30 ஜூலை 2012

குமுதம்...நம்பர் 1 தமிழ் செக்ஸ் வார இதழ் ..!


குமுதம் ....ஜனரஞ்சக பத்திரிக்கை என்ற பெயரில் அப்பட்டமான ஒரு செக்ஸ் புத்தகமாக மாறி வருகிறது....விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பதற்காக தனது தரத்தை குறைத்து கொண்டு வருகிறது குமுதம்....

தமிழ் வார இதழ்கள் என்றாலே எல்லாருக்கும் முதலில் நினைவுக்கு வருவது விகடனும் குமுதமும்தான்....அதில் விகடனின் பாணியே வேறு....ஆனால் குமுதம்?அதன் விற்பனை டல்லடிக்கும் போதெல்லாம் நடிகனை பற்றியோ நடிகையை பற்றியோ கதை எனும் பெயரில் ஆபாசமாக எழுதுவது குமுதத்துக்கு கை வந்த கலை....முன்பு இப்படித்தான் நடிகர்களின் அந்தரங்க விசயங்கள் என்று டைட்டில் போட்டு எழுதினார்கள்....

இப்போது ஒற்றைகூத்தன் எனும் பெயரில் ஒரு காமுகனோ அல்லது காமுகர்கலாலோ ஆட்டமா தேரோட்டமா என்ற தலைப்பில் ஒரு கதை எழுதப்பட்டு வருகிறது ...அதில் ஒரு நடிகையை பற்றி எழுதி வருகிறார்கள்...நாட்டுக்கு இப்ப நடிகைகளின் கதைதான் ரொம்ப முக்கியமா? அதில் இது உண்மை கதை அல்ல என டைட்டில் கார்டு வேறு...

சரி ..எழுதுவதுதான் எழுதுகிறார்கள்.....கொஞ்சமாச்சும் நாகரிகமாக எழுதலாம் அல்லவா?அதனை பச்சை பச்சையான கெட்ட வார்த்தைகளால் எழுதி பத்திரிக்கை தர்மத்துக்கே நித்யானந்தா போல சிரித்துகொண்டே வேட்டு வைக்கிறார்கள்..

அக்கதையில் அச்சில் ஏற்ற முடியாத கெட்ட வார்த்தைகளை நாகரிகமாக **போட்டு எழுதுவாங்களாம்...அதாவது **சில வார்த்தைகள்...அச்சில் ஏற்ற முடியாத வார்த்தைகள் என சொல்லிவிட்டு நானே அதை எழுத கூடாது என்பதால் எழுதாமல் விட்டுவிடுகிறேன்....அதை படிப்பவர்களுக்கும் இதை படிப்பவர்களுக்கும் அது நன்கு புரியும்....

பத்திரிகைகள் எதைப்பற்றி வேணும்னாலும் எழுதலாம்...அது அவர்களின் எழுத்து உரிமை...ஆனால் பச்சை பச்சையான கெட்ட வார்த்தைகளை எழுதுவது எப்படி குமுதம் போன்ற பல்லாயிரகணக்கான வாசகர்கள் படிக்கும் ஒரு வர இதழுக்கு அழகாகும்....

நம்பர் 1 தமிழ் வார இதழ் என போட்டுகொள்வது இது போன்ற செக்ஸ் கதைகளை மட்டும் எழுதுவதற்கா ?

அதற்காக குமுதம் நல்ல விசயங்களை எழுதிக்கொண்டுதானே இருக்கு...இதெல்லாம் ஒரு மேட்டரா என யாரும் நினைத்தால்....அதற்கு பதில் கீழே


ஒரு பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக குமுதம் போன்ற பத்திரிக்கைகள் செக்ஸ் கதை எழுதுவதும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பும், ரே பான் கண்ணாடியும் போட்டுகொண்டு ஒருவன் நிர்வாணமாய் தெருவில் நடப்பதும் ஒன்றுதான்...!

19 கருத்துகள்:

 1. ஒரு பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக குமுதம் போன்ற பத்திரிக்கைகள் செக்ஸ் கதை எழுதுவதும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பும், ரே பான் கண்ணாடியும் போட்டுகொண்டு ஒருவன் நிர்வாணமாய் தெருவில் நடப்பதும் ஒன்றுதான்..//

  அருமையான உதாரணம்
  மனம் கவர்ந்த பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அவ்வப்போது வந்தாலும் அதிரடியா வர்றே..... அருமையான கட்டுரை. வாழ்த்துக்கள். அந்த கடைசி வரி செம.....
  உனக்கு ஒரு வேண்டுகோள்..... அந்த உலவு திரட்டியை தூக்கிடு... அது இருப்பதால் லோட் ஆக ரொம்ப நேரமாகுது.... கமெண்ட் போடவே 10 நிமிஷத்துக்கு மேல் காத்திருக்க வேண்டி இருக்கு

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வருகைக்கு நன்றிண்ணே....நீங்கள் கொடுத்த அட்வைஸ் படி உலவு திரட்டியை தூக்கி விடுகிறேன்...அதற்கும் ஒரு நன்றி....

   நீக்கு
 3. என்ன சகோ அடி இடி மாதிரி இறங்கியிருக்கிறது

  பதிலளிநீக்கு
 4. குமுதம் ஒரு ஆபாச பத்திரிக்கைதான்..அது என்ன "விகடனின் பாணியே வேறு? " ரஜினிக்கு ஐஸ்வர்யா ராயையும் , தீபிகாவையும் கூட்டி கொடுக்கிறதா? அவன் பேரையும் ஆபாச விகடன் என்று பேர் மாத்தணும்னு எழுதுனா நீங்க நியாயஸ்தன்

  பதிலளிநீக்கு
 5. ஒண்ணுமே இல்லாமல் குப்பை கொட்டுவதில் முதல் இடம் குமுதத்துக்கு .அதில் இப்ப இது வேறு .சரோஜா தேவி கதைகள் நு தலைப்பு வச்சு குமுதத்தை விக்கலாம் .இன்னும் சர்வதேச ரேஞ்சுக்கு பத்திரிக்கை விற்பனை பிச்சுக்கும்

  பதிலளிநீக்கு
 6. பெயரில்லா1:10 AM, ஜூலை 31, 2012

  நீங்கள் சொல்வதைப் பார்த்தால் இந்த கட்டுரைக்குப் பிறகு அவர்கள் சர்குலேசன் குறைந்திருக்க அல்லவா வேண்டும்... ஆனால் மாறாக... அதிகரித்திருக்கிறதே...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கிளுகிளுப்பா போட்டா சர்க்குலேஷன் அதிகரிக்கவே செய்யும்...

   நீக்கு
  2. நான்தான் அதிலே குறிப்பிட்டு இருக்கிறேனே விற்பனையை அதிகரிப்பதற்காக இது மாதிரி எழுதுகிறார்கள் என்று...வருகைக்கு நன்றி...

   நீக்கு
 7. அவன் போடறான். மக்கள் வாங்குறாங்க. யாருடைய தப்பு? புடிச்சா வாங்கு. இல்லைன்னா போய்க்கினே இரு. Nothing sells like Sex. படிக்காதவன், படித்தவன், பாதிரி, சாமியார் எல்லோரும் இதில் அடக்கம்.

  பதிலளிநீக்கு

 8. //ஒரு பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக குமுதம் போன்ற பத்திரிக்கைகள் செக்ஸ் கதை எழுதுவதும், ஆயிரம் ரூபாய் மதிப்பில் செருப்பும், ரே பான் கண்ணாடியும் போட்டுகொண்டு ஒருவன் நிர்வாணமாய் தெருவில் நடப்பதும் ஒன்றுதான்...! //

  இதுக்கு மேல வைக்க முடியாது.

  //அவன் போடறான். மக்கள் வாங்குறாங்க. யாருடைய தப்பு? புடிச்சா வாங்கு. இல்லைன்னா போய்க்கினே இரு. Nothing sells like Sex. படிக்காதவன், படித்தவன், பாதிரி, சாமியார் எல்லோரும் இதில் அடக்கம்.//

  இவன்(ர்) எழுதுறான்(ர்), மக்கள் படிக்கிறாங்க புடிச்சா படி, இல்லன்னா ப்ளாக் பக்கமே வராதே, அத உட்டு புட்டு குமுதத்துக்கு சப்போர்ட் பன்றேன்னு சொல்லி உண்மை முகத்தை காட்டாதே.

  படு கேவலமா இருக்கு:)

  பதிலளிநீக்கு
 9. ellaarumae makkal virumparaanga athanaala kodukkaraanganu solraanga nammai pin thodarbavanai nalla vazhiyil vazhi nadathuvathu thaanae pathirikkai.

  பதிலளிநீக்கு
 10. நீங்கள் சொல்வதும் சரிதான் . ஆனால் இன்றய காலகட்டத்தில் எதுவுமே தப்பு இல்லைனு ஆயிடுச்சு .என்ன பன்றது பாஸு . காலத்தின் கோலம் .

  பதிலளிநீக்கு
 11. ஆண்மைக்குறைவு,உடலுறவில்முடியாமை,துரிதச்கலிதம்,ஆண்உறுப்புசிறுத்துப்போதல்,விந்துதானேநழுவுதல்,போன்ற
  பிரச்சனைகளும்தீர்வுகாணவெப்சைட்பார்க்கவும்.www.salemkannansiddha.blogspot.in,செல்.[௦]9080594344

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....