04 ஜனவரி 2011

அழகிரி ராஜினாமா?..சீமான் ஆவேசம்....பதிவு 1 செய்தி 2

சும்மாவே அழகிரி அதை பண்ணினார் ,இதை பண்ணினார் என்று வதந்திகள் பரவும்....கனிமொழி மற்றும் ராசா மீது அழகிரி கோபமாக இருக்கும் நிலையில் இப்போது அவரை பற்றி புது வதந்தி பரவியுள்ளது.....ஆனால் இது உண்மைதான் என்றும் சொல்லப்படுகிறது.........

தமிழக முதல்வர் கருணாநிதியை மத்திய அமைச்சர் மு.க. அழகிரி சந்தித்து, தனது தென்மண்டல அமைப்பு செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய விரும்புவதாக கூறி ராஜினாமா கடிதத்தை கொடுத்ததாக செய்தி பரவியுள்ளது.

முதல்வரை அழகிரி சந்தித்தபோது, அடுத்த வாரம் நடக்க உள்ள கனிமொழி ஏற்பாடு செய்துவரும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டும் என்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ராசாவை தற்காலிகமாக தி.மு.க -விலிருந்து நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்ததாக தெரிகிறது.

இந்த கோரிக்கையை ஏற்காதபட்சத்தில் அவர் தனது ராஜினாமாவை ஏற்று கொள்ள வேண்டும் என வற்புறுத்தியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்த செய்தியால் திமுக வட்டாரத்தில் பரபரப்பு நிலவுகிறது.

சீமான் ஆவேச பேச்சு....

தமிழர் திருநாளையொட்டி தமிழக அரசின் சார்பில் ரேஷன் கடைகளில் மக்களுக்கு இலவச பொங்கல் பை வழங்கப்படுகின்றது. அவ்வாறு வழங்கப்படும் பைகளில் திமுகவின் சின்னமான உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளனர்.

அந்தப் பொருட்களை தமிழக அரசு தான் வழங்குகிறது. ஆனால் அதில் உதயசூரியன் சின்னத்தை அச்சிட்டுள்ளனர். அரசு சார்பில் அரசின் நிதியில் வழங்கப்படும் பொருட்களில் திருவள்ளுவர் படம் இருந்தால் போதுமானது, கருணாநிதியின் கட்சி சின்னம் எதற்கு?

இதன் மூலம் வரும் தேர்தலில் திமுகவுக்கு வாக்களிக்க தமிழ் மக்களை நிர்ப்பந்தப்படுத்துவதற்கு கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி அரசு இயந்திரத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது.

பொங்கல் பையில் உதயசூரியன் சின்னம் மட்டுமல்ல, முன் எப்பொழுதும் இல்லாத வகையில் கருணாநிதியின் ஆட்சியில் அனைத்து இடங்களிலும் கருணாநிதியின் பெயர் சூட்டப்படுகின்றது. அவரது புகைப்படம் இடம் பெறுகிறது.

பேருந்தில் இருந்து, ரேஷன் கடையில் விற்கப்படும் மளிகைப் பொருட்கள் வரை அனைத்திலும் கருணாநிதி பெயரும் புகைப்படமும் தான். இந்த அதிகார துஷ்பிரயோகத்திற்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் கூறியுள்ளார்.
ஆமாம் ....இது நியாயம்தானே...... அரசின் சார்பில் மக்களுக்கு உதவி வழங்கும்போது அதில் திமுகவின் சின்னம் எதற்கு? திமுக கஜானாவில் இருந்தா கொடுக்குறீங்க?

8 கருத்துகள்:

  1. நன்றி நண்பரே நான் அறிந்திராது ஒரு புதிய தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை(தி.மு.க) ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. ஒன்றும் அப்பன் வீட்டுக் காசோ,திருக்குவளையிலிருந்து கொண்டு வந்த காசோ அல்லவே?வெற்று மஞ்சள் பையுடன் மெட்ராஸ் வந்தவர்,அரசின் பெயரில் வழங்கும் இலவசங்களுக்கும் கட்சிச் சின்னம் பொறித்து?!எங்கே போகிறோம்? அல்லது எங்கே அழைத்துச் செல்கிறார்கள்?????????

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா11:41 AM, ஜனவரி 05, 2011

    Cinemaakkaaran SEEMAAN-ukku athai solla thaguthiyillai!
    தயவு செய்து தியேட்டரில் படம் பார்த்து உங்கள் பணத்தை வீணாக்க வேண்டாம். முப்பது ரூபாய்க்கு DVDயில் படம் பார்த்தால் உங்கள் குடும்பத்துடன் பார்க்கலாம்.சினிமா துறையில் இருந்து அடுத்த அரசியல் வாதியும்,முதல்வராகவும் வந்து கொள்ளையடிக்கப் போவதை தடுத்து நிறுத்துங்கள்!!! http://saigokulakrishna.blogspot.com/2010/12/blog-post_499.html

    பதிலளிநீக்கு
  4. பெயரில்லா11:45 AM, ஜனவரி 05, 2011

    Good Joke!Politics Stunt by SEEMAAN, just blaming KArunaanithi type politics! First try to clear/eradicate the cinema field then you enter to politics,
    Politics begger SEMAAN!After all gone vain in Ezham now he started to blame...! next to VAIKO< RAMADAS, EVKS..Ha Ha Ha!

    பதிலளிநீக்கு
  5. சகோ ஹாஜா அவர்களே..
    அரசியலில் தங்கள் இருப்பை காட்டிக்கொண்டே இருக்கவேண்டும்,இல்லைனா,செத்துட்டான்னு பொரளிகள கெளப்பீர்வானுக எதிர்கச்சி காரனுவ..அதன் வெளிப்பாடுதான் மேலே உள்ள இரண்டு செய்திகளும்..

    அழகிர்'ய நல்லாவே போட்டோ எடுத்துருக்கீங்க..நெஜமாவே வேலை செய்ரம்மாதிரி இருக்குன்னா பாத்துக்கோங்களேன்...

    அன்புடன்
    ரஜின்

    பதிலளிநீக்கு
  6. #அழகிர்'ய நல்லாவே போட்டோ எடுத்துருக்கீங்க..நெஜமாவே வேலை செய்ரம்மாதிரி இருக்குன்னா பாத்துக்கோங்களேன்..#

    நல்ல காமெடி...........

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே......

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....