31 ஜனவரி 2013

அரசுக்கும்,கமலுக்கும்,முஸ்லிம் அமைப்புகளுக்கும்.!...சுமுக தீர்வை விரும்பும் ஒரு பதிவு....

 "முஸ்லிம் சகோதரர்கள் நீக்க சொல்லும் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கி விடுகிறேன் "என்று நேற்று அறிவித்த கமல் அதை பிரச்சினை எழுந்த அன்றே செய்து இருந்தால் இவ்வளவு பூதாகரமாக விஸ்வரூப பிரச்சினை  விஸ்வரூபம் எடுத்து  இருக்காது...

நிச்சயமாக முஸ்லிம் சகோதரர்கள்  "விஸ்வரூபம் படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளைத்தான்  எதிர்த்தார்கள், எதிர்க்கிறார்களே தவிர தனிப்பட்ட கமலை அல்ல....

இன்றே கமல் அந்த காட்சிகளை வெட்டிவிட்டு திரையிட சம்மதித்தால் எந்த எதிர்ப்பும் இருக்காது...

இவ்வளவு தூரம் போராடிய பிறகு,படத்துக்கு இவ்வளவு சிக்கல்கள் வந்த பிறகுதானே கமல் இறங்கி  வந்து இருக்கிறார்...இதுவும் கமலின்  நாடகமே என்று குற்றம் கண்டு பிடிப்பதைவிட "தப்பு செய்தவர் தவறை உணர்ந்து திருத்தி விட்டாரே "என்ற ரீதியில் அணுகுவதுதான் சரியானதாக இருக்கும்.....

அதை விட்டு விட்டு முழு படத்தையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் இனி எழுந்தால் அது தேவை அற்ற ஒன்று....பிரச்சினைகள் வளர்வதைவிட  ஏதாவது ஒரு வகையில் தீர்க்கப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்...

விஸ்வரூப பிரச்சினை இப்போது வேறு வகையில் விஸ்வரூபமெடுத்து சென்று கொண்டு இருக்கிறது...

இப்பது நடப்பதை பார்க்கும்போது ஜெயலலிதாவின்  ஈகோவினால் மட்டுமே இந்த பிரச்சினைகள் இவ்வளவு தூரம் இழுத்து கொண்டு வரப்பட்டு  இருப்பதாக தோன்றுகிறது எனது பார்வையில்...

ஒரு வேளை படத்திற்கு தடை விதித்தவுடன் கமல் ஜெயலலிதாவை சந்தித்து இருந்தால் அப்போதே இதற்கு ஒரு முடிவு எட்டப்பட்டு இருக்கலாம்...அதை தவிர்த்து கமல் நீதி மன்றத்தை நாடியது ஜெயலலிதாவுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கலாம்....


ஏதாவது ஒரு விதத்தில் சுமுக முடிவு ஏற்படுவதற்கு மாறாக மேலும் மேலும் இந்த படத்திற்காக  கருத்து மோதல்கள் அதிகரிக்கும் பட்சத்தில் அது வேறு மாதிரியான பிரசினைகளை  உருவாக்கி விடுமோ என்ற அச்சம் எழுகிறது....


எனவே கமல் சொன்ன மாதிரி அந்த காட்சிகளை நீக்கிவிட்டால் விஸ்வரூபம் வெளியாக எந்த தடையும் முஸ்லிம் அமைப்புகள் கேட்க வேண்டாம் என்பது என்னைபோன்ற மத நல்லிணக்கத்தை விரும்புவர்களின் எண்ணம்....

நல்லதே நடக்கட்டும்...நன்மையாக இருக்கட்டும்.....




28 ஜனவரி 2013

விஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்!..............

விஸ்வரூப பிரச்சினையில் இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தால் அவர்கள் மீது ஒரு வித வெறுப்பு,இவர்கள் இப்படிதான் என்ற பிம்பம் அவர்களாலே உருவாக்கப்பட்டு விட்டது....இப்படி ஒரு வாதம் பதிவுலகிலும்,வெளியிலும்  பரப்பப்பட்டு வருகிறது...நேற்று கூட ஒரு பதிவர் இது மாதிரி எழுதி இருந்தார்...முதலில் இதற்கு ஒரு விளக்கம்...


அப்படி என்ன இஸ்லாமியர்கள் தவறாக நடந்து கொண்டு விட்டார்கள்?

ரஜினியின் பாபா பட விவகாரத்தில் பா.ம.க நடந்து கொண்டதை போல பட பெட்டியை தூக்கி கொண்டு ஓடினார்களா?


இதே கமலின் "சண்டியர்" என்ற படத்தின் பெயரால் பிரச்சினைகள் வரும் என மிரட்டி அந்த படத்தின் பெயரை மாற்றிய பிறகும் படபிடிப்பை நடத்த விடாமல் ஓட விட்டாரே டாக்டர் கிருஸ்ணசாமி அது போல செய்தார்களா?                            

விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் தியேட்டரை அடித்து நொறுக்கினார்களா ?

எதுவும் இல்லை....நம்மை ஆளும் அரசாங்கத்திடம் தடை கேட்டு மனு கொடுத்து இருக்கிறார்கள்....

ஜனநாயக நாட்டில் ஒரு அரசாங்கத்திடம்  மனு கொடுப்பது ,தடை கேட்பது என்ன அவ்வளவு பெரிய தவறா?இல்லை இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் சென்சார் அனுமதித்த பிறகும் தமிழக அரசு தடை விதிக்கவில்லையா?உதாரணம் இருக்கிறதே டேம் 999 என்ற படம்...

இதனால்  சகோதர பாசத்தோடு பழகி வரும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாமியரகளிடம் இனி அது போல பழக முடியுமா என கேள்வி கேட்பது  எப்படி சரியாகும்?நாளை தங்களோடு பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு பிரச்சினை ,அதற்காக  போராட வேண்டும் என்றாலும் இதே இஸ்லாமிய நண்பரகள் அந்த போராட்டத்திற்கு வருவார்கள்....(உதாரணம் தருமபுரி சம்பவம்)

 உன் மதத்திற்காக நீ போராடினால் அது நம் நட்பை கெடுத்துவிடும் என்று சொல்வது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் என நீதிமன்றத்தில் கொடுப்பார்களே அது போலதான்...எந்தவித நிபந்தனையும் இல்லாததே நட்பு
..நிபந்தனையுடன் கூடியது நட்பல்ல.....எனவே மாற்று மத நண்பர்கள் இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களினால் நட்பு கெட்டுவிடும் என்று கூறுவது  ஏற்புடையதல்ல...



அடுத்து கருத்து சுதந்திரம்....சினிமா என்பது ஒரு தொழில்...பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு  வியாபாரம் ...சினிமாவில் கருத்து சொல்லும் படம்,வெறும் பொழுதுபோக்கு படம் என சினிமா காரர்களே இரண்டு விதமாய் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.....

இதை செய்,அதை செய்யாதே என படங்களில் சமூகத்துக்கு நல்லது,கெட்டது  சொல்வது கருத்து .சொல்லும் படமாம்....இது எதுவும் இல்லாமல் நாலு பாட்டு,5 சண்டை என எடுத்தால் அது பொழுது போக்கு (comersial film) படமாம்...இதை அவர்களே  சொல்லி இருக்கிறார்கள்....

இதே கமல் இந்த படம் சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறார்...."விஸ்வரூபம் எனது பொருள்..அதை எங்கே எப்படி விற்பது என்ற உரிமை எனக்குதான் உள்ளது என்று !அதாவது விஸ்வரூபத்தில் அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை...ஒரு பொழுது போக்கு படமாக எடுத்து இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார்....இப்போதும் அப்படித்தான் சொல்கிறார்....

கமல் வாயாலே ஒப்புக்கொண்டுவிட்டார் நான் இப்படத்தில் கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை நான் வியாபாரம்தான் செய்கிறேன்  என்று!

இப்போது சந்தையில் விற்பனைக்கு வரும் ஒரு பொருளால் நுகர்வோர் யாரேனும் பாதிக்கப்பட்டாலோ ,அல்லது அந்த பொருளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அந்த பொருளை தடை செய்ய கோரும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது அல்லவா?

அதே உரிமைதான் இப்போது விஸ்வரூபம் பிரச்சினையிலும் ..கமலால் பொழுது போக்கும் பொருளாக வியாபாரம் செய்யப்பட்ட  விஸ்வரூபம் படத்தினால் நுகர்வோருக்கு பிரச்சினைகள்  ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில்  அந்த பொருளை தடை செய்ய சொல்லி கேட்பது  எப்படி தவறாகும்?


மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள  வேண்டும் என்பதற்காக இந்த பதிவு....

இந்த பதிவு T N TJ  தலைவர்  PJ  அவர்கள்
 இது சம்பந்தமாக பேசிய  உரையை கருத்தில் கொண்டு ,எனது எண்ணங்களையும் கலந்து எழுதிய பதிவு....

நன்றி: P .J



27 ஜனவரி 2013

விஸ்வரூபம் நிச்சயம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்கு முன்னால் !!......

முஸ்லிம்கள் எனக்கு பிரியாணி விருந்து போடுவார்கள் என சொல்லிவிட்டு முஸ்லிம்களுக்கு விஷ விருந்தை கொடுத்தால் அதை எதிர்க்காமல் சலாம் போடுவார்களா கமல்?

எங்கயோ ஆப்கானிஸ்தானில் நடக்கும் தீவிரவாத செயல்களை உங்கள் படத்தில் காட்டி உள்ளதை போல  இங்கே இந்தியாவில் உள்ள குஜராத்தில் பல்லாயிர கணக்கான பெண்களையும் ,குழந்தைகளையும் , கர்ப்பிணிகளின் வயிற்றில்  உள்ள சிசுக்களையும் கூட விட்டு  வைக்காமல் நடந்த படுகொலைகளை இதுவரை நீங்கள் உள்பட உங்களுக்கு இப்போது ஆதரவு அளிக்கும் எந்த சினிமா காரர்களும் படங்களாகக் பதிவு செய்யாதது ஏன் கமல்?

முஸ்லிம்கள் புகார் கொடுத்தால் வாங்காதீர்கள், வேடிக்கை மட்டும் பாருங்கள் என அந்த படுகொலைகளை அரங்கேற்றிய கொடுங்கோலன் மோடியை குற்றவாளியாக்கி ஒரு படமல்ல ஒரு காட்சியாவது இதுவரை நீங்களும்,உங்கள் சினிமாக்காரர்களும் பதிவு செய்யாதது ஏன் கமல்?


இந்தியாவின்  ஒற்றுமையை சீர்குலைத்த சம்பவமான ,இந்தியாவுக்கு அவமானத்தை தேடி தந்த சம்பவமான ,ஏதோ ஒரு பாழடைந்த கட்டடத்தை இடிப்பதுபோல பாபர் மசூதியை  இடித்த  அயோக்கியர்களை பற்றியும், தேசத்தின் ஒற்றுமையை நாசமாக்கிய அந்த சம்பவத்தை பற்றியும் ஒரு தேச பக்தி உள்ள இந்தியனாக இதுவரை நீங்களும்,இப்போது உங்களக்கு ஆதரவு அளிக்கும் சினிமா காரர்களும் இதுவரை அப்படியே பதிவு செய்யாதது ஏன் கமல்?


இந்த இரண்டு சம்பவங்களையும் முதலில் நீங்கள் தைரியமாக  படம் எடுத்து அதை வெளியிட முடியுமா கமல்?அந்த சம்பவங்களை பற்றி நீங்கள் படமெடுத்து வெளியிடும்போது எந்த வித எதிர்ப்பும் கிளம்பாமல் இருந்தால் இப்போது நடந்த,நடக்கும்  போராட்டங்கள்  தவறு என தைரியமாக நீங்கள் சொல்லி கொள்ளலாம் கமல்....

நிச்சயம் விஸ்வரூபம் வெளிவர வேண்டும்...ஆனால் அதற்கு முன்னால்  இந்த இரண்டு சம்பவங்களையும் பற்றி படமெடுத்து வெளியிடுங்கள்!!முடியுமா உங்களால் கமல்?உலகத்தில் நடந்ததை ,நடப்பதை தானே படமாக எடுத்தேன் என கூறும் நீங்கள் இந்தியாவில் நடந்த இந்த சம்பவங்களையும் படமாக எடுத்து இருக்கலாமே?இனியாவது எடுக்கலாமே?முடியுமா உங்களால்?

இரண்டு வருடங்களுக்கு முன்பு ஒருஅணை  உடைந்தால் என்ன ஆகும் என்ற கற்பனையில் உருவான டேம் 999 என்ற படத்தை ,அது வெளிவந்தால் பிரச்சினைகள் உருவாகும் என்று தமிழக அரசு தடை செய்தது எப்படி சரியோ,அதுபோல இப்படம்  வெளிவந்தால் நிச்சயம் பிரச்சினைகள் உருவாகும் என்ற நோக்கத்தில் தமிழக அரசு இப்படத்தை தடை செய்தது முற்றிலும் சரிதான்....

அப்போது பாதிக்கப்படாத கருத்து சுதந்திரம்,படைப்புரிமை இப்போது மட்டும் பாதிக்கப்பட்டு விட்டதா?

இறுதியாக ஒன்று,கமலுக்கும் அவருக்கு ஆதரவு கொடுப்பவர்களுக்கும் ....

பாபர் மசூதியை இடித்த,குஜராத்தில் படுகொலைகளை அரங்கேற்றிய குற்றவாளிகளுக்காக  எப்படி ஒட்டுமொத்தமாக அந்த குறிப்பிட்ட மதத்தினரை குறை சொல்ல முடியாதோ அப்படிதான் தீவிரவாத செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்காக எந்த ஒரு குறிப்பிட்ட  மதமும்  பொறுப்பாகாது...


தீவிரவாதிகள் அனைவரும் மனிதர்களே அல்ல..மிருகங்கள்......அப்புறம் ஏன் அவர்களை ஒரு மதத்தோடு சம்பந்தப்படுத்துகிறீர்கள்?


முஸ்லிம்களை மட்டும் தீவிரவாதிகளாக  காட்டும் படம் நிச்சயம் இதுவே கடைசி படமாக இருக்கட்டும் ..அதுவும் உங்கள் படமாகவே இருக்கட்டும் கமல்....இனியாவது திருந்துங்கள்!




20 ஜனவரி 2013

பதிவுலக சினிமா விமர்சனங்கள் சரியா?!

பொதுவாக நம் பதிவர்களிடையே  ஒரு ஒற்றுமை இருக்கிறது.....ஒரு பிரபல பதிவர் ஒரு படத்தை நல்லவிதமாக எழுதிவிட்டால் அதை தொடர்ந்து அப்படத்தை பற்றி விமர்சனம் எழுதும் பதிவர்களில் முக்கால்வாசி  பேர்  அப்படத்தை நல்லவிதமாக எழுதுகிறார்கள்....

அதே நேரத்தில் ஒரு படத்தை பற்றி நெகடிவ்வாக  பிரபலமான யாராவது ஒருவர் எழுதிவிட்டால் அந்த படம் நன்றாகவே இருந்தாலும் மற்ற பதிவர்களும் படம் மோசம் என்ற  விதத்திலே எழுதி விடுகின்றனர்....சில பேரை தவிர்த்து....

சமிபத்திய உதாரணம்...நீதானே என் பொன்வசந்தம்  படம்... சுமாரான இந்த படத்தை பலரும் படு மோசம் என்ற விதத்திலே விமர்சனம் எழுதிவிட்டனர்...

இப்பொது சமர்....

பீட்சா படத்தை விட படு விறுவிறுப்பான ,த்ரில்லான இந்த படத்தை பற்றி இதுவரை வந்த விமர்சனங்கள் எதிர்மறையாகவே  உள்ளன...

 இந்த படத்தில் உள்ள...சில ஓட்டைகளை தவிர்த்து பார்த்தால்  படம் த்ரில் நிறைந்த விறுவிறுப்பான படமே....


விமர்சனத்தை படிக்காமல் ,கதை தெரியாமல்  இந்த படத்தை பார்த்தால் யாராலும் அடுத்து வரும் காட்சிகளை யூகிப்பது கஷ்டம்...அந்த அளவுக்கு திரைக்கதையில் அசத்தி  இருக்கிறார்கள்...

 தனது காதலியை தேடி பேங்காங் வரும் விஷால்  அடுத்தடுத்து சந்திக்கும் பிரச்சினைகளே படத்தின் கதை....அடுத்தடுத்த காட்சிகளை யாரும் யூகிக்க முடியாமல் திரைக்கதை  அமைத்து படத்தை விறுவிறுப்பாகவே கொண்டு சென்று இருகிறார்கள்...

படத்தில் விசாலுக்கு இரட்டை வேடமோ,பழசை எல்லாம் மறந்து இருப்பாரோ என படம் பார்க்கும்போது எழும் எண்ணங்கள் அனைத்தும் தவிடு பொடியாகின்றன உண்மை தெரியும்போது....

ஆனால் இந்த படத்தை பற்றி பதிவுலகில் வந்த விமர்சனங்கள்  படம் சரியில்லை என்ற தோற்றத்தையே உருவாக்கி இருக்கின்றது...அதுதான் ஏன் என்று எனக்கு புரியவில்லை..ஒருவருக்கு பிடிக்கவில்லை என்றால் அதையே விமர்சனம் எழுதும் சக பதிவர்களும் அதே எண்ணத்தை  பிரதிபலிப்பதுபோல் இருக்கிறது பதிவுலகின் சினிமா விமர்சனங்கள்...

அவரே நல்லா  இல்லைன்னு எழுதி விட்டார்..எனவே நாமும் நல்லா இல்லைன்னு எழுதினால்தான் சரி என்ற மனோபாவம் நம் தனித்தன்மையை கேள்வி குறி ஆக்குகின்றன என்பதே உண்மை...எனவே நம் மனதுக்கு பிடித்ததை நல்ல  படம் என்றும் ,பிடிக்காததை சரி இல்லை என்றும் எழுதும் விமர்சனம்தான் சரியாக இருக்கும்....

அந்த வகையில் மாறுபட்ட கதையமைப்பில் ,முந்தய எந்த படத்தின் சாயலும் இல்லாமல் வந்து இருக்கும் சமர் த்ரில் பிரியர்களுக்கு திருப்தி அளிக்கும் நல்ல படம் ...

சமர் =  ஜோர் 



19 ஜனவரி 2013

மஞ்சள் பத்திரிக்கை குமுதமும்,உண்மையை சொன்ன தலைவர்களும்...(கூட்டுப்பொறியல் )


இறந்து போனவர்  எழுந்தா வந்து பேச போகிறார் என நினைத்துகொண்டு ஜெயலலிதாவும்,கருணாநிதியும் மாறி மாறி எம் ஜி ஆரை  வைத்து வார்த்தை விளையாட்டை நடத்தி கொண்டு இருக்கிறார்கள்...

முதல்வர் பதவி  கருணாநிதிக்கு  எம் ஜி ஆர் போட்ட பிச்சை என்ற  ரீதியில் மலிவான ,மட்டமான பேச்சை ஜெயலலிதா பேசியதை தொடர்ந்து ,எம் ஜி ஆர் செயல்பட முடியாமல் இருக்கிறார்,எனவே என்னை முதல்வர்  ஆக்குங்கள்  என ராஜீவ் காந்திக்கு ஜெயலலிதா கடிதம் எழுதினார் என்று கருணாநிதியும்  போட்டு தாக்கி இருக்கிறார்...

இரண்டு பேரின் பேச்சிலும் உள்ள உண்மையை  நாடறியும்....எம் ஜி ஆர்  தயவில்லாமல்  கருணாநிதி முதல்வர்  ஆகி இருக்க முடியாது ..அதே எம் ஜி ஆர் அமெரிக்காவில் சிகிச்சை  பெற்றபோது என்னிடம் ஆட்சியை கொடுத்தால் எனது நண்பர் திரும்ப வந்தவுடன் ஆட்சியை அவரிடம் ஒப்படைப்பேன் என்று கருணாநிதி   கூறிய வரலாறையும் நாடறியும்....


எம் ஜி ஆர்  செயல்படாமல்  இருக்கிறார்  ,எனவே என்னைமுதல்வர் ஆக்குங்கள் என ஜெயலலிதா எழுதியதாக  கருணாநிதி கூறும் கடித விவகாரமும் நாடறிந்ததுதான்,...

தவளை தனது வாயால் கெடும் என்பதை போல  இருவரும் மாறி மாறி மக்கள் மறந்து போன உண்மைகளை நினைவு படுத்தி கொண்டு இருக்கிறார்கள்...

இன்னும் இதைவிடகேவலமான  உண்மைகளை  இவர்களிடமிருந்து  எதிர்பார்க்கலாம்...


.................................... .......................................... ................................... ......................................

பொது இடங்களில் தலைவர்களுக்கு சிலை வைக்க கூடாது என மாநில அரசுகளுக்கு சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது  ...

 நிச்சயம் வரவேற்கத்தக்க பாராட்டுக்குரிய விஷயம்.....

அந்த சிலை அவமதிப்பு,இந்த சிலைக்குசெருப்புமாலை போட்டதால் பிரச்சினை ,என சிலைகளை வைத்து அரசியல் கட்சிகள் செய்யும் கலவரங்களுக்கும் இதனால் ஒரு முற்று புள்ளி கிடைக்கும்....

மாநில அரசுகள் அமுல்படுத்தினால்  மக்களுக்கும்,நாட்டுக்கும் நல்லதே !

..................................... ........................................ .................................................................................

மணிரத்னம் என் தங்கையை கசக்கி பிழிந்து விட்டார் ...என்னடா வில்லங்கமான விசயமாக இருக்குமோ என நினைக்காதீர்கள்...இப்படி ஒரு தலைப்பை அட்டை படத்தில் போட்டு தனது அசிங்க முகத்தை மறுபடியும் வெளிக்காட்டியுள்ளது குமுதம் பத்திரிக்கை...

ஏன்யா வேற தலைப்பே உங்களுக்கு கிடைக்கலையா?பத்திரிக்கை விற்க வேண்டும் என்பதற்காக என்ன வேணும்னாலும் தலைப்பில் வைத்து விளம்பரம் செய்யலாமா?

முதலில் இந்த பத்திரிக்கைகளுக்கு  சென்சார் கொண்டு வர வேண்டும்...பக்கத்திற்கு பக்கம் கவர்ச்சி படங்கள்,மட்டமான தலைப்புகள் வைத்து சமூகத்தை சீரழிக்கும் பத்திரிக்கைகளுக்கு சென்சார் கொண்டு வந்தால் பாதி குற்றங்கள் குறையும்!

இப்படி தலைப்பை வைத்து வியாபாரம் செய்வது குமுதத்திற்கு  ஒன்றும் புதிதல்ல...உள்ளே விசயமே இல்லாமல்  இப்படி தலைப்புகளை வைத்து 
அந்த பத்திரிக்கை  எவ்வளவு பாடாதியாக எழுதினாலும் விற்பனை சூடாகவே இருக்கும்...

நம் மக்களும்  இதைத்தானே  விரும்பி படிக்கிறார்கள்?அப்புறம் எதை குறை கூறுவது?

இப்படி தலைப்பு வைத்து  பிழைப்பு நடத்துவதும் 1000 ரூபாய் செருப்பை அணிந்து கொண்டு நிர்வாணமாய் தெருவில் நடந்து போவதும் ஒன்றுதான் என ஏற்கனவே நான் குமுதத்தை குட்டியதையே  மீண்டும் பதிவு செய்கிறேன்...

13 ஜனவரி 2013

அல்ப புத்தி உள்ளவர்களே!கற்று கொள்ளுங்கள் பவர் ஸ்டாரிடம்!!....


தன்னம்பிக்கைக்கும்  விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டு பவர் ஸ்டார்....நக்கலாக சொல்லல...உண்மையாகவே சொல்றேன்....ஆரம்பத்தில் அவரை எல்லாரையும் போல நானும் செம காமெடி பீசாகவே  பார்த்தேன்..

ஆனால் நக்கல்,கிண்டல்,அவமானம் என எதையும் பற்றி கவலைப்படாமல் எல்லா டிவி பேட்டிகளிலும் சிரித்துகொண்டே பதில் சொல்லும் அவரின் டேக் இட் ஈசி மனநிலை,என்னை என்ன வேணும்னாலும் பேசி சிரியுங்கள் ஆனால் என் இலக்கை நோக்கி நான் சென்று கொண்டே இருப்பேன் என்ற அவரின் மனபலம் நிச்சயம் பாராட்டத்தக்கது.....

இன்று எந்த சேனலை  திருப்பினாலும் பவர் ஸ்டாரை வைத்து ஏதோ ஒரு நிகழ்ச்சி ஓடி கொண்டு இருக்கிறது....

அவரை கலாயிப்பதாக நினைத்துகொண்டே எல்லா டிவி க்களும் அவரை வைத்து நல்லா கல்லா கட்டுகின்றன...

பவர் ஸ்டார் ஒரு  விளம்பர பிரியராக இருக்கலாம்..ஆனால்  அவரை வைத்து இன்று விளம்பரம் தேட எல்லா மீடியாக்களும் ஆசைப்படுகின்றன...பொங்கல் சிறப்பு நிகழ்சிகள் அனைத்தும் பவர் ஸ்டார் இல்லாமல் இன்று தொலைக்காட்சிகளில் இல்லை... 

தன்னை மற்றவர்கள் எவ்வளவு கலாயித்தாலும்,தன்னை பற்றி என்ன நக்கல் ,கிண்டல் அடித்தாலும் அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல்  சிரித்துகொண்டே பதில்தரும் பவர் ஸ்டார் உண்மையிலே பவர் ஸ்டார்தான்..பார்த்தவுடன் எல்லாரையும் சிரிக்க வைக்கும் பவர் ஸ்டார் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்தால் உண்மையில் காமெடி சூப்பர் ஸ்டார் அவர்தான்!

அரசியலில் குதிக்க (அது என்னங்க குதிக்கிறது ?!)ஆசைப்படும் நடிகர்கள் எல்லாம் பவர் ஸ்டாரிடம் போயி பிச்சை எடுங்கள் நல்ல பழக்கத்தை...

சில நாட்களுக்கு முன் பவர் ஸ்டாரின் ஒரு பேட்டியை டிவி யில் பார்த்தேன்..அந்த நிகழ்ச்சியில் என்னமோ அவரை கலாயிப்பதாக நினைத்து கொண்டு  படு கேவலமான கேள்விகளையே கேட்டாலும் ரொம்ப படு கூலாக பதில் சொல்லி கொண்டு இருந்தார் பவர் ஸ்டார்...

நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா  என்ற கேள்வியை படு நக்கலாக கேட்க "எனக்கு தொழில் சினிமாவில் நடிப்பது,நான் அந்த தொழிலை ஒழுங்காக செய்தாலே போதும்..அதைவிட்டுவிட்டு நான் ஏன் அரசியலில் குதிக்க வேண்டும் "என அரசியலில் குதிக்க ஆசைப்படும் நடிகர்களுக்கு சூடு வைப்பதை போல ஒரு பதிலை சொன்னார்....ரியல்லி சூப்பர்ப்...கொஞ்சம் பாருங்கள் ..சிரியுங்கள்.. நடிகர்களே நீங்கள்  சிந்தியுங்கள்...



நடிகன் என்ற புகழை மட்டும் வைத்துகொண்டு கட்சி ஆரம்பிக்க ஆசைப்படும் நடிகர்களும்,எல்லாவற்றையும்  சகித்து கொள்ளும்  ஆள் கிடைத்தால் கேனத்தனமா பேட்டி எடுக்கும் மீடியாக்களும் பவர் ஸ்டாரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது!

என்னமோ அவரை பற்றி எழுதனும்னு தோனுச்சு.....அதான் இது!




12 ஜனவரி 2013

சாதனை புரிந்த சாதி வெறியர் ராமதாசும், சீட் பேரம் பேசும் விஜயகாந்தும் (கூட்டுப் பொறியல் )



நம்ம விஜயகாந்தும்  வானிலை அறிக்கை புகழ் ரமணனும்  ஒன்றுதான்  என நான் ஏற்கனவே கூறி இருக்கிறேன்..காரணம் இவர்கள்  இருவரும் நடக்காததயே கூறுவார்கள்....அதற்கு எடுத்துகாட்டாக  வரும் நாடாளுமன்ற  தேர்தலில் வழக்கம்போல  தனித்து போட்டி என அறிவித்து இருக்கிறார் விஜயகாந்த்.....திமுக விஜயகாந்திற்கு  தூண்டில் போடுவதும் அதில் விஜயகாந்த் சிக்கபோவதும் உறுதி செய்யப்பட்ட  ஒன்றுதான்.....


விஜயகாந்தின் இந்த வாய்ஜாலம் எல்லாம் கருணாநிதி கொடுக்க போகும் சீட்டின் எண்ணிக்கையை கூட்டுவதற்கு மட்டும்தான்.....

.................................. ............................................. ........................................................................

எனக்கு தெரிந்து தமிழக  அரசியல் வரலாற்றிலே  ஒரு அரசியல் கட்சி தலைவரை ஒரு ஊருக்குள் வர தடை விதித்து  அந்த நோட்டிசை அவர் வீட்டில் ஒட்டிய பெருமையும் ,சாதனையும் சாதி வெறியர் ராமதாசையே  சேரும்....

சாதி வெறியர்  ராமதாஸ் சாதி கலவரத்தை  தூண்டுவதுபோல  பேசி வருவதால் அவர் மதுரை மாவட்டத்துக்குள்ளே  நுழைய  தடை விதித்தார் மதுரை ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா ..அதை எதிர்த்து ராமதாஸ் சார்பில்  தாக்கல் செய்யப்பட வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது என உடைந்து போன ராமதாசின் மூக்கில் மேலும் ஒரு குத்து விட்டு இருக்கிறது சென்னை உயர்நீதி மன்றம்....சபாஷ்...இதைவிட ஒரு கேவலம் எனன் வேண்டும் ஒரு மனிதனுக்கு...!இப்ப பாருங்க நம்ம யாரு வேணும்னாலும் மதுரைக்குள்ள போகலாம்....ராமதாசுக்கு  பிடிக்காத தலித் மக்களும் போகலாம் ..ஆனால் ராமதாஸ் மதுரைக்கு போக முடியாது....!

ராமதாசை தூக்கி ஒரு ஆறு மாதம் உள்ளே வைத்தால் நிச்சயம் தமிழகத்தில் சாதி வெறியும்,கலவரமும் ,வட மாவட்டங்களில் பதட்ட நிலையும் நிச்சயம் குறையும் என்பது என் அபிப்ராயம்...நீங்கள் என்ன சொல்கிறீர்கள் நண்பர்களே!
............................... ....................................... ..........................................................................


ரயில் கட்டண உயர்வு  மக்களை பாதிக்குமா இல்லையான்னு நம்ம கருணாநிதி தாத்தாகிட்ட கேட்டா தமிழ்நாட்டில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைவுதான்னு வியாக்கியானம் பேசிக்கிட்டு இருக்காரு....

பேருந்து கட்டணத்தை உயர்த்திய ஜெயலலிதா ரயில் கட்டண உயர்வை பற்றி  பேசுவது சரியா என இவர்களுக்கு இடையே உள்ள மண்ணாங்கட்டி  அரசியல் பகையை பற்றி மட்டுமே பேசும் தாத்தாவுக்கும், மத்திய அரசின் மேல் உள்ள வெறுப்பால் தான் உயர்த்திய பேருந்து கட்டணம்,பால் விலை போன்றவற்றை மழுங்கடித்துவிட்டு ரயில் கட்டண உயர்வை  குறை கூரும் ஜெயலலிதாவுக்கும் உள்ள ஓரே ஒற்றுமை "மக்கள் எப்படி கஷ்டப்பட்டால்  எங்களுக்கு என்ன"?என்பதே ஆகும்...வேற என்ன சொல்வது?..1

..................................... ..................................... ......................................................

ஆயிரம்  அவதூறு வழக்குகள் கண்ட  அற்புத தலைவர் என்ற பட்டத்தை விரைவில் விஜயகாந்த் எட்டிபிடிப்பார் என்ற தோன்றுகிறது அவர் மீது ஜெயலலிதா போடும் வழக்குகளின் எண்ணிக்கையை பார்த்தால் !

நெல்லையில் நடைபெற்ற கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி வழக்கு விஜயகாந்த் மீது வெற்றிகரமாக 5 வது வழக்கு பதிவு செய்யப்பட்டடுள்ளது....

பார்ப்போம் இன்னும்  எத்தனை வழக்குகள் தான் தன்னை விமர்சிப்பவர்கள் மீது ஜெயலலிதா போடுகிறார் என்று!

................................ ........................................ ..........................................................


                                                                   பொறியல்
                                                               ...............................

        தா. பாண்டியனுக்கு தமிழக அரசின் அம்பேத்கர் விருது அறிவிப்பு!#



       அடுத்த பிரதமர் ஜெயலலிதா தான் என பேட்டி கொடுக்க ஒரு அடிமை ரெடி! 


     ...............................  ..................................................  ....................................................



ஆட்சி மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான் : செயல்வீரர் கூட்டத்தில் கலங்கிய "நேரு' #


ஆட்சியில் இருக்கும்போது ஆட்டம் போட்டவர்கள்  ஆட்சி மாறும்போது  "ஆட்டம்" காண்பது இயல்புதானே!


............................... .................................. .........................................................................

.......................................... .................................................... ....................................................................................................................


காவிரி பிரச்சினை குறித்து பிரதமர்–சோனியா ஆலோசனை  # செய்தி


எதுவுமே பேசாத  தலையாட்டி பொம்மையுடன்  எப்படி ஆலோசனை செய்ய முடியும்?#டவுட்டு...


................................................ .................................................. ..................................................


என் மகன் துரைதயாநிதி அரசியலில் ஈடுபடுவார்:மு.க. அழகிரி அறிவிப்பு#



உங்கள் மகன் அரசியலில் ஈடுபடாவிட்டால்தான் அது ஆச்சர்யம்!
..................................  ................................. ......................................................................



கறுப்புப் பணத்தை ஒழிக்க இப்போதுள்ள வரிகளை கடுமையாக்க வேண்டும்! - ரஜினி#



எப்படியானாலும் நீங்கள் கறுப்பு பணத்தை "ஒளித்துதான்"வைக்க போகீறீர்கள்!அப்புறம் ஏன் வீண் பேச்சு?


.....................  .................................... ................................. .....................................................


சேவை வரிக்கு எதிர்ப்பு ... ரஜினி, விஜய் உள்பட தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதம்#



நீங்கள்தானே மேடைக்கு மேடை கலைச்சேவை செய்கிறோம்ன்னு கூவுரிங்க....அப்புறம் ஏன் சேவை வரியை கட்டுவதில் மட்டும் எதிர்ப்பு..?!

......................................... ................................... .................................................................


கற்பழிப்பு குற்றங்களுக்கு கடுமையான ஆயுள் தண்டனை: காங்கிரஸ் கட்சி பரிந்துரை #



ஸ்பெஷல் தோசையை கேட்டால் இன்னமும் எத்தனை காலத்துக்குத்தான் இவர்கள் சாதா தோசையையே தருவார்கள்?!


...................................... .......................................... .........................................................


எங்கள் சவாலை ஏற்று அதிமுக தனித்து போட்டி என அறிவித்துவிட்டது#ராமதாஸ் 



பெரிய பசங்க கிரிக்கெட் விளையாடும்போது சின்ன பசங்களுக்கு பந்து எடுத்து போடுவதில் ஒரு ஆனந்தம் வருமே அது இதுதான்...!


.................................. .......................................... ...........................................................


அதிமுகவினர் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் உயர்வானவர்கள். திறமையானவர்கள். #ஜெயலலிதா 


ஆமாம்..உங்களை பார்த்தவுடன் விதவிதமா குனிந்து ,சாய்ந்து ,பயந்து வணக்கம் சொல்வதில்!

............................................. ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,



அரசியலுக்கு வந்தால் என் வழி தனி வழியாக இருக்கும் #ரஜினிகாந்த் 



இன்னுமா இந்த ஊரு நம்மள நம்புது !(மைண்ட் வாய்சில் அதே ரஜினி!!)

............................. .................................... ...........................................................



ஒரு பஞ்ச்: மனிதர்களிடையே சில மிருகங்கள் இருக்கின்றார்கள் என சொல்வதை இனி மிருகங்களுக்கு இடையேதான் மனிதர்களே இருக்கின்றார்கள் என சொல்லலாம் தினமும் நடக்கும் பாலியல் குற்றங்களை பார்த்தால் !....



06 ஜனவரி 2013

ஸ்டாலின்தான் தலைவர்...திட்டவட்டமாக அறிவித்தார் கருணாநிதி !



திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பதை கருணாநிதி  திட்டவட்டமாக கூறி இருக்கிறார்....

சென்னையில் திமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது....பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா  என  கருணாநிதியிடம் கேள்வி கேட்டனர்

இதற்கு பதிலளித்த அவர், சமுதாயப் பணியில்தான் தமக்கு பின்னர் ஸ்டாலின் என்று கூறியிருந்தேன். சில பத்திரிகைகள் விஷமத்தனமாக செய்திகளை வெளியிட்டுவிட்டன. பத்திரிகை செய்தியைப் பார்த்து யாராவது எதிர்த்து இருந்தால் அது அறியாமை.(அழகிரிதான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்)

 தலைவர் பதவிக்கே என்று கூறியிருந்தாலும் அதில் தவறில்லை. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? திமுக ஒரு ஜனநாயக இயக்கம். இதில் யாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்..வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் பெயரை திமுக தலைவர் பதவிக்கு முன்மொழிவேன். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு? கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், ஏற்கெனவே கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். அன்பழகன் முன்மொழிந்த பின்னர் தாம் வழிமொழிந்ததாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். 

சோ இத்தனை நாளா திமுக தொண்டர்கள்  எதிர்பார்த்த கேள்விக்கு எந்த சுத்தி வளைப்பும் இல்லாமல் நேரடியாகவே ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்  என கருணாநிதி அறிவித்து விட்டார்....

இனி அழகிரி என்ன பிரச்சினை பண்ணினாலும் அதை தான் கண்டு கொள்ள  போவதில்லை என வெட்ட வெளிச்சமாக கருணாநிதி சொல்லிவிட்டார்.....

என்ன நடந்தாலும் சரி  நீண்ட நாட்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த சகோதர யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்து இருக்கிறார் கருணாநிதி.....தந்தையின் இந்த அறிவிப்பு ஒரு மகனுக்கு ஆனந்தத்தையும் இன்னொரு மகனுக்கு அதிர்ச்சி கலந்த கோபத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்..இந்நேரம் ஏற்படுத்தி இருக்கும்.....

இனி அழகிரியின் அடுத்த முடிவு அல்லது அட்டாக் பயங்கரமாகவே இருக்கும்.... 

வாட் நெக்ஸ்ட்  அஞ்சாநெஞ்சன் ?!...............உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறோம்!மீடியாக்களும் பிலாக்கர்களும்!!...



அது என்ன "போபர்ஸ் ஊழல்"?.....



ராஜீவ் காந்தியின் மீதுஇன்று வரை துடைக்க முடியாத  களங்கமாக சொல்லப்படுவது போபர்ஸ் ஊழல் புகார்தான்.....இன்றைய அரசியல்வாதிகள் செய்யும் ஊழலை கணக்கில்  கொண்டால்  64 கோடி ஊழல்  குற்றம் சாட்டப்பட்ட அன்றைய போபர்ஸ் ஊழல் கொசு போலதான் இருந்தாலும் அந்த காலத்தில்  அது பெரிய தொகையாகவே பார்க்கப்பட்டது....

அந்த போபர்ஸ் ஊழல் புகாரைபற்றி ஒரு பிளாஷ்பேக்....

 அந்த காலகட்டத்தில் ராஜீவ் காந்தி, ஊழலுக்கு அப்பாற்பட்டவர் என்று பெயர் பெற்றிருந்தார். "திருவாளர் பரிசுத்தம்" ("மிஸ்டர் கிளீன்") என்று அவர் வர்ணிக்கப்பட்டார். இந்நிலையில், 1986 தொடக்கத்தில், அவருடைய நற்பெயருக்குக் களங்கம் உண்டாக்கும் வகையில் "போபர்ஸ் ஊழல் புகார்" விசுவரூபம் எடுத்தது. "போபர்ஸ்" என்பது, சுவீடன் நாட்டில் உள்ள ஆயுத தயாரிப்பு கம்பெனியின் பெயர். 

இந்த நிறுவனம் பீரங்கிகள் தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வந்தது. "போபர்ஸ்" நிறுவனத்திடம் இருந்து ரூ.1,700 கோடிக்கு பீரங்கிகள் வாங்க இந்திய அரசாங்கம் ஒப்பந்தம் செய்து கொண்டது. 1986 மார்ச் 24-ந்தேதி இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. 1987 ஏப்ரல் 16-ந்தேதி சுவீடன் நாட்டு ரேடியோவின் செய்தி அறிக்கையில், திடுக்கிடும் தகவல் ஒன்று வெளியானது. 

போபர்ஸ் பீரங்கி பேரத்தில் ஊழல் நடந்துள்ளது என்றும், "லோட்டஸ்" ("தாமரை") என்ற பெயரில் சுவிஸ் பாங்கியில் ரூ.64 கோடி போடப்பட்டுள்ளது என்றும், இது இந்தியப் பிரமுகர் ஒருவருக்கான லஞ்சப்பணம் என்றும் சுவீடன் ரேடியோ கூறியது. இச்செய்தி இந்தியாவில் பெரும்பரபரப்பை உண்டாக்கியது. "ராஜீவ்" என்றால் இந்தியில் தாமரையைக் குறிக்கும். 

எனவே, "லோட்டஸ்" என்பது ராஜீவ் காந்தியைத்தான் குறிப்பிடுகிறது என்று, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பல பத்திரிகைகள் எழுதின. "ராஜீவ் காந்தி ராஜினாமா செய்ய வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் வற்புறுத்தின. பாராளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது. தன் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டை ராஜீவ் காந்தி மறுத்தார். "போபர்ஸ் பீரங்கி பேரத்தில், இடைத்தரகர் எவரும் இல்லை" என்று, சுவீடன் நாட்டுப் பிரதமராக இருந்த பால்மே கூறியிருந்ததை சுட்டிக்காட்டினார். 

(ஒப்பந்தம் கையெழுத்து ஆவதற்கு முன்பே, பால்மே கொலை செய்யப்பட்டார்.) ராஜீவ் காந்தி எவ்வளவோ மறுத்தும், "போபர்ஸ் ஊழலுக்கு இதோ ஆதாரம்" என்று பல பத்திரிகைகள் தொடர்ந்து செய்திகள் வெளியிட்டு வந்தன. 

பிரபல இந்தி நடிகரும், ராஜீவ் காந்தியின் நண்பருமான அமிதாப்பச்சன், அவர் சகோதரர் அஜிதாப்பச்சன், இத்தாலிய தொழில் அதிபரும், ராஜீவ் காந்தியின் நண்பருமான ஒட்டாவியோ குவாட்ரோச்சி, சாமியார் சந்திராசுவாமி, இந்தியாவில் உள்ள போபர்ஸ் ஏஜெண்ட் வின்சதா ஆகியோருக்கும் போபர்ஸ் ஊழலில் பங்குண்டு என்று குற்றம் சாட்டப்பட்டது. 

இதன் விளைவாக ராஜீவ் காந்தியை கலந்து ஆலோசிக்காமலேயே அமிதாப்பச்சன் "எம்.பி." பதவியை ராஜினாமா செய்தார். ராணுவ இலாகா ராஜாங்க மந்திரியும், ராஜீவ் காந்தியின் உறவினருமான அருண்சிங் பதவியை விட்டு விலகினார். இதனால் எல்லாம் போபர்ஸ் ஊழல் பற்றிய கூக்குரல் அடங்கவில்லை. 

எனவே பாராளுமன்ற குழு ஒன்றை அமைத்து, இந்த ஊழல் புகார் பற்றி விசாரணை நடத்துவது என்று பாராளுமன்றம் முடிவு செய்தது. ராஜீவ் காந்தி மந்திரிசபையில் வி.பி.சிங் ராணுவ மந்திரியாக பதவி வகித்து வந்தார். அதற்கு முன்பு வி.பி.சிங் நிதி மந்திரியாக இருந்தபோது அமெரிக்காவை சேர்ந்த "பேர்பாக்ஸ்" என்ற துப்பறியும் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருந்தார். 

அதாவது "வெளி நாட்டு பாங்கிகளில் கறுப்பு பணம் வைத்திருக்கும் இந்தியர்கள் யார்-யார்?" என்பதை கண்டறிய இந்த நிறுவனம் நியமிக்கப்பட்டது. இந்த விவகாரம் காங்கிரசார் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. பாராளுமன்றத்திலும் கிளப்பப்பட்டது. இந்த விவகாரம் பற்றி விசாரணை நடத்த ராஜீவ் காந்தி உத்தரவிட்டார். 

இதன்படி சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ஒருவர் விசாரணை நடத்துவார் என்று அறிவிக்கப்பட்டது. போபர்ஸ் பிரச்சினை காரணமாக, ராஜீவ் காந்திக்கும், வி.பி.சிங்குக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டது. ஒரு காலத்தில் நெருங்கிய நண்பர்களாக இருந்த இருவருக்கும் இடையே பெரிய இடைவெளி ஏற்பட்டது. 

இதன் காரணமாக 12-4-1987-ல் வி.பி.சிங் ராஜினாமா செய்தார். அவருடைய ராஜினாமா ஏற்கப்பட்டது. வி.பி.சிங்குக்கு பதிலாக கே.சி.பந்த் ராணுவ மந்திரியாக நியமிக்கப்பட்டார். போபர்ஸ் ஊழல் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக, பிரதமர் ராஜீவ் காந்திக்கும், ஜனாதிபதி ஜெயில்சிங்குக்கும் மோதல்கள் ஏற்பட்டு வந்தன. 

இதன் காரணமாக ராஜீவ் காந்தியை டிஸ்மிஸ் செய்ய ஜெயில்சிங் ரகசியமாக திட்டமிட்டார். ஆனால் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசை "டிஸ்மிஸ்" செய்வது சரியல்ல என்றும், அதனால் உள்நாட்டுக் கலவரம் ஏற்படலாம் என்றும் ஜெயில்சிங்குக்கு ராணுவ அதிகாரிகளும், மூத்த அரசியல்வாதிகளும் ஆலோசனை கூறினர். 

இதற்கிடையே ஜெயில்சிங் பதவி காலம் முடிவடைந்தது. புதிய ஜனாதிபதியாக ஆர்.வெங்கட்ராமன் பதவி ஏற்றார். ராஜீவ் காந்தியை டிஸ்மிஸ் செய்யும் யோசனைக்கு இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

நன்றி : காலச்சுவடுகள் 

ஆனால் இந்த ஊழல்  புகாரின் காரணமாகவே 1989 ல் ராஜீவ் காந்தி தோல்வி அடைந்து ஆட்சியை இழந்தார்....

பின்பு சி பி ஐ  வசம் சென்ற இந்த வழக்கில் கடந்த 2004 ம் ஆண்டு ராஜீவ் காந்தியை விடுவித்தது தள்ளி உயர்நீதிமன்றம்....இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இந்துஜா சகோதரர்களும் விடுவிக்கப்பட்டனர்...

அதோடு 2009 ம் ஆண்டு போதிய ஆதாரங்கள் இல்லாததால் இந்த வழக்கை முடித்து கொள்வதாக கூறி முற்று புள்ளி வைத்தது சி பி ஐ ....

இன்று வரை உண்மை தெரியாமலே  புதைந்து போன வழக்குகளில் போபர்ஸ் முக்கிய இடத்தை பெற்றுள்ளது என்றால் அது மிகையல்ல...


05 ஜனவரி 2013

அழகிரியை விட ஸ்டாலின் தகுதியானவாரா?!ஒரு பரபர அலசல் !.....


கருணாநிதி தேதி குறித்துவிட்டார்...விழா நாயகன் ஸ்டாலின் என்று ......

திமுகவினர்  எதிர்பார்த்து காத்திருந்த கேள்விக்கான  பதில்தான் இது....நீண்ட  நாட்களாக புகைந்துகொண்டு இருந்த நெருப்புக்கு நீர் ஊற்ற    விரும்பி இருக்கிறார் கருணாநிதி...

அழகிரி இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என அனைவரும் அறிந்ததே...

 எதிர்பார்த்ததுபோல   அழகிரியும்  " கட்சி ஒன்றும் சங்கர  மடமல்ல ,முடி சூட்டி கொள்வதற்கு " என கருணாநிதியே  சொல்லி இருக்கிறார் என  உள்குத்து குத்தி  இருக்கிறார்...அதேதான் என் கேள்வியும்  "கட்சி ஒன்றும் சங்கரமடமல்ல
என்று அழகிரி சொல்வது அவருக்கும்தானே பொருந்தும்?

அழகிரியின்  இதற்கு எதிர்ப்பு தெரிவிப்பார் என்பதை நிச்சயம் கருணாநிதி உணர்ந்து இருப்பார்...ஆனால் அவருக்கு     வயதில் வேண்டுமானால் ஸ்டாலினை  விட அழகிரி மூத்தவராக இருக்கலாம் .....ஆனால் கட்சியில் சீனியர் ஸ்டாலின்தான்...

தனது 20 வது வயதில் திமுக பொதுகுழு உறுப்பினராக  சேர்க்கப்பட்டார் ஸ்டாலின்...பின் 1975 ல்  மிசா  சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் ...தெரிந்தோ  தெரியாமலோ  நடந்த இந்த சம்பவம்தான் ஸ்டாலினுக்கு மிகப்பெரிய  ,செல்வாக்கை  கட்சியினரிடம்  கொடுத்தது...

பின் 1980 ல் இளைஞர் அணியை உருவாக்கி அமைப்பாளர் ஆனார்...1984 ல் முதல்முறையாக சென்னை ஆயிரம் விளக்கு  தொகுதியில் போட்டியிட்ட ஸ்டாலின் அதில் தோல்வி அடைந்தார்...

ஸ்டாலின் அரசியல் பாதையில் மிகப்பெரிய திருப்பம் 1996 ம் ஆண்டு நடந்தது...சென்னை மாநகரின் மேயராக  மக்களின்  நேரடி ஓட்டுகளை பெற்று தேர்ந்து எடுக்கப்பட்டார்..அதற்கு முன்பு  வரை  மேயரை   கவுன்சிலர்கள்தான்  ஒட்டு போட்டு தேர்ந்து எடுத்து வந்தனர் ....

பின் 2001 லும் இரண்டாவது தடவையாக  மேயர் ஆனார்...ஆனால் ஜெயலலிதா கொண்டு வந்த  ஒருவருக்கு ஒரு அரசு பதவிதான்  என்ற சட்ட திருத்தத்தால் அந்த பதவியை துறந்தது தனி கதை ..

2003 ல் திமுகவின் துணை பொது செயலாளராக உயர்ந்த ஸ்டாலின் பின் 2008 ல் திமுகவின் பொருளாளர் ஆனார்...2009 ல் துணை முதல்வர் ஆகி  கருணாநிதிக்கு பின் ஸ்டாலின் என கட்சியினரை  பேசும்படி வைத்தார்...

இவ்வாறு சாதாரண  உறுப்பினராக சேர்ந்து வட்ட,மாவட்ட பிரதிநிதி ,பொதுக்குழு செயற்குழு உறுப்பினர் என படிப்படியாக  வளர்ந்து  இப்போது கருணாநிதி வாயாலே தனக்கு பின் ஸ்டாலின் என பேசும்படி வைத்துள்ளார் ஸ்டாலின்...

ஆனால் அழகிரி நேரடியாக தேர்தல் அரசியலில் குதித்ததே 2009 ம் ஆண்டுதான்...இதிலயே அவர் ஸ்டாலினை விட 25 வருடம் பின் நோக்கி சென்று விடுகிறார்

இவரிடம் உள்ள கட்சி பதவி தென் மண்டல அமைப்பு செயலாளர் ....அதுவும் திமுக ஆட்சி பொறுப்பில் இருக்கும்போது நடந்த இடைதேர்தல் வெற்றிக்காக  கிடைத்தது.....

அழகிரி  நேரடியாக அரசியலில் இறங்கி  பணியாற்றியதே 2003 க்கு பிறகுதான்....சொல்லப்போனால் திமுக ஆட்சியில் இருந்த 2006 முதல் 2011 வரை நடந்த இடைதேர்தல்களில் தான் அழகிரி தீவிர அரசியலிலே  கவனம் செலுத்த ஆரம்பித்தார் என சொல்லலாம்.... 2009 ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஜெயித்து இப்போது மத்திய  மந்திரியாக இருக்கிறார்....

ஸ்டாலின் நீண்ட காலமாக கட்சியில் இருந்து அடைந்த மந்திரி பதவியை அழகிரி குறுகிய காலத்திலயே அடைந்து விட்டார்...அந்த எண்ணம்தான் அவரை கட்சி தலைவர் வரைக்கும் யோசிக்க வைத்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல...

ஆனால் கட்சியில் சீனியாரிட்டி,கட்சி பணிகள்,கட்சிக்காக  சிறை சென்றது என  அனைத்திலும்  ஸ்டாலினின் ப்ராக்ரஸ் ரிப்போர்ட்  அழகிரியை  விட  பல படிகள்  உயர்ந்தே இருக்கிறது...

இருப்பினும் ஸ்டாலினை விட  அழகிரிக்கு இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பம்சம் தொண்டர்களை அரவணைப்பது....!ஸ்டாலின் பொதுவாக தொண்டர்களை நெருங்கவிடுவதில்லை என ஒரு குற்றச்சாட்டு  அவரது கட்சியினராலே சொல்லப்படுவது உண்டு...

இந்த ஒரு குறையை ஸ்டாலின் நீக்கிவிட்டால் எல்லா வகையிலும்  தலைவர் பதவிக்கு பொருத்தமானவரே .....