25 பிப்ரவரி 2012

சோனியா காந்திக்கு என ஒரு தனி சட்டமா?


தகவல் அறியும் உரிமை சட்டத்தால் என்னை ஒன்றும் கேள்வி கேட்க முடியாது என அதை தூக்கி குப்பையில் போட்டுள்ளார் சோனியா காந்தி...

சென்னையைச் சேர்ந்த தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர் வி.கோபாலகிருஷ்ணன் என்பவர், "கடந்த 2001-2011 வரையிலான காலத்தில், காங்., தலைவர் சோனியா தாக்கல் செய்த வருமான வரி கணக்கு தாக்கல் அறிக்கை பற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டும்' என, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், மனு தாக்கல் செய்திருந்தார்.


இதையடுத்து சோனியாவுக்கு வருமான வரித்துறை அலுவலகத்திலிருந்து கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது.

அக்கடிதத்துக்கு சோனியா அனுப்பியுள்ள பதில்

எனது சொத்து கணக்கு, வருமானவரி செலுத்திய விவரங்கள் தனிப்பட்ட விஷயம்.

பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள நான் அதை தேவையில்லாத 3-வது நபருக்கு பரிமாற முடியாது.

அது எனது தனிப்பட்ட பாதுகாப்பு விவகாரத்தில் தலையிடுவதாகும். தனி நபர் வருமான வரித்துறைக்கு தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் ரகசியமானவை. பாதுகாக்கப்பட வேண்டியவை.

1961-ம் ஆண்டு வருமான வரிச் சட்டம் 138-வது பிரிவின் கீழ் வேறு யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை என்று அதில் அவர் கூறியுள்ளார்.(நன்றி பத்திரிக்கை செய்திகள் )

இது மாதிரி அவர் தகவலை வெளியிட மறுப்பது இது இரண்டாவது தடவை....


நாட்டின் பாதுகாப்பை விபரங்களை தவிர்த்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம் என இந்த சட்டத்தில் கூறப்பட்டுள்ளது...சோனியா காந்தியின் வருமான வரி கணக்கு விபரங்களால் நாட்டிற்கு என்ன ஆபத்து வர போகிறது?

இந்தியாவின் பாதுகாப்புக்கும் சோனியாவின் வருமான வரி கணக்குக்கும் என்னய்யா சம்பந்தம்?


அவர் ஒழுங்காக வருமான வரி கணக்கு தாக்கல் செய்து இருந்தால் அதை வெளியிட வேண்டியதுதானே....அதில் என்ன தயக்கம்?அப்புறம் எதற்காக இந்த சட்டம்?

சாமானியனுக்கு பொருந்தும் இச்சட்டம் சோனியாவுக்கு பொருந்தாதா?

அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சோனியா காந்தியிடம் எதுவும் கேட்க கூடாது என ஒரு சட்டம் கொண்டு வந்தால் இந்த பிரச்சினையே வராது...

14 கருத்துகள்:

 1. //அல்லது தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சோனியா காந்தியிடம் எதுவும் கேட்க கூடாது என ஒரு சட்டம் கொண்டு வந்தால் இந்த பிரச்சினையே வராது...///

  ஹா ஹா...
  இன்னும் கொஞ்ச நாள்ல அப்புடி ஒரு சட்டம் வந்தாலும் வந்துடும்...

  பதிலளிநீக்கு
 2. யாருக்குமே அடங்காத சூனியா பூந்தி....!

  பதிலளிநீக்கு
 3. அதானே அம்மணி இன்னும் இந்த நாட்டு பிரஜை அகலையோ என்னவோ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்...இந்தியர்களைத்தானே இந்த சட்டம் கட்டுப்படுத்தும்....இவங்கதான் இத்தாலியாச்சே....

   நீக்கு
 4. ஆமா கேட்டா கொடுக்க வேண்டியதுதானே இதுல என்ன கொறஞ்சி போய்டும்னு தெரியலயே?!...

  பதிலளிநீக்கு
 5. தமிழ்மணம் வாக்குப்பட்டை என்னாச்சு சகோ.?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....