02 நவம்பர் 2012

கருணாநிதியும் vs ஜெயலலிதா :பரபரப்பான நேரடி விவாதம்...

கருணாநிதியும்,ஜெயலலிதாவும்  நேரடி விவாதம்...ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியான செய்திதான்...

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும்  வேட்பாளர்கள் நேரடி விவாதங்களில் ஈடுபடுவது வழக்கம்..அந்த பாணியை நம்மூர்  அரசியல்வாதிகள் பின்பற்றினால்?!

கருணாநிதி:  வணக்கம் அம்மையாரே!


ஜெயலலிதா:  என்னை அம்மையார் என்று கூப்பிடும் கருணாநிதிக்கு என்ன  வயது இருபதா?


கருணாநிதி:  மனதால்  நான் என்றுமே 20 வயது வாலிபன்தான்...


ஜெயலலிதா:  என்னோட விவாதம் பண்ணும் அளவுக்கு கருணாநிதிக்கு மொழி புலமை இல்லை..எனக்கு 8 மொழிகள் தெரியும்...


கருணாநிதி:  செம்மொழியாம் தமிழ் மொழி 100 மொழிக்கு சமம் என இந்த அம்மையாருக்கு யார் புரிய வைப்பது?!


ஜெயலலிதா:  நான்  எல்லாம் தெரிந்தவள்...ஆனால் உங்களுக்கு தெரிந்தது  எல்லாம் ஊழலை தவிர வேறு இல்லை...


கருணாநிதி:  அம்மையார் மீதான சொத்து குவிப்பு வழக்கை இந்த நேரத்தில் அவருக்கு உணர்த்த நான் கடமை பட்டுள்ளேன்...


ஜெயலலிதா:  சர்க்காரியா  கமிசனை  மக்கள் யாரும் இன்னும் மறக்கவில்லை என நினைவில் வைத்துகொள்ளுங்கள் மிஸ்டர்  கருணாநிதி...கருணாநிதி:  அது புனையப்பட்ட விவகாரம்....வளர்ப்பு மகன் திருமணத்தை  மக்கள் மறக்க இன்னும் பல யுகமாகும் என சொல்லி கொள்ளவிரும்புகிறேன்..


 அப்போது கரண்ட்  கட்  ஆகிறது....


ஜெயலலிதா:  இப்ப கரண்ட்  கட்  ஆனதற்கும் சென்ற கருணாநிதி அரசுதான் காரணம்...


கருணாநிதி:  ஆட்சியில் இருப்பவர்களுக்கு இது அழகல்ல..எனது ஆட்சி காலத்தில்  மூன்று மணி நேரம்தான் மின்சாரம் தடை பட்டது...ஆனால் இப்போது மின்சாரமே இல்லை..அப்புறம் எங்கே அது தடை படுவது?


ஜெயலலிதா: கோபமாகி ஒரு பத்து பக்க அறிக்கையை எடுத்து படிக்கஆரம்பிக்கிறார்...


பொதுமக்கள் :நாட்டை முன்னேற்ற  பாதையில் அழைத்து போவதை பற்றி விவாதிக்க சொன்னால் இவர்கள் தங்களை  பற்றியே விவாதித்து கொண்டு இருக்கிறார்களே என  தலை குப்பற  அடித்து  ஓட ஆரம்பிக்கின்றனர்...

.......................................... ....................................... ......................................................அடுத்து  மன்மோகன் சிங் = அத்வானி 

அத்வானி:  வணக்கம் ...நான் பிரதமர் ஆனால் ராமர் கோவில் கட்டுவேன்...மன்மோகன் சிங்:  .......... ................. ...........................அத்வானி:    இந்தியா முழுவதும்  உள்ள  மசூதிகளை  அவை ஆக்கிரமித்து கட்டப்பட்டு இருந்தால் இடிக்க உத்தரவு இடுவேன்...மன்மோகன் சிங்:  ......................... ......................... ...........................அத்வானி:  என்ன எதுவுமே பேசாம  மவுனமா இருக்குறீர்கள் சிங்?மன்மோகன் சிங்:  ....................... .......................... ................................
அத்வானி:  இவரோட விவாதம் பண்ணுவதற்கு ஒரு ஊமையை  கூப்பிடுங்கள்.என சொல்லிவிட்டு  நடையை  கட்டுகிறார்.....மன்மோகன் சிங்: ................. ................................ ............................

9 கருத்துகள்:

 1. காமெடி கலாட்டா.....ஹா..ஹா..ஹா..அசத்தல்

  பதிலளிநீக்கு
 2. தங்களின் பதிப்பு மிகவும் அருமை. தங்களின் இந்த அருமையான பதிப்பை இன்னும் பல நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள நமது தமிழ் களஞ்சியத்தில் பகிருங்கள். வாழ்க தமிழ் வளர்க தமிழ் பற்று.
  http://www.tamilkalanchiyam.com

  - தமிழ் களஞ்சியம்

  பதிலளிநீக்கு
 3. கலக்கல் கற்பனை.

  நிஜமாகவே கருணாநிதியும் அம்மாவும் விவாதித்தால் என்ன நடக்கும்.

  தொண்டர்களின் கலவரத்தால் தமிழ்நாடு பற்றி எரியும்; எரிந்துகொண்டே இருக்கும்???

  பதிலளிநீக்கு
 4. //என்ன நடக்கும்// வினாக்குறி சேர்க்க.....

  //என்ன நடக்கும்?//

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....