31 ஜனவரி 2011

விடைபெறுகிறேன் நண்பர்களே......


ஈழ தமிழர் வீடுகளில் இழவு தீ பற்றி கொண்டு எறிந்த போது சும்மா இருந்த கருணாநிதி இப்பொது சீட் பேரம் பேச டெல்லிக்கு போயிருக்கிறார்....

தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை குருவிகளை சுடுகிறது போல சுட்டு தள்ளியபோது கடிதம் எழுதிய கருணாநிதி இப்போது கூட்டணி பற்றி பேச டெல்லிக்கு போகிறார்.....என்ன கொடுமை சார்?

காலம்தான் இவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும்....ஓட்டுக்கள் மூலமாக....


நண்பர்களே... நான் விடைபெறுகிறேன்.....தொழில் நிமித்தமாக சில நாட்கள் என் கிறுக்கல்களை நான் கிறுக்க இயலாது....அதைவிட உங்களின் பதிவுகளையும் நான் வாசிக்க முடியாது.....எனக்கு வருத்தமாக இருக்கிறது....

இந்த பதிவுலகில் நான் பல விசயங்களை தெரிந்துகொண்டேன்.....கற்றுகொண்டேன்....எனக்கு ஆதரவு அளித்த அணைத்து நண்பர்களுக்கும் எனது நன்றி.....மீண்டும் விரைவில் முடிந்தால் சில நாட்களுக்குள் உங்களை சந்திக்கிறேன்.....

எனது எழுத்துக்களை வாசித்து என்னை நேசித்த அன்பு நண்பர்களுக்கு நன்றி நன்றி.....வருகிறேன்....

30 ஜனவரி 2011

கொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள்...


பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி தந்தாலே போதும் தசைத் திசுக்கள் அதிகரிக்கும். இதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும்.

உடற்பயிற்சி இல்லாததால் உடற்பருமன் ஏற்பட்டிருந்தால் நடத்தல், நீந்துதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.

15 நிமிடங்கள் நடந்தாலே போதும் சுமார் 60 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் காலைப் பொழுதில் நடந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்பு விரைவில் எரிக்கப்படும். இதய நோய் இருப்பவர்கள், கால் மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நேரத்திற்குச் சாப்பிடுவது முக்கியமானது. ஒரே நேரத்தில் அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, அவ்வ‌ப்போது சாப்பிட்டால் கொழுப்பு தேங்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. இவ்வாறு சிறுகச் சிறுகச் சாப்பிடுவதால் ‌ஜீரண‌ம் எ‌ளி‌தி‌ல் நட‌ந்து உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொழுப்புச் சத்துக்களை விட கார்போஹைட்ரேட் பொருட்கள்தான் ‌சீக்கிரமாக எரிக்கப்படும். எனவே கொழுப்புச் சத்துள்ள பொருட்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

சாப்பிட்டவுடன் படுத்துவிடாமல் சிறிது தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் ஜீரணத்திற்கு உதவியாகவும், காலையில் எழும்போது மந்தத்தன்மை இல்லாமலும் இருக்கும். கொழுப்பும் தேங்காது. நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது.

பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரிடம் பேசுவதென்றாலும் கூட செல்ஃபோனை எடுத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம். தோட்டம் இருந்தால் காலையிலோ மாலையிலோ சிறு சிறு வேலைகளைச் செய்யலாம்.

இதேபோல, பக்கத்தில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு நடந்து சென்று அவற்றை வாங்கி வரலாம். அலுவலகத்தில் லிஃப்டுகளைப் பயன்படுத்தாமல் படிகளின் மூலம் ஏறி இறங்குவதாலும் கூட தேக்கிவைக்கப்பட்ட கொழுப்பு வேகமாக எரிக்கப்பட்டு உடல் நலம் சீராகும்.

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் உடம்பில் கொழும்பபுச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடற்பருமனையும் தவிர்த்துவிடலாம்.

நான் படித்ததை பகிர்ந்துள்ளேன்.....

29 ஜனவரி 2011

ராஜபக்சேவுக்கு எதிராக அமெரிக்காவில் போர்க்குற்ற வழக்கு!


போர்க்குற்றவாளி என பல நாடுகளாலும் குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக அமெரி்க்க நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.( பூனைக்கு இப்போதாவது மணி கட்டப்பட்டதே ..சந்தோசம்..)

இலங்கை ராணுவத்தினரின் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்களால் தங்களது உறவினர்கள் கொல்லப்பட்டனர் என்று அமெரிக்காவில் வாழும் 3 தமிழர்கள் வாஷிங்டன் மாவட்ட நீதிமன்றத்தில் இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளனர்.

இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ராஜபக்சே கைது செய்யப்பட வேண்டும் என்றும், தங்களுக்கு நஷ்ட ஈடாக 30 மில்லியன் டாலர்களை அவரிடமிருந்து பெற்றுத்தர வேண்டும் என்றும் அந்த வழக்கின் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அமெரிக்க நாட்டின் சட்டத்தின்படி போர்க்குற்றம், மனித உரிமை மீறல், படுகொலை ஆகியவற்றில் தொடர்புடைய நபர்கள் அந் நாட்டுக்கு வந்தால் அவர்களை கைது செய்ய அமெரிக்க நீதிமன்றங்களுக்கு உரிமை உள்ளது.

இந்நிலையில், அமெரிக்கா வந்த ராஜபக்சே பிப்ரவரி 3-ம் தேதி தான் நாடு திரும்ப திட்டமிட்டிருந்ததாகவும், ஆனால் தன் மீது வழக்கு பதிவு செய்யப்படவுள்ள தகவல் அறிந்து அவசரமாக அமெரிக்காவில் இருந்து வெளியேறியதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்துள்ள ராஜபக்சேவின் செய்தித் தொடர்பாளர் பந்துல ஜயசேகர, "இந்த வழக்கு வெறும் ஊடகப் பரபரப்புதான். பணம் கறக்கும் முயற்சி. இதற்கு நாங்கள் பணிய மாட்டோம்", என்றார்....

பார்ப்போம்...ஓநாய்கள் என்ன ஆகிறார்கள் என்று....

ரஜினியின் அடுத்த படம் ராணா... மூன்று வேடங்களில் நடிக்கிறார்!


சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் அடுத்த படத்தின் பெயர், ராணா. இந்தப் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்கிறார் ரஜினி.

முத்து, படையப்பா ஆகிய மெகா ஹிட் படங்களுக்குப் பிறகு ரஜினியுடன் இந்தப் படத்தில் கைகோர்க்கிறார் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார்.

ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகம் தரும் மற்றொரு செய்தி, இந்த ராணா, அனிமேஷன் படம் அல்ல… 100 சதவீத பொழுதுபோக்குகள் நிறைந்த பக்கா ரஜினி படம்!

தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டுப் பதிப்புகளாக வெளியாகிறது.

எந்திரன் தயாரிப்பு வாய்ப்பை நழுவவிட்ட ஈராஸ் என்டர்டெயின்மெண்ட், இந்த முறை பெரும் பொருட்செலவில், சௌந்தர்யாவின் ஆக்கர் ஸ்டுடியோவின் துணை நிறுவனமான ஹரா பிக்சர்ஸுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது.

தொழில்நுட்ப கலைஞர்களைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட எந்திரன் குழு அப்படியே இந்தப் படத்தில் மீண்டும் இணைகிறது.

ரத்னவேல் ஒளிப்பதிவை கவனிக்க, ஏ ஆர் ரஹ்மான் இசையமைக்கிறார். படத்தொகுப்புக்கு ஆன்டனி, கலை இயக்கத்தை ராஜீவன் என முன்னணி கலைஞர்கள் பணியாற்றுகிறார்கள்.

ரஜினி ஜோடியாக நடிக்க தீபிகா படுகோனை அணுகியுள்ளனர்.

மூன்று முகம், ஜான் ஜானி ஜனார்தன் படங்களுக்குப் பிறகு ரஜினி மூன்று வேடங்களில் நடிக்கும் படம் ‘ராணா’தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் குறித்து ஈராஸ் இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் சுனில் லுல்லா கூறுகையில், “இந்திய சினிமாவின் நிகரில்லாத சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் கைகோர்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். முற்றிலும் வித்தியாசமான, முழு நீள ரஜினி படமாக ராணா உருவாகிறது. இந்திய சினிமா ரசிகர்களுக்கு இந்தப் படம் முற்றிலும் மாறுபட்ட அனுபவத்தைத் தரும்…”, என்றார்.

ராணாவின் தொழில் நுட்ப இயக்குநர் என்ற புதிய பொறுப்பேற்றுள்ள சௌந்தர்யா ரஜினிகாந்த் கூறுகையில், “ஈராஸ் நிறுவனத்துடன் இணைவதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யும் படமாக ராணா அமையும்,” என்றார்.

ராணாவின் தொழில்நுட்பப் பணிகளை ஹாலிவுட்டின் புகழ்பெற்ற ஐக்யூப் ஸ்டுடியோஸ் நிறுவனத்தினர் கவனிக்கின்றனர். இந்த நிறுவனம் ஸ்பெஷல் எபெக்ட்ஸுக்காக எம்மி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

மார்ச் மாதம் படப்பிடிப்பு துவங்குகிறது.

28 ஜனவரி 2011

எம் ஆர் ராதா ஆவேசம்...(இறந்தவர்கள் மீண்டும் வந்தால்)


இறந்தவர்கள் மீண்டும் வந்தால் நாட்டு நடப்பை பார்த்து என்ன சொல்வார்கள்..?

எம் ஆர் ராதா சொல்கிறார்...

என்னடா இது நாடு.....
பாலம் கட்டுவதி ஊழல், சாலை போடுவதில் ஊழல்...
காமன்வெல்த் ஊழல், தியாகிகளுக்கு வீடுகள் ஒதுக்குவதில் ஊழல்...

அது என்னடா அது ஸ்பெக்ட்ரம்? ஊத்தி குடிக்கிற ரம்மைவிட ஸ்பெக்ட்ரம் நியூஸ் ரொம்ப ஹாட்டா இருக்கு.....

வெங்காயம் விலை என்னடா இமயமலை உயரத்துல இருக்கு.....பெரியார் இருந்தா வெங்காயம்னு சொல்லக்கூட யோசிப்பாரு.....

என்னங்கடா இந்த அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடிக்கிறாங்கலேன்னு பார்த்தா.....அதுக்கே காரணமே நம்ம வாக்கால பெருமக்கள்தான்னு இப்பதான் புரியுது...

அவன் ஆயிரம் ரூபாய் கொடுத்து உங்களிடம் ஒட்டு வாங்கி பல்லாயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கிறான்....ஓட்டுக்கு காசு வாங்கிகொண்டு எந்த மூஞ்சியை வைத்து கொண்டுடா நீங்க ஒட்டு போட்ட அரசியல்வாதிங்க கிட்ட கேள்வி கேட்பிங்க ?

தொலைக்காட்சி நிகழ்சிகளில் எஸ் எம் எஸ் மூலம் உங்கள் காசை செலவழித்து யாருக்கோ ஒட்டு போடும் நீங்கள் உங்களுக்கு பணிபுரிய போகும் ஒருத்தனிடம் காசு வாங்கிகொண்டு ஒட்டு போடுகிறீர்களே ...இது எவ்வளவு பெரிய முரண்பாடு...?என்னங்கடா கோக்குமாக்கு இது?

ஏன் ஓட்டுக்கு காசு கொடுக்காத உங்க காலத்துல இந்த மாதிரி ஊழல் எல்லாம் இல்லையான்னு கேட்குறிங்களா? அட பாசக்கார பாவிகளா...எங்க காலத்துல ஊழல் பண்ணினான்...மக்களுக்கு கொஞ்சம் பயந்துகொண்டே.....ஆனா இப்போது காசு கொடுக்கும் தைரியத்தில் பயமில்லாமல் தவறு செய்கிறான்....

என்ன பண்றது...நான் சொல்லியா நீங்க திருந்த போறிங்க...போடுங்க போடுங்க... காசு வாங்கிகொண்டு போடுங்க...உங்ககிட்டஆயிரங்கள் கொடுத்துவிட்டு அவன் எண்ணமுடியாத தொகைகளில் கொள்ளை அடிக்கட்டும்...நான் போயி கல்லறையிலே படுத்துகிறேன்...

27 ஜனவரி 2011

பயோ டேட்டா : ராமதாஸ்


பெயர்: மருத்துவர் ராமதாஸ்


தொழில்:அரசியல் வியாபாரி


பிடித்த விளையாட்டு: அந்தர் பல்ட்டி


பிடித்த நிறம்: பச்சோந்தியின் நிறம்


பிடித்த வார்த்தை: மத்திய மந்திரி அன்புமணி


பொழுதுபோக்கு: கூட்டணி விட்டு கூட்டணி மாறி ஓடிபிடித்து விளையாடுவது


சாதனை: சாலைகளில் மரம் வெட்டி போட்டு போட்டு கட்சியை வளர்த்தது


வேதனை: அன்புமணி ராஜ்ய சபா எம் பி ஆகாதது


சோதனை: இதுவரை யாரும் கூட்டணிக்கு அழைக்காமல் காமெடி பீஸ் ஆக்கியது


கருணாநிதி: நம்பவைத்து கழுத்தை அறுத்தவர்


ஜெயலலிதா: நம்பினாலும் நம்பாவிட்டாலும் கழுத்தை அறுப்பவர்


அன்புமணி: இலவச கோட்டாவில் ( அதாங்க ராஜ்ய சபா) எம் பி ஆவதற்காகவே பிறந்தவர்


காடுவெட்டி குரு : கருணாநிதியை திட்டுவதற்காகவே கட்சியில் இருப்பவர்


தி மு : குடும்பத்துக்காக நடத்தப்படும் கட்சி


பா : பாசமுள்ள மகனுக்காக (அன்புமணி ) நடத்தப்படும் கட்சி


நடிகர்கள்: அரசியலுக்கு வரக்கூடாதவர்கள்


லட்சியம்: ஜாதியின் பெயரால் அரசியல் நடத்தி ஆட்சியில் அமருவது...

26 ஜனவரி 2011

பொங்கல் படங்களின் வசூல்...ஜெயித்தது யாரு?

வலைப்பதிவு நண்பர்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துக்கள்....

நம்ம டாக்குடரின் படம் பொங்கல் ரேசில் சறுக்கி விட்டது.....படம் ஓரளவு நல்ல இருந்தாலும் முந்தைய படங்களின் தோல்விகளால் மக்கள் இப்பவும் டாக்டரின் படத்துக்கு போக தயங்குகின்றனர் என்பதையே இது காட்டுகிறது...

பொங்கல் ரேசில் சிறுத்தை ஒரே பாய்ச்சலாக பாய்ந்து வசூலில் முதலிடத்தை பிடித்துள்ளது.....

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் சென்ற வார இறுதியில் ஆடுகளத்தை இரண்டாமிடத்துக்கு தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளது, கார்த்தியின் சிறுத்தை. வெளியானது முதல் மூன்றாவது இடத்திலேயே உள்ளது விஜய்யின் காவலன்.

காவலன் சென்ற வார இறுதியில் 47.9 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான அதன் மொத்த சென்னை வசூல், 1.51 கோடி.

இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கும் ஆடுகளம் சென்ற வார இறுதியில் 49.07 லட்சங்களை வசூலித்துள்ளது. இதுவரையான ஆடுகளத்தின் சென்னை வசூல், 1.70 கோடி.

சிறுத்தை சென்ற வார பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல், 62.51 லட்சங்கள். காவலன், ஆடுகளம் இரண்டையும்விட மிக மிக அதிகம். இதுவரையான சிறுத்தையின் சென்னை வசூல், 1.98 கோடி.

சென்ற வார இறுதி வசூலில் மட்டுமில்லாது மொத்த வசூலிலும் விஜய்யின் படம் பின்தங்கியே உள்ளது. பாக்ஸ் ஆஃபிஸின் நான்காவது இடத்தை இளைஞனும், ஐந்தாவது இடத்தை மன்மதன் அம்பும் பிடித்துள்ளன.

25 ஜனவரி 2011

வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி!-பிரணாப் முகர்ஜி


வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.

வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை பல தரப்பிலும் பலமாக எழுந்தது.

அதன்பேரில் வெளிநாட்டு கறுப்புப்பணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


ஸ்விட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது. எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம்.( அட பாவிகளா...தொகை கம்மியா தெரியுதே )

இந்த கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ( சுமார் ஐம்பது வருடங்கள் பேச்சு வார்த்தை நடக்குமா?)

கடந்த 18 மாதங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கோடியை கண்டுபிடித்து இருக்கிறோம். வெளிநாடுகளில் வருவாய் ஈட்டும் இந்தியர்கள் பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம்.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்க தனிக்குழு உருவாக்கி உள்ளோம். கறுப்பு பண மீட்பு விவகாரத்தின் போது பன்னாட்டு தொடர்புகளை துண்டிக்க இயலாது. ஏனெனில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள வங்கிகள் அமைந்துள்ள நாடுகள் நம்முடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.

சுவிஸ் நாடு இதுவரை தன் நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றி இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் ரகசியத்தை வெளியிடவில்லை. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் கூட்டணி மந்திரி சபை கவிழ்ந்து விடும் என்று மத்திய அரசு ஒருபோதும் பயப்படவில்லை.(ஹி ஹி சும்மா பம்மாத்து பண்ணாதிங்க குருவிக்கூடு தலையா)

அதேநேரம், இதுவரை அரசு திரட்டியுள்ள கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட முடியாது. காரணம்(ஹி ஹி நீங்க எல்லாரும் அதுல இருப்பிங்கன்னுதானே ) இந்த விஷயத்தில் தகவல் தந்த நாடுகளின் நிபந்தனையையும் மீற முடியாது. சில ரகசியங்களை பாதுகாப்பதாக உறுதியளித்தால்தான், மேலும் விவரங்களைப் பெற முடியும், என்றார்.

நல்லா சொல்றாங்கயா விபரங்களை....

பயோ டேட்டா: விஜய் (வருங்கால CM )


பெயர்: விஜய்

அடைமொழி: இளையதளபதி விஜய்..( எந்த போருக்கு தளபதியாக போனார்,இன்னும் எவ்வளவு வருடங்களுக்கு "இளைய " தளபதியாகவே இருப்பார் என்றெல்லாம் கேட்ககூடாது...)

டாக்டர் பட்டம்: பிளஸ் டூ பாஸ் பண்ணியதற்காக கிடைத்தது....

தொழில்: ரௌடிகளை கொத்துபரோட்டா போடுவது ....சினிமாவில்தான்....

மேனரிசம்: பொது நிகழ்சிகள்,கலைவிழாக்களில் பல கோடிகளை பறிகொடுத்ததுமாதிரி இருப்பது....

பொழுதுபோக்கு: ஆக்சிலேட்டரை வாயால் பிடித்துகொண்டு கார் ஓட்டுவது, ஹெலிகாப்டரில் தொங்கியபடி சண்டை போடுவது....( சினிமாவில்தான்....)


சாதனை :: தொடர்ந்து எஸ் எம் எஸ் மற்றும் இணையதளங்களில் நம்பர் ஒன் காமெடியனாக இருப்பது....


கருணாநிதி: முன்பு ஆகாதவர் ..கூடிய சீக்கிரம் ஆக கூடியவர்


ஜெயலலிதா: அணிலாக பயன்படுத்தியவர் !


ராகுல்காந்தி: இளைஞர் காங்கிரஸில் சேரும் வயதை தாண்டிவிட்டார் என்று சொல்லி உண்மையான வயதை வெளிகாட்டியவர் ...


அப்பா: கூட இருந்து குழி பறித்து கொண்டு இருப்பவர்..( அரசியல் குழி தாங்க)


ஆசை: கட்சி ஆரம்பிக்க நினைப்பது


பேராசை: அப்படியே முதல்வர் ஆக நினைப்பது....


ரசிகர்கள்: தன்னை நிஜ ஹீரோவாக நினைக்கும் அப்பாவிகள்....


ரசிகர்மன்றங்கள்: அரசியலில் நுழைவதற்கு நுழைவு சீட்டு ..


லட்சியம்: வேற என்ன ...??? ....நாட்டை ஆள்வதுதான்....


தமிழக மக்கள்: நடிகர்களை நாடாள வைப்பவர்கள்.....


(கொசுறு: CM என்றால் சிரிப்பு மனிதன், சிறந்த மனிதன் என்று அவரவர் இஷ்டத்துக்கு நினைத்து கொள்ளலாமுங்கோ..!)

24 ஜனவரி 2011

தலைவரா?முதல்வரா?...ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம்...


சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார். இதன் மூலம் மீண்டும் அவர் முதல்வர் பதவியை வகிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலமைச்சர் என்று சொல்லும்போது, நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்று சொல்லுகிற நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், தலைவர் என்று சொல்வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

முதல்வர் இப்படிக் கூறியதன் மூலம் மீண்டும் முதல்வர் பதவியில் கருணாநிதி அமர மாட்டாரோ என்ற எண்ணம் வலுத்துள்ளது.

கருணாநிதி முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தது 1969ம் ஆண்டு. அதன் பின்னர் 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திமுகவை வெற்றிக்கு இட்டுச் சென்று முதல்வரானார். 6வது முறையும் கருணாநிதியே முதல்வராவார் என்று திமுகவினர் உற்சாகத்துடன் கூறி வரும் நிலையில் கருணாநிதியின் இன்றையப் பேச்சு பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

23 ஜனவரி 2011

விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி ....விஜய்யின் அப்பா...


'ரசிகர்கள் விரும்புவதால் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி என அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகரன் கூறியுள்ளார்.

நடிகர் விஜய் அரசியலில் ஈடுபடப் போகிறார் என்றும், அடுத்த மாதம் ரசிகர் மாநாடு கூட்டி அதை அறிவிக்கிறார் என்றும் செய்திகள் வெளியாகின்றன. இன்னொரு பக்கம் அ.தி. மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வார் விஜய் என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து விஜய் தீர்மானமான எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆனாலும், அரசியலில் இறங்குவது பற்றி இப்போதைக்கு ஒன்றும் சொல்வதற்கில்லை என்று கூறினார், நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில்.

இதுபற்றி விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியதாவது:

"விஜய்யைப் போல சினிமாவில் பிரபலமாக உள்ள கதாநாயகன் யாராக இருந்தாலும் அரசியலில் ஈடுபடுவதை சில சக்திகள் விரும்புவது இல்லை. அந்த நடிகரால் தங்கள் எதிர்கால அரசியல் பாதிக்கப்படுமோ என்ற அவர்கள் அச்சம்தான் இதற்குக் காரணம். அப்படிப்பட்டவர்கள் யார் என்பது மக்களுக்கு தெரியும்.

அரசியல் சார்புள்ள படங்களுக்கு எதிர்ப்புகள் வருவது சகஜம். ஆனால் காவலன் அரசியல் படம் அல்ல. பஞ்ச் வசனங்கள் இல்லை. அது முழுக்க காதல் கதை. அந்த படத்துக்கு நெருக்கடியும், எதிர்ப்புகளும் ஏன் வந்தன என்றே புரியவில்லை.

பொங்கலுக்கு காவலன் வராது என்றும் செய்தி பரப்பினார்கள். ரசிகர்கள் கட்- அவுட் வைக்கவும் போஸ்டர்கள் ஒட்டவும் அனுமதிக்கப்படவில்லை.

எம்ஜிஆர் உயரத்துக்கு இணையாக...

எம்.ஜி.ஆர். வளர்ச்சியை பார்த்து பயம் ஏற்பட்டதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விஜய்க்கு ஏன் அப்படி நேர்ந்தது. எம்.ஜி.ஆருடன் விஜய்யை ஒப்பிட முடியாது. ஆனால் அவர் உயரத்துக்கு விஜய்யை கொண்டு செல்வது ஏன்?(அட பாவிகளா...எம் ஜி ஆரை யாருமே விட்டு வைக்க மாட்டிங்களா?) விஜய் உடனடியாக அரசியலில் ஈடுபட திட்டம் இல்லை. ஆனால் அவர் அரசியலுக்கு வருவது உறுதி.

ரசிகர்கள் விஜய் அரசியல் கட்சி தொடங்க வேண்டும் என்று தொடர்ந்து வற்புறுத்தி வருகின்றனர். அவர்களிடம் அடுத்த 4 வருடங்கள் ரசிகர் மன்ற அமைப்புகளில் கவனம் செலுத்தும்படி அறிவுறுத்தியுள்ளோம். அவர்கள் விஜய்யை அரசியலுக்கு இழுத்துக் கொண்டு போய்விடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்... விஜய் தனது 40வது வயதில் அரசியலுக்கு வருவது உறுதி (விஜய்க்கு இப்போது 37 வயது!)", என்றார்.

ஹி ஹி....என்ன கொடுமை சார்? அரசியலில் இறங்குவதற்கே நாள், நட்சத்திரம்,வயது பார்க்கும் விஜய் அரசியலுக்கு வந்து என்ன கிழித்து விட போகிறார்?

22 ஜனவரி 2011

நித்யானந்தாவின் பக்தையாக எனது உறவு தொடரும்! - ரஞ்சிதா


நித்யானந்தாவுடன் செக்ஸ் வீடியோவில் இடம்பெற்று, கர்நாடக தடயவியல் துறையால் உறுதிப்படுத்தப்பட்ட நடிகை ரஞ்சிதா, இனியும் தொடர்ந்து நித்யானந்தாவுடன் பக்தையாக இருப்பேன் என்று பேட்டியளித்துள்ளார்.

நித்யானந்தா - ரஞ்சிதா செக்ஸ் வீடியோ வெளியாகி 9 மாதங்கள் அமைதியாக இருந்துவிட்டு, இப்போது திடீரென்று ஆவேசப் பேட்டிகள் அளித்து வருகிறார்.

'கண்ணகி, சாவித்ரியைப் போல நான் விடும் சாபமும் பலிக்கும்' என்று பிரபல பத்திரிகையில் பேட்டி அளித்து அதிர வைத்துள்ளார் ரஞ்சிதா.

இப்போது, மீண்டும் ஒரு பேட்டி அளித்துள்ளார் ரஞ்சிதா. அதில் அவர் கூறியதாவது:

"நித்யானந்தாவுடன் இப்போதும் நெருங்கிய தொடர்பில் இருக்கிறேன். இதை மறைக்க வேண்டிய அவசியமில்லை (. ஜனவரி 1-ந்தேதி அவரை சந்தித்தேன். நித்யானந்தா பக்தையாக தொடர்ந்து நீடிப்பேன். அவர் ஆசீர்வாதத்தை எப்போதும் போலவே பெற்றுக்கொண்டு இருப்பேன்.(நல்லது..பெருக பெருக)அந்த வீடியோ சி.டிதான் என் வாழ்க்கையையே மாற்றிப் போட்டு விட்டது. பொய், துரோகங்களால் நான் அலைக்கழிக்கப்பட்டேன். என் குடும்பத்தினரும், கணவரும் பக்கபலமாக இருந்தார்கள்.

நான் எந்த தப்பும் செய்யவில்லை. யாராவது நான் தவறு செய்ததாக கூறினால் அவர்கள் தேவை இல்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்கிறார்கள் என்றுதான் அர்த்தம்.(யாரும் உங்கள் விசயத்தில் மூக்கை நுழைக்கவில்லை....வீடியோ கேமராவைத்தான் நுழைத்தார்கள்)

அந்த வீடியோ படத்தை வெளியிட்டதற்காக லெனின் வெட்கப்பட வேண்டும்.( வீடியோவில் இருந்த நீங்கள் அல்லவா வெட்கப்பட வேண்டும்?என்ன கொடுமை சார்) இவ்வளவு நாளும் பேசாமல் இருந்து விட்டு இப்போது பதில் அளிக்கிறீர்களே என்று என்னிடம் கேட்கிறார்கள். நிலைமை கை மீறி போனதால் என்னால் எதுவும் சொல்ல முடியவில்லை. உடைந்து போய் இருந்தேன். என் குடும்பத்தினரின் பாதுகாப்பு முக்கியமாய்பட்டது...
மக்கள் என் மீது கோபமாக இருந்தார்கள். எங்கு பார்த்தாலும் என்னைப் பற்றி தவறாகவே பேசினார்கள். அதனால்தான் எதுவும் பேச முடியாமல் இருந்தேன்.

ஒரு விஷயம் மட்டும் என்னை மிகவும் வருத்தப்படுத்துகிறது. மனிதர்களை விட மெஷினை நம்புகிறார்கள்.(நீங்கள் ஒரு மனிதரை தெய்வமாக நினைப்பது மட்டும் சரியா ரஞ்சிதா)) பொய்யாக உருவாக்கப்பட்ட வீடியோவையும் தப்பானவர்களையும் நம்புகிறார்கள். என் மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை துடைப்பதே இப்போதைய நோக்கம்.

சட்ட ரீதியாகவும் இதிலிருந்து மீள முயற்சித்து வருகிறேன். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பேன்...,"(இனி சகிலா வகையிரா படங்கள்தான் உங்களுக்கு ஏற்றது...) என்றார்.

21 ஜனவரி 2011

அழகிரியின் சொத்து கணக்கு வேண்டுமா?இந்த சட்டத்தை பயன்படுத்துங்கள்.....


மத்திய அமைச்சர் அழகிரியின் சொத்து கணக்கு தெரிய வேண்டுமா?

துணை முதலமைச்சர் ஸ்டாலினின் சொத்து கணக்கு தெரிய வேண்டுமா?


உங்களது மாநகராட்சி ,நகராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களில் நடந்த நலத்திட்ட உதவிகள் .அரசின் திட்டங்கள் போன்றவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதா என அறிய வேண்டுமா?

பத்து ரூபாய் போதும்.....எல்லா தகவல்களையும் தெரிந்து கொள்ள.....


அதுதான் தகவல் அறியும் உரிமை சட்டம் ....ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் உச்ச கட்டம்...

நாட்டின் பாதுகாப்பை விபரங்களை தவிர்த்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.....

அனைத்து அலுவலகங்களிலும் பொது தகவல் அதிகாரி என்று ஒருவர் இருப்பார்...அவரிடம் விண்ணப்பித்து நாம் விரும்பும் தகவலை தெரிந்து கொள்ளலாம்....விண்ணப்ப கட்டணமாக பத்து ரூபாயை நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.....ஒரு விண்ணப்பத்தில் எவ்வளவு கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்.....

விண்ணப்பம் கொடுத்த முப்பது நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரி தகவல் அளிக்க வேண்டும்...கூடுதலாக ஐந்து நாட்கள் எடுத்துகொள்ளலாம்...தகவல் அளிக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு அதிக பட்சமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.....

சமிபத்தில் மும்பையில் பரபரப்பை கிளப்பிய ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடு கூட இந்த சட்டத்தினால் அடையாளம் காண்பிக்க பட்டதே ஆகும்....

அரசு அலுவலகங்கள்,பொது அலுவலகங்கள் போன்றவற்றில் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான செயல்பாடு, லஞ்சம் ஊழலை ஒழித்தல் ஆகியதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.....

நமது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையான இந்த சட்டத்தை நாமும் பயன்படுத்தி நமது உச்ச கட்ட அதிகாரத்தை நிலை நாட்டுவோம்....

20 ஜனவரி 2011

பயோ டேட்டா: சீமான்


பெயர் : சீமான் ( கவரிமான் அல்ல )

தொழில்: சினிமா ,அரசியல்....

உபதொழில்: இனவெறியை தூண்டும்படி பேசுவது

பொழுதுபோக்கு: கண்டபடி வன்முறையை தூண்டும்விதமாக பேசி ஜெயிலுக்கு போவது....

தேசிய ஒருமைப்பாடு: காற்றில் பறக்க விட வேண்டியது.....

இந்தியா: துண்டாட பட வேண்டிய தேசம்.....

கருணாநிதி: ஈழம் சுடுகாடு ஆனதற்கு துணை போனவர்....

ஜெயலலிதா: பிரபாகரனை அழிக்க வேண்டும் என்று கூறியவராக இருந்தாலும் இப்போது தேனாய் இனிப்பவர்...

காங்கிரஸ்: தமிழகத்தில் இருக்க கூடாத கட்சி....

திமுக: ஆட்சியில் இருக்க கூடாத கட்சி.....

அதிமுக: அடுத்தமுறை ஜெயிலுக்கு போகாமல் இருப்பதற்காக ஆட்சிக்கு வரவேண்டிய கட்சி...

சாதனை: விடுதலைப்புலிகள் மற்றும் ஈழ தமிழர்களுக்கு ஆதரவாக பேசி அந்த ஆதாயத்தினால் இயக்கம் ஆரம்பித்தது...

வேதனை: ஜெயலலிதாவை ஆதரிப்பதாக சொல்லி சுயரூபத்தை வெளிக்காட்டி
சிக்கலில் மாட்டிகொண்டது....

சோதனை: நாவை அடக்காமல் பேசுவதால் வருவது....

கொள்கை: அப்படி எல்லாம் ஒரு மன்னாங்கட்டியும் இல்லை....

லட்சியம்: போரினால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறிய ஜெயலிதாவை ஆட்சியில் அமர வைத்து அழகு பார்ப்பது....

19 ஜனவரி 2011

நீரா ராடியா மத்திய அமைச்சர்......கொத்து பரோட்டா....


கொஞ்சம் கொஞ்சம் செய்திகளை கொத்தி போடுகிறேன்....

பொங்கல் சிறப்பு நிகழ்சிகளை பார்த்தேன்.....

கலைஞர் டிவி யில் ஒரு பட்டிமன்றம் போட்டாங்க......மூன்று தலைப்புகளில்....
மூன்றுமே கருணாநிதியை பற்றியது......ஒரு ஒன்பது பேருன்னு நெனைக்குறேன்......சும்மா மாத்தி மாத்தி கலைஞரை புகழோ புகழ் என்று புகழ்த்து தள்ளிவிட்டார்கள்....அதை கலைஞரும் கொஞ்சம் கூட கூச்சம் இல்லாமல் உட்கார்ந்து பார்த்து ரசித்து சிரித்து கொண்டு இருக்கிறார்.....பாவம் வயசான காலத்தில் அன்பழகனை நடுவராக போட்டு அவரது ஆயுள் காலத்தயும் கொஞ்சம் குறைத்து விட்டார்கள்.....

அதே நேரத்தில் போட்டியாக சன் டிவி யும் பட்டிமன்றம் போட்டு தங்களுக்குள் உள்ள போட்டி மன்றத்தை வெளிகாட்டியது....

விஜய்யை கடுப்பேற்ற வேண்டும் என்ற நினைப்பில் சுறா படத்தை போட்டு மக்களை கடுப்பேற்றியது சன் டிவி.....இரண்டு டிவி யும் மாற்றி மாற்றி புது படங்களை ஒளிபரப்பி தாங்கள்தான் தமிழ் சினிமாவில் மறைமுக ஆதிக்க சக்தி என்பதை நிருபித்தன.....

இதற்க்கு கொஞ்சமும் சளைக்காமல் விஜய் டிவி யும் சென்ற மாதம் வெளிவந்த அய்யனார் படத்தையும் அதற்கு முன்பு வந்த சிக்குபுக்கு படத்தையும் போட்டு திணறடித்தது.....

பேசாம இனி எல்லா படங்களையும் டிவியிலே ரிலீஸ் பண்றது நல்லது..அப்பத்தான் திருட்டு வி சி டி களை ஒழிக்கலாம்....


உலக கோப்பை கிரிக்கெட் :

உலக கோப்பையில் பங்கு பெரும் இந்திய அணியில் பீஸ் போன பியுஸ் சாவ்லா இடம் பெற்று கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி விட்டார்....ஒரு வருடத்துக்கு மேலாக ஒரு நாள் போட்டியில் விளையாடாத இவர் அணியில் இடம் பிடித்த ஒன்றே போதும் கிரிக்கெட்டில் அரசியல் விளையாடுவதை நிருபிப்பதற்கு....

இன்று மத்திய மந்திரி சபையில் மாற்றமாம்.....பேசாமல் நீரா ராடியாவை தகவல்
தொழில் நுட்பத்துறைக்கு மந்திரி ஆக்கினால் அரசுக்கு இனி ரகசியமாக டெலிபோன் ஒட்டு கேட்க தேவை இருக்காது....

அல்லது பேசாமல் பிராதமர் பதவியை கொடுத்து விட்டால் எல்லா துறைகளையும் ஒப்பந்த முறையில் அவரே பார்த்துகொள்வார்....
அரசுக்கும் செலவுகள் குறையும்.....செய்வாரா சோனியா!!!

18 ஜனவரி 2011

பயோ டேட்டா: விஜயகாந்த்...


பெயர்: விஜயகாந்த்....

அடைமொழி: கேப்டன் விஜயகாந்த் ( எந்த கப்பலுக்கு கேப்டன், எந்த டீமுக்கு கேப்டன் என்றெல்லாம் கேட்ககூடாது.....)

தொழில்: சினிமாவில் வில்லன்களை அடிப்பது.அரசியலில் தலைவர்களை கன்னாபின்னா என திட்டுவது.....

பதவி: தே மு தி க தலைவர்...

கல்யாண மண்டபம்: இடிப்பதற்காகவே கட்டப்பட்டது....

சாதனை: இதுவரை கூட்டணி இல்லாமல் தனியாக தேர்தல்களை சந்தித்தது.....

வேதனை: அப்படி சந்தித்த எல்லா தேர்தல்களிலும் தோல்வியை சந்தித்தது.....

சோதனை:வரிசையாக படங்கள் மண்டையை போட்டது...

பிடித்த வார்த்தை: அடுத்த முதலமைச்சர்....

பிடிக்காத வார்த்தை: இன்றைய முதலமைச்சர்....

பிடித்த மொழி: டமில் ( தமிழ் தான்...)

கருணாநிதி: கரையான் புற்றுக்குள் புகுந்த பாம்பு.....

ஜெயலலிதா: குடிகாரன் என்று சொன்னாலும் கூட்டணிக்கு ஏற்றவர்.....

திமுக: குடும்ப அரசியலுக்காகவே நடத்தபடுவது.....

தே மு தி : தன்னுடைய மனைவி,மச்சான் எல்லாம் கட்சியில் முக்கிய பதவியில் இருந்தாலும் மக்களுக்காகவே நடத்தப்படும் ஜனநாயக கட்சி...

கனவு:" கருப்பு " எம் ஜி ஆர் ஆவது...

லட்சியம்: தமிழ்நாட்டின் நிரந்தர( மில்லாத ) முதலமைச்சர்....

17 ஜனவரி 2011

ஆத்தா நான் பாசாகிட்டேன்....டாக்டரு காவலன் விஜய்....


விஜய் வெற்றிக்காக எவ்வளவு தூரம் இறங்கி வந்து இருக்கிறார் என்பதற்கு ரோஜாவிடம் அவர் அடி வாங்கும் காட்சி ஒன்றே போதும்.....

ஆர்ப்பாட்டமான அறிமுகம், நிமிடத்துக்கு ஒரு பஞ்சு டயலாக் என்று விஜய் படத்துக்கு உள்ள இலக்கணங்களை உடைத்து விஜய்யையும்,நம்மையும் காப்பாற்றி விடுகிறான் காவலன்.....

காதலுக்கு மரியாதை விஜய்யை மீண்டும் பார்க்குற உணர்வை ஏற்படுத்தி விடுகிறது காவலன்....

தனக்கு காவலனாக வரும் நாயகனை அவனுக்கு தெரியாமல் காதலிக்கும் கதை.....விஜய்யின் பக்கத்தில் இருந்துகொண்டே வேறு ஒரு பொண்ணு போல செல்லில் உருகி உருகி காதலிக்கிறார் அசின்...செல்லில் ஜொள்ளு விட்ட ஆளு யாருன்னு விஜய்க்கு தெரிந்ததா....விஜய் யாரை கைப்பிடித்தார் என்பதை சுவாரஸ்யமாகவும் கொஞ்சம் அழுகை மற்றும் கொஞ்சம் இலுவையோடு சொல்லி இருக்கிறார் இயக்குனர்.....


படம் சில இடங்களில் காலமெல்லாம் காதல் வாழ்க படத்தையும் ,ஷாருக் கான் நடித்த படம் ஒன்றையும் நினைவு படுத்துகிறது.....

விஜய் படத்தில் எப்போதுமே பாடல்கள் நன்றாக இருக்கும்....ஆனால் வித்யாசாகருக்கு விஜய் மேல் அப்படி என்ன கோபமோ....சொதப்பி விட்டார்...


நல்லவேளை இதில் டாக்டரு விஜய் சண்டை மட்டும் போடாமல் கொஞ்சம் நடித்தும் இருக்கிறார்...அசின்தான் சும்மா சும்மா அழுது ஆத்திரமூட்டுகிறார்...
காமெடிக்கு வடிவேலு....முதல் பாதியில் சிரிக்க வைக்கிறார்....அதன்பிறகு அவரும் ஓய்வு எடுத்து கொள்கிறார்.....

ரொம்ப படத்தை பற்றி எழுத விரும்பவில்லை....அது மாதிரி எழுதவும் தெரியாது....போர் அடிக்கும்..எனக்கும் படிக்கும் உங்களுக்கும்......


கடைசியாக வந்த விஜய் படங்களை ஒப்பிட்டால் இது நூறு சதவீதம் மேல்.....
இனி இது மாதிரி படங்களில் டாக்டரு நடித்தால் அவருக்கும் நல்லது......நமக்கும் நல்லது....

ஐ சீ யூ வில் இருந்த நோயாளியை காப்பாற்றி விட்டான் காவலன்.....

16 ஜனவரி 2011

கருணாநிதி பெண்...ஜெயலிதா ஆண்....சோ சொல்கிறார்....


துக்ளக் வார இதழின் 41வது ஆண்டு விழா சென்னையில் நடந்தது.


நிகழ்ச்சியில் வாசகர்களின் கேள்விகளுக்கு சோ பதில் அளித்து பேசியதை பார்ப்போம்.....


நாட்டில் எமர்ஜென்சி அமலில் இருந்தபோது, ஜனநாயகத்தைக் காப்பாற்ற இந்திரா காந்தியைத் தோற்கடிக்க வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அதுபோன்ற நிலை தான் இப்போது தமிழகத்தில் உள்ளது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுகவைத் தோற்கடித்தால்தான் நாட்டையே காப்பாற்ற முடியும். அது தமிழக மக்களின் கைகளில்தான் உள்ளது. நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள் வாக்களித்தால் கண்டிப்பாக திமுக தோற்கும். திமுகவைத் தோற்கடிக்க ஜெயலலிதாவால் மட்டுமே முடியும்.

அதற்கு அவருக்கு வலுவான கூட்டணி அமைய வேண்டும். அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்க வேண்டும். திமுகவால் விஜயகாந்தும் பாதிக்கப்பட்டுள்ளார். அவரது திருமண மண்டபம் இடிக்கப்பட்டது. அவரது பொறியியல் கல்லூரிக்கும் இடையூறு செய்தார்கள். திமுகவைத் தோற்கடிக்கும் கடமையில் இருந்து விஜய்காந்த் தவறக் கூடாது. தேமுதிக தனித்துப் போட்டியிட்டால் எதையும் சாதிக்க முடியாது.

மக்களை ஈர்க்கும் வசீகரமான, துணிச்சலான தலைவர் ஜெயலலிதா. அவருக்கு எம்ஜிஆரின் புகழ் உதவி செய்கிறது என்பதை மறுக்க முடியாது. ஆனால், எம்ஜிஆருக்குப் பிறகு அதிமுக வெற்றி பெற்றதற்கு ஜெயலலிதாவின் திறமையே முக்கிய காரணம்.

கருணாநிதியின் அறிக்கையில் குழப்பமே இருக்கும். ஜெயலலிதாவின் அறிக்கையில் தெளிவு இருக்கும். கருணாநிதி பெண் போல புலம்ப ஆரம்பித்துவிட்டார். ஜெயலலிதா ஆண் போல நிமிர்ந்து நிற்கிறார். கருணாநிதியிடம் பெண் தன்மையையும், ஜெயலலிதாவிடம் ஆண் தன்மையும் நான் பார்க்கிறேன்.

திமுக ஆட்சியில் தமிழகத்தை ஒரு குடும்பமே கொள்ளையடிக்கிறது. இதுபோன்ற நிலை இந்தியாவில் எங்கும் இல்லை. திரைப்படத் துறை முதல்வரின் குடும்பத்தின் பிடிக்குள் சென்று விட்டது. கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களின் தயவு இல்லாமல் எந்தப் படத்தையும் திரையிட முடியாது என்ற நிலை உள்ளதாக நடிகர்களே கூறுகின்றனர்.

அடுத்து ரியல் எஸ்டேட் தொழிலுக்கு அவர்கள் வந்து விட்டனர். திமுக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் எல்லாவற்றையும் கருணாநிதியின் குடும்பத்துக்கு கொடுத்துவிட வேண்டியதுதான்.

துணை முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு அண்ணன் அழகிரியை சமாளிக்கவே நேரம் போதவில்லை. அதற்கே மூச்சு முட்டும்போது அவரால் எப்படி சிறப்பாக செயல்பட முடியும்?.

சென்னை சங்கமம் விழாவுக்கு அரசு விளம்பரத்தில் தமிழ் மையத்தின் பெயர் இடம் பெறக்கூடாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன் பிறகும் சங்கமம் விழாவில் முதல்வர் கருணாநிதி, ஜெகத் கஸ்பருடன் பங்கேற்றிருப்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல்.

சட்டம், ஒழுங்கு மிகவும் மோசமடைந்துள்ளது. பள்ளிக் குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள். அவர்களைக் காவல்துறை பணம் கொடுத்து மீட்கிறது. பணம் கொடுத்து மீட்பதற்கு காவல்துறை எதற்கு?.

நல்லாத்தான் சொல்றாரு சோ....பேசாமல் சோவும் அதிமுகவில் ஐக்கியமாகி அம்மா புகழ் இன்னும் ஜோராக பாடலாமே.....அதைவிட்டுவிட்டு தன்னை நடுநிலை பத்திரிக்கையாளராக காட்டி கொள்வது ஏன்?

15 ஜனவரி 2011

நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு மருந்தால் ஏற்படும் தீமைகள்...


வலைப்பதிவு நண்பர்களுக்கு இனிய தமிழ் புத்தாண்டு(!!) மற்றும் பொங்கல் வாழ்த்துக்கள்...இது தமிழர் திருநாள்....தமிழர்கள் எல்லாருக்கும் பொதுவான நாள்.....இந்த தமிழர் திருநாளில் இருந்தாவது ஈழ தமிழர்களுக்கு விடிவு காலம் பிறக்க வேண்டும்...


நண்பர் பாலா ( பாலாவின் பக்கங்கள்) என்னை வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளார்....அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.....இது மாதிரி சக பதிவர்களை அதுவும் புதிய பதிவர்களை அறிமுகப்படுத்துவது மிக பெரிய விஷயம்.....


வலைப்பதிவு நட்பு என்பது பள்ளி நட்பு அல்ல....கல்லூரி கால நட்பு அல்ல.....இது எல்லாத்தையும் விட ஒருவரின் எழுத்தால் ,கருத்தால் உருவாகும் நட்பு.....புதுவித நட்பு....ஓகே ..ஒரு மருத்துவ குறிப்பை பார்ப்போம்.....

ஆ‌ன்டி பயாடி‌க் என‌ப்படு‌ம் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளா‌ல், உட‌லி‌ல் உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி பா‌தி‌க்க‌ப்படுவது ந‌ம்‌மி‌ல் பலரு‌க்கு‌ம் தெ‌ரியாது.

ஒரு செ‌ய‌‌ற்கையான ‌நிக‌‌ழ்‌வினா‌ல், உட‌லி‌ல் இய‌ற்கையாக உ‌ள்ள நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி கு‌ன்று‌கிறது.

மேலு‌ம், ஆண்டி பயாடிக் மாத்திரையை அடிக்கடி சாப்பிடுவதால் உ‌ட‌லி‌ன் ஜீரண உறுப்பு அரிக்கப்படுகிறது. இதனால் உங்களுடைய உடம்பிலுள்ள `பி காம்ப்ளக்ஸ்' குறையும்.

வாய் து‌ர்நாற்றம், தொண்டையில் அல்சர், நாக்கு வறண்டு இருத்தல் போன்ற பிரச்சினைகளும் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பிடுபவ‌ர்களு‌க்கு ஏற்படு‌கிறது.

சிலரு‌க்கு நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி மரு‌ந்துகளை சா‌ப்‌பி‌ட்டது‌ம், உடலா‌ல் அதனை‌த் தா‌‌ங்‌கி‌க் கொ‌ள்ள இயலாத போது உட‌ல் நடு‌க்க‌ம் ஏ‌ற்படு‌கிறது.

மேலு‌ம், உட‌லி‌ல் நோ‌ய் எ‌தி‌ர்‌ப்பு ச‌க்‌தி எ‌ன்பதே இ‌ல்லாமலே‌ப் போ‌ய் ‌விடு‌ம் ஆப‌த்து‌ம் உ‌‌ள்ளது.

எனவே நண்பர்களே தொட்டதுக்கு எல்லாம் இம்மாதிரி மருந்துகளை சாப்பிடாமல் முடிந்தவரை தவிர்த்துகொள்ளுங்கள்...

நான் படித்த மருத்துவ குறிப்பை பகிர்ந்துள்ளேன்...

14 ஜனவரி 2011

குடிகாரன் விஜயகாந்த்...ஊற்றி கொடுத்த ஜெயலலிதா....கலைஞர்


சேலத்தில் நடந்த தேமுதிக மாநில மாநாட்டின்போது முதல்வர் கருணாநிதியையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜயகாந்த். அதற்கு முரசொலி மூலம் திமுக பதிலளித்துள்ளது.

தேமுதிக தலைவர் பற்றி - எதிர்க் கட்சித் தலைவர் - ஜெயலலிதா சூட்டிய அடைமொழி "குடிகாரன்" என்பது தான். அதற்குப் பதில் சொன்ன தே.மு.தி.க. தலைவர் "ஆமாம், ஜெயலலிதா தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தார்" என்பதைப் போல கூறியதும் ஏடுகளிலே அப்படியே உள்ளது. ஆனால் இந்த வாசகங்கள் ஊற்றிக் கொடுத்தவருக்கும் மறந்து விட்டது. வாங்கிக் குடித்தவருக்கும் மறந்து விட்டது. நமக்குத் தான் மறக்கவில்லை என்று சாடியுள்ளது திமுகவின் முரசொலி இதழ்.

நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் கலைஞரே....அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே....?

நீங்கள் காமராஜரை திட்டாத திட்டா?

இந்திரா காந்தியை பேசாத பேச்சா?

பின்பு அதே காமராஜரை பெருந்தலைவர் என்று புகழ்ந்தீர்கள்...

இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது கருப்பு கொடி காட்டி ஆர்பாட்டம் பண்ணியபோது நடந்த கலவரத்தில் இந்திரா காந்தி மீது ரத்தம் சிந்தி இருந்தது....அதுபற்றி எவ்வளவு கொச்சையாக பதில் கூறுனீர்கள்? அச்சில் எழுத முடியாத அந்த வார்த்தைகளை நா கூசாமல் கூறுனீர்கள்....

பின்பு அதே இந்திரா காந்தியை " நேருவின் மகளே வருக....நிலையான ஆட்சி தருக" என்று வாய் நிறைய புகழ்ந்தீர்கள்....பாஜகவை பண்டார பரதேசிகள் என்று சொல்லிவிட்டு பின்பு பதவி சுகத்துக்காக அதே பாஜகவுடன் கூட்டணி அமைத்தீர்கள்....


அவ்வளவு ஏன்.....விஜயகாந்த் திருமணத்தை தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தவரே நீங்கள்தான்....இப்போது உங்களுக்கு எதிராக அவர் கொதிக்கவில்லையா"?

அதனால நீங்கள் எல்லாருமே ஒரே சாக்கடையில் தான் இருக்குறீர்கள்....

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...என்று உங்களுக்கு தெரியாதா?

13 ஜனவரி 2011

காணாமல் போனவர்கள்...(பாகம் 10 )


கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மாறி மாறி ஆட்சியில் அமர வைப்பதில் அலாதி பிரியம் இவனுக்கு....

சினிமா ஒரு கண் என்றால் கிரிக்கெட் மற்றொரு கண் இவனுக்கு....

நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து பால் அபிசேகம் பண்ணுவதை தனது பிறவி பயனாக எண்ணி பெருமை கொள்பவன் இவன்.....

டீ கடைகளில் அரசியல் பேச்சு பேசுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி இவனுக்கு...


வேறு யார்? நீங்களும் நானும் தான்...நம்ம வீர தமிழினம்தான்....


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டினான் வீரத்தமிழன்....


ஆயிரம் ஆண்டு கால சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலை கட்டியவன்தான் எம் வீரத்தமிழன்...

நாட்டை பிடிக்க வந்த அண்டை நாட்டு மன்னர்களை ஓட ஓட விரட்டியவன்தான்
எம் வீரத்தமிழன்....

சுதந்திர போராட்டத்தில் வெறி கொண்ட வேங்கையாய் சீறிய வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, புலித்தேவன், திருப்பூர் குமரன், பாரதியார், கப்பலோட்டிய தமிழன் போன்றவர்கள் வீர தமிழர்கள்தான்....

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நாட்டையே நடுங்க வைத்தவர்கள் எம்முடைய வீர தமிழர்கள்தான்....

இந்தியாவின் பிரதமரையே தேர்ந்தெடுத்த பெருந்தலைவர் காமராஜர் வீர தமிழன்தான்.....

கொள்கைக்காக திராவிட நாடு கேட்ட தமிழன் எம் வீர தமிழன்தான்.....


அப்படிப்பட்ட வீரத்தமிழன் இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்து திகைத்து நிற்கின்றான்...

இலங்கையில் கொத்துகொத்தாக எம் தமிழினம் செத்து மடிந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தான் ...

ஈழத்தில் எம் சகோதரிகள் சீரழிக்க பட்டபோது சிலிர்த்து சீறாமல் மெளனமாக நின்றான்...

லண்டனுக்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சேயை அங்குள்ள தமிழர்கள் துரத்தி அடித்தார்கள்....ஆனால் டெல்லிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அந்த ராட்சசனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தான்...


தமிழன் இருக்கிறான்....ஆனால் வீரம் தான் இல்லை.....

தமிழன் இருக்கிறான் தமிழ்நாட்டிலே...ஆனால் வீர தமிழன்தான் காணாமல் போய்விட்டான்....!

12 ஜனவரி 2011

பயோ டேட்டா : ஜெயலலிதா..


பெயர் : ஜெயலலிதா...


அடைமொழி: புரட்சி தலைவி அம்மா ( என்ன புரட்சி செய்தார், யாருக்கு அம்மா என்றெல்லாம் கேட்க கூடாது..)


பதவி: அதிமுகவின் பொது செயலாளர்.....


தொழில்: முன்னால் நடிகை....இந்நாள் அரசியல்வா(வியா)தி ....


நீண்ட நாள் சாதனை: கட்சியில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் காலில் விழ வைத்தது....


சோதனை: ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய தனக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கு இன்னும் நடந்துகொண்டு இருப்பது.....


வேதனை: கோடநாட்டில் இருந்து மக்கள் பணி ஆற்றி கொண்டிருக்கும்போது எப்போதுமே தூங்கிகொண்டு இருக்கிறார் என மற்ற கட்சியினர் குறை சொல்லும்போது ஏற்படுவது....


பொழுதுபோக்கு: ஜெயா டிவி செய்திகளுக்காக தினமும் அரைவேக்காடு தனமாக ஒருபக்க அறிக்கை தயார் செய்து கொடுப்பது...


கோடநாடு: ஆட்சி அமைந்தால் அடுத்த தலைமை செயலகம்...


வைகோ: என்ன சொன்னாலும் தலையாட்டும் கைப்புள்ள...


விஜய்: அனேகமாக அடுத்த கைப்புள்ள....


கருணாநிதி: இந்த வயதிலும் கடுப்பை கிளப்புபவர்....


அழகிரி: ஹார்லிக்ஸ் பாட்டில் திருடுபவர்...


சசிகலா: தனக்கு உயிர்தோழி...உண்மையான தொண்டனுக்கு உயிர் எடுக்கும் தோழி....எம் ஜி ஆர்: தேர்தல் சமயத்தில் மட்டும் தேவைபடுபவர்.....


கட்சி தொண்டன்: காலம் முழுவதும் காலில் கிடப்பவர்கள்....


கனவு: பிரதமர் ஆவது.....


லட்சியம்: எப்படியாவது மீண்டும் ஆட்சி அமைத்து தமிழக மக்களின் தலையில் மிளகாய் அரைப்பது...

11 ஜனவரி 2011

கொடி காத்த குமரனை நினைவுகூர்வோம் ....


தேச விடுதலைக்காக கொடி ஏந்தி உயிர் பிரிந்த மாவீரனின் நினைவு நாள் இன்று......


சிறுவயது முதலே விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர் குமரன்.....கள்ளுக்கடை மறியல், உப்பு சத்தியாகிரகம் போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார் குமரன்.....

வட்டமேஜை மாநாடு முடிந்த பிறகு காங்கிரஸ் கட்சியை தடை செய்து காந்தி அடிகளை கைது செய்தது ஆங்கிலயே அரசு .....ஆங்கிலயே அரசின் அடக்குமுறையை எதிர்த்து பொதுமக்கள் கொதித்து எழுந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.....
தமிழகத்தில் குமரனும் தேசிய கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டார்....போலீஸ் அவரை தடியால் தாக்கி மண்டையை பிளந்தனர்.....என்றாலும் குமரன் தனது கையிலிருந்து கொடியை விடாமல் வந்தே மாதரம் என்று முழங்கியபடி மண்ணில் சாய்ந்தார்.....

படுகாயம் அடைந்த குமரனை மருத்துவமனையில் சேர்த்தனர்....கொடியை

பிடிங்கினால் உயிர் பிரிந்துவிடும் இறுதி கட்டத்தில் குமரன் இருந்தார் அப்போது...அருகில் இருந்த போலீஸ் கொடியை அவரிடம் இருந்து பறித்தனர்..குமரனின் உயிரும் பிரிந்தது...


இறுதிவரை உறுதி குறையாமல் தேசிய கொடியை பிடித்தபடி உயிர் துறந்த அந்த கொடி காத்த குமரனை இன்று நினைவு கூர்வதன் மூலம் அவருக்கு மரியாதை செலுத்துவோம்....

அதிமுகவிற்கு ஆதரவு....சீமான்
ஈழத்தில் போர் முடிவடைந்த கால கட்டத்தில் தமிழக அரசியல் களத்தில் குதித்தவர் சீமான். முதலில் நாம் தமிழர் இயக்கத்தைத் தொடங்கி ஈழத் தமிழர் ஆதரவு பிரசாரத்தை வேகமாக முன்னெடுத்தார். அவரது அனல் வேகப் பேச்சால் பலரையும் ஈர்த்தார். இதன் விளைவாக 2 முறை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி சிறையும் சென்றார். சமீபத்தில் அவர் விடுதலையானார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியை தன் பக்கம் இழுத்துள்ளது அதிமுக. சீமானை அதிமுக கூட்டணிக்கு இழுப்பதற்கான முயற்சிகளை வைகோவிடம் ஒப்படைத்தார் ஜெயலலிதா.

இதன் விளைவாக இன்று மதிமுக தலைமைக் கழக அலுவலகம் சென்று வைகோவை சந்தித்துப் பேசினார் சீமான்.

ஒன்றரை மணிநேரம் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் சீமான் பேசுகையில்,

நான் சிறையில் இருந்த போது விடுதலையாக வேண்டும் என்று மனப்பூர்வமாக வைகோ அறிக்கை வெளியிட்டார். அதைப்போல நான் விடுதலை செய்யப்பட்டேன் அவரது அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி செலுத்த கடமைப்பட்டவன். வருகிற தேர்தலில் காங்கிரசையும், அதன் கூட்டணி கட்சியையும் அப்புறப்படுத்த வேண்டும் என்ற லட்சிய வெறியோடு பணியாற்றுவோம்.

வைகோ தேசிய அரசியலில் பல வருடங்கள் இருந்து விட்டார். மாநில அரசியலுக்கு அவர் வர வேண்டும். எம்.எல்.ஏ.வாக சட்டசபைக்குள் செல்ல வேண்டும். அங்கு தமிழர்கள் ஆதரவு குரல் ஒலிக்க வேண்டும் என்று நான் அவரை வலியுறுத்தினேன். யோசிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். யோசிப்பதற்கு எதுவும் இல்லை. இந்த முறை எப்படியாவது அவர் எம்.எல்.ஏ. தொகுதியில் போட்டியிட வேண்டும்.

கடந்த தேர்தலில் இரட்டை இலைக்கு ஆதரவாக ஓட்டு போடச் சொன்னீர்கள். இந்த தேர்தலிலும் அவ்வாறு கேட்பீர்களா என்ற கேள்விக்கு சீமான் பதிலளிக்கையில்,

இரட்டை இலைக்கு வாக்களியுங்கள் என்று கடந்த தேர்தலில் சொன்னேன். காங்கிரசுக்கு எதிராக களத்தில் நிற்கும் பெரிய கட்சி அ.தி.மு.க. காங்கிரசை வீழ்த்த இரட்டை இலைக்கு ஆதரவு அளியுங்கள் என்றேன். இப்போதும் அப்படித்தான் சொல்வேன். இதை கூட சொல்வதற்கு தைரியும் இல்லை என்றால் நான் எப்படி போராளியாக முடியும். யாருக்கு வேண்டு மானாலும் ஓட்டு போடுங்கள் என்று குடு குடுப்பக்காரன் போல் நான் ஜோசியம் சொல்ல மாட்டேன். யார் வர வேண்டும் என்பதல்ல. யார் வரக்கூடாது என்பதுதான் எங்கள் குறி என்றார் அவர்.

முதல்வர் கருணாநிதி யை எதிர்த்துப் போட்டியிட்டு உங்களால் வெற்றி பெற முடியுமா என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கையில்,

காமராஜரை சீனிவாசன் தோற்கடிக்க வில்லையா? அதே போல் சீமானால் தோற்கடிக்க முடியாதா? அது வரலாற்றில் தவறு. தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. அப்போது பார்ப்போம் என்றார் சீமான்.

ஹலோ சீமான் ....விடுதலைப்புலிகளை கூண்டோடு அளிக்க வேண்டும் என்று கூறியவர் , போர் என்றால் பொதுமக்கள் சாகத்தான் செய்வார்கள் என்று கூறியவர் ..இப்போது உங்களுக்கு இனிப்பதன் மர்மம் என்ன?

வலுவான வஜ்ராயுதமாக சீமான் இருப்பார்-வைகோதமிழ் ஈழ மக்களின் உரிமைகளுக்காகவும், தமிழ் ஈழ விடுதலைக்காகவும் அர்ப்பணிப்பு உணர்வுடன் போராடும் போராளி சீமான் மீது இரண்டு முறை தேசிய பாதுகாப்பு தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டது. சிறைச் சாலைகளில் அடக்குமுறை. லட்சிய தாகம் கொண்டவர்களை ஒடுக்க முடியாது. சீமான் கைது செய்யப்பட்டதும் முதல் கண்டன அறிக்கை ம.தி.மு.க. கொடுத்தது.

சீமான் பேசிய அதே பேச்சை நான் தமிழ்நாடு முழுவதும் கூட்டங்களில் பேசினேன். அவர் பேச்சில் எந்த தவறும் இல்லை. வேலூர் சிறையில் நானும், நெடுமாறனும் சீமானை சந்தித்தோம். அப்போது எந்த தவறும் செய்யாமல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த ஒரு கொலைக்காக 20 ஆண்டுகளாக சிறையில் வாடும் தம்பிகளையும் பார்த்தேன். சீமானை கைது செய்தது சட்டவிரோதம் என்று கோர்ட்டு விடுவித்துள்ளது.

விடுதலைப்புலிகளை ஆதரித்து பேசுவது எங்கள் உரிமை. அதை யாரும் தடுக்க முடியாது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஆட்சி அதிகாரத்தை பிடித்ததற்கு 1200 கோடி ரூபாய் செலவு செய்தும் கூட 13 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில்தான் தி.மு.க. காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. வருகிற சட்டசபை தேர்தல் தமிழர்களின் தன்மானத்திற்கு விடும் அறை கூவல். தமிழ்நாட்டில்

பள்ளி குழந்தைகளின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை. சுதந்திரமாக தொழில் செய்ய பாதுகாப்பு இல்லை. வரப்போகும் தேர்தலில் விலைவாசி உயர்வு, மணல் திருட்டு, வாழ்வாதார சீரழிவு பற்றி தெருத் தெருவாக பிரசாரம் செய்வோம்.

தேர்தல் களத்தை சந்திக்க சீமான் தயார். வலுவான வஜ்ராயுதமாக சீமான் இருப்பார். கலையுலகில் இருக்கும் தமிழ் இன உணவாளர்களும் இணைந்து வெற்றியை ஈட்டுவார்கள் என்றார் வைகோ.

ஹி ஹி உங்களுக்கு பக்கபலமாக ஜெயலலிதாவுக்கு இன்னொரு அடிமை சிக்கிருச்சு......வைகோ .....

10 ஜனவரி 2011

அதிர்ந்தது சேலம்....கூட்டணி பற்றி குழப்பிய விஜயகாந்த்...


இதுவரை தேமுதிக மாநாடு அல்லது கூட்டத்திற்கு இப்படி ஒரு மக்கள் கூட்டம் வந்ததில்லை என்று கூறும் அளவுக்கு நேற்றைய சேலம் மாநாடு அமைந்து விட்டது. அந்த அளவுக்கு பல லட்சம் பேர் திரண்டு வந்திருந்தனர்.

மக்கள் உரிமை மீட்பு மாநாடு என்ற பெயரில் நடந்த இந்த மாநாட்டையொட்டி சென்னை கோயம்பேடு தேமுதிக தலைமையகத்திலிருந்தும், தமிழகத்தின் பிற நகரங்களிலிருந்தும் சேலம் மாநாட்டுத் திடல் வரை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர்தொலைவுக்கு பிளக்ஸ் பேனர்களை வைத்து அசத்தி விட்டனர் தேமுதிகவினர்.


திமுகவையும், திமுக ஆட்சியையும், திமுக தலைவர் கருணாநிதியையும், முதல்வர் கருணாநிதியையும், காவல்துறையையும் மிகக் கடுமையாக தாக்கிப் பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த், கூட்டணி சேருவோமா, சேர்ந்தால் யாருடன் சேர்வோம் என்பது குறித்து யாருக்கும் புரியாத வகையில் படு குழப்பமாக பேசியுள்ளார் சேலத்தில் நேற்று நடந்த பிரமாண்டமான மாநில மாநாட்டில்.

தேமுதிக வரலாற்றில் நேற்றைய சேலம் மாநாடு மிகப் பெரியதாக அமைந்துள்ளது. பல லட்சம் பேர் திரண்டு வந்ததால் சேலமே குலுங்கிப் போனது என்பது மறுக்க முடியாத உண்மை. இத்தனை பேர் திரண்டு வந்ததோடு, சென்னையிலிருந்தும், மாநிலத்தின் பல்வேறு நகரங்களிலிருந்தும் சேலம் மாநாட்டுத் திடல் வரை பலஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு கட்சியினர் வைத்திருந்த பேனர்களும், புதிய சாதனை படைத்து விட்டன.

50 லட்சம் பேர் கலந்து கொண்டதாக தேமுதிக மாநாட்டு மேடையில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் அறிவித்தார்( ஹி ஹி காசா பணமா அள்ளி விட வேண்டியதுதானே..). அத்தனை பேர் வந்திருந்தார்களா என்பது உறுதியாகத் தெரியவிட்டாலும் கூட சமீப காலத்தில் தமிழகத்தில் நடந்த அரசியல் கூட்டங்களுக்கு வந்ததை விட பல மடங்கு கூட்டம் இங்கு திரண்டிருந்தது என்பது உண்மை.

இத்தனை பேரும் இப்படி படையெடுத்து வந்ததற்கு ஒரே காரணம்- தேர்தல் கூட்டணி குறித்து விஜயகாந்த் திட்டவட்டமாக அறிவிக்கப் போகிறார் என்ற பலத்த எதிர்பார்ப்புதான். இதை உறுதி செய்வது போலவே தேமுதிக நிர்வாகிகள் நேற்று மாநாட்டு மேடையில் கடுமையாக திமுகவைத் தாக்கிப் பேசினர்.

சரி, திமுகவுடன் கூட்டணி இல்லை, அப்படியானால் அதிமுகவுடன்தான் கூட்டணி என்ற எதிர்பார்ப்புக்குள் தேமுதிகவினர் போக ஆரம்பித்து விட்டனர். திமுகவையும், திமுக ஆட்சியையும், காவல்துறையையும் மிகக் கடுமையாகத் தாக்கிப் பேசினர் நேற்றைய மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய தேமுதிக நிர்வாகிகள்.

கடைசியாக விஜயகாந்த் பேச வந்தார் இரவு 9 மணியளவில். கேப்டன் தனது கூட்டணி குறித்த முடிவை வெளியிடப் போவதை ஆவலுடன் கேட்க தொண்டர்கள் தயாரானபோது நிறுத்தி, நிதானமாக, விலாவாரியாகப் பேச ஆரம்பித்தார் விஜயகாந்த். ஆனால் அவரது பேச்சில் கூட்டணி குறித்து குறிப்பிடவில்லை. அதை அவரே சுட்டிக் காட்டி கடைசியாகப் பேசுகிறேன் என்றார். கூட்டத்தினரும் பொறுமையுடன் காத்திருந்தனர். இருந்தாலும் கடைசி வரை இவருடன்தான் கூட்டணி, இந்தக் கட்சியுடன்தான் கூட்டணி என்பதை விஜயகாந்த் சொல்லவே இல்லை.

தனது பேச்சின்போது இடை இடையே, என்னாலும் வேகமாக, கோபமாகப் பேச முடியும். ஆனால் அப்படிப் பேசினால் நாக்கு தடுமாறும் என்பதால் அப்படிப் பேசாமல் பொறுமையாக, மெதுவாகப் பேசுகிறேன் என்றார் விஜயகாந்த். அதேசமயம், விஜயகாந்த் இப்படி மிக மிக நிதானமாக இதுவரை பேசியதே இல்லை என்று கூறும் அளவுக்கு மகா நிதானமாக ஒவ்வொரு பிரச்சினையாக போய்ப் போய் வந்தார். தனது பேச்சில் முதல்வர் கருணாநிதியைமிகக் காட்டமாக விமர்சித்தார். ஒரு கட்டத்தில் ஓநாய் என்று கூட கூறினார். பொய் பேசுபவர் என்றார், வரலாற்றை மாற்றிச் சொல்பவர் என்றார், ஊழலுக்குப் பொறுப்பாளி என்றார். அழகிரியையும் விடவில்லை, ஸ்டாலினையும் விடவில்லை. வீரபாண்டி ஆறுமுகத்தைப் பார்த்து எங்களுக்கு என்ன பயம் என்றார்.

ஒரு கட்டத்தில் கூட்டத்தினர் நெளிய ஆரம்பித்ததைப் பார்த்த விஜயகாந்த், நாம் கூட்டணி வைக்க வேண்டுமா என்று ஜெயலலிதா ஸ்டைலில் தொண்டர்களைப் பார்த்துக் கேட்டார். கூட்டணி வேண்டும் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று கேட்க கிட்டத்தட்ட அத்தனை பேருமே கையை உயர்த்தி தங்களது இத்தனை கால விருப்பத்தை ஒரே குரலில் வெளிப்படுத்தினர். இதை விஜயகாந்த்தே எதிர்பார்க்கவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து கூட்டணி வேண்டாம் என்று சொல்பவர்கள் கைகளை உயர்த்துங்கள் என்று அவர் கூறியபோது கொஞ்சம் பேரே கைகளை உயர்த்தினர். இதையடுத்து அவர் ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரோ, சட்டசபையில் இப்படி கேட்டு முடித்தவுடன் பெரும்பான்மையானோர் கைகளை உயர்த்தியதால் அதுவே வெற்றி பெற்றதாக அறிவிப்பார்கள். ஆனால் நான் அப்படிக் கூற மாட்டேன். மாறாக, உங்களையும், என்னையும், நமது கட்சியையும் யாரிடமும் அடகு வைக்க மாட்டேன் என்று குழப்பமாக பதிலளித்து நிறுத்தினார்.

தனது பதில் தொண்டர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருப்பதை அவரே உணர்ந்தோ என்னவோ பேசி முடித்து விடை பெற்ற பிறகு மீண்டும் மைக்கைப் பிடித்து, கூட்டணி முடிவு குறித்து என்னிடம் விட்டு விடுங்கள். நான் பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் கவலைப்படாமல் செல்லுங்கள் என்று மீண்டும் கேட்டுக் கொண்டு விடை பெற்றார்.

மொத்தத்தில் நேற்று விஜயகாந்த் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதே உண்மை. இதை கலைந்து சென்ற தொண்டர்களும் வெளிப்படுத்தினர். கேப்டன், தெளிவாச் சொல்லாம விட்டுட்டாரே என்று அவர்கள் பேசிக் கொண்டதைக் கேட்க முடிந்தது. ஆனாலும் கூட்டணிக்கு தொண்டர்கள் ஆதரவாக இருப்பதை அவர் உணர்ந்து வி்ட்டார். எனவே கண்டிப்பாக கூட்டணி வரும் என்று அவர்கள் ஆறுதல்பட்டுக் கலைந்து சென்றனர்.

09 ஜனவரி 2011

அஜித் விஜய்....பாராட்டிய ரஜினி....பதிவு 1 செய்தி 2

அஜித்தும் விஜய்யும் சந்தித்து கொண்டால் செய்திகளுக்கா பஞ்சம்?

சமீபத்தில் அஜித்தும் விஜய்யும் பின்னி மில் செட்டில் சந்தித்துக் கொண்டதாக செய்தி வெளியானதல்லவா... இந்த சந்திப்பு முன் கூட்டியே திட்டமிடப்பட்ட சந்திப்பு என்பதுதான் இதில் ஹைலைட்.

இந்த சந்திப்பின்போது தங்களின் அரசியல் நிலைப்பாடுகள், அரசியல் திட்டங்கள் குறித்துப் பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பொதுவாக இதுபோன்ற சந்திப்புகளின்போது நடந்ததை ரகசியமாக வைத்திருப்பார்கள். ஆனால் இந்த முறை இந்த சந்திப்பின்போது பேசப்பட்டது குறித்தும் கசிய விட்டுள்ளனர்.

விஜய்யின் காவலன் படத்துக்கு எழுந்துள்ள சிக்கல்கள் குறித்தும் இருவரும் விவாதித்ததாகத் தெரிகிறது.( என்ன விவாதித்து என்ன? ரெண்டு பெரும் ஒரு நல்ல படத்தை கொடுங்கப்பா...)

இந்த சந்திப்பின்போது, விஜய்க்கும் அவரது மனைவி சங்கீதாவுக்கும் அஜீத் பிரியாணி விருந்து அளித்துள்ளார். அவர்களுடன் படப்பிடிப்புக் குழுவினரும் விருந்தில் பங்கேற்றனர்.( தல பிரியாணி யா?)

பாராட்டிய ரஜினி.....

சமீபத்தில் ரஜினியை விமர்சிப்போர் பட்டியலில் இணைந்த இயக்குநர் மிஷ்கினின் யுத்தம் செய் படத்தைப் பார்த்துப் பாராட்டினார் ரஜினி.

சமீபத்தில் ஒரு மேடையில், 'ரஜினியின் எந்திரன் படம் தரமற்றது' என்ற ரீதியில் பேசி பரபரப்பேற்படுத்தியவர் இயக்குநர் மிஷ்கின்.

இப்போது சேரன் நடிக்கும் யுத்தம் செய் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படம் வெளியீட்டுக்குத் தயாராக உள்ளது.

இந்த நிலையில் ரஜினி இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர் மிஷ்கினும் சேரனும்.

ரஜினிக்காக சிறப்புக் காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. ரஜினியும் நேற்று மாலை யுத்தம் செய் படம் பார்க்க வந்தார். அவரை சேரனும் மிஷ்கினும் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

படம் முடிந்ததும், இருவரையும் பாராட்டிய ரஜினி, யுத்தம் செய் படத்தின் காட்சி அமைப்பு வித்தியாசமாக இருந்ததாகக் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் சேரன் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். அவரையும் தனியாகப் பாராட்டினார்.

08 ஜனவரி 2011

பயோ டேட்டா: கலைஞர்....


பெயர் : கலைஞர் கருணாநிதி.....

பதவி: முதலமைச்சர், திமுக வின் தலைவர் ( ஆனால் அமைச்சர்களை நீரா ராடியாதான் நியமிப்பார்...)


கொள்கை: கழகமேகுடும்பம் ,குடும்பமே கழகம்...


பொழுதுபோக்கு: பாராட்டு விழாக்களில் கலந்துகொள்வது, தனக்கு தானே அண்ணா விருது, பெரியார் விருது போன்ற விருதுகளை கொடுப்பது......


அரசியல் எதிரி: அம்மையார்....

பொது எதிரி: தன்னை பற்றி விமர்சனம் பண்ணும் பத்திரிக்கைகள் மற்றும் நடுநிலையாளர்கள்.....


தொழில் : கதை வசனம் எழுதுவது.....

நீண்ட நாள் சாதனை: கட்சியை கட்டுபாட்டுக்குள் வைத்து இருந்தது....

சமிபத்திய வேதனை: அதே கட்சி இப்போது பல பேர் கட்டுபாட்டுக்குள் இருப்பது....


சோதனை: ராசா உருவத்தில் வருவது......


வேதனை: அழகிரி, ஸ்டாலின் ,கனிமொழி ஆகியோருக்குள் நடக்கும் சகோதர யுத்தம்....


உண்ணாவிரதம்: மருத்துவர்கள் அறிவுரைப்படி அரை மணி நேரம் இருப்பது.....


ரஜினி ,கமல், வைரமுத்து: எந்த விழாவாக இருந்தாலும் தனக்கு அருகில் இருந்து தன்னை புகழ்வதற்காக பிறந்தவர்கள்......


பிடித்த வார்த்தை: தமிழின தலைவர் ..


பிடிக்காத வார்த்தை: தமிழின துரோகி....


கனவு:தனக்கு பிறகு ஸ்டாலினை முதல் அமைச்சர் ஆக்குவது....மதுரையை தனி மாநிலம் ஆக்கி அழகிரியை முதல் அமைச்சர் ஆக்குவது....


லட்சியம்: இறுதி மூச்சு வரை முதல் அமைச்சர் பதவி.....

07 ஜனவரி 2011

ஸ்பெக்ட்ரம்...ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ...தவறான தகவலாம்...

ஸ்பெக்ட்ரம் புயலில் சிக்கி பதவி இழந்தார் ராசா.....இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் திமுகவிற்கும் விரிசல் ஏற்பட்டு கூட்டணியே உடையும் நிலை ஏற்பட்டுள்ளது...... நாடே சி பி ஐ அடுத்து என செய்யும் என்று எதிர்பார்த்து கொண்டு இருக்கிறது.....ஆனால் ராசா போயி புதுசா வந்த மந்திரி கபில் சிபல் என்ன சொல்றார் தெரியுமா?

2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக தணிக்கை அதிகாரி தவறான தகவல் தந்துள்ளார் என்று கபில் சிபல் புது புயலை கிளப்பி இருக்கிறார்.....

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய அவர், நாட்டின் தலைமை கணக்குத் தணிக்கை அதிகாரி (Comptroller and Auditor General-CAG) உள்பட அனைத்துத் துறைகளையும் காங்கிரசும் அரசும் மதிக்கிறது. இதை காங்கிரசின் வரலாற்றைப் பார்த்தாலே புரியும். எந்த அரசுத் துறையையும் காங்கிரஸ் குறை கூறியதே இல்லை.

அதே நேரத்தில் ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் கணக்குத் தணிக்கை அதிகாரி கூறியுள்ள சில தகவல்கள் வலியைத் தருகின்றன. 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையால் நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக அவர் எந்தக் கணக்கின் அடிப்படையில் கூறியுள்ளார் என்று தெரியவில்லை. (ஒருவேளை கணக்கு தணிக்கை அதிகாரி கணக்கில் வீக்காக இருப்பாரோ?)

சில தவறான கணக்கீட்டு முறைகளைப் பின்பற்றி இந்தக் கணக்குக்கு அவர்கள் வந்திருக்கிறார்கள். இதில் ஏராளமான பிழைகளும் தவறுகளும் உள்ளன. எந்த அடிப்படையும் இல்லாத இந்தக் கணக்கை ஏற்கவே முடியாது.

ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாகக் கூறுவது பெரும் பரபரப்பை உண்டாக்க வேண்டுமானால் உதவலாம். ஆனால், இந்த எண்ணிக்கையை தணிக்கைத் துறை எப்படி எட்டியது என்பதைப் பார்க்க வேண்டும். அதைப் பார்த்தால் அதில் பெருமளவில் தவறுகள் இருப்பது புரியும்.

ரூ. 1.76 லட்சம் கோடி என்றெல்லாம் சொன்னால், அந்த நஷ்டத்துக்கு காங்கிரஸ் கூட்டணி அரசு எந்த வகையிலும் பொறுப்பல்ல.

உண்மையைச் சொன்னால், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் தவறான நடைமுறைகள் ஆரம்பித்தது பாஜக கூட்டணி ஆட்சியில் தான். அவர்கள் தான் 'முதலில் வருபவர்களுக்கு முதலில்' ("first come, first served" policy ) என்ற கொள்கையை ஆரம்பித்து, அதை நடைமுறைப்படுத்தியவர்கள்.
( ஹி ஹி அவங்க முதலில் சாப்டாங்க....நாங்க அவர்கள் வைத்திருந்த கழுவாத தட்டில் பிறகு சாப்பிட்டோம்.....என்றுதானே சொல்றிங்க மந்திரி சார்....)
இந்த உண்மைகளை எல்லாம் நாங்கள் வெளிப்படுத்துவோம் என்று பயந்து தான், நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் பாஜக முடக்கியது.

தணிக்கைத் துறையைப் பொறுத்தவரை அவர்கள் தங்களுக்குத் தாங்கள் அநீதியை செய்து கொண்டுள்ளனர். பாஜகவும் எதிர்க் கட்சிகளும் மக்களுக்கு அநீதியைச் செய்கின்றன என்றார். ( அப்படினா இதை எல்லாம் பார்த்து பெருமூச்சு விடுகிற மக்கள் யாருக்கு அநீதி செய்தனர்?)

2010ம் ஆண்டு 3ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் மூலம் கிடைத்த வருமானத்துடன் 2007-08ம் ஆண்டில் 2ஜி ஸ்பெக்ட்ரம் மூலம் கிடைத்த வருமானத்தை ஒப்பிட்டு நாட்டுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக கணக்குக் தணிக்கை அதிகாரி அறிக்கை தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.

நித்தம் + ஆனந்தம் = நித்யானந்தா.....!!


மீண்டும் நித்யானந்தா.....

வழக்கம்போல இம்முறையும் பெண்கள் படை சூழ திருவண்ணாமலைக்கு தைரியமாக வந்தார்......

அவருக்கே அருகே ஆண் பக்தர்களை வைத்து கொள்ளவே மாட்டாரா?

பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தால் அவர் விரைவாக பூஜையை(!!!) முடித்து கொண்டு ஓடியது வேறு கதை.....


சென்ற வருடத்தின் ரொம்ப ரொம்ப ஹாட்டான விசயமே நம்ம (ஆ)சாமியை பற்றிதான்.....மலையாள பிட்டு பட பணியில் அவர் அடித்து கூத்துக்கள் இந்திய தொலைகாட்சிகளில் முதல்முறையாக கூசாமல் ஓடியது.....

அதை தொடர்ந்து தலைமறைவான அவர் பின்பு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியாகி இருக்கிறார்....


பத்து மாசமாக காணமல் போன ரஞ்சிதா வந்து இப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று பேட்டி கொடுக்கிறார்...கவனிக்கவும் நான் அவள் இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறாரே தவிர அது நித்யானந்தா இல்லை ... என்று கூறவில்லை....
நான் அவள் இல்லை என சொல்லும் ரஞ்சிதாவுக்கு ஒருவேளை ரஞ்சிதா மாதிரியே ஒரு சகோதரி இருக்கலாமோ !!!அப்படியா ரஞ்சிதா?

அந்த வீடியோ பதிவு காட்சியும் ஹைதராபாத் தடயவியல் ஆய்வு கூடத்தில் சோதனை செய்யப்பட்டு அது உண்மையான காட்சிதான் என்றும் .அதில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தான் என்றும் கூறியுள்ளது.....


இப்படி நாறிப்போன நித்யானந்தாவை சுற்றி இப்போதும் பெண்கள் கூட்டம்..அவருக்கு ஆதரவாக சில அமைப்புகள்.....என்ன கொடுமை சார்?

நமது சமுகம் எப்போது மாறும்?

தான் என்ன தவறு செய்தாலும் கொஞ்ச நாட்களில் மக்கள் அதை மறந்து விடுவார்கள் என்ற எண்ணம் நித்யானந்தாவுக்கு வருவதற்கு யார் காரணம்? அவரை சுற்றி இப்போதும் நிற்கும் பெண்கள்தான் காரணம்.....

இம்மாதிரியான மக்கள் இருக்கும்வரை ஆயிரம் நித்யானந்தாக்கள் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள்.....

06 ஜனவரி 2011

அஜித்தும் விஜய்யும் எதிரிகள் அல்ல.....!!!

சினிமா என்பது ஒரு வியாபாரம்......சினிமாவை பார்க்கும் ரசிகன் அதை ஒரு பொழுது போக்காக மட்டுமே நினைக்க வேண்டும்.....நடிகர்களுக்காக மன்றம் அமைத்து அவர்களுக்காக பிரிந்து சண்டை போட்டு கொண்டு இருப்பதினால் யாருக்கு நஷ்டம்? நடிகர்களுக்கா? நடிகர்கள் தங்களின் வெற்றிக்கு மட்டுமே ரசிகர்களை பயன் படுத்தி கொள்கின்றனர்.....

வெளியில் அஜீத் ரசிகர்களும் விஜய் ரசிகர்களும் முறைத்துக் கொண்டு திரிகிறார்கள்.

ஆனால் அவர்களின் தலயும் தளபதியும் பண்டிகை - விசேஷங்களுக்கு கூடிக் குலவி நட்பு பாராட்டுகின்றனர்.

இரு நடிகர்களின் இப்போதைய மார்க்கெட் நிலவரமும் ஒன்றும் ஆரோக்கியமாக இல்லை. அரசியல் பற்றி இருவருமே பரபரப்பாக பேட்டிகள் கொடுத்து வருகிறார்கள். இப்போது அதிமுக அனுதாபிகள் வேறு.

அதே நேரம் இருவருக்குமே ஒரு வெற்றி கட்டாயம் தேவை. அதற்காக மங்காத்தாவில் அஜீத் படுபிஸி. விஜய்யோ காவலனை முடித்து விட்டு, வேலாயுதத்தின் இறுதி ஷெட்யூலில் இருக்கிறார்.

இந்த இரு படங்களின் படப்பிடிப்புகளும் இப்போது சென்னை பின்னி மில்ஸில் நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் திடீரென்று அஜீத்தும் விஜய்யும் நேற்று சந்தித்துக் கொண்டனர்.

இருவரும் அவரவர் படம் குறித்து விசாரித்துக் கொண்டனர். அப்போது மங்காத்தா பட இயக்குநர் வெங்கட் பிரபு உடனிருந்தார்.
ஆகவே ரசிக பெருமக்களே அவர்களுக்காக நீங்கள் சண்டை போட்டு கொள்ளாதீர்கள்.....

05 ஜனவரி 2011

அனல் குறையாத அழகிரி.....அது ரஞ்சிதாவேதான்.....பதிவு 1 செய்தி 2

அழகிரியின் அனல் இன்னும் குறையவில்லை......ஏற்கனவே மந்திரி பதவியை உதறிவிட்டு மாநில அரசியலுக்கு திரும்பும் முடிவில் இருந்த அழகிரிக்கு கனிமொழி, நீரா, பூங்கோதை ஆகியோரின் தொலைபேசி உரையாடல் மேலும் வெறியாக்கியது.....
நேற்று இரவு கருணாநிதியை சந்தித்த அழகிரி, தனது மத்திய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யும் கடிதத்தைதக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று டெல்லியில் திடீரென காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை, டி.ஆர்.பாலு சந்தித்துப் பேசியுள்ளார். இதனால் திமுக வட்டாரத்தில் நடப்பது என்ன என்பது குறித்து பெரும் பரபரப்பாகியுள்ளது.

ஜனவரி 1ம் தேதி முதல்வர் கருணாநிதியை சந்தித்த அழகிரி அவருக்குப் புத்தாண்டு வாழ்த்தைச் சொன்னார். அடுத்து சில கோரிக்கைகளை அவர் முதல்வரிடம் வைத்து ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார். அது கட்சிப் பொறுப்புகளிலிருந்து தான் விலகுவதாக கூறும் கடிதம்.

தனது கோரிக்கைகளை நிறைவேற்ற முயற்சிக்குமாறும், அது முடியாத பட்சத்தில் தனது ராஜினாமா கடிதத்தை ஏற்குமாறும் முதல்வரிடம் கேட்டுக் கொண்டாராம் அழகிரி.

அழகிரி கோரிக்கைகள்:

- ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கிய ராசாவை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டும்.

- நீரா ராடியாவுடன் நடந்த தொலைபேசி உரையாடலின்போது தன்னைப் பற்றி அவதூறான முறையில் பேசிய கனிமொழி, அமைச்சர் பூங்கோதை ஆலடி அருணா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்சியை விட்டு அவர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும்.

- சென்னையில் கனிமொழி ஏற்பாடு செய்துள்ள சென்னை சங்கமம் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது. அதை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை அழகிரி வைத்துள்ளதாக தெரிகிறது.

- மாநில அளவில் கட்சியில் தனக்கு முக்கியப் பொறுப்பு தர வேண்டும்

மேலும், கோபாலபுரம் இல்லத்தை இலவச மருத்துவமனையாக்கும் திட்டத்திற்கும் அவர் ஆட்சேபனை தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. அழகிரியின் இந்த புதிய போர்க்கொடியால் திமுக வட்டாரம் பரபரப்படைந்துள்ளது.

அது ரஞ்சிதாவேதான்......

சாமியார் நித்தியானந்தாவுடன் படுக்கை அறையிலும், படுக்கையிலும் இருப்பது நடிகை ரஞ்சிதாதான். இது தடயவியல் ஆய்வில் தெளவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று கர்நாடக சிஐடி போலீஸார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று சமீபத்தில் ரஞ்சிதா கூறியிருந்தார். மேலும் இந்த வீடியோவை வெளியிட்ட லெனின் கருப்பன் தன்னைக் கற்பழிக்க முயன்றதாகவும் அவர் புகார் கூறியுள்ளார்.

ஆனால் ரஞ்சிதாவின் கூற்றை கர்நாடக சிஐடி போலீஸார் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். வீடியோவில் இருப்பது சாட்சாத் ரஞ்சிதாததான் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து சிஐடிதரப்பில் கூறுகையில், சம்பந்தப்பட்ட வீடியோவை சண்டிகர், ஹைதராபாத்தில் உள்ள தடவியல் கழகங்களுக்கு அனுப்பி விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும் நித்தியானந்தா, ரஞ்சிதாவின் தனித் தனிப் படங்களுடனும் அவை ஒப்பிடப்பட்டன.

இதில் வீடியோவில் உள்ள படங்கள் மிகத் தெளிவானவை, சரியானவை என்றும், நித்தியானந்தா, ரஞ்சிதாவின் ஒரிஜினல் படங்களுடன் இவை ஒத்துப் போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும், அந்த வீடியோவில் எந்தவிதமான சேர்ப்போ, மார்பிங்கோ நடைபெறவில்லை என்பதும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

உலகின் எந்த மூலைக்கு இதை அனுப்பினாலும் நாங்கள் சொல்வது சரியே என்பது நிரூபணமாகும். இதை எங்கு போய் நிரூபிக்க வேண்டும் என்றாலும் அதற்கு கர்நாடக சிஐடி போலீஸார் தயார் என்றனர்.

மேலும் லெனின் மீதான ரஞ்சிதாவின் புகாரையும் கர்நாடக சிஐடி போலீஸ் சீரியஸாக எடுக்கவில்லையாம். அவர் சொல்வது உண்மையாக இல்லை என்று கர்நாடக போலீஸ் கருதுகிறது.