25 டிசம்பர் 2012

ஜெயலலிதாவை எதிர்த்து விஜயகாந்த் ஆடிய ருத்ரதாண்டவம் !விஜயகாந்தும் ஜெயலலிதாவும் சட்டசபையில் மோதி கொண்டது தான் இந்த வருடத்தின் உச்சகட்ட பரபரப்பு சம்பவம் என்று கூறுவதைவிட உச்ச கட்ட பரபரப்பான காமெடி சம்பவம் என்றே கூறலாம்....

என்னால்தான்  நீ ஜெயிச்ச என இருவரும்  தங்களது  பெருமையை கூறி சண்டை போட்டார்களே  தவிர மக்கள் ஒட்டு போட்டதால்தான் இவர்கள் இருவருமே ஜெயித்தார்கள் என்பதை மறந்துவிட்டது உச்சகட்ட கொடுமை ....சட்டசபை என்பதை மறந்துவிட்டு தனது படத்தில் வில்லன்களிடம் வசனம் பேசுவதுபோல நாக்கை துருத்தி கேப்டன் ஆடிய அதிரடி ஆட்டம் இங்கே ரீவைண்ட்

இதன்  தொடர்ச்சியாக  விஜயகாந்த் சட்ட சபையிலிருந்து 10 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்...அதிலிருந்து சட்டசபைக்கு செல்லாமல் இருந்த அவர் (கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு எஸ் ஆகிவிடுவது ) சில நாட்களுக்கு முன்பு நடந்த சட்ட சபை வைர விழாவில்தான்  கலந்துகொண்டார்..

இந்த சம்பவத்தின் தாக்கம்  ஜெயலலிதாவை எவ்வளவு தூரம் பாதித்து கொதிப்படைய வைத்து இருக்கிறது என்பதற்கு சாட்சி சமிபத்தில் விஜயகாந்தின் நெருங்கிய தோழர்,மற்றும் அருண்பாண்டியன் போன்ற 4 MLA க்களை விஜயகாந்திற்கு எதிராகவே பேசும்படி விலைக்கு வாங்கியதுதான்...

 எது எப்படியோ இந்த வருடத்தில் நம்மை மறந்து சிரிக்க வைத்த சம்பவங்களில் கேப்டனுக்கும்  முக்கிய பங்கு உண்டு !!...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....