23 ஜூன் 2012

கேள்வியும் நானே ..பதிலும் நானே....(கருணாநிதி,ஜெயலலிதா, விஜயகாந்த்...ஒரு கூட்டு பொரியல்)


அதிமுக அரசின் அராஜகப் போக்கைக் கண்டித்து ஜூலை 4ம் தேதி சிறை நிரப்பும் போராட்டம் என திமுக அறிவித்துள்ளதே ?

அதைத்தானே ஜெயலலிதா செய்து கொண்டு இருக்கிறார்........இனி என்னத்த நீங்க நிரப்புறது...?


..................................... ......................................... .......................................................

ஜனாதிபதி தேர்தலை தேமுதிக புறக்கணித்ததை பற்றி?

தேமுதிக ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க இருப்பது இருக்கட்டும்....புதுகை இடைதேர்தலில் தேமுதிகவை மக்களே புறக்கணித்து விட்டார்களே !


.......................................... ........................................ .........................................


உண்மையில் ஜெயலலிதா ஆட்சியின் ஒரு வருட சாதனை எது?

தமிழகத்தின் தலைநகரமாக கொடநாட்டை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறாரே அதுதான்............!

........................................ .................................................... ...........................................


தமிழ் ஈழத்துக்காக உயிர் விடவும் தயார் என கருணாநிதி கூறி உள்ளது பற்றி?

அட ஏங்க நீங்க வேற? அவர் தனது அடுத்த படத்துக்கு எழுதிய வசனத்தை போயி செய்தியா எடுத்துகிட்டு...?

......................................................... ..................................... ...........................................
ஜனாதிபதி வேட்பாளரை அடையாளம் காட்டுவதே கருணாநிதி தான்: கே.என்.நேரு ....!?

முதலில் உங்கள் கட்சிக்கு அடுத்த தலைவரை அடையாளம் காட்ட சொல்லுங்கள் கருணாநிதியிடம்....

........................ ...................................... ..........................................................

சிறை செல்லும் தொண்டர்களுக்கே இனி பதவி ...ஸ்டாலின் ....

ஹி ஹி....பதவியில் இருந்தவங்கதானே இப்ப சிறையில இருக்காங்க பாஸ்......!

2 கருத்துகள்:

 1. அருகையான படத்துடன் சிறந்த அதரடி கட்டுரை தந்தமைக்கு வாழ்த்துகள்
  அனைத்தும் நீங்கள். பின் நான் என்ன எழுதுவது.அதற்கும் அதிரடியாக சொல்லி விடுவீர்கள்
  மிக்க நன்றி NKS.ஹாஜா மைதீன்அவர்களது வருகைக்கும் கருத்துரைக்கும் .

  பதிலளிநீக்கு
 2. உங்களது பதிவுகளை அழஹி.காம் என்னும் பதிவர் தளத்தில் பதிவு செய்து மற்றும் உங்களது நண்பர்களுக்கு அறிமுக படுத்துங்கள் Azhahi.Com

  இப்படிக்கு
  Azhahi.Com

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....