21 டிசம்பர் 2012

மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !......


இதோ வந்தேவிட்டது  "மாயன் காலண்டரின்" மர்ம தேதியான 21.12.2012

மீடியாக்களினாலே  மறுக்கப்பட்டு,விவாதிக்கப்பட்டு ஆனால் அதே மீடியாவினாலே இன்று உலகம் அழிந்தாலும் அழிந்து விடும் என்ற வதந்தியை பீதியாக்கிய தினம் இதுதான்...

ஏன் இன்னும் உலகம் அழியவில்லை..?!


 ஏன்னா மாயன் காலண்டர் ஒரு  சாதாரண காலண்டர்தானே தவிர நடக்க போவதை குறிக்கும் அதிசய காலண்டர் அல்ல...வேணும் என்றால் டுபாக்கூர் என்று பேர் வைத்து கொள்ளலாம் !....அல்லது வெத்து  வேட்டு!


 ஏன்னா மாயன் காலண்டரை உருவாக்கியவர்கள் இந்த தேதியுடன் அழிந்து போயிருக்கலாம் ...அல்லது உலகத்தின் மேல் உள்ள கடுப்பில் நாளைய தேதியை குறிப்பிடாமல் தூக்கி  போட்டு இருக்கலாம் ....!


ஏன்னா மாயன்  இனத்தவர்களுக்கு  இன்றைய  தேதிக்கு மேல் குறிப்பிட போர் அடித்து இருக்கலாம் !

 ஏன்னா மாயன் காலண்டரைவிட  அதை வைத்து பீதியை கிளப்பியவர்கள் ஒரு பெரிய டுபாக்கூர் அல்லது வேலை வெட்டி இல்லாதவர்கள்

ஏன்னா அந்த பீதியை மக்களிடத்தில் சிந்தாமல் சிதறாமல் கொண்டு போய்  சேர்த்த மீடியாக்கள் டுபாக்கூர்களின் டுபாக்கூர் அல்லது ஓட்டை விழுந்த பலூனை விற்று காசாக்கிய கெட்டிக்காரர்கள் ....

இதை எல்லாம் விட உண்மையான காரணம்


"அது இறைவனுக்குத்தான் தெரியும்"...உலகம் அழியும் நாள் என்று எந்த ஒரு நாளையும்  மாயன் காலண்டர் அல்ல ,நாசா விஞ்ஞானிகள்  அல்ல வேறு எந்த கொம்பனாலும் அறுதியிட்டு உறுதியிட்டு கூற முடியாது "நம்மை படைத்த இறைவனை தவிர"


அவ்வளவுதான் மக்களே...


ஒன்னும் இல்லாத இந்த விசயத்தை  ஒரு பதிவாக போட்டு ஹிட்ஸ் அடிக்க  நமக்கு உதவிய மாயன் காலண்டருக்கு நன்றி .....


9 கருத்துகள்:

 1. ஹ.. ஹ.. ஹ..ஹ..ஹ.. ஹ்ம்ம்ம்ம்ம் ...
  ஆனால் இறைவன் இருப்பது உண்மையா?
  அல்லது அதுவும் வதந்தியா? அதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால் நம்மை மீறிய ஒரு சக்தி உண்டு என்பதை மட்டும் நம்புகிறேன் . அதற்கு பெயர்தான் கடவுள் என நினைத்துகொண்டிருக்கிறேன்.

  பதிலளிநீக்கு
 2. ஹ ஹ ஹ அண்ணா ..நகைச்சுவை பதிவு சரி நானும் இது பற்றி ஒரு பதிவு போட்டு இருக்கேன் இதோ
  21/12/2012...ஹ ஹ ஹ ஹ ஹ


  http://rinakhan1990.blogspot.com/2012/12/21122012.html

  பதிலளிநீக்கு
 3. இடுகைத்தலைப்பு:
  மாயன் காலண்டர்படி உலகம் அழியாததற்கு இதுதான் காரணங்கள் !......

  உங்கள் ஓட்டு சேர்க்கப்பட்டது.நன்றி!

  பதிலளிநீக்கு
 4. எல்லாப்பக்கத்திலும் மாயன் மயமா இருக்கே..சரிதான்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....