மத்திய அமைச்சர் அழகிரியின் சொத்து கணக்கு தெரிய வேண்டுமா?
துணை முதலமைச்சர் ஸ்டாலினின் சொத்து கணக்கு தெரிய வேண்டுமா?
உங்களது மாநகராட்சி ,நகராட்சி மற்றும் ஊராட்சி மன்றங்களில் நடந்த நலத்திட்ட உதவிகள் .அரசின் திட்டங்கள் போன்றவற்றில் முறைகேடுகள் நடந்துள்ளதா என அறிய வேண்டுமா?
பத்து ரூபாய் போதும்.....எல்லா தகவல்களையும் தெரிந்து கொள்ள.....
அதுதான் தகவல் அறியும் உரிமை சட்டம் ....ஒவ்வொரு இந்தியனுக்கும் உள்ள அடிப்படை உரிமையின் உச்ச கட்டம்...
நாட்டின் பாதுகாப்பை விபரங்களை தவிர்த்து என்ன வேண்டுமானாலும் கேட்கலாம்.....
அனைத்து அலுவலகங்களிலும் பொது தகவல் அதிகாரி என்று ஒருவர் இருப்பார்...அவரிடம் விண்ணப்பித்து நாம் விரும்பும் தகவலை தெரிந்து கொள்ளலாம்....விண்ணப்ப கட்டணமாக பத்து ரூபாயை நேரடியாகவோ அல்லது காசோலையாகவோ செலுத்தலாம்.....ஒரு விண்ணப்பத்தில் எவ்வளவு கேள்வி வேண்டுமானாலும் கேட்கலாம்.....
விண்ணப்பம் கொடுத்த முப்பது நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரி தகவல் அளிக்க வேண்டும்...கூடுதலாக ஐந்து நாட்கள் எடுத்துகொள்ளலாம்...தகவல் அளிக்க மறுக்கும் அதிகாரிகளுக்கு அதிக பட்சமாக இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.....
சமிபத்தில் மும்பையில் பரபரப்பை கிளப்பிய ஆதர்ஸ் குடியிருப்பு முறைகேடு கூட இந்த சட்டத்தினால் அடையாளம் காண்பிக்க பட்டதே ஆகும்....
அரசு அலுவலகங்கள்,பொது அலுவலகங்கள் போன்றவற்றில் ஒளிவு மறைவற்ற வெளிப்படையான செயல்பாடு, லஞ்சம் ஊழலை ஒழித்தல் ஆகியதே இந்த சட்டத்தின் நோக்கமாகும்.....
நமது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமையான இந்த சட்டத்தை நாமும் பயன்படுத்தி நமது உச்ச கட்ட அதிகாரத்தை நிலை நாட்டுவோம்....
Tweet |
Me the First
பதிலளிநீக்குநன்றி நண்பரே ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் . இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் . பகிர்வுக்கு நன்றி ..
பதிலளிநீக்குSee,
http://sakthistudycentre.blogspot.com/2011/01/blog-post_9630.html
comment and vote me..
நான் இதை முயற்சிசெய்து பார்க்கிறேன்
பதிலளிநீக்குநன்றி நண்பரே பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள்
ஏன்? நீயே அந்த சட்டத்தை பயன்படுத்தி அவுங்க சொத்து எவ்வளவுன்னு தெரிஞ்சுட்டு சொல்லலாமே?
பதிலளிநீக்குபெயரில்லா பிச்சை அவர்களே.....பனி காலத்தில் இப்படித்தான் உங்களுக்கு மூளை வறண்டு போகுமா?
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள், நன்றி..
பதிலளிநீக்குNice!
பதிலளிநீக்குஇது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்! அப்படித்தானே?
பதிலளிநீக்குநல்ல விரிவான தகவல் சகோ
பதிலளிநீக்குஇதை பற்றி நானும் எழுதினேன். நேரம் கிடைக்கும் போது இதையும் பாருங்க
தகவல் தாரயோ
http://kuttisuvarkkam.blogspot.com/2010/12/blog-post_20.html
சபரிமலை மகரஜோதி பற்றிய உண்மைகளை அறிய இந்த சட்டத்தின் படி யாரிடம் மனு செய்யவேண்டும்?
பதிலளிநீக்குநன்றி
பதிலளிநீக்குநண்பா சூப்பர் சட்டம் சரியான முறையில் பயன்படுத்தவேண்டும்
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும் {வரஹ்}
பதிலளிநீக்குஅருமையான தகவல்கள் சகோ.
You can get this information, but there will not be any guarantee for life, those rowdies will kill us in no time. Though so many things are there in the law, awareness is not there and also the authorities themselves don't co-operate sometimes. For example, every Govt. office you can read a board stating that complaints book is available, but nobody will give it. Another example, assume somebody has cast your vote before you reached the polling both, as per procedure the officers there should register your vote and remove the fake vote, but they will always send you back without allowing you to vote. The Karunanidhi's son, the moment they come to know you are gathering information about them, they will kill you overnight, who can stop them? In Salem the DMK Minister Veerapandi is taking so many Acres of land by threatening, who is saving the people? Our Indian Law is not to save people. All people should join together and fight against the corrupt rascals. But 25% are DMK Gundas in every village/Town with the backing of ruling party, then who will fight?
பதிலளிநீக்கு#கந்தசாமி. சொன்னது…
பதிலளிநீக்குஇது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்! அப்படித்தானே?#
அது தெரியவில்லை நண்பரே......
SHANKAR சொன்னது…
பதிலளிநீக்குசபரிமலை மகரஜோதி பற்றிய உண்மைகளை அறிய இந்த சட்டத்தின் படி யாரிடம் மனு செய்யவேண்டும்?
கோவில்களை நிர்வாகம் பண்ணும் அறநிலைய துறையிடம் என்று நினைக்கறேன்....
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே............
பதிலளிநீக்குசட்டம் உதவி செய்தாலும், உண்மையைத் தெரிந்து கொண்டாலும் அதனால் நமக்கு விளையப்போகும் பலன் என்ன? கையிலே காசு வாயிலே தோசை என்று வாழ்க்கை நடத்தும் நம்மால் வேறு என்ன எதிர் விளைவை ஏற்படுத்திட இயலும்?
பதிலளிநீக்குஅவர்களது சொத்து விபரம் தெரிந்துவிட்டது. மேற்கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள்?
பதிலளிநீக்கு#சீராசை சேதுபாலா சொன்னது…
பதிலளிநீக்குஅவர்களது சொத்து விபரம் தெரிந்துவிட்டது. மேற்கொண்டு என்ன செய்யப் போகின்றீர்கள்?#
நான் சொத்து விபரத்தை மட்டும் சொல்லவில்லை.....என்ன தகவல் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றுதான் சொன்னேன்.....இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று சொன்னேன்....
நான் சொத்து விபரத்தை மட்டும் சொல்லவில்லை.....என்ன தகவல் வேண்டுமானாலும் கேட்கலாம் என்றுதான் சொன்னேன்.....இப்படி ஒரு சட்டம் இருக்கிறது என்று சொன்னேன்....
ஒரு நல்ல விஷத்தை சொன்னால் ஏன் என்னை கேள்வி கேட்குறிங்க?
பதிலளிநீக்குVery nice post! Useful Information to all..,
பதிலளிநீக்குFirst, Lets start from our Village Panchayat president, Counsillors, VAO, Revenue Inspector, Thashildhar, BDO.., then to reach..,Stalin, Azhagiri, Jayalalitha and her slaves..,Sonia and her Mafia.