24 செப்டம்பர் 2012

மக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...நீங்கள் சாலையில்  நடந்து போகிறீர்கள்...திடிரென  உங்கள் முன் ஒருவர் வந்து நடனமாடினால்  எப்படி இருக்கும்?உங்களை பார்த்து பாட்டு பாடுங்கள் என சொல்லி வம்பு இழுத்தால் டென்சன்  ஆகுவீர்களா இல்லையா?

நீங்கள் நடந்து போகும்போது  உங்களை பார்த்து இரண்டு பேர் சிரித்துகொண்டே  உங்களை கிண்டல் பண்ணினால்  எப்படி உணருவீர்கள்?

சாலையில்  போகும் உங்களிடம்  அட்ரெஸ்  கேட்பதுபோல  பேசிக்கொண்டு  உங்கள் மீது  பேனா  மை  கொட்டுவதுபோல  செய்தால் கோபம் வருமா வராதா?

பைக்கில் போகும் உங்களை  மூணு போலீஸ்காரர்கள்  நிற்க வைத்து  அதை இதை சொல்லி  வா காவல் நிலையத்துக்கு  என சொன்னால்  என்ன செய்வீர்கள்?

ஒரு பெண் உங்களிடம் வந்து அவசரமா   ஒரு போன்  பண்ணனும் என உங்கள் செல்போனை  வாங்கி கொண்டு திருப்பி  தராமல்  பேசுவதுபோல ஆக்டிங்  செய்து கொண்டு இருந்தால் ஓங்கி ஒரு இழுப்பு இழுப்பீர்களா இல்லை சும்மா விடுவீர்களா?

இத்தனையும்  தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...கேண்டிட்  கேமரா ,வடை போச்சே  போன்ற நிகழ்சிகளின் போர்வையில்  ஏதாவது  ஒரு டிவி  காரன் நடத்தி கொண்டுதான் இருக்கிறான்....இப்ப சன் மியூசிக்கில்  வடை போச்சே அப்படின்னு  இந்த நிகழ்ச்சியை பண்றானுக...டி  ஆர்  பி  ரேட்டிங்கில்  அவர்களின் நிகழ்ச்சி மேலே செல்வதற்கு பொதுமக்கள்  பகடை காயாம் !

அட கன்றாவி  பயலுகளா!நீங்க நிகழ்ச்சி ஒளிபரப்பி   காசு  பார்ப்பதற்கு  சாலையில் ஆயிரம்  வேலைகளுடன்  கடந்து  போகும் பொது மக்கள்தானா  கிடைத்தார்கள்?

நேற்று அப்படிதான் ஒரு பைக்கை  நிற்பாட்டி போலீஸ்  உடையில்  மூன்று பேர்  இரண்டு அப்பாவிகளை  அதை இதை சொல்லி  மிரட்டுவதுபோல  கலாயித்து
கொண்டு இருந்தார்கள்...அப்புறம் அந்த நபர் அழுது  விடும் சூழ்நிலைக்கு  வந்த பின்னர்  நாங்க சன் மியூசிக் தான்..சும்மா நிகழ்சிக்காக  இப்படி பண்ணினோம் என்று சொல்கிறார்கள்....ஏண்டா  லூசு பயலுகளா  நிகழ்ச்சி என்ற போர்வையில் மக்களை முட்டாள்களாக்கி  நீங்க என்ன  வேணும்னாலும் பண்ணி பணம் பார்ப்பிங்க....நாங்க வாயை  மூடி கொண்டு போகணும்?

நம் முன் வந்து டான்ஸ்  ஆடுவது,சிரிப்பது, வம்பு இழுப்பது போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்....போலீஸ் உடையில்  எப்படி ஒருவன் வந்து நிகழ்ச்சி என்ற போர்வையில் மிரட்டலாம்?கலாயிக்கலாம் ? நிஜ போலீஸ் ,சும்மா போலீஸ் என பொது மக்கள் எப்படி அடையாளம் காண்பார்கள்?ஒருவேளை உண்மையான போலீஸ் நீங்கள் பைக்கில்  போகும்போது உங்களிடம் லைசென்ஸ்  கேட்டு நீங்கள் அதை டிவி போலீஸாக  இருக்குமோ என நினைத்து பதில் சொன்னால் அவர்கள் காண்டாகி பதம் பார்த்து விட மாட்டார்கள்?

இதற்கெல்லாம் வேறு யாரும் வந்து முடிவு கட்ட மாட்டார்கள்.. நாம்தான் பதிலடி கொடுக்கணும்....இதுபோல ஏதாவது என் முன் நடந்து என்னை கலாயித்து விட்டு  நாங்கள் சன் மியூசிக்  நிகழ்ச்சிக்காகத்தான்  இப்படி செய்தோம் என கூறினால் ஓங்கி நாலு அப்பு அப்பிடுவேன்...நாளை உங்களுக்கும் நடக்கலாம்...என்ன செய்ய  போகிறீர்கள் நண்பர்களே...?

இது சும்மா ஒரு நிகழ்ச்சிதானே  இதை ஏன் போயி  பெரிதுபடுத்திகிட்டு என கேட்பவர்களுக்கு .......நாளை  நீங்கள் ஏதோ மன கஷ்டத்தில்  ,அல்லது ஏதோ அவசரத்தில்,அல்லது மருத்துவமனைக்கு   போகும்போதும் கூட  உங்களை அவர்கள் இப்படி கலாயிக்கலாம் ...அப்ப  என்ன செய்வீர்கள்?

 மக்களை  கேனயனாக்கி  அதை டிவியில்  காட்டி அந்த  மக்களையே பார்க்கவைத்து அந்த TVக்காரன்    லாபம் பார்ப்பான் ....அதை நாம வேடிக்கை பார்த்துவிட்டு  டேக் இட் ஈசின்னு  எடுத்துகிட்டு போக முடியுமா?போங்கடா  நீங்களும் உங்க  கேனத்தனமான  நிகழ்ச்சியும்....!


40 கருத்துகள்:

 1. அடுத்தவர்களை புண்படுத்தி பணம் பார்ப்பதில் அவனுகளுக்கு அப்படி ஒரு சந்தோசம்....சரியான கருத்துக்கள்....நன்றி

  பதிலளிநீக்கு
 2. பதில்கள்
  1. இது சும்மா ஒரு நிகழ்ச்சிதானே இதை ஏன் போயி பெரிதுபடுத்திகிட்டு என கேட்பவர்களுக்கு .......நாளை நீங்கள் ஏதோ மன கஷ்டத்தில் ,அல்லது ஏதோ அவசரத்தில்,அல்லது மருத்துவமனைக்கு போகும்போதும் கூட உங்களை அவர்கள் இப்படி கலாயிக்கலாம் ...அப்ப என்ன செய்வீர்கள்?

   நீக்கு
 3. கூல் ஹாஜா , இது சன் டிவி யின் சொந்த சரக்கு அல்ல. உலகம் முழுவதும் சக்கை போட்ட போட்டு கொண்டிருக்கின்ற Just For Laughs என்ற நிகழ்ச்சியின் காப்பி. இது மலேசியாவிலும் சக்கை போட்ட நிகழ்ச்சி இப்போதும் போடுகிறார்களா என்று தெரியவில்லை. சிங்கப்பூரில் இப்போதும் போடுகிறார்கள்.
  போலீஸ் வேடத்தில் வந்து அடிக்கும் ஒரு கூத்து
  http://www.youtube.com/watch?v=aB3-LIbkXdo
  நான் அந்த நிகழ்ச்சியை வக்காலத்து வாங்கவில்லை. உலகம் முழுவதும் அது புகழ் பெற்றதினால் சன் அதனை காபி அடித்திருக்க கூடும். இந்நிகழ்ச்சிக்கு எதிர்ப்பு முன்பே இருந்திருந்தால் சன் இந்நிகழ்ச்சியை தொட்டிருக்கிறது. தமிழ் நாட்டில் இந்நிகழ்ச்சி ஷூட்டிங் க்கு எதிர்ப்பு வருமாக இருந்தால் இந்நிகழ்ச்சி நிறுத்தப்படும் என நினைக்கிறேன்.
  சிங்கபூரிலும் Just For Laughs நிகழ்ச்சிக்கான ஷூட்டிங் நிறைய நடைபெற்றது. எனது நண்பர்கள் சிலரும் இதில் மாட்டுப்பட்டனர். சில வேளைகளில் இந்த நிகழ்ச்சி மோசமாக இருக்கும். குறிப்பாக குண்டு வெடிக்க போவதாக பாவனை செய்து மக்களை பயமுறுத்துவது.
  சன் டிவி செய்யும் இந்த நிகழ்ச்சி தொடருமா அல்லது இல்லையா என்பதை பார்வையாளர்களும் ஷூட்டிங் ல் மாட்டுபடுபவர்களும் கொடுக்கும் எதிவினையை பொறுத்து அமையும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வெளிநாடுகளில் இருக்கும் நிகழ்சிகளை அப்படியே காப்பி அடித்து போடுவது அதை விட தவறானது...வெளிநாட்டில் ரியாலிட்டி ஷோ எனும் பெயரில் செக்ஸ் கூட நிகழ்ச்சியாக காட்டப்படுகிறது....இதைவிட அபத்தம் வேறு என்ன இருக்கிறது?

   நீக்கு
 4. நானும் ஒரு வோட் குத்தியுள்ளேன். LOL

  பதிலளிநீக்கு
 5. இதில் மாட்டுபடுபவர்கள் தங்களுக்கு இந்த ஷூட்டிங் மன உழைச்சலை தந்து என்று போலீஸ் (நிஜ) ல் புகார் தரலாம் என நினைக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 6. //ஓங்கி நாலு அப்பு அப்பிடுவேன்//

  என்னிடன் கலாய்த்தால் டீமில் உள்ள அத்தனை பேருக்கும் தலா நாலு+நாலு அப்பு அப்புவேன்.

  எச்சரிக்கை செய்ததற்கு நன்றி மைதீன்.

  பதிலளிநீக்கு
 7. இது போன்ற ஒளிபரப்பினைப் பார்க்காமல்
  தவிர்ப்பதே நமது முதல் எதிர்ப்பாக இருக்கலாம்
  தெளீவூட்டிப்போகும் பதிவு
  தொடர வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 8. //ஓங்கி நாலு அப்பு அப்பிடுவேன்//

  என்னிடன் கலாய்த்தால் டீமில் உள்ள அத்தனை பேருக்கும் தலா நாலு+நாலு அப்பு அப்புவேன்.

  எச்சரிக்கை செய்ததற்கு நன்றி மைதீன்.

  பதிலளிநீக்கு
 9. அஸ்ஸலாமு அழைக்கும் சகோ

  //நாளை நீங்கள் ஏதோ மன கஷ்டத்தில் ,அல்லது ஏதோ அவசரத்தில்,அல்லது மருத்துவமனைக்கு போகும்போதும் கூட உங்களை அவர்கள் இப்படி கலாயிக்கலாம் ...அப்ப என்ன செய்வீர்கள்?/// அருமையான கேள்வி..! அடுத்தவரகளை முட்டாளாக்கி அதை வியாபாரமாக்கும் இவர்களின் மனநிலையை என்னவென்று சொல்ல? :(

  நானும் இந்த நிகழ்ச்சி பற்றி பதிவிட எண்ணி இருந்தேன் சகோ..! நீங்கள் முந்திக்கொண்டீர்கள் :)
  என்றாலும் நல்லதொரு பதிவு..! வாழ்த்துக்கள்..~!

  தமிழ்மணம் -11

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வஸ்ஸலாம் சகோ....

   வருகைக்கும்,வாழ்த்துக்கும் நன்றி சகோதரி

   நீக்கு
  2. என்னது தமிழ்மணம் -11 ஆஆஆ
   என்ன சிஸ்டர் நீங்களுமா ??????
   தமிழ்மண வாக்குகளை குறிக்கோளாக கொண்டு திரியும் கோஷ்டியோடு எப்போம் சேர்ந்தீங்க ???? ஹா ஹா ஹா இதெல்லாம் ஒரு புழப்பு

   நீக்கு
  3. //ஹா ஹா ஹா இதெல்லாம் ஒரு புழப்பு// what do you mean by this????


   எல்லாரும் ஒட்டுப்போட்டேன்னு சொல்லி இருந்தாங்க நானும் சொல்லி இருந்தேன்..! இதுல என்ன தப்பு கண்டுபுடிச்சிங்க சகோ?????


   நீக்கு

  4. ஹா ஹா ஹா இதெல்லாம் ஒரு புழப்பு// what do you mean by this????
   எல்லாரும் ஒட்டுப்போட்டேன்னு சொல்லி இருந்தாங்க நானும் சொல்லி இருந்தேன்..! இதுல என்ன தப்பு கண்டுபுடிச்சிங்க சகோ?????
   உங்களுக்கு பதிவுலக செய்தி இன்னும் சரியாக விளங்க வில்லை என நினைக்கிறேன் ....
   நான் உங்க பதிவிற்கு வோட் போட்டேன் அது போல் நீங்களும் எனக்கு வோட் இட வேண்டும் என்ற உள் அர்த்தத்தில் பதியப்படும் பின்னூட்ட வகை அது அதாவது மொய் இக்கு மொய் செய்ய ஊக்குவிப்பது ... இதை நீங்க விளங்காம இவ்வாறு செய்திருந்தால் இனிமேல் இவ்வாறு செய்வதை தொடரவேண்டாம் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

   நீக்கு
  5. //நான் உங்க பதிவிற்கு வோட் போட்டேன் அது போல் நீங்களும் எனக்கு வோட் இட வேண்டும் என்ற உள் அர்த்தத்தில் பதியப்படும் பின்னூட்ட வகை அது அதாவது மொய் இக்கு மொய் செய்ய ஊக்குவிப்பது ... ////

   வாட்???!!!! இல்லை சகோ நான் அந்த அர்த்தத்தில் பதியவில்லை..! சில நேரங்களில் என் பதிவில் யார் எனக்கு ஓட்டு போட்டது என்று கூட எனக்கு தெரியாது .. அவர்கள் சொன்னால் யார் ஓட்டு போட்டது என்று தெரிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று நினைப்பது உண்டு..! மேலும் இந்த பதிவில் அனேகம பேரு ஓட்டு பற்றி சொல்லியதால் நானும் சொன்னேன்.!

   நான் பதிவுலகிற்கு புதுசு.. அதனால் புரியாமல் செய்து விட்டேன்..! விளக்கத்திற்கு நன்றி :)))

   நீக்கு
 10. ///மக்களை கேனயனாக்கி அதை டிவியில் காட்டி அந்த மக்களையே பார்க்கவைத்து அந்த டிவி காரன் லாபம் பார்ப்பான் ....அதை நாம வேடிக்கை பார்த்துவிட்டு டேக் இட் ஈசின்னு எடுத்துகிட்டு போக முடியுமா?போங்கடா நீங்களும் உங்க கேனத்தனமான நிகழ்ச்சியும்....!//

  ஊடக ஒழுங்கு என்றால் என்னவேன்று தெரியதாவர்களிடமும் வியாபரிகளிடமும் சிக்கி சிதைவதை சமூக கோபத்தோடு சொல்லியிருக்கிறீர்கள்

  பதிலளிநீக்கு
 11. இதைப் பார்க்கும் குழந்தைகள் (மனதளவில்) எவ்வளவு பாதிப்பு அடைகிறார்கள்... இதில் பெற்றோர்களின் ஊக்கம் வேறு... கொடுமை சார்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அவனுக குழைந்தைகளை எல்லாம் எந்த கணக்கிலயும் சேர்க்க மாட்டானுக ...வியாபார நோக்கம் மட்டும்தான் அவர்களின் குறிக்கோள்....நன்றி சார்

   நீக்கு
 12. கண்டிக்க வேண்டிய விஷயம் தான். இதில் இன்னொரு அபாயமும் அடங்கியுள்ளது. போலிஸ் போல வேடமிட்டு பொதுமக்களை கலாய்க்கும் இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் ஏதாவது சமூக விரோதிகள் இதன் மூலம் தூண்டப்பட்டு நிஜமாகவே மிரட்டி பணம் பறிக்க துவங்கினால்..

  பதிலளிநீக்கு
 13. KD பிரதர்ஸ் இன்னும் அடங்கலியா, சரி சரி தாத்தாவை உள்ளே தள்ளுனவர்தான் இப்போ சென்னை கமிஷனர், அடுத்த குறி கே டி பிரதர்ஸ் சொல்லிகிறாங்க, கொஞ்சம் பொறுமையா இருங்க ஹாஜா ,இவனுங்க உள்ளே போய் இதெல்லாம் விளையாடுவனுங்க.

  பதிலளிநீக்கு
 14. ///நாளை உங்களுக்கும் நடக்கலாம்...என்ன செய்ய போகிறீர்கள் நண்பர்களே...?///

  வேறென்ன....?

  //ஓங்கி நாலு அப்பு அப்பிடுவேன்...//

  இதுதான்..! :-))

  பதிலளிநீக்கு
 15. சரியான கருத்துக்கள்...வாழ்த்துக்கள்.....

  பதிலளிநீக்கு
 16. nalla karuthu . nila maasu, katru maasu , neer maasu pol poruppatra muraiyil oodakaththai payan paduththi matravarkalai mukam suzhikka vaikkum idhu pontra nikazhchikalum oruvakai maasuvae... ivaikalukku arasu thadai poda vaendum

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....