27 ஜூன் 2013

வெற்றி பெற்றது விஜயகாந்தே!....சில வருடங்களுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தபோது பத்தோட இது ஒன்று என கிண்டலடிக்கப்பட்டவர்!


தான் சந்தித்த  முதல் தேர்தலிலே தோற்க போவது உறுதி என தெரிந்தும் எல்லா  தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தியவர் 


யார் தயவும் இல்லாமல் சந்தித்த முதல் தேர்தலிலே வெற்றி பெற்றவர்!


கடந்த தேர்தலில் இவர் தயவு  இருந்தால்தான் வெற்றி நிச்சயப்படும் என எண்ணி இன்றைய ஆளும்கட்சியினரால் கூட்டணி அமைக்க அழைக்கப்பட்டவர்!


கட்சி ஆரம்பித்து 6 வருடங்களில்  எதிர்க்கட்சி தலைவராக அமர்ந்தவர் 


அவர்தான் இன்று மீடியாக்களினால் கிண்டல் செய்யப்படும் விஜயகாந்த்!


நிச்சயமாக ஜெயலிதாவை போல சொந்த திறமை இல்லாமல் அடுத்தவர் ஆரம்பித்த கட்சியில் சேர்ந்து விஜயகாந்த் பெரிய ஆளாகவில்லை...


கருணாநிதியைபோல  திறமையாக  தந்திரமாக கட்சி முன்னோடிகளை பின்னுக்கு தள்ளி கட்சியை கைப்பற்றவில்லை !


தனி ஒரு மனிதராக கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றவர்களில் எம் ஜி ஆர் க்கு பிறகு விஜயகாந்துதான் தமிழ்நாட்டில்...


அப்படிப்பட்ட விஜயகாந்தின் அரசியல்  வாழ்வில் இப்போது ஒரு சறுக்கல்  ஏற்பட்டு இருப்பது உண்மைதான்...


14 வருடம் எதிர்க்கட்சியாக இருந்த கருணாநிதி சந்திக்காத சறுக்கலா?


1996 ல் தோற்று,இனி அதிமுக  என்ற கட்சியே அவ்வளவுதான் என அனைவரும் நினைத்த ஜெயலலிதா  சந்திக்காத சறுக்கலா?


இரண்டு பெரிய கட்சிகளுக்கு மாற்றாக விஜயகாந்தை விட்டால் இப்போதும் யாரையும் சொல்ல முடியாது வாக்கு வங்கி விசயத்தில்!


7 எம் எல் ஏ க்கள் கட்சிக்கு ஒட்டு போட மாட்டார்கள்,காங்கிரஸ் ஆதரவு தெரிவிக்கலாம்,அல்லது தெரிவிக்காமல் போகலாம்,,என முக்கால்வாசி தோல்வி தெரிந்தும் பின் வாங்காமால் வெளியே நின்று  வேடிக்கை பார்ப்பதைவிட ஓட்டபந்தயத்தில்  ஓடி தோற்றாலும் பரவாயில்லை  என களத்தில் இறங்கிய விஜயகாந்த் பாராட்டுக்கு  உரியவரே!

திமுக போல எல்லா கட்சிகளிடமும் ஆதரவு கேட்காமல் ஒரு கட்சியிடம் கேட்டு பார்ப்போம்...இல்லாவிட்டால் தோல்வியை ஏற்போம் என களத்தில் இறங்கிய விஜயகாந்துதான் உண்மையில் வெற்றி பெற்றவர் ....தைரியத்தில்!


விஜயகாந்த் சரிவில் இருந்து மீண்டு வர செய்ய வேண்டியது இதுதான்!


முதலில் சட்டசபைக்கு செல்லுங்கள் !


மனைவியை வீட்டோடு தவிர்த்து விடுங்கள்!


ஆளும் கட்சியினரின் தவறுகளை கண்டித்து மாவட்டம்தோறும் போராட்டம் நடத்துங்கள்...இன்று திமுக இருப்பதற்கு காரணம் கலைஞரின் அந்த போர்க்குணம்தான் !

உங்களுக்கு என சிறு கட்சி தலைவர்களிடம் ஒரு வட்டத்தை உருவாக்குங்கள்...இதற்கும் உதாரணம் கருணாநிதிதான்...

முடிவாக ஒன்று "கருப்பு எம் ஜி ஆர் ஆக நினைப்பதை விட்டுவிடுங்கள்" ஆளும் கட்சியினரை எதிர்த்து போராடிய  "அன்றய கருணாநிதியை போல கருப்பு கருணாநிதி ஆக எண்ணுங்கள் "

வெற்றி காத்திருக்கும்!


இதெல்லாம் எழுத  விஜயகாந்தின்முன்னாள் ரசிகன் நான் என்பதும் ஒரு காரணம்!

25 ஜூன் 2013

கேன் வாட்டர் : சில உண்மைகள்!வருடத்துக்கு 1 லட்சம் ISI க்கு பீஸ்....மாதம் தோறும் OUTSIDE  LABE டெஸ்ட்,மாதம்தோறும் monthly  டெஸ்ட்,6 month  டெஸ்ட்,வருடத்துக்கு ஒரு முறை பூச்சி கொல்லி மருந்து டெஸ்ட் என வருடத்துக்கு டெஸ்ட் செய்ய மட்டும் ஆகும் கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்...OUTSIDE LABE ல் சோதனை செய்யப்பட்டு அந்த  தண்ணீர்  ISI விதிகளின்  படி இல்லை என்றால் உடனே STOP MARKETING  அதாவது தண்ணீரை விற்க தடை செய்துவிடுவார்கள்...

INSIDE LABE ல் தினமும் CHEMISTRY ,MICROBIOLOGY ஆகியோரால் சோதனை செய்யப்பட்டு ,ISI விதிகளின்படி தண்ணீர் இருந்தால்தான் அது விற்பனைக்கு வெளியே வரும்...இதுதான் உண்மையாக பாதுகாக்கப்பட்ட தூய குடி நீர் எனப்படுவது ...அதாவது இன்று ஏதோ மக்களை அழிக்க  வந்த வில்லன்போல சித்தரிக்கப்படும் கேன் வாட்டர் ,பாட்டில் வாட்டர்...

தயாரிப்பு செலவு,லேபர் சம்பளம்,transport செலவு,labe டெஸ்ட் செலவு,போன்ற செலவுகளை எல்லாம் தவிர்த்து ஒரு கேன் நேரடியாக விற்பனைக்கு அனுப்ப படும்போது அதன் அடக்க விலை 20 ரூபாய் 20 லிட்டருக்கு...எங்களால் MRP செய்யப்பட்டு அனுப்ப படுவது 30 ரூபாயிக்கு...மேற்கொண்டு காசு கறப்பது   அந்த டீலரின் ஆசையே தவிர தண்ணீர் தயாரிக்கும் கம்பெனிகள் அதற்கு பொறுப்பல்ல...அதிக விலை கொடுப்பதை மக்கள்தான் தவிர்க்க வேண்டும்..MRP விலைக்கே வாங்க வேண்டும்...இதைத்தான் கொள்ளை ,கொள்ளை  என கூப்பாடு போடுகின்றன மீடியாக்கள்...


யாரும் அடுத்தவன் இடத்தில இருந்து நீரை உறிஞ்சி கேன்களை நிரப்பவில்லை...அவரவர்களுக்கு சொந்தமான நிலத்தில் நீரை எடுக்கின்றனர்...அதற்கு முதலில் நிலத்தடி நீரை எடுத்து அதையும் இதை குடிக்க பயன்படுத்த முடியுமா என மாதம்தோறும் சோதனைக்கு அனுப்பிய பின்னரே நிலத்தடி நீரை பயன்படுத்தமுடியும்...

நிலத்தடி நீர் எல்லாருக்கும் சொந்தம் என்றால் நிலம் மட்டும் எப்படி உனக்கு,எனக்கு என பங்கு போட்டு சொந்தமாக்கி கொள்ள முடியும் ?அப்படி என்றால் வயலும்,நிலமும்,கரும்பும் ,இன்ன பிற  தோட்டங்களும் பூமியிலிருந்து கிடைப்பவைதான்...அது எல்லாருக்கும் சொந்தமாகி விடுமா?நீர் இயற்கைக்கு சொந்தம் என்றால் நிலமும் இயற்கைக்கு சொந்தம்தான்...அப்ப யாருக்கும் நிலம் சொந்தம் என பட்டா போட்டு கொள்ள உரிமை இல்லை...ஒப்பு கொள்வோமா நாம்?

சும்மா சும்மா தண்ணீரை விற்கின்றனர்,கொள்ளை அடிக்கின்றனர் என குறை சொல்ல வேண்டாம்...அதுவும் ஒரு தொழில்...எல்லா தொழிலும் லாபத்துக்காகவே  செய்யபடுகின்றன...சேவைக்காக அல்ல...ஏன் மளிகை கடையில்  போயி மக்களுக்கு குறைந்த விலையில் அரிசி,மளிகை  சாமான்களை கொடுங்கள் என இந்த மீடியாக்களும்,குறை சொல்பவர்களும் சொல்ல வேண்டியதுதானே?

எல்லா தொழிலிலும்  இருக்கும் பிரச்சினைகளை  போலவே இந்த தொழிலிலும்  உண்டு..மார்க்கெட்டில் விற்பனைக்கு உள்ள கேன் தண்ணீரை  எந்த ISI அதிகாரியும் எப்ப வேண்டும் என்றாலும் சோதனைக்கு எடுத்து செல்லலாம்..அந்த  கேன் ISI விதிகளின்படி சுத்தமாக இல்லை  என்றால் உடனே ISI  அந்த கம்பெனியின் உரிமத்தை ரத்து  செய்து விடும்...கேன் வாட்டரை தயாரித்து மிகுந்த சோதனைக்கு இடையில் தான் நாங்கள் விற்பனை செய்கிறோம்...யாரும் யாரையும் வாங்கித்தான் ஆக வேண்டும் என கட்டாயப்படுத்த வில்லையே?வேண்டும் என்பவர்கள்    வாங்குகிறார்கள்...

ஆக எல்லா தொழிலையும் போலவே இதுவும் ஒரு தொழில்தான்...மீடியாக்களால் இது ஒரு ஏதோ கொள்ளை தொழில் போல சித்தரிக்கப்படுகிறது...அது தவறு...

சில தவறான ,முறையாக பராமரிக்கப்படாத,தண்ணீரை ஒழுங்காக சோதனை செய்யாத ,ஏன்  ISI  முத்திரை கூட இல்லாத எத்தனயோ  வாட்டர் கேன் நிறுவனங்கள் இருக்கத்தான் செய்கின்றன..அவற்றை களை  எடுக்க சொல்லி நாங்களும் ISI ,அரசாங்கத்திடம் கேட்டு கொண்டுதான் இருக்கின்றோம்...அவர்களை கண்டியுங்கள்,தடை செய்யுங்கள்...

எல்லாரையும் ஒன்றாக குறை சொல்வதைத்தான் நான் இங்கு சுட்டி காட்ட விரும்பி இதை எழுதி உள்ளேன்...சில நாட்களாக பத்திரிக்கைகளும்,மீடியாக்களும் இந்த தொழிலை குறை சொல்லி எழுதி வருவதை பார்த்து அதற்கு பதில் சொல்லி நான் இதை எழுதி உள்ளேன்...ஏன் மக்களுக்கு பயன் தானே  என அந்த பத்திரிக்கைகள் இலவசமாக வெளிவரட்டுமே!டிவி க்கள் இலவசமாக எந்த கட்டணமும் வாங்காமல் எல்லாருக்கும் தெரியட்டுமே!அதெல்லாம் முடியாதுல ...அப்ப இந்த தொழிலையும் கொள்ளை அடிக்கிறார்கள் என குறை சொல்ல வேண்டாம்...

இதை பற்றி நான் எழுத காரணம்  நாங்களும்  AQUAMINE என்ற பெயரில் எங்கள் ஊரான அரசர்குளத்தில் பாதுகாக்கப்பட்ட தூய குடி நீர் தயாரித்து விற்பனை செய்து வருகிறோம் என்பதால்தான்!