16 அக்டோபர் 2012

ஜெ வுக்கு பாராட்டுவிழா எடுக்கும் விஜயகாந்தும்,தியாகியான திமுக மாஜிக்களும்(கூட்டுப்பொறியல்


                                                           கூட்டு
                                      ........................ ..................... ..............


ஜெயலலிதாவுக்கு பாராட்டுவிழா ..அதுவும் விஜயகாந்த் நடத்த போகிறார்.....

எப்ப ஏன் என்று கேட்க கூடாது........பாவம் அவர்தான் என்ன பண்ணுவார் .......புது படங்களில் எதுவும் நடிக்காததால் பொதுக்கூட்ட மேடைகளை  சினிமா சூட்டிங்காக  நினைத்து கொண்டு  பேசி வருகிறார்....

அதாவது ஜெயலலிதா   அவர்கள் ஆட்சியை கலைத்துவிட்டு தேர்தலை சந்தித்து  மீண்டும் ஜெயித்து!முதல்வரானால்!!நம்ம கேப்டனே  பாராட்டுவிழா எடுப்பதாக  பேசி இருக்கிறார்....வர வர  இவரின் காமெடி தாங்க முடியவில்லை....ஏன்யா ஏதோ படத்துல வில்லன  பார்த்து பேசுவதுபோல வசனம் பேசிகிட்டு திரியுறாரு  இவரு ?

பேசாம  நம்ம கேப்டனை  டெல்லி அரசியலுக்கு  அனுப்பி  தினம் தினம் ஏதாவது பிரச்சினைகளில் சிக்கி   டென்சன்ல  உள்ள பிரதமர்,சோனியா போன்றவர்களை சிரிக்க வைக்கலாம்.....

.............................. .......................................... ......................................

அட தமிழ்நாடு காவல்துறைக்கு  என்ன ஆச்சு?வரிசையாக திமுக  மாஜி மந்திரிகள் மீது  போடப்பட்ட குண்டர் சட்டங்கள்  எல்லாம் தள்ளுபடி ஆகும் அளவுக்கா  விழிப்புடன் ! இருக்கிறார்கள்.....இப்ப கூட வீரபாண்டி ஆறுமுகத்தின்  மீது ஒழுங்காக வழக்குகளை பதியாமல் அரைகுறையாக  பதிந்து அவர் குண்டர் சட்டத்தில் இருந்து வெளியே வருவதற்கு  காவல் துறையே  காரணமாகி விட்டது....காவல்துறை ஆளும்கட்சியின்  ஏவல் துறை என்று கருணாநிதி சொல்வார்....ஆனால்  உண்மையில் ஆளும்கட்சி,ஆண்ட கட்சி இரண்டுக்குமே தாங்கள் ஏவல்துறை தான் என்பதுபோல இருக்கிறது அவர்களின் நடவடிக்கைகள்...


காவல்துறையின்  இம்மாதிரியான  அஜாக்கிரதையால் வீரபாண்டி ஆறுமுகம், பொட்டு  சுரேஷ்  போன்றவர்கள் ஏதோ குற்றங்களே  செய்யாத உத்தமர்களை போல  வலம் வருகிறார்கள்..அதிலும் வீரபாண்டி ஆறுமுகம் ஏதோ சுதந்திரத்துக்காக  போராடி சிறையில் இருந்து வருவதுபோல  தடபுடலான வரவேற்புகள்....!என்ன கொடும சார் இதெல்லாம்?இப்ப கைது செய்து இருக்கிற பொன்முடி  மீதும் ஒழுங்காக  வழக்கு பதியாம  அவரையும் தியாகி போல வெளியே வரவைத்து விடுவார்களோ?

கால்பந்து விளையாட்டில் சேம்சைடு  கோல்  அடித்து தோற்பார்களே  அது போல போலிசும் இவர்கள் விசயத்தில்  சேம்சைடு  கோல்  அடித்தே விளையாடி வருகிறது....ஜெயலலிதா  எப்போது ரெட் கார்டு  கொடுக்க போகிறார்?

........................................ ................................... .........................................

டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்ற அதி முக்கியத்துவம்  வாய்ந்த தீர்ப்பை சுப்ரீம்  கோர்ட்  வழங்கி உள்ளது....அதற்கு அவர்கள் கூறி உள்ள காரணம் "மதுபானம் அருந்துவதால்  ஏராளமானோர் இறப்பதாக மனுதாரர்  கூறி இருக்கிறார்...அதை விட தினமும் சாலைகளில்  நடக்கும் விபத்துகளில் ஏராளமானோர் இறக்கின்றனர்....அவர்கள் மீது மனுதாரர் கவனம்  செலுத்த  வேண்டும்"என சொல்லி வழக்கை  தள்ளுபடி செய்துள்ளனர்...

இதுவல்லவா நாட்டு மக்களின் மீது உள்ள அக்கறை!டாஸ்மாக்குக்கு "பாஸ்மார்க்"போட்ட இந்த நீதிபதிகள் அல்லவா சிறந்த "குடி"மகன்கள்!!

                             .................... ........................... ................................................................... ..........பொறியல் ............................ ..........................................

கூடங்குளம்  அணு உலை பாதுகாப்பானது : ரஷ்யா #

ஆனால் அது ரஷ்யாவில் இல்லையே !தமிழ்நாட்டில் அல்லவா இருக்கு..!


................................. ................................. ...................................


தமிழகத்தில் காங்கிரஸ்  ஆட்சியை பிடிக்க முடியாது: மணிசங்கர் அய்யர் #

இவரை போன்ற உண்மையை பேசும்  காங்கிரஸ் ஆளுக போதும்....அக்கட்சி தானாகவே அழிந்துவிடும்....!

....................................... ......................................... ...............................................


ஜாதி கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி : டாக்டர் ராமதாஸ் #

ஜாதிகள் இல்லையடி பாப்பா : பாரதியார் #இவரை தெரியுமா  மருத்துவரய்யா ?

....................................... ............................................... ...............................................

மக்களுக்காக 18 மணி நேரம் உழைக்கும்  ஒரே முதல்வர்  அம்மாதான்: அமைச்சர் வளர்மதி#

மீதம் உள்ள 6 மணி நேரத்தையும்  குறைத்து சொன்ன அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம்#மற்ற அமைச்சர் பெருமக்கள் !!!

............................................. ......................................... ..............................................

அடுத்த பிரதமர் ஆகும் தகுதி "அம்மாவுக்கு:இருக்கிறது:ஒ .பன்னீர் செல்வம் #

அப்படின்னா அமெரிக்க ஜனாதிபதியாக எப்ப வருவாங்க பாஸ்!!?

6 கருத்துகள்:

 1. எல்லாம் அருமை.
  //// மக்களுக்காக 18 மணி நேரம் உழைக்கும் ஒரே முதல்வர் அம்மாதான்: அமைச்சர் வளர்மதி#

  மீதம் உள்ள 6 மணி நேரத்தையும் குறைத்து சொன்ன அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறோம்#மற்ற அமைச்சர் பெருமக்கள் ..////


  இது இன்னும் அருமை

  பதிலளிநீக்கு
 2. ’நறுக் நறுக்’ என்று குட்டியிருக்கிறீர்கள்.

  ஒருவருக்காவது உறைக்குமா?

  பதிலளிநீக்கு
 3. நீங்க ஹாஜாபாயா இல்ல அசத்தல் பாயா, அருமையாக இருக்கிறது உங்கள் பதிவு.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....