13 ஜனவரி 2013

அல்ப புத்தி உள்ளவர்களே!கற்று கொள்ளுங்கள் பவர் ஸ்டாரிடம்!!....


தன்னம்பிக்கைக்கும்  விடாமுயற்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துகாட்டு பவர் ஸ்டார்....நக்கலாக சொல்லல...உண்மையாகவே சொல்றேன்....ஆரம்பத்தில் அவரை எல்லாரையும் போல நானும் செம காமெடி பீசாகவே  பார்த்தேன்..

ஆனால் நக்கல்,கிண்டல்,அவமானம் என எதையும் பற்றி கவலைப்படாமல் எல்லா டிவி பேட்டிகளிலும் சிரித்துகொண்டே பதில் சொல்லும் அவரின் டேக் இட் ஈசி மனநிலை,என்னை என்ன வேணும்னாலும் பேசி சிரியுங்கள் ஆனால் என் இலக்கை நோக்கி நான் சென்று கொண்டே இருப்பேன் என்ற அவரின் மனபலம் நிச்சயம் பாராட்டத்தக்கது.....

இன்று எந்த சேனலை  திருப்பினாலும் பவர் ஸ்டாரை வைத்து ஏதோ ஒரு நிகழ்ச்சி ஓடி கொண்டு இருக்கிறது....

அவரை கலாயிப்பதாக நினைத்துகொண்டே எல்லா டிவி க்களும் அவரை வைத்து நல்லா கல்லா கட்டுகின்றன...

பவர் ஸ்டார் ஒரு  விளம்பர பிரியராக இருக்கலாம்..ஆனால்  அவரை வைத்து இன்று விளம்பரம் தேட எல்லா மீடியாக்களும் ஆசைப்படுகின்றன...பொங்கல் சிறப்பு நிகழ்சிகள் அனைத்தும் பவர் ஸ்டார் இல்லாமல் இன்று தொலைக்காட்சிகளில் இல்லை... 

தன்னை மற்றவர்கள் எவ்வளவு கலாயித்தாலும்,தன்னை பற்றி என்ன நக்கல் ,கிண்டல் அடித்தாலும் அதை பற்றி சிறிதும் கவலைப்படாமல்  சிரித்துகொண்டே பதில்தரும் பவர் ஸ்டார் உண்மையிலே பவர் ஸ்டார்தான்..பார்த்தவுடன் எல்லாரையும் சிரிக்க வைக்கும் பவர் ஸ்டார் தொடர்ந்து காமெடி வேடங்களில் நடித்தால் உண்மையில் காமெடி சூப்பர் ஸ்டார் அவர்தான்!

அரசியலில் குதிக்க (அது என்னங்க குதிக்கிறது ?!)ஆசைப்படும் நடிகர்கள் எல்லாம் பவர் ஸ்டாரிடம் போயி பிச்சை எடுங்கள் நல்ல பழக்கத்தை...

சில நாட்களுக்கு முன் பவர் ஸ்டாரின் ஒரு பேட்டியை டிவி யில் பார்த்தேன்..அந்த நிகழ்ச்சியில் என்னமோ அவரை கலாயிப்பதாக நினைத்து கொண்டு  படு கேவலமான கேள்விகளையே கேட்டாலும் ரொம்ப படு கூலாக பதில் சொல்லி கொண்டு இருந்தார் பவர் ஸ்டார்...

நீங்கள் அரசியலில் குதிப்பீர்களா  என்ற கேள்வியை படு நக்கலாக கேட்க "எனக்கு தொழில் சினிமாவில் நடிப்பது,நான் அந்த தொழிலை ஒழுங்காக செய்தாலே போதும்..அதைவிட்டுவிட்டு நான் ஏன் அரசியலில் குதிக்க வேண்டும் "என அரசியலில் குதிக்க ஆசைப்படும் நடிகர்களுக்கு சூடு வைப்பதை போல ஒரு பதிலை சொன்னார்....ரியல்லி சூப்பர்ப்...கொஞ்சம் பாருங்கள் ..சிரியுங்கள்.. நடிகர்களே நீங்கள்  சிந்தியுங்கள்...நடிகன் என்ற புகழை மட்டும் வைத்துகொண்டு கட்சி ஆரம்பிக்க ஆசைப்படும் நடிகர்களும்,எல்லாவற்றையும்  சகித்து கொள்ளும்  ஆள் கிடைத்தால் கேனத்தனமா பேட்டி எடுக்கும் மீடியாக்களும் பவர் ஸ்டாரிடம் கற்று கொள்ள நிறைய இருக்கிறது!

என்னமோ அவரை பற்றி எழுதனும்னு தோனுச்சு.....அதான் இது!
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....