31 அக்டோபர் 2012

பயோ(பயங்கர)டேட்டா: தே மு தி க



 கட்சியின் பெயர் : தே மு தி க (பட் விஜயகாந்த் கட்சின்னுதான் மக்களுக்கு தெரியும்....)



வயது:  7 1/2 ஆரம்பம்!



விஜயகாந்த் :  "கேப்டன்" of  த  கப்பல்!



பிரேமலதா: "  VICE " கேப்டன் !



பண்ருட்டி ராமச்சந்திரன் :   எக்குதப்பாக மாட்டிகொண்டவர் !(சுருக்கமா செல்லாக்காசு)



சின்னம்:   முரசு (கருப்பு எம் ஜி ஆர்  என தம்பட்டம் அடிப்பதை சிம்பாலிக்கா சொல்றாருங்கோ!)



சிறப்பு:  பெயரிலே :முற்போக்கு"வைத்து இருப்பது....ஆனால் "பிற்போக்காகவே "செயல்படுவது...!



சாதனை: குறுகிய காலத்திலே  29 MLA க்களை பெற்று எதிர்க்கட்சி ஆனது!




சோதனை:  அதில் 4 MLA க்கள் புட்டுகிட்டு ஓடினது!




 கட்சியின் கொள்கை : அப்பிடின்னா என்ன?!




லட்சியம்:  விஜயகாந்த்,பிரேமலதா,அவரது தம்பி என  குடும்பமே நாட்டை  ஆள்வது....!


கட்சியின் ஸ்லோகன் : அடி,உதை ,குத்து....!!



திமுக :  முன்னாள் பகையாளி...வருங்கால பங்காளி 




அதிமுக :  முன்னாள் பங்காளி ......இந்நாள் பகையாளி ..........



கட்சியின் பலம்:  விஜயகாந்த் 




பலவீனம்:   அதே விஜயகாந்த்தான் 





30 அக்டோபர் 2012

ஏன் ரத்து செய்யப்பட்டது மதுவிலக்கு??...ஒரு பிளாஷ்பேக்...!


தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும்  என்ற கோரிக்கைகள் இப்போது வலுவடைந்து வருகின்றன....இந்தியாவிலே ஏன் உலகத்திலே தனது குடிமக்களுக்கு "குடிப்பதற்காக "கடை நடத்தும் ஒரே அரசு நமது தமிழக  அரசாகத்தான் இருக்க முடியும்...

ஆனால் இதே  தமிழகத்தில் மதுவிலக்கு முன்பொரு காலத்தில்  அமுலில் இருந்தது....மீண்டும் மதுவிலக்கை ரத்து  செய்து மக்களை குடிக்கு அடிமை ஆக்கிய அந்த வரலாற்று பெருமையை யார் செய்தது தெரியுமா?ஒரு சின்ன பிளாஷ்பேக் ........

30.08.1971 முன்பு வரை தமிழ்நாட்டில் மதுவிலக்கு  அமுலில் இருந்தது....அப்போது .மதுவிலக்கை புதிதாக அமுல் நடத்தும் மாநிலங்களுக்கு, நஷ்ட ஈடாக உதவிப்பணம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்தத் திட்டம் வருவதற்கு முன்பே, தமிழ்நாட்டிலும், குஜராத் மாநிலத்திலும் மதுவிலக்கு அமுலில் இருந்தது.

தமிழ்நாட்டுக்கும் உதவிப்பணம் கொடுங்கள்" என்று மத்திய அரசிடம் அன்றைய முதல்வர்  கருணாநிதி கோரினார். ஆனால் அதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. "மதுவிலக்கை புதிதாக அமுல் நடத்தும் மாநிலங்களுக்கே உதவிப்பணம் தரமுடியும்" என்று கூறியது. இதன் காரணமாக, மதுவிலக்கை ரத்து செய்ய கருணாநிதி முடிவு செய்தார்

.
தமிழக அரசின் 1971/72 ம் ஆண்டு வரவு செலவு திட்டத்தை கருணாநிதி தாக்கல் செய்தபோது, 30.8.1971 முதல், தமிழ்நாட்டில் மதுவிலக்கு ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். அவர் பேசுகையில், "மதுவிலக்கை இந்தியா முழுவதும் விரிவாக்க வேண்டும் என்று காந்தியடிகள் விரும்பினார்.


ஆனால் அவருடைய தானைத் தளபதிகளாக விளங்கும் முதல் அமைச்சர்களாலும், மத்திய அரசை நடத்தும் மகாத்மாவின் வாரிசுகளாலும் மதுவிலக்குக் கொள்கை புறக்கணிக்கப்பட்டது வேதனை தரும் செய்தியாகும். கொழுந்து விட்டெரியும் நெருப்பு வளையத்திற்குள், கொளுத்தப்படாத கற்பூரமாக தமிழகம் எத்தனை நாளுக்குத்தான் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும்?" என்றார்.

தமிழ்நாட்டில் முதன் முதலாக மதுவிலக்கை அமுல் நடத்தியவரான ராஜாஜி, முதல் அமைச்சர் கருணாநிதியின் வீட்டுக்குச்சென்று "மது விலக்கை ரத்து செய்ய வேண்டாம்" என்று கேட்டுக் கொண்டார். காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப்பும் இதே கோரிக்கையை வலியுறுத்தினார். "தமிழக அரசின் நிதி நிலை காரணமாகவே மதுவிலக்கு ஒத்திவைக்கப்படுகிறது.
நிலைமை சீரானதும் மீண்டும் மதுவிலக்கு கொண்டுவரப்படும்" என்று கருணாநிதி பதில் அளித்தார். (அதுபோலவே 1973 ல் மீண்டும் மதுவிலக்கு கொண்டு வரப்பட்டது) மதுவிலக்கை ரத்து செய்வதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் தலைவர்கள் அறிக்கைகள் விட்டனர். எனினும் இதில் அரசு உறுதியாக இருந்தது. அறிவிக்கப்பட்டபடி, 30.8.1971 அன்று மதுவிலக்கு ரத்து செய்யப்பட்டது. 

தமிழ்நாடு முழுவதும்7,395 கள்ளுக்கடைகளும், 3,512 சாராயக் கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 

அப்போது கருணாநிதி மதுவிலக்கை ரத்து  செய்தார்..பின்பு அது பரிணாம வளர்ச்சி பெற்று ஜெயலலிதாவின் ஆட்சியில்(2001-2006)அரசே ஏற்று நடத்தும் அளவுக்கு வந்தது...பின்பு ஆட்சிக்கு வந்த கருணாநிதியும்  அரசாங்கத்திற்கு  வருமானத்தை அள்ளி தந்த டாஸ்மாக்குக்கு பாஸ்மார்க் போட்டு அதை  கைவிட தயாராக இல்லை...

அது இன்று வரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது...!மக்கள்"குடி"மக்களாக இருப்பதையே ஆள்பவர்கள் விரும்புகிறார்கள்..!அப்போதுதானே அவர்கள் தவறு செய்துகொண்டே இருக்கலாம்!!

29 அக்டோபர் 2012

நன்றிகெட்ட நான்கு பேரும்,கோபப்பட்ட விஜயகாந்தும்!....



உண்ட வீட்டிற்கு இரண்டகம்  பண்ணுகிற மாதிரி விஜயகாந்தால் M L A ஆக்கப்பட்டவர்கள் இப்போது பணத்திற்காகவோ அல்லது வேற எதற்காகவோ ஜெயலலிதாவுக்கு வாலாட்ட துவங்கி உள்ளனர்....உண்மையில் விஜயகாந்த் இல்லை என்றால் இவர்கள் எல்லாம் நிச்சயம் MLA  ஆகி இருக்க முடியாது..விஜயகாந்திடம்  கருத்து  வேறுபாடு இருந்தால் ஜெயலலிதாவிடம்  தஞ்சம் புகுவது நன்றி கெட்ட செயல் இல்லையா?!(நன்றியுணர்வு இல்லாததால் இவர்கள் நன்றியை பற்றி என்னவென்று கேட்டதற்காக தலைப்பில் "கேட்ட" என்று முதலில் வந்துவிட்டது..ஹி ஹி எப்படி சமாளிப்பு..!)அரசியலில் இதெல்லாம் சகஜம் என்றாலும்  விஜயகாந்தை வைத்துதான் இவர்களுக்கு ஒட்டு விழுந்தது என்பதையும் மறுக்க இயலாது....அப்படி ரோசமுள்ளவர்களாக இருந்தால் MLA  பதவியை ராஜினாமா செய்ய முடியுமா இவர்களால்?!

இப்போது 29 சட்ட மன்ற உறுப்பினர்களை பெற்றுள்ள தே மு திக  வுக்கு இந்த 4 பேரின் இழப்பு நிச்சயம் ஒரு பெரிய சரிவுதான்..மேலும் 8 தே மு தி க சட்ட மன்ற உறுப்பினர்களையும் அதிமுக  தரப்பு வளைக்கப்போவதாக செய்தி பரவி   வருகிறது....அப்படி ஒட்டுமொத்தமாக தூக்கி  கொண்டு வந்து அதிமுகவுக்கு  ஆதரவாக செயல்பட வைப்பார்கள்... ஏனென்றால் ஒரு கட்சி பெற்றுள்ள MLA  க்களின் எண்ணிக்கையில் மூன்றில் ஒரு பங்கு  MLA க்கள் தனியாக செயல்பட்டால்தான் அவர்களால் கட்சி தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிக்க முடியும்..


அப்படி நடந்தால் சட்டசபையில் தே மு தி கவின்  பலம்  திமுக வின் பலத்தை விட குறைந்துவிடும்....விஜயகாந்த் எதிர் கட்சி தலைவர் அந்தஸ்தை இழப்பார்....சட்டசபையில் தன்னை எதிர்த்து பேசிய  விஜயகாந்தை அந்த சட்டசபையிலே அவரது ஆட்களை வைத்து அவரை எதிர்த்து பேச வைக்க போகிறார் ஜெயலலிதா..அதுதான் நடக்க போகிறது....இந்த சதுரங்க விளையாட்டெல்லாம் விஜயகாந்திற்கு புதுசு....

இந்த கோபத்தில் இருக்கும் விஜயகாந்தை நிருபர்களும் விடாமல் துரத்தி  அவரது வாயாலே அவருக்கு ஆப்பு  வைத்துவிட்டனர்....செம கடுப்பில் இருக்கும் விஜயகாந்திடம் போயி கேள்வி மேல் கேள்வி கேட்டு நிருபர்களை நாயே,போடா என திட்ட வைத்து அதை டிவி க்களில் ஒளிபரப்பி ஏற்கனவே  சிவந்து இருந்த அவரது  கண்களை  மேலும் சிவக்க வைத்துவிட்டனர்....


பேட்டி கொடுக்க விருப்பம் இல்லாத விஜயகாந்திடம் நிருபர்கள் வேண்டும் என்றே  துருவி  துருவி கேள்வி கேட்டது  அநாகரிகமானது...அதுதான்  பத்திரிக்கை தர்மமா என தெரியவில்லை...ஆனால் அதற்கு இந்த  மாதிரி ஏக வசனத்தில் கண்டபடி விஜயகாந்த் திட்டியது அதை விட அநாகரிகமானது ..... ஒரு அரசியல் கட்சி தலைவராக அவருக்கு இன்னும் பக்குவம் வரவில்லை  என்பதையே  காட்டுகிறது....கேப்டனின் கோபத்தை பாருங்கள்!சிரியுங்கள்!!



நம்ம கருணாநிதி தாதாவை சாரி தாத்தாவை  எடுத்து கொள்ளுங்கள்..நிருபர்கள் எவ்வளவு குதர்க்கமாக  கேள்வி கேட்டாலும் அவர் அதற்கு மேலே  குதர்க்கமாக  பதில் சொல்வார்...இல்லையெனில் "நோ கமெண்ட்ஸ்"என சொல்லிவிட்டு  சென்று கொண்டே இருப்பார்...அதனால்தான் அவர் இவ்வளவு வருடம்  அரசியல் செய்து கொண்டு இருக்கிறார்..

கற்றுகொள்ளுங்கள் கேப்டன்...இல்லையெனில் உங்கள் கப்பல் விரைவில் மூழ்கி விட வாய்ப்பு உள்ளது..!


27 அக்டோபர் 2012

இந்த பதிவுக்கும் சின்மயி வழக்கு தொடர்வாரா?!



சின்மயி விவகாரம்தான் இந்த வாரம் ஹாட் டாபிக்....இதில் புகார் கொடுத்தவர்ஒரு பெண் என்பதாலும்,அவர் ஒரு பிரபலமான  பாடகி என்பதாலும் இந்த விவகாரம் முக்கிய இடம் பெறுகிறது.....இந்த விவகாரத்தை வைத்தே எல்லா தொலைக்காட்சிகளிலும் விவாதங்கள் என்ற பெயரில் தங்கள் நிகழ்ச்சிக்கு தீனி ஆக்கி கொண்டார்கள்....

சின்மயி தைரியமாக செயல்பட்டார் என குஸ்பு,கவுதம் மேனன் போன்ற சினிமா பிரபலங்கள் திருவாய் மலர்ந்துள்ளார்கள்....சின்மயி குற்றம் சொன்னதை மட்டும் பார்க்கும் இவர்கள் சின்மயி செய்த குற்றத்தையும் எண்ணி பார்த்து கருத்து சொல்லி இருக்க வேண்டாமா?

நமது வலை உலகிலும் இந்த வாரம் முழுவதும் ஒரே சின்மயி புராணம்தான்....தெரிந்தோ தெரியாமலோ சின்மயி ரொம்ப பிரபலமாகி விட்டார்...ஆனால் எனக்கு இந்த வழக்கு சம்பந்தமாக சில சந்தேகங்கள் தோன்றுகின்றன....பதில்கள்?!


தமிழ்நாட்டில் உள்ள காவல் நிலையங்களில் எத்தனையோ பெண்கள் தங்களை பிறர் தொந்தரவு செய்வதாக அளித்த புகார்கள் தூங்கி கொண்டு இருக்கும் நிலையில் இந்த விவகாரத்தில் மட்டும் போலீஸ்  அவசர கதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் என்ன?அதை மீடியாக்கள் இவ்வளவு வெளிச்சம் போட்டு காட்ட வேண்டிய நோக்கம் என்ன?

குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளியாகவே ஆக்கி ஒரு தலை பட்சமாக காவல் துறையும்,மீடியாக்களும் ஏன் நடந்து கொண்டது?
இந்த விவகாரத்தின் ஆரம்பமாக சின்மயி டுவீட்டிய :மீனவர்களும் மீனை கொள்கிறார்கள்"என்ற அடிப்படையிலான கருத்துக்கள் என்னைப்போல நிச்சயம் அனைத்து  தமிழர்களையும் கோபப்பட செய்யும் ஒரு கருத்துதான்..அதற்கு என்ன சொல்ல போகிறார் சின்மயி?

இந்த விவகாரத்தில் முதலில் சம்பந்தப்பட்டவர்களை  விசாரித்துவிட்டு பின் வழக்கு பதிவு செய்து இருக்கலாம்,மீடியாக்களுக்கு சொல்லி இருக்கலாம்... ஆனால் சின்மயி புகார் கொடுக்க வரும்போதே பேட்டி கொடுப்பதற்காகவே மீடியாக்களை அழைத்து வருகிறார்....பிரபலமாக இருந்தால் அவர் சொல்வது எல்லாம் உண்மை ஆகிவிடுமா?அதற்காக நான் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறு செய்யவில்லை என கூறவில்லை...இந்த நாட்டில் காந்தியை சுட்டு கொன்றவனுக்கே  வழக்கு நடத்தி தானே  தீர்ப்பு  அளித்தார்கள்!

முதலில் சின்மயி கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் குற்றம் சாட்டி உள்ளவர்கள் ஏதோ பெண் இனத்துக்கே பெரும் கொடுமைகளை புரிந்தவர்கள் போல சித்தரித்து காட்டப்பட்ட  நிலையில்,இப்போது சின்மயின் மீதான தவறும் வலை உலகில் தோல் உரித்து  காட்டப்பட்டு வருகிறது...அவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும் என கோரிக்கைகள் வலுவடைந்து  வரும் நிலையில் காவல் துறை என்ன செய்ய போகிறது"?

முதலில் கைது  செய்யப்பட்டவர் குற்றவாளி அல்ல ..குற்றம் சாட்டப்பட்டவர்தான்...அவர் தவறு செய்து இருப்பது நிருபனமானால்  நிச்சயம் அவருக்கு தண்டனை கிடைக்க வேண்டும் ....அது போல சின்மயியும்  குற்றம் சாட்டப் பட்டு வரும் நிலையில் அவரும் கைது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படத்தான் வேண்டும்..அதுதான்  நியாயம்...!


25 அக்டோபர் 2012

எம் ஜி ஆர் தான் என்னை சுட்டார்....MR ராதா

எம் ஜி ஆர் சுடப்பட்டதும் தெரியும்,MR  ராதாவுக்கு தண்டனை கிடைத்ததும் தெரியும்....ஆனால் MR ராதா வாக்குமூலத்தையும் தெரிந்துகொள்வோமா!இனி பிளாஷ்பேக் ...........
 இதன் முந்தய பதிவு :http://nkshajamydeen.blogspot.com/2012/10/blog-post_21.html எம்.ஜி.ஆரை சுட்டதாக தொடரப்பட்ட வழக்கில் எம்.ஆர்.ராதா வாக்கு மூலம் கொடுத்தார். "எம். ஜி.ஆர்.தான் என்னை சுட்டார். நான் தற்காப்புக்காக திருப்பி சுட்டேன்" என்று கூறினார்....

அவர் அளித்த வாக்குமூலம் ....

"படம் எடுப்பது பற்றி, வாசு என்னிடம் பேசினார். "எனக்கு படம் எடுக்கும் யோசனை கிடையாது. கோவை பார்ட்டி இருப்பதாக ஒரு புரோக்கர் சொன்னார். நான் வேண்டுமானால் அந்த பார்ட்டியிடம் பேசுகிறேன்" என்றேன். அந்த தேதி எனக்கு ஞாபகம் இல்லை. அதன்பிறகு ஜனவரி 11ந்தேதி சம்பவம் நடந்த நாளுக்கு முன் தினம், வாசு வந்து என்னிடம் கோவை பார்ட்டி பற்றி கேட்டார். 

"வந்தால் சொல்கிறேன்" என்று நான் சொன்னேன். பிறகு 12ந்தேதி வாசு வந்து, "எப்படியாவது முடித்துக் கொடுத்துவிடு. ஒரு வார்த்தை சொல்லு. அப்போதுதான் எம்.ஜி.ஆர். என்னை நம்புவார். இல்லாவிட்டால் நம்பமாட்டார்" என்று கூறினார்....

நானும் வாசுவும் எம் ஜி ஆர் வீட்டிற்கு சென்றோம்....எம்.ஜி.ஆர். வீட்டின் முன் அறையில் உட்கார்ந்தோம். பிறகு நான் நடந்து கொண்டு இருந்தேன். அப்போது வந்த எம்.ஜி.ஆர்., என்னிடம் "என்ன அண்ணே, காமராஜரைக் கொல்ல நான் சதி செய்வதாக முன்னாலே பத்திரிகையில் எழுதி இருக்கீங்க. 

அன்று முதல், என்னையும் சுட்டுவிடுவதாக சொல்லிக்கிட்டு இருக்கீங்க. நான் மட்டும் என்ன? நானும் சுட்டுடுவேன் என்றுதான் சொல்லிக்கிட்டு இருக்கேன்" என்று கூறினார். நான் என்பாட்டுக்கு "வாக்" பண்ணிக்கொண்டு (நடந்து கொண்டு) இருந்தேன். பேப்பரில் உள்ளதைப் பேசுகிறானே விரோதமா என்னை நினைச்சுக்கிட்டு இருக்கிறானே" என்று நினைத்துக்கொண்டேன். 

"ஏதோ அவன் (வாசு) கூப்பிட்டானே என்று வந்தேன். நீயும் சுட்டுடுவேன்னு பயமுறுத்தி அசிங்கமாகப் பேசுகிறாய். இது அசிங்கமாக தெரியலையா?" என்று கூறிக் கொண்டு நடந்தேன். உடனே, எம்.ஜி.ஆர். "சுட்டால் என்ன செய்வீங்க?" என்று கேட்டார். உடனே நான், "மனிதன் உயிர் எப்படியும் போகுது. சுட்டுச் செத்தா என்னடா கெட்டுப் போச்சு" என்று திரும்பினேன். நான் திரும்பும்போது, "படார்" என்று ஒரு சப்தம் கேட்டது. 

தலையில் சுத்தியை வைத்து அடித்ததுபோல இருந்தது. நான் அடிபட்ட இடத்தில கையை பொத்திக்கொண்டு அப்படியே நின்றேன். நான் கையை எடுத்தபோது ஒரே ரத்தமாக இருந்தது. எனக்கு ஒன்றுமே புரியவில்லை. நான் மெல்ல திரும்பிப் பார்த்தேன். எம்.ஜி.ஆர். கையில் துப்பாக்கி இருந்தது. அப்போது எனக்கு கொஞ்சம் உணர்ச்சி வந்தது. "இவன் நம்மை சுட்டுவிட்டான்" என்று எண்ணினேன். 

எப்படியும் நம்மைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியது. உடனே, நான் எம்.ஜி.ஆர். கையைப் பிடித்தேன். அப்போது என் கையில் இருந்த ரத்தம் எம்.ஜி.ஆரின் கையிலும், முகத்திலும் பட்டது. துப்பாக்கியை பிடுங்கினேன் அதன் பிறகு என்னுடைய 2 கைகளையும் சேர்த்துக் கொண்டு, எம்.ஜி.ஆர். கையில் இருந்த துப்பாக்கியை பிடுங்கிச் சுட்டேன். யாரை சுட்டேன் என்று எனக்குத் தெரியாது. 

சூடு அவர் (எம்.ஜி.ஆர்.) மேல் விழுந்து இருக்கலாம். ஆனால் அது எனக்குத் தெரியாது. இதற்கு அப்புறம் எனக்கு ஒன்றும் சரியாக தெரியவில்லை. கொஞ்ச நேரம் கழித்து எவ்வளவு நேரம் என்று சொல்லமுடியாது. இன்னொரு குண்டு என் மீது பாய்ந்தது. ஆனால் யார் சுட்டது என்று சொல்ல இயலாது. இதற்கு அப்புறம் சைதாப்பேட்டை மேம்பாலத்தில் வண்டி போவதுபோல் தெரிந்தது. ஆனால், அது காரா அல்லது கட்டை வண்டியா என்று சரியாகத் தெரியவில்லை. 

சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷன் வரும்போது, "சப்இன்ஸ்பெக்டர் இருந்தால் கூப்பிடச்சொல்லு" என்று சொன்னேன். கார் நிறுத்தப்பட்டது. காருக்குள் யாரோ வந்து என்னைப் பார்த்தார்கள். அப்போது, "எம். ஜி.ஆர். சுட்டுட்டார்" என்று கூறினேன். அப்புறம் என்னால் அதிகம் பேசமுடியவில்லை. உடனே, "அவர் ஆபத்தான நிலையில் இருக்கிறார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு போங்கள்" என்று கூறினார். 

"இதுபற்றி நாங்கள் எழுதிக் கொள்கிறோம். கையெழுத்து போடுங்கள்" என்று 2 பேப்ப ரிலோ, 4 பேப்பரிலோ கையெழுத்து வாங்கினார்கள். நான் எங்கே கையெழுத்து போட்டேன், யாரிடம் போட்டேன் என்று என்னால் சொல்ல முடியவில்லை. ஆஸ்பத்திரியில் என்னிடம் வாக்குமூலம் வாங்கியபோது நடந்ததை சொன்னேன். இவ்வாறு எம்.ஆர்.ராதா கூறினார். ..இதனை தொடர்ந்து எம் ஜி ஆர் வீட்டு வேலை ஆட்கள், எம் ஜி ஆர்,வாசு என பலபேர் சாட்சியம் அளித்தார்கள்...

இந்த வழக்கில் செசன்சு நீதிபதி லட்சுமணன் கடந்த 5.11.67ல் தீர்ப்பு கூறினார். அதில் எம்.ஜி.ஆரை, எம்.ஆர்.ராதா தற்காப்புக்காகவோ அல்லது தவறுதலாகவோ சுடவில்லை. எம்.ஜி.ஆரை தீர்த்துக்கட்டி விட்டு, தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார்.
எனவே, அவரை குற்றவாளி என்று முடிவு செய்கிறேன். எம்.ஜி.ஆரை துப்பாக்கியால் சுட்ட வழக்கில் நடிகர் எம்.ஆர்.ராதாவுக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனை அளித்து தீர்ப்பு கூறுகிறேன்....என தீர்ப்பளித்தார்...

நன்றி: காலச்சுடுகள்...

24 அக்டோபர் 2012

ரஜினி கொடுக்கும் பிரியாணி விருந்து!(நானாக சொல்லும் கதை)



முன்குசும்பு சாரி  முன் குறிப்பு: இந்த படம் சும்மா ஒரு பப்ளிகுட்டிக்காக ..

நான் எப்ப வருவேன் எப்படின்னு வருவேன்னு  சொல்லமாட்டேன்..ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா  வருவேன் ...என்ற சூடான பஞ்ச்  டயலாக்கை பேசிவிட்டு கேரவனுக்குள் வந்து அமர்ந்தார் 33 வயதே ஆன ரஜினிகாந்த்...

 ரஜினிகாந்த் தமிழ்பட உலகின் சூப்பர் ஸ்டார்....சமிபத்தில்தான் தனது கல்யாணத்தை ஆடம்பரமாக பண்ணி முடித்து இருந்தார்....

சார்..உங்களை பேட்டி எடுக்க ஆறு மாசமா ஒரு பத்திரிக்கை காரன்  கேட்டுகிட்டே இருக்கான் சார்...என்றார் ரஜினிகாந்தின் உதவியாளர்....

நாளைக்கு வரசொல்...படம் ரிலிசாக போகுது ..இப்ப பரபரப்பா ஏதாவது பேட்டி கொடுத்தால்தான் ஒரு பப்ளிசிட்டி கிடைக்கும் என்றார்  ரஜினி....

சார் அப்புறம் இன்னொன்னு...திரும்பவும் அவர் உதவியாளர்

என்ன?எரிச்சலுடன் கேட்டார் ரஜினி


உங்க ரசிகர் மன்ற நிர்வாகிகள்  "நீங்க உங்க  கல்யாணத்துக்கு ரசிகர்களுக்காக  பிரியாணி விருந்து போடுவதாக சொல்லி இருந்தீர்கள் அல்லவா !அது பற்றி கேட்பதற்காக  வந்து இருக்கிறார்கள்...என்ன சொல்ல சார்....

ம்ம்ம்... எல்லாத்தையும்  மறந்துவிடாமல்  கேட்பானுக....என் படம் ரிலிசான பிறகு   பிரியாணி விருந்துன்னு சொல்லிடு...அப்பத்தான் வழக்கத்தைவிட  ரொம்ப உற்சாகமா  படத்துக்கு தடபுடலா வரவேற்பு  கொடுப்பானுக ...பிறகு வேற ஏதாவது காரணம் சொல்லி தட்டி கழிக்கலாம் .என சொல்லிவிட்டு அடுத்த ஷாட்டுக்கு எழுந்து போனார் ரஜினி....

வெளியே தங்கள்  தலைவன் சொல்லப்போகும் பதிலுக்காக உச்சி வெயிலில் கால் கடுக்க காத்து  கொண்டு நின்றனர் ரசிகர்கள்  !



22 அக்டோபர் 2012

கலப்பட பாலும், கெஜ்ரிவாலும் (கூட்டுப்பொறியல்)



ஊழலுக்கு எதிராக  பிரதமர்,சோனியா  காந்தி ,அரியானா முதல்மந்திரி  என சகட்டுமேனிக்கு   எல்லார் வீடுகளின் முன்பும் போராட்டம் நடத்தும் கெஜ்ரிவாலின்  கண்களுக்கு ஏன் தமிழ்நாடும் ,தமிழ்நாட்டு அரசியல்வாதிகளும் தெரியவில்லை?ஊழல் புகழ் உத்தமர் ஆ.ராசா,கருணாநிதி அண்ட் கோ ,ஜெயலலிதா  அண்ட் கோ போன்ற   மக்களுக்காக உழைத்து தங்களுக்காக சொத்து சேர்த்த தமிழக பிரபலங்களின் வீடுகளின் முன்பும் போராட்டம் நடத்த சீக்கிரம் வாங்க கெஜ்ரிவால்  சார்....!

.......................................... ................................................... .....................................


ஒருவழியாக மதுரை ஆதனத்தை பிடித்து இருந்த அசிங்கம் நீங்கிவிட்டது.....மதுரை ஆதின மடத்தின் பெருமையை  நிலைநாட்டவே நித்யானந்தாவை இளைய ஆதின பொறுப்பிலிருந்து நீக்கியதாக பொறுப்பாக கூறியுள்ளார் அருணகிரிநாதர்....அப்ப நித்யானந்தா பொறுப்பில் இருந்த இந்த 6 மாத காலமும் ஆதின மடத்தின் பெருமையை வேறு  எங்கோ  குத்தகைக்கு விட்டு இருந்தார் போல...!

................................................ ......................................... ..........................................

முன்னாள் பிரதமர் வாஜ்பாய், மற்றும் அத்வானி உறவினர்கள் மீதும் நிறைய முறைகேடு புகார்கள் வந்தன.அவற்றிற்கான ஆதாரங்கள்  இருந்த போதும் நாங்கள் பெரிது படுத்தவில்லை என திருவாய் மலர்ந்துள்ளார் திக் விஜய் சிங் ..அதாவது மறைமுகமாக நாங்கள் உங்களை கண்டு கொள்ளவில்லை,நீங்களும் எங்களை  கண்டு கொள்ளாதீர்கள்  என பேரம் பேசுகிறார்.....என்ன ஒரு மொள்ளமாரித்தனம்....!ஆதாரம்  இருக்கு ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை என சொன்னதற்காகவே இவரை உள்ளே தூக்கி  போடலாம்...

ஏன்யா மானம் கெட்ட  அரசியல்வாதிகளே....நீங்கள் மாறி மாறி கொள்ளை அடிப்பீர்கள்...அதை யாரும் கேட்க கூடாது..கேட்டால் நாங்கள் மட்டுமல்ல..எங்களுக்கு முன்னாடி இருந்தவர்களும் அப்படித்தான் என நா கூசாமல் சமாளிப்பு வேறு...உங்கள் எல்லாரையும் ஒட்டு மொத்தமாக நாடு கடத்தினால்தான் இந்தியா வல்லரசு அல்ல ஒரு நல்லரசாவது ஆகும்..!

............................. .................................................. ...........................................................


பொதுமக்கள் பயன்படுத்தம் பாலில்  68 சதவீதம் கலப்படம் இருப்பதாக மத்திய  அரசே சுப்ரீம் கோர்ட்டில் கூறி உள்ளது...!பாலில் தண்ணீரோடு குளுக்கோசும் கலக்கப்படுகிறதாம்!

 மேலும் பாலில் உள்ள அழுக்கை நீக்குவதற்காக டிடர்ஜென்ட் பவுடரை பயன்படுத்துவதாக  கூறி அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது   நீதிமன்றத்தில் அறிக்கை   தாக்கல் செய்துள்ள அரசு...நாம் எல்லாம் பால் என்று நினைத்து கொண்டு பாதி விஷத்தை அருந்தி கொண்டு இருக்கிறோம்....இனி எதை நம்பி வாங்குவது?கலப்படத்தை மட்டும்  துல்லியமாக  கூறும் அரசு அதை ஏன் கட்டுபடுத்த தவறிவிட்டது? ...அப்படின்னா  இனி மக்கள் ஆரோக்கியமாக  வாழ தகுதி அற்ற  நாடாக  அறிவிக்க வேண்டியது மட்டும்தான் அரசோட வேலை   போல!



....................................  ........................பொறியல் ........ ......................................................

சேது சமுத்திர திட்டத்தை   எம் ஜி ஆரே விரும்பினார் :கருணாநிதி #

அந்த எம் ஜி ஆரையே  இப்ப அந்த அம்மா யாருன்னு கேட்பாங்க பாஸ்!

................................... ............................................ ...............................................................

எங்கள் தலைமையில் தமிழகத்தில் ஏற்கனவே 3-வது அணி உள்ளது: டாக்டர் ராமதாஸ் #

பட் அதில் பாமக மட்டுமே உள்ள்ளது! கோ க மணி....#

................................................. ............................................................ ..............................................................................

அடுத்த  3 ஆண்டுகளில் 3000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி :ஜெயலலிதா #

அம்மாவுக்கு இப்ப பசி எடுத்தால்  3 நாள் கழித்துதான் சாப்பிடுவார் போல!

................................... .......................................................... ..........................................................................


21 அக்டோபர் 2012

ஏன் சுடப்பட்டார் எம்.ஜி.ஆர் ?!



MGR  MRராதாவால்  சுடப்பட்டார்  என்பது நாம் அறிந்த விசயமாகவே இருந்தாலும்,அதற்கான காரணம் என்ன என்று பலரும் அறிந்து இருக்க வாய்ப்பில்லை....நான் படித்த அந்த வரலாற்று தகவல்களை  பகிர்ந்து கொள்கிறேன்....


இனி பிளாஷ்பேக் .....


1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம், தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர். அப்போது புகழேணியின் உச்சியில் இருந்தார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார்.




எம்.ஜி. ஆரும், எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்த 'பெற்றால்தான் பிள்ளையா' படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. எம்.ஜி.ஆரின் தோட்டம், ராமாவரத்தில் உள்ளது. சென்னை பரங்கி மலையில் இருந்து 1 மைல் தூரத்தில் இந்த தோட்டம் உள்ளது.



1967 ஜனவரி 12-ந்தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு, எம்.ஆர். ராதா போனார். அவருடன், 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரித்த முத்துக் குமரன் பிக்சர்ஸ் அதிபர் வாசுவும் சென்றார். 'பெற்றால்தான் பிள்ளையா' படத்தை தயாரிப்பதற்கு, எம். ஆர்.ராதா ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்ததாகக் கூறப்பட்டது.



படம் வெளியான பிறகு, அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக, எம்.ஜி.ஆர். உறுதி கூறியிருந்தார் என்றும், அதன் படி பணம் வராததால், வாசுவையும் அழைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர். வீட்டுக்கு ராதா சென்றதாகவும் சொல்லப்பட்டது.



எம்.ஜி.ஆரை ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். முன்பு ஒப்புக் கொண்டது போல், தனக்கு ஒரு லட்சத்தை தரவேண்டும் என்று எம்.ஆர். ராதா கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.



உன்னால் எனக்கு நிறைய நஷ்டம். பல படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள் என்று ராதா ஆத்திரத்தோடு கூறினார். இதனால் தகராறு முற்றியது. எம்.ஆர்.ராதா கோபத்தோடு வெளியே செல்வதுபோல எழுந்தார். பிறகு, 'சட்'டென்று மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார்.



எம்.ஜி.ஆர். கீழே குனிந்தார். குண்டு, அவர் இடதுபுற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் திகைப்படைந்த படத் தயாரிப்பாளர் வாசு, பாய்ந்து சென்று எம்.ஆர்.ராதாவை பிடித்தார். மேற்கொண்டு சுடாதபடி தடுத்தார்.



உடனே ராதா, துப்பாக்கியை தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது. இதற்குள் எம்.ஜி.ஆர். வீட்டு ஆட்கள் ஓடிவந்து ராதாவை பிடித்துக்கொண்டனர். துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார்கள்.



எம்.ஜி.ஆரை ஒரு காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். எம்.ஆர்.ராதா, இன்னொரு காரில் ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.



எம்.ஆர்.ராதாவின் தலையில் குண்டு இருந்தது. மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக, அவர்கள் இருவரும் பெரிய (ஜெனரல்) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். இருவருக்கும் தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது.



எம்.ஜி.ஆருக்கு இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 2.45 வரை ஆபரேஷன் நடந்தது. காது அருகே பாய்ந்து இருந்த சிறிய இரும்புத்துண்டை (குண்டின் ஒரு பகுதி) வெளியே எடுக்கமுடியவில்லை. அதை எடுக்க, ஆபரேஷன் செய்யச் செய்ய ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, அதை உள்ளேயே வைத்து தையல் போட்டுவிட்டார்கள்.



இதனால் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். உணர்வு இல்லாமல் இருந்தார். குண்டு பாய்ந்த இடத்தை டாக்டர்கள் பலமுறை 'எக்ஸ்ரே' எடுத்தனர். காயம்பட்ட இடத்தில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.



எம்.ஆர்.ராதாவுக்கு இரவு 11 மணி வரை ஆபரேஷன் நடந்தது. அவர் தலையில் இருந்து ஒரு குண்டும், கழுத்தில் இருந்து ஒரு குண்டும் அகற்றப்பட்டன. நடிகர் எம். ஆர்.ராதா கைது செய்யப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் அறிவித்தார். எம்.ஜி.ஆரை கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.



தி.மு.கழகத் தலைவர் அண்ணா, மு.கருணாநிதி, என்.வி.நடராசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்தனர். படுகாயத்துடன் படுக்கையில் படுத்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து, அண்ணாவும், மற்ற இரு தலைவர்களும் கண் கலங்கினர். பிறகு அண்ணாவும், மற்றவர்களும் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று, அங்கு நடந்ததை விசாரித்தனர்.



எம்.ஜி.ஆர். சுடப்பட்ட செய்தி, காட்டுத்தீபோல் பரவியது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.



ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வரும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் படங்கள், தி.மு.க. பிரசார சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன. தேர்தல் பிரசாரத்துக்கு போகாமல், ஆஸ்பத்திரியில் இருந்தபடி பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா முதலமைச்சர் ஆனார்.



எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆர். மார்ச் 10-ந்தேதி வீடு திரும்பினார். எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், எம்.ஆர்.ராதா மீது வழக்கு தொடரப்பட்டது. சைதாப்பேட்டை சப் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.......... 


 நன்றி : காலச்சுவடுகள் .....  


MR  ராதா வாக்குமூலம்  ,தண்டனை விபரங்கள் அடுத்தடுத்த  பதிவுகளில்...  

19 அக்டோபர் 2012

சீமான் என்ன பெரிய அப்பாடக்கர் தலைவரா?


 இது  என்னுடைய  300 வது பதிவு...என் பதிவுகளை படித்து ஊக்கம்கொடுத்த  பதிவுலக நண்பர்களுக்கு நன்றிகள்...

சீமான்னு ஒருத்தர் என்னமோ உலக தமிழர்களுக்கு எல்லாம் இவர்தான் விடிவெள்ளி போல நினைத்துகொண்டு வாயில் வந்ததை எல்லாம் பேசி கொண்டு திரிகிறார்....2021 ல் அன்பான  சர்வாதிகார ஆட்சியை  தமிழகத்தில் கொடுப்பாராம்...ஐ நா சபையில் அரை மணி நேரம் பேசினால்  தனி ஈழம் வாங்கி விடுவாராம்....ஏன்யா 30 வருட ஆயுத  போராட்டம் செய்யாததை  30
 நிமிடத்தில் செய்யும் அளவுக்கு பெரிய அப்பாடக்கர் தலைவரா நீங்கள்?

பெரியாரை திட்டுகிறார், அண்ணாவை திட்டுகிறார்,கருணாநிதியை திட்டுகிறார்,வை கோ வை திட்டுகிறார்,.....திட்டி கொண்டே போகிறார்......அவர்தான் தமிழகத்தின்  உத்தம  புத்திரன் என நினைப்பு....சீமான் மீதும் ஒரு நடிகை புகார் சொன்னாரே !அது என்ன ஆயிற்று?அந்த சமயத்தில் ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்து அந்த புகாரை ஒன்றும் இல்லாமல் செய்தவர்தான் இந்த சீமான்...

பிரபாகரன் இல்லாத  வெற்றிடத்தை  ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக  பேசி மட்டுமே அடைய நினைக்கிறார்..... இலங்கை மக்கள் இங்கு சுற்றுலா வந்தால் அடித்து விரட்டுவேன்  என்கிறார்...யோவ்  நீ அடித்தால் அங்கே இருக்கும் தமிழனை மீண்டும் சீண்ட மாட்டார்களா  சிங்களவர்கள்?இங்கே இருக்கிற  இலங்கை அகதிகளுக்கு  என்ன செய்து இருக்கிறார் இவர்?


இப்போது  யாரை திட்டலாம் என எண்ணி கொண்டு  இருந்தவருக்கு மாட்டி இருக்கிறார் இளையராஜா ....அவரை பற்றி 
இத்தனை காலமும் வெளிநாடுகளுக்கு சென்று கச்சேரி நடத்தாத இசையமைப்பாளர் இளையராஜா இப்போது தமிழனின் விடுதலை நெருப்பை நீர்த்துப் போகச் செய்ய நடத்தப்படும் இசை நிகழ்ச்சிகு நவம்பர் 3 கனடா செல்கிறார்.
தமிழ் சொந்தங்கள் செத்து விழுந்த போது உணவுக்கோ, மருந்துக்கோ, துணிக்கோ இந்த இளையராஜா கச்சேரி நடத்தி உதவி செய்ய முன்வரவில்லை. ஆனால் இப்போது போவது வருத்தம் அளிக்கிறது,"


என பேசி இருக்கிறார்....நான் கேட்கிறேன்  அதே தமிழ்  சொந்தங்கள்  அங்கே  விழுந்தபோது  நீங்கள் நரம்பு புடைக்க பேசி கொண்டு  மட்டுமே இருந்தீர்கள்...நீங்கள் போயி அந்த உதவியை செய்தீர்களா?இல்லை இப்போது பாதிக்க மக்களுக்கு ஏதேனும் உதவி செய்து உள்ளீர்களா?எனக்கு தெரியவில்லை..அப்படியே செய்து இருந்தாலும்  மற்றவர்கள்  செய்யாதது  ஏன் என்று கேட்க உங்களுக்கு  எந்த உரிமையும் இல்லை...

அப்படியானால்  எவனும் எந்த படத்திலும் நடிக்க கூடாது,இயக்க கூடாது சினிமா உலகமே  இயங்க கூடாது உங்கள் கூற்றுப்படி!

இத்தனை கால  ஈழ தமிழர்களின்  விடுதலை நெருப்பை ஒரு இளையராஜா  இசை நிகழ்ச்சி நீர்த்து போக செய்துவிடும் என நினைக்கும் உங்கள் அறிவின்மையை என்னவென்று சொல்வது?

ஈழ தமிழர்களின் விடுதலை நெருப்பை  ஒரு இசை நிகழ்ச்சி நீர்த்துபோக செய்துவிடும் என்று சொல்லி ஈழ தமிழர்களின் போராடும் குணத்தை நீங்கள் கொச்சை  படுத்துகிறீர்கள் ...

இது  மாதிரியான உங்களின் பேச்சுக்கள்  ஈழ தமிழர்களை வைத்து விளம்பரம்  தேடும் மலிவான உங்களின் புத்தியையே  வெளிக்காட்டுகிறது என்று சொன்னால் அது மிகையல்ல....



18 அக்டோபர் 2012

லஞ்சம் கேட்ட கருணாநிதியும், கொடுக்க மறுத்த விஜயகாந்தும் (நானாக சொல்லும் கதை)

முன்குறிப்பு  : இந்த படத்துக்கும் இந்த சிறு  கதைக்கும் எந்த சம்பந்தமும்  இல்லை ....இது சும்மாச்சுக்கும்  மக்களை மகிழ்விப்பதற்காக

அதெல்லாம் முடியாது...நான் என்ன ரொம்பவா கேட்கிறேன்....எல்லா இடத்துலயும்  நடக்கிறதுதானே....கடைசியா  சொல்றேன்  நான் கேட்ட 20000 ரூபாயை  கொடுத்தால்  உன்மகனை காலியாக  உள்ள சூப்பர்வைசர் வேலைக்கு   சேர்த்து கொள்ள சொல்லி  முதலாளியிடம் சொல்வேன்...இல்லையென்றால் யார் பணம் கொடுக்கிறார்களோ  அவர்களுக்குதான்  வேலை கறாராக சொல்லிவிட்டு வீட்டுக்கு கிளம்பினார் கருணாநிதி....

அந்த  நவீன அரிசி ஆலையில் கருணாநிதி வைத்ததுதான் சட்டம்....நீண்ட காலமாக  கணக்குபிள்ளையாக  இருக்கும் கருணாநிதி சொல்வதைத்தான் கேட்பார் அந்த மில் முதலாளி  ....எந்த வேலை காலியாக இருந்தாலும்  கருணாநிதி லஞ்சம் வாங்காமல்  யாரையும் வேலைக்கு சேர்த்து  கொள்ள  சிபாரிசு செய்யமாட்டார்....

வீட்டிற்குமுன்  புதிதாக வாங்கிய  பைக்கை  நிறுத்தினார்.. அது  ஸ்டாண்ட்  சரியாக போடாததால்  கீழே விழுந்துவிட்டது....கண்ணாடி காலி...லஞ்ச பணத்தில்  வாங்கிய பைக்குதானே என அலட்சியமாக  வீட்டிற்குள் நுழைந்தார்....உள்ளே  மகன் விஜயகாந்த்  கோபமாக  சத்தம்  போட்டு கொண்டு இருந்தது காதில் கேட்டது..அப்படியே ஒளிந்துநின்று தன்  மகனும், மனைவியும்  பேசுவதை கேட்கலானார்....

....500000லட்ச ரூபாய் லஞ்சம் கொடுத்தால்தான்  எனக்கு அந்த வேலை கிடைக்கும் என்றால்  அந்த வேலை எனக்கு வேண்டாம்மா ....500000 லட்சம் அல்ல 500 ரூபாய் கூட லஞ்சம் கொடுக்க நான் தயாரில்லை....லஞ்சம் கொடுப்பதும், லஞ்சம் வாங்குவதும் என்னை பொறுத்தவரை மலத்தை தின்று  உயிர் வாழ்வது போன்றுதான்....அதற்கு நான் தயாரில்லை....


கருணாநிதி தனது மொபைலை  எடுத்தார் கோபால  சாமிக்கு  போன்  போட்டு உன் மகனுக்கு வேலை உண்டு என சொல்வதற்காக!

இதுதான் எனது முதல் சிறு கதை.....நல்லா இருக்குன்னு  நீங்க சொன்னா தொடருவேன்....!

அப்புறம் இந்த கதையில் வரும் பெயர்களும்,கதாபாத்திரங்களும்  கற்பனையே..ஹி ஹி ....

17 அக்டோபர் 2012

நித்யானந்தா நடத்தை சரி இல்லாதவர்....ஜெயலலிதா



நித்யானந்தா எந்த ஒரு அமைப்புக்கும் தலைவராகும் தகுதி இல்லாதவர்  என நெத்தியடியாக கூறி சர்ச்சைகளுக்கு முற்று புள்ளி வைத்துள்ளது தமிழக  அரசு....


ஆன்மிகம் என்ற போர்வையில்  காம களியாட்டங்களை  அரங்கேற்றிவந்த நித்யானந்தாவின்  முகமூடி  கிழிந்த  பின்பு மதுரை ஆதினம் என்ற வேறு ஒரு முகமூடியை மிரட்டியோ உருட்டியோ தனதாக்கிகொண்டார்....

அதை எதிர்த்து மதுரையில் பல்வேறு அமைப்புகள்  பல போராட்டங்களை நடத்தின...ஆனால் தமிழக  அரசு இது சம்பந்தமாக  வாயே திறக்கவில்லை....நித்யானந்தாவும் தமிழக அரசு தன்னை ஒன்றும் செய்யாது  என்று மலை  போல நம்பி வந்தார்...

ஆனால்  ரொம்ப லேட்டாகவே   இருந்தாலும் ஹாட்டாகவே முடிவெடுத்து  நித்தியை மொத்தி  உள்ளார் ஜெ 

மதுரை ஆதீனத்தின் இளைய வாரிசாக நித்தியானந்தாவை நியமிக்கும் முடிவை எதிர்த்து மதுரை மீனாட்சி பிள்ளைகள் அமைப்பு சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.இந்த வழக்கில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் "மதுரை ஆதீனத்தின் வாரிசாக இருக்க நித்திக்கு தகுதி இல்லை. ஆதீனம் இறந்த பிறகே வாரிசை நியமிக்க முடியும். ஆதீனத்தின் பக்தர் ஒருவரே வாரிசாக இருக்க தகுதி உள்ளவர். ஏராளமான வழக்குகளைக் கொண்டுள்ள நித்தியானந்தா நடத்தை சரி இல்லாதவர். எந்த அமைப்புக்கும் தலைவராகும் தகுதி நித்தியானந்தாவிற்கு இல்லை. மத அமைப்பு ஒன்றுக்கு தலைவராக இருக்க நித்தியானந்தா துளியும் தகுதி இல்லாதவர்"அவர் மதுரை ஆதீனத்தின் இளைய மடாதிபதியாக நியமிக்கப்பட்டது சட்டவிரோதமானது, என பதில்அளித்துள்ளார்.....மேலும் மதுரை ஆதினம் அருணகிரிநாதரை அப்பதவியில் இருந்து நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்து உள்ளார்....அரசு வழக்கறிஞர் சொன்னால் அது அரசே  சொன்ன மாதிரிதானே.....அரசு என்றால் அது ஜெயலலிதா தானே!!

பச்சை புள்ள மாறி  சிரித்துகொண்டே பெண்களை சீரழித்த நித்யானந்தாவுக்கு  நிச்சயம்  இது பேரிடியாக இருக்கும்.....கர்நாடகாவில் இருந்து அடித்து துரத்தி விட்ட பிறகு மதுரை ஆதினம் அருணகிரிநாதருக்குஏதோ சொக்குபொடி போட்டு  தன்வசப்படுத்தி  மதுரை இளைய ஆதினமாக  முடி சூட்டிகொண்டார்....

பாவம் அவர் உண்டு அவர் வேலை உண்டு என திரிந்தார் அருணகிரிநாதர்....அந்த காமுகனால் இந்த சிக்ஸ் பேக்  சிங்கத்துக்கும் இப்ப ஆபத்து!


பல்வேறு எதிர்ப்புகள்  வந்தபோதும்  ஆன்மீகத்தில் அதிக நம்பிக்கையுள்ள ஜெயலலிதா தன்னை ஒன்றும் செய்யமாட்டார் என அதித நம்பிக்கையுடன் வலம்வந்த நித்யானந்தா  இப்ப எங்கே ஓடி ஒழிய போகிறார்?


இனியாவது இந்த காமுகனை நம்பும் அவரது பக்தர்கள் உண்மையை உணர்ந்து  மாற வேண்டும்...ஆனால் அது மட்டும் நடக்கவே மாட்டேங்குது.பொதுமக்களின் பலவீனமான அந்த நம்பிக்கையே  இந்த கயவனின் பலம்....!


கர்நாடகா காலை வாரி விட்டது...தமிழ்நாடு  தலையில் அடித்துவிட்டது ...ஓடு ராசா ஓடு....


தூக்கி  உள்ளே வைங்கப்பா  அந்த காமுகனை!

16 அக்டோபர் 2012

ஜெ வுக்கு பாராட்டுவிழா எடுக்கும் விஜயகாந்தும்,தியாகியான திமுக மாஜிக்களும்(கூட்டுப்பொறியல்


                                                           கூட்டு
                                      ........................ ..................... ..............


ஜெயலலிதாவுக்கு பாராட்டுவிழா ..அதுவும் விஜயகாந்த் நடத்த போகிறார்.....

எப்ப ஏன் என்று கேட்க கூடாது........பாவம் அவர்தான் என்ன பண்ணுவார் .......புது படங்களில் எதுவும் நடிக்காததால் பொதுக்கூட்ட மேடைகளை  சினிமா சூட்டிங்காக  நினைத்து கொண்டு  பேசி வருகிறார்....

அதாவது ஜெயலலிதா   அவர்கள் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்து  மீண்டும் ஜெயித்து!முதல்வரானால்!!நம்ம கேப்டனே  பாராட்டுவிழா எடுப்பதாக  பேசி இருக்கிறார்....வர வர  இவரின் காமெடி தாங்க முடியவில்லை....ஏன்யா ஏதோ படத்துல வில்லன  பார்த்து பேசுவதுபோல வசனம் பேசிகிட்டு திரியுறாரு  இவரு ?

பேசாம  நம்ம கேப்டனை  டெல்லி அரசியலுக்கு  அனுப்பி  தினம் தினம் ஏதாவது பிரச்சினைகளில் சிக்கி   டென்சன்ல  உள்ள பிரதமர்,சோனியா போன்றவர்களை சிரிக்க வைக்கலாம்.....

.............................. .......................................... ......................................

அட தமிழ்நாடு காவல்துறைக்கு  என்ன ஆச்சு?வரிசையாக திமுக  மாஜி மந்திரிகள் மீது  போடப்பட்ட குண்டர் சட்டங்கள்  எல்லாம் தள்ளுபடி ஆகும் அளவுக்கா  விழிப்புடன் ! இருக்கிறார்கள்.....இப்ப கூட வீரபாண்டி ஆறுமுகத்தின்  மீது ஒழுங்காக வழக்குகளை பதியாமல் அரைகுறையாக  பதிந்து அவர் குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வருவதற்கு  காவல் துறையே  காரணமாகி விட்டது....காவல்துறை ஆளும்கட்சியின்  ஏவல் துறை என்று கருணாநிதி சொல்வார்....ஆனால்  உண்மையில் ஆளும்கட்சி,ஆண்ட கட்சி இரண்டுக்குமே தாங்கள் ஏவல்துறை தான் என்பதுபோல இருக்கிறது அவர்களின் நடவடிக்கைகள்...


காவல்துறையின்  இம்மாதிரியான  அஜாக்கிரதையால் வீரபாண்டி ஆறுமுகம், பொட்டு  சுரேஷ்  போன்றவர்கள் ஏதோ குற்றங்களே  செய்யாத உத்தமர்களை போல  வலம் வருகிறார்கள்..அதிலும் வீரபாண்டி ஆறுமுகம் ஏதோ சுதந்திரத்துக்காக  போராடி சிறையில் இருந்து வருவதுபோல  தடபுடலான வரவேற்புகள்....!என்ன கொடும சார் இதெல்லாம்?இப்ப கைது செய்து இருக்கிற பொன்முடி  மீதும் ஒழுங்காக  வழக்கு பதியாம  அவரையும் தியாகி போல வெளியே வரவைத்து விடுவார்களோ?

கால்பந்து விளையாட்டில் சேம்சைடு  கோல்  அடித்து தோற்பார்களே  அது போல போலிசும் இவர்கள் விசயத்தில்  சேம்சைடு  கோல்  அடித்தே விளையாடி வருகிறது....ஜெயலலிதா  எப்போது ரெட் கார்டு  கொடுக்க போகிறார்?

........................................ ................................... .........................................

டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்ற அதி முக்கியத்துவம்  வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம்  கோர்ட்  வழங்கி உள்ளது....அதற்கு அவர்கள் கூறி உள்ள காரணம் "மதுபானம் அருந்துவதால்  ஏராளமானோர் இறப்பதாக மனுதாரர்  கூறி இருக்கிறார்...அதை விட தினமும் சாலைகளில்  நடக்கும் விபத்துகளில் ஏராளமானோர் இறக்கின்றனர்....அவர்கள் மீது மனுதாரர் கவனம்  செலுத்த  வேண்டும்"என சொல்லி வழக்கை  தள்ளுபடி செய்துள்ளனர்...

இதுவல்லவா நாட்டு மக்களின் மீது உள்ள அக்கறை!டாஸ்மாக்குக்கு "பாஸ்மார்க்"போட்ட இந்த நீதிபதிகள் அல்லவா சிறந்த "குடி"மகன்கள்!!

                             .................... ........................... .....................



.............................................. ..........பொறியல் ............................ ..........................................

கூடங்குளம்  அணு உலை பாதுகாப்பானது : ரஷ்யா #

ஆனால் அது ரஷ்யாவில் இல்லையே !தமிழ்நாட்டில் அல்லவா இருக்கு..!


................................. ................................. ...................................


தமிழகத்தில் காங்கிரஸ்  ஆட்சியை பிடிக்க முடியாது: மணிசங்கர் அய்யர் #

இவரை போன்ற உண்மையை பேசும்  காங்கிரஸ் ஆளுக போதும்....அக்கட்சி தானாகவே அழிந்துவிடும்....!

....................................... ......................................... ...............................................


ஜாதி கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி : டாக்டர் ராமதாஸ் #

ஜாதிகள் இல்லையடி பாப்பா : பாரதியார் #இவரை தெரியுமா  மருத்துவரய்யா ?

....................................... ............................................... ...............................................

மக்களுக்காக 18 மணி நேரம் உழைக்கும்  ஒரே முதல்வர்  அம்மாதான்: அமைச்சர் வளர்மதி#

மீதம் உள்ள 6 மணி நேரத்தையும்  குறைத்து சொன்ன அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம்#மற்ற அமைச்சர் பெருமக்கள் !!!

............................................. ......................................... ..............................................

அடுத்த பிரதமர் ஆகும் தகுதி "அம்மாவுக்கு:இருக்கிறது:ஒ .பன்னீர் செல்வம் #

அப்படின்னா அமெரிக்க ஜனாதிபதியாக எப்ப வருவாங்க பாஸ்!!?

15 அக்டோபர் 2012

உங்கள் பதிவுகள் ஹிட்ஸ் அடிக்க வேண்டுமா?


 முன்குறிப்பு: இது எந்த பதிவரையும் தாக்கியோ,நோக்கியோ  எழுதப்பட்ட  பதிவு அல்ல ........

பதிவு ஹிட் அடிக்கனும்னு  எல்லாருக்கும் ஆசை இருக்கும்.....ஆனால்  எல்லா பதிவும் ஹிட் அடிக்கணும் என்ற  பேராசை இருந்தால்  அது நடப்பது கஷ்டம்தான்....

நமது பதிவுக்கு வாசகர்களை வரவழைப்பதில் முதலிடம் பதிவின் தலைப்புக்குத்தான்....தலைப்பை வைத்து வருவோரின்  எண்ணிக்கைதான் அதிகம்....


ஓகே....இப்ப தலைப்பு எப்படி வைப்பது?(ஆமா இவரு பெரிய அவரு அப்பிடின்னுல்லாம்  யாரும் நினைக்க வேண்டாம்....ஏனா நானும் உங்க கேஸ்தான்..ஹி ஹி..இப்படி தலைப்பு வைத்து எப்படி உங்களை வர வச்சேன் பார்த்தீர்களா !?)

தலைப்பு வைப்பதில் இரண்டு வகை உண்டு.....முதலில்  பதிவை எழுதிவிட்டு  தலைப்பை வைப்பது.....அதாவது குழந்தை பிறந்தவுடன்  பேரை தேடி  வைப்பது போல....இரண்டாவது  தலைப்பை வைத்துவிட்டு  பதிவை எழுதுவது....அதாவது குழந்தை பிறக்கும் முன்னரே பேரை தேர்வு செய்து வைத்து இருப்பது போல....


பதிவை எழுதிவிட்டு தலைப்பைவைப்பதில்  நன்மையும் உண்டு.....ஆனால் அந்த பதிவில் என்ன எழுதி இருக்கிறோமோ அதற்கு ஏற்றது போல  தலைப்பு இருக்க வேண்டும்...அதை விட்டு விட்டு  எழுதிய பதிவு ஒரு பக்கம் இருக்க பதிவுக்கு சம்பந்தமே இல்லாமல் தலைப்பு வைப்பது ஆண் குழந்தைக்கு  பெண் குழந்தையின்  பெயரை வைப்பதுபோல!

 அதாவது அரசியல் பதிவை எழுதிவிட்டு அதற்கு பவர் ஸ்டாரின் பெயரையும் சேர்த்து வைப்பது !பெரும்பாலும் இதுதான் நடந்து கொண்டு இருக்கிறது....(சில நேரங்களில்  நானும்தான்..ஹி ஹி)..இது உடனடி பலன் கொடுக்கும் ஒன்றுதான்..ஆனால்  போக போக இவனுக்கு இதுதான் வேலை...தலைப்பு மட்டும்தான் சூடாக இருக்கும்,பதிவு ஆறி போன ஒன்றுதான் என நினைத்து வரமாட்டார்கள் அதிபுத்திசாலி  வாசகர்கள்!..சோ இழப்பு நமக்குத்தான் ...


அடுத்ததாக  தலைப்பை  வைத்துவிட்டு பதிவை எழுதுவது.....அதாவது  விஜயகாந்த்  கருணாநிதி சந்திப்பு என  தலைப்பு வைத்துவிட்டு அவர்கள் சந்தித்த பழைய புகைப்படத்தையும்  செய்தியையும் போட்டு பதிவு எழுதுவது.....இதுவும் உடனடி பலன்  கொடுக்க கூடிய ஒன்றுதான்....தலைப்பை பார்த்துவிட்டு ஓடி வருவார்கள்...இதே மாதிரி தொடர்ந்து எழுதினால்  தலைப்பு மட்டும்தான் புதுசு..மேட்டர் பழசு...சரக்கு இல்லை என நினைத்து  நம் பதிவுகள் பக்கம் தலை வைத்து கூட படுக்க மாட்டார்கள்....


என்னடா இவன் சொல்ல வரான்னு  கடுப்புல பார்க்கும் நண்பர்களுக்கு....நாம் என்ன ஏழுத போகின்றமோ அல்லது எழுதி இருக்கோமோ  அதற்கேற்ற  தலைப்பை வைப்பது நல்லது என எனக்கு தோணுது...அது நமக்கு ஒரு ஸ்டாண்டர்ட்  பதிவர் எனும் பெயரை பெற்று தரும்...பிரபல பதிவர்கள் எல்லாம் அப்பிடி வந்தவர்கள்தான்.....இவன் என்னடா நமக்கு சொல்லுமளவுக்கு  பெரிய அப்பாடக்கர்  பதிவரா என யாரும்  கோப பட வேண்டாம் மக்களே....இது  அட்வைஸ்  சொல்றது அல்ல..அன்புல  சொல்றது....(ஹி ஹி அஜித்  ஸ்டைலில்  படிக்கவும்!)

ஓகே....பதிவுக்கேற்ற  தலைப்பு வைப்போம்....பல பல  ஹிட்ஸ் அடிப்போம்....

அப்பாடா இன்னைக்கு ஒரு பதிவு தேத்தியாச்சு !!




13 அக்டோபர் 2012

மாற்றான்- தோற்றான்



சூர்யாவுக்கு  தொட்டதெல்லாம்  பொன்னான  காலம் போயி இப்ப  தொட்டதெல்லாம் புண்ணாகி இருக்கிறது....

பொதுவாக ஒரு படம் வெற்றி படமாக கொடுத்தவர்கள் மீண்டும் இணையும்போது அவர்களின்  அடுத்த படம் தோல்வியில்தான் முடியும் என்பது சினிமாவின் கட்டாயம் போல ....அந்த வரிசையில் இந்த மாற்றானும்  சேர்ந்து இருக்கிறது....


கதைன்னு பார்த்தால் தவறு செய்தவன் தந்தையே ஆனாலும் அவனை ஹீரோ வெளி உலகிற்கு காட்டி கொடுத்து தண்டனை கொடுக்கும்  MGR  காலத்து கதைதான்....அதில் ஒட்டி பிறந்த இரட்டையர் ,மரபணு மாற்றம் என  சயின்ஸ்  மசாலா தடவி கொடுத்து இருகிறார்கள்....

சூர்யாவின் தந்தை மரபணுக்களை மாற்றம் செய்து அதிவிரைவில் ஊட்டமளிக்கும் உணவுபொருட்களை தயார் செய்யும் நம்பர் 1 பிசினஸ் மேன் வில்லன்  .........அதனால் ஏற்படும் தீமைகளை கண்டறிந்து சூர்யா தந்தையை வெளி உலகிற்கு காட்டிகொடுத்து தண்டனை அளிப்பதே நீளமான மாற்றானின் குள்ளமான கதை .......


ஒருவர் மீசையுடனும்,ஒருவர் மீசை இல்லாமலும் வந்து நாங்கதான் ஒட்டி பிறந்த இரட்டையர்  என நம்ப வைக்கின்றனர் ஆனால் கிராபிக்ஸ் கை கொடுக்கவில்லை .....வழக்கம்போல சூர்யா மின்னுகிறார்..ஆனால் டிவி  விளம்பரங்கள்,மற்றும் நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என நிகழ்சிகளில் அடிக்கடி பார்த்ததால்  சலித்துபோய்  பெரிதாக ஈர்க்க மறுக்கிறார்.....


காஜல் அகர்வால் தமிழ் பட விதிமுறைகளின் படி ஹீரோவை காதலிக்கிறார்,டூயட் பாடுகிறார்,ரஷ்ய மொழியை  மொழி பெயர்க்கிறேன் என கழுத்தையும் அறுக்கிறார்.....பேசாமல் ரஷ்ய மொழியில் மற்றவர்கள் பேசும்போது கீழயே  தமிழில்  எழுதி இருக்கலாம்..அதை விட்டு விட்டு காஜலை   மொழி பெயர்க்க வைத்து நம்மை  குழம்ப வைக்கின்றனர்....

முதல் பாதியிலயே சூர்யாவின் தந்தைதான் வில்லன் என தெரிந்துவிடுகிறதே....!பின்பு எப்படி கதையில் ஈர்ர்ப்பு வரும் என இயக்குனர் கொஞ்சமாச்சும் யோசித்து திரைக்கதை அமைத்து இருக்கலாம்.....அப்புறம் உக்ரைன்(அப்பிடின்னுதான்  நினைக்கிறேன்) நாட்டிற்கு சூர்யா செல்வதும் ,அதை தொடர்ந்து வரும் காட்சிகளின் நீளமும்  மின்சாரம் இல்லாவிட்டாலும் பரவா இல்லை ,எப்படா வீட்டிற்கு  செல்வோம் என நம்மை நினைக்க வைக்கிறது.....

சூர்யா  எல்லா உண்மைகளையும் கண்டறிந்த பின்பாவது படத்தை முடித்து இருக்கலாம்...அதை விட்டுவிட்டு வில்லனை குஜராத்தில் ஓட விட்டு மக்களை துரத்த வைத்து ஹீரோ வசனம் பேசி...அப்பப்பா  நம்மை தியட்டரை விட்டே ஓட வைக்கிறார்கள்.....

இயக்குனருக்கு ஒரு சொட்டு: மரபணு மாற்றம் போன்ற  இயற்கைக்கு முரணான   முறைகளில் சிந்தித்ததால்  ஏற்படும் விளைவுகளை  திரையில் காட்டிய  கதை அமைப்புக்கு...

ஒரு குட்டு:  பீகார் வாசிகளை கூலிக்கு கொலை செய்பவர்களாக காட்டியதற்கு(வட  நாட்டுக்காரர்களை  ஏன்யா அந்த கண்ணோட்டத்திலே பார்க்கிறீர்கள்?)

பிளஸ்: முதல் பாதியில் கொஞ்சம் ரசிக்க வைக்கும் சூர்யாவின் நடிப்பு

மைனஸ்: நீளமான இரண்டாம் பாதியும்,சொதப்பலான  திரைக்கதையும்

எனக்கு மற்ற விமர்சகர்களை போல   நுணுக்கமாக  விமர்சனம் எழுதி பழக்கமில்லை..... இந்த படம்   வெற்றி படம் ,நல்ல படம் என எனக்கு தோன்றவில்லை...மற்றவர்களுக்கு அவர்களின் ரசனையை பொருத்தது அது....

மாற்றான் -  தோற்றான்


12 அக்டோபர் 2012

பயோ (பயங்கர)டேட்டா: தமிழ்நாடு




பெயர்: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம்


மொழி :செம்மொழியாம் தமிழ்மொழி,ஆனால்  பேசப்படும் மொழி தங்க்லீஷ்



 இருப்பது: இந்தியாவில்



இல்லாதது :  ஒற்றுமை




என்றும்  இருப்பது: வெயில்




எப்பவாச்சும் வருவது:மழை




எங்கும் இருப்பது:  டாஸ்மாக்




எங்கும் இல்லாதது: மின்சாரம்



அண்டை மாநிலங்கள் : எப்போதும் சண்டை மாநிலங்கள்



மத்திய  அரசு: கண்டும் காணாமல்  இருப்பது..



மாநில அரசு :எதையும் கண்டுகொள்ளாமலே இருப்பது



அடிக்கடி நடப்பது: வாகன விபத்துக்களும்,வெடி விபத்துக்களும்...



அன்றாடம் நடப்பது:  கொலை கொள்ளைகளும், மணல் கொள்ளைகளும்



சாதனை :  பக்கத்துக்கு மாநிலங்களுக்கு  அரிசியும்,மின்சாரமும் கொடுப்பது



வேதனை:  பதிலுக்கு அவர்கள் தண்ணீர் தர  மறுப்பது



சாபக்கேடு :  அரசியல்வாதிகள்....



ஒரே ஆறுதல் :  என்ன நடந்தாலும் சிறிது நேரத்தில்  மறந்துவிட்டு  இயல்புநிலைக்கு திரும்பும் பொதுமக்கள்...!







10 அக்டோபர் 2012

எப்படி உருவானது அதிமுக......?!(2)


கணக்கு கேட்டால் தான் கருணாநிதிக்கு பிடிக்காதே.....MGR கணக்கு  கேட்டார் ..கருணாநிதி கணக்கு தீர்த்தார்..... உடனே அப்போதைய திமுக  பொது செயலாளர்  நாவலர் நெடுஞ்செழியனை விட்டு "எம்.ஜி.ஆரிடம் விளக்கம் கேட்டும், அதுவரை தி.மு.க. பொருளாளர் பொறுப்பிலிருந்தும், சாதாரண உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்வதாகத் தெரிவித்தும்," கடிதம்  எழுத வைத்தார்(அப்போதிலிருந்தே கருணாநிதிக்கு கடிதத்தின் மீது அப்படி ஒரு காதல்)........(இதன் முந்தய பதிவை படிக்க http://nkshajamydeen.blogspot.com/2012/10/blog-post_5783.html)

எம்.ஜி.ஆர். மீது தி.மு.க. மேலிடம் நடவடிக்கை எடுத்தது, தமிழ்நாட்டில் பெரும்பரபரப்பை உண்டாக்கியது. எம்.ஜி.ஆர். ரசிகர்கள் ஆவேசம் அடைந்தனர். தமிழ்நாடெங்கும் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இந்த சூழ்நிலையில், தி.மு.க. செயற்குழு 12.10.1972 அன்று கூடி, இந்தப் பிரச்சினை பற்றி ஆராய்ந்தது.

பொது கூட்டத்தில் சொத்து கணக்கு கேட்டதை  எம்.ஜி.ஆர். தவறு என்று உணர்ந்து வருத்தம் தெரிவித்தால் மேல் நடவடிக்கையை விட்டு விடலாம் என்றும், எம்.ஜி.ஆருக்கு ஒருநாள் அவகாசம் கொடுப்பது நலம் என்றும் செயற்குழு முடிவெடுத்தது ....

நாஞ்சில் மனோகரனும், முரசொலி மாறனும் எம்.ஜி.ஆரை சந்தித்து, செயற்குழு தீர்மானத்தை தெரிவித்தனர். "நான் பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க முடியாது. நடந்தது நடந்ததுதான். மறுபரிசீலனைக்கு இடம் இல்லை" என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். எம்.ஜி.ஆரை நிருபர்கள் பேட்டி கண்டனர். 

"சொத்துக்கணக்கு பற்றி பொதுக்கூட்டத்தில் பேசியதற்கு நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். தவறு செய்தவர்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்; தவறை திருத்திக் கொள்ள வேண்டும்" என்று எம்.ஜி.ஆர். கூறினார்.


இதனை தொடர்ந்து தி.மு.கழக பொதுக்குழு கூட்டம் 14-10-1972 அன்று சென்னையில் நடந்தது. கட்சியில் இருந்து எம்.ஜி.ஆர். சஸ்பெண்டு செய்யப்பட்டது பற்றியும், குற்றச்சாட்டுகளுக்கு 15 நாட்களுக்குள் பதில் அளிக்கும்படி அவருக்கு பொதுச்செயலாளர் நாவலர் நெடுஞ்செழியன் நோட்டீசு அனுப்பியது பற்றியும் பொதுக்குழு பரிசீலனை செய்தது.(பொது குழு என்றாலே அது கருணாநிதியின் விருப்பப்படி  செயல்படுவதுதானே ).....

 இறுதியில் தி.மு.கழகத்தை விட்டு எம்.ஜி.ஆர். அடியோடு நீக்கப்பட்டார். இனி சமரசத்துக்கு இடம் இல்லை என்று தி.மு.கழக பொதுக்குழு அறிவித்தது. (அதாகப்பட்டது கருணாநிதியின் ONE MAN  SHOW ஆசை நிறைவேற்றப்பட்டது...ஆனால் அன்று பிடித்த சனிதான் இன்று வரை அவரை பாடாக  படுத்துகிறது...நம்மையும் சேர்த்துதான்!)

தி.மு.க.வில் இருந்து எம். ஜி.ஆர். நீக்கப்பட்ட நிகழ்ச்சி, தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தன்னை நீக்கியதை எதிர்த்து, கோர்ட்டில் எம். ஜி.ஆர். வழக்குத் தொடருவாரா? அல்லது, "நான்தான் உண்மையான தி.மு.க" என்று அறிவிப்பாரா? என்ற கேள்விகள் எழுந்தன. ஆனால், எம்.ஜி.ஆர். அப்படி எல்லாம் செய்யவில்லை. 

"அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்" என்ற பெயரில் புதுக்கட்சி தொடங்கினார். 1972 அக்டோபர் 18ந் தேதி இக்கட்சி உதய மாயிற்று. பாராளுமன்ற உறுப்பினர்கள் கே.ஏ.கிருஷ்ணசாமி, எஸ்.டி.சோமசுந்தரம், சட்டசபை உறுப்பினர்கள் காளிமுத்து, முனுஆதி, எஸ்.எம்.துரைராஜ், மண்டல மக்கள் தொடர்பு அதிகாரி கவிஞர் முத்துராமலிங்கம், மொழி துறை அலுவலர் கவிஞர் நா.காமராசன் ஆகியோர் ஆரம்ப கட்டத்திலேயே அ.தி.மு.க.வில் சேர்ந்தனர். (எஸ்.டி .சோமசுந்தரம்  பின்னாளில்  ஜெயலலிதாவின் வேனில் தொங்கியபடி போனதை எல்லாம் எந்த கொடுமையில் சேர்ப்பது?)

சில நாட்களுக்குப்பின் நாஞ்சில் மனோகரன் இணைந்தார். கட்சியின் கொடி என்ன என்பதை எம்.ஜி.ஆர். அறிவித்தார். தி.மு.க. கொடி போலவே கறுப்பு, சிவப்பு நிறமுள்ள கொடியில், அண்ணாவின் படம் பொறிக்கப்படும் என்றார், எம்.ஜி.ஆர்.


இதாங்க  அதிமுக உருவான கதை....அந்த நேரத்தில் நாவலர் நெடுஞ்செழியன் "இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களில் அ.தி.மு.க. கரைந்து போய்விடும். அதற்கு இப்போது இருக்கும் சக்தி, ஒரு மாயத்தோற்றம்தான். ஒரு தனி மனிதரின் கவர்ச்சியே, அ.தி.மு.க.வின் அரசியல் பலம்."என பொதுக்கூட்டம்  ஒன்றில் பேசி உள்ளார்....

ஆனால் அதிமுக தனது  ஆயுள் உள்ள வரைக்கும்  தனக்கு ஆப்பு வைக்கும் என நிச்சயம் இப்போது கருணாநிதி உணர்ந்து இருப்பார்....




09 அக்டோபர் 2012

அழகிரியும்,விஜயகாந்தும்,மறைவில் வானிலை ரமணனும் (கூட்டுப்பொறியல் )



இன்றுதான் அழகிரி நிம்மதியாக கண் விழித்து  இருப்பார்...சும்மாவா! அவரது மகன் துரை  தயாநிதியை  கைது செய்வதற்காக  கேட்கப்பட்டு இருந்த  பிடி வாரண்டை ரத்து  செய்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதே....!ஆனாலும் மதுரையை ஆட்டி படைத்த அழகிரி மகனுக்கே மதுரை போலிசை விட்டே கபடி ஆடி விட்டார் ஜெயலலிதா.....

ஒரு பக்கம்  "சகோதர யுத்தத்தில்"ஸ்டாலின் கை ஓங்கி இருக்க .ஒரு பக்கம் மகனை தேடி போலீஸ் விசாரணை என்ற பெயரில் தன் குடும்பத்தினர்களை   அலைக்கழிக்க "நோஞ்சா"நெஞ்சனாக மாறி போயிருக்கும் அழகிரிக்கு இது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தியே....


.............................. ........................................... ......................................................


வர வர  விஜயகாந்தும்  வானிலை  அறிக்கை நிபுணர்  ரமணன்  போலவே பேச ஆரம்பித்துவிட்டார்....மழை  வரும் என்று ரமணன் சொன்னால் ஒரு ஆறு மாசத்துக்கு தமிழகத்தில் மழையே  வராது ..அதுபோல மழை  வர  வாய்ப்பில்லை என்று சொன்னால்  அன்றுதான் சூறாவளி காற்றுடன்  பேய்  மழை சுழன்று அடிக்கும்........அதுபோலதான் விஜயகாந்தின் பேச்சும் ....எது நடக்காதோ  அதைத்தான்  பேசுவார்....

வரும் நாடாளுமன்ற  தேர்தலில் தனித்து போட்டியிட  போவதாக கூறி இருக்கிறார்....இதெல்லாம் நடக்குற விசயமா  கேப்டன்?!ஐந்தோ,பத்தோ  வாங்கி கொண்டு (சீட்டை சொன்னேன்)திமுக கூட்டணியில் ஐக்கியமாகி விடுகிறாரா இல்லையா என  பாருங்களேன்!

......................... ................................................................. ....................................................


.திமுக ,அதிமுக,காங்கிரஸ் ..இந்த மூன்று கட்சிகளுமே  நம்பர் 1 பிராடு#விஜயகாந்த்

அப்ப நம்பர் 2 நீங்களா கேப்டன்?!#டவுட்டு

.............................................. .................................... .......................................

கர்நாடகத்தை  போல இங்கும் அனைத்து  கட்சி  கூட்டத்தை  கூட்டாதது  ஏன்?#
கருணாநிதி கேள்வி?#

இதற்கு முன்பும்  காவிரி பிரச்சினை தொடர்பாக  கருணாநிதியும் அனைத்து  கட்சி கூட்டத்தை  கூட்டியதில்லை....#இதுதான் ஜெயலலிதாவின்  பதிலாக இருக்கும்..!

................................................. ................................................... .......................................

இலங்கையை  வெஸ்ட்  இண்டிஸ்  வீழ்த்தி கோப்பையை  வென்றதும் ஏதோ  இந்தியாவே கோப்பையை வென்றது போல ஒரு ஆனந்தம் #இனப்பற்று

............................................ ...................................... ..................................................


ஜெயலலிதாவின்  ஓராண்டு ஆட்சியில் எந்த குறையுமே  என் கண்களுக்கு தெரியவில்லை ...#தா.பாண்டியன்

ஒருவேளை  கோமாவில் இருந்து இப்போதுதான் கண் விழித்து  இருப்பாரோ!



08 அக்டோபர் 2012

எப்படி உருவானது அதிமுக......?!


வரும் 17 ம்  தேதியுடன் அதிமுக  தொடங்கப்பட்டு  40 ஆண்டுகள்  முடிவடைகிறது....தமிழ்நாட்டின் இரு பெரும் கட்சிகள் என்றால் அது திமுகவும்,அதிமுகவும்தான் .........ஆனால் இந்த இரண்டு கட்சிகளுமே  தானாக  தோன்றிய  கட்சிகள் அல்ல.....அதாவது  திமுக  திராவிடர்  கழகத்திலிருந்து  பிரிந்து வந்து புதிதாக தொடங்கப்பட்ட  கட்சி....

ஆனால் அதிமுக?!சுருக்கமாக சொல்வதாக இருந்தால் யானை தன்  தலையில்  மண்ணை வாரி போட்டு கொள்ளுமே  அதுபோல  கருணாநிதி சொந்த காசில் சூனியம்  வைத்ததினால் உருவான  கட்சி என்று சொன்னால் அது மிகையல்ல....

அதிமுக எப்படி உருவானது?எல்லாருக்கும் தெரிந்த விசயம்தான்...இருந்தாலும் போவோமா பிளாஸ்பேக்...

ஆரம்பத்தில்  திரைத்துறையிலும் ,பின்பு அரசியலிலும் நெருங்கிய நண்பர்களாக இருந்தவர்கள்தான்  MGR ம் கருணாநிதியும்....சொல்லப்போனால்  கருணாநிதி முதல்வர்  ஆவதற்கு முக்கிய காரணமாக  இருந்தவர்  எம் ஜி ஆர்தான்....

வருடங்கள் ஓட ஓட இவர்கள் இருவருக்குள்ளும்  ஈகோ  சுனாமி  தலை விரித்தாட  பிரிவு  ஏற்பட  ஆரம்பித்தது... 

இந்த கருத்து வேற்றுமை, தி.மு. கழகத்தைப் பிளவுபடுத்தும் அளவுக்கு வளர்ந்தது.   1972 அக்டோபர் 8 ந்தேதி திருக்கழுக்குன்றத்திலும், பின்னர் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியிலும் நடை பெற்ற கூட்டத்தில் எம்.ஜி.ஆர். பேசும்போது, தி.மு.கழகத்தில் ஏற்பட்டிருந்த பிளவு பகிரங்கமாக வெடித்தது. எம்.ஜி.ஆர். பேசுகையில் கூறியதாவது:-


எம்.ஜி.ஆர். என்றால் தி.மு.க.; தி.மு.க. என்றால் எம்.ஜி.ஆர். என்று சொன்னேன். உடனே ஒருவர், "நாங்கள் எல்லாம் தி.மு.க. இல்லையா?" என்று கேட்டார். நான் சொல்கிறேன். நீயும் சொல்லேன். உனக்கும் உரிமை இருக்கிறது. முன்பொரு முறை காமராஜர் அவர்களை "என் தலைவர்" என்றும், அண்ணா அவர்களை "வழிகாட்டி" என்றும் சொன்னேன்.

 தலைவர்கள் பலர் இருப்பார்கள்.
ஆனால் கட்சிகளுக்கு கொள்கைகளைத் தருகிற வழிகாட்டி ஒருவர்தான் இருக்க முடியும். அண்ணா அவர்கள்தான் தி.மு.க. வழிகாட்டி. காங்கிரசுக்கு மகாத்மா காந்திதான் வழிகாட்டி. கழக நண்பர்களுக்குச் சொல்கிறேன், நான் மக்களை சந்திக்கிறவனே தவிர, தலைவர்களைத் தேடிப்போய், வாழ்க்கையை உயர்த்திக்கொள்ள வேண்டிய நிலையில் என் தாயும், தமிழகமும், அண்ணாவும் வைக்கவில்லை.

நான் யாருக்கும் பயந்து கொள்கையை மாற்றிக் கொண்டவன் அல்ல. அப்படிப்பட்ட தேவையும் இல்லை. தேர்தல் நேரத்தில், "தி.மு.க.வுக்கு வாக்குத் தாருங்கள். இன்னென்ன காரியங்களை நிறைவேற்றுவோம், ஊழல் இருக்காது, நேர்மை இருக்கும்" என்று சொன்னேனே. அப்படிப்பட்டவைகள் கழகத்தில் இருக்கவேண்டும் என்று விரும்புவதற்கு, சொல்வதற்கு எனக்கு உரிமை இல்லையா?

மந்திரிகள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கணக்குக்காட்ட வேண்டும் என்று சொல்கிறோம். கணக்கு அங்கே காட்டிக் கொண்டிருக்கிறோம். ஆனால், இவர்களின் சொந்தக்காரர்களுக்கு எவ்வளவு சொத்து இருக்கிறது என்ற கணக்கை தி.மு.கழகப் பொதுக்குழு ஏன் கேட்கக் கூடாது? ராமச்சந்திரன் சினிமாவில் நடிக்கிறான்;
சம்பாதிக்கிறான். நீ சம்பாதித்தால் அதற்குக் கணக்குக்காட்டு. மாவட்டச் செயலாளர்கள், கிளைக்கழகச் செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் பதவிகளில் இருப்பவர்கள், குடும்பத்திற்கு வாங்கியிருக்கிற சொத்துக்கள் இருந்தால் கணக்குக் காட்டவேண்டும். அவை எப்படி வந்தன என்று விளக்கம் சொல்ல வேண்டும்.

பொதுக்குழுவில் நிறைவேற்றி, அதற்காகக் குழு அமைத்து, அதனிடம் ஒவ்வொருவரும் தங்கள் கை சுத்தமானது என்பதை கூறி, மக்கள் முன் நிரூபிக்கலாம். நிரூபிக்க முடியாதவர்கள் மக்கள் முன்னால் நிறுத்தி, அவர்கள் தவறு செய்திருந்தால் தூக்கி எறிவோம். அண்ணாவின் கொள்கைக்கு ஊறு தேடியவர்களை எல்லாம் மக்கள் முன் நிறுத்தி தூக்கி எறிவோம்."

என்ன ரொம்ப சூடாக  இருக்கா எம் ஜி ஆரின் பேச்சு!இது யாருக்கு வைக்கப்பட்ட  சூடு என்பதை சொல்லவும் வேண்டுமா?

சூடான   எம் ஜி ஆரின்  பேச்சுக்கு  கருணாநிதியின்  ரியாக்சன் ???!

அடுத்த பதிவில்............