08 நவம்பர் 2012

அம்மாதான் பிரதமர்.!....அய்யகோ!ஒருவேளை அடுத்த வழக்கு இதற்காகத்தானோ !?

அம்மா பிரதமர்  ஆகலாம்  என அம்மாவின் விசுவாசிகள் கூறியது பத்தாது என்று இப்போது பிரான்ஸ் பத்திரிக்கை ஒன்றும்  அம்மா புராணம் பாடியுள்ளது....
ஜெயலலிதாவின் நிர்வாகத் திறமை, ஆற்றல் காரணமாக அவர் இந்தியாவின் பிரதமர் பதவிக்கு உயரக் கூடிய தகுதியுடன் இருப்பதாக பிரான்ஸ்லிருந்து  வெளிவரும் பத்திரிக்கையான  யூரோப் கிரியேட்டிவ்  கூறி உள்ளது....இது போதாதா  ரத்தத்தின் ரத்தங்களுக்கு !மேடைக்கு மேடை  இதயே முழங்கி தள்ளி விடுவார்கள்....!இதை பார்த்தவுடன்  facebook ல்  பார்த்த ஒரு கமெண்ட்  நினைவுக்கு வருகிறது.."நீங்க வேணும்னா அம்மாவை கூட்டிப்போய்  பிரான்சில்  பிரதமர் ஆக்கி கொள்ளுங்கள் !"என்ற பொன்வாசகம்  தான்  அது.....

ஆனால் நாம் அப்படி எல்லாம் சொல்லக்கூடாது..அம்மாவின் புகழை  எங்கயோ பிரான்சில் இருப்பவனுக்கு நாம்தான் இன்னும் தெளிவாக புரிய வைக்கணும்.....


ஒருவேளை அந்த பத்திரிகையின்  ஓனர்  ஒ.பி.எஸ்  சின் சொந்தக்காரப்புளையாக கூட இருக்கலாம்....அந்த பத்திரிக்கை காரனை தமிழகத்துக்கு கூட்டிவந்து ஒரு மூணு நாள் தங்க  வைக்கணும்....

டெங்கு,மின்தடை பிரச்சினை  போன்ற  தமிழக மக்கள் அனுபவிக்கும் துயரங்களை  தீர்க்க முதல்வர் ஜெயலலிதா  எவ்வளவு திறமையா  செயல்படுகிறார்  என்பதை  தெரிந்து கொள்வதற்காக!

மக்கள் பிரச்சினைகளை  தீர்க்க நடவடிக்கை எடுக்காமல்  இதற்கு காரணம் சென்ற திமுக அரசுதான் என நொண்டி சாக்கு சொல்வதை அறிந்து கொள்வதற்காக!

அடிக்கடி அமைச்சர்களை .IAS ,IPS அதிகாரிகளை பந்தாடி நிர்வாகத்தை எவ்வளவு சீராக நடத்துகிறார் என்பதை புரிந்து கொள்வதற்காக!!

தன்னை விமர்சிக்கும் பத்திரிக்கைகளின் மீது  வழக்கு தொடர்ந்து எப்படி ஜனநாயகத்தை  காப்பாற்றி வருகிறார் ஜெயலலிதா என்பதை கண்டு கொள்வதற்காக !

அப்புறம் எழுத சொல்ல்ணனும் அந்த பதிரிக்கைகாரனை ஜெயலலிதா இந்தியாவுக்கு பிரதமர் ஆகலாமா இல்லை அமெரிக்காவுக்கே அதிபர் ஆகலாமா என்று!?

எனக்கு இப்ப ஒரு டவுட்டு..

ஒருவேளை அம்மா பிரதமர் ஆனால் தமிழகத்தின் முதல்வர் யார்?அதுவும் அம்மாதானா?

அய்யகோ...தெரியாமல் இப்படி எழுதி விட்டேனே !ஒருவேளை அடுத்த வழக்கு நம்மீது தானோ!?

6 கருத்துகள்:

 1. பதில் எழுத ஆசைதான்.ஆனால் 0 crime ஐ நினைத்து ஒன்றும் எழுதவில்லை

  பதிலளிநீக்கு
 2. எனக்கு இப்படியும் தோணுது சகோ !
  கொஞ்சம் தவறுகள் குளறுபடிகள் செய்தால் மாநில முதல்வர்
  அளவுக்கு அதிகமா தவறுகள் குளறுபடிகள் செய்தால் பிரதமர்
  முதல்வராகவே அளவுக்கு அதிகமா தவுறுகள் அரங்கேறுவதால் பிரதமர் ..
  சோ பிரான்ஸ் பத்திரிக்கை சரியாக தான் சொல்லி இருக்கு ...

  பதிலளிநீக்கு
 3. உலகத்தில் முதல் முறையாக பிரதமரும் முதல்வரும் ஒருவரே... - நடக்கலாம்...

  tm4

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹி ஹி....வேண்டாம் சார்..அம்மாவுக்கு பணிசுமைகள் அதிகமாகிவிடும்..!

   நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....