08 பிப்ரவரி 2012

சட்டசபையிலே பலான படம் பார்த்த அமைச்சர்,மீண்டும் கற்காலம்?(நொறுக்கு தீனி)


நம்ம சட்டசபையில் கேப்டன் நாக்கை துருத்தி கண்கள் சிவக்க ஒரு ஆக்சன் காட்சியைத்தான் காட்டினார்.......ஆனால் கர்நாடக சட்டசபையில் ஒரு அமைச்சரே செல்போனில் பலான காட்சிகளை பார்த்து ரசித்து கொண்டு இருந்திருக்கிறார்...என்ன கருமத்த சொல்றது....?

கர்நாடக சட்டசபையில் நேற்று விவாதம் நடந்து கொண்டு இருக்கும்போது விவாதத்தை கவனிக்காமல், கூட்டுறவுத் துறை அமைச்சர் லட்சுமண் சவதி, தன் மொபைல் போனை ஆன் செய்து, அதில் ஆபாச படத்தை ஆர்வமாக பார்த்து கொண்டிருந்தார்.

இதை அருகிலிருந்த பெண்கள், குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சி.சி.பாட்டீலும் ரசித்துக் கொண்டிருந்தார்.....இவன் பார்த்தது மட்டுமில்லாமல் கூட்டுக்கு இன்னொருவனையும் சேர்த்துள்ளான்....இதை அங்கிருந்த கன்னட "டிவி' சேனல்கள் அனைத்தும் படம் பிடித்து, உடனடியாக ஒளிபரப்பியது. இவர்களின் மானம் கர்நாடகம் முழுக்க நாறியது....

மக்கள் பிரச்சினைகளை பேசவேண்டிய மக்கள் மன்றத்தில் ஆபாச படம் பார்த்த இந்த மாதிரி அயோக்கியனை எல்லாம் சட்டசபையை விட்டே டிஸ்மிஸ் செய்ய வேண்டும்....இல்ல விபசார விடுதி நல அமைச்சகம் என்று ஒரு துறையை உருவாக்கி அதற்கு அமைச்சராக இவனை உட்கார வைக்கலாம்..

கொஞ்சம் விட்டால் சட்டசபையிலே எல்லா கருமத்தையும் நடத்தி முடிச்சுடுவானுங்கபோல....


................... ..................................... ........................................ ...........................


நான் ஆட்சிக்கு வந்தால் மின்சார பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படும் என வாக்குறுதி கூறிய ஜெயலலிதா மக்களுக்கு அடுத்த கரண்ட் ஷாக் கொடுத்துள்ளார்..... இப்போது தினமும் 8 மணி நேரம் தமிழகத்தில் மின்வெட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது....

5 மணிநேரம் மின்வெட்டு என அறிவித்து எங்கள் ஊர் பக்கமெல்லாம் 8 மணிநேரம் பவர் கட் செய்துவந்தார்கள்....இப்ப எட்டு மணிநேரம்னா ?சொல்லவே தேவை இல்லை....இந்த லட்சணத்தில் அடுத்த மாதம் பள்ளிகளுக்கு பொது தேர்வுகள் வேறு துவங்குகின்றன....எப்படி படிப்பார்கள் மாணவர்கள்?


உண்ணும் உணவு முதல் அருந்தும் தண்ணீர் வரை மின்சாரம் இல்லாமல் பெற இயலாது ........

எந்த தொழிலும் செய்ய முடியாத நிலையை இப்போது உருவாக்கி விட்டது அரசு....தொழிற்சாலைகள் ,விவசாயம்,கல்வி என அனைத்தும் முடங்கி போகும் நிலையை பார்த்தால் மீண்டும் நாம் கற்காலத்திற்கு சென்று கொண்டு இருக்கிறோமோ என்ற எண்ணமே ஏற்படுகிறது....

மின்சார பற்றாக்குறைக்கு ஏதாவது ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பித்தான் மக்கள் ஓட்டளித்தார்கள்...ஆனால் போக போக மின்வெட்டு நேரம் அதிகரித்துதான் செல்கிறது?இதற்கு என்னதான் தீர்வு? தீர்த்து வைக்கத்தானே அரசு?

கூடங்குளம் அணுஉலையை திறந்தால் மின்சார பற்றாக்குறையை சமாளிக்கலாம் என மக்கள் மனதில் ஒரு எண்ணத்தை உருவாக்கவே இந்த மின்வெட்டு என வதந்திகளும் ரெக்கை கட்டி பறந்து கொண்டு இருக்கின்றன ....

எதுவாக இருந்தாலும் இருக்கட்டும்..ஆனால் மக்களின் கோபத்துக்கு ஆளாகித்தான் கருணாநிதி ஆட்சியை இழந்தார் என ஜெயலலிதா புரிந்து செயல்பட்டால் சரி.....!

9 கருத்துகள்:

  1. //கோவி.கண்ணன் said...

    காவடி எடுப்பது அலகு குத்துவது உள்ளிட்டவை மூட நம்பிக்கை என்றாலும் கூட அவ்வாறு செய்பவர்கள் பிறருக்கு என்ன கேடு செய்கிறார்கள் என்று கேட்டுக்கொள்ளும் போது இத்தகைய மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வது வேலையற்ற வேலை என்றே நினைக்கிறேன், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள் இல்லாத மதச் சமூகமே இல்லை என்னும் போது இவை சமூகக் குற்றமாக, சீர்கேடாக பார்க்க ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.//

    SOURCE: http://govikannan.blogspot.com/2012/02/2012.html

    இருக்கிற மூட நம்பிக்கைக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவரே!

    பிற சமயங்களின் மீது இட்டுகட்டப்படுபவைகளுக்கு முட்டுக்கொடுத்து தூபம் போட்டு வெறியாட்டம் ஆடுவதில் முன்னிலை வகிப்பது ஏன்? திரும்பிப்பார் !!!



    click to watch video

    ////////
    கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி
    ////////

    பதிலளிநீக்கு
  2. //கோவி.கண்ணன் said...

    காவடி எடுப்பது அலகு குத்துவது உள்ளிட்டவை மூட நம்பிக்கை என்றாலும் கூட அவ்வாறு செய்பவர்கள் பிறருக்கு என்ன கேடு செய்கிறார்கள் என்று கேட்டுக்கொள்ளும் போது இத்தகைய மூட நம்பிக்கைகளை விமர்சனம் செய்வது வேலையற்ற வேலை என்றே நினைக்கிறேன், உடலை வருத்தும் வழிபாட்டு முறைகள் இல்லாத மதச் சமூகமே இல்லை என்னும் போது இவை சமூகக் குற்றமாக, சீர்கேடாக பார்க்க ஒன்றும் இல்லை என்றே கருதுகிறேன்.//

    SOURCE: http://govikannan.blogspot.com/2012/02/2012.html

    இருக்கிற மூட நம்பிக்கைக்கு எப்படியெல்லாம் சப்பைக்கட்டு கட்டுபவரே!

    பிற சமயங்களின் மீது இட்டுகட்டப்படுபவைகளுக்கு முட்டுக்கொடுத்து தூபம் போட்டு வெறியாட்டம் ஆடுவதில் முன்னிலை வகிப்பது ஏன்? திரும்பிப்பார் !!!



    click to watch video

    ////////
    கோவி.கண்ணன் மாரியம்மன் கோயில் காவடி
    ////////

    பதிலளிநீக்கு
  3. இதே கருத்துக்களோடுதான் நானும் இன்று பதிவிட்டேன். என்னே ஒற்றுமை?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படியா? பாத்துட்டா போச்சு...

      நீக்கு
    2. முதல் பதிவைப்போல்தான் நானும் ஒரு பதிவிட்டுள்ளேன். இரண்டாவது மின்சாரம். இப்போது மின்தடை எட்டு மணி நேரமாக அதிகரிக்க போவதாக அதிகாரப்பூர்வமான செய்திகள் வருகிறது. எட்டு மணி நேரத்துடன் கூட ஒரு நாலு மணி நேரத்தை சேர்த்துக்கொள்ள வேண்டியதுதான் நம் ஊர் பக்கம்.

      நீக்கு
  4. சலாம் சகோ!

    தமிழகத்து சிறந்த அரசியல் தலைமை இல்லாததுதான் முக்கிய காரணம். அதுவரை இது தொடர்கதையே!

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....