30 நவம்பர் 2012

சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு ..ஆபத்தல்ல !அழிவு!!(ஆதரிப்பவர்கள் படிங்க ராசா)


சோடா .....இந்த வார்த்தையே இப்போது தொல்பொருள் ஆராய்ச்சி செய்து தேடும் அளவுக்கு  வந்துவிட்டது....

அதுபோல காலீஸ்வரி என்ற ஒரு குளிர்பானம்...எங்கள் ஊர் பகுதியில் முன்பு (சுமார் 12வருடம்)ரொம்ப பிரபலம்....விலையும்  4 ரூபாய்தான்....சிறு வயதில் ஆசையாக வாங்கி குடித்த அந்த குளிர்பானத்தை பல இடங்களில் நானும் தேடி     பார்க்கிறேன் ..பட் சொந்த மண்ணில் கேவலமாக தோற்கும் இந்திய அணியை போல நொந்து நூலானதுதான் மிச்சம்...

இதுபோல ஒவ்வொரு ஏரியாவிலும் பிரபலமாக இருந்த குளிர்பானங்கள் நாளடைவில் காணாமல் போனது..குளிர்பானங்கள மட்டுமல்ல ...அந்த தொழிலை நடத்தியவர்களும்தான்....

காரணம் வெளிநாட்டு கன்றாவிகலான பெப்சி,கொக்க கோலா போன்றவைகள்...இதில் என்ன கொடுமை என்றால் தரத்திலும் இந்த வெளிநாட்டு குளிர்பானங்கள் தரம் கெட்டு போனதுதான்...பெப்சியில்  பூச்சி கொல்லி மருந்து கலக்கப்பட்டு இருப்பதாக நாடாளுமன்றத்திலே புகார் கிளம்பி அது  நிரூபிக்கப்பட்டு பின்பு ஒன்றும் இல்லாமலே போனது....

இதெல்லாம் எதுக்கு சொல்றேன்னா இந்த சில்லறை வர்த்தகத்தில் அன்னிய  முதலீடு என மத்திய அரசு கூப்பாடு போடுகிறதே அதற்காகத்தான்....

ஏன்யா நம்ம நாட்டுல நம்ம வியாபாரிகளின் வியாபாரங்களை நசுக்கிவிட்டு அப்படி என்னய்யா வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வாழ்வளிக்க போகிறீர்கள்?

இதனால் நிச்சயம் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி..நமக்கு நன்கு பழக்கப்பட்ட நமது வீதியில் இருக்கும் மளிகை கடை காரர்களிடம்,அக்கௌன்ட் வைத்து பொருள் வாங்குவதும்,!அது சரி இல்லாவிட்டால் திரும்ப கொடுத்து மாற்றுவதும் நடக்குமாய்யா அந்த வெளிநாட்டு நிறுவனங்களிடம்!?

முதலில் விலையை குறைத்து கொடுத்து மக்களை தங்கள் பக்கம் இழுக்கும் இந்த வெளிநாட்டு நிறுவனங்கள் போக போக தங்கள் வேலையை காட்ட ஆரம்பிப்பார்கள்..அதாவது சிறு வியாபாரிகள் எல்லாம் தங்கள் தொழில் நசுங்கி மூட்டையை கட்ட ஆரம்பித்தவுடன் இவர்கள் ஆட்டையை போடஆரம்பிப்பார்கள்...அந்த நிலைமையில் அவர்கள் வைத்ததுதான் விலை..


எப்படி பெப்சி ,கோலா போன்ற குளிர்பானங்களால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்பட்டார்களோ அதுபோல சில்லறை வர்த்தகத்தில் நுழைக்கபட்ட அன்னிய  முதலீட்டாலும் சிறு வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி...


வெளிநாட்டு நிறுவனங்கள் என்ன வீதிக்கு வீதியிலா இல்லை  எல்லா கிராமங்களிலுமா அவர்களின் கடையை திறக்க போகிறார்கள்?சிறு வியாபாரிகள் பாதிக்கப்பட?என்பதுதான் சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை ஆதரிப்பவர்களின் வாதம்...

இவர்களின் வாதப்படியே வைத்து கொண்டாலும்  எல்லா கிராமங்களிலும் ,எல்லா வீதிகளிலும் எல்லாரும் பாதிக்கப்பட போவதில்லை..ஆனால் சில்லறை வர்த்தக வியாபாரமே சங்கிலி தொடர் வியாபாரம்தான்...ஒருவரை வைத்து ஒருவருக்கு லாபம்...அவரை வைத்து இன்னொருவருக்கு லாபம்...இப்ப சொல்லுங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழையும் வெளிநாட்டு நிறுவனங்களால் நேரடியாக 100 பேர் பாதிக்கப்படாவிட்டாலும் மறைமுகமாக 20 பேராவது பாதிக்கப்படுவது உறுதி!

அப்படி என்ன நம்மூர்க்காரனை ஓரம்கட்டிவிட்டு வெளிநாட்டுகாரனுக்கு வக்கலாத்து ,வியாபாரம்,லொட்டு ,லொஸ்க்கு எல்லாம்...

நமது நாட்டில் இருந்து அயல்நாட்டுகாரனை விரட்டி பெறப்பட்டதுதான் சுதந்திரம்...இப்போது நம்மூர் வியாபாரிகளை விரட்டிவிட்டு வெளிநாட்டு நிறுவனங்களை உள்ளே அனுமதிப்பது மீண்டும் அடிமை ஆவது போலத்தான்!

எப்படி இருந்தாலும் வால்மார்ட் போன்ற அந்நிய நிறுவனங்கள் சில்லறை வர்த்தகத்தில் நுழைவது உறுதி ஆகிவிட்டது...நம்மால் அதை எதிர்க்க முடியாவிட்டாலும் ஆதரிக்கலாமாவது இருப்போமே!


4 கருத்துகள்:

 1. //அப்படி என்ன நம்மூர்க்காரனை ஓரம்கட்டிவிட்டு வெளிநாட்டுகாரனுக்கு வக்கலாத்து ,வியாபாரம்,லொட்டு ,லொஸ்க்கு எல்லாம்...//
  இந்த ஒரு கேள்விக்கு மட்டும் சரியான, உண்மையான விடை தெரிந்து விட்டால் போதும், எல்லாம் தெளிவாகிவிடும். பல விஷயங்களிலும் நிகழ்வுகளிலும் கூட இந்த ஒரு கேள்வி சரியாக போருந்தக்கூடியது.

  பதிலளிநீக்கு
 2. இப்போதே ரிலையன்ஸ் இந்த மாதிரிதான் செய்துகொண்டிருக்கிறது. பாதிக்கு பாதி விலை, அடிமாட்டு விலை என்று அந்த ஏரியாவில் உள்ள சிறு வணிக நிறுவனங்களை மூட்டை கட்ட வைப்பது, பிறகு மெதுவாக விலையை உயர்த்துவது. எங்கள் ஊரில் மிகவும் பேமஸ் ஆனா காளிமார்க் காலியாகும் நிலையில் உள்ளது. அதன் தயாரிப்பான பவண்டோ புண்ணியத்தில் கொஞ்சம் தாக்கு பிடித்துக்கொண்டிருக்கிறது.

  பதிலளிநீக்கு
 3. உங்கள் கருத்து சரிதான். எல்லாமே அரசியல்தான் புரிந்தவர்கள் அதன் வளர்ச்சிக்கு கொள்கை ரீதியாகவும் , உணர்வு ரீதியாகவும் துணை போகாமல் இருக்க வேண்டும்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....