26 மே 2011

ஆபாச வீடியோவுக்கும் ஆட்சியில் இருந்தவர்களுக்கும் என்ன சம்பந்தம்?


ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் அஜால் குஜால் சாமியாரான நித்யானந்தாவுக்கும் ஏக போக சந்தோசம்.........

தான் எந்த தவறும் செய்யவில்லையாம்..சென்ற முறை ஆட்சியில் இருந்தவர்கள் தான் அனைத்துக்கும் காரணமாம்....என்ன கொடுமை சார்? நீங்கள் அஜாக்கிரதையாக ஆபாச வீடியோவில் சிக்கியதற்கு அவர்கள் எப்படி காரணமாவார்கள்?பாவம் அவர்களே தோற்றுவிட்டு பரிதாபமாக இருக்கிறார்கள்...நீங்கள் கையும் களவுமாக பிடிபட்ட அந்த வீடியோ காட்சியே பெங்களூரில் உள்ள உங்கள் ஆசிரமத்தில் எடுக்க பட்டதுதானே?

சென்ற முறை திருவண்ணாமலைக்கு வந்தவருக்கு பொதுமக்களும் மற்ற பிற அமைப்புகளும் கடுமையான எதிர்ப்பை தெரிவித்து ஆர்பாட்டங்கள் நடத்தின...

ஆட்சி மாற்றம் நடந்த பிறகு எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் திருவண்ணாமலைக்கு வந்தவர் தான் எவ்வித தப்பும் செய்யாத மாதிரி பேட்டி கொடுத்துள்ளார்....

ஏதோ அந்த ஆபாசமான அருவெறுப்பான வீடியோ காட்சிகள் சந்துக்கு சந்து சிரித்ததற்கு திமுகவே காரணம் என்பதுபோல பேசியிருக்கிறார்...எல்லா லேப்களிலும் அந்த சி டி பரிசோதனை செய்யப்பட்டு உண்மை என நிரூபிக்க பட்டுள்ளதை ஏற்றுகொள்ளாமல் அது பொய்யான சி டி என இன்னும் இவர் சொல்கிறார் என்றால் தன்னை இந்த மக்கள் இன்னும் நம்புகிறார்கள் ,நம்புவார்கள் என்ற அழுத்தமான நம்பிக்கையே காரணம்....

தனக்கு எதிராக சாட்சி சொல்ல ரஞ்சிதாவுக்கு 20 கோடி பணமும் ,எம் எல் ஏ சீட்டும் தருவதாக ஒரு கட்சி ( திமுகவைத்தான் ) ஆசை காட்டியதாம்...என்னங்கடா இது கூத்தா இருக்கு? நீங்க அடிச்ச மன்மத லீலைகளுக்கு ஆதாரமாகத்தான் நீங்களே அந்த வீடியோவில் இருக்குறீர்களே?அப்புறம் எதற்கு சாட்சி?

அதுமட்டுமில்லாமல் ஒருவேளை தான் தவறு செய்தே இருந்தாலும் அதை தனது மத அமைப்புகளும், மத பெரியவர்களும்தான் கேட்கவேண்டுமாம்..மீடியாக்கள் கேட்க கூடாதாம்.......சாமியார் என்ற பெயரில் அசிங்கம் செய்துவிட்டு அதை மறைக்க மத சாயம் பூசுகிறார்..

நீங்கள் ரஞ்சிதா மட்டுமல்ல யாருடன் வேண்டுமானாலும் சந்தோசமாக இருங்கள்...ஆனால் அதற்காக மக்களின் நம்பிக்கையை சாமியார் என்ற பெயரில் சிதைக்காதீர்கள்....

நண்பர்களே ஆன்மீகத்தின் பெயரால் அசிங்கத்தை செய்யும் தனிப்பட்ட நித்யானந்தாவுக்காக மட்டுமே இதை நான் எழுதியுள்ளேன்....

25 கருத்துகள்:

 1. ///நண்பர்களே ஆன்மீகத்தின் பெயரால் அசிங்கத்தை செய்யும் தனிப்பட்ட நித்யானந்தாவுக்காக மட்டுமே இதை நான் எழுதியுள்ளேன்....////

  இப்படியே நாம் உறங்கிக்கொண்டு இருந்தால் இந்த மாதிரி ஆயிரம் இன்னும் நித்தியானந்தா வருவார்கள் .

  பதிலளிநீக்கு
 2. நித்தி இன்னும் அடங்க இல்லையா ??

  பதிலளிநீக்கு
 3. இவன் கால்ல இன்னும் விழறவனுகள அடிக்கனும்
  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+
  முடிஞ்ச பதில் சொல்லுங்க
  http://speedsays.blogspot.com/2011/05/talk-me.html

  பதிலளிநீக்கு
 4. நீங்க அடிச்சா மன்மத லீலைகளுக்கு ஆதாரமாகத்தான் நீங்களே அந்த வீடியோவில் இருக்குறீர்களே?அப்புறம் எதற்கு சாட்சி?//

  ஆமா சகோ, இதை விடப் பெரிய ஆதாரம் வேறு என்ன வேண்டும்?
  எல்லாம் மக்களை ஏமாற்றிப் பணம் சம்பாதிப்பதற்கான வழி.

  பதிலளிநீக்கு
 5. அவருக்கு என்ன கோவம்ன்னா...

  அதிக பப்ளிசிட்டி பண்ணவங்க.. திமுக காரங்னுங்க அந்த கோவம்..
  அதை மூடி மறைச்சி அவருக்கு உதவியிருந்தா திமுகாவுக்கு சலாம் போட்டிருப்பார்...


  வருமானத்திற்காக சாமியாராக உள்ள இவர்களை கண்டிப்பாக களை எடுக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
 6. ஆனால் அதற்காக மக்களின் நம்பிக்கையை சாமியார் என்ற பெயரில் சிதைக்காதீர்கள்....//

  மக்களிடம் மூட நம்பிக்கைகளும், இந்தச் சாமியார் பின்னே கொடி பிடிக்கும் பழக்கமும் இருக்கும் வரை, ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் வாழ்வார்கள்!

  பதிலளிநீக்கு
 7. #இப்படியே நாம் உறங்கிக்கொண்டு இருந்தால் இந்த மாதிரி ஆயிரம் இன்னும் நித்தியானந்தா வருவார்கள் .#


  சரியாக சொன்னீர்கள் ரியாஸ் ...நன்றி...

  பதிலளிநீக்கு
 8. #FARHAN சொன்னது…

  நித்தி இன்னும் அடங்க இல்லையா ??#

  அடங்கமாட்டார் .....இனிதான் ஆடுவார்..

  பதிலளிநீக்கு
 9. # கவிதை வீதி # சௌந்தர் சொன்னது…

  அவருக்கு என்ன கோவம்ன்னா...

  அதிக பப்ளிசிட்டி பண்ணவங்க.. திமுக காரங்னுங்க அந்த கோவம்..
  அதை மூடி மறைச்சி அவருக்கு உதவியிருந்தா திமுகாவுக்கு சலாம் போட்டிருப்பார்...


  வருமானத்திற்காக சாமியாராக உள்ள இவர்களை கண்டிப்பாக களை எடுக்க வேண்டும்...#


  வாங்க கவிதை வீதி நண்பா....

  பதிலளிநீக்கு
 10. #நிரூபன் சொன்னது…

  ஆனால் அதற்காக மக்களின் நம்பிக்கையை சாமியார் என்ற பெயரில் சிதைக்காதீர்கள்....//

  மக்களிடம் மூட நம்பிக்கைகளும், இந்தச் சாமியார் பின்னே கொடி பிடிக்கும் பழக்கமும் இருக்கும் வரை, ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுவோர் வாழ்வார்கள்!#


  வாங்க பாஸ்....நீங்கள் சொல்வது மிகவும் பொருத்தம்...ஏமாறுபவர் இருக்கும்வரை ஆயிரம் நித்யானந்தாக்கள் தோன்றுவார்கள்..

  பதிலளிநீக்கு
 11. மாப்ள நல்ல வேல கடவுள் வந்து தான் கேக்கனும்னு சொல்லாம போனானே ஹிஹி!

  பதிலளிநீக்கு
 12. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 13. பெயரில்லா1:56 PM, மே 26, 2011

  உண்மையிலே நித்தியானந்தா இப்ப காமெடி பீசாகிட்டார், இவரையெல்லாம் நம்பின மக்களுக்கு இது தேவை தான், சிலர் பட்டா தானே திருந்துவார்கள் ..)

  பதிலளிநீக்கு
 14. போட்டு தாக்கேய், கள்ளபயலுவ இவனுகளை எல்லாம் சிங்கப்பூர்'ல குடுக்குற கசையடி குடுத்தாலும் திருந்த மாட்டானுக....!!!

  பதிலளிநீக்கு
 15. உண்மையான வார்த்தைகள்

  பதிலளிநீக்கு
 16. இவுங்க திருந்தவே மாட்டனுங்க பாஸ்

  பதிலளிநீக்கு
 17. என்ன இது அநியாயம்? இந்த போஸ்ட் ஹிட் ஆகிடுச்சு. அப்படி இருந்தும் யாரும் இன்னும் மைனஸ் ஓட்டு போடலையே? ஹி ஹி

  பதிலளிநீக்கு
 18. #கந்தசாமி. சொன்னது…

  உண்மையிலே நித்தியானந்தா இப்ப காமெடி பீசாகிட்டார், இவரையெல்லாம் நம்பின மக்களுக்கு இது தேவை தான், சிலர் பட்டா தானே திருந்துவார்கள் ..)#


  நன்றி....இவர் பட்டுமே திருந்தவில்லையே....

  பதிலளிநீக்கு
 19. #MANO நாஞ்சில் மனோ சொன்னது…

  போட்டு தாக்கேய், கள்ளபயலுவ இவனுகளை எல்லாம் சிங்கப்பூர்'ல குடுக்குற கசையடி குடுத்தாலும் திருந்த மாட்டானுக#


  ஹாஹா...கரெக்டா சொன்னீங்க....

  பதிலளிநீக்கு
 20. #சி.பி.செந்தில்குமார் சொன்னது…

  என்ன இது அநியாயம்? இந்த போஸ்ட் ஹிட் ஆகிடுச்சு. அப்படி இருந்தும் யாரும் இன்னும் மைனஸ் ஓட்டு#

  அண்ணா ஏனுங்கண்ணா ....நல்லாதானே போய்கிட்டு இருக்கு......

  பதிலளிநீக்கு
 21. நண்பர்களே ஆன்மீகத்தின் பெயரால் அசிங்கத்தை செய்யும் தனிப்பட்ட நித்யானந்தாவுக்காக மட்டுமே இதை நான் எழுதியுள்ளேன்....>>>>

  கடைசில இப்புடி எஸ்கேப் ஆயிட்டிங்களே....

  பதிலளிநீக்கு
 22. நச்சு என்று குத்திட்டீங்க போங்க...
  கொஞ்சம் லேட்டு ஆகிட்டு பாஸ்..
  இனிமேல் நயிட்டே வருகிறேன் பரவாயில்லையா??
  வேலை மீண்டும் ஆரம்பித்துவிட்டது

  பதிலளிநீக்கு
 23. சி பிக்கு மைனஸ் ஒட்டேன்றால் அம்புட்டு சந்தோசம்..ஹிஹி

  பதிலளிநீக்கு
 24. பெயரில்லா9:44 PM, மே 26, 2011

  குத்துங்க எஜமான் குத்துங்க ... சண் டிவி காமெர மேன் .. விட்டுடுங்க எஜமான் விட்டுடுங்க .. நித்தியானந்தா ?

  பதிலளிநீக்கு
 25. naama ellaam marnthuduvoam mannichchuduvoam... theriyuma...
  illanaa veliyila poana oanaana vettikkulla vittu iruppoama?

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....