03 ஜனவரி 2011

கூட்டணி முக்கியம் அல்ல.....கொள்கைதான் முக்கியம் ....

அடிக்கடி தமிழ் சினிமாவில் காமெடிக்கு பஞ்சம் வரும்போது தான் படம் இயக்கி ,நடித்து, இசை அமைத்து அந்த பஞ்சத்தை போக்குபவர் நம்ம டி ஆர் தான்.....

டி.ராஜேந்தர் கதாநாயகனாக நடிக்கும் ஒரு தலைக்காதல் படத்தில் இரண்டு நாயகிகள் நடிக்கவுள்ளனராம்.( தலைவருக்கு இன்னும் ஜோடி கேட்குதாம் !!அதுவும் இரண்டு பேரு !!!!) வழக்கமாக குத்துப் பாட்டுக்களை நிறையக் கொடுக்கும் ராஜேந்தர் இந்தப் படத்தில் தெம்மாங்குப் பாட்டையும் கலந்து கொடுத்து ரசிகர்களை கலக்கப் போகிறாராம்.( ஹி ஹி ....ஏய் டண்டணக்கா தான் )

டி.ராஜேந்தர் (விஜய டி.ராஜேந்தர் என்ற பெயரை மறுபடியும் டி.ராஜேந்தர் என்றே மாற்றி விட்டார் டி.ஆர்.) செய்தியாளர்களிடம் தனது அடுத்த படம் குறித்து கூறுகையில்,

அடுத்த மாதம் இறுதியில் ஒரு தலைக்காதல் படப்பிடிப்பு தொடங்குகிறது. இதில் நான் கதாநாயகனாக நடிக்கிறேன். இந்தபடத்தில் மும்பையை சேர்ந்த 2 கதாநாயகிகள் நடிக்கிறார்கள். இந்த படத்தில் குத்துப்பாட்டு மட்டும் அல்லாமல் தெம்மாங்கு பாட்டும் இடம்பெறும்.

ஒருதலை ராகம் படம் போல இந்த ஒருதலைக்காதல் படமும் மாபெரும் வெற்றி பெறும். இதன் படப்பிடிப்பு கொல்லிமலை, திண்டுக்கல், தேனி போன்ற பல்வேறு இடங்களில் நடைபெறும்.

அடுத்து குறளரசன்!

இந்த படம் முடிந்த பிறகு குரளரசனை கதாநாயகனாக நடிக்க வைத்து ஒரு படம் எடுக்க உள்ளேன்.( விரலை வச்சு உங்க ஒரு மகன் ஆட்டம் போட்டது போதாதா?)

சிம்பு யாரைக் காதலித்தாலும் ஓ.கே.!

சிம்பு அரசியலுக்கு வருவாரா? என்பது பற்றி அவர்தான் முடிவு செய்ய வேண்டும். ( ஆஹா ......அவர் அரசியலுக்கு வரலன்னு இங்க யார் அழுதா?)...
அவர் யாரை காதலித்தாலும் அதை நான் ஏற்று அவருக்கு திருமணம் செய்து வைப்பேன். காதலிப்பது பெரிய தவறு இல்லை என்றார் ராஜேந்தர்.

பின்னர் அரசியல் குறித்தும் பேசினார் ராஜேந்தர். அவர் கூறுகையில், லட்சிய தி.மு.க. யாரையும் தேடிப்போகாது( உண்மையிலே நீங்கள் வச்சு இருக்கிறது கட்சின்னு ஒரு நெனப்பு இருக்கா? என்ன கொடுமை சார்?)வருகிற தேர்தலில் எந்த கட்சி எங்கள் ஆதரவை கேட்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்( சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு கொடுங்களேன்) எங்களுக்கு கூட்டணி முக்கியம் அல்ல கொள்கை தான் முக்கியம் என்றார்... ( உங்களுக்குதான் கூட்டணியே கிடையாதே .....முதலில் உங்கள் கட்சியின் கொள்கை என்னனு உங்களுக்காவது தெரியுமா?)

மேலும் பிப்ரவரி மாதத்தில் ஈரோட்டில் லதிமுகவின் பொதுக் கூட்டத்தை பிரமாண்ட மாநாடு போல நடத்தப் போகிறாராம் ராஜேந்தர். இதையும் அவரே தெரிவித்தார்.( ஹி ஹி ...சும்மா காமெடி பண்ணாதிங்க தாடியாரே......நீங்கள் மட்டும் மைக்கில் கத்தினால் அது மாநாடு ஆகிவிடுமா? சின்ன புள்ள மாதிரி இன்னும் எத்தினை நாள்தான் பேசுவிங்க?)

8 கருத்துகள்:

  1. பெயரில்லா7:57 PM, ஜனவரி 03, 2011

    sakthistudycentre.blogspot.com சொன்னது…

    பதிவுலக நண்பர்களே..
    அருமையான பதிவு பிடித்திருந்தால் அவசியம் ஒட்டு போடவும் அதனால் கருத்துக்கள் பரவுகின்ற வாய்ப்பு கிடைக்கபெறும்.
    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
    http://sakthistudycentre.blogspot.com////

    அய்யய்யோ...இந்தாளு எங்கே போனாலும் ஒரே மாதி டெம்ப்ளேட் கமெண்டை காப்பி பேஸ்ட் பண்ணி போட்டுட்டு போயிடுறாரு...இவருக்கு யாராவது பாலோவரா சேர்ந்து ஓட்டும் போடுங்க பிளீஸ்...

    பதிலளிநீக்கு
  2. ஹி ஹி ....நாங்க சொல்றதுக்கு முன்னாடி நீங்களே சொல்லிட்டீங்க.....

    பதிலளிநீக்கு
  3. //தலைவருக்கு இன்னும் ஜோடி கேட்குதாம் !!அதுவும் இரண்டு பேரு !!!!)//

    கெடைக்குதே.. தமிழ் கதாநாயகிகளின் தலையெழுத்து.

    ஆனாலும் உங்களுக்கு டி.ஆர் மேல ரொம்பத்தான் கோபம். உங்கள் கட்சியின் கொள்கை என்னனு உங்களுக்காவது தெரியுமா என்ன கேள்வி இது?
    அதுதான் இருக்கே ’ஏய் டண்டணக்கா தான்’

    நல்ல பதில்கள் தங்களது. ரசித்தேன். நன்றி..மீண்டும் வருவேன்.

    பதிலளிநீக்கு
  4. ஒரு வேளை Short term memarey loss வந்துடுச்சுன்னு கொள்கையைத்தான் உடபெல்லாம் பசை குத்தி வச்சு இருக்காரோ.

    பதிலளிநீக்கு
  5. வருகிற தேர்தலில் எந்த கட்சி எங்கள் ஆதரவை கேட்கிறதோ அந்த கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுப்போம்( சுப்ரமணிய சுவாமிக்கு ஆதரவு கொடுங்களேன்)
    :-))

    பதிலளிநீக்கு
  6. தளம் மிகவும் மெதுவாக இயங்குகிறது... சத்தியமா படிக்க முடியல... ப்ளீஸ் என்னன்னு பாருங்க...

    பதிலளிநீக்கு
  7. இந்த கொசு தொல்லைங்க தாங்க முடியல சகோ..

    கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பேசுனா அரசியல் கட்சின்னு போயிடுராங்க!!!!!!!

    பதிலளிநீக்கு
  8. ஹி ஹி நம்ம எல்லாருக்கும் சிரிப்பை வரவழைத்த நம்ம தாடியாருக்கு நன்றி......

    உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....