01 ஜனவரி 2011

2010 கிரிக்கெட் ஒரு பார்வை...



நண்பர் பர்கான் (garuppan.blogspot.com) அவரது பார்வையில் சென்ற வருடத்தின் சிறந்த பத்து பதிவர்களில் என்னையும் ஒருவராக குறிப்பிட்டு உள்ளார்.....அவருக்கு எனது மகிழ்ச்சி கலந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்......

2010ஆம் ஆண்டு உலக கிரிக்கெட்டில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்த ஆண்டாகும். குறிப்பாக நமக்கு நினைவுக்கு வருவது இந்தியா தொடர்ந்து டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தைத் தக்கவைத்தது. ஆஸ்ட்ரேலிய அணியின் சீர்குலைவு, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகளின் எழுச்சி, பாகிஸ்தான் கிரிக்கெட்டில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் என்று 2010ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகம் நிகழ்வுகளும் சுவையான டெஸ்ட் மற்றும் ஒரு நாள் ஆட்டங்களையும் கொண்ட ஆண்டாக உள்ளது.



2010ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியா வங்கதேசத்துக்கு எதிராக டெஸ்ட் தொடரை தொடங்கியது. அந்த டெஸ்ட் தொடரில் இந்தியா 2-0 என்று வெற்றி பெற்று வெற்றியுடன் தொடரைத் தொடங்கியது.

ஜூன் மாதம் 2010-இல் இலங்கையில் நடைபெற்ற ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா சாம்பியன் பட்டம் வென்று ஆசிய சாம்பியன் பட்டத்தை நீண்ட நாட்களுக்குப் பிறகு பெற்றது ஒரு மறக்க முடியாத நிகழ்வாகும்.

ஆனால் அதற்கு முன்பு மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா தோல்வி தழுவி வெளியேறியது ஒரு பின்னடைவாகும். அதில் இங்கிலாந்து வெற்றிபெற்று அதுவே அந்த அணிக்கு ஒரு உத்வேகமாக உருவெடுத்தது.

ஜூலை ஆகஸ்டில் இந்தியா மீண்டும் இலங்கை அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரில் பங்கேற்கச் சென்றது. அங்கு ஒரு டெஸ்ட் போட்டியை இலங்கை வெல்ல முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளை எடுத்து ஓய்வு அறிவித்தார். ஆனால் கடைசி டெஸ்ட் போட்டியில் வி.வி.எஸ். லஷ்மணின் அபார சதத்துடன் இந்தியா 264 ரன்கள் வெற்றி இலக்கை அபாரமாகத் துரத்தி தொடரை சமன் செய்தது.

பிறகு ஆஸ்ட்ரேலிய அணி இங்கு வந்தது அதில் 2 டெஸ்ட் போட்டிகளில் ஒரு போட்டி மொஹாலியில் நடைபெற்றது. இதில் மிகக்குறைவான வெற்றி இலக்கை இந்தியா துரத்துவதில் சிக்கல் ஏற்பட்டு பிறகு வி.வி.எஸ். லஷ்மண் தனது அபார ஆட்டத்தின் மூலமும் இஷாந்தின் மன உறுதியுடனும் இந்தியா வெற்றி பெற்றது. பிறகு அடுத்த டெஸ்டிலும் வென்று முதன் முதலாக ஆஸ்ட்ரேலிய அணிக்கு தொடர் முழுதும் தோல்வி ஏற்படச் செய்தது இந்தியா.

முன்னதாக தென் ஆப்பிரிக்க அணி இந்தியாவுடன் முதல் டெஸ்டை வெற்றி பெற்றது. பிறகு 2-வது டெஸ்ட் போட்டியின் பரபரப்பான கணங்களில் ஹஷிம் அம்லா இந்திய வெற்றியைத் தடுத்து விடுவார் என்று நினைத்திருக்கையில், கடைசி ஓவருக்கு முதல் ஓவரில் ஹர்பஜன் சிங் மோர்னி மோர்கெல் விக்கெட்டை வீழ்த்தி வெற்றி பெற்று தொடரை 1- 1 என்று சமன் செய்தது இந்த ஆண்டின் மறக்க முடியாத தொடர்களில் ஒன்று.

தற்போது தென் ஆப்பிரிக்காவில் டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்கும் முயற்சி மட்டுமல்லாமல் தொடரையே முதல் முறையாக வெல்லும் வாய்ப்பை இந்திய அணி பெற்றுள்ளது. டர்பன் டெஸ்ட் வெற்றியுடன் இந்திய கிரிக்கெட் அணி 2010ஆம் ஆண்டை சிறபாக முடித்துள்ளது. கேப்டவுன் டெஸ்டில் வென்று இந்த ஆண்டை சாதனையுடன் துவங்கும் இந்தியா என்று எதிர்பார்க்கலாம்.

1 கருத்து:

  1. நல்லா இருக்கு சகோ உங்க பார்வையில் கிரிக்கேட் பற்றீய தொகுப்பு....

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....