10 மே 2011

ராசா அப்ரூவர் ஆவாரா?


ராசா தலித் என்பதாலே "பழிவாங்க படுகிறார் (பலியா இல்ல பழியா"கருணாநிதிக்கே வெளிச்சம்) என்று ஸ்பெக்ட்ரம் ஊழலை ஜாதி அரசியலாக்க நினைத்த கருணாநிதி தற்போது மகளுக்காக ராசாவை காவு கொடுக்க தயாராகிவிட்டார் வெளிப்படையாக.....ராசாதான் குற்றவாளி என்பது கனிமொழிக்காக வாதாடிய வக்கீலின் வாதமாக இருந்தாலும் கனிமொழி நிரபராதி ஆக வேண்டும் என்பதற்காக ராசா குற்றவாளி ஆகட்டும் என்பதே கருணாநிதியின் வாதம் என்பதை இதிலிருந்து அறிந்துகொள்ளலாம்.....

கனிமொழிக்காக வாதாடிய ராம் ஜெத்மலானி ராசாதான் எல்லாவற்றிற்கும் பொறுப்பு எனவும் கனிமொழிக்கும் கலைஞர் டிவிக்காக வாங்கப்பட்ட இறநூறு கோடி ரூபாய் பணத்துக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என முழு கோழியை முட்டைக்குள் அடைக்க முயற்சித்துள்ளார்......

இப்போது கலைஞர் என்ன சொல்வார்? இது வக்கீலின் வாதம் மட்டுமே என்றுதான் சொல்வார்...(இனி சொல்ல போகிறார்)கட்சியை விட ராசாதான் பெரிதாக பட்டார் அப்போது....எல்லாவற்றையும் விட மகள்தான் பெரிதாக படுகிறார் இப்போது....

ராசாதான் குற்றவாளி கனிமொழி இல்லை என்பதே வக்கீலின் வாதம்....அதுவே கருணாநிதியின் எண்ணம், கருத்து ,விருப்பம் .....இப்போது கருணாநிதியின் கவனம் கனிமொழி உள்ளே போகக்கூடாது என்பதில்தானே தவிர ராசா குற்றவாளி இல்லை என்பதில் அல்ல.....

தனக்கு ஆபத்து வந்தால் யாரையும் காவு கொடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்பதை ராசா உணர்ந்து இருப்பார்....இப்போது தன்னை காத்து கொள்ள ராசா அப்ரூவர் ஆகி எல்லா உண்மையையும் வெளியே சொல்வாரா?அப்படி சொன்னால் கனிமொழி, ராசாத்தி , மற்றும் வெளிப்படையாகவும்,மறைமுகமாகவும் ஸ்பெக்ட்ரம் பணத்தில் ஆதாயம் அடைந்த பலரும் கம்பி என்னும் சூழ்நிலை உருவாகும்....


எப்படி சொல்வார்....சாதிக் பாட்சாவுக்கு நிகழ்ந்த இயற்கை மரணத்தை !!? போல இனி இவ்வழக்கில் யாரும் இயற்கை மரணம் அடைய வாய்ப்புகள் உள்ளது என அவர் அறியமாட்டாரா என்ன?

7 கருத்துகள்:

 1. தனக்கு ஆபத்து வந்தால் யாரையும் காவு கொடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்பதை ராசா உணர்ந்து இருப்பார்..//// கரெக்டு ..

  பதிலளிநீக்கு
 2. தனக்கு ஆபத்து வந்தால் யாரையும் காவு கொடுக்க கருணாநிதி தயங்க மாட்டார் என்பதை ராசா உணர்ந்து இருப்பார்
  இது அரசியல்வாதிகளின் பிறவிக்குணம்....அதற்கு கலைஞர் மட்டும் விதிவிலக்கில்லை

  பதிலளிநீக்கு
 3. ஒரு ஆடு மாட்டிக்கிச்சி...
  அப்புறம் என்ன கவலை...

  பதிலளிநீக்கு
 4. ஐயாவை பற்றி நமக்கு தெரியாதா என்ன....

  பதிலளிநீக்கு
 5. மாப்ள இது ஆரிய சதி அதனால நாங்க ஆரிய வக்கீல வச்சே இதை எதிர் கொள்றோம்........ஆங் இன்னொண்ண மறந்துட்டனே...ராசா நல்லவரு அந்த தலித் மகானுக்கு என் இதயத்துல இடம் உண்டு....யார்ரா அது எத்தன இதயம்னு கேக்குறது பிச்சி புடுவேன்..சத்தமா பேசிட்டனோ....
  இப்படிக்கு கஞ்சா சிங்கம் ச்சே மஞ்சா சிங்கம்......!

  பதிலளிநீக்கு
 6. பழியா? இல்லை பலியா?

  முதல் வரியிலேயே நக்கல் தொடங்கி விடுகிறது. அருமை.

  பதிலளிநீக்கு
 7. //த்தை !!? போல இனி இவ்வழக்கில் யாரும் இயற்கை மரணம் அடைய வாய்ப்புகள் உள்ளது என அவர் அறியமாட்டாரா என்ன?


  உண்மை

  =+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=+=
  நீங்கள் தெரிந்து கொள்ள

  http://speedsays.blogspot.com/2011/05/blog-post_11.html

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....