15 பிப்ரவரி 2012

எங்களை கண்டித்தால் உங்களை கொல்வோம்..மிரட்டிய மாணவர்கள் ..தவிக்கும் ஆசிரியர்கள்

கஸாலி அண்ணன் அவர்கள் எனக்கு versatile blogger award என்ற விருதை வழங்கி உள்ளார்....என்னை போன்ற வளரும் பதிவர்களுக்கு இது பூஸ்ட் கொடுத்தது மாதிரி...அண்ணன் கஸாலி அவர்களுக்கு எனது நன்றிகள்....அண்ணன் சொன்னதைப்போல இந்த விருதை நான் ஐந்து பேருக்கு வழங்க வேண்டும்....சுழற்சி முறையில் இந்த விருது அனைத்து பதிவர்களுக்கும் சென்று கொண்டே இருக்க வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு விதிமுறையை வைத்துள்ளனர்...இத்தனைநண்பர்களில் வெறும் ஐந்து பேர் மட்டும் என்பது கண்ணை கட்டிவிட்டு கார் ஓட்ட சொல்வதைபோல கடினமானது..



அதன்படி...

தனது தத்து பித்துவங்களால் நம்மை கவர்ந்த பிலாசபி பிரபாகரன்

கவிதை மலையில் நம்மை நனைய வைக்கும் கவிதை வீதி சௌந்தர்

விழிப்புணர்வு பதிவுகளை இஸ்லாமை மேற்கோள்காட்டி எழுதும் சகோ ஹைதர் அலி


சரமாரியாக கலாயித்து எழுதும் மாம்ஸ் விக்கியின் அகடவிகடங்கள்


ஆரோக்யமான விவாதங்களை முன்வைக்கும் சகோ சுவனப்பிரியன்


ஆகியோருக்கு வழங்குகிறேன்....நான் ஒன்றும் இவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை....கொடுக்க வேண்டும் என்ற விதிமுறைகளுக்காக மட்டும்தான் ....

எனது மற்ற நண்பர்களுக்கும் இவ்விருது சுழற்சி முறையில் வெகு விரைவில் கிடைக்கும் என நம்புகிறேன்....


ஒரு மாணவன் ஆசிரியரை கொலை செய்து ஒரு வாரம் கூட ஆகவில்லை....அதற்குள் எங்களை கண்டித்தால் உங்களை கொல்ல வேண்டி வரும் என இரு மாணவர்கள் ஆசிரியரை மிரட்டி அதிர்ச்சி கொடுத்துள்ளனர்....


விருதுநகர் மாவட்டம் நரிக்குடியில் உள்ளது மருது பாண்டியர் அரசு மேல் நிலை பள்ளி. இந்தப் பள்ளியில் நேற்று முன்தினம் காலை பிரேயர் கூட்டம் நடந்து கொண்டிருந்தது. அப்போது இரண்டு மாணவர்கள் பிரேயருக்கு வராமல் வகுப்பறையிலேயே இருந்தனர். மேலும் மேசையைத் தட்டி தாளம் போட்டுக் கொண்டிருந்தனர்.

இதைப் பார்த்து கோபமடைந்த ஆசிரியர் சுப்பிரமணி என்பவர் வகுப்பறைக்குச் சென்று அங்குதாளம் போட்டு கொண்டிருந்த இரண்டு மாணவர்களையும் கண்டித்துள்ளார். ஆனால் ஆசிரியரைக் கண்டு கொள்ளாத அந்த இரு மாணவர்களும், சென்னையில் ஆசிரியரைக் குத்திக் கொன்றது போல இங்கும் நடந்து விடும், போய் விடுங்கள் என்று கூறியுள்ளனர். இதைக் கேட்டு ஆசிரியர் சுப்பிரமணி அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் அனைத்து ஆசிரியர்களும் வகுப்புகளுக்குப் போகாமல் புறக்கணித்துப் போராட்டம் நடத்தினர். பின்னர் ஆசிரியர் சுப்பிரமணி போலீஸில் புகார் கொடுத்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீஸார் சம்பந்தப்பட்ட மாணவர்கள் இருவரையும் உடனடியாக கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்துள்ளனர்....


எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்?இந்த சம்பவம் பல கேள்விகளை நம்முன் வைக்கிறது....

மாணவர்களின் இத்தகைய வன்முறை செயல்களுக்கு காரணம் அவர்கள் வளர்ந்த சூழ்நிலைகளா? பெற்றோர்களா?வன்முறையை தூண்டும் சினிமாக்களா?படிப்பின் மேல் உள்ள வெறுப்பா? அல்லது பொது தேர்வுகள்,தேர்ச்சியை மட்டும் அறிவிக்கும் கல்விமுறைகளின் மேல் உள்ள வெறுப்பா?


ஆசிரியரை கொன்ற மாணவனுக்கு வழங்கப்பட்ட தண்டனை போதுமானதா?


கொலை செய்த மாணவனுக்கு தகுந்த தண்டனை கிடைக்காதது இவர்களை இப்படி பேச தூண்டியதா?


ஆசிரியரை கொன்ற மாணவனையும் , ஆசிரியரை கொல்வேன் என மிரட்டிய மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்ததுதான் தகுந்த தண்டனையா?எனக்கு விடை தெரியவில்லை....


இப்படியே ஒவ்வொரு மாணவனும் மிரட்ட ஆரம்பித்தால் வகுப்பறையில் யார் பாடம் சொல்லி கொடுப்பது..?


கொலை செய்த மாணவன் தனக்கு அந்த எண்ணம் ஏற்பட படங்களில் பார்த்த வன்முறை காட்சிகளும் காரணம் என கூறியுள்ளான்...

அப்படிப்பட்ட வன்முறை மிகுத்த சினிமாக்களை தடை செய்ய முடியாதா?


ஆசிரியர்களுக்கு மாணவர்கள் பயந்த காலம் போய் இப்போது மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பயப்படும் காலம் ஏற்பட்டுள்ளது....இந்த நிலை மாற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை ஒருங்கிணைத்து அரசு ஒரு அதிரடி நடவடிக்கையை உடனே மேற்கொண்டால்தான் ஒரு முடிவு ஏற்படும்....

செய்யுமா அரசு?

14 கருத்துகள்:

  1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  2. //நான் ஒன்னும் இவர்களுக்கு விருது வழங்கும் அளவுக்கு பெரிய ஆள் இல்லை//

    பிடிச்சிருக்கு - விருது பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்


    ஆசிரியர் மாணவர்: .....????????

    ஆ....கா...எடக்கு மடக்கா இருக்கே..ஸ்....ஸ் முடியலை....எங்க போய்? முடியுமோ?

    பதிலளிநீக்கு
  3. ஆசிரியர்கள் எல்லோரும், இனி போருக்கு போவது போல கவச உடை அணித்து செல்ல வேண்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  4. அப்படித்தான் இருக்கு காலம்...நன்றி

    பதிலளிநீக்கு
  5. எங்கே செல்கிறது மாணவர் சமுதாயம்?

    பதிலளிநீக்கு
  6. விருது பெற்றமைக்கு வாழ்த்துகள்..

    பதிலளிநீக்கு
  7. அஸ்ஸலாமு அலைக்கும் சகோ

    விருதை பெற்றுக் கொள்கிறேன் உங்கள் அன்புக்கு நன்றி மகிழ்ச்சி சகோ

    மாணவன் சம்பந்தமாக இறுதியில் நிறைய கேள்விகள் கேட்டு இருக்கிறீர்கள் எனக்கு தெரிந்த ஒரே பதில்

    ஒழுக்க விழுமியங்களை போதிக்க தவறிய கல்விமுறை ஆபத்தானது என்று சொல்வேன்

    பதிலளிநீக்கு
  8. விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள்

    இனி கொஞ்ச நாளைக்கு இந்த பயம் இருக்க தான் செய்யும். ஆசிரியர்கள் முன்பை விட இன்னும் அதிகபயத்துடன் காலத்தை கழிப்பாங்க

    பதிலளிநீக்கு
  9. மாப்ள விருதுக்கு நன்றிய்யா!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....