12 டிசம்பர் 2012

ரஜினி என்ன .................................. ?நான் தெரியாமல் தான் கேட்கிறேன்...ரஜினி என்ன இந்தியாவை காக்க வந்த விடிவெள்ளியா?


இந்தியாவுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்த தேசப்பிதாவா?


இந்தியாவை வல்லரசாக மாற்றி கொண்டு இருக்கும் ஒரு மாமனிதரா?


தமிழகத்தை ஏழைகள் இல்லாத மாநிலமாக உருவாக்கி கொண்டு இருக்கும் உத்தமரா?


தமிழகத்தில் நிலவி வரும் பவர் கட்டை "நெவர் கட்"ஆக மாற்ற வந்தவரா?


தமிழகத்தில் நிலவி வரும் சாதி பிரச்சினைகளை வேரோடு அழிக்க வந்தவரா?

அவர் பிறந்த நாளுக்கு ஏன் இவ்வளவு ஆர்ப்பாட்டம்?அலம்பல்கள்?அக்கப்போர் எல்லாம்?

எந்த டிவி யை திறந்தாலும் ரஜினி சிரித்துகொண்டோ,டூயட் பாடிகொண்டோ .பஞ்ச் டயலாக்  பேசிக்கொண்டோ இருக்கிறார்...

விகடன்,குமுதம் என எல்லா பத்திரிக்கைகளிலும் 5,6 பக்கத்துக்கு ரஜினி புகழ்!

ரஜினியே இதை விரும்பி இருக்க மாட்டார்...

ஒரு நடிகரை ,ஒரு மனிதரை இந்த அளவுக்கு துதி பாடி இந்த மீடியாக்களும் .அவரது ரசிகர்களும் என்ன பயனை பெற போகிறார்கள்...

மீடியாக்கலாவது விளம்பரங்களின் மூலம் ரஜினியால் ஆதாயம் அடைவார்கள்..அவர்கள் துதி பாடுவதன் நோக்கமும் அதுதான்...

ஆனால் அவரது ரசிகர்களுக்கு என்ன பயன்?

என்று மாற போகிறார்கள் ஒரு நடிகரின் பிறந்த  நாளை ஏதோ அன்றுதான் தங்களின்  சிறந்த நாளாக நினைத்து கொண்டாடும் ரசிகர்கள்!?

  நண்பர்களே காலையிலே நான் இணைத்த இந்த பதிவை இதுவரை தமிழ்மணம் வெளியிடவில்லை...அப்படி என்ன இந்த பதிவில் எழுதிவிட்டேன்...?

குஷ்புவின் இடுப்பும்,குடி முழுகி போன திமுகவும்  என்ற தலைப்பில் உள்ள பதிவை எல்லாம் வெளியிடும் தமிழ்மணம்  இந்த பதிவிலும் ,தலைப்பிலும்  என்ன குறை கண்டு பிடித்தார்கள் என தெரியவில்லை!


8 கருத்துகள்:

 1. You are 100% right. South media is useless crap. They feel that create a hype like north media bows one "Big B"

  பதிலளிநீக்கு
 2. சினிமா பதிவுகள் தானியங்கி முறையில் திரைமணத்தில் இணைக்கப்பட்டு விடும். உன் இந்தப்பதிவும் திரைமணத்தில்தான் இருக்கு. பார்க்கவும். அவசரப்பட்டு எழுத வேண்டாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அண்ணே..நேற்று நான் பதிவிட்டு சுமார் 4 மணி நேரம் வரை இந்த பதிவு சினிமா பிரிவிலும் இடம் பெற வில்லை...லேட்டாகத்தான் சேர்த்து இருக்கிறார்கள்

   நீக்கு
 3. உணர்ச்சி உண்மையை கொப்பளிக்கின்றது
  உண்மை நாணய மற்றோரால் மறைக்கப் படுகின்றது
  நீரினுள் ஒளியாது காற்று
  அறிவிக்க துடிக்கும் உள்ளம் உயர்ந்தோர் உள்ளவரை
  உண்மை உலகில் அறியப்படும்
  மனமே உன் கடமை செய்
  நாடியோர் மனதில் நிறுத்தி வை
  செய்வதை செய்த பின் விளைவுகளை சிந்திக்காதே
  இறைவன் இருக்க முடிவை அவனிடத்தில் விட்டு விடு

  உள்ளொன்று வைத்து புறமொன்று பேசுவோர் உவகை அடைய
  உண்மை பேசுவோர் மனம் உடைந்து போக
  சேவையாற்றும் மனதோடு திறவுகோல் உன்னிடம்
  ஆற்றல் கொடுக்கும் அருள் இறைவனிடம்
  தொடர் தொய்வில்லாமல் தொடர் உன் சேவையை
  வேடத்தை கையில் எடுத்தோர் வீழ்வர்
  வேதத்தை மனதில் பதித்தோர் மாட்சி பெறுவர்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....