06 ஜனவரி 2013

ஸ்டாலின்தான் தலைவர்...திட்டவட்டமாக அறிவித்தார் கருணாநிதி !திமுகவின் அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்பதை கருணாநிதி  திட்டவட்டமாக கூறி இருக்கிறார்....

சென்னையில் திமுக மாவட்டசெயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது....பின்னர் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா  என  கருணாநிதியிடம் கேள்வி கேட்டனர்

இதற்கு பதிலளித்த அவர், சமுதாயப் பணியில்தான் தமக்கு பின்னர் ஸ்டாலின் என்று கூறியிருந்தேன். சில பத்திரிகைகள் விஷமத்தனமாக செய்திகளை வெளியிட்டுவிட்டன. பத்திரிகை செய்தியைப் பார்த்து யாராவது எதிர்த்து இருந்தால் அது அறியாமை.(அழகிரிதான் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்)

 தலைவர் பதவிக்கே என்று கூறியிருந்தாலும் அதில் தவறில்லை. தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் வரக்கூடாதா? திமுக ஒரு ஜனநாயக இயக்கம். இதில் யாரும் தலைவர் பதவிக்குப் போட்டியிடலாம்..வாய்ப்பு கிடைத்தால் மு.க.ஸ்டாலின் பெயரை திமுக தலைவர் பதவிக்கு முன்மொழிவேன். தலைவர் பதவிக்கு ஸ்டாலின் பெயரை முன்மொழிந்தால் என்ன தவறு? கட்சியின் பொதுச்செயலாளரான பேராசிரியர் அன்பழகன், ஏற்கெனவே கட்சித் தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலின் பெயரை முன்மொழிந்திருக்கிறார். அன்பழகன் முன்மொழிந்த பின்னர் தாம் வழிமொழிந்ததாகவே அர்த்தம் என்றும் கூறியுள்ளார். 

சோ இத்தனை நாளா திமுக தொண்டர்கள்  எதிர்பார்த்த கேள்விக்கு எந்த சுத்தி வளைப்பும் இல்லாமல் நேரடியாகவே ஸ்டாலின்தான் அடுத்த தலைவர்  என கருணாநிதி அறிவித்து விட்டார்....

இனி அழகிரி என்ன பிரச்சினை பண்ணினாலும் அதை தான் கண்டு கொள்ள  போவதில்லை என வெட்ட வெளிச்சமாக கருணாநிதி சொல்லிவிட்டார்.....

என்ன நடந்தாலும் சரி  நீண்ட நாட்களாக கொழுந்து விட்டு எரிந்து கொண்டு இருந்த சகோதர யுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர நினைத்து இருக்கிறார் கருணாநிதி.....தந்தையின் இந்த அறிவிப்பு ஒரு மகனுக்கு ஆனந்தத்தையும் இன்னொரு மகனுக்கு அதிர்ச்சி கலந்த கோபத்தையும் நிச்சயம் ஏற்படுத்தும்..இந்நேரம் ஏற்படுத்தி இருக்கும்.....

இனி அழகிரியின் அடுத்த முடிவு அல்லது அட்டாக் பயங்கரமாகவே இருக்கும்.... 

வாட் நெக்ஸ்ட்  அஞ்சாநெஞ்சன் ?!...............உங்களிடமிருந்து நிறையவே எதிர்பார்க்கிறோம்!மீடியாக்களும் பிலாக்கர்களும்!!...5 கருத்துகள்:

 1. கெட்டிக்காரத்தனமாகப் பேசுவதாக
  நினைத்து பல சமயம் குழப்பமேற்படுத்துவதைப் போல இல்லாமல்
  இப்போதாவது தெளிவாய்ப் பேசினாரே.சந்தோஷம்
  (இதில் கூட அன்பழகன் சீனுக்கு வந்துவிடக் கூடாது என்கிற
  கெட்டிக்காரத்தனம் இருக்கிறது கவனித்தீர்களா ?)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிமேலும் குழப்பினால் குட்டையில் மீன் இருக்காது என புரிந்துகொண்டுவிட்டார் கருணாநிதி ...அன்பழகன் எல்லாம் முதலிலே அவுட் ஆன விக்கெட் தான்..நன்றி அய்யா....

   நீக்கு
 2. தளபதியை அன்போடு வரவேற்கின்றோம்

  பதிலளிநீக்கு
 3. இடுகைத்தலைப்பு:
  ஸ்டாலின்தான் தலைவர்...திட்டவட்டமாக அறிவித்தார் கருணாநிதி !

  உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....