26 ஜூன் 2012

ஜெயலலிதா போலீஸ் ...கருணாநிதி போலீஸ்...மொத்தத்தில் தமிழக போலீஸ் ஒஸ்திதான்!இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுபோல நம் நாட்டில் இருந்து கொண்டு எதற்கெடுத்தாலும் வெளிநாட்டை உதாரணம் சொல்வது அல்வா சாப்பிடுவது மாதிரிதான் எல்லாருக்கும்.....

அதில் பெரும்பாலும் ஊழலில் கொழிக்கும் அரசியல்வாதிகளும், லஞ்சத்தில் செழிக்கும் காவல்துறையும் மீதான விமர்சனங்கள்தான் அடிக்கடி சொல்லப்படும் உதாரணங்கள்....அரசியல்வாதிகளை விடுங்கள்..அதில் நம்மவர்களை அடித்து கொள்ள ஆளில்லை மற்ற நாடுகளிடம்...ஆனால் காவல்துறை?


மலேசியாவை பற்றி பொதுவாக அது ஒரு சுற்றுலா நாடு ,தமிழ் படங்களின் கனவு டூயட் பாடல்கள் நடக்கும் நாடு என்பது நாம் அறிந்த ஒன்று...

ஆனால் மலேசியாவில் கொள்ளையும்,கொலையும் சர்வ சாதாரணமாக நடக்கும் விசயங்கள் என்பது நம்மில் எவ்வளவு பேருக்கு தெரியும்? மலேசியா போலிசும் தொட்டதற்கெல்லாம் லஞ்சம் வாங்குபவர்கள்தான்....

மலேசியாவில் Money changer எனப்படும் பணம் மாற்றம் வர்த்தக தொழில் நம் தமிழ் மக்கள் செய்யும் அதிகமாக செய்யும் தொழில் ஆகும்...ஆனால் இந்த தொழிலுக்கு எந்த பாதுகாப்பும் இல்லை..இந்த தொழில் செய்பவர்களின் உயிருக்கும் உத்ரவாதம் இல்லை...

இந்த தொழில் நடக்கும் கடைகளில் சர்வ சாதாரணமாக கொள்ளையர்கள் புகுந்து பணத்தை அள்ளி செல்வதை ஒரு தொழிலாக வைத்துள்ளனர்...இது நடப்பது பெரும்பாலும் பட்ட பகலில்தான்...கடையில் இருக்கும் நபர்கள் வங்கிகளுக்கு பணத்தை கொண்டு செல்லும்போது துப்பாக்கியை காட்டி மிரட்டி அந்த பணத்தை அலேக்காக அள்ளி சென்று விடுவார்கள்....


கொள்ளையர்களிடம் பணம் வைத்திருப்பவர்களோ, கடையில் இருப்பவர்களோ பணத்தை கொடுக்காமல் முரண்டு பிடித்தால் அவர்களை சுட்டு கொன்று விட்டு பணத்தை கொண்டு சென்று விடுவார்கள்...சமிபத்தில் கூட என் நண்பனிடம் கொள்ளைஅடித்து சென்று விட்டார்கள்....என் நண்பன் எதுவும் முரண்டு பிடிக்காமல் பணத்தை கொடுத்ததால் தப்பித்தான்....

இதை போலீசில் சொன்னால் என்ன என்று ஒரு கேள்வி வருமே?ஹி ஹி...நாம் சொல்வதற்கு முன்னாலே கொள்ளை அடிக்கப்பட்ட பணத்தில் ஒரு பாதி போலிசுக்கு சென்று விடும்...அப்புறம் என்னத்த புகார் சொல்வது?இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்து யாருக்கும் பணம் திரும்ப கிடைத்தது இல்லை....யாரும் கைது செய்யப்பட்டதும் இல்லை....

இதில் இன்னொரு கொடுமை என்ன தெரியுமா? இந்த கொலை ,கொள்ளைகளில் ஈடுபடுவது மலேசிய தமிழர்கள்தான்..!மலேசிய தமிழர்களில் பெரும்பாலோர் நல்ல வேலையில் இருப்பவர்கள்....நல்லவர்கள்...ஆனால் ஒரு சில ரவுடி கும்பல்கள்தான் கொள்ளை அடிப்பவர்கள் .............. அதாவது மலேசிய தமிழர்கள் அனைவரும் கொள்ளையர்கள் அல்ல...ஆனால் இதுபோன்று தமிழ்நாட்டு தமிழர்களிடம் கொலை ,கொள்ளையில் ஈடுபடுவோர் அனைவரும் மலேசிய தமிழர்களே....!


நம் நாட்டிலாவது நாட்கள் ஆனாலும் கொள்ளையர்களையும் ,கொலையாளிகளையும் போலீஸ் கைது செய்து விடும்..அல்லது என்கவுன்டர்
செய்துவிடும்!ஆனால் மலேசியாவில் அதற்கு எல்லாம் வழியே இல்லை..

ஏதாவது இது மாதிரி கொள்ளை சம்பவங்கள் நடந்து விட்டால் நம்ம நாட்ல இதுமாதிரி நடந்தாலும் போலீஸ் குற்றவாளிகளை பிடித்துவிடும்டா மச்சான் என்று பேசுவது இங்கு உள்ள தமிழர்களுக்கு வாடிக்கை ஆகி விட்டது...

இப்போது சொல்லுங்கள் என்னதான் லஞ்சம் லாவண்யத்தில் ஈடுபட்டாலும் தமிழக போலீஸ் ஒசத்தியா இல்லையா?

23 ஜூன் 2012

கேள்வியும் நானே ..பதிலும் நானே....(கருணாநிதி,ஜெயலலிதா, விஜயகாந்த்...ஒரு கூட்டு பொரியல்)


அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் என திமுக அறிவித்துள்ளதே ?

அதைத்தானே ஜெயலலிதா செய்து கொண்டு இருக்கிறார்........இனி என்னத்த நீங்க நிரப்புறது...?


..................................... ......................................... .......................................................

ஜனாதிபதி தேர்தலை தேமுதிக புறக்கணித்ததை பற்றி?

தேமுதிக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க இருப்பது இருக்கட்டும்....புதுகை இடைதேர்தலில் தேமுதிகவை மக்களே புறக்கணித்து விட்டார்களே !


.......................................... ........................................ .........................................


உண்மையில் ஜெயலலிதா ஆட்சியின் ஒரு வருட சாதனை எது?

தமிழகத்தின் தலைநகரமாக கொடநாட்டை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறாரே அதுதான்............!

........................................ .................................................... ...........................................


தமிழ் ஈழத்துக்காக உயிர் விடவும் தயார் என கருணாநிதி கூறி உள்ளது பற்றி?

அட ஏங்க நீங்க வேற? அவர் தனது அடுத்த படத்துக்கு எழுதிய வசனத்தை போயி செய்தியா எடுத்துகிட்டு...?

......................................................... ..................................... ...........................................
ஜனாதிபதி வேட்பாளரை அடையாளம் காட்டுவதே கருணாநிதி தான்: கே.என்.நேரு ....!?

முதலில் உங்கள் கட்சிக்கு அடுத்த தலைவரை அடையாளம் காட்ட சொல்லுங்கள் கருணாநிதியிடம்....

........................ ...................................... ..........................................................

சிறை செல்லும் தொண்டர்களுக்கே இனி பதவி ...ஸ்டாலின் ....

ஹி ஹி....பதவியில் இருந்தவங்கதானே இப்ப சிறையில இருக்காங்க பாஸ்......!

22 ஜூன் 2012

பயோ டேட்டா : விஜய் (வருங்கால CM )


பெயர்: விஜய்

அடைமொழி: இளையதளபதி விஜய்..( எந்த போருக்கு தளபதியாக போனார்,இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு "இளைய " தளபதியாகவே இருப்பார் என்றெல்லாம் கேட்ககூடாது...)

டாக்டர் பட்டம்: பிளஸ் டூ பாஸ் பண்ணியதற்காக கிடைத்தது....

தொழில்: ரௌடிகளை கொத்துபரோட்டா போடுவது ....சினிமாவில்தான்....

மேனரிசம்: பொது நிகழ்சிகள்,கலைவிழாக்களில் பல கோடிகளை பறிகொடுத்ததுமாதிரி இருப்பது....

பொழுதுபோக்கு: ஆக்சிலேட்டரை வாயால் பிடித்துகொண்டு கார் ஓட்டுவது, ஹெலிகாப்டரில் தொங்கியபடி சண்டை போடுவது....( சினிமாவில்தான்....)


சாதனை :: தொடர்ந்து எஸ் எம் எஸ் மற்றும் இணையதளங்களில் நம்பர் ஒன் காமெடியனாக இருப்பது....


உச்ச கட்ட சாதனை : டெல்லிக்கு போய் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவித்து பேசி காமெடி கில்லி ஆடியதுகருணாநிதி: முன்பு ஆகாதவர் ..கூடிய சீக்கிரம் ஆக கூடியவர்


ஜெயலலிதா: அணிலாக பயன்படுத்தியவர் !


ராகுல்காந்தி: இளைஞர் காங்கிரஸில் சேரும் வயதை தாண்டிவிட்டார் என்று சொல்லி உண்மையான வயதை வெளிகாட்டியவர் ...


அப்பா: கூட இருந்து குழி பறித்து கொண்டு இருப்பவர்..( அரசியல் குழி தாங்க)


ஆசை: கட்சி ஆரம்பிக்க நினைப்பது


பேராசை: அப்படியே முதல்வர் ஆக நினைப்பது....


ரசிகர்கள்: தன்னை நிஜ ஹீரோவாக நினைக்கும் அப்பாவிகள்....


ரசிகர்மன்றங்கள்: அரசியலில் நுழைவதற்கு நுழைவு சீட்டு ..


மக்கள் இயக்கம் : ரசிகர்களால் தனக்காக நடத்தப்படுவது


லட்சியம்: வேற என்ன ...??? ....நாட்டை ஆள்வதுதான்....


தமிழக மக்கள்: நடிகர்களை நாடாள வைக்கும் புண்ணியவான்கள்...!


(கொசுறு: CM என்றால் சிரிப்பு மனிதர் !, சிகப்பு மனிதர் !!,சிறந்த மனிதர் !!!என்று அவரவர் இஷ்டத்துக்கு நினைத்து கொள்ளலாமுங்கோ..!)

20 ஜூன் 2012

பயோ டேட்டா : நித்யானந்தா !!ஆ!ஆ!

பெயர் : நித்தம் +ஆனந்தம் = நித்யானந்தா


தொழில் : ஆன்மீகத்தின் பெயரில் எல்லா காவாளிதனமும் செய்வது ....


பொழுதுபோக்கு : சிரித்துகொண்டே சீரழிப்பது


கூடவே இருப்பது: பக்தைகளும் ,சர்ச்சைகளும்


கூடவே இல்லாதது : ஒழுக்கமும், உண்மையும்


ஜெயில்: அடிக்கடி செல்லும் சுற்றுலா தளம்


பிடித்த மீன் : ஜாமீன்


பிடித்த தலைவர் :ஜெயலலிதா


"பிடித்த"இடம்: மதுரை ஆதின மடம்


"பிடித்த"நடிகை :ரஞ்சிதா


பிடிக்காத பொருள்: கேமரா


பிடதி : பிடரியில் அடிவாங்கிய இடம்


கர்நாடகா :காலை வாரிய மாநிலம்


தமிழ்நாடு : தஞ்சமடைந்த மாநிலம்


மதுரை ஆதினம் : லேட் ஆனாலும் லேட்டஸ்டாக ஏமாந்தவர் ...


பக்தர்கள் :நீண்ட கால ஏமாளிகள் ....


பொது மக்கள் : இது எல்லாவற்றையும் சகித்து கொண்டு இருப்பவர்கள்....!