03 டிசம்பர் 2012

ஜா"தீ"...ஒரே கூட்டணியில் திமுக,அதிமுக ...!அதிர்ச்சி ..ஆனால் உண்மை ...!

திமுகவும் அதிமுகவும் கூட்டணி....என்ன நம்ப கஷ்டமாக இருக்கா?நம்பித்தான் ஆக வேண்டும்....ஒரு விசயத்தில் இந்த இரண்டு கட்சிகளுக்கும் அவ்வளவு ஒற்றுமை!

தமிழ்நாட்டில் ஜாதி பிரச்சினைகள் தீர்க்கபடாமல்,அல்லது ஜாதி பிரச்சினைகள் நிகழ்வதற்கு யார் காரணம்?எல்லாரும் நினைப்பதுபோல பாமக, விடுதலை சிறுத்தைகள் போன்ற ஜாதிக்கட்சிகள் மட்டும் காரணமல்ல..
இந்த கட்சிகளுக்கு முன்னாலே பலம் தின்று கோட்டை போட்ட இரண்டு பெரிய கட்சிகள் இருக்கின்றன...


ஜாதிக்கட்சிகளை விடுங்கள்..அவர்கள் அப்பட்டமாக தங்கள் ஜாதிக்காக ,உரிமைக்காக பாடுபடுகிறோம் என கூறிக்கொண்டு அரசியல் செய்கிறார்கள்...

ஆனால் திராவிட கட்சிகள் என கூறி கொள்ளும் திமுகவும்,அதிமுகவும்தான் தமிழ்நாட்டில் மறைமுகமாக ஜாதியை அடிப்படையாக வைத்து அரசியல் செய்யும் மறைமுக ஜாதிக்கட்சிகள் ..
 
எல்லா தேர்தல்களிலும் இந்த கட்சிகள் வேட்பாளர் தேர்வை எப்படி நடத்துகின்றன?வேட்பாளர் நல்லவரா,கிரிமினல் வழக்குகளில் சம்பந்தப்படாதவரா என்பதை எல்லாம் பார்க்காமல் அவர் எந்த ஜாதி என்பதைத்தான் முதல் கேள்வியாக வைக்கிறார்கள்...குறிப்பிட்ட அந்த தொகுதியில் எந்த ஜாதி பெரும்பான்மையாக வசிக்கிறார்கள் என்பதை வைத்துதான் இந்த கட்சிகள் அதே ஜாதியில் வேட்பாளரை தேர்வு செய்கின்றன...இந்த ஒரு விசயத்தில் மட்டும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் மறைமுக கூட்டணி வைத்து இருப்பவர்கள்!

 தன்னை ஜாதி,மத ,கடவுள் நம்பிக்கைகளுக்கு  அப்பாற்பட்டவராக,பெரியாரின் கொள்கைகளை செயல்படுத்துவராக காட்டி கொள்ளும் கருணாநிதியை 234 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் ஜாதி பார்க்காமல் வேட்பாளரை நிறுத்த சொல்லுங்கள் பார்ப்போம்...முடியாது ...ஜெயலலிதாவும் இதே ரகம்தான்...நான் எதற்கு கருணாநிதியை சொல்கிறேன் என்றால் அவர்தான் வார்த்தைக்கு வார்த்தை பெரியாரின் சீர்திருத்த கருத்துக்களை அமுல்படுத்திய ,செயல்படுத்திய ஆட்சி,கட்சி திமுக தான் என தம்பட்டம் அடித்து கொள்பவர்...பெரியார் எந்த காலத்தில் ஜாதியை ஆதரித்தார்?

அட சட்டமன்ற ,நாடாளுமன்ற தேர்தல்களை விடுங்கள்...சாதாரண உள்ளாட்சி தேர்தல்களிலே ,நகர்மன்ற தேர்தல்களிலே இந்த இரு கட்சிகளும் ஜாதியை அடிப்படையாக வைத்துதான் வேட்பாளர்களை  நிறுத்துகின்றன...அப்புறம் எங்கே உருப்படுகிறது?

ஜாதிக்கட்சிகளை விட இந்த இரண்டு பெரிய கட்சிகள்தான் முதல்  குற்றவாளிகள்...இந்த இரண்டு கட்சிகளின் பெயர்களில்தான் ஜாதி இல்லை...மற்றபடி ஜாதியின் அடிப்படையில் கிளை செயலாளரில் ஆரம்பித்து மாவட்ட செயலாளர் வரை பதவியில் அமர்த்துகின்றன..

அதை முதலில் இரண்டு கட்சிகளும் நிறுத்தட்டும்...தமிழ்நாட்டில் ஜாதி வெறி,ஜாதி பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக மாற தொடங்கும்...!

கட்சி பொறுப்புகளிலிருந்து வேட்பாளர் தேர்வு வரை திமுக,அதிமுக போன்ற பெரிய கட்சிகள் என்று ஜாதி ரீதியிலான கண்ணோட்டத்தை கைவிடுகிறதோ அன்றுதான் தமிழகம் விடியும்!

அது எப்போ?....


2 கருத்துகள்:

  1. இரு கட்சிகளை மட்டும் இந்த விஷயத்தில் குறைகூற முடியாது. மக்களும்தான் இதற்கு காரணம், மக்கள் எப்போது தன் ஜாதிக்காரன் என்று பார்க்காமல் அவர்களின் தியாகங்களின் அடிப்படையில் வாக்களிக்க முடிவெடுக்கிறார்களோ அப்போதே இந்தக்கட்சிகளும் ஜாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவதிலிருந்து பின்வாங்கிவிடும்.

    பதிலளிநீக்கு
  2. நீங்கள் சொல்வதும் சரிதான்....இதுவும் முட்டையிலிருந்து கோழி வந்ததா இல்லை கோழியிலிருந்து முட்டை வந்ததா என்ற வகையை சேர்ந்ததுதான்...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....