31 டிசம்பர் 2012

நீயா நானாவும்,கோபிநாத்தின் எரிச்சலூட்டிய அதிமேதாவித்தனமும் .....!

நேற்றைய  நீயா நானா நிகழ்ச்சியை பார்த்த போது அதிர்ச்சியும்,ஆச்சர்யமும்  சேர்ந்தே எழுந்தது...கூடவே கோபிநாத் மீது கோபமா இல்லை எரிச்சலா என தெரியவில்லை ..அதுவும் எழுந்தது...


கிச்சனில்  மனைவிக்கு  உதவியாக சமையலில  ஈடுபடுவீர்களா  இல்லையா  என்பதுதான் நேற்றைய  டாபிக்...

வழக்கம்போல மனைவிக்கு உதவியாக சமையலில் ஈடுபடுவோம் என ஒரு தரப்பும் ஈடுபடமாட்டோம் என ஒரு தரப்பும் பேசினார்கள்...சமையலில் ஈடுபடுவோம் என்பவர்களுக்கு முதலில் என் பாராட்டுக்கள்.....அதே வேளையில்  வேலை பளு காரணமாக சமைப்பது எங்கள் வேலை அல்ல என கூறுபவர்களை குற்றவாளிகள் போல சித்தரித்து  இந்தநிகழ்ச்சி அமைந்து அல்லது அமைத்ததுதான் எனக்கு எரிச்சலை ஊட்டியது...

அதே நேரத்தில் வேலை பளுவை தவிர்த்து சமையல் கட்டில் நுழைவதே எனக்கு கவுரவ குறைச்சல்  என்றும் அது ஒருவித ஈகோ பிரச்சினை  என்றும் வாதிட்டவர்களை பார்க்கும்போது இதிலயுமா கவுரவம் பார்ப்பார்கள் என்ற கடுப்புதான் வந்தது ..அதிலும்  ஒருவர்  என் மனைவி  வீட்டில் இல்லாமல் இருந்தால் என் அம்மாவுக்கு முடியாமல் இருந்தாலும் நான் சமையலறைக்குள் சென்று சுடு தண்ணீர் கூட வைக்க மாட்டேன் ,எனக்கு காபி கூட  போட்டு கொள்ள மாட்டேன் ,ஹோட்டலில்தான் வாங்கி கொள்வேன்  என கூறிய போது எனக்கு தூக்கி வாரி போட்டது...அவருக்கு சுடுதண்ணி கூட வைக்க தெரியாமல் இல்லை ஆனால் வைக்க மாட்டாராம்..அது அவர் வேலை இல்லையாம் ...ஆணாதிக்க மனோபாவத்தின் உச்சம்தானே இது?நிச்சயமாக இந்த எண்ணம் கண்டிக்கத்தக்கது....இதுவரை ஓகே...

ஆனால் நம்ம கோபிநாத் அவரை விட்டுவிட்டார்...கொஞ்சம் ஹார்சாக பேசுபவரை  எப்போதும் இப்படிதான் விட்டுவிடுவாரா என எனக்கு தெரியவில்லை....அதே அணியை சேர்ந்த இன்னொருவர் "எங்கள் பாட்டி,அம்மா காலத்தில் செஞ்ச வேலையை விட இப்போதுள்ள  பெண்கள் செய்யும் வேலை குறைவுதான் என சொல்லி முடிப்பதற்குள் மேற்கொண்டு அவரை பேச விடாமல் "நீங்கள் பெண்களை  சோம்பேறி என பேசுகிறீர்கள் ...இப்போதுள்ள உள்ள பெண்கள் மாதிரி அப்போது உங்கள் பாட்டியோ ,அம்மாவோ படித்தார்களா ?இதற்குமேல் உங்களை நான் இந்த நிகழ்ச்சியில் பேச அனுமதிக்க மேட்டேன் என அவரை மூஞ்சியில் அடிப்பது போல பேசி அமர்த்திவிட்டார்..

இப்போது எனக்குள் எழும் கேள்வி என்னவென்றால் ஒருவரை முழுவதுமாக பேச விட்டால்தானே அவர் என்ன சொல்ல வருகிறார் என புரியும்?அவர் தவறாக பேசினாலும் பேசவிட்டுவிட்டு பிறகு கோபிநாத் தனது கருத்தை தெரிவித்து இருக்கலாமே?

அந்த நபர் "எங்கள்  பாட்டி காலத்தில்  அம்மியில்தான் எல்லாம் அரைத்தார்கள், இப்பொது மிக்சி,கிரைண்டர் வந்துவிட்டது,என அன்றைய கால பெண்களுக்கும் இன்றைய கால பெண்களுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை ,நவீன வசதிகளை வைத்துதான் அவ்வாறு பேச வந்தார் ..ஆனால் அவரை முழுவதுமாக பேச விடாமல் அதட்டி,மிரட்டி  உட்கார வைத்துவிட்டார்...

அதேபோல இன்னொருவர் என் மனைவி  சமையல் செய்வதால் நான் 3000 ரூபாய் சம்பளம் கொடுத்து விடவும் தயார் என சொன்னார் .அவர் சொன்னது வேலை பார்ப்பதால் என் மனைவிக்கு கிடைக்கும் உரிமை அந்த பணம் என்ற அர்த்தத்தில்...எந்த அர்த்தத்தில் சொன்னாலும் அது தவறுதான்..அந்த நபரும் அதை தவறு என ஒப்புக்கொண்டுவிட்டார்..ஆனால் அவரை பிடித்து"உங்களுக்கு எதுக்கு கல்யாணம்,?இரண்டு பெண் குழைந்தைகள்?என அவரது பெர்சனல் வாழ்க்கையை பற்றி கேள்வி கேட்டு தனது அதிமேதாவி தனத்தை காட்டி கொண்டு விட்டார் கோபிநாத்...

மனைவிக்கு சமயலறையில் உதவி செய்வது அவரவரின் விருப்பம் சம்பந்தப்பட்டது....உதவினாலும் தப்பில்லை,உதவாவிட்டாலும் அதனால் ஒன்றும் குறையில்லை ....

ஆனால் நீங்கள் இதையே  ஒரு விவாத நிகழ்ச்சியாக வைக்கும்போது இருதரப்பையும் பேச விடுவதுதானே சரியாக இருக்கும்?ஆனால் நிகழ்ச்சி ஆரம்பித்ததில் இருந்து கோபிநாத் சமையலில் ஈடுபடும் ஆண்கள் பக்கமே சாய்ந்து நாங்கள் சமைக்கமாட்டோம் என்பவர்களை ஏதோ குற்றவாளிகள் போல சித்தரித்து கேள்வி மேல் கேள்வி கேட்டு,எதிர் தரப்பினர் பேசும்போது இந்த தரப்பினர்களுடன் சேர்ந்து ஆணவ சிரிப்பு ,நக்கல் சிரிப்பு சிரித்து கொண்டே இருந்தார்...


மனைவிக்கு சமையலில் உதவி  செய்பவர்கள்தான்   உயர்ந்தவர்கள்,நல்லவர்கள் என்பதுபோல சித்தரித்து நீங்கள் நிகழ்ச்சியை நடத்துவதாக இருந்தால் ஏன் இன்னொரு தரப்பு?ஒரு தரப்பை வைத்தே அவர்களை பாராட்டி நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாமே?

சமையலறையில்  உதவி செய்யாதவன் சிறந்த  கணவனாக இருக்க மாட்டான் என்ற தனது கருத்தை  இந்த நிகழ்ச்சியின் மூலம் பொது கருத்தாக மாற்ற நினைத்து  இருக்கிறார் கோபிநாத்.. இந்த தலைப்பே தேவை அற்ற ஒன்றாக எனக்கு படுகிறது...

அன்பையும்,நேசத்தையும்  சமையலறையை   வைத்து மட்டுமே  முடிவு செய்ய முடியுமா கோபிநாத்?

நீயா நானா நிகழ்ச்சியில் தான் மட்டுமே சரியாக பேசுவதாக நினைத்துகொண்டு தனக்கு எதிரான கருத்தை  பேசுபவர்களை பல பேர் முன்னாள் மட்டம் தட்டி தன்னை அதிமேதாவியாக காட்டுவதை எப்போது நிறுத்தி கொள்வார் கோபிநாத்?23 கருத்துகள்:

 1. இத்தகைய டிவி ஷோக்களில் நேர்மையான விவாதம் ஏது? அது என்னமோ டிஆர்பி ரேட்டிங்க் அப்படீன்னு சொல்றாங்களே, அதை மனசில வச்சுத்தான் அத்தனை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன.

  பதிலளிநீக்கு
 2. முன்பெல்லாம் விடாமல் இந்நிகழ்ச்சியை பார்த்து வந்தேன். சமீப காலமாக ஒரு சில தலைப்புகளை தவிர்த்து மற்ற அனைத்தும் கொடுமையாக இருப்பதாலும், கோட் கோபி செய்யும் தமாசுகளாலும் பார்க்காமல் தவிர்த்து வருகிறேன். தலைப்பு கிடைக்காவிட்டால் நிகழ்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நானும்தான் பார்ப்பதை விட்டுவிட்டேன் கோபிநாத்தின் அலட்டலான பேச்சால் ....நேற்று தெரியாத்தனமாக பார்த்துவிட்டேன்...

   நீக்கு
 3. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 4. இது ஒரு அந்தரங்கம் சம்பந்தப்பட்ட விசயம் இதில் உண்மையை நேரடியாக சொல்லமுடியாத சூழல் உள்ளது என்பதனை உணர்ந்து இந்த நிகழ்ச்சிகளில் இதுபோன்ற தலைப்பில் விவாதங்களை தவிர்த்திருக்கலாம்.இதில் யாராவது உண்மையான காரணத்தை சொன்னால் அவர்களை ஆணாதிக்கவாதி என்று முத்திரை குத்திவிடுவார்கள்.

  சமையல் கட்டில் மனைவிக்கு உதவும் கனவர்கள் முதலில் அவர்களின் மனைவியிடமே தன் மதிப்பை இழக்கிறார்கள் என்பது தான் உண்மை.சமையல் கட்டை எட்டிகூட பார்க்காதவர்கள் கெத்தாக இருக்கிறார்கள் இதுதான் உண்மை வளிய போய் உதவினால் என்ன மதிப்பு கிடைக்கும் என்று பலர் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

  அடுத்தது படுக்கை அறையில் யார் முதலில் ரொமான்ஸ் செய்வது என்று கூட நிகழ்ச்சி நடத்த நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.குறைந்த பட்சம் இந்த இகழ்ச்சியில் பங்கேற்ப்பவர்களின் வீடுகளிலாவது சலனத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ///அடுத்தது படுக்கை அறையில் யார் முதலில் ரொமான்ஸ் செய்வது என்று கூட நிகழ்ச்சி நடத்த நிச்சயம் வாய்ப்பிருக்கிறது.///-----போச்சுடா... ஹிட் ஷோவுக்கு ஐடியா தந்துட்டார்..!

   இப்படி போகலாம் அந்த விவாதம்.....................


   முதலில் ரொமான்ஸ் பண்ணுவது ஆண் என்றால், அவன் மனைவிக்கு முதலிடம் தராமல் 'எல்லாமே நான் தான் ஃபர்ஸ்ட்' என்ற பாலுணர்வு வேட்கை கொண்ட ஆணாதிக்கவாதி என்ற எதிர்த்தரப்பு வசை..!

   அப்டின்னா... மனைவியே ஆரம்பிக்கட்டும் என்று அமைதியாக இருந்தால்.... மனைவியை மகிழ்ச்சிப்படுத்தும் இந்த சின்ன விஷயத்தில் கூட கேவலமாக ஆண் என்ற அகங்கார ஈகோ பார்க்கும் ஆணாதிக்கவாதி அல்லது 'கையாலாகாத கோளாறு உள்ள கணவன்' என்று முதல்தரப்பு வசை..!..!

   பெண் முதலில் ஆரம்பித்தால்... 'ச்சே அலையுறா' என்ற எதிர்த்தரப்பு கமெண்ட்.

   'எனவே வேண்டாம்... நாம் அப்புறம் ஆரம்பிப்போம்' என்று பெண் சும்மா இருந்தால்... 'கணவனுக்கு இதில் கூட சந்தோஷம் தர முயலாத உணர்வற்ற மரக்கட்டை ஜடம்' என்ற முதல்தரப்பின் குத்தல் பேச்சு..!

   என்ன மண்டை காயுதா..?

   இதில், திரு.கோபிநாத்துக்கு எது சரின்னு படுதோ அது மட்டுமே அனுமதிக்கப்படும்..!

   நீக்கு
 5. கோபி அண்ணன் எப்போதுமே

  சரக்கில்தான் வருவார்!

  பதிலளிநீக்கு
 6. சமையலறை ,படுக்கை அரை என இவர்கள் எல்லாவற்றையுமே விவாதம் என்ற பெயரில் நிகழ்ச்சி ஆக்கி அதை காசாக்கியும் விடுகிறார்கள்...

  பதிலளிநீக்கு
 7. ஸலாம் சகோ.ஹாஜா,

  எனக்கு இது போன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபாடோ நம்பிக்கையோ கிடையாது. ஆனால், நீங்கள் சொன்னதிலிருந்து திரு.கோபிநாத் தனது கருத்தை பொதுக்கருத்தாக சிலரை பேசச்செய்து அதையே மக்களிடம் கருத்துருவாக்கம் செய்ய பிரயத்தனப்படுகிறார் என்பது மட்டும் புரிகிறது.

  //இதற்குமேல் உங்களை நான் இந்த நிகழ்ச்சியில் பேச அனுமதிக்க மேட்டேன்//---இது போதும்.

  இவரிடம் ஒரு கேள்வி. திரு.கோபிநாத் இத்தனை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடத்தி விட்டு வீட்டுக்கு நீங்கள் சென்றால்... அங்கே உங்கள் மனைவி ஏற்கனவே தனியாளாக இருந்து உங்கள் உதவி இன்றி ஆசை ஆசையாக ருசியாக சமைத்து முடித்து தயாராக மேசையில் உணவை வைத்து இருந்தால்... சாப்பிடுவீர்களா..? மாட்டீர்களா..? அப்படி நீங்கள் சாப்பிட்டால்... ஆணாதிக்கவாதியா..?

  அந்தோ... விஜய் டிவி பாவமா... நிகழ்ச்சியை பார்க்கும் மக்கள் பாவமா..?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. #இவரிடம் ஒரு கேள்வி. திரு.கோபிநாத் இத்தனை மணி நேரம் இந்த நிகழ்ச்சி நடத்தி விட்டு வீட்டுக்கு நீங்கள் சென்றால்... அங்கே உங்கள் மனைவி ஏற்கனவே தனியாளாக இருந்து உங்கள் உதவி இன்றி ஆசை ஆசையாக ருசியாக சமைத்து முடித்து தயாராக மேசையில் உணவை வைத்து இருந்தால்... சாப்பிடுவீர்களா..? மாட்டீர்களா..? அப்படி நீங்கள் சாப்பிட்டால்... ஆணாதிக்கவாதியா..? #

   வஸ்ஸலாம் சகோ....

   சபாஷ் ...சரியான கேள்வி சகோ

   நீக்கு
 8. //சமையல் கட்டில் மனைவிக்கு உதவும் கனவர்கள் முதலில் அவர்களின் மனைவியிடமே தன் மதிப்பை இழக்கிறார்கள் என்பது தான் உண்மை.சமையல் கட்டை எட்டிகூட பார்க்காதவர்கள் கெத்தாக இருக்கிறார்கள் இதுதான் உண்மை வளிய போய் உதவினால் என்ன மதிப்பு கிடைக்கும் என்று பலர் உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
  //

  This is the worst and stupid comment I have seen recently. And.. This guy's name is "Puratchi" Thamizhan. Shame on you..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொது நாகரீகம் தெறியாதவரே கருத்துக்களுக்கு எதிர் வாதம் செய்யலாம் நீ வசைமொழிவதில் இருந்தே தெறிகிறது எவ்வளவு கேவலமான குணம் படைத்தவர் என்று.

   நீக்கு
 9. "எங்கள் பாட்டி,அம்மா காலத்தில் செஞ்ச வேலையை விட இப்போதுள்ள பெண்கள் செய்யும் வேலை குறைவுதான் என சொல்லி முடிப்பதற்குள் மேற்கொண்டு அவரை பேச விடாமல் "நீங்கள் பெண்களை சோம்பேறி என பேசுகிறீர்கள் ...இப்போதுள்ள உள்ள பெண்கள் மாதிரி அப்போது உங்கள் பாட்டியோ ,அம்மாவோ படித்தார்களா ?இதற்குமேல் உங்களை நான் இந்த நிகழ்ச்சியில் பேச அனுமதிக்க மேட்டேன் என அவரை மூஞ்சியில் அடிப்பது போல பேசி அமர்த்திவிட்டார்..////

  நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். கோபி அவ்வாறு அவரை மட்டம் தட்டி பேசியிருக்க கூடாது. கோபி அவரை எதிர்த்து பேசிக்கொண்டே இருந்த போது நான் சொன்ன வார்த்தை என்ன வார்த்தை -
  " பாவம், அந்த மனுசனை இவ்வளவு டீஸ் பண்ணக் கூடாது" - என்பதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிகழ்ச்சியை பார்த்த பெரும்பாலோனரின் எண்ணமும் அதுவாகத்தான் இருந்து இருக்கும்..என்னிடமே 5,6 நண்பர்கள் இவ்வாறுதான் கூறினார்..நன்றி...

   நீக்கு
 10. கோபிநாத்தை விட நிகழ்சியில் உண்மையை மறைக்காமல் தங்கள் தரப்பு வாதங்களை என்னங்களை வைத்த பவர் ஸ்டார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரால் கண்டிக்கப்பட்டவர் உயர்வானவர்கள். காரணம் இவர்கள் தங்கள் தரப்பு வாதத்தை முன்வைத்தனர் ஆனால் கோபிநாத்தை போறுத்தவரை ஒட்டுமொத்த பெண்களிடமும் தன்னுடைய இமேஜை வளரத்துக் கொள்ளவதற்க்கான ஆர்வகோளரால் வந்த வார்த்தைகள் தான் அதிகம். பங்கேற்பாளர்கள் கருத்து ஏற்க தக்கதாக இல்லாவிட்டாலும் அது அவரது சொந்த அணுபவர் அதை அவர் சொல்ல உரிமை உள்ளது அதை அவர் மட்டுமே சொல்ல முடியும். அதை தவறு என்று கண்டிக்க கோபிநாத்துக்கு உரிமை கிடையாது தவாறக நிகழ்ச்சி வாயிலாக பங்கேற்பாளர் உணர்ந்தால் எந்த காலகட்டத்திலும் திருத்திக் கொள்ள முடியும். காரணம் எதிர் தரப்பினர் அணைவரரும் வயது முதிர்ந்த வர்களாகவும் மந்த நிலை கொண்வர்களாகவும் இருந்தனர் என்பது கவணிக்க தக்கது. மேலும் எதிர்தரப்பினர் மனைவிக்கு உதவி செய்வதாகவே கூறினர் அதை அவர்கள் கடமையாக கூறவில்லை. ஆணாதிக்க மனோபவத்துடன் பேசிய நபரிடம் கூட தவறை ஏற்கும் உயரிய பண்பு இருந்தது வருத்தமே தெரிவித்தார், ஆனால் போலிநாத்திடம் உண்மை இல்லை. ஒட்டுமொத்தமாக ஆண்களையோ பெண்களையோ சான்றளிக்க முடியாத நிலையிலும் போலி நாத்தின் செயல் ஏற்க தக்கதல்ல என்பதால் நான் எதிர்பார்த்ததை போலவே போலி முகத்தில் வெளிபாட்டால் கண்டனத்திற்க்கு உள்ளாகிவிட்டார்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த எழவுக்குத்தான் நான் எப்போதும் இப்படிப்பட்ட அபத்தங்களை பார்ப்பதில்லை. இன்னுமா கூலிக்கு மாரடிக்கும் கோட்டு கோபியை இந்த உலகம் நம்புது?
   ஏற்கனவே பவர் ஸ்டார் விஷயத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டவர்தான் இந்த அதிமேதாவி. இவரிடம் நடுநிலைமையும் இல்லை. ஒரு ம*#*# இல்லை.

   நீக்கு
  2. #கோபிநாத்தை விட நிகழ்சியில் உண்மையை மறைக்காமல் தங்கள் தரப்பு வாதங்களை என்னங்களை வைத்த பவர் ஸ்டார் மற்றும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவரால் கண்டிக்கப்பட்டவர் உயர்வானவர்கள். #

   சரியான கருத்து ..நன்றி

   நீக்கு
  3. #இன்னுமா கூலிக்கு மாரடிக்கும் கோட்டு கோபியை இந்த உலகம் நம்புது? 3

   ஹா ஹா ஹா...அப்படித்தான் நினைத்து அவர் பேசி கொண்டு இருக்கிறார்..நன்றிண்ணே

   நீக்கு

 11. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

  2013ல் உங்கள் நம்பிக்கைகளும் ஆசைகளும் கனவுகளும் கைகூடட்டும்


  அன்புடன்
  மதுரைத்தமிழன்

  பதிலளிநீக்கு
 12. டும் டும்..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக http://vitrustu.blogspot.in/2013/01/blog-post.html#more.

  பதிலளிநீக்கு

 13. காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்

  நன்மக்களே!
  வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
  நாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு
  இடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.

  பெண்கள் பாலியல் வன்முறையால் பாதிக்கப்படுவதை தடுக்க வன்முறை கலாச்சாரம் பரவாமல் தடுக்க.
  மத்திய மாநில அரசே காட்சி ஊடகங்கள் காலை மாலை வேளைகளில் நாட்டு விடுதலைக்கு வித்திட்ட மாவீரர்களின் தியாகங்களையும் நாட்டு விடுதலை பற்றிய காட்சிகளையும் இந்திய துணைக்கண்டத்தின் பெருமைகளையும் அதன் வரலாற்றையும் இந்திய கலாச்சாரங்களையும் நீதி போதனைகளை மட்டும் ஒளிபரப்பிட வேண்டுமென்று சட்டம் இயற்றுங்கள்.
  காட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள் எங்கள் பொருளைப் பெற்று உங்கள் வளங்களைப் பெருக்கிக் கொண்டு எங்கள் பிள்ளைகள் மனங்களில் நஞ்சை விதைக்கும் காட்சிகளை மாற்றுங்கள்.

  சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது நாட்டுக்காக உழைத்த உத்தமர்களைப் போற்றுங்கள். சுதந்திரப் போராட்டம் மற்றும் தியாகிகளின் தியாகங்களைப் போற்றுங்கள்.

  சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் மட்டுமாவது எங்கள் பிள்ளைகளின் காமத்தை தூண்டும் ஆபாச காட்சிகள் இரட்டை அர்த்த வசனங்கள் இல்லாத காட்சிகளை காண்பியுங்கள்.
  சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினங்களில் எங்கள் பிள்ளைகளை தவறான கதாநாயகனாக மாற்றும் வன்முறை கலாச்சார சீரழிவு காட்சிகளை தவிர்த்து எங்கள் பிள்ளைகளுக்கு வீரம்,அன்பு, சமூகம், மனிதாபிமானம் சமூக அக்கறை கொண்ட தலைவர்களைப் பற்றிய காட்சிகளைக் காண்பியுங்கள்.

  சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் போன்ற தினங்களில் அரை குறை ஆடைகளில் கவர்ச்சி நடிகர்களின் பேட்டி அவர்களின் சாதனைகளைக் கூறாமல் தியாகிகளின் வரலாற்று சாதனைகளை அவர்கள் தம் வாரிசுகளின் பேட்டி கண்டு எங்கள் பிள்ளைகளுக்கு தேசப் பற்றை விதையுங்கள்.
  இன்றைய சமுதாய நலனுக்காக சேவையாற்றும் அரசு அல்லாத சேவை அமைப்புகளை அதன்செயல்பாடுகள் பற்றி எங்கள் பிள்ளைகளுக்கு சொல்லித்தரும் காட்சிகளைக் காண்பியுங்கள்.
  மக்கள் விழிப்புணர்வு பெற போராடும் நல்ல மனிதர்களை அவர்கள் தம் சேவை பற்றியும் எங்கள் பிள்ளைகளுக்கு சொன்னால் எங்கள் பிள்ளைகளும் சமுதாயச் சேவை செய்யவேண்டும் என்ற சிந்தனையை உருவாக்கும் நிகழ்சிகளைக் காண்பியுங்கள்.
  புதிய கண்டுபிடிப்பாளர்கள், சாதனையாளர்கள், சுய தொழில் முனைவோர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் மற்றும் நேர்மையான அரசு அலுவலர்களைப் போற்றி அவர்களை ஊக்கப்படுத்தும் காட்சிகளைக் காண்பியுங்கள்.

  மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக 2010 ஆம் டிசம்பர் 3 ஆம் தேதிமுதல் இன்றுவரை இந்தியன் குரல் அமைப்பு போராடிவருகிறது.
  நம் கோரிக்கை அரசுக்கும் இந்த காட்சி ஊடகங்களுக்கும் முன்வைக்கின்றோம்.
  இந்த ஆண்டும் மேற்கண்ட நம் கோரிக்கைகளை வலியுறுத்தியும் இன்றைய நிகழ்வுகள் குறித்தும் 04-01-2013
  வரும் சனவரி மாதம் நான்காம் நாள் சென்னை மெமோரியல் ஹால் அருகில் காலை பத்து மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும். அனைவரும் பெரும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்
  காட்சி ஊடகங்களால் உருவாகும் கலாச்சாரச் சீரழிவை தடுத்து நிறுத்திட ஒன்று படுவோம்.
  மனிதாபிமானமுள்ள அரசும் மனிதாபிமானமுள்ள காட்சி ஊடகங்கள் நம் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றோம்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....