பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பதிவுலகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜனவரி 2013

விஸ்வரூப வில்லங்கத்தை பற்றி மாற்று மத நண்பர்களுக்கு ஒரு சிறு விளக்கம்!..............

விஸ்வரூப பிரச்சினையில் இஸ்லாமியர்கள் நடந்து கொள்ளும் விதத்தால் அவர்கள் மீது ஒரு வித வெறுப்பு,இவர்கள் இப்படிதான் என்ற பிம்பம் அவர்களாலே உருவாக்கப்பட்டு விட்டது....இப்படி ஒரு வாதம் பதிவுலகிலும்,வெளியிலும்  பரப்பப்பட்டு வருகிறது...நேற்று கூட ஒரு பதிவர் இது மாதிரி எழுதி இருந்தார்...முதலில் இதற்கு ஒரு விளக்கம்...


அப்படி என்ன இஸ்லாமியர்கள் தவறாக நடந்து கொண்டு விட்டார்கள்?

ரஜினியின் பாபா பட விவகாரத்தில் பா.ம.க நடந்து கொண்டதை போல பட பெட்டியை தூக்கி கொண்டு ஓடினார்களா?


இதே கமலின் "சண்டியர்" என்ற படத்தின் பெயரால் பிரச்சினைகள் வரும் என மிரட்டி அந்த படத்தின் பெயரை மாற்றிய பிறகும் படபிடிப்பை நடத்த விடாமல் ஓட விட்டாரே டாக்டர் கிருஸ்ணசாமி அது போல செய்தார்களா?                            

விஸ்வரூபம் படத்தை ரிலீஸ் செய்யவிருக்கும் தியேட்டரை அடித்து நொறுக்கினார்களா ?

எதுவும் இல்லை....நம்மை ஆளும் அரசாங்கத்திடம் தடை கேட்டு மனு கொடுத்து இருக்கிறார்கள்....

ஜனநாயக நாட்டில் ஒரு அரசாங்கத்திடம்  மனு கொடுப்பது ,தடை கேட்பது என்ன அவ்வளவு பெரிய தவறா?இல்லை இதற்கு முன்பு எந்த ஒரு படத்திற்கும் சென்சார் அனுமதித்த பிறகும் தமிழக அரசு தடை விதிக்கவில்லையா?உதாரணம் இருக்கிறதே டேம் 999 என்ற படம்...

இதனால்  சகோதர பாசத்தோடு பழகி வரும் மாற்று மத சகோதரர்கள் இஸ்லாமியரகளிடம் இனி அது போல பழக முடியுமா என கேள்வி கேட்பது  எப்படி சரியாகும்?நாளை தங்களோடு பழகும் மாற்று மத சகோதரர்களுக்கு ஒரு பிரச்சினை ,அதற்காக  போராட வேண்டும் என்றாலும் இதே இஸ்லாமிய நண்பரகள் அந்த போராட்டத்திற்கு வருவார்கள்....(உதாரணம் தருமபுரி சம்பவம்)

 உன் மதத்திற்காக நீ போராடினால் அது நம் நட்பை கெடுத்துவிடும் என்று சொல்வது நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் என நீதிமன்றத்தில் கொடுப்பார்களே அது போலதான்...எந்தவித நிபந்தனையும் இல்லாததே நட்பு
..நிபந்தனையுடன் கூடியது நட்பல்ல.....எனவே மாற்று மத நண்பர்கள் இந்த படத்திற்கு இஸ்லாமியர்கள் நடத்திய போராட்டங்களினால் நட்பு கெட்டுவிடும் என்று கூறுவது  ஏற்புடையதல்ல...



அடுத்து கருத்து சுதந்திரம்....சினிமா என்பது ஒரு தொழில்...பல கோடி ரூபாய் புழங்கும் ஒரு  வியாபாரம் ...சினிமாவில் கருத்து சொல்லும் படம்,வெறும் பொழுதுபோக்கு படம் என சினிமா காரர்களே இரண்டு விதமாய் பிரித்து வைத்து இருக்கிறார்கள்.....

இதை செய்,அதை செய்யாதே என படங்களில் சமூகத்துக்கு நல்லது,கெட்டது  சொல்வது கருத்து .சொல்லும் படமாம்....இது எதுவும் இல்லாமல் நாலு பாட்டு,5 சண்டை என எடுத்தால் அது பொழுது போக்கு (comersial film) படமாம்...இதை அவர்களே  சொல்லி இருக்கிறார்கள்....

இதே கமல் இந்த படம் சம்பந்தமாக சில நாட்களுக்கு முன்பு நடந்த பிரச்சினையில் என்ன சொல்லி இருக்கிறார்...."விஸ்வரூபம் எனது பொருள்..அதை எங்கே எப்படி விற்பது என்ற உரிமை எனக்குதான் உள்ளது என்று !அதாவது விஸ்வரூபத்தில் அவர் கருத்து எதுவும் சொல்லவில்லை...ஒரு பொழுது போக்கு படமாக எடுத்து இருக்கிறேன் என சொல்லி இருக்கிறார்....இப்போதும் அப்படித்தான் சொல்கிறார்....

கமல் வாயாலே ஒப்புக்கொண்டுவிட்டார் நான் இப்படத்தில் கருத்துக்கள் எதுவும் சொல்லவில்லை நான் வியாபாரம்தான் செய்கிறேன்  என்று!

இப்போது சந்தையில் விற்பனைக்கு வரும் ஒரு பொருளால் நுகர்வோர் யாரேனும் பாதிக்கப்பட்டாலோ ,அல்லது அந்த பொருளால் ஏதேனும் பக்கவிளைவுகள் ஏற்பட்டாலோ அந்த பொருளை தடை செய்ய கோரும் உரிமை நுகர்வோருக்கு உள்ளது அல்லவா?

அதே உரிமைதான் இப்போது விஸ்வரூபம் பிரச்சினையிலும் ..கமலால் பொழுது போக்கும் பொருளாக வியாபாரம் செய்யப்பட்ட  விஸ்வரூபம் படத்தினால் நுகர்வோருக்கு பிரச்சினைகள்  ஏற்படும் வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில்  அந்த பொருளை தடை செய்ய சொல்லி கேட்பது  எப்படி தவறாகும்?


மாற்று மத சகோதரர்கள் முஸ்லிம்களின் உணர்வுகளை புரிந்துகொள்ள  வேண்டும் என்பதற்காக இந்த பதிவு....

இந்த பதிவு T N TJ  தலைவர்  PJ  அவர்கள்
 இது சம்பந்தமாக பேசிய  உரையை கருத்தில் கொண்டு ,எனது எண்ணங்களையும் கலந்து எழுதிய பதிவு....

நன்றி: P .J



15 செப்டம்பர் 2012

மத சண்டைகளை உருவாக்கும் ஐடியா மணி.....என்ன முடிவெடுக்க போகிறது தமிழ்மணம்?


நண்பர் ஐடியா  மணிக்கு என்னதான் பிரச்சினை?ஆரோக்யமாக  இருக்கும் பதிவுலகத்தை ஐடியா மணி     சண்டை களமாக  மாற்றி வருகிறார்....

முஸ்லிம்களா ?முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனா  ?முஸ்லிம்களே அவருக்கு பிடிக்காதா?நோ பிராப்ளம்...இல்லை குரானை  வெறுக்கிறாரா?வெறுக்கட்டும்...ஆனால் விமர்சிப்பதில் ஒரு கண்ணியம் வேண்டும்,நாகரிகம் வேண்டும் .....ஆனால் ஐடியா மணி பயன்படுத்தும் வார்த்தைகள்  எந்த சர்ச்சைகளுக்கும்  சிக்கி கொள்ளாமல்  ஐடியா மணி பக்கமோ,சுவன பிரியன்  பக்கமோ  சாய்ந்து இருக்காமல்  பொதுவாக பதிவெழுதும் என்னை போன்ற முஸ்லிம்  பதிவர்களின் மனதை  காயப்படுத்தி வருகிறது ...

தினம் தினம் இஸ்லாத்தை பற்றி   குறை கூறி அவதூறான வார்த்தைகளால்  பதிவிடுவதன் அவசியம் ஏன்?

அவருக்கும் சுவன பிரியனுக்கும்   பிரச்சினை என்றால்  அவர் எதற்காகக்  குரானையும்  இஸ்லாத்தையும் இழுக்க வேண்டும்?


குர்ஆன்   புனிதநூலாக  இருந்தால் அவருக்கு என்ன  இல்லாவிட்டால்  அவருக்கு என்ன?குரான் இஸ்லாமியர்களுக்குத்தான்  புனித நூல்...நான் அல்லவா  அது புனித நூலா  புதிரா என கவலைப்பட வேண்டும்?என் வீடு எப்படி இருந்தால் அவருக்கு என்ன?அவரவர் வீடு அவரவருக்கு...அவரவர்  மதம் அவரவருக்கு...

குர் ஆனில்   சொல்லப்பட்ட  விசயங்களை  பின்பற்றும்  இஸ்லாமியர்களுக்கு  அல்லவா  அது தவறா   இல்லை சரியா என  சந்தேகம் இருக்க வேண்டும்?பின்பற்றாத ஐடியா மணிக்கு என்ன கவலை?

இஸ்லாத்தை பற்றிய உங்களின் சந்தேகங்களை  நாகரிகமான  வார்த்தைகளை  பயன்படுத்தி கேளுங்கள்....பதில் தர  சக  இஸ்லாமிய பதிவர்கள்  தயாராக  இருக்கிறார்கள்....சக நாத்திக பதிவர்கள்  அவர்களின் விமர்சனங்களை  கண்ணியமான  முறையில்தான்  விவாதமாக  எழுதி வருகிறார்கள்....ஆனால் இவர் ?விவாதமாக  எழுதாமல்  விவகாரமாகவே எழுதி வருகிறார்...

இஸ்லாமை பற்றியும்  குர்ஆனை  பற்றியும்   தேவை இல்லாமல் கண்டபடி எழுதி  மத பயங்கரவாதத்தை   ஐடியா மணி  பதிவுலகில்  தூண்டி விட்டு கொண்டு இருக்கிறார்

ஐடியா மணி  அதிகமாக எழுதாத  இந்த மூன்று மாத காலங்களில் பதிவுலகில் எந்த சண்டை சச்சரவுகளும் இல்லை....இவர்தான் அடுத்தவர்களின் மத சம்பந்தப்பட்ட விசயங்களை  விரோதத்தை  வளர்க்கும் வார்த்தைகளால் எழுதி மத சண்டைகள்  ஏற்பட  காரணமாகி  கொண்டு இருக்கிறார்...

உங்களுக்கு முஸ்லிம்களை பிடிக்காதா?குர்ஆனை  பிடிக்காதா?அது பற்றி எனக்கோ சக முஸ்லிம் பதிவர்களுக்கோ  எந்த பிரச்சினையும் இல்லை...ஆனால் பிடிக்காத  ஒன்றை பற்றி தினம் தினம் எழுத வேண்டிய அவசியம் என்ன?

இதுவரை சக இஸ்லாமிய பதிவர்கள் மற்ற  மத கடவுள்களை  பற்றி எந்த பதிவிலும்  நீங்கள் எங்கள்  இறைவனை பற்றி ,குரானை  பற்றி எழுதி இருப்பதை போல நிச்சயம் எழுதி இருக்க மாட்டார்கள் ...ஏனென்றால் மற்ற  மத கடவுள்களை  திட்டாதீர்  என குர் ஆன்  கூறி இருக்கிறது...

பதிவுலகில்  மத சண்டைகள்  தேவை இல்லாதது....அதை உருவாக்கும் ஐடியா மணியின் பதிவுகள்  அதை விட தேவை இல்லாதது....மத சண்டைகளை ,வீண்  கலவரங்களை, குழப்பங்களை  உருவாக்கும் பதிவுகளை  தமிழ்மணம் திரட்டியில்  இணைத்து கொள்ள அனுமதிப்பது  தேவையோ தேவை இல்லாதது....

தமிழ்மணம்  இதுபோன்ற மத விரோதங்களை ,மத சண்டைகளை  உருவாக்கும் பதிவுகளை  தங்கள்  திரட்டியில்  இணைத்து கொள்ளாமல் இருப்பது  பற்றி விரைவில் முடிவெடுப்பது  எல்லாருக்கும்  நல்லது...

உடனே ஐடியா மணி  என்னை திட்டியோ  விமர்சித்தோ பதிவெழுத தயாராகி இருப்பார் ..அது மேலும் மேலும் பதிவுலகில் விரோதங்களை  வளர்க்கவே உதவுமே தவிர  வேறு ஒன்றுக்கும் உதவாது....நான்  இது போன்ற மத சண்டைகள் பதிவுலகில் முடிவுக்கு வரணும் என்ற நோக்கில்  இந்த பதிவை எழுதி இருக்கிறேன்...ஆனால் முடிவு ஐடியா மணி  மற்றும் தமிழ்மணம்  கைகளில் ...