06 செப்டம்பர் 2012

2022 -கருணாநிதி ..ஜெயலலிதா ..விஜயகாந்த் !?!?கருணாநிதி: தமிழ் ஈழம்தான்  என் கனவு,லட்சியம்,உயிர்மூச்சு.....அதை  அடையும்வரை நான் ஓயமாட்டேன்....அதேசமயம்  தமிழீழம்  கிடைக்காமல்  போனதற்கு காரணம்  போராளிகளுக்கு இடையே  நடந்த சகோதர  சண்டைதான்....தமிழ் ஈழம் கிடைக்க மத்திய  அரசை தொடர்ந்து வற்புறுத்தி  கொண்டு இருப்பதற்காகவே நாங்கள் மத்திய  அமைச்சரவையில் இடம் பெற்று உள்ளோம்.... மத்தியில்  உள்ள அரசுடன்  மனகசப்புடன் எங்கள்  உறவு தொடர்கிறது....ஜெயலலிதா :எனக்கு  உடல்நிலை சரி இல்லாத  காரணத்தால்   பெங்களூரில்  நடை பெற்று வரும் சொத்து குவிப்பு  வழக்கில் நேரில் ஆஜராகாமல்  இருப்பதற்கு  விதிவிலக்கு  அளிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதியின்  நியமனம்  செல்லாது எனவும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்....விஜயகாந்த்:  திமுகவும்,அதிமுகவும்  மாறி மாறி ஆண்டு தமிழகத்தை சீரழித்து  விட்டன.....தமிழகத்தின்  விடிவெள்ளி தேமுதிக தான்...நான் சட்டமன்றத்துக்கு  போனால் என்ன ?போகாவிட்டால் என்ன?மக்களுக்காக  குரல் கொடுத்து கொண்டுதானே  இருக்கின்றேன்....!?ராமதாஸ் :இனி எந்த கட்சியிடனும்  கூட்டணி இல்லை....திராவிட கட்சிகளால்  தமிழ்நாடு  சீரழிந்தது போதும்....இனி வரும் தேர்தல்களில் பாமக  தனித்தே  போட்டியிடும்....!திருமாவளவன் :  திமுகவும்,விடுதலை சிறுத்தைகளும்தான்   ஈழத்தமிழர்களுக்காக  போராடும் உண்மையான கட்சிகள்.....அதே சமயம் கூட்டணியில்  இருந்தாலும் காங்கிரஸ் எங்களுக்கு   எதிரிதான்....!


வைகோ:   மக்களுக்கு தீமைகளை  மட்டுமே செய்து கொண்டு இருக்கும் மத்திய ,மாநில  அரசுகளை  கண்டித்து கன்னியாகுமரியில்  இருந்து சென்னை நோக்கி   புயலென  புறப்படுவோம் ....அலைகடலென  கூடுங்கள்  ....ஆர்ப்பரித்து  வாருங்கள்...நடை பயணத்தால்  விரைவில் நாட்டை ஆளுவோம்...!மத்திய  அமைச்சர் நாராயணசாமி : கூடங்குளம்  அணு உலையில்   விரைவில் மின் உற்பத்தி தொடங்கும்....!!

இன்னும் 10 வருடங்கள் கழித்து  இவர்கள் எல்லாம்  என்ன பேசுவார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள் என இப்பவே  நான் சொல்லிவிட்டேன்  .....என்ன சரிதானே ....!6 கருத்துகள்:

 1. நல்ல சிந்தனை சார்... அதுவும் 'கேப்டன்' வேற மாதிரி (!6&*1/2$#%^& 1/4$%^!) சொல்வார் என்று நினைத்தேன்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றி சார்....கேப்டன் பெரும்பாலும் இப்படித்தானே பேசுகிறார்....

   நீக்கு
 2. இவர்கள் எப்போதும் இப்படித்தான் இரு்பபார்கள்...
  உண்மைதாங்க...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....