நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நையாண்டி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

20 ஜனவரி 2013

பதிவுலக சினிமா விமர்சனங்கள் சரியா?!

பொதுவாக நம் பதிவர்களிடையே  ஒரு ஒற்றுமை இருக்கிறது.....ஒரு பிரபல பதிவர் ஒரு படத்தை நல்லவிதமாக எழுதிவிட்டால் அதை தொடர்ந்து அப்படத்தை பற்றி விமர்சனம் எழுதும் பதிவர்களில் முக்கால்வாசி  பேர்  அப்படத்தை நல்லவிதமாக எழுதுகிறார்கள்....

அதே நேரத்தில் ஒரு படத்தை பற்றி நெகடிவ்வாக  பிரபலமான யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அந்த படம் நன்றாகவே இருந்தாலும் மற்ற பதிவர்களும் படம் மோசம் என்ற  விதத்திலே எழுதி விடுகின்றனர்....சில பேரை தவிர்த்து....

சமிபத்திய உதாரணம்...நீதானே என் பொன்வசந்தம்  படம்... சுமாரான இந்த படத்தை பலரும் படு மோசம் என்ற விதத்திலே விமர்சனம் எழுதிவிட்டனர்...

இப்பொது சமர்....

பீட்சா படத்தை விட படு விறுவிறுப்பான ,த்ரில்லான இந்த படத்தை பற்றி இதுவரை வந்த விமர்சனங்கள் எதிர்மறையாகவே  உள்ளன...

 இந்த படத்தில் உள்ள...சில ஓட்டைகளை தவிர்த்து பார்த்தால்  படம் த்ரில் நிறைந்த விறுவிறுப்பான படமே....


விமர்சனத்தை படிக்காமல் ,கதை தெரியாமல்  இந்த படத்தை பார்த்தால் யாராலும் அடுத்து வரும் காட்சிகளை யூகிப்பது கஷ்டம்...அந்த அளவுக்கு திரைக்கதையில் அசத்தி  இருக்கிறார்கள்...

 தனது காதலியை தேடி பேங்காங் வரும் விஷால்  அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை....அடுத்தடுத்த காட்சிகளை யாரும் யூகிக்க முடியாமல் திரைக்கதை  அமைத்து படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு சென்று இருகிறார்கள்...

படத்தில் விசாலுக்கு இரட்டை வேடமோ,பழசை எல்லாம் மறந்து இருப்பாரோ என படம் பார்க்கும்போது எழும் எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாகின்றன உண்மை தெரியும்போது....

ஆனால் இந்த படத்தை பற்றி பதிவுலகில் வந்த விமர்சனங்கள்  படம் சரியில்லை என்ற தோற்றத்தையே உருவாக்கி இருக்கின்றது...அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை..ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதையே விமர்சனம் எழுதும் சக பதிவர்களும் அதே எண்ணத்தை  பிரதிபலிப்பதுபோல் இருக்கிறது பதிவுலகின் சினிமா விமர்சனங்கள்...

அவரே நல்லா  இல்லைன்னு எழுதி விட்டார்..எனவே நாமும் நல்லா இல்லைன்னு எழுதினால்தான் சரி என்ற மனோபாவம் நம் தனித்தன்மையை கேள்வி குறி ஆக்குகின்றன என்பதே உண்மை...எனவே நம் மனதுக்கு பிடித்ததை நல்ல  படம் என்றும் ,பிடிக்காததை சரி இல்லை என்றும் எழுதும் விமர்சனம்தான் சரியாக இருக்கும்....

அந்த வகையில் மாறுபட்ட கதையமைப்பில் ,முந்தய எந்த படத்தின் சாயலும் இல்லாமல் வந்து இருக்கும் சமர் த்ரில் பிரியர்களுக்கு திருப்தி அளிக்கும் நல்ல படம் ...

சமர் =  ஜோர் 



13 ஜனவரி 2013

அல்ப புத்தி உள்ளவர்களே!கற்று கொள்ளுங்கள் பவர் ஸ்டாரிடம்!!....


தன்னம்பிக்கைக்கும்  விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டு பவர் ஸ்டார்....நக்கலாக சொல்லல...உண்மையாகவே சொல்றேன்....ஆரம்பத்தில் அவரை எல்லாரையும் போல நானும் செம காமெடி பீசாகவே  பார்த்தேன்..

ஆனால் நக்கல்,கிண்டல்,அவமானம் என எதையும் பற்றி கவலைப்படாமல் எல்லா டிவி பேட்டிகளிலும் சிரித்துகொண்டே பதில் சொல்லும் அவரின் டேக் இட் ஈசி மனநிலை,என்னை என்ன வேணும்னாலும் பேசி சிரியுங்கள் ஆனால் என் இலக்கை நோக்கி நான் சென்று கொண்டே இருப்பேன் என்ற அவரின் மனபலம் நிச்சயம் பாராட்டத்தக்கது.....

இன்று எந்த சேனலை  திருப்பினாலும் பவர் ஸ்டாரை வைத்து ஏதோ ஒரு நிகழ்ச்சி ஓடி கொண்டு இருக்கிறது....

அவரை கலாயிப்பதாக நினைத்துகொண்டே எல்லா டிவி க்களும் அவரை வைத்து நல்லா கல்லா கட்டுகின்றன...

பவர் ஸ்டார் ஒரு  விளம்பர பிரியராக இருக்கலாம்..ஆனால்  அவரை வைத்து இன்று விளம்பரம் தேட எல்லா மீடியாக்களும் ஆசைப்படுகின்றன...பொங்கல் சிறப்பு நிகழ்சிகள் அனைத்தும் பவர் ஸ்டார் இல்லாமல் இன்று தொலைக்காட்சிகளில் இல்லை... 

தன்னை மற்றவர்கள் எவ்வளவு கலாயித்தாலும்,தன்னை பற்றி என்ன நக்கல் ,கிண்டல் அடித்தாலும் அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல்  சிரித்துகொண்டே பதில்தரும் பவர் ஸ்டார் உண்மையிலே பவர் ஸ்டார்தான்..பார்த்தவுடன் எல்லாரையும் சிரிக்க வைக்கும் பவர் ஸ்டார் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்தால் உண்மையில் காமெடி சூப்பர் ஸ்டார் அவர்தான்!

அரசியலில் குதிக்க (அது என்னங்க குதிக்கிறது ?!)ஆசைப்படும் நடிகர்கள் எல்லாம் பவர் ஸ்டாரிடம் போயி பிச்சை எடுங்கள் நல்ல பழக்கத்தை...

சில நாட்களுக்கு முன் பவர் ஸ்டாரின் ஒரு பேட்டியை டிவி யில் பார்த்தேன்..அந்த நிகழ்ச்சியில் என்னமோ அவரை கலாயிப்பதாக நினைத்து கொண்டு  படு கேவலமான கேள்விகளையே கேட்டாலும் ரொம்ப படு கூலாக பதில் சொல்லி கொண்டு இருந்தார் பவர் ஸ்டார்...

நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா  என்ற கேள்வியை படு நக்கலாக கேட்க "எனக்கு தொழில் சினிமாவில் நடிப்பது,நான் அந்த தொழிலை ஒழுங்காக செய்தாலே போதும்..அதைவிட்டுவிட்டு நான் ஏன் அரசியலில் குதிக்க வேண்டும் "என அரசியலில் குதிக்க ஆசைப்படும் நடிகர்களுக்கு சூடு வைப்பதை போல ஒரு பதிலை சொன்னார்....ரியல்லி சூப்பர்ப்...கொஞ்சம் பாருங்கள் ..சிரியுங்கள்.. நடிகர்களே நீங்கள்  சிந்தியுங்கள்...



நடிகன் என்ற புகழை மட்டும் வைத்துகொண்டு கட்சி ஆரம்பிக்க ஆசைப்படும் நடிகர்களும்,எல்லாவற்றையும்  சகித்து கொள்ளும்  ஆள் கிடைத்தால் கேனத்தனமா பேட்டி எடுக்கும் மீடியாக்களும் பவர் ஸ்டாரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது!

என்னமோ அவரை பற்றி எழுதனும்னு தோனுச்சு.....அதான் இது!




12 ஜனவரி 2013

சாதனை புரிந்த சாதி வெறியர் ராமதாசும், சீட் பேரம் பேசும் விஜயகாந்தும் (கூட்டுப் பொறியல் )



நம்ம விஜயகாந்தும்  வானிலை அறிக்கை புகழ் ரமணனும்  ஒன்றுதான்  என நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்..காரணம் இவர்கள்  இருவரும் நடக்காததயே கூறுவார்கள்....அதற்கு எடுத்துகாட்டாக  வரும் நாடாளுமன்ற  தேர்தலில் வழக்கம்போல  தனித்து போட்டி என அறிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.....திமுக விஜயகாந்திற்கு  தூண்டில் போடுவதும் அதில் விஜயகாந்த் சிக்கபோவதும் உறுதி செய்யப்பட்ட  ஒன்றுதான்.....


விஜயகாந்தின் இந்த வாய்ஜாலம் எல்லாம் கருணாநிதி கொடுக்க போகும் சீட்டின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு மட்டும்தான்.....

.................................. ............................................. ........................................................................

எனக்கு தெரிந்து தமிழக  அரசியல் வரலாற்றிலே  ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒரு ஊருக்குள் வர தடை விதித்து  அந்த நோட்டிசை அவர் வீட்டில் ஒட்டிய பெருமையும் ,சாதனையும் சாதி வெறியர் ராமதாசையே  சேரும்....

சாதி வெறியர்  ராமதாஸ் சாதி கலவரத்தை  தூண்டுவதுபோல  பேசி வருவதால் அவர் மதுரை மாவட்டத்துக்குள்ளே  நுழைய  தடை விதித்தார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ..அதை எதிர்த்து ராமதாஸ் சார்பில்  தாக்கல் செய்யப்பட வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உடைந்து போன ராமதாசின் மூக்கில் மேலும் ஒரு குத்து விட்டு இருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்....சபாஷ்...இதைவிட ஒரு கேவலம் எனன் வேண்டும் ஒரு மனிதனுக்கு...!இப்ப பாருங்க நம்ம யாரு வேணும்னாலும் மதுரைக்குள்ள போகலாம்....ராமதாசுக்கு  பிடிக்காத தலித் மக்களும் போகலாம் ..ஆனால் ராமதாஸ் மதுரைக்கு போக முடியாது....!

ராமதாசை தூக்கி ஒரு ஆறு மாதம் உள்ளே வைத்தால் நிச்சயம் தமிழகத்தில் சாதி வெறியும்,கலவரமும் ,வட மாவட்டங்களில் பதட்ட நிலையும் நிச்சயம் குறையும் என்பது என் அபிப்ராயம்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே!
............................... ....................................... ..........................................................................


ரயில் கட்டண உயர்வு  மக்களை பாதிக்குமா இல்லையான்னு நம்ம கருணாநிதி தாத்தாகிட்ட கேட்டா தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவுதான்னு வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்காரு....

பேருந்து கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா ரயில் கட்டண உயர்வை பற்றி  பேசுவது சரியா என இவர்களுக்கு இடையே உள்ள மண்ணாங்கட்டி  அரசியல் பகையை பற்றி மட்டுமே பேசும் தாத்தாவுக்கும், மத்திய அரசின் மேல் உள்ள வெறுப்பால் தான் உயர்த்திய பேருந்து கட்டணம்,பால் விலை போன்றவற்றை மழுங்கடித்துவிட்டு ரயில் கட்டண உயர்வை  குறை கூரும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஓரே ஒற்றுமை "மக்கள் எப்படி கஷ்டப்பட்டால்  எங்களுக்கு என்ன"?என்பதே ஆகும்...வேற என்ன சொல்வது?..1

..................................... ..................................... ......................................................

ஆயிரம்  அவதூறு வழக்குகள் கண்ட  அற்புத தலைவர் என்ற பட்டத்தை விரைவில் விஜயகாந்த் எட்டிபிடிப்பார் என்ற தோன்றுகிறது அவர் மீது ஜெயலலிதா போடும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் !

நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு விஜயகாந்த் மீது வெற்றிகரமாக 5 வது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது....

பார்ப்போம் இன்னும்  எத்தனை வழக்குகள் தான் தன்னை விமர்சிப்பவர்கள் மீது ஜெயலலிதா போடுகிறார் என்று!

................................ ........................................ ..........................................................


                                                                   பொறியல்
                                                               ...............................

        தா. பாண்டியனுக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிப்பு!#



       அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான் என பேட்டி கொடுக்க ஒரு அடிமை ரெடி! 


     ...............................  ..................................................  ....................................................



ஆட்சி மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் : செயல்வீரர் கூட்டத்தில் கலங்கிய "நேரு' #


ஆட்சியில் இருக்கும்போது ஆட்டம் போட்டவர்கள்  ஆட்சி மாறும்போது  "ஆட்டம்" காண்பது இயல்புதானே!


............................... .................................. .........................................................................

.......................................... .................................................... ....................................................................................................................


காவிரி பிரச்சினை குறித்து பிரதமர்–சோனியா ஆலோசனை  # செய்தி


எதுவுமே பேசாத  தலையாட்டி பொம்மையுடன்  எப்படி ஆலோசனை செய்ய முடியும்?#டவுட்டு...


................................................ .................................................. ..................................................


என் மகன் துரைதயாநிதி அரசியலில் ஈடுபடுவார்:மு.க. அழகிரி அறிவிப்பு#



உங்கள் மகன் அரசியலில் ஈடுபடாவிட்டால்தான் அது ஆச்சர்யம்!
..................................  ................................. ......................................................................



கறுப்புப் பணத்தை ஒழிக்க இப்போதுள்ள வரிகளை கடுமையாக்க வேண்டும்! - ரஜினி#



எப்படியானாலும் நீங்கள் கறுப்பு பணத்தை "ஒளித்துதான்"வைக்க போகீறீர்கள்!அப்புறம் ஏன் வீண் பேச்சு?


.....................  .................................... ................................. .....................................................


சேவை வரிக்கு எதிர்ப்பு ... ரஜினி, விஜய் உள்பட தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்#



நீங்கள்தானே மேடைக்கு மேடை கலைச்சேவை செய்கிறோம்ன்னு கூவுரிங்க....அப்புறம் ஏன் சேவை வரியை கட்டுவதில் மட்டும் எதிர்ப்பு..?!

......................................... ................................... .................................................................


கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான ஆயுள் தண்டனை: காங்கிரஸ் கட்சி பரிந்துரை #



ஸ்பெஷல் தோசையை கேட்டால் இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்கள் சாதா தோசையையே தருவார்கள்?!


...................................... .......................................... .........................................................


எங்கள் சவாலை ஏற்று அதிமுக தனித்து போட்டி என அறிவித்துவிட்டது#ராமதாஸ் 



பெரிய பசங்க கிரிக்கெட் விளையாடும்போது சின்ன பசங்களுக்கு பந்து எடுத்து போடுவதில் ஒரு ஆனந்தம் வருமே அது இதுதான்...!


.................................. .......................................... ...........................................................


அதிமுகவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவர்கள். திறமையானவர்கள். #ஜெயலலிதா 


ஆமாம்..உங்களை பார்த்தவுடன் விதவிதமா குனிந்து ,சாய்ந்து ,பயந்து வணக்கம் சொல்வதில்!

............................................. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும் #ரஜினிகாந்த் 



இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது !(மைண்ட் வாய்சில் அதே ரஜினி!!)

............................. .................................... ...........................................................



ஒரு பஞ்ச்: மனிதர்களிடையே சில மிருகங்கள் இருக்கின்றார்கள் என சொல்வதை இனி மிருகங்களுக்கு இடையேதான் மனிதர்களே இருக்கின்றார்கள் என சொல்லலாம் தினமும் நடக்கும் பாலியல் குற்றங்களை பார்த்தால் !....



22 டிசம்பர் 2012

காணாமல் போனவர்கள் (கண்டுபிடிங்க பாஸ்)


தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்ற பழமொழியை பொய்யாக்குவது என்று உறுதியுடன் இருப்பவர் நம்ம ஆளு.....

மாடு மேய்க்கும் வேடத்தில் நடித்தாலும் ஜீன்ஸ், ஷூ போட்டு கொண்டுதான் நடிப்பாரு இந்த சூப்பர் ஹீரோ......

தமிழ் சினிமாவில் பல பேரை உருவாக்கி முன்னுக்கு கொண்டு வந்த பிரபல இயக்குனரின் மகனாகவே இருந்தாலும் என்னை உங்களால் முன்னுக்கு கொண்டு வர முடியாது என சபதத்தோடு இருப்பவர் ...வேற யாரு

நம்ம மனோஜ்தான்......

வெறும் மனோஜ் என்றால் பல பேருக்கு தெரியாதுதான்....இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் தவப்புதல்வர்தான் மனோஜ்.....

தந்தையின் மோதிரக்கையால் குட்டுப்பட்டு ( அப்படி என்றால் என்னங்க) அறிமுகமானார் இவர்....தாஜ்மகால் என்பது படத்தின் பெயர்....உலக புகழ் பெற்ற தாஜ்மகாலின் பெயரை இந்த படத்துக்கு எதற்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை....தாஜ்மகாலில் கரைதான் படிந்தது......

படித்தில் நடிங்க என்று சொன்னால் ஏதோ ஷூட்டிங் பார்க்க வந்தது போல படத்தில் வந்து போனார் நம்ம ஹீரோ.....தொடர்ந்து வந்த எந்த படங்களும் ஓடவில்லை....எவ்வளவு படங்களில் நடித்தார் என்றும் தெரியவில்லை...

பாரதிராஜாவின் எந்த அறிமுகமும் சோடை போனது இல்லை.....அதற்க்கு விதிவிலக்கு வேண்டும் அல்லவா....தனது தந்தைக்காக அதை செய்துள்ளார் மனோஜ்....

சிறிது நாட்கள் ஷங்கரிடம் உதவி இயக்குனராக இருப்பதாக சொல்லி கொண்டு இருந்தார்....சிகப்பு ரோஜாக்கள் படத்தை திரும்ப எடுக்க போவதாக சொல்லி இருந்தார்.....இப்போது தனது தந்தையின் நடித்து வருகிறார்..பிறகு வேறு யார் வாய்ப்பு கொடுப்பார்கள்...!


மனோஜ்க்கு ஆதரவாக நானும் இருக்கிறேன் என்று களத்தில் குதித்தவர் இவர் 




தந்தைய போலவே உயரமாக இருந்தாலும் தந்தையை போன்று உயரவில்லை சினிமாவில்...


மம்மி செல்லமா டாடி செல்லமா என்று பாடியவர் ரசிகர்களின் செல்லத்தை பெறாமல் போய்விட்டதில் ஆச்சர்யம்தான்....



சத்யராஜ் மகன் சிபிராஜ்தான் அவர்.....ஸ்டுடென்ட் நம்பர் 1 என்ற 

படத்தில் அறிமுகம்...வந்த வேகத்தில் பெட்டியில் சுருண்டது.....படம் பிளாப் நம்பர் 1 ஆனது ....பின்பு தந்தையோடு இணைந்து சில படங்களில் நடித்தார்.....அதனால் சத்யராஜ்க்குதான் நஷ்டம்..... சத்யராஜ்க்கும் வாய்ப்பு குறைந்து போனது....


அப்பாவை போலவே வில்லனாகவும் நடித்து பார்த்தார்.....ஒண்ணும் எடுபடவில்லை...


இப்ப என்ன செய்கிறார் என்று தெரியவில்லை.....

இவர்கள் எதனால் காணாமல் போனார்கள் என்று இவர்களின் தந்தைகளுக்கு நிச்சயமாக குழப்பமாக இருக்கும்தான்.... பிரபலங்களின் மகனாகவே இருந்தாலும் தனித்துவமும், திறமைகளும் இருந்தால் மட்டுமே ஜொலிக்க முடியும் என்பதில் ரசிகர்களுக்கு எவ்வித குழப்பமும் இல்லை....

 நோட்  பண்ணிக்கங்க :இது தோண்டி எடுக்கப்பட்ட எனது பழைய பதிவு 

17 டிசம்பர் 2012

கருணாநிதியின் கொள்ளு பேரனும், கரீனா கபூரும் (கூட்டுப்பொறியல்)



அட பாவி மக்களா !மக்களின் வரிப்பணத்தை இப்படி எல்லாமா ஆனந்தமாக செலவு செய்வது?

சோற்றுக்கு தினம் தினம் கஷ்டப்படும் மக்கள் வாழும் ஒரு மாநிலம்,இந்தியாவிலே வறுமை கோட்டிற்கு கீழே வாழும் மக்கள் அதிகமுள்ள மாநிலம் என பெயர்பெற்ற சத்தீஸ்கர் மாநிலத்தில் 1.40 கோடியை அலேக்காக தூக்கி ஒரு சினிமா நடிகைக்கு கொடுத்துள்ளனர் அம்மாநிலத்தை ஆளுபவர்கள்!(பி ஜே பி)

 ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ம்  தேதி சத்தீஸ்கர் மாநிலம் உருவான நாள் அம்மாநில அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது..இதில் ஆடத்தான் கரீனா கபூரை 1.40 கோடி அரசு கஜானாவிலிருந்து  எடுத்து கொடுத்து கூட்டி  வந்து கும்மாளம் போட்டுள்ளனர்...

இந்தியா நல்ல முறையில் முன்னேறி கொண்டு இருக்கிறது!வேற என்னத்த சொல்ல..

.............................. .................................. ..........................................................

அண்ணா ஆரம்பித்த திராவிட முன்னேற்ற கழகம் திருவாரூர் முன்னேற்ற கழகமாக  (உபயம் :ஆனந்த விகடன்)மாறி விட்டது என்பது அனைவரும் அறிந்த சேதிதான்...

ஆனால் அதற்காக கருணாநிதியின் கொள்ளு பேரனின் படத்தையுமா போட்டு போஸ்டர் வைப்பார்கள் ?!

கரூரில் கட்சி விழாவில் பங்கேற்க வந்த ஸ்டாலினை வரவேற்று வைக்கப்பட்ட பிளக்ஸ் போர்டில் ஸ்டாலின்,அவர் மகன் உதய நிதி,அவரின் மகன் இன்ப நிதி ஆகியோரின் படங்களோடு கருணாநிதியின் படத்தையும் ஓரத்தில் போட்டு திமுகவில்  நாலாவது தலைமுறை தலைவரை உருவாக்க ஆரம்பித்துள்ளனர் உடன் பிறப்புகள்...இதை எல்லாம் கண்டிக்க வேண்டாமா கட்சி தலைமை?

இதை எல்லாம் பார்த்துவிட்டு குடும்ப அரசியல் என்று சொல்லாமல் வேறு என்ன வென்று  சொல்வதாம் ?கருணாநிதிக்கே வெளிச்சம்!

................................... ................................. ................................................................
                                                        பொறியல் 

காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடிப்பதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது :குலாம் நபி ஆசாத் #

அவங்க கட்சியே தடுத்து கொள்ளும்னு சொல்ல வாராரு!

.......................... .............................. ......................................................................

ஐந்து பேர் குடும்பத்துக்கு மாதம் 600 போதும்:டெல்லி முதல்வர் ஷீலா தீட்ஷித் 


ஒருவேளை ஆடு மாடுகளுக்கு தீவனம் வாங்குவதை சொல்கிறாரோ!?

.................................... ......................................... ...............................................

மின்வெட்டு பிரச்சினையில் வெள்ளை அறிக்கை வேண்டும் :கருணாநிதி 


அப்படியே வெளிச்சத்தில் வைத்து படிப்பதற்கு ஒரு டார்ச்லைட்டும் கேளுங்க தலைவா!


............................... ............................................ ........................................................

அன்று கூட்டத்தை ஆதரித்தேன் ,இன்று தோட்டத்தை ஆதரிக்கிறேன் :நாஞ்சில் சம்பத் 

புது கார்,பதவி எல்லாம் கொடுத்து "தோட்டம்"தானே உங்களை ஆதரிக்கிறது !(அம்மாவிடம் போட்டு கொடுப்பவர்கள் கவனத்திற்கு)

............................. ........................................ ....................................................................

ஜெயலலிதாவை பிரதமராகவிட்டால் இந்தியாவே இருண்டு போய்விடும் :  ஸ்டாலின் 

 அட ஏன் தல "அமைச்சர்கள்தான் "அம்மா"பிரதமர் என பூச்சாண்டி காட்டுகிறார்கள் "என்றால் நீங்களுமா ?!

................................. ..................................... .................................................
எங்கள்  திட்டத்தை திருடிவிட்டார் ராகுல்காந்தி :சந்திரபாபு நாயுடுவின் மகன் #

புரியுது ...ஆந்திராவில் இருந்தாலும் அரசியலில் உங்கள் வழிகாட்டி எங்களின் "தலைவர்கள்" என்று!


....................................... ...................................... ..............................................................


07 டிசம்பர் 2012

கருணாநிதி ஆந்திராகாரருங்கோ!!ஆதாரங்களோடு அன்புமணி!.......





நான் கேட்குற ஒரு கேள்விக்கு பதில் சொல்லுங்க (சொன்னால் ஒரு குச்சிமிட்டாய் தருவாருங்கோ!)ஒரு தமிழன் கேரளாவிலோ ,ஆந்திராவிலோ ,கர்நாடகாவிலோ போய்  முதல்வர் ஆக  முடியுமா ?ஆனா இங்க பாருங்க ஜெயலலிதா எந்த ஊர்னு நான் சொல்லவேண்டியது இல்லை..(சொன்னால் உள்ளே போய்விடுவோம்னு தெரியும் சாருக்கு!)விஜயகாந்த் தமிழர் கிடையாது....தமிழின தலைவர்னு மூச்சுக்கு 300 தடவை சொல்லிக்கிட்டு இருக்கும் (அவர்  மூச்சு விடும்போது இவர்தான் எண்ணி பார்த்தாரு போல!)கருணாநிதியே தமிழர் அல்ல!(கொஞ்சம் விட்டா தமிழ்நாட்ல நாங்கதான் தமிழர்கள்ன்னு சொல்லிவிடுவார்!)கருணாநிதியோட  பூர்வீகம் ஆந்திராதான்!(ஆனா நம்ம டாக்டரு அய்யாவின்  வகையிரா   தமிழ் மொழி தோன்றும்போதே  தோன்றியது என்றால் பார்த்துகொள்ளுங்கள்!)

கருணாநிதியோட பூர்வீகம் ஆந்திராதான் என்பதற்கான ஆதாரங்கள் சீக்கிரம் வெளிவரும் (இப்ப சென்சார் போர்டுல அனுமதி வாங்க இருக்கு போல!)....அதனால தமிழ்நாட்டை தமிழர்கள் ஆள  வாய்ப்பு கொடுங்கள் என மக்களிடம் கேட்க போகிறோம்(அது நியாயம்தான்...ஆனா அந்த தமிழனே நான்தான் என நீங்களே சொல்லிகொண்டால்  எப்படி?)

எந்த நம்பிக்கையிலே ஆட்சியை பிடிப்போம் என ஆனந்த விகடன் பேட்டியில் அன்புமணி ராமதாஸ் சொன்ன பதில்தான் இது...மேலும் சில கேள்விகளையும் அவரோட பதிலையும் என்னோட கவுண்டரோடு படியுங்கள்...

கேள்வி: ராமதாஸும் ,அன்புமணியும் பெரும் குடிகாரர்கள் என வன்னியர் கூட்டமைப்பின் தலைவர் சி .என் .ராமமூர்த்தி பேசி இருக்கிறாரே?

அன்புமணி:  அவர் யாருன்னே எனக்கு தெரியாதுங்க (தெரியாட்டி என்ன ?கேட்ட கேள்விக்கு பதில் என்ன சாரே?!)

கேள்வி:திராவிட கட்சிகளை தவிர்த்து ஆட்சியை பிடிக்கும் அளவுக்கு வேறு யாருடன் கூட்டணி வைக்கப்போகிறீர்கள்?

இவங்க கூட்டணியே எங்களுக்கு தேவை இல்லை...தமிழ்நாட்டு மக்கள் இருக்காங்க...அவங்க எங்களுக்கு ஒட்டு போட போறாங்க (2011ல மட்டும் என்ன ஆந்திர மக்களா இங்கு வந்து ஒட்டு போட்டாங்க?!)

கேள்வி:வன்னிய சமூகத்துக்கு பெண்களை வேறு சாதியை சேர்ந்தவர்கள் திருமணம் செய்தால் கையை வெட்டுங்கள் என பேசி பிரச்சினையை ஆரம்பித்ததே காடுவெட்டி குருதானே ?

குரு சொன்னா எல்லாரும் அப்படியே கேட்டுருவாங்களா?(அட இந்த காட்டுமிராண்டி தனமான பேச்சை எல்லாரும் வேற கேட்கணுமா?பா.ம.க.வுக்கு ஒட்டு போடுங்கன்னு குரு சொல்லி எல்லாரும் எங்களுக்கு ஒட்டு போட்டாங்களா (அப்பாடா இப்பவாச்சும் யாருமே எங்களுக்கு ஒட்டு போடலன்னு ஒத்து கிட்டாரே !)நானோ, அய்யாவோ ,குருவோ காதலுக்கு எதிரானவங்க இல்ல...உண்மையான காதல்னா உயிரை கொடுத்தாவது (யார் உயிரை?!காதலர்களின் உயிரையா !)சேர்த்து வைக்க தயாரா இருக்கிறோம்...

பேட்டி பினிஷ் ..

ஓகே...நான் தெரியாமதான் கேட்கிறேன்..இதுவரை தமிழர்களை  தமிழன் ஆளவே இல்லை என நீங்களும்,உங்கள் அப்பாவும் சொல்கிறீர்களே காமராஜர்,அண்ணா இவர்களெல்லாம் என்ன  ஐரோப்பியாவிலிருந்தா வந்தார்கள்?


05 டிசம்பர் 2012

பயோ(பயங்கர)டேட்டா : ராமதாஸ்


பெயர் :  ராமதாஸ்



அடைமொழி : மரம்வெட்டி மருத்துவர் ....



கட்சியின் பெயர்: பாசமான மகனுக்கான கட்சி (சுருக்கமாக பா ம க !)



தொழில்: ஜாதி வியாபாரி





பொழுதுபோக்கு:  ஜாதி கலவரங்களை  தூண்டி விடுவது




பிடித்த நிறம்: பச்சோந்தியின் நிறம்




பிடித்த விளையாட்டு : அந்தர் பல்ட்டி




என்றுமே பிடித்தது: ஜாதி சண்டை,கலவரம்




 எப்போதும் பிடிக்காதது : காதல்,கலப்பு திருமணம்




சாதனை: ஜா"தீ " யை வைத்து கட்சியை வளர்த்தது



வேதனை : கொஞ்சூண்டு இருந்த நல்ல பேரும் கரைந்து போனது....




நீண்ட கால எரிச்சல்:  கருணாநிதி,ஜெயலலிதா



சமிபத்திய எரிச்சல்: விஜயகாந்த்



காடுவெட்டி குரு : ஜா"தீ" யை பற்ற வைக்கும் தளபதி




அன்புமணி : ஒ சி  கோட்டாவில் அமைச்சர் ஆவதற்காகவே இருப்பவர் ...




 திருமாவளவன்: தமிழ்குடிதாங்கி பட்டம் தரும்போது இனித்தவர் ,இப்போது கசப்பவர் !



வாய் கூசாமல் சொல்வது:  திராவிட கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லை ! ...




வாய் தவறி சொல்வது :  பாமக  ஆட்சியை பிடிக்கும்!




மாறி கொண்டே இருப்பது: கூட்டணி




மாறாமல் இருப்பது:  சாதி வெறி ....!





08 நவம்பர் 2012

அம்மாதான் பிரதமர்.!....அய்யகோ!ஒருவேளை அடுத்த வழக்கு இதற்காகத்தானோ !?

அம்மா பிரதமர்  ஆகலாம்  என அம்மாவின் விசுவாசிகள் கூறியது பத்தாது என்று இப்போது பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்றும்  அம்மா புராணம் பாடியுள்ளது....




ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, ஆற்றல் காரணமாக அவர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு உயரக் கூடிய தகுதியுடன் இருப்பதாக பிரான்ஸ்லிருந்து  வெளிவரும் பத்திரிக்கையான  யூரோப் கிரியேட்டிவ்  கூறி உள்ளது....இது போதாதா  ரத்தத்தின் ரத்தங்களுக்கு !மேடைக்கு மேடை  இதயே முழங்கி தள்ளி விடுவார்கள்....!இதை பார்த்தவுடன்  facebook ல்  பார்த்த ஒரு கமெண்ட்  நினைவுக்கு வருகிறது.."நீங்க வேணும்னா அம்மாவை கூட்டிப்போய்  பிரான்சில்  பிரதமர் ஆக்கி கொள்ளுங்கள் !"என்ற பொன்வாசகம்  தான்  அது.....

ஆனால் நாம் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..அம்மாவின் புகழை  எங்கயோ பிரான்சில் இருப்பவனுக்கு நாம்தான் இன்னும் தெளிவாக புரிய வைக்கணும்.....


ஒருவேளை அந்த பத்திரிகையின்  ஓனர்  ஒ.பி.எஸ்  சின் சொந்தக்காரப்புளையாக கூட இருக்கலாம்....அந்த பத்திரிக்கை காரனை தமிழகத்துக்கு கூட்டிவந்து ஒரு மூணு நாள் தங்க  வைக்கணும்....

டெங்கு,மின்தடை பிரச்சினை  போன்ற  தமிழக மக்கள் அனுபவிக்கும் துயரங்களை  தீர்க்க முதல்வர் ஜெயலலிதா  எவ்வளவு திறமையா  செயல்படுகிறார்  என்பதை  தெரிந்து கொள்வதற்காக!

மக்கள் பிரச்சினைகளை  தீர்க்க நடவடிக்கை எடுக்காமல்  இதற்கு காரணம் சென்ற திமுக அரசுதான் என நொண்டி சாக்கு சொல்வதை அறிந்து கொள்வதற்காக!

அடிக்கடி அமைச்சர்களை .IAS ,IPS அதிகாரிகளை பந்தாடி நிர்வாகத்தை எவ்வளவு சீராக நடத்துகிறார் என்பதை புரிந்து கொள்வதற்காக!!

தன்னை விமர்சிக்கும் பத்திரிக்கைகளின் மீது  வழக்கு தொடர்ந்து எப்படி ஜனநாயகத்தை  காப்பாற்றி வருகிறார் ஜெயலலிதா என்பதை கண்டு கொள்வதற்காக !

அப்புறம் எழுத சொல்ல்ணனும் அந்த பதிரிக்கைகாரனை ஜெயலலிதா இந்தியாவுக்கு பிரதமர் ஆகலாமா இல்லை அமெரிக்காவுக்கே அதிபர் ஆகலாமா என்று!?

எனக்கு இப்ப ஒரு டவுட்டு..

ஒருவேளை அம்மா பிரதமர் ஆனால் தமிழகத்தின் முதல்வர் யார்?அதுவும் அம்மாதானா?

அய்யகோ...தெரியாமல் இப்படி எழுதி விட்டேனே !ஒருவேளை அடுத்த வழக்கு நம்மீது தானோ!?

05 நவம்பர் 2012

பீட்சா ........பார்க்காதிங்க( .................!) பாஸ்!!

முதலில் இந்த படத்துக்கு  நல்ல விதமாக விமர்சனம் எழுதிய  பதிவர்களுக்கு  என்னுடைய சிறு கண்டனங்களை தெரிவித்து கொள்கிறேன்....

நான் இந்த படத்தை பார்த்து கொண்டு இருக்கும்போது  இதுதான் கதையாக இருக்கும் என இரண்டு விதமாக யோசித்தேன்...என்னைப்போலவே படம் பார்த்த அனைவரும் யோசித்து இருப்பார்கள்....


 ஆனால் இதுதான் கதையாக  இருக்குமோ என யோசித்த எல்லாருக்கும் இப்ப உள்ள மின்சார தட்டுபாடையும் பொருட்படுத்தாது  ஒரு பெரிய பல்ப்பை கொடுத்து அதை விட பெரிய  பொக்கையை பெற்றுள்ளார் இயக்குனர்...

எல்லா பதிவர்களை போலவே நானும் கதையை  சொல்ல மாட்டேன் என்று சொல்லாமல் கதை சொல்ல போகிறேன்...நான் சொல்லுவதை விட படத்தின் ட்ரைலர்களிலயே கதாநாயகி கதையை  சொல்லி விடுகிறார்...

அதாவது "எல்லாருக்கும் ஒரு மூமெண்ட்  வரும்..அவ நம்பிக்கையை  நம்பிக்கையாக  மாற்றுகிற மூமெண்ட் "என ரம்யா  நம்பீசன் சொல்லும் வசனம்தான் படத்தின் கதையே...

எல்லாரையும் கதையை  சொல்லவிடாமல் செய்து விட்டு படத்தின் இயக்குனரே எவ்வளவு தைரியமாக கதையை  பட விளம்பரங்களிலே சொல்லிவிட்டார்...!ஆனால் யாரும் கண்டுபிடிக்கத வண்ணம்...!


கிட்டத்தட்ட  படத்தின் நிறைகளை எல்லாரும் பிரித்து  மேய்ந்து விட்டார்கள்...

அதனால் நான் சிம்பிளாக சொல்லிகொள்கிறேன்....இந்த வருடத்தில் வந்த எல்லா பெரிய நடிகர்களின் படங்களை விட இது பெரிய படம்....நிச்சயம் 2 மணி நேரம்  தியேட்டரை விட்டு படம் பார்ப்பவர்களை  வெளியே யோசிக்க வைக்காத  படம்..அவ்வளவுதான்....

அப்புறம் முதலில் பதிவுலக நண்பர்களுக்கு  நான் சிறு கண்டனம் தெரிவித்தது "இந்த படத்தை திருட்டு VCD யிலோ DVD யிலோ பார்க்காதீர்கள் என நம் பதிவர்கள் சொல்லாத காரணத்திற்காக "ஹி ஹி.....(பெரும் தலைகள் எல்லாம் கோபப்பட வேண்டாம்..ஒரு வேலை இதை படித்தால்!)

அப்புறம் இந்த படத்தை பார்க்காதீர்கள் என தலைப்பு வைத்ததும்  சேம் ரீசன்தான் ....பீட்சா .....பார்க்காதிங்க (DVD ,VCD  களில் !)என்பதுதான் தலைப்பு.....!அதாவது எல்லாரும் இந்த படத்தை வீட்டில் திருட்டு VCD  யில் பார்க்காதீர்கள் தியேட்டரில் போய்  பாருங்கள் என சொல்லுவதற்காக ...(கண்டபடி திட்டாதிங்க பாஸ்)ஏனென்றால் நான் தியேட்டரில் பார்க்கவில்லை..மலேசியாவில் இது மாதிரி நல்ல படத்தை எல்லாம் ரிலீஸ் செய்ய மாட்டார்கள்...பீலா விட்ட  பில்லா மண்குதிரை  மாற்றான் போன்ற படங்களைத்தான் ரிலீஸ் செய்கிறார்கள்....நீங்களாச்சும் தியட்டரில் பாருங்கள்...!




03 நவம்பர் 2012

திருமணத்தை மறைத்த நரேந்திர மோடியும், 1600 கோடி ஊழலும்....(கூட்டுப்பொறியல் )



நரேந்திர மோடிக்கு  மனைவி  இருப்பதாக  கூறி அடுத்த பரபரப்பை  கிளப்பி உள்ளார் திக் விஜய் சிங்..

மனைவி இருப்பது என்ன அவ்வளவு பெரிய குற்றமா என கேட்குறீர்களா? இல்லைதான்..ஆனால் தான் பிரம்மசாரி என கூறி கொள்ளும் ஒருவர் ,பொது வாழ்வில் ஒரு மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஒருவர் மனைவி இல்லை என்று கூறினால் தவறு இல்லையா?

மோடியுடன் 1968ல்  தனக்கு திருமணம் நடந்ததாக யசோதா என்பவர் கூறி உள்ளதாகவும் அதற்கு மோடி மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை எனவும்  திக் விஜய் சிங் கூறி இருக்கிறார்....

மேலும் தேர்தல் ஆணையத்திடம்  மோடி அளித்துள்ள  உறுதிமொழி பத்திரத்தில் திருமணம் ஆனவரா? என்ற கேள்விக்கு எதுவும் குறிப்பிடாமல் வெற்றிடமாக விட்டது ஏன் எனவும் திக் விஜய் சிங் கேள்வி எழுப்பி உள்ளார்....

பதில் இருக்கா அந்த கேடியிடம்?

........................ ............................................ .........................................................................

தீபாவளி நேரத்தில் இலட்ச வாலா  பட்டாசை  கொளுத்தி போட்டுள்ளார் சுப்ரமணிய சுவாமி ....

சோனியாவும் ராகுலும் பங்குதாரர்களாக உள்ள நிறுவனத்தின் பெயர் யங் இந்தியா. இந்த தனியார் நிறுவனமானது அசோசியேட்டட் ஜேர்னல் லிமிடெட் என்ற பொது நிறுவனத்தின் சொத்துகளை கையகப்படுத்தியிருக்கிறது. இப்பொது நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ1,600 கோடி என்றும் சோனியா- ராகுல் காந்தி உரிமையாளர்களாக இருக்கும் யங் இந்தியா நிறுவனத்துக்கு காங்கிரஸ் கட்சியே கடன் கொடுத்திருக்கிறது என்பதுதான் சுவாமி கொளுத்தி  உள்ள பட்டாசு....

வழக்கம்போல ராகுல் இதை மறுத்து இருக்கிறார்..தனது மீது அவதூறு கூறி உள்ள சு.சுவாமி மீது வழக்கும் தொடர  போகிறாராம்  ராகுல்...

கருணாநிதிக்கே கடிதமா?!ஜெயலலிதாவுக்கே அறிக்கையா?சுப்ரமணிய சுவாமிக்கே வழக்கா?!


.................................................... ..................................... .......................................................................................

தீபாவளி நேரத்தில் அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பஸ்களின் உரிமை ரத்து  செய்யப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறி இருக்கிறார்....

வருடா வருடம் இதுபோல அமைச்சர்கள் சொன்னாலும் ஆம்னி பஸ்கொள்ளைகள் தீபாவளி  சமயங்களில்நடந்து கொண்டுதான் இருக்கிறது...

ஒவ்வொரு முறையும் பொதுமக்கள் தங்களுக்குஅன்றைய வயிற்று வலி தீர்ந்தால்  போதும் என்கிற மனப்பாங்கில் பண்டிகை காலங்களில் கேட்கிற கட்டணத்தை கொடுத்து விடுவதால்தான் இந்த ஆம்னி பஸ் கொள்ளைகளுக்கு ஒரு முற்று புள்ளி வைக்க முடியவில்லை....

இதை படிக்கும் நண்பர்கள் இது போன்ற தொந்தரவுகளுக்கு ஆளானால் "9444855428 9444015958"என்ற எண்ணுக்கு  புகார் அளியுங்கள்....கட்டண கொள்ளையை  தடுப்போம்....




02 நவம்பர் 2012

கருணாநிதியும் vs ஜெயலலிதா :பரபரப்பான நேரடி விவாதம்...

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்  நேரடி விவாதம்...ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியான செய்திதான்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் நேரடி விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்..அந்த பாணியை நம்மூர்  அரசியல்வாதிகள் பின்பற்றினால்?!

கருணாநிதி:  வணக்கம் அம்மையாரே!


ஜெயலலிதா:  என்னை அம்மையார் என்று கூப்பிடும் கருணாநிதிக்கு என்ன  வயது இருபதா?


கருணாநிதி:  மனதால்  நான் என்றுமே 20 வயது வாலிபன்தான்...


ஜெயலலிதா:  என்னோட விவாதம் பண்ணும் அளவுக்கு கருணாநிதிக்கு மொழி புலமை இல்லை..எனக்கு 8 மொழிகள் தெரியும்...


கருணாநிதி:  செம்மொழியாம் தமிழ் மொழி 100 மொழிக்கு சமம் என இந்த அம்மையாருக்கு யார் புரிய வைப்பது?!


ஜெயலலிதா:  நான்  எல்லாம் தெரிந்தவள்...ஆனால் உங்களுக்கு தெரிந்தது  எல்லாம் ஊழலை தவிர வேறு இல்லை...


கருணாநிதி:  அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கை இந்த நேரத்தில் அவருக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன்...


ஜெயலலிதா:  சர்க்காரியா  கமிசனை  மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை என நினைவில் வைத்துகொள்ளுங்கள் மிஸ்டர்  கருணாநிதி...



கருணாநிதி:  அது புனையப்பட்ட விவகாரம்....வளர்ப்பு மகன் திருமணத்தை  மக்கள் மறக்க இன்னும் பல யுகமாகும் என சொல்லி கொள்ளவிரும்புகிறேன்..


 அப்போது கரண்ட்  கட்  ஆகிறது....


ஜெயலலிதா:  இப்ப கரண்ட்  கட்  ஆனதற்கும் சென்ற கருணாநிதி அரசுதான் காரணம்...


கருணாநிதி:  ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல..எனது ஆட்சி காலத்தில்  மூன்று மணி நேரம்தான் மின்சாரம் தடை பட்டது...ஆனால் இப்போது மின்சாரமே இல்லை..அப்புறம் எங்கே அது தடை படுவது?


ஜெயலலிதா: கோபமாகி ஒரு பத்து பக்க அறிக்கையை எடுத்து படிக்கஆரம்பிக்கிறார்...


பொதுமக்கள் :நாட்டை முன்னேற்ற  பாதையில் அழைத்து போவதை பற்றி விவாதிக்க சொன்னால் இவர்கள் தங்களை  பற்றியே விவாதித்து கொண்டு இருக்கிறார்களே என  தலை குப்பற  அடித்து  ஓட ஆரம்பிக்கின்றனர்...

.......................................... ....................................... ......................................................



அடுத்து  மன்மோகன் சிங் = அத்வானி 

அத்வானி:  வணக்கம் ...நான் பிரதமர் ஆனால் ராமர் கோவில் கட்டுவேன்...



மன்மோகன் சிங்:  .......... ................. ...........................



அத்வானி:    இந்தியா முழுவதும்  உள்ள  மசூதிகளை  அவை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தால் இடிக்க உத்தரவு இடுவேன்...



மன்மோகன் சிங்:  ......................... ......................... ...........................



அத்வானி:  என்ன எதுவுமே பேசாம  மவுனமா இருக்குறீர்கள் சிங்?



மன்மோகன் சிங்:  ....................... .......................... ................................




அத்வானி:  இவரோட விவாதம் பண்ணுவதற்கு ஒரு ஊமையை  கூப்பிடுங்கள்.என சொல்லிவிட்டு  நடையை  கட்டுகிறார்.....



மன்மோகன் சிங்: ................. ................................ ............................

01 நவம்பர் 2012

புரட்சி தலைவியும்,நாட்டாமையும் (கூட்டுப்பொறியல்)


                                                     கூட்டு .....................
                                        ................ .................. ............................

மெஜாரிட்டியில் ஆட்சி செய்யும்  ஒரு அரசு எதிர்கட்சியை உடைத்து அதில் இன்பம் காணுவது ஏன் என்றுதான் புரியவில்லை....நாட்டில் தீர்க்கப்படாத பிரச்சினைகள்  எவ்வளவோ இருக்க  விஜயகாந்தின் கட்சியை உடைத்து நான்கு பேரை விலைக்கு வாங்கி  என்ன சாதிக்க போகிறார் ஜெயலலிதா? இது விஜயகாந்தின் மீது ஜெயலலிதாவுக்கு உள்ள பயத்தையே காட்டுகிறது ....யாருக்கும் அஞ்சாத தலைவர் என்றல் ஒரு வழக்கு போட்டதுமே ஏன் முன்ஜாமீன் கேட்கிறார் விஜயகாந்த் என கேள்வி எழுப்பும் ஜெயலலிதா  தன்  மீதான  சொத்து குவிப்பு வழக்கில் எத்தனை  வாய்தா வாங்கி  இழுத்தடித்தார்?அதை எந்த கணக்கில் கொண்டு போய்  சேர்ப்பது?

அடுத்த கட்சியை உடைத்து ஆனந்தம் அடைவதற்கு பெயர்தான் புரட்சி தலைவியா?

ஒன்று மட்டும் புரிகிறது...தமிழகத்தில் ரொம்ப மட்டமான அரசியலை  நடத்தி கொண்டு இருக்கிறது அதிமுக  என்றால் அது மிகையல்ல....

..................................... ............................................ ........................................................

சந்தையில் விக்காத பொருளை கூவி கூவி விற்பதுபோல  மின்சார  தட்டுபாடிற்கு சென்ற திமுக அரசுதான் காரணம் என கூவி வருகிறார் ஜெயலலிதா...எனக்கு ஒரு சந்தேகம் அம்மா?!

நீங்கள் ஒரு வீட்டிற்கு குடி வருகிறீர்கள்..(சும்மா எழுத்துக்குதான்!)அந்த வீட்டில் முன்பு குடி இருந்தவர்கள் கரண்ட்  பில்  கட்டாததால் உங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை....நீங்கள் இப்போது என்ன செய்வீர்கள் ?வீட்டில் மின்சாரம் இல்லாததற்கு  காரணம்  முதலில் இந்த வீட்டில் குடி இருந்தவர்கள்தான் என சொல்லிக்கொண்டு மின்சாரம் இல்லாமல் இருப்பீர்களா?அல்லது மீண்டும் மின் இணைப்பு பெறுவதற்கு நடவடிக்கை எடுப்பீர்களா?புத்திசாலி இரண்டாவதைத்தான்  செய்வான் !ஆனால் நீங்கள்???

................................... ....................................................... .................................................

சரத்குமார் என்று ஒரு நடிகர்....ஜெயலலிதா "நான்தான்  இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தேன் "என சொன்னாலும் ஆம் அதுதான் உண்மை என பாராட்டு விழ எடுக்கும் அளவுக்கு நல்லவர் ..வல்லவர்...!

ஆனால் அவர் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா  அடிப்பதோட நிறுத்தி கொள்ளாமல் எல்லை தாண்டி வெளியே வருவதுதான் அவருக்கும் ஆபத்து  நமக்கும் ஆபத்து...

நாட்டாமையாக  படத்தில் நடித்து இருந்தாலும் அவர் இன்னும் காட்டாமை  போலவே செயல்பட்டு வருகிறார் ...

கூடங்குளம் அணு உலை திறக்க வேண்டும் என போராட்டம் நடத்திய அவர் உதயகுமாரை  மேடையில்  விவாதம் பண்ண தயாரா என படத்தில் வில்லனை பார்த்து சண்டைக்கு கூப்பிடுவதை போல  கூப்பிடுகிறார்....முதலில் ஒன்றை சரத்குமார் புரிந்து கொள்ளவேண்டும்...உதயகுமார் மட்டும் அணு உலைக்கு எதிராக போராட்டம் நடத்தவில்லை...ஏறக்குறைய அப்பகுதி  மக்கள் ஆயிரகணக்கானோர் போராடி வருகின்றனர்...அவர்களிடம்  பேசி அணு உலையினால் ஆபத்து இல்லை என புரிய வைக்கவேண்டும்..அதற்கு ஏதாவது முயற்சி எடுத்தாரா சரத்?!இல்லையெனில் அணு உலைக்கு அருகிலே நானும் குடி வந்துவிடுகிறேன் என சொல்ல தயாரா சரத்குமார்?!
..................... ................................... .................................................. 


.............................................. .....................பொறியல் ...................... .............................

மற்ற பொருட்களை போல் மி்ன்சாரத்தை தேக்கி வைக்கவோ, பதுக்கி வைக்கவோ முடியாது. #சரத்குமார் 

நீங்க ஒரு  நடமாடும்  தாமஸ் ஆல்வா எடிசன் பாஸ்!!

................................... ........................................... .............................................................................

முதல் மாதத்திலேயே கருக்கலைப்பு செய்யாமல் 10வது மாதம்  செய்தால் அதற்கு பெயர் கொலை என்றே கூற வேண்டும். #சரத்குமார் 

முதல் மாதத்தில்  செய்தால் மட்டும் அது கருணை கொலை ஆகிவிடுமோ!#டவுட்டு 


.............................................. ...................................................... ..........................................................

டெசோ  தீர்மானங்களை ஐநா சபையில் கொடுக்க ஸ்டாலின் அமெரிக்கா  பயணம்#

அப்படின்னா இனி ஐநா சபைக்கே கடிதம்    அனுப்புவார் கருணாநிதி!!!


............................................................... ................................................. ..........................................................

31 அக்டோபர் 2012

பயோ(பயங்கர)டேட்டா: தே மு தி க



 கட்சியின் பெயர் : தே மு தி க (பட் விஜயகாந்த் கட்சின்னுதான் மக்களுக்கு தெரியும்....)



வயது:  7 1/2 ஆரம்பம்!



விஜயகாந்த் :  "கேப்டன்" of  த  கப்பல்!



பிரேமலதா: "  VICE " கேப்டன் !



பண்ருட்டி ராமச்சந்திரன் :   எக்குதப்பாக மாட்டிகொண்டவர் !(சுருக்கமா செல்லாக்காசு)



சின்னம்:   முரசு (கருப்பு எம் ஜி ஆர்  என தம்பட்டம் அடிப்பதை சிம்பாலிக்கா சொல்றாருங்கோ!)



சிறப்பு:  பெயரிலே :முற்போக்கு"வைத்து இருப்பது....ஆனால் "பிற்போக்காகவே "செயல்படுவது...!



சாதனை: குறுகிய காலத்திலே  29 MLA க்களை பெற்று எதிர்க்கட்சி ஆனது!




சோதனை:  அதில் 4 MLA க்கள் புட்டுகிட்டு ஓடினது!




 கட்சியின் கொள்கை : அப்பிடின்னா என்ன?!




லட்சியம்:  விஜயகாந்த்,பிரேமலதா,அவரது தம்பி என  குடும்பமே நாட்டை  ஆள்வது....!


கட்சியின் ஸ்லோகன் : அடி,உதை ,குத்து....!!



திமுக :  முன்னாள் பகையாளி...வருங்கால பங்காளி 




அதிமுக :  முன்னாள் பங்காளி ......இந்நாள் பகையாளி ..........



கட்சியின் பலம்:  விஜயகாந்த் 




பலவீனம்:   அதே விஜயகாந்த்தான் 





29 அக்டோபர் 2012

நன்றிகெட்ட நான்கு பேரும்,கோபப்பட்ட விஜயகாந்தும்!....



உண்ட வீட்டிற்கு இரண்டகம்  பண்ணுகிற மாதிரி விஜயகாந்தால் M L A ஆக்கப்பட்டவர்கள் இப்போது பணத்திற்காகவோ அல்லது வேற எதற்காகவோ ஜெயலலிதாவுக்கு வாலாட்ட துவங்கி உள்ளனர்....உண்மையில் விஜயகாந்த் இல்லை என்றால் இவர்கள் எல்லாம் நிச்சயம் MLA  ஆகி இருக்க முடியாது..விஜயகாந்திடம்  கருத்து  வேறுபாடு இருந்தால் ஜெயலலிதாவிடம்  தஞ்சம் புகுவது நன்றி கெட்ட செயல் இல்லையா?!(நன்றியுணர்வு இல்லாததால் இவர்கள் நன்றியை பற்றி என்னவென்று கேட்டதற்காக தலைப்பில் "கேட்ட" என்று முதலில் வந்துவிட்டது..ஹி ஹி எப்படி சமாளிப்பு..!)அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும்  விஜயகாந்தை வைத்துதான் இவர்களுக்கு ஒட்டு விழுந்தது என்பதையும் மறுக்க இயலாது....அப்படி ரோசமுள்ளவர்களாக இருந்தால் MLA  பதவியை ராஜினாமா செய்ய முடியுமா இவர்களால்?!

இப்போது 29 சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள தே மு திக  வுக்கு இந்த 4 பேரின் இழப்பு நிச்சயம் ஒரு பெரிய சரிவுதான்..மேலும் 8 தே மு தி க சட்ட மன்ற உறுப்பினர்களையும் அதிமுக  தரப்பு வளைக்கப்போவதாக செய்தி பரவி   வருகிறது....அப்படி ஒட்டுமொத்தமாக தூக்கி  கொண்டு வந்து அதிமுகவுக்கு  ஆதரவாக செயல்பட வைப்பார்கள்... ஏனென்றால் ஒரு கட்சி பெற்றுள்ள MLA  க்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு  MLA க்கள் தனியாக செயல்பட்டால்தான் அவர்களால் கட்சி தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும்..


அப்படி நடந்தால் சட்டசபையில் தே மு தி கவின்  பலம்  திமுக வின் பலத்தை விட குறைந்துவிடும்....விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் அந்தஸ்தை இழப்பார்....சட்டசபையில் தன்னை எதிர்த்து பேசிய  விஜயகாந்தை அந்த சட்டசபையிலே அவரது ஆட்களை வைத்து அவரை எதிர்த்து பேச வைக்க போகிறார் ஜெயலலிதா..அதுதான் நடக்க போகிறது....இந்த சதுரங்க விளையாட்டெல்லாம் விஜயகாந்திற்கு புதுசு....

இந்த கோபத்தில் இருக்கும் விஜயகாந்தை நிருபர்களும் விடாமல் துரத்தி  அவரது வாயாலே அவருக்கு ஆப்பு  வைத்துவிட்டனர்....செம கடுப்பில் இருக்கும் விஜயகாந்திடம் போயி கேள்வி மேல் கேள்வி கேட்டு நிருபர்களை நாயே,போடா என திட்ட வைத்து அதை டிவி க்களில் ஒளிபரப்பி ஏற்கனவே  சிவந்து இருந்த அவரது  கண்களை  மேலும் சிவக்க வைத்துவிட்டனர்....


பேட்டி கொடுக்க விருப்பம் இல்லாத விஜயகாந்திடம் நிருபர்கள் வேண்டும் என்றே  துருவி  துருவி கேள்வி கேட்டது  அநாகரிகமானது...அதுதான்  பத்திரிக்கை தர்மமா என தெரியவில்லை...ஆனால் அதற்கு இந்த  மாதிரி ஏக வசனத்தில் கண்டபடி விஜயகாந்த் திட்டியது அதை விட அநாகரிகமானது ..... ஒரு அரசியல் கட்சி தலைவராக அவருக்கு இன்னும் பக்குவம் வரவில்லை  என்பதையே  காட்டுகிறது....கேப்டனின் கோபத்தை பாருங்கள்!சிரியுங்கள்!!



நம்ம கருணாநிதி தாதாவை சாரி தாத்தாவை  எடுத்து கொள்ளுங்கள்..நிருபர்கள் எவ்வளவு குதர்க்கமாக  கேள்வி கேட்டாலும் அவர் அதற்கு மேலே  குதர்க்கமாக  பதில் சொல்வார்...இல்லையெனில் "நோ கமெண்ட்ஸ்"என சொல்லிவிட்டு  சென்று கொண்டே இருப்பார்...அதனால்தான் அவர் இவ்வளவு வருடம்  அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்..

கற்றுகொள்ளுங்கள் கேப்டன்...இல்லையெனில் உங்கள் கப்பல் விரைவில் மூழ்கி விட வாய்ப்பு உள்ளது..!


24 அக்டோபர் 2012

ரஜினி கொடுக்கும் பிரியாணி விருந்து!(நானாக சொல்லும் கதை)



முன்குசும்பு சாரி  முன் குறிப்பு: இந்த படம் சும்மா ஒரு பப்ளிகுட்டிக்காக ..

நான் எப்ப வருவேன் எப்படின்னு வருவேன்னு  சொல்லமாட்டேன்..ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா  வருவேன் ...என்ற சூடான பஞ்ச்  டயலாக்கை பேசிவிட்டு கேரவனுக்குள் வந்து அமர்ந்தார் 33 வயதே ஆன ரஜினிகாந்த்...

 ரஜினிகாந்த் தமிழ்பட உலகின் சூப்பர் ஸ்டார்....சமிபத்தில்தான் தனது கல்யாணத்தை ஆடம்பரமாக பண்ணி முடித்து இருந்தார்....

சார்..உங்களை பேட்டி எடுக்க ஆறு மாசமா ஒரு பத்திரிக்கை காரன்  கேட்டுகிட்டே இருக்கான் சார்...என்றார் ரஜினிகாந்தின் உதவியாளர்....

நாளைக்கு வரசொல்...படம் ரிலிசாக போகுது ..இப்ப பரபரப்பா ஏதாவது பேட்டி கொடுத்தால்தான் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்றார்  ரஜினி....

சார் அப்புறம் இன்னொன்னு...திரும்பவும் அவர் உதவியாளர்

என்ன?எரிச்சலுடன் கேட்டார் ரஜினி


உங்க ரசிகர் மன்ற நிர்வாகிகள்  "நீங்க உங்க  கல்யாணத்துக்கு ரசிகர்களுக்காக  பிரியாணி விருந்து போடுவதாக சொல்லி இருந்தீர்கள் அல்லவா !அது பற்றி கேட்பதற்காக  வந்து இருக்கிறார்கள்...என்ன சொல்ல சார்....

ம்ம்ம்... எல்லாத்தையும்  மறந்துவிடாமல்  கேட்பானுக....என் படம் ரிலிசான பிறகு   பிரியாணி விருந்துன்னு சொல்லிடு...அப்பத்தான் வழக்கத்தைவிட  ரொம்ப உற்சாகமா  படத்துக்கு தடபுடலா வரவேற்பு  கொடுப்பானுக ...பிறகு வேற ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழிக்கலாம் .என சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு எழுந்து போனார் ரஜினி....

வெளியே தங்கள்  தலைவன் சொல்லப்போகும் பதிலுக்காக உச்சி வெயிலில் கால் கடுக்க காத்து  கொண்டு நின்றனர் ரசிகர்கள்  !