14 ஜனவரி 2011

குடிகாரன் விஜயகாந்த்...ஊற்றி கொடுத்த ஜெயலலிதா....கலைஞர்


சேலத்தில் நடந்த தேமுதிக மாநில மாநாட்டின்போது முதல்வர் கருணாநிதியையும், திமுக அரசையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார் விஜயகாந்த். அதற்கு முரசொலி மூலம் திமுக பதிலளித்துள்ளது.

தேமுதிக தலைவர் பற்றி - எதிர்க் கட்சித் தலைவர் - ஜெயலலிதா சூட்டிய அடைமொழி "குடிகாரன்" என்பது தான். அதற்குப் பதில் சொன்ன தே.மு.தி.க. தலைவர் "ஆமாம், ஜெயலலிதா தான் எனக்கு ஊற்றிக் கொடுத்தார்" என்பதைப் போல கூறியதும் ஏடுகளிலே அப்படியே உள்ளது. ஆனால் இந்த வாசகங்கள் ஊற்றிக் கொடுத்தவருக்கும் மறந்து விட்டது. வாங்கிக் குடித்தவருக்கும் மறந்து விட்டது. நமக்குத் தான் மறக்கவில்லை என்று சாடியுள்ளது திமுகவின் முரசொலி இதழ்.

நீங்கள் சொல்வது எல்லாம் சரிதான் கலைஞரே....அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே....?

நீங்கள் காமராஜரை திட்டாத திட்டா?

இந்திரா காந்தியை பேசாத பேச்சா?

பின்பு அதே காமராஜரை பெருந்தலைவர் என்று புகழ்ந்தீர்கள்...

இந்திரா காந்தி மதுரைக்கு வந்தபோது கருப்பு கொடி காட்டி ஆர்பாட்டம் பண்ணியபோது நடந்த கலவரத்தில் இந்திரா காந்தி மீது ரத்தம் சிந்தி இருந்தது....அதுபற்றி எவ்வளவு கொச்சையாக பதில் கூறுனீர்கள்? அச்சில் எழுத முடியாத அந்த வார்த்தைகளை நா கூசாமல் கூறுனீர்கள்....

பின்பு அதே இந்திரா காந்தியை " நேருவின் மகளே வருக....நிலையான ஆட்சி தருக" என்று வாய் நிறைய புகழ்ந்தீர்கள்....



பாஜகவை பண்டார பரதேசிகள் என்று சொல்லிவிட்டு பின்பு பதவி சுகத்துக்காக அதே பாஜகவுடன் கூட்டணி அமைத்தீர்கள்....


அவ்வளவு ஏன்.....விஜயகாந்த் திருமணத்தை தாலி எடுத்து கொடுத்து நடத்தி வைத்தவரே நீங்கள்தான்....இப்போது உங்களுக்கு எதிராக அவர் கொதிக்கவில்லையா"?

அதனால நீங்கள் எல்லாருமே ஒரே சாக்கடையில் தான் இருக்குறீர்கள்....

அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...என்று உங்களுக்கு தெரியாதா?

16 கருத்துகள்:

  1. "Politics is the last resort of a scoundrel!"
    Why politicians prove politics is the last resort of scoundrels?

    பதிலளிநீக்கு
  2. சரியான நேரத்தில்..சரியான,அழுத்தமான பதிவு...
    சொல்ல வந்த விசயத்தை தெளிவாகவும் ரத்தின சுருக்கமாகவும் சொல்லியிருக்கீங்க....

    பதிலளிநீக்கு
  3. ரிப்பீட்டு...

    உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    நான் ஓட்டு போட்டுட்டேன்.. நீங்க போட்டீங்களா?
    http://sakthistudycentre.blogspot.com

    பதிலளிநீக்கு
  4. ரிப்பீட்டு ரிப்பீட்டு......

    பதிலளிநீக்கு
  5. ஹாஜா....

    இதெல்லாம் நீங்களா யோசிச்சு எழுதுனதா?? ஐய்யோ... நம்ப முடியலையே??? எப்படி இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க???

    நேத்து கலைஞ்சர் பேச்சை இன்னைக்கு கேட்டா எனக்கு சொல்லவே தெரியாது. எதையும் மறக்காத நீங்க தமிழனே கிடையாது?(சும்மா தமாஷுக்கு)

    பதிலளிநீக்கு
  6. nidurali சொன்ன கருத்துக்களை வழிமொழிகிறேன்...

    பதிலளிநீக்கு
  7. தலைவர்கள் எல்லோரும் சுயநலவாதிகள் ரோசம் இல்லாதவர்கள் என்று மறைமுகமாக பேசினாலும் அது நூற்றுக்கு நூறு உண்மைதான் ஹாஜா.

    ஊழலுக்கும் துரோககங்களுக்கும் வித்தை இட்டதே தீமுக்காவினர்தான் அதிலிருந்து வந்ததுதான் மற்ற செடிகள்.
    நல்லதொரு அலசல் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  8. THOPPITHOPPI said..
    பாருங்க சார். நான் போட்ட கமெண்ட் டெலிட் பண்ணிட்டார் சார் தொப்பி தொப்பி.

    சவுக்கு பத்தி அவர் போட்ட பதிவுல நான் போட்ட கமென்ட் சார் இது
    ஆமா சார். சவுக்கு பாட்டுக்கும் கருணாநிதி ஆட்சில ஊழல் அப்படின்னு பதிவா போட்டு கருணாநிதிய ஆட்சிய விட்டு இறக்கிருவாங்க போலருக்கிது. ஆனா, கருணாநிதி ஆட்சிய காப்பத்தனும்ன்னு ஒரு பதிவர் தொடர்ந்து போராடிக்கிட்டு இருக்காரு. அவரோட ஆசை நிராசை ஆயிரும் போலரிக்குது.

    இங்க பாருங்க சார்.

    கருணாநிதிய காப்பாத்த அவர் எடுத்த முயற்சியை

    http://thoppithoppi.blogspot.com/2010/11/vs.html

    கருணாநிதி குடும்பம்ன்னு ஒரு பதிவு போட்டாரு சார். ஆனா, கருணாநிதியோட குடும்ப சொத்த வெளிய சொல்லாம மறைச்சிட்டார் சார்.

    அது மட்டுமா. சீமானுக்கு எதிரா இவர் ஒரு அறிவிக்கப்படாத யுத்தம் தொடங்கிருக்காறு சார்.

    சீமானுக்கு எதிரா யார் பதிவு எழுதுனாலும், தன்னோட ப்ளோக்ல அதுக்கு பெர்மனநென்ட் லிங்க் கொடுத்திருக்காரு சார்.

    ஆனா பாருங்க சார் நாட்டோட வளமானா ஸ்பெக்ட்ரம் அடிமாட்டு வெலைக்கு வித்திருக்காங்கன்னு எல்லோரும் பதிவா போட்டிட்டுருக்கும்போது இவர் பாட்டுக்கும் தூங்கப் போயிட்டார்.

    நீங்க கவலைஎப்படாதீங்க சார், ஆதரபூர்வமா ஊழல் பண்ணாலும் கருணாநிதி ஆட்சிய விட்டு இறங்கிரக்கூடாதுன்னு நம்ம பதிவர் தொடர்ந்து போராடுவாறு சார்.

    ஜெயலலிதா பண்ணா மட்டும்தான் சார் ஊழல். கருணாநிதி பண்ணா அது ஊழல் இல்லை சார். நீங்க தொடருங்க சார்.

    இன்னொரு டவுட்டு சார். தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் பதிவு போடறா வேலை செய்வீங்களா சார்? இல்ல வந்த வேலை முடிஞ்சிரிச்சுன்னு போயிருவீங்களா சார்?

    பதிலளிநீக்கு
  9. பகிர்வுக்கு நன்றி

    அரசியல் ஒரு படி அரிசி யில் ஆடிக்கிட்டு இருக்கு

    பதிலளிநீக்கு
  10. #ஆமினா சொன்னது…

    ஹாஜா....

    இதெல்லாம் நீங்களா யோசிச்சு எழுதுனதா?? ஐய்யோ... நம்ப முடியலையே??? எப்படி இப்படி புட்டு புட்டு வைக்கிறீங்க???

    நேத்து கலைஞ்சர் பேச்சை இன்னைக்கு கேட்டா எனக்கு சொல்லவே தெரியாது. எதையும் மறக்காத நீங்க தமிழனே கிடையாது?(சும்மா தமாஷுக்கு)#


    நன்றி ஆமினா.....எல்லாம் பழைய குப்பைகளை கிண்டிகிளறி தெரிந்துகொள்வதுதான்....

    பதிலளிநீக்கு
  11. //அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...என்று உங்களுக்கு தெரியாதா? //

    அப்படித்தான் நாமும் எடுத்துக்க வேண்டும்

    பதிலளிநீக்கு
  12. யார் இந்த கார்த்திக் சரியான லூச இருப்பான் போல. நான் கருணாநிதிக்கு எதிரா போட்ட பதிவ அவருக்கு ஆதரவு பதிவுன்னு சொல்லிட்டு சுத்துறான் என்ன சொல்ல.

    பதிலளிநீக்கு
  13. #Karthik சொன்னது…
    இன்னொரு டவுட்டு சார். தேர்தல் முடிஞ்சதுக்கு அப்புறம் பதிவு போடறா வேலை செய்வீங்களா சார்? இல்ல வந்த வேலை முடிஞ்சிரிச்சுன்னு போயிருவீங்களா சார்? #

    நம்ம எழுதுறதுக்கும் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை....அது ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை வருவது....அதுக்காக ஐந்து வருடம் எழுதாமல் இருக்க முடியுமா?

    பதிலளிநீக்கு
  14. #THOPPITHOPPI சொன்னது…

    யார் இந்த கார்த்திக் சரியான லூச இருப்பான் போல. நான் கருணாநிதிக்கு எதிரா போட்ட பதிவ அவருக்கு ஆதரவு பதிவுன்னு சொல்லிட்டு சுத்துறான் என்ன சொல்ல.#

    எனக்கும் புரியவில்லை...

    பதிலளிநீக்கு
  15. இனம் மறந்து இயல் மறந்து
    இருப்பின் நிலைமறந்து
    பொருள் ஈட்டும் போதையிலே
    தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
    நினைவூட்டும் தாயகத் திருநாள்

    உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  16. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்...

    என்னுடைய தளத்தில் கருத்துப் பொங்கல் வைத்திருக்கிறேன்... வந்து சுவைத்துப் பார்க்கவும்...
    http://philosophyprabhakaran.blogspot.com/2011/01/blog-post_15.html

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....