமாக அதிமுகவை சேர்ந்தவர்கள் தானே பங்கேற்றுள்ளனர்?அப்ப செல்வாக்கு சரிந்துள்ளது என்றுதான் ரிசல்ட் வரும் என விரல் சூப்பும் குழந்தைகூட சொல்லுமே?

இதற்கு சர்வே என பெயர் வேறு..!போங்கய்யா உங்க கருத்து கணிப்பும் புடலங்காயும் ...


புள்ளிவிபர புலி கேப்டனுக்கே ஒரு டுபாக்கூர் புள்ளி விபரமா?


ஆளும் கட்சியின் நிறை குறைகளை சுட்டி காட்டாமல் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடிக்கும் வேலையை கனகட்சிதமாக செய்து வருகிறது குமுதம்...

வாழ்க பத்திரிக்கை தர்மம்.....

20 பிப்ரவரி 2012

பயோடேட்டா : ஸ்டாலின்


பெயர் : ஸ்டாலின்


அடைமொழி :தளபதி ....(எந்த போருக்கு தளபதி என கேட்ககூடாது }


வயது : இளைஞர் அணியில் இருக்கும் வயதான 60 தான்


மிசா : தெரிந்தோ தெரியாமலோ அரசியலுக்கு வர காரணமான சம்பவம்


பொதுக்குழு: பங்காளி சண்டை போடுமிடம்


சாதனை : கட்சியின் அடுத்த தலைவர் என "பேசப்படும்"அளவுக்கு உயர்ந்தது


வேதனை : அதே தலைவர் பதவி இன்னும் கிடைக்காதது ...


அழகிரி :ஆப்பு வைத்து கொண்டுஇருப்பவர்


கருணாநிதி :இன்னும் ஓய்வெடுக்காமல் கடுப்பை கிளப்புபவர்


விஜயகாந்த் : திடீர் நண்பன்


வீரபாண்டி ஆறுமுகம் : கட்சியில் இருக்ககூடாத ஆள்


கனிமொழி :தங்கை ஆனாலும் தள்ளி இருக்க வேண்டியவர்


குஷ்பு : கழகத்தை காக்க வந்த வீரப்பெண்மணி


ஜெயலலிதா :எப்ப யாரை உள்ளே தூக்கி போடுவாரோ என கண்ணாம்பூச்சி காட்டுபவர் ...


சட்டசபை : வெளிநடப்பு செய்வதற்காகவே போகும் இடம்


லட்சியம் : திமுகவின் தலைவர் அப்படியே அடுத்த முதலமைச்சர்...

19 பிப்ரவரி 2012

கைது செய்யப்பட்ட நடராஜனும் கதறி அழுத சசிகலாவும் ...(நொறுக்கு தீனி)


நில மோசடி புகாரின் பேரில், சசிகலாவின் கணவர் நடராஜன் அவரது பெசன்ட் நகர் வீட்டில் கைது செய்யப்பட்டார்.என்னால்தான் ஜெயலலிதா ஆட்சியில் அமர முடிந்தது என கூறி வந்த நடராஜனுக்கும் செக் வைத்து நடராஜ வதத்தை ஜோராக ஆரம்பித்துள்ளார் ஜெ ...

இவர் மீது தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தை சேர்ந்த ராம லிங்கம் என்பவர் தஞ்சை மாவட்ட நில அபகரிப்பு பிரிவு போலீசில் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், தனக்கு சொந்தமான பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 15 ஆயிரம் சதுர அடி முந்திரி தோப்பை நடராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிலர் ஆக்கிரமித்து வீடு
கட்டிக்கொண்டனர். நிலத்தையும் தரும்படி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து போலீசில் புகார் கொடுத்தும், ஆளுங்கட்சிக்கு வேண்டியவர் என்பதால் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.இது போதாதா ஆளை அமுக்க....

தஞ்சை எஸ்.பி. அனில்குமார் கிரி உத்தரவின் பேரில் வழக்குப்பதிவு செய்து தஞ்சை மாவட்ட நிலஅபகரிப்பு பிரிவு போலீசார், நடரா ஜனை தேடிவந்தனர். சென்னையில் இருந்த நடராஜனை கோழியை அமுக்குவதுபோல தூக்கிக்கொண்டு போய்விட்டார்கள் ஜெயிலுக்கு.....இனி அடுத்து அடுத்து வழக்குகள் பாய்ந்து குண்டாஸ் லெவலுக்கு போக வாய்ப்புகள் அதிகம்....

சத்தியமாக இராவணன்,திவாகரன்,நடராஜன் ஆகியோர் கம்பி எண்ணுவார்கள் என அவர்களால் பாதிக்கப்பட்ட எவரும் எண்ணிக்கூட பார்த்திருக்க மாட்டார்கள்....அதை செயல்படுத்தி காட்டிவிட்டார் ஜெ ..இந்த கைதுகளின் பின்னணியில் முழுக்க முழுக்க ஜெ யின் சுயநலம் என்ற போர்வை இருந்தாலும் மக்கள் ரசிக்கவே செய்கிறார்கள் என்பதே உண்மை...

................................ ............................................. .......................................

ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் தனி நீதிமன்றத்தில் சசிகலா நேற்று ஆஜரானார். நீதிபதி கேட்ட 40 கேள்விகளுக்கு அழுதபடியே அவர் பதில் அளித்தார்


பல கேள்விகளுக்கு நினைவில்லை என்றும், தெரியாது என்றும் கூறிய சசிகலா, ஜெயலலிதா தொடர்பாக கேட்டபோது அழுதேவிட்டார் சசி.....

வங்கிக் கணக்கை நான் மட்டுமே இயக்கி வந்தேன். அதில் முதலமைச்சர் ஜெயலலிதாவும் கூட்டாளிதான். ஆனால் அதைப் பற்றிய எந்த விவரமும் அவருக்குத் தெரியாது. அவர் குற்றமற்றவர். தவறுக்கு நானே பொறுப்பு என்று கூறி சசிகலா கண்ணீர் விட்டு அலுத்து இருக்கிறார்...

ஜெயா பப்ளிகேஷன்ஸ் விவகாரங்களை கவனித்துக் கொண்டது நான்தான் என்றும், ஜெயலலிதாவுக்கு அதுகுறித்து எதுவும் தெரியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

ராவணன்,திவாகரன்,இப்போது சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோரை கைது செய்து அவர்களை துருப்பு சீட்டுகளாக பயன்படுத்தி சசிகலாவை பலிகடா ஆக்கியுள்ளார் ஜெ .....

ஆக மொத்தம் கூட்டி கழித்து பார்த்தால் ஜெயலலிதா போட்ட கணக்கு ஆச்சு பிசகாமல் அப்படியே நடந்து வருகிறது....இனி இவ்வழக்கிலிருந்து ஜெயலலிதா விடுவிக்கப்படலாம்....அதன் பிறகு தனது உடன்பிறவா சகோதரியுடன் மீண்டும் சேரலாம்.....

இதுதான் ஆடு புலி ஆட்டம் என்பதோ..!

இதில் கவனிக்கத்தக்க இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த பரபரப்பான செய்திகளுக்கிடையே மக்கள் மின்தடை பிரச்சினையும் கொஞ்சம் மறந்துவிடுவார்கள்....போராட்டங்கள் மெதுவாக குறைய ஆரம்பிக்கும்....இதுதான் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.....!

18 பிப்ரவரி 2012

அமெரிக்காதான் ராஜீவ் காந்தியை கொன்றது...பிரபாகரன் அல்ல...இலங்கை பகிரங்க குற்றச்சாட்டு....


பிரபாகரனுக்கே தெரியாமல், தமிழகத்தில் இருந்த விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை வைத்து ராஜீவ் காந்தியை அமெரிக்காதான் கொலை செய்துள்ளது என்று கூறி பரபரப்பை பற்ற வைத்துள்ளார் ஒருவர்....உடனே சுப்ரமணிய சுவாமிதான் கூறி இருப்பார் என யாரும் தப்புகணக்கு போடவேண்டாம்...

நம்ம நாட்டிற்கு ஒரு சுப்ரமணியசுவாமி போல இலங்கைக்கு ஒருவர் இருக்கிறார்..அந்நாட்டின் அமைச்சர் விமல் வீரவன்ச தான் அவர்....


இதுகுறித்து அவர் கூறுகையில், அமெரிக்க உளவுப் பிரிவான சிஐஏ திட்டத்தின்படிதான் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தானாகவே முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்திருக்க மாட்டார் என நான் திடமாக நம்புகிறேன்.

ராஜீவை படுகொலை செய்வதன் மூலம் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஏற்படக் கூடிய பாதக நிலைமைகள் குறித்து பிராபகரன் கவனம் செலுத்தாமல் இருந்திருக்க முடியாது. பிரபாகரனுக்கு தெரியாமல் தமிழகத்தில் இருந்த தமிழீழ விடுதலைப் புலிகளிடம் அமெரிக்க உளவுப் பிரிவு, ராஜீவை படுகொலை செய்யும் ஒப்பந்தத்தை ஒப்படைத்திருக்க வேண்டும் என்பதே எனது நம்பிக்கை.

காந்தி குடும்பத்தினர் இந்தியாவை ஆட்சி செய்யும் வரையில் தெற்காசிய பிராந்தியத்தில் தங்களால் ஆதிக்கம் செலுத்த முடியாது என்பதை அமெரிக்கர்கள் உணர்ந்திருந்ததால்தான் இந்த படுகொலை சம்பவம் நிகழ்ந்துள்ளது என கூறியுள்ளார்..

ஆக்சுவலி ராஜீவ் காந்தி காந்தி குடும்பத்தினர் அல்ல என அவருக்கு யார் சொல்லி புரிய வைப்பது?பெயருக்கு பின்னால் காந்தி என பெயர் இருந்தால் அவர் காந்தி குடும்பத்தினரா?அப்ப நடிகை காந்திமதி?


சுப்ரமணிய சுவாமி லூசு மாதிரி பேசினாலும் சில சமயம் அது உண்மையாகவும் இருக்கும்...இந்த அமைச்சர் கூறுவதை எந்த வகையில் சேர்ப்பது?

17 பிப்ரவரி 2012

ரத்தகாட்டேறி அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான்...போருக்கு தயாராகும் உலக மகா தீவிரவாதி ....


உலக மகா தீவிரவாத நாடான அமெரிக்காவின் அடுத்த குறி ஈரான்...போர் என்ற போர்வையில் தனக்கு கீழ்படியாத நாடுகளிடம் கோரமுகத்தை காட்டி மனித ரத்தத்தை குடிக்கும் ரத்த காட்டேரியான அமெரிக்கா இப்போது ஈரானை வேட்டையாட துடிக்கிறது....


தான் என்ன செய்தாலும் தலையாட்டும் அடிமை நாடுகளை சாட்சிக்கு வைத்துகொண்டு, தனக்கு கட்டுபடாத நாடுகளையும் அப்பாவி பொதுமக்களையும் அழிப்பதற்காக காஸ்ட்லியான பட்ஜெட்டில் நிறைவேற்றப்படும் தீவிரவாத செயல்களுக்கு அமெரிக்கா வைத்திருக்கும் பெயர்தான் போர் .....


அதிபர் தேர்தல் நெருங்கி வரும் வேலையில் ஏதாவது ஒரு அரபு நாடுகள் மீது போர் தொடுப்பது அமெரிக்க அதிபர்களின் வழக்கம்....மக்களிடம் சரிந்து கிடக்கும்தங்களது செல்வாக்கை மீட்பதற்காகவே இந்த போர் எனும் நாடகம்....தற்போதைய அதிபர் ஒபாமாவும் இதற்கு விதிவிலக்கல்ல...அமெரிக்காவில் சரிந்திருக்கும் தனது செல்வாக்கை சரிகட்ட ஈரானை பகடைகாயாக்கியுள்ளார் ஒபாமா...


அணு ஆயுதங்களை உருவாக்க தேவையானது யுரேனியம் எரிபொருள். இதனை தூய்மைப்படுத்தவும் குறைந்த சேதாரத்தில், மிக விரைவாக உருவாக்கவும் சூப்பர்சோனிக் வேகத்திலான நான்காம் தலைமுறை செ‌ன்‌ட்‌ரி‌‌பிஜ‌ஸ் எனப்படும் பிரிப்பானை உருவாக்கி இருக்கிறது ஈரான்.


அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி ஈரான் தான் அமைத்துள்ள அணு உலையில், எரிபொருளை நிரப்பும் பணியை நேற்று தடபுடலாக தொடங்கியது.

ஈரானில் மேலும் புதிதாக நான்கு அணு ஆராய்ச்சி நிலையங்களையும் அந்நாட்டு அதிபர் வழங்கியுள்ளார்.

ஈரானின் அணுஆயுத நடவடிக்கையைத் தடுக்கும் வகையில் அண்மையில் இஸ்ரேல், அமெரிக்கா ஆகியவை ஈரான் மீது தடை விதித்திருந்த நிலையில் இத்தகைய அதிரடி அரங்கேற்றியிருக்கிறது.


உலகின் எண்ணெய் விநியோகத்தில் 20 விழுக்காடு ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் நடைபெறுகிறது. ஈரானையொட்டி ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகத்தான் பெர்சியன் வளைகுடாவையே தாண்ட முடியும்.

அமெரிக்காவின் நடவடிக்கைகள் தீவிரமானால் ஹோர்முஸ் ஜலசந்தியை இழுத்து மூடுவோம் என்று ஈரான் அறிவித்திருந்தது. ஹோர்முஸை மூடினால் பதிலடி கொடுப்போம் என்ற அறிவிப்பையும் அமெரிக்கா வெளியிட்டிருந்தது.

இந்நிலையில் அமெரிக்காவின் அணு ஆயுதங்களைத் தாங்கிய ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியை நெருங்கியுள்ளது. ஈரானின் 21 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் இக்கப்பல் முகாமிட்டிருக்கிறது.

இந்நிலையில் அணுசக்தி வல்லமையை பகிரங்கமாக ஈரான் அதிபர் பிரகடனம் செய்த நிலையில் போர் விமானங்களையும் ஹோர்முஸ் ஜலசந்திக்கு அமெரிக்கா அனுப்பி வைத்துள்ளது.

அவங்க நாட்டில் அவங்க என்ன பண்ணினால் உனக்கு என்னய்யா?

உங்க வீட்டுக்குள் இன்னொருவன் வந்து நாட்டாமை பண்ணினால் சும்மா இருப்பீர்களா?நம்மால் முடியாதல்லவா?அப்புறம் எப்படி ஒரு நாடு இன்னொரு நாட்டிடம் அதிகாரம் செலுத்துவதை ஏற்றுக்கொள்ளமுடியும்?

அணுஆயுதமே கூடாதென்றால் முதலில் அமெரிக்கா அல்லவா தன்னிடம் உள்ள அணுஆயுதங்களை அழிக்க வேண்டும்?

அமெரிக்காவிடம் அணுஆயுதம் இருந்தால் அது சரியாம்.....ஈரானிடம் இருந்தால் அது தவறாம்....

இப்போது அமெரிக்காவின் பிரச்சினை எந்த நாடுகளிடமும் அணுஆயுதங்கள் இருக்க கூடாது என்பதா? இல்லை ஈரானில் மட்டும் அணு ஆயுதங்கள் இருக்க கூடாது என்பதா?

இப்படியே ஒவ்வொரு நாடாக அழித்து கொண்டு வரும் அமெரிக்காவை உலக நாடுகள் கை கட்டி வேடிக்கைதான் பார்த்து கொண்டு இருக்கின்றன...


உலகை மிரட்டி தனது உள்ளங்கையில் வைக்க துடிக்கும் இந்த தீவிரவாத நாட்டிக்கு எப்போது யாரால் முற்றுபுள்ளி?

16 பிப்ரவரி 2012

எம் ஜி ஆர் தான் அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு காரணம்...பரபரப்பான உண்மைகள்..!!


கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலினா? அழகிரியா?என்பதே திமுகவின் இப்போதைய ஹாட் டாபிக்....

அது கருணாநிதி இருக்கும்போதே அவர் கண் முன்னாலே இருவரின் ஆதரவாளர்களும் அடித்து கொண்டு நாறியது கட்டுபாட்டுக்கு பெயர் போன திமுகவின் பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்....


தலைவர் பதவி கொடுத்தால் ஏற்க தயார் என அழகிரி அதிரடியாக சொல்லி ஸ்டாலினுக்கு அனலை மேலும் கூட்டியுள்ளார்....

இவர்களின் மோதலுக்கு எம்ஜிஆரும் ஒருவகையில் காரணம்...கருணாநிதி ஒன்றும் திமுகவை ஆரம்பிக்கவில்லை...பட்டத்து இளவரசர்கள் போல அண்ணன் தம்பிகள் தலைவர் பதவிக்கு ஆசைப்பட...


அண்ணா ஆரம்பித்த கட்சியில் அவருக்குப்பின் நெடுஞ்செழியன், என் வி நடராஜன், மதியழகன் ஆகியோரில் ஒருவர்தான் திமுகவின் அடுத்த தலைவர் என அனைவரும் நினைத்தனர்.கருணாநிதிக்கு இருந்த ஆதரவில் சரிபாதி ஆதரவு நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் இருந்தது...அந்நிலையில் எம் ஜி ஆரின் ஆதரவு யாருக்கோ அவர்தான் தலைவர் என்ற சூழ்நிலை நிலவியது...

ஆனால் யாரும் எதிர்பாராவண்ணம் கனகச்சிதமாக காய்களை நகர்த்தி எம் ஜி ஆரை கைக்குள் போட்டுக்கொண்டு திமுகவை கைப்பற்றினார் கருணாநிதி.....

அன்று எம்ஜிஆர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் கருணாநிதி தலைவர் ஆகி இருக்க முடியாது....அன்று கருணாநிதி தலைவர் ஆகி இருக்காவிட்டால் இன்று இந்த பிரச்சினையே வந்திருக்காது ....!அப்ப ஒருவகையில் எம் ஜி ஆர் தான் இப்பிரச்சினைக்கு காரணம்...ஒருவழியாக தலைப்போடு சம்பந்த படுத்தியாச்சு....!


ஒருகட்டத்தில் தன்னையே மிஞ்சும் அளவுக்கு எம் ஜி ஆர் வளர்ந்துவிட்டதால் அவரை கட்சியை விட்டு தூக்கினார்.....தனது மகன் ஸ்டாலினை படிப்படியாக கட்சிக்குள் நுழைத்தார் கருணாநிதி....ஆனால் ஸ்டாலினை விட வைகோவின் வளர்ச்சி கருணாநிதியை பயம் காட்டியது.....ஸ்டாலினுக்காக வைகோவை கட்சியை விட்டு தூக்கினார்...ஸ்டாலினுக்கு ரூட் இனி கிளியர் என நினைத்தார் கருணாநிதி அழகிரி என்று ஒருவர் இருக்கிறாரே என்பதை மறந்து..!


அழகிரி என்று கட்சிக்குள் அடி எடுத்து வைத்தாரோ அன்று ஆரம்பித்தது ஸ்டாலினுக்கு தலைவலி....ஆரம்பத்தில் அதிரடி அரசியல் பண்ணி தனெக்கென கட்சியில் ஆதரவாளர்களை உருவாக்கினார் அழகிரி....அடுத்து அடுத்து வந்த இடைதேர்தல்களில் வென்று கட்சிக்கு தனது பலத்தை வெளிக்காட்டினார் அழகிரி....அடுத்து தேர்தலில் ஜெயித்து மத்திய மந்திரியாகவும் ஆனார்....

அண்ணன் டெல்லிக்கு போய்விட்டதால் இனி தனக்கு கவலை இல்லை என நினைத்தார் ஸ்டாலின்....ஆனால் மந்திரி பதவியை விட மாநில அரசியலே தனக்கு ஏற்றது என விரும்பிய அழகிரி கட்சிக்குள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்...இப்போது கட்சிக்குள் அழகிரி அணி,ஸ்டாலின் அணி என கட்சி நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் பிரிந்து ஏறக்குறைய கட்சியை அழிவை நோக்கி கொண்டு சென்று இருக்கின்றனர்........


நீருபூத்த நெறுப்பு போல் புகைந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சினை எரிமலையாக நெருப்பை கக்கியது சமிபத்தில் நடந்த பொதுகுழுவில்....

தனக்காகவும், ஸ்டாலினுக்காகவும் பலரை கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதி இப்போது என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் இருக்கிறார்


இதுதான் தான் செய்த பாவம் தனது பிள்ளைகளை பாதிக்கும் என்பதோ?

15 பிப்ரவரி 2012

எங்களை கண்டித்தால் உங்களை கொல்வோம்..மிரட்டிய மாணவர்கள் ..தவிக்கும் ஆசிரியர்கள்

கஸாலி அண்ணன் அவர்கள் எனக்கு versatile blogger award என்ற விருதை வழங்கி உள்ளார்....என்னை போன்ற வளரும் பதிவர்களுக்கு இது பூஸ்ட் கொடுத்தது மாதிரி...அண்ணன் கஸாலி அவர்களுக்கு எனது நன்றிகள்....அண்ணன் சொன்னதைப்போல இந்த விருதை நான் ஐந்து பேருக்கு வழங்க வேண்டும்....சுழற்சி முறையில் இந்த விருது அனைத்து பதிவர்களுக்கும் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு விதிமுறையை வைத்துள்ளனர்...இத்தனைநண்பர்களில் வெறும் ஐந்து பேர் மட்டும் என்பது கண்ணை கட்டிவிட்டு கார் ஓட்ட சொல்வதைபோல கடினமானது..அதன்படி...

தனது தத்து பித்துவங்களால் நம்மை கவர்ந்த பிலாசபி பிரபாகரன்

கவிதை மலையில் நம்மை நனைய வைக்கும் கவிதை வீதி சௌந்தர்

விழிப்புணர்வு பதிவுகளை இஸ்லாமை மேற்கோள்காட்டி எழுதும் சகோ ஹைதர் அலி


சரமாரியாக கலாயித்து எழுதும் மாம்ஸ் விக்கியின் அகடவிகடங்கள்


ஆரோக்யமான விவாதங்களை முன்வைக்கும் சகோ சுவனப்பிரியன்


ஆகியோருக்கு வழங்குகிறேன்....நான் ஒன்றும் இவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை....கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்காக மட்டும்தான் ....

எனது மற்ற நண்பர்களுக்கும் இவ்விருது சுழற்சி முறையில் வெகு விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்....


ஒரு மாணவன் ஆசிரியரை கொலை செய்து ஒரு வாரம் கூட ஆகவில்லை....அதற்குள் எங்களை கண்டித்தால் உங்களை கொல்ல வேண்டி வரும் என இரு மாணவர்கள் ஆசிரியரை மிரட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்....


விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ளது மருது பாண்டியர் அரசு மேல் நிலை பள்ளி. இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் காலை பிரேயர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு மாணவர்கள் பிரேயருக்கு வராமல் வகுப்பறையிலேயே இருந்தனர். மேலும் மேசையைத் தட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து கோபமடைந்த ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் வகுப்பறைக்குச் சென்று அங்குதாளம் போட்டு கொண்டிருந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்துள்ளார். ஆனால் ஆசிரியரைக் கண்டு கொள்ளாத அந்த இரு மாணவர்களும், சென்னையில் ஆசிரியரைக் குத்திக் கொன்றது போல இங்கும் நடந்து விடும், போய் விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு ஆசிரியர் சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அனைத்து ஆசிரியர்களும் வகுப்புகளுக்குப் போகாமல் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஆசிரியர் சுப்பிரமணி போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்....


எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்?இந்த சம்பவம் பல கேள்விகளை நம்முன் வைக்கிறது....

மாணவர்களின் இத்தகைய வன்முறை செயல்களுக்கு காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளா? பெற்றோர்களா?வன்முறையை தூண்டும் சினிமாக்களா?படிப்பின் மேல் உள்ள வெறுப்பா? அல்லது பொது தேர்வுகள்,தேர்ச்சியை மட்டும் அறிவிக்கும் கல்விமுறைகளின் மேல் உள்ள வெறுப்பா?


ஆசிரியரை கொன்ற மாணவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதா?


கொலை செய்த மாணவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்காதது இவர்களை இப்படி பேச தூண்டியதா?


ஆசிரியரை கொன்ற மாணவனையும் , ஆசிரியரை கொல்வேன் என மிரட்டிய மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்ததுதான் தகுந்த தண்டனையா?எனக்கு விடை தெரியவில்லை....


இப்படியே ஒவ்வொரு மாணவனும் மிரட்ட ஆரம்பித்தால் வகுப்பறையில் யார் பாடம் சொல்லி கொடுப்பது..?


கொலை செய்த மாணவன் தனக்கு அந்த எண்ணம் ஏற்பட படங்களில் பார்த்த வன்முறை காட்சிகளும் காரணம் என கூறியுள்ளான்...

அப்படிப்பட்ட வன்முறை மிகுத்த சினிமாக்களை தடை செய்ய முடியாதா?


ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்த காலம் போய் இப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயப்படும் காலம் ஏற்பட்டுள்ளது....இந்த நிலை மாற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைத்து அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை உடனே மேற்கொண்டால்தான் ஒரு முடிவு ஏற்படும்....

செய்யுமா அரசு?

14 பிப்ரவரி 2012

ஆதலினால் காதல் செய்வீர் நமது உடல் உறுப்புகளை !....!

நமது உடலில் ஏதாவது ஒரு உறுப்பு இல்லாமல் போனால் அல்லது செயல் இழந்து போனால்தான் அதன் அருமை நமக்கு புரியும்......நாம் ஆரோக்யமாக இருக்கிறோம் என நினைத்தாலும் நாட்கள் ஆக ஆக ஒவ்வொரு உறுப்பும் தனது ஆரோக்யத்தை இழக்க ஆரம்பித்துவிடும்...


பளீச் என்று எரியும் பல்பாக இருந்தாலும், பைக்காக இருந்தாலும், வலுவாக இத்தனை மணி நேரம், இத்தனை நாள்தான் இயங்க முடியும். அதுபோலத்தான் நம் உடலும். உடலில் உச்சந் தலை முதல் உள்ளங்கால் வரை ஒவ்வொரு முக்கிய உறுப்புக்கும் தனித்தனி வயது உண்டு


*மூளை: மூளையில் உள்ள நரம்பு உயிரணுக்களின் எண்ணிக்கை 10,000 கோடி; நமது ஒவ்வொரு எண்ணம், சொல், செயல்களுக்கு இவற்றின் கட்டளைகள் தான் காரணம். 20 வயது வரை தான் இதன் சுறுசுறுப்பு இருக்கும். 20 ல் இருந்து இதன் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கும். 40 வயதில் இருந்து ஒரு நாளைக்கு 10,000 உயிரணுக்கள் வீதம் சரியும். நினைவாற்றல் உட்பட பல செயல்கள் செயலிழக்க இது தான் காரணம்.


*குடல்: குடலுக்கு 55 வயது வரை தான் முழு ஆரோக்கியம். அப்போது குடல், கல்லீரல், சிறுகுடல், இரைப்பையில் ஜீரணத்துக்கான நொதிநீர் சுரப்பது குறைய ஆரம்பிக்கும். இதனால், அஜீரணம், வயிற்றுப்பிரச்னை போன்றவை தலைகாட்டும்.


*மார்பகம்: பெண்களுக்கு மார்பகம் 35 வயதில் சுருங்க ஆரம்பிக்கும். அதன் தசைகள், கொழுப்புத்தன்மை குறைய ஆரம்பிக்கும்; அதனால், பருத்த மார்பகம் சுருங்க ஆரம்பிக்கும்.


*சிறுநீர்ப்பை: இது வயசாவது 65 ல் ஆரம்பிக்கிறது. 30 வயதில் 2 கப் சிறுநீர் தேக் வைக்கும் அளவுக்கு கொள்ளளவு இருக்கும்; 65 ல் ஒரு கப் தான் தேங்கும் அளவுக்கு சுருங்கி விடும்.


*நுரையீரல்: 20 வயது வரை தான் முழுவீச்சில் இயங்கும். அதன் பின், இடுப்பு எலும்பு பகுதி நெருக்கிக்கொள்ள, நுரையீரல் சக்தி குறைந்து, மூச்சு , உள்ளிழுத்து வெளியேவிடும் அளவு குறையும். 40 வயசுக்கு மேல், சில அடிதூரம் நடந்தால் மூச்சு வாங்குவதற்கு காரணம் இது தான்.


*குரல்: தொண்டையில் உள்ள லாரினக்ஸ் என்ற மெல்லிய திசுக்கள் நீடிக்கும் வரை தான் குரலில் இனிமை இருக்கும். 65 வயதுக்கு பலவீனமாகி, குரல் ‘கரகர’ தான்.


*கண்: பத்திரிக்கை படிக்கும் போதும், டிவி பார்க்கும் போதும் கண்களை இடுக்கி, பாடாய்ப்படுத்தி பார்ப்பர் சிலர்; அடடா, வயது 40 ஆகி விட்டது என்று புரிந்து கொள்ளலாம். அந்த வயதில் தான் பார்வை வலிமை குறைய ஆரம்பிக்கிறது.


*இருதயம்: ரத்தத்தை உள்வாங்கி, மற்ற உறுப்புகளுக்கு அனுப்பும் சக்தி படைத்தது இருதய பம்ப்; ரத்தத்தை விரைவாக அனுப்பும் நெகிழ்திறன் கொண்ட இந்த பம்ப், 40 வயதில் பலவீனமடைய ஆரம்பிக்கிறது. அதனால், மற்ற உறுப்புகளுக்கு ரத்தம் பாயும் வேகமும் குறைகிறது.


*கல்லீரல்: இந்த ஒரு உறுப்பு மட்டும் தான் 70 வயது வரை சூப்பர் இயக்கத்துடன் உள்ளது. குவாட்டரை நினைக்காதவரை இதன் பலம் ஆண்டுக்கணக்கில் நீடிக்கும்.


*சிறுநீரகம்: ரத்தத்தை சுத்தப்படுத்தி பிரிக்கும் வேலையை இதன் ‘நெப்ரான்ஸ்’ என்ற திசுக்கள் செய்கின்றன. 50 வயதில் இது வலுவிழக்க ஆரம்பிக்கிறது.


*எலும்புகள்: 25 வயது வரை தான் எலும்புகள் வலுவாக இருக்கும். அதன் பின் 35 ல் இருந்து பலவீனமடைய ஆரம்பிக்கும்.


*பற்கள்: எச்சில் ஊறும் வரை தான் பற்களுக்கு வலிமை. பாக்டீரியாக்களையும் விரட்டியடிக்கும். நாற்பது வயதில் எச்சில் ஊறுவது குறைய துவங்கும். அதனால் தான் சிலரிடம் கப்ஸ்.


*தசைகள்: முப்பது வயதில் தசைகள் 0.5 முதில் 2 சதவீதம் வரை ஆண்டுக்கு குறைய ஆரம்பிக்கும். தினசரி பயிற்சி, உடல் உழைப்பு தான் இதில் இருந்து காக்கும்.


*தோல்: தோல்பகுதி, 25 வயதில் இருந்தே பலவீனமடைய ஆரம்பிக்கும்.

*தலைமுடி: முப்பது வயதில் இருந்தே தலைமுடி கொட்ட ஆரம்பிக்கும்; வெள்ளை முடி தோன்றும்

நன்றி: நான் எப்போதோ படித்த பத்திரிக்கை செய்திக்கு....


நம்ம உடலும் இயந்திரம்தான்.......நாம் என்ன செய்தாலும் பழுது அடையத்தான் செய்யும்......அதற்குள் நாம் வாழும் வாழ்கையை அனுபவித்து, இன்பமாக வாழ நம்மை நாம் தயார் படுத்தி கொள்ள வேண்டும்....

ஆதலினால் காதல் செய்வீர் நமது உடல் உறுப்புகளை.....!

13 பிப்ரவரி 2012

சோனியாவுக்கும் விடுதலைபுலிகளுக்கும் தொடர்பு....என் வாயை கிளறவேண்டாம் ..விஜயகாந்த் (நொறுக்கு தீனி)

ராஜ பக்சேவுக்கு பாரத ரத்னா ,சோனியாவுக்கும் விடுதலைபுலிகளுக்கும் தொடர்பு! இப்படி சம்பந்தமே இல்லாமல் பேசுபவர் யாரென நமக்கு தெரியாமல் இருந்தால்தான் ஆச்சர்யம் !

ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே வருவதற்கு சுப்ரமணிய சுவாமியும் ஒரு முக்கிய காரணம்....அவர் வாயை திறந்தாலே பூகம்பம்தான்....பல நேரம் காமெடியாகவும்,சில நேரம் சீரியசான காமெடியாகவும் இருக்கும்....

அதுமாதிரிதான் இப்போது ஒன்றை கொளுத்தி போட்டு இருக்கிறார்....

விடுதலைபுலிகளுக்கும் சோனியா மற்றும் இத்தாலியில் உள்ள சோனியா குடும்பத்தினருக்கும் தொடர்பு இருந்ததாம்....!!...ஆனால் விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவுக்கு எதிரான இயக்கம்...அதை ஒழித்து கட்டியவர் ராஜபக்சே ....அதனால அவருக்கு இந்தியாவின் உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது கொடுக்கணுமாம்....என்னய்யா இது கொலைவெறி காமெடியா இருக்கு?தமிழ்நாட்டுக்குள் வரும்போது இவரை சாணியால் அடித்துதான் வரவேற்பு கொடுக்க வேண்டும்....


இந்த ஆளு எப்போதுமே லூசு மாதிரிதான் பேசுவாரா? இல்லை அவர் பேச்சே லூசு மாதிரியா?

....................................... ................................................. ..............................

ஆட்சியில் இருக்கும்போது நல்லது செய்வதற்கு கூட பயந்தோம்...இப்போது கெட்டதை கூட துணிச்சலாக செய்வோம் என ஸ்டாலின் பேசி இருக்கிறார்....அட நல்லது செய்ய எதற்கு பயந்தார்கள் என புரியவில்லை.....!இப்ப என்ன கெட்டதை செய்ய போறார் என்று அவருக்கே வெளிச்சம்....பொது குழுவில் எதிர்பார்த்த பதவிகிடைக்கவில்லை என்பதற்காக இப்படி எல்லாமா பேசுவது?


பொதுவா கெட்டது பண்ணத்தான் பயந்தேன் என பலரும் கூறுவார்கள்...இவர் என்னடான்னா அப்படியே உல்டாவா பேசி இருக்காரே...வாழ்க பேச்சுபுலி! கலைஞரின் வாரிசு....

..................................... .................................................. .........................................
சட்டமன்றத்தில் இருந்து சஸ்பென்ட் செய்யப்பட்ட பின்னர் விஜயகாந்தின் சூடு மேலும் அதிகரித்துள்ளது.... ஏதாவது ஒரு மேடை கிடைத்தால் ஜெயலலிதாவை பற்றி பொளந்து கட்டி விடுகிறார்....

என்னை வம்புக்கு இழுத்தால் என் வாயை கிளறினால் உண்மைகளை வெளியிட வேண்டி வரும்..அப்புறம் கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதைதான் என கேப்டன் விஜயகாந்த் சூறாவளியாக சுழன்று அடித்து கொண்டு இருக்கிறார் தினமும்....என்ன உண்மை, எந்த பூதம் என சீக்கிரம் அவர் சொல்லனும்னா யாராவது அவர் வாயை கிளற வேண்டும்....ஜெயலலிதா கிளருவாரா?

.................................. ........................................... .............................................


சங்கரன்கோவில் இடைதேர்தலில் பாமக போட்டி இடாது என ராமதாஸ் கூறி இருக்கிறார்.....போட்டி இடுவதற்கு அங்கு பாமக ஆட்களே இல்லை என இப்போதுதான் அவர் தெரிந்து கொண்டு இருக்கிறார் போலும்....சும்மா காமெடி பண்ணாதிங்க பாஸ்....


அடுத்த கூட்டணி தயார்....!விஜயகாந்தும் ஸ்டாலினும் நேற்று சந்திந்து பேசி இருக்கின்றனர்..ஒருவேளை இது அடுத்த கூட்டணிக்கு அஸ்திவாரமாக கூட இருக்கலாம்....நேற்று மதுரையிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் இருவரும் ஒன்றாக வந்துள்ளனர்...அப்போதுதான் சந்தித்து பேசியுள்ளனர்..ம்ம்ம்ம் ....அரசியலில் வேடிக்கை பார்ப்பது என்ன ஒரு சுவாரஸ்யம் நமக்கு...!12 பிப்ரவரி 2012

அதிமுக அரசு டிஸ்மிஸ்....தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி...

என்னடா இதுன்னு யாரும் அதிர்ச்சி அடைய வேண்டாம்..... எம்ஜிஆர் முதல்வராக இருக்கும்போது அவர் ஆட்சி 1980 ல் கலைக்கப்பட்டது.... அது பற்றிய ஒரு பிளாஷ்பேக் செய்திதான் இது....

அப்போதெல்லாம் மத்திய அரசு நினைத்துவிட்டால் தனக்கு பிடிக்காத மாநில அரசுகளை சர்வசாதாரணமாக டிஸ்மிஸ் செய்து வந்தது.....இதற்குமுன் கருணாநிதி முதல்வராக இருக்கும்போது அவர் ஆட்சியும் கலைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது...

1980 ல் நடந்த பாராளுமன்ற தேர்தலில் இ.காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இந்திராகாந்தி பிரதமர் ஆனார். காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சி நடத்திய கீழ்க்கண்ட 9 மாநிலங்களில், ஆளும் கட்சிகள் தோல்வி அடைந்தன. அந்த மந்திரிசபைகளை டிஸ்மிஸ் செய்வது என்றும், சட்ட சபைகளை கலைத்துவிட்டு, தேர்தல் நடத்துவது என்றும் மத்திய அரசு முடிவு செய்தது.

அதைத்தொடர்ந்து கீழ்க்கண்ட 9 மாநில சட்டசபைகள் கலைக்கப்பட்டன:_

1. தமிழ்நாடு

2. உத்தரப்பிரதேசம்

3. பீகார்

4. ராஜஸ்தான்

5. மத்திய பிரதேசம்

6. பஞ்சாப்

7. ஒரிசா

8. குஜராத்

9. மராட்டியம்.

மேற்கண்ட 9 மாநிலங்களின் சட்டசபைகளைக் கலைக்கும் உத்தரவில், ஜனாதிபதி சஞ்சீவ ரெட்டி கையெழுத்திட்டார். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்தது. (1977 பாராளுமன்ற தேர்தலில் ஜனதா கட்சி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த போது, இ.காங்கிரஸ் ஆட்சி நடந்த 9 மாநில மந்திரிசபைகளை டிஸ்மிஸ் செய்தது குறிப்பிடத்தக்கது.)

எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்கப்பட்டது பற்றிய அறிவிப்பு வெளியானபோது, டெலிவிஷனில் எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த "சிவகவி" படம் ஓடிக்கொண்டிருந்தது. நண்பர்களுடன் அதை எம்.ஜி.ஆர். பார்த்துக்கொண்டிருந்தார். தன் ஆட்சி கலைக்கப்பட்டதை அறிந்த எம்.ஜி.ஆர்., "சட்டசபை தேர்தலை சந்திப்போம். அதில் நமக்கு வெற்றி உறுதி" என்று கூறியவாறு, எல்லோருக்கும் லட்டு கொடுத்தார்.

1977 தேர்தலில் வெற்றி பெற்று பதவிக்கு வந்த எம்.ஜி.ஆர். மந்திரிசபை 963 நாட்களே ஆட்சியில் இருந்துள்ளது. ஆட்சி கலைக்கப்பட்டது குறித்து, எம்.ஜி.ஆர். ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்ததாவது:_

"கழகக் கண்மணிகளே! தமிழ்ப்பெருமக்களே! என் ரத்தத்தின் ரத்தமான உடன் பிறப்புகளே! நாம் எதிர்பார்த்த படி, சட்டத்தின் பெயரால் "அண்ணாவின் அரசு" கலைக்கப்பட்டு விட்டது. தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும் கட்டிக் காத்து வந்த தமிழ்ச் சமுதாயத்திற்கு சோதனை ஏற்பட்டுள்ளது.

அண்ணா அரசு அழியக் காரணமாக இருந்தவர்கள், மீண்டும் அமைக்கப்பட்ட அரசை அழிக்கத் துணை நின்று சூது சூழ்ச்சிகளில் ஈடுபட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். "தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மறுபடியும் வெல்லும்" என்ற சத்தியத்தின் குரலை நினைவுபடுத்துகிறேன்.

எனவே, எனது ஆருயிர் உடன் பிறப்புகளே! ஆத்திரப்படாதீர்கள்! ஆவேசப்படாதீர்கள். அமைதியாக இருங்கள். மீண்டும் தமிழ்நாட்டில் அண்ணாவின் அரசு அமையும். ஒரு அநீதியை முன்னுதாரணம் காட்டி, இன்னொரு பெரிய அநீதி இழைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயகம் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்த சோதனையில், அ.தி.மு.க. புடம் போட்ட தங்கமாக மின்னும். நாம் அப்பழுக்கற்ற அண்ணாவின் தம்பிகளாக வெற்றி பெறுவோம். அமைதி. அமைதி. அமைதி. பொறுத்தார் பூமி ஆள்வார். இது பொன்மொழி."

இவ்வாறு அறிக்கையில் எம்.ஜி.ஆர். குறிப்பிட்டு இருந்தார்.

எம்.ஜி.ஆர். மந்திரிசபை டிஸ்மிஸ் செய்யப்பட்டபோது, தி.மு.கழகத் தலைவர் கருணாநிதி டெல்லியில் இருந்தார். பிரதமர் இந்திரா காந்தியுடன் பேச்சு நடத்திவிட்டு சென்னை திரும்பினார். அவரை நிருபர்கள் பேட்டி கண்டனர்.

நிருபர் கேள்வி:_ அடுத்தது என்ன? தேர்தல் எப்போது வரும்?

கருணாநிதி பதில்:_ தேர்தல் எப்போது வரும் என்பதை அவர்கள் அறிவிப்பார்கள்.

கேள்வி:_ தேர்தலில் இட ஒதுக்கீடு செய்வது பற்றியும், உடன்பாடு பற்றியும் என்ன பேசினீர்கள்?

பதில்:_ தி.மு.க_இ.காங்கிரஸ் உறவு குறித்து பிரதமர் அவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினேன். இந்த பேச்சு வார்த்தை மகிழ்ச்சிகரமாக அமைந்தது. தக்க முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் என்ன முடிவு என்பதை இப்போது அறிவிப்பதற்கு இல்லை.

கேள்வி:_ தேர்தல் இட ஒதுக்கீடு குறித்து, இங்குள்ள தோழமை கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்டு விட்டதா?

பதில்:_ தி.மு.க., இ.காங்கிரஸ், முஸ்லிம் லீக், பார்வர்டு பிளாக் ஆகிய தோழமைக் கட்சிகள் இடையே உள்ள உறவு, வெறும் தேர்தல் உடன்பாடு மட்டும் அல்ல. லட்சிய உறவும் கூட."

இவ்வாறு கருணாநிதி கூறினார்.

எம்.ஜி.ஆர். மந்திரிசபை கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி சார்பில் தமிழக ஆட்சிப் பொறுப்பை கவர்னர் பட்வாரி கவனிப்பார் என்று அறிவிக்கப்பட்டது. கவர்னரின் ஆலோசகராக டி.என்.லட்சுமி நாராயணன் நியமிக்கப்பட்டார். இவர், அதுவரை தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் தலைவராக இருந்து வந்தார்.

போதும் என்று நினைக்கின்றேன் இந்த பிளாஷ்பேக் ....

நன்றி: தினத்தந்தி காலசுவடுகள்....

11 பிப்ரவரி 2012

மன்மோகன் சிங்கின் " கொலைவெறி" விருந்து ...!


கொலை வெறின்னு ஒரு பாடலை வைத்துகொண்டு இவர்கள் முதலில் தமிழை கொலை பண்ணினார்கள்...அடுத்து அடுத்து ஏதோ இந்தியாவுக்காக நோபல் பரிசு வாங்கியதை போல இவர்கள் பண்ணும் அலப்பறை இருக்கே....யப்பா...தாங்க முடியல...


இந்த மாதிரி பாடல் எழுதுவது பாடல் ஆசிரியர்களுக்கே அவமானம் ,தமிழை கொச்சை படுத்தி விட்டார்கள் என ஒரு தரப்பு சினிமா துறையிலே பொங்கி கொண்டு இருக்கிறது.....

கொலைவெறி ,அடிடா அவளை போன்ற தரக்குறைவான வரிகள் இளைய சமுதாயம் தடம் மாறுவதற்கு ஒரு காரணம் என பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்....


முதலில் ஒன்று...ஒரு பாடல் ஹிட் ஆவதற்கு முதல் காரணம் இசை அமைப்பாளர் ..பிறகுதான் அதை பாடியவர்களும், எழுதியவர்களும்....ஆனால் இந்த கொலை வெறி பாட்டில் நடந்ததோ அனைத்தும் தலைகீழ்.....இசை அமைப்பாளர் அனிருத்தை ஓரம் கட்டிவிட்டு ஏதோ தன்னால்தான் இந்த பாடல் ஹிட் ஆனதைபோல எல்லா புகழையும் தட்டி கொண்டு சென்று விட்டார் தனுஷ்....


ஒரு பாடல் ஹிட் ஆவது சினிமா சம்பந்தப்பட்ட விஷயம்...ஆனால் இந்தியாவிற்காக ஏதோ அணுகுண்டு தயாரித்ததை போல பிரதமரே தனுசுக்கு விருந்து கொடுத்ததுதான் உச்ச கட்ட கொடுமை.....யார் சொன்னது பிரதமர் சும்மா பொம்மையாக இருக்கிறார் என்று...?அவருக்கு இது மாதிரி எவ்வளவோ வேலைகள் உள்ளன....

ஏன்யா அவர் என்ன சுதந்திர போராட்ட தியாகியா? இல்ல சந்திரனுக்கு சந்திராயன் விட்ட மயில்சாமி அண்ணாதுரையா?அவருக்கு கூட பிரதமர் விருந்து கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை....

அடுத்து கொடுமை ஏதோ ஒரு அறிய கண்டுபிடிப்பை கண்டுபிடித்த சயின்டிஸ்ட் போல ஒரு புகழ் பெற்ற கல்லூரி தனுசை வைத்து மாணவர்களுக்கு பாடம் எடுக்க சொன்னது....என்னங்கடா இது ? ஒரு பாடல்தானே அது?தனுஷ் என்ன தாமஸ் ஆல்வா எடிசனா?மாணவர்களின் தரம் அந்த அளவுக்கு தாழ்ந்து போய் விட்டதா?


அதோட விட்டார்களா ? தனுசுக்கு மட்டும் விருந்து கொடுத்தால் அப்படத்தின் நாயகி சுருதி கோபித்துகொண்டு ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்து அதனால் இந்தியாவின் எக்கனாமி இறங்கி விட போவதை போல அவருக்கும் விருந்து கொடுத்துள்ளார் பிரதமர் ..அதுவும்இன்னொரு நாட்டு பிரதமருக்கு விருந்து கொடுக்கும்போது சேர்த்து...!


அட பாவிகளா?மக்களின் வரிபணம்டா அது.....! சுருதிக்கும் அந்த பாட்டுக்கும் என்னய்யா சம்பந்தம்? அந்த பாடலுக்கு இசை அமைத்தவர் அனிருத்...பாவம்யா அந்த அனிருத்.....அவருக்கும் ஒரு விருந்து கொடுத்து தொலைக்க வேண்டியதுதானே.....!

நாட்டில் ஊழல் ,விலைவாசி பிரச்சினைகள் தலைவிரித்து ஆடி கொண்டு இருக்கின்றன...இப்போ தனுசுக்கும்,சுருதிக்கும் விருந்துதான் முக்கியமா? தமிழ்நாட்டில் தானே புயல் கோரங்களை பார்வையிட பிரதமர் என்ற முறையில் வர நேரமில்லாதவருக்கு இவர்களுக்கு விருந்து கொடுக்க மட்டும் நேரம் இருக்கிறதாம்....என்ன கொடுமைடா இது?


இன்னும் என்ன கன்றாவியெல்லாம் நடக்க போகிறதோ?......

10 பிப்ரவரி 2012

விபரீதத்தில் முடிந்த ஆண் பெண் நட்பு...ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட் ...


இந்த காலத்தில் எனக்கு இத்தனை ஆண் நண்பர்கள் என பெண்கள் சொல்வதும் எனக்கு இத்தனை பெண் தோழிகள் என ஆண்கள் சொல்வதும்தான் உச்சகட்ட பரிணாம வளர்ச்சியாக ,பேஷனாக இன்னும் பல எலவுகளாக எண்ணப்படுகிறது ...

இதற்கு முக்கிய கரணம் சினிமா.....சினிமாவில்தான் ஆண் பெண் நட்பை ஊர் சுற்றுவதில் தொடங்கி,ஒன்றாக படுத்து உறங்குவது வரை காட்டி சீரழித்து வருகின்றனர்...ஒன்றாக படுத்து உறங்குவதும்,பப்புக்கும் செல்வதும், பார்ட்டியில் குடித்து ஆடுவதுமா நட்பு?சினிமாவில் பார்த்ததை நிஜத்தில் செய்ய ஆசைபட்டுதான் இன்று ஆண் பெண் நட்புகள் உருவாகி வருகின்றன...

சில தூய எண்ணம் உள்ள உதவும் எண்ணம் படைத்த ஆண் பெண் நட்பு இருக்கத்தான் செய்கிறது....அவர்களை நான் குறை சொல்லவில்லை

எல்லாம் ஒரு அளவுக்குள் இருந்தால் அது நல்லது.....அளவுக்கு மீறினால் ?

ஆணும் பெண்ணும் காமம் இல்லாத வெறும் நட்புடன் எந்த எல்லையும் இல்லாமல் பழக முடியுமா?

ஆம்..முடியும்...நாங்கள் நட்புக்குள் எந்த எல்லையும் வைத்து கொள்ள மாட்டோம் என்பவர்களும்,இல்லை அதுபோல பழக முடியாது என்பவர்களும் இந்த செய்தியை படியுங்கள்....


சென்னை அனகாபுத்தூரைச் சேர்ந்தவர் கவிதா, 19. பிளஸ் 2 முடித்து, தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) அனகாபுத்தூர், காமராஜபுரத்தைச் சேர்ந்தவர் சிவானந்தம், 19. பள்ளியில் படித்த போது கவிதாவை காதலித்தார்.

தற்போது அவர் தனியார் கல்லூரியில் ஓட்டல் மேனேஜ்மென்ட் மாணவர். இவரது நண்பர் அரவிந்த் சந்தோஷ், 19; சிவில் இன்ஜினியரிங் முதலாண்டு மாணவர். இவர் மூலம் சேலையூர் தீபன்குமார், 19; இன்ஜினியரிங் மாணவர், கேம்ப் ரோடு நவீன், 19; இன்ஜினியரிங் மாணவர், அனகாபுத்தூர் அரிஹரன், 19; பாலிடெக்னிக் மாணவர் ஆகியோரும் நண்பர்களாயினர். ஐந்து பேரும் பெண்ணின் வீட்டிற்கு செல்வது, வீட்டில் சாப்பிடுவது என, குடும்பத்துக்கு நெருக்கமாக இருந்துள்ளனர்.

கடந்த 5ம் தேதி மாலை சிவானந்தம், கவிதாவை தொலைபேசியில் அழைத்து அரவிந்த் சந்தோஷ் விபத்தில் காயமடைந்துவிட்டதாகக் கூறி, பெண்ணை அழைத்து சென்றார். பொழிச்சலூர் விமான் நகரில் உள்ள அரவிந்த் சந்தோஷ் வீட்டிற்கு சென்றனர்.

அங்கு குளிர்பானத்தில் மது கலந்து கொடுத்து வலுகட்டாயமாக ஐந்து நாய்களும் மாறி மாறி கற்பழித்துள்ளனர்...இப்போது அப்பெண் குடுத்த புகாரின் பேரில் அவர்களை கைது செய்துள்ளது போலீஸ்...

இப்போது என்ன சொல்கிறீர்கள்?அந்த பெண்ணும் அந்த கயவர்களை நம்பித்தான் பழகினார் .ஒன்றாக சுற்றி திரிந்தார்..இப்ப என்ன ஆயிற்று...?


பழக முடியும் என சொல்பவர்கள் இது மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தால் எல்லாரையும் அது போல எண்ண முடியாது என வாதிடுவார்கள்.....

ஆம் ..ஏற்று கொள்ளலாம்....ஆனால் பழகும் பெண்கள் தீய எண்ணத்தோடு பழகும் ஆண்களை எப்படி கண்டுபிடிப்பார்கள்....இது மாதிரி ஏதாவது ஒரு சம்பவம் நடந்த பின் கண்டுபிடித்து என்ன பயன்? போன மானம் திரும்பியா வர போகிறது...?எந்த புற்றில் எந்த பாம்பு இருக்கும் என யாருக்கு தெரியும்?இரண்டாவது இது மாதிரி ஒன்று இரண்டல்ல பல சம்பவங்கள் நடத்துள்ளன....

ஆண்களும் ,பெண்களும் கூட படிக்கும் சக நண்பர்கள் என்ற முறையில் பேசலாம் பழகலாம் ...ஆனால் அவர்கள் அவர்களின் எல்லையை தாண்ட கூடாது....... ஒன்றாக தங்குவது வெளியே செல்வது, பைக்கில் ஊர் சுற்றுவது,சினிமா செல்வது போன்றவை அந்த எல்லையில் அடக்கம்.....

அதற்காக நான் எல்லா ஆண்களையும் குறை சொல்ல வில்லை....கடலில் குண்டூசியை தேடுவதுபோல கடினமானது நல்ல எண்ணத்தோடு எந்த எல்லையும் வைத்து கொள்ளாமல் பழகும் ஆண் பெண் நட்பு....அதே கடலில் மீன் பிடிப்பது போன்ற எளிதானது தீய எண்ணங்களோடு பழகும் ஆண் பெண் நட்பு.....


கடலில் மீன்களை வலை போட்டு எளிதாக பிடிக்கலாம்....குண்டூசியை எடுக்க முடியுமா?

09 பிப்ரவரி 2012

பொணமலரான தினமலர்.....விஷத்தை கக்குவதில் என்றும் முதலிடம்....!


தினமலர் ஒரு அப்பட்டமான மதவெறி சாயம் கொண்ட நாளிதழ் என்பதை மீண்டும் ஒருமுறை நிருபித்துள்ளது....மோடிக்கு மகுடம் சூட்டுவதில் அப்படி என்னதான் சுகமோ இந்த பொணமலருக்கு?

தினமலர் எப்போதுமே ஓரளவுக்கூட நடுநிலமையாக செய்திகளை தருவதில்லை என்பது தெரிந்த விசயம்தான் ...ஒரு செய்தியை சரியாக ஆராயாமல் அப்படியே வெளியிடும் மோசமான நாளிதழ் இது ஒன்றுதான்......கருணாநிதியை பற்றி பலதடவை வரம்பு மீறி எழுதி சூடு போட்டு கொண்டதுதான் இந்த நாளிதழ்.... ஆனால் மறந்தும் கூட ஜெயலலிதாவை விமர்சிக்காது....அதேபோல எப்போதுமே முஸ்லிம்களுக்கு எதிரான செய்திகளை போடுவதில் முதலிடம் இந்த தினமலர்தான்....குஜராத் கலவரத்தின்போது முதல்வர் நரேந்திர மோடியின் அரசு போதிய நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக இருந்ததாக குஜராத் உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.இது நேற்றைய செய்தி......இதுதான் பல நாளிதழ்களில் வெளியாகியுள்ளது...


மேலும் கலவரத்தின்போது மோடி அரசின் மெத்தனத்தால் மாநிலத்தில் உள்ள மத கட்டடங்கள் பல சேதப்படுத்தப்பட்டன. எனவே சேதமடைந்த 500 மத கட்டடங்களுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும். அந்த இடங்களை சீரமைத்து, நிவாரணம் வழங்க வேண்டியது மாநில அரசின் பொறுப்பு.

கலவரத்தின்போது சேதமடைந்த வீடுகள், வர்த்தக கட்டிடங்களுக்கு நிவாரணம் வழங்கியபோதே மத கட்டடங்களுக்கும் வழங்கியிருக்க வேண்டும். மாநிலத்தில் உள்ள 26 மாவட்டங்களில் சேதமடைந்த மத கட்டடங்களுக்கு நிவாரணம் கோரும் விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட தலைமை நீதிபதி பெற்று, பரிசீலித்து முடிவு செய்வார்கள். அவர்கள் தங்கள் முடிவுகளை 6 மாதத்திற்குள் உயர் நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிடப்படும் எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர்....


ஆனால் இந்த செய்தியை அந்த பொணமலர் எப்படி இருட்டடிப்பு செய்துள்ளது தெரியுமா?


குஜராத் கலவரம் இறுதி அறிக்கை கோர்ட்டில் சமர்ப்பிப்பு: முதல்வர் நரேந்திர மோடி விடுவிப்பு? இது தலைப்பு....

குஜராத் கலவரத்தைப் பற்றி விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வுக் குழு, தன் இறுதிக்கட்ட அறிக்கையை உள்ளூர் கோர்ட்டில் நேற்று சமர்ப்பித்தது.
இந்த வழக்கில், நரேந்திர மோடி விடுவிக்கப்பட்டாரா என்பது பற்றி தெரிவிக்கப்படவில்லை. இதனிடையே, இவ்வழக்கில், நரேந்திர மோடியை விசாரிக்கத் தேவையில்லை என, சிறப்பு புலனாய்வுக் குழு அறிக்கை அளித்துள்ளதால், மோடிக்கு எந்தவிதமான நெருக்கடியும் ஏற்பட வாய்ப்பில்லை என, நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.....இது செய்தியாம்..

இவனுகளுக்கு யார் நம்ப தகுந்த வட்டாரம்?அப்படியே ஒரு செய்தியை இருட்டடிப்பு செய்து வெளியிட்டதை பாருங்கள்....


அடபாவிகளா? உலகில் எந்த மூலையில் என்ன நடந்தாலும் உடனே தெரியும் இந்த காலத்திலும் இப்படி ஒரு செய்தியை மறைத்து வெளியிட்டால் அது எவ்வளவு பெரிய விஷமத்தனம்?


தினம் ஏதாவது ஒரு விஷத்தை கக்கும் இந்த பொணமலருக்கு என்றுதான் முடிவு?

08 பிப்ரவரி 2012

சட்டசபையிலே பலான படம் பார்த்த அமைச்சர்,மீண்டும் கற்காலம்?(நொறுக்கு தீனி)


நம்ம சட்டசபையில் கேப்டன் நாக்கை துருத்தி கண்கள் சிவக்க ஒரு ஆக்சன் காட்சியைத்தான் காட்டினார்.......ஆனால் கர்நாடக சட்டசபையில் ஒரு அமைச்சரே செல்போனில் பலான காட்சிகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்திருக்கிறார்...என்ன கருமத்த சொல்றது....?

கர்நாடக சட்டசபையில் நேற்று விவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார்.

இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார்.....இவன் பார்த்தது மட்டுமில்லாமல் கூட்டுக்கு இன்னொருவனையும் சேர்த்துள்ளான்....இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இவர்களின் மானம் கர்நாடகம் முழுக்க நாறியது....

மக்கள் பிரச்சினைகளை பேசவேண்டிய மக்கள் மன்றத்தில் ஆபாச படம் பார்த்த இந்த மாதிரி அயோக்கியனை எல்லாம் சட்டசபையை விட்டே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்....இல்ல விபசார விடுதி நல அமைச்சகம் என்று ஒரு துறையை உருவாக்கி அதற்கு அமைச்சராக இவனை உட்கார வைக்கலாம்..

கொஞ்சம் விட்டால் சட்டசபையிலே எல்லா கருமத்தையும் நடத்தி முடிச்சுடுவானுங்கபோல....


................... ..................................... ........................................ ...........................


நான் ஆட்சிக்கு வந்தால் மின்சார பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி கூறிய ஜெயலலிதா மக்களுக்கு அடுத்த கரண்ட் ஷாக் கொடுத்துள்ளார்..... இப்போது தினமும் 8 மணி நேரம் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

5 மணிநேரம் மின்வெட்டு என அறிவித்து எங்கள் ஊர் பக்கமெல்லாம் 8 மணிநேரம் பவர் கட் செய்துவந்தார்கள்....இப்ப எட்டு மணிநேரம்னா ?சொல்லவே தேவை இல்லை....இந்த லட்சணத்தில் அடுத்த மாதம் பள்ளிகளுக்கு பொது தேர்வுகள் வேறு துவங்குகின்றன....எப்படி படிப்பார்கள் மாணவர்கள்?


உண்ணும் உணவு முதல் அருந்தும் தண்ணீர் வரை மின்சாரம் இல்லாமல் பெற இயலாது ........

எந்த தொழிலும் செய்ய முடியாத நிலையை இப்போது உருவாக்கி விட்டது அரசு....தொழிற்சாலைகள் ,விவசாயம்,கல்வி என அனைத்தும் முடங்கி போகும் நிலையை பார்த்தால் மீண்டும் நாம் கற்காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோமோ என்ற எண்ணமே ஏற்படுகிறது....

மின்சார பற்றாக்குறைக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பித்தான் மக்கள் ஓட்டளித்தார்கள்...ஆனால் போக போக மின்வெட்டு நேரம் அதிகரித்துதான் செல்கிறது?இதற்கு என்னதான் தீர்வு? தீர்த்து வைக்கத்தானே அரசு?

கூடங்குளம் அணுஉலையை திறந்தால் மின்சார பற்றாக்குறையை சமாளிக்கலாம் என மக்கள் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கவே இந்த மின்வெட்டு என வதந்திகளும் ரெக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கின்றன ....

எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்..ஆனால் மக்களின் கோபத்துக்கு ஆளாகித்தான் கருணாநிதி ஆட்சியை இழந்தார் என ஜெயலலிதா புரிந்து செயல்பட்டால் சரி.....!

07 பிப்ரவரி 2012

வறுமையில் வாடும் பாரதியார் குடும்பமும், கண்டு கொள்ளாத தமிழக அரசும்...


காணி நிலம் வேண்டும் என அன்று பாடினார் பாரதியார்.....இன்றோ அவரின் நெருங்கிய உறவினர் தனது வாழ்வாதாரத்துக்காக தமிழக அரசிடம் கோரிக்கை மனு போட்டு காத்திருக்கிறார்....

இவர் அரசுக்கு மனு போட்டு காத்திருப்பது இது முதல் முறையோ,இரண்டாவது முறையோ அல்ல....கிட்டத்தட்ட முப்பத்தியேழு வருடங்களாக காத்திருக்கிறார்....ஆனால் அரசுதான் கண் திறக்கவில்லை....அவர் பெயர் சங்கரராமன் ..வயது 88 ...இவர் ஒரு சுதந்திர போராட்ட வீரரும் கூட....

பாரதியார் எட்டயபுரத்தில் உள்ள தனது தாய்மாமன் தான் வசித்தார்..பாரதியாரின் தாய்மாமன் மகன்தான் இந்த சங்கரராமன்...
.கடந்த 1975ம் ஆண்டு, தி.மு.க., ஆட்சியில், கருணாநிதி முதல்வராக இருந்தபோது, பாரதி வாழ்ந்த இந்த வீடு, நினைவிடத்திற்காக அரசால் கையகப்படுத்தப்பட்டது.

முறையான அறிவிப்பின்றி இந்த வீட்டைக் கையகப்படுத்தியதை எதிர்த்து, சாம்பவசிவத்தின் மகன் சங்கரராமன், கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தார். அதற்கு இழப்பீடாக அரசு சார்பில், 5,000 ரூபாய் மட்டும் அப்போது கோர்ட்டில் செலுத்தப்பட்டது. இத்தொகை போதாது என, அவர் அரசிடம் முறையிட்டார். ஆனால், எந்தப் பயனுமில்லை. (நன்றி ..பத்திரிக்கைகள்...)

அட வீட்டை எடுத்த அரசு அதற்க்கு ஈடான தொகையை வழங்கி இருக்க வேண்டாமா?சுதந்திரத்துக்காக ,தமிழுக்காக பாடுபட்ட ஒரு மகாகவியின் குடும்பம் என்று கூட நினைக்கவில்லையா அரசு?

தன்னுடைய ஏழ்மை நிலையை எடுத்துக்கூறி, சுதந்திரப் போராட்ட வீரரின் வழித்தோன்றல் என்ற அடிப்படையில் மாதாமாதம் தனக்கு அரசு ஏதாவது உதவித்தொகை வழங்கவேண்டுமென, கடந்த 37 ஆண்டுகளாக, தமிழக அரசுக்கு அவர் மனு அனுப்பி வருகிறார். தி.மு.க., - அ.தி.மு.க., என மாறிமாறி ஆட்சிக்கு வந்தபோதும், இவரது கோரிக்கை நிறைவேறியபாடில்லை.


வார்த்தைக்கு வார்த்தை தமிழ் என கூறும் கருணாநிதியும் கண்டுகொள்ளவில்லை....அவருக்கு அவர் குடும்பத்திற்கு நிதி சேர்க்கவே நேரம் இல்லை....அவர் எப்படி இவருக்கு நிதி கொடுப்பார்?

ஜெயலலிதாவுக்கு சசிகலா குடும்பம் சேர்த்த சொத்துக்களை பிடுங்கவும், அவர்களை சிறையில் அடைக்கவுமே நேரம் போதவில்லை....பாரதியாரின் உறவினருக்கா உதவ நேரம் இருக்க போகிறது.....?


வாழ்க பாரதியார்.....வளர்க அவரது புகழ்....வேற என்னத்த சொல்ல....!

06 பிப்ரவரி 2012

இஸ்லாம் கூறும் மரணதண்டனை....


மரணதண்டனை பற்றி இருவேறு கருத்துக்கள் உலகெங்கும் இருந்து வருகிறது....

எந்த ஒரு விஷயம் என்றாலும் இருவேறு கருத்துக்கள் இருக்கத்தான் செய்யும்....ஒன்று வேண்டும்,மற்றொன்று வேண்டாம் ஒன்று சரி மற்றொன்று தவறு என வேறுபாடு இருக்கத்தான் செய்யும்....

அந்த வகையில் மரணதண்டனை அவசியமா இல்லையா என்பதுபற்றி ஒரு சிறு அலசல்....

மரணதண்டனை என்பது சும்மா ரோட்டில் நடந்து போறவனுக்கோ, கொள்ளை அடிப்பதற்கோ, மற்றவரின் நிலத்தை அபகரித்தற்கோ, மோசடி செய்ததற்கோ கொடுக்கப்படும் தண்டனை அல்ல....ஒரு உயிரை அநியாயமாக பறிக்கும் மிருக தனத்திற்கு கொடுக்கப்படும் உச்ச கட்ட தண்டனை....

ஒரு கொலை செய்தால் அவனுக்கு வழங்கப்படும் உச்ச கட்ட தண்டனை ஆயுள்தண்டனையாக இருந்தால் கொலை செய்தவன் சிறைக்கு செல்வான்....ஆனால் ஆயிளோடு இருப்பான்...அவனால் கொலை செய்யப்பட்டவர் எக்காலத்திலும் திரும்பி வரப்போவதில்லை .....இது பாராபட்சமாக இல்லையா?

சிறை சென்ற கொலையாளி திரும்ப வந்து மற்றொரு கொலை செய்கிறான்..இப்போதும் அவனுக்கு சிறைதண்டைதான் என்றால் யாருக்குதான் பயமிருக்கும்.....கொலை செய்தால் தண்டனை கடுமையாக இருக்கும் என ஒருவன் பயந்தால்தான் அது தண்டனை.....

இதைதான் திருக்குர்ஆன் கூறுகிறது....

எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிசு (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார்17:33.

.கொலை செய்தால் அவனுக்கு மரணதண்டனை...இதனால் கொலை செய்தவனும் தண்டிக்கப்படுவான் ...கொலை செய்யப்பட்ட நபரின் குடும்பத்திற்கும் கொலையாளியை தண்டித்த நிம்மதி கிடைக்கும்....மற்றொருவன் அடுத்த கொலை செய்ய அஞ்சுவான்.....ஒரே கல்லில் மூன்று மாங்காய்....எக்காலத்திற்கும் இந்த சட்டம் பொருந்தும்....


ஒருவன் ஒரு கொலை செய்தால் கொலை செய்யப்பட்ட குடும்பத்திற்கு எவ்வளவு பாதிப்பு என்பதை அக்குடும்பத்தில் இருப்பவர்கள்தான் உணர முடியும்......

சாதாரணமாக ஒருவர் நோய்வாய்ப்பட்டு இறந்தாலே அந்த துக்கத்தை அவர் உறவினர்களாலும் நண்பர்களாலும் தாங்க இயலாது....அப்படி இருக்கையில் ஒருவர் கொலை செய்யப்பட்டால் ?

கொலை செய்தால் மரணதண்டனைதான் என்றால் நிச்சயம் கொலை செய்ய பயம் வரும்..தண்டனைகள் கடுமையாக இருந்தால்தான் தவறுகள் குறையும்....

கடுமையான இந்த சட்டத்தை சொல்லும் திருக்குர்ஆன் பாதிக்கப்பட்ட நபர்கள் கொலையாளியை மன்னித்தால் அவனுக்கு தண்டனையை குறைக்கலாம் என மற்றொரு வாய்ப்பையும் வழங்கி உள்ளது....அது சம்பந்தப்பட்ட நபர்களின் மனநிலையை பொருத்தது.....

பாதிக்கபட்டவர்கள் வழியை குறைக்க (நீக்க இல்ல குறைக்க மட்டும்தான் ) மரணதண்டனை எனும் மருந்து தேவை .....அதுவே குற்றங்கள் குறைய வழிவகுக்கும்.....

05 பிப்ரவரி 2012

மனிதன் சந்திரனில் நடந்தான்...!!!உலகம் வியந்த சாதனை

சந்திரனுக்கு இப்போது ராக்கெட் அனுப்புவது ஒரு வியத்தகு சாதனை அல்ல...ஆனால் முதல்முதலாக மனிதன் சந்திரனில் நடந்தது ஒரு மாபெரும் சாதனையே....அதை கொஞ்சம் திரும்பி பார்ப்போமா இல்லை இல்லை படிப்போமா என்பதே சரி .......

இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற நிகழ்ச்சி, மனிதன் சந்திரனுக்குச் சென்று கால்பதித்து நடந்ததுதான். பூமியில் இருந்து சுமார் 3 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, சந்திரன். மனிதன் உயிர் வாழ்வதற்குத் தேவையான பிராண வாயு, தண்ணீர் முதலியவை அங்கு இல்லை. எனவே, மனிதன் சந்திரனுக்குப்போய் வருவது என்பது நடக்க முடியாத காரியம் என்றே நீண்ட காலமாக எண்ணப்பட்டு வந்தது.


ஆயினும் சந்திரனுக்கு மனிதனை அனுப்புவதற்கான முயற்சிகளில், அமெரிக்காவும், ரஷியாவும் 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தீவிரமாக ஈடுபட்டன. விண்வெளிச் சோதனையில், ஆரம்ப வெற்றிகள் ரஷியாவுக்கே கிடைத்தன. வானவெளியில், பூமியைச் சுற்றி முதன் முதலில் விண்வெளிக் கப்பலை ("ஸ்புட்னிக்") பறக்கவிட்டது ரஷியா தான். 1957ம் ஆண்டு அது பூமியைச் சுற்றிப் பறந்தது.


ஆனால் அமெரிக்காவைச் சேர்ந்த ஆர்ம்ஸ் டிராங் என்ற வானவெளி வீரர்தான் சந்திரனில் காலடி எடுத்து வைத்த முதல் மனிதன். இந்த அதிசயம் 1969 ஜுலை 21ந்தேதி நடந்தது. அன்று அமெரிக்க வான வெளி வீரர்கள் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் சந்திரனில் இறங்கினார்கள். சந்திரனில் முதன் முதலாக நடந்த பெருமை ஆர்ம்ஸ் டிராங்கை சாரும்.


16.7.1969 இரவு 7.02 மணிக்கு அமெரிக்காவில் உள்ள கென்னடி முனையில் இருந்து ராக்கெட் புறப்பட்டது. அதில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்டரின், காலின்ஸ் ஆகியோர் இருந்தனர்.


20ந்தேதி:- மாலை 6.30 மணி அளவில் ஆர்ம்ஸ்டிராங், ஆல்ட்ரின் இருவரும் "தாய் ராக்கெட்"டில் இருந்து, சந்திரனில் இறங்கும் குட்டி ராக்கெட் ("பூச்சி வடிவ வண்டி")டுக்குள் சென்றனர். பிறகு 11.47 மணிக்கு தாய் ராக்கெட்டுடன் இருந்து குட்டி ராக்கெட்டை பிரித்து சந்திரனை நோக்கி பயணமானார்கள். தாய் ராக்கெட்டில் காலின்ஸ் இருந்தார். குட்டி ராக்கெட் 2 மணி நேரம் பறந்து சென்று நள்ளிரவு 1.47க்கு சந்திரனில் இறங்கியது. ஆர்ம்ஸ்டிராங்கும், ஆல்ட்ரினும் பூச்சி வண்டிக்குள்ளேயே விருந்து சாப்பிட்டு ஓய்வு எடுத்தனர்.

21ந்தேதி உலகமே வியக்கும் அதிசயம் நடத்தப்பட்டது. அன்று காலை 8.26 மணிக்கு பூச்சி வடிவ வண்டியின் கதவை திறந்து ஆர்ம்ஸ்டிராங் சந்திரனில் காலை வைத்தார். நிலாவில் காலடி வைத்த முதல் மனிதர் அவர். பிறகு ஆல்ட்ரினும் சந்திரனில் காலடி எடுத்து வைத்தார்.

இருவரும் சந்திரனில் சிறிது தூரம் நடந்தார்கள். சந்திரனில் கல், மண் முதலியவற்றை சேகரித்தார்கள். பிறகு சந்திரனில் அமெரிக்க கொடியை நாட்டினார்கள். அதோடு தாங்கள் சந்திரனில் இறங்கியதை குறிக்கும் வகையில் நினைவுச் சின்னம் ஒன்றை பதித்தார்கள். அவர்கள் இருவரும் மீண்டும் பூச்சி வடிவ ராக்கெட்டுக்கு வந்து தாய் ராக்கெட்டுடன் இணைந்தார்கள். பிறகு பூமியை நோக்கி புறப்பட்டனர்.

24ந்தேதி:-இரவு 10.19 மணிக்கு அந்த ராக்கெட் பத்திரமாக கடலில் வந்து இறங்கியது. உலகமே அவர்களை பாராட்டியது.


நன்றி: தினத்தந்தியின் காலசுவடுகள்...