16 பிப்ரவரி 2012

எம் ஜி ஆர் தான் அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு காரணம்...பரபரப்பான உண்மைகள்..!!


கருணாநிதிக்கு அடுத்து ஸ்டாலினா? அழகிரியா?என்பதே திமுகவின் இப்போதைய ஹாட் டாபிக்....

அது கருணாநிதி இருக்கும்போதே அவர் கண் முன்னாலே இருவரின் ஆதரவாளர்களும் அடித்து கொண்டு நாறியது கட்டுபாட்டுக்கு பெயர் போன திமுகவின் பரிணாம வளர்ச்சி என்றே கூறலாம்....


தலைவர் பதவி கொடுத்தால் ஏற்க தயார் என அழகிரி அதிரடியாக சொல்லி ஸ்டாலினுக்கு அனலை மேலும் கூட்டியுள்ளார்....

இவர்களின் மோதலுக்கு எம்ஜிஆரும் ஒருவகையில் காரணம்...கருணாநிதி ஒன்றும் திமுகவை ஆரம்பிக்கவில்லை...பட்டத்து இளவரசர்கள் போல அண்ணன் தம்பிகள் தலைவர் பதவிக்கு ஆசைப்பட...


அண்ணா ஆரம்பித்த கட்சியில் அவருக்குப்பின் நெடுஞ்செழியன், என் வி நடராஜன், மதியழகன் ஆகியோரில் ஒருவர்தான் திமுகவின் அடுத்த தலைவர் என அனைவரும் நினைத்தனர்.கருணாநிதிக்கு இருந்த ஆதரவில் சரிபாதி ஆதரவு நாவலர் நெடுஞ்செழியன் அவர்களுக்கும் இருந்தது...அந்நிலையில் எம் ஜி ஆரின் ஆதரவு யாருக்கோ அவர்தான் தலைவர் என்ற சூழ்நிலை நிலவியது...

ஆனால் யாரும் எதிர்பாராவண்ணம் கனகச்சிதமாக காய்களை நகர்த்தி எம் ஜி ஆரை கைக்குள் போட்டுக்கொண்டு திமுகவை கைப்பற்றினார் கருணாநிதி.....

அன்று எம்ஜிஆர் ஆதரவு தெரிவிக்கவில்லை என்றால் கருணாநிதி தலைவர் ஆகி இருக்க முடியாது....அன்று கருணாநிதி தலைவர் ஆகி இருக்காவிட்டால் இன்று இந்த பிரச்சினையே வந்திருக்காது ....!அப்ப ஒருவகையில் எம் ஜி ஆர் தான் இப்பிரச்சினைக்கு காரணம்...ஒருவழியாக தலைப்போடு சம்பந்த படுத்தியாச்சு....!


ஒருகட்டத்தில் தன்னையே மிஞ்சும் அளவுக்கு எம் ஜி ஆர் வளர்ந்துவிட்டதால் அவரை கட்சியை விட்டு தூக்கினார்.....தனது மகன் ஸ்டாலினை படிப்படியாக கட்சிக்குள் நுழைத்தார் கருணாநிதி....ஆனால் ஸ்டாலினை விட வைகோவின் வளர்ச்சி கருணாநிதியை பயம் காட்டியது.....ஸ்டாலினுக்காக வைகோவை கட்சியை விட்டு தூக்கினார்...ஸ்டாலினுக்கு ரூட் இனி கிளியர் என நினைத்தார் கருணாநிதி அழகிரி என்று ஒருவர் இருக்கிறாரே என்பதை மறந்து..!


அழகிரி என்று கட்சிக்குள் அடி எடுத்து வைத்தாரோ அன்று ஆரம்பித்தது ஸ்டாலினுக்கு தலைவலி....ஆரம்பத்தில் அதிரடி அரசியல் பண்ணி தனெக்கென கட்சியில் ஆதரவாளர்களை உருவாக்கினார் அழகிரி....அடுத்து அடுத்து வந்த இடைதேர்தல்களில் வென்று கட்சிக்கு தனது பலத்தை வெளிக்காட்டினார் அழகிரி....அடுத்து தேர்தலில் ஜெயித்து மத்திய மந்திரியாகவும் ஆனார்....

அண்ணன் டெல்லிக்கு போய்விட்டதால் இனி தனக்கு கவலை இல்லை என நினைத்தார் ஸ்டாலின்....ஆனால் மந்திரி பதவியை விட மாநில அரசியலே தனக்கு ஏற்றது என விரும்பிய அழகிரி கட்சிக்குள் அதிகாரம் செலுத்த ஆரம்பித்தார்...இப்போது கட்சிக்குள் அழகிரி அணி,ஸ்டாலின் அணி என கட்சி நிர்வாகிகள் , மாவட்ட செயலாளர்கள் பிரிந்து ஏறக்குறைய கட்சியை அழிவை நோக்கி கொண்டு சென்று இருக்கின்றனர்........


நீருபூத்த நெறுப்பு போல் புகைந்து கொண்டிருக்கும் இந்த பிரச்சினை எரிமலையாக நெருப்பை கக்கியது சமிபத்தில் நடந்த பொதுகுழுவில்....

தனக்காகவும், ஸ்டாலினுக்காகவும் பலரை கட்சியை விட்டு நீக்கிய கருணாநிதி இப்போது என்ன செய்வது என தெரியாமல் திகைத்து போய் இருக்கிறார்


இதுதான் தான் செய்த பாவம் தனது பிள்ளைகளை பாதிக்கும் என்பதோ?

18 கருத்துகள்:

  1. மாப்ள இத தான் சொல்வாங்களோ - ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்னு ஹெஹெ!

    பதிலளிநீக்கு
  2. எனக்கென்னவோ நம் பதிவுலக 'சோ' என்று அழைக்கப்படும் கஸாலி தனக்கு இருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி ஸ்டாலின் அழகிரி இருவரிடமும் பேசி பிரச்னையை தீர்ப்பார் என்றே தெரிகிறது. 'கிங்,க்வீன் மேக்கர்' கஸாலி இருக்க பயமேன்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னப்பா இது? அய்யா புன்னியவான்களே.... முதலில் இந்த சிவா கமெண்ட் போடுவதற்கு யாராவது தடை போடுங்களே?

      நீக்கு
  3. இதை அப்படியே வழிமொழிகின்றேன்

    பதிலளிநீக்கு
  4. நல்லா போடுறாங்கப்பா
    முடிச்சை நல்லவேளையா இவங்க ரெண்டு பேர் பிரச்சினைக்கும் காரணம்னு தயாளு அம்மாவை சொல்லலை.
    ஏன்னா..... இந்த ரெண்டு பேரையும் பெத்தது அவங்கதானே....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கரெக்ட்ன்னே..அந்த கோணத்திலையும் எழுதி இருக்கலாமோ?!

      நீக்கு
  5. இதுக்கு பெரியாரும் ஒரு காரணம்...அவர் இரண்டாம் கல்யாணம் செய்திருக்காவிட்டால் தி.க., பிளவு பட்டு தி.மு.க.,வை அண்ணா துவங்கியிருக்க மாட்டார் அல்லவா?

    அப்புறம் தொண்டையில் கேன்சர் வந்திருக்காவிட்டால் அண்ணா இறந்து போயிருக்க மாட்டார்.

    அப்புறம்... எம்.ஜி.ஆர்., நடிக்க வராமல் இருந்திருந்தால் கலைஞர் முதல்வராக உதவியிருக்க மாட்டார்.

    இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா ஆஹா....வரலாறு வந்து அருவியாக கொட்டுதே இங்கே...

      நீக்கு
  6. அரசியல் களம் சூடு பிடிக்கிறது. கலைஞருக்கு பிறகு வெட்டு குத்து நடக்குமோ என்று இப்பொழுதே பயமாக இருக்கிறது. கலைஞர் காலத்திலேயே இந்த பிரச்னையை முடிவுக்கு கொண்டு வருவது திமுகவுக்கு நல்லது.

    பதிலளிநீக்கு
  7. அஸ்ஸலாமு அலைக்கும்

    ///எம் ஜி ஆர் தான் அழகிரி ஸ்டாலின் மோதலுக்கு காரணம்...பரபரப்பான உண்மைகள்..!!//

    தலைப்பே சும்மா பரபரப்பாக இருக்கு
    ஆடுகளத்தில் இறங்கிய பிறகு அண்ணன் என்ன தம்பி என்ன

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்க சகோ....தலைப்பை பார்த்துதானே மக்கள் வராங்க..அதான்...

      நீக்கு
  8. //இதுதான் தான் செய்த பாவம் தனது பிள்ளைகளை பாதிக்கும் என்பதோ?//

    இந்த ஒரு வரியில் மட்டும் எனக்கு உடன்பாடு இல்லை
    அவன் அவன் பாவசுமையை அவனே சுமப்பான்

    இங்குள்ள ஓட்டுகட்சி அரசியலில் ஒவ்வொருத்தருக்கும் அதிகமான சுமை இருப்பதால் அனைவரும் சுமப்பார்கள் என்று சொல்லலாம்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அது சும்மா எழுதினது சகோ...வினை விதைத்தவன் வினை அறுப்பான்...இது சரி...

      நீக்கு
  9. இது (தி.மு.க.) ஒன்றும் சங்கர மடமல்ல என்று தலைவர் பலமுறை சொல்லி இருப்பதை மறந்து விட்ஈர்கல் போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
  10. இது (தி.மு.க.) ஒன்றும் சங்கர மடமல்ல என்று தலைவர் பலமுறை சொல்லி இருப்பதை மறந்து விட்ஈர்கல் போல் தெரிகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அவர்தான் சொன்னார்..ஆனால் இவர்கள் அதை பொருட்படுத்துவது இல்லை....

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....