30 ஜூலை 2012

குமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..!


குமுதம் ....ஜனரஞ்சக பத்திரிக்கை என்ற பெயரில் அப்பட்டமான ஒரு செக்ஸ் புத்தகமாக மாறி வருகிறது....விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தனது தரத்தை குறைத்து கொண்டு வருகிறது குமுதம்....

தமிழ் வார இதழ்கள் என்றாலே எல்லாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விகடனும் குமுதமும்தான்....அதில் விகடனின் பாணியே வேறு....ஆனால் குமுதம்?அதன் விற்பனை டல்லடிக்கும் போதெல்லாம் நடிகனை பற்றியோ நடிகையை பற்றியோ கதை எனும் பெயரில் ஆபாசமாக எழுதுவது குமுதத்துக்கு கை வந்த கலை....முன்பு இப்படித்தான் நடிகர்களின் அந்தரங்க விசயங்கள் என்று டைட்டில் போட்டு எழுதினார்கள்....

இப்போது ஒற்றைகூத்தன் எனும் பெயரில் ஒரு காமுகனோ அல்லது காமுகர்கலாலோ ஆட்டமா தேரோட்டமா என்ற தலைப்பில் ஒரு கதை எழுதப்பட்டு வருகிறது ...அதில் ஒரு நடிகையை பற்றி எழுதி வருகிறார்கள்...நாட்டுக்கு இப்ப நடிகைகளின் கதைதான் ரொம்ப முக்கியமா? அதில் இது உண்மை கதை அல்ல என டைட்டில் கார்டு வேறு...

சரி ..எழுதுவதுதான் எழுதுகிறார்கள்.....கொஞ்சமாச்சும் நாகரிகமாக எழுதலாம் அல்லவா?அதனை பச்சை பச்சையான கெட்ட வார்த்தைகளால் எழுதி பத்திரிக்கை தர்மத்துக்கே நித்யானந்தா போல சிரித்துகொண்டே வேட்டு வைக்கிறார்கள்..

அக்கதையில் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளை நாகரிகமாக **போட்டு எழுதுவாங்களாம்...அதாவது **சில வார்த்தைகள்...அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள் என சொல்லிவிட்டு நானே அதை எழுத கூடாது என்பதால் எழுதாமல் விட்டுவிடுகிறேன்....அதை படிப்பவர்களுக்கும் இதை படிப்பவர்களுக்கும் அது நன்கு புரியும்....

பத்திரிகைகள் எதைப்பற்றி வேணும்னாலும் எழுதலாம்...அது அவர்களின் எழுத்து உரிமை...ஆனால் பச்சை பச்சையான கெட்ட வார்த்தைகளை எழுதுவது எப்படி குமுதம் போன்ற பல்லாயிரகணக்கான வாசகர்கள் படிக்கும் ஒரு வர இதழுக்கு அழகாகும்....

நம்பர் 1 தமிழ் வார இதழ் என போட்டுகொள்வது இது போன்ற செக்ஸ் கதைகளை மட்டும் எழுதுவதற்கா ?

அதற்காக குமுதம் நல்ல விசயங்களை எழுதிக்கொண்டுதானே இருக்கு...இதெல்லாம் ஒரு மேட்டரா என யாரும் நினைத்தால்....அதற்கு பதில் கீழே


ஒரு பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக குமுதம் போன்ற பத்திரிக்கைகள் செக்ஸ் கதை எழுதுவதும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பும், ரே பான் கண்ணாடியும் போட்டுகொண்டு ஒருவன் நிர்வாணமாய் தெருவில் நடப்பதும் ஒன்றுதான்...!