28 ஜனவரி 2011

எம் ஆர் ராதா ஆவேசம்...(இறந்தவர்கள் மீண்டும் வந்தால்)


இறந்தவர்கள் மீண்டும் வந்தால் நாட்டு நடப்பை பார்த்து என்ன சொல்வார்கள்..?

எம் ஆர் ராதா சொல்கிறார்...

என்னடா இது நாடு.....
பாலம் கட்டுவதி ஊழல், சாலை போடுவதில் ஊழல்...
காமன்வெல்த் ஊழல், தியாகிகளுக்கு வீடுகள் ஒதுக்குவதில் ஊழல்...

அது என்னடா அது ஸ்பெக்ட்ரம்? ஊத்தி குடிக்கிற ரம்மைவிட ஸ்பெக்ட்ரம் நியூஸ் ரொம்ப ஹாட்டா இருக்கு.....

வெங்காயம் விலை என்னடா இமயமலை உயரத்துல இருக்கு.....பெரியார் இருந்தா வெங்காயம்னு சொல்லக்கூட யோசிப்பாரு.....

என்னங்கடா இந்த அரசியல்வாதிகள் இப்படி கொள்ளை அடிக்கிறாங்கலேன்னு பார்த்தா.....அதுக்கே காரணமே நம்ம வாக்கால பெருமக்கள்தான்னு இப்பதான் புரியுது...

அவன் ஆயிரம் ரூபாய் கொடுத்து உங்களிடம் ஒட்டு வாங்கி பல்லாயிரம் ரூபாய் கொள்ளை அடிக்கிறான்....ஓட்டுக்கு காசு வாங்கிகொண்டு எந்த மூஞ்சியை வைத்து கொண்டுடா நீங்க ஒட்டு போட்ட அரசியல்வாதிங்க கிட்ட கேள்வி கேட்பிங்க ?

தொலைக்காட்சி நிகழ்சிகளில் எஸ் எம் எஸ் மூலம் உங்கள் காசை செலவழித்து யாருக்கோ ஒட்டு போடும் நீங்கள் உங்களுக்கு பணிபுரிய போகும் ஒருத்தனிடம் காசு வாங்கிகொண்டு ஒட்டு போடுகிறீர்களே ...இது எவ்வளவு பெரிய முரண்பாடு...?என்னங்கடா கோக்குமாக்கு இது?

ஏன் ஓட்டுக்கு காசு கொடுக்காத உங்க காலத்துல இந்த மாதிரி ஊழல் எல்லாம் இல்லையான்னு கேட்குறிங்களா? அட பாசக்கார பாவிகளா...எங்க காலத்துல ஊழல் பண்ணினான்...மக்களுக்கு கொஞ்சம் பயந்துகொண்டே.....ஆனா இப்போது காசு கொடுக்கும் தைரியத்தில் பயமில்லாமல் தவறு செய்கிறான்....

என்ன பண்றது...நான் சொல்லியா நீங்க திருந்த போறிங்க...போடுங்க போடுங்க... காசு வாங்கிகொண்டு போடுங்க...உங்ககிட்டஆயிரங்கள் கொடுத்துவிட்டு அவன் எண்ணமுடியாத தொகைகளில் கொள்ளை அடிக்கட்டும்...நான் போயி கல்லறையிலே படுத்துகிறேன்...

12 கருத்துகள்:

 1. //நான் போயி கல்லறையிலே படுத்துகிறேன்... //

  உங்க உண்மையான கோபம் புரியுது மக்கா....

  பதிலளிநீக்கு
 2. சூப்பர்! அவரு உண்மையிலேயே மீண்டு வந்தா ரொம்பத்தான் வருத்தப்படுவாரு!

  பதிலளிநீக்கு
 3. லேட்டா வந்தாலும், லேட்டஸ்ட்டா ஓட்டு போட்டுட்டேன் தலைவரே...

  பதிலளிநீக்கு
 4. அவரை போலவே வார்த்தைகளை பயன்படுத்தி, நிகழ்காலத்தை சொல்லி இருக்கிறீர்கள்..

  பதிலளிநீக்கு
 5. கடைசி லைன் தான் பஞ்ச்... அதுக்கு அவர் அமைதியா படுத்தே இருக்கட்டுமே.....

  பதிலளிநீக்கு
 6. ச‌ரியான‌ ந‌ப‌ர் வ‌ழியாய்த் தான் நம் தீரா வ‌லியை வெளிப்ப‌டுத்தி இருக்கிறீர்க‌ள். நல்ல யுக்தி. வாழ்த்துக்க‌ள்.

  பதிலளிநீக்கு
 7. எங்க காலத்திலே ரெண்டு கூத்தாடி பசங்க ஏதோ சொந்த காரணத்திற்காக சுட்டுகிட்டானுங்க,அதை இந்த கண்ணீர்த்துளி பசங்க போஸ்டர் போட்டு தேர்தலில் ஜெயிச்சானுங்க,இப்படிகூட நடிகவேள் சொல்ல வாய்ப்பு இருக்கிறது.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....