திமுகவின் தோல்வி குறித்து நேற்று ரூம் போட்டு யோசித்து வடிவேலு கொடுத்த பேட்டி......
ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி இருக்கிறார்கள். (ஹி ஹி...இன்னும் எவ்வளவு பேருடா இதே சொல்ல போறீங்க...)அது, நடந்து இருக்கிறது. தமிழக மக்களின் தீர்ப்புக்கு தலைவணங்குகிறேன். இந்த நேரத்தில், தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.(வாங்குன காசுக்கு மேலே நல்லா கூவுரதுனா இதுதான்...)
அதிமுகவை வைத்துத்தான் விஜயகாந்த் ஜெயித்தார்
தி.மு.க.வைப்போல் அ.தி.மு.க.வும் ஒரு பெரிய கட்சி.(கண்டு பிடித்துவிட்டார்யா கொலம்பஸ்...) அந்த கட்சியை வைத்துதான் விஜயகாந்தின் கட்சியும் ஜெயித்து இருக்கிறது. விஜயகாந்தை வைத்து அ.தி.மு.க. ஜெயிக்கவில்லை.(அப்படின்னா பெரிய கட்சியான திமுகவை வைத்துதான் காங்கிரஸ் கட்சியும், பாமகவும் தோல்வி அடைந்ததா?)
ஒரு உண்மையான முதல்வருக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்தேன். மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியதால், இப்போது ஜெயலலிதா அம்மா முதல்வர் ஆகியிருக்கிறார். (ஜெயலலிதாவின் அம்மா சந்தியாதான் இறந்துவிட்டாரே...!)
இந்த சூழ்நிலையில், விஜயகாந்த் கட்சியை சேர்ந்தவர்கள் மீண்டும் என் வீட்டின் மீது கல்வீசி தாக்க முயன்று இருக்கிறார்கள். என் வீட்டையே சுற்றி சுற்றி வருகிறார்கள்.(திரும்ப திரும்ப பேசுற நீ ....)
வெளில வாடா, எத்தனை நாளைக்குடா உனக்குப் போலீஸ் பாதுகாப்பு கொடுக்கும் என்று பேசுகிறார்கள், மிரட்டுகிறார்கள். நான் என்ன சொல்கிறேன் என்றால் (வேண்டாம் வலிக்குது......அப்புறம் அழுதுடுவேன்...), உனக்கு மக்கள் தீர்ப்பு கொடுத்துட்டாங்க. ஆனால் அது மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான். என் வீட்டில் புகுந்து அடிப்பதற்கோ, என்னை வெட்டுவதற்கோ, என் வீட்டாரை தாக்குவதற்கோ அவர்கள் தீர்ப்பு கொடுக்கவில்லை. அது தப்பான விஷயம்.
தேர்தலில் ஜெயித்தால், அடுத்து மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வது? என்று யோசிப்பவர்தான் நல்ல தலைவர். ஜெயித்து விட்டோம் என்பதற்காக, என்னையும், என் குடும்பத்தினரையும் அடிப்பதற்கு அலைவது, எந்தவிதத்தில் நியாயம்?( ஆமாம் ...செத்த பாம்ப அடிக்குறது சின்ன புள்ள தனமாவுள்ள இருக்கு...)
அவருடைய டி.வி. மூலம் மூன்று பேர், என்னை பகிரங்கமாக மிரட்டுகிறார்கள். (சிங்கமுத்து இப்ப உனக்கு மூணு பேரா தெரியுறாரா?)விஜயகாந்த் இனிமேலாவது நல்ல தலைவராக நடந்துகொள்ள வேண்டும். என் வீட்டுக்கு ஆள் அனுப்புவதை இதோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்...
எனது உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டால் அதற்கு விஜயகாந்த்தான் முழுப் பொறுப்பும்.( விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தவிர யாரையும் சுட மாட்டார்....டோன்ட் வொர்ரி ...பீ ஹேப்பி....)
எனது வீட்டுக்குப் பாதுகாப்பு இல்லை. பாதுகாப்புக்கு இருந்தவர்கள் போய் விட்டார்கள். எனது சென்னை வீட்டுக்குள் மர்ம நபர்கள் புகுந்து மிரடடியுள்ளனர். எனவே எனக்கும், எனது வீட்டாருக்கும் போலீஸார் உரியப் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார் வடிவேலு....( பேசாம நா பேசினது எல்லாம் சும்மாச்சுக்கும் விளையாட்டுக்குத்தான் ......அழகிரி சீரியஸா இருந்ததுனால அவரை சிரிக்க வைக்க அது மாதிரி பேசினேன் என்று சொல்லி விஜயகாந்திடம் சரண்டர் ஆக வேண்டியதுதானே....)
Tweet |
நான் இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் .. கலக்கல் பதிவு நண்பா.
பதிலளிநீக்குடெம்பிளேட் கலர் அடிக்குது நண்பா
பதிலளிநீக்குதமிழ் மனத்தை காண வில்லை..
பதிலளிநீக்குஅம்மாவின் அட்டகாசங்கள் ஆரம்பம்..
பதிலளிநீக்கு௧. நேற்று ஜெயலலிதா எம் ஜி ஆர் சிலைக்கு மாலை அணிவிக்க வருகை தந்ததை ஒட்டி சென்னை அண்ணாசாலையில் சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தம்
௨. அதிக பொருட்செலவில் கட்டப்பட்ட புதிய சட்ட சபை புறக்கணிப்பு
௩. செம்மொழி நூலகம் அகற்றம்
இன்னும் எவ்வளோ வரப்போகுதோ
"நான் சும்மா வெளையாட்டுக்கு பேசுனதெல்லாம் உண்மைன்னு நம்பிட்டீங்க ..ஹையோ ஹையோ"
பதிலளிநீக்குகைப்பிள்ளை இனி காலிதான்...
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குவடிவேலுவின் பீதி நன்றாக தெரிகிறது.
பதிலளிநீக்குஉங்க கலாய்ப்பு சூப்பருங்க..
பதிலளிநீக்குஎன்னதான் இருந்தாலும் வடிவேலு நல்ல நடிகர்தான்.இனிமேல் அவரை நிம்மதியா பொழப்ப பாக்கவுடுவாங்களா...
பதிலளிநீக்குஅரசியல்னு வந்துட்டா கண்டவனும் சேத்த வாரி அடிக்கத்தான் செய்வான் அதை விஜயகாந் த் புரிந்துகொண்டிருப்பார் என நினைக்கிறேன்.வடிவேலுவை பழிதீர்ப்பதைவிட தனது கட்சியை பலப்படுத்த விஜயகாந் த் முயற்சி எடுத்தால் நலம். நிச்சயம் உங்களால் ஜெவுடன் இதேபோல் இணக்கமாக இருக்கமுடியாது.எனவே உங்களின் சக்தியை வீணாக்காமல் 2016 ஐ உங்களின் ஆண்டாக மாற்ற முயற்சியுங்கள்.....
#!* வேடந்தாங்கல் - கருன் *! சொன்னது…
பதிலளிநீக்குநான் இன்னும் சிரிச்சிட்டே இருக்கேன் .. கலக்கல் பதிவு நண்பா.#
இதற்க்கு காரணமான அடிவேலுவுக்கு நன்றி...ஹி ஹி....
#பாரத்... பாரதி... சொன்னது…
பதிலளிநீக்குஉங்க கலாய்ப்பு சூப்பருங்க..#
ஹி ஹி....நன்றி...
விஜயகாந்த் பாகிஸ்தான் தீவிரவாதிகளை தவிர யாரையும் சுட மாட்டார்....டோன்ட் வொர்ரி ...பீ ஹேப்பி....)...............
பதிலளிநீக்குஹி ஹி நல்ல பதிவு ....
நன்றி நண்பர்களே..
பதிலளிநீக்குவடிவேலு இனி பாதி தான் ஹிஹி!
பதிலளிநீக்கு