28 ஜனவரி 2013

விஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்!..............

விஸ்வரூப பிரச்சினையில் இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தால் அவர்கள் மீது ஒரு வித வெறுப்பு,இவர்கள் இப்படிதான் என்ற பிம்பம் அவர்களாலே உருவாக்கப்பட்டு விட்டது....இப்படி ஒரு வாதம் பதிவுலகிலும்,வெளியிலும்  பரப்பப்பட்டு வருகிறது...நேற்று கூட ஒரு பதிவர் இது மாதிரி எழுதி இருந்தார்...முதலில் இதற்கு ஒரு விளக்கம்...


அப்படி என்ன இஸ்லாமியர்கள் தவறாக நடந்து கொண்டு விட்டார்கள்?

ரஜினியின் பாபா பட விவகாரத்தில் பா.ம.க நடந்து கொண்டதை போல பட பெட்டியை தூக்கி கொண்டு ஓடினார்களா?


இதே கமலின் "சண்டியர்" என்ற படத்தின் பெயரால் பிரச்சினைகள் வரும் என மிரட்டி அந்த படத்தின் பெயரை மாற்றிய பிறகும் படபிடிப்பை நடத்த விடாமல் ஓட விட்டாரே டாக்டர் கிருஸ்ணசாமி அது போல செய்தார்களா?                            

விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் தியேட்டரை அடித்து நொறுக்கினார்களா ?

எதுவும் இல்லை....நம்மை ஆளும் அரசாங்கத்திடம் தடை கேட்டு மனு கொடுத்து இருக்கிறார்கள்....

ஜனநாயக நாட்டில் ஒரு அரசாங்கத்திடம்  மனு கொடுப்பது ,தடை கேட்பது என்ன அவ்வளவு பெரிய தவறா?இல்லை இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் சென்சார் அனுமதித்த பிறகும் தமிழக அரசு தடை விதிக்கவில்லையா?உதாரணம் இருக்கிறதே டேம் 999 என்ற படம்...

இதனால்  சகோதர பாசத்தோடு பழகி வரும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாமியரகளிடம் இனி அது போல பழக முடியுமா என கேள்வி கேட்பது  எப்படி சரியாகும்?நாளை தங்களோடு பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு பிரச்சினை ,அதற்காக  போராட வேண்டும் என்றாலும் இதே இஸ்லாமிய நண்பரகள் அந்த போராட்டத்திற்கு வருவார்கள்....(உதாரணம் தருமபுரி சம்பவம்)

 உன் மதத்திற்காக நீ போராடினால் அது நம் நட்பை கெடுத்துவிடும் என்று சொல்வது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் என நீதிமன்றத்தில் கொடுப்பார்களே அது போலதான்...எந்தவித நிபந்தனையும் இல்லாததே நட்பு
..நிபந்தனையுடன் கூடியது நட்பல்ல.....எனவே மாற்று மத நண்பர்கள் இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களினால் நட்பு கெட்டுவிடும் என்று கூறுவது  ஏற்புடையதல்ல...



அடுத்து கருத்து சுதந்திரம்....சினிமா என்பது ஒரு தொழில்...பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு  வியாபாரம் ...சினிமாவில் கருத்து சொல்லும் படம்,வெறும் பொழுதுபோக்கு படம் என சினிமா காரர்களே இரண்டு விதமாய் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.....

இதை செய்,அதை செய்யாதே என படங்களில் சமூகத்துக்கு நல்லது,கெட்டது  சொல்வது கருத்து .சொல்லும் படமாம்....இது எதுவும் இல்லாமல் நாலு பாட்டு,5 சண்டை என எடுத்தால் அது பொழுது போக்கு (comersial film) படமாம்...இதை அவர்களே  சொல்லி இருக்கிறார்கள்....

இதே கமல் இந்த படம் சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறார்...."விஸ்வரூபம் எனது பொருள்..அதை எங்கே எப்படி விற்பது என்ற உரிமை எனக்குதான் உள்ளது என்று !அதாவது விஸ்வரூபத்தில் அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை...ஒரு பொழுது போக்கு படமாக எடுத்து இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார்....இப்போதும் அப்படித்தான் சொல்கிறார்....

கமல் வாயாலே ஒப்புக்கொண்டுவிட்டார் நான் இப்படத்தில் கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை நான் வியாபாரம்தான் செய்கிறேன்  என்று!

இப்போது சந்தையில் விற்பனைக்கு வரும் ஒரு பொருளால் நுகர்வோர் யாரேனும் பாதிக்கப்பட்டாலோ ,அல்லது அந்த பொருளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அந்த பொருளை தடை செய்ய கோரும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது அல்லவா?

அதே உரிமைதான் இப்போது விஸ்வரூபம் பிரச்சினையிலும் ..கமலால் பொழுது போக்கும் பொருளாக வியாபாரம் செய்யப்பட்ட  விஸ்வரூபம் படத்தினால் நுகர்வோருக்கு பிரச்சினைகள்  ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில்  அந்த பொருளை தடை செய்ய சொல்லி கேட்பது  எப்படி தவறாகும்?


மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள  வேண்டும் என்பதற்காக இந்த பதிவு....

இந்த பதிவு T N TJ  தலைவர்  PJ  அவர்கள்
 இது சம்பந்தமாக பேசிய  உரையை கருத்தில் கொண்டு ,எனது எண்ணங்களையும் கலந்து எழுதிய பதிவு....

நன்றி: P .J



18 கருத்துகள்:

  1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.பிஜே அவர்கள் விஸ்வரூபம் அடுத்தது என்ன? என்ற தலைப்பில் விஷரூபத்திற்கு
    பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன்,
    விஷகருத்துகள் முறைதனா?

    மற்றும் முஸ்லீம்களுக்கு எதிராக பரப்படும் நச்சு கருத்துகள் அனைத்திற்கும் பதிலடி கொடுக்க வகையில் உரை நிகழ்த்தினார்.


    இங்கே சொடுக்கவும் >>>>> விஷரூபத்திற்கு பாரதிராஜா, ராமதாஸ், தா.பாண்டியண், கமலஹாசன் விஷகருத்துகள் முறைதனா? விஷ்வரூபம் கருத்து சுதந்திரமா?


    பதிலளிநீக்கு
  2. அதே போல் விஸ்வரூபம் படம் வெளிவர வேண்டும் என்று எண்ணுபவர்கள் அனைவரையும் இஸ்லாமிய விரோத ஆட்கள் போல் பொதுமைப் படுத்திப் பார்ப்பதையும் தவிர்க்க வேண்டும். ஒவ்வொருவரும் தங்களுக்கு தெரிந்த வட்டத்துக்குள் தான் சிந்திப்பார்கள்.

    பதிலளிநீக்கு
  3. // உன் மதத்திற்காக நீ போராடினால் அது நம் நட்பை கெடுத்துவிடும் என்று சொல்வது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் என நீதிமன்றத்தில் கொடுப்பார்களே அது போலதான்...எந்தவித நிபந்தனையும் இல்லாததே நட்பு
    ..நிபந்தனையுடன் கூடியது நட்பல்ல.....எனவே மாற்று மத நண்பர்கள் இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களினால் நட்பு கெட்டுவிடும் என்று கூறுவது ஏற்புடையதல்ல... //

    இப்படி ஒருவர் சொன்னால் அவரிடம் தான் குறை இருக்கிறது என்று அர்த்தம்... ஒரு படத்துக்கு இவ்ளோ பேச முடியும்னா, நம் வாழ்வியல நெறிக்காக போராடுவதில் எந்த தப்பும் இல்லை.. இதை புரிந்துகொள்ள முடியாவிட்டால் அது நட்பு அல்ல மச்சான்.. உங்களுக்கு நீங்களே வச்சிகிற ஆப்பு...

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா2:30 AM, ஜனவரி 29, 2013

    http://mudhanmudhalaga.blogspot.com/2013/01/blog-post.html

    பதிலளிநீக்கு
  5. தனக்கு வந்தால் ரத்தம் என்று சட்டத்துக்கு புறம்பாக போராடுவோர், அதே போராட்டத்தை முஸ்லிம்கள் சட்டப்படி செய்தால் தீவிரவாதம் என்கின்றனர். அடக்கொடுமையே.இவ்விஷயத்தில், இதுவரை நாத்திகம், கம்யுனிசம், செகுலாரிசம் என்று ஏதேதோ பெசியோரின் எல்லா கொள்கைகளின் போலி முகமூடியும் கிழிந்து தொங்கி அவர்கள் அனைவரின் ஒரே உண்மை ஆர் எஸ் எஸ் சங் பரிவார பயங்கரவாத முகம் அப்பட்டமாக வெளிப்பட்டது. அந்த வகையில் விஸ்வரூபம் முஸ்லிம்களுக்கு அவர்களின் நண்பர்கள் யார் யார் நண்பர்கள் போல இதுவரை நடித்தோர் யார் யார் என்று புரிய வைத்து விட்டது.

    பதிலளிநீக்கு
  6. மோடிக்காக நாங்க போராடினா அல்லது ஆதரவு தெரிவித்தா உங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையா?
    இந்து மதத்துக்காக பாடுபட கூடிய ஒருவராக நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இதுதான் விதண்டாவாதம் என்பது...!இதற்கு நான் என்ன பதில் சொன்னாலும் குண்டக்கமண்டக்க பதில் தந்து பிரச்சினையை உருவாக்குவேர்கள் என்பதால்....பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்

      நீக்கு
  7. மோடிக்காக நாங்க போராடினா அல்லது ஆதரவு தெரிவித்தா உங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லையா?
    இந்து மதத்துக்காக பாடுபட கூடிய ஒருவராக நாங்கள் பார்க்க வேண்டியிருக்கிறது.

    (என் மதத்துக்காக போராடுவது தப்பு இல்லை தானே)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குஜராத் சம்பவத்தை பெரும்பாலான இந்துகள் கண்டித்து எதிர்த்து இருக்கிறார்கள்...

      மதத்தை தாண்டி மனிதத்தோடு சிந்தித்தோம் ... ஆனால் முஸ்லிம்கள் மட்டும் எல்லாவற்றையும் மதம் என்ற முகமுடியோடு தான் பார்க்கிறார்கள்...

      ஆப்கானிஸ்தானில் நடந்ததை தாண்டி மிகைபடுத்தி கமல் என்ன எடுத்திருக்கிறார் என்று யாராலும் சொல்லமுடியவில்லை... இன்னும் சொல்ல போனால் புத்தர் சிலைகளை தாலிபான்கள் குண்டு வைத்து தகர்த்தது (இதற்கு ஒரு முஸ்லிமும் கண்டனம் தெரிவிக்கவில்லை) போன்ற நிறைய நிகழ்வை கமல் சொல்லாமல் தான் விட்டுள்ளார்..

      நீக்கு

    2. நான் கேட்டது அந்த சம்பவங்களை ஏன் இதுவரை யாரும் படமாக்கவில்லை ...அதற்கு கருத்து சுதந்திரமில்லையா?

      மாற்று மத சகோதரர்களோடு பெரும்பாலும் மனிதத்தோடு பழகும் முஸ்லிம்கள்தான் இருகிறார்கள்..ஒரு சிலரை வைத்து எல்லா முஸ்லிம்களையும் மதத்தோடு சம்பந்தப்படுத்தியே பார்ப்பதுதான் தவறு...

      நீக்கு
  8. உங்கள் கருத்து சரி ..
    ஆனால்

    உங்களுக்கு மோடியை பிடிக்காது ஆனால் ஜெயலலிதாவுக்கு பிடிக்கும் அவர் பிரதமராக இவர் ஆரதவு அளிக்கிறார் . ஆனால் உங்கள் இயக்கங்கள் ஜெ. க்கு ஆதரவாக உள்ளதே என் ?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சில இயக்கங்கள் ஒட்டு மொத்த இஸ்லாமிய மக்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது ஆகாது....

      நீக்கு
  9. பல இஸ்லாமிய நண்பர்கள் , கமலை பிடிக்காதவர்கள் , பொதுவானவர்கள் படத்தை பார்த்துவிட்டு இது தமிழக முஸ்லிம்களுக்கு எதிரானது இல்லை என்று சொன்ன பின்பும் என எதிர்ப்பு ???

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில காட்சிகள் முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளன என்பது உண்மை...

      நீக்கு
  10. இது தவறான முன்னுதாரணம் இதேபோல் இந்து, கிறிஸ்துவ, மற்றும் சாதி அமைப்புக்கள் தடை கேட்கக்கூடும், ஒரு பட கதையில் தீவிரவாதிகள் என்று வரும் போது அதுவும் ஆப்கனிஸ்தானில் நடக்கும் கதை என்று வரும்போது அங்கே இருக்கும் பெயர்தான் வைக்க முடியும் முருகன் என்றும் ராபர்ட் என்றும் வைக்க முடியாது.நிறைய வலைதளங்களில் நாம் பார்த்த படங்களில் தீவிரவாதிகள் கொலைசெய்யும் போது அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பது அந்த வீடியோகளில் பர்ததுதனே. தமிழக இஸ்லாமியர்கள் அனைவரும் நம் இந்திய திரு நாட்டிற்காக உயிரையும் கொடுப்பவர்கள் தான். தமிழகத்தை ஆள்பவர்களின் தொலைகட்சிகாக இந்த நாடகம் நடக்கிறது அதற்கு ஒன்றும் தெரியாத இஸ்லாமியர்கள் பலிகடவக்கப்பட்டிருக்கிரார்கள் என்பதே உண்மையிலும் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நமது இந்தியாவில் நடந்த பல குண்டுவெடிப்புகளுக்கு ஆர் எஸ் எஸ் அமைப்புக்கள்தான் காரணம் என்று உள்துறை அமைச்சர் சொல்லி இருக்கும் பட்சத்தில் அவர்களை காட்டி படம் எடுக்க முடியுமா இவர்களால்?

      முஸ்லிம்களின் உணர்வுகளை ஜெ தனது அரசியல் விளையாட்டுக்கு பயன்படுத்தி கொள்கிறார் என்பதும் உண்மை...ஆட்சேபனைக்குரிய காட்சிகளை நீக்கினால் அந்த படத்தை இஸ்லாமியர்கள் திரையிட எதிர்க்க மாட்டார்கள்..முஸ்லிம்கள் சர்ச்சைக்குரிய காட்சிகளுக்குத்தான் எதிர்ப்பே தவிர தனிப்பட்ட கமலுக்கு அல்ல..

      நீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....