13 பிப்ரவரி 2013

வினோதினியின் இந்த பேச்சை கேட்ட பின்புமா அந்த சட்டங்கள் வேண்டாம்?!....

பாதிக்க பட்டவர்களுக்குதான்யா வலி தெரியும்....இறக்கும் முன் அந்த சகோதரி பேசிய வார்த்தைகளை  .....அந்த சகோதரியின் பேச்சை கேட்டுவிட்டு முடிவு செய்யுங்கள் ..அவனுக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் எனஇன்று நம்மிடம் இல்லாத ஆசிட் வீச்சால் உயிர் இழந்த என் சகோதரி வினோதினிக்கு என் ஆழ்ந்த இரங்கல்கள்....

வேறு என்ன செய்ய முடியும்?இது போன்ற குற்றங்களுக்கு மரண தண்டனை வேண்டும் என என் பிளாக்கில் கிறுக்கத்தான் முடியும்...!

அட இப்பவும் இந்த சட்டமெல்லாம் காட்டுமிராண்டி சட்டம் என காட்டுமிராண்டிகளை காப்பாற்றும் ஒரு கூட்டத்தின்  ஆதரவை எதிர்கொண்டுதான்  இதை நானும் பதிவு செய்ய முடியும்..


என் மகள் பட்ட அவஸ்தையை போல அந்த பாவியும் அவஸ்தை பட வேண்டும் என சொல்லும் அந்த பாசமிக்க தந்தைஇடம் போய்  இந்த சட்டமெல்லாம் காட்டுமிராண்டி சட்டம் என சொல்ல யாருக்கு தைரியம் இருக்கு ?

 நோ நோ அப்படி எல்லாம் செய்ய கூடாது ...அந்த குற்றவாளிக்கு இந்த  தண்டனையை கொடுத்தால் போன உயிர் திரும்ப வந்துவிடுமா என மகளை பறிகொடுத்து கதறும் அந்த தந்தையிடம் கூற யாருக்கு தைரியம் இருக்கு?

அந்த கொடியவனுக்கு  நீங்கள் சொல்வதுபோல தண்டனை கொடுத்தால் மட்டும் இனி இதுபோன்று ஆசிட் வீச்சுக்கள் குறைந்து விடுமா என இறந்துபோன அந்த அப்பாவி பெண்ணின் பெற்றோர்களிடம் வாதம் செய்ய யாருக்கு தைரியம் இருக்கு?

அய்யா மனித உரிமை ஆர்வ(கோளாறுகளே )ளர்களே !

இப்போது என்ன சொல்கிறீர்கள்?

தினம் தினம் இதுபோல பெண்கள் பாலியல் தொந்தரவுகளால்  பாதிக்கப்பட்டு இறந்தாலும் சட்டம் மட்டும் லேசாகவே வேண்டும்..!என்ன ஒரு தர்ம பார்வை!

பாதிக்கப்பட்டது நாமாக இல்லாத வரை இந்த தர்ம பார்வை தான் பெரும்பாலானாவர்களுக்கு நியாயமாக தெரியும்...

எனக்கு கிடைக்காவிடில் உனக்கு ஆசிட் தான், ஆனால் எனக்கோ சில வருட சிறை தண்டனைகள் ...அதுவும் வழக்கு ஜெயித்தால் தான்...என கொக்கரித்து அராஜகம் பண்ணும்  மிருகங்களுக்கு வாழும் உரிமையை கொடுப்பதுதான் மனித உரிமையா?

அந்த சகோதரியின் தந்தை  கதறுவதுபோல  அந்த அயோக்கியனுக்கு ஆசிட் ஊற்ற வேண்டும்...அட் லீஸ்ட்  மரண தண்டனையாவது  கிடைக்க வேண்டும் சீக்கிரமே ...

 அட...!மைனஸ் ஒட்டு போட்டு அந்த காட்டுமிராண்டிக்கு  ஆதரவு  தெரிவிக்கும்  நண்பர்கள் யாரென்று  தெரிந்து கொள்ள ஆசை...அட சொல்லிட்டு போடுங்கப்பா...