24 ஜனவரி 2011

தலைவரா?முதல்வரா?...ஓய்வு குறித்து கருணாநிதி சூசகம்...


சென்னையில் இன்று நடந்த அமைச்சர் பெரியகருப்பன் மகன் திருமணத்தை நடத்தி வைத்த முதல்வர் கருணாநிதி, முதல்வர் அல்லது தலைவர் என்று சொல்லும்போது, தலைவர் என்ற சொல்லில்தான் திமுகவினர் ஆர்வமாக இருப்பார்கள் என்பதால் விரைவில் அந்த முடிவுக்கு நான் வருவேன் என்று கூறினார். இதன் மூலம் மீண்டும் அவர் முதல்வர் பதவியை வகிக்க மாட்டார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

முதலமைச்சர் என்று சொல்லும்போது, நீங்கள் இவ்வளவு பேரும் ஆர்வமாக இருப்பீர்களா? அல்லது திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் என்று சொல்லுகிற நேரத்திலே, ஆர்வமாக இருப்பீர்களா என்று கேட்டால், தலைவர் என்று சொல்வதில்தான் நீங்கள் ஆர்வமாக இருப்பீர்கள். ஆகவே, நான் அந்த முடிவிற்கே விரைவில் வருவேன் என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார் கருணாநிதி.

முதல்வர் இப்படிக் கூறியதன் மூலம் மீண்டும் முதல்வர் பதவியில் கருணாநிதி அமர மாட்டாரோ என்ற எண்ணம் வலுத்துள்ளது.

கருணாநிதி முதல் முறையாக முதல்வர் பதவிக்கு வந்தது 1969ம் ஆண்டு. அதன் பின்னர் 1971, 1989, 1996, 2006 ஆகிய ஆண்டுகளில் நடந்த தேர்தலில் திமுகவை வெற்றிக்கு இட்டுச் சென்று முதல்வரானார். 6வது முறையும் கருணாநிதியே முதல்வராவார் என்று திமுகவினர் உற்சாகத்துடன் கூறி வரும் நிலையில் கருணாநிதியின் இன்றையப் பேச்சு பல்வேறு கேள்விகளையும், எதிர்பார்ப்புகளையும் ஏற்படுத்தியுள்ளது.

13 கருத்துகள்:

 1. ம் ம் அரசியல் சூடுபிக்கின்றது

  பதிலளிநீக்கு
 2. அப்போ நல்ல சீன்கள் எல்லாம் இருக்கு?!

  பதிலளிநீக்கு
 3. கலைஞர் இப்போதைக்கு எந்த தெளிவாக முடிவும் அறிவிக்க மாட்டர், ஏனெனில் இது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பது அவருக்கும் தெரியும், கட்சியிலுள்ள யாரோ ஒருவரை மிரட்டும் ராஜதந்திரம் இது.
  பகிர்வுக்கு நன்றி காஜா

  பதிலளிநீக்கு
 4. இது எப்பவும் போல குடும்பத்தை சரிபடுத்தும் டயலாக்கு... டயலாக்க மாத்தி பேசுங்க அய்யா..பகிர்வுக்கு நன்றீ. வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 5. // கலைஞர் இப்போதைக்கு எந்த தெளிவாக முடிவும் அறிவிக்க மாட்டர், ஏனெனில் இது தேர்தல் முடிவுகளை பாதிக்கும் என்பது அவருக்கும் தெரியும் //

  பாரத் பாரதியின் கருத்தினை வழிமொழிகிறேன்...

  பதிலளிநீக்கு
 6. 5 வது முறையாக முதல்வர் பதவி ஏற்ற உடன்.... இந்த முறை இவர் தாண்ட மாட்டார் என்று கூறினார்கள்........
  இப்போழ்து 6 வது முறை......... இன்னும் எத்தனை முறையோ ?????? ......................

  பதிலளிநீக்கு
 7. பாரத்..பாரதி சொன்னது கரெக்ட். மேலும் அவர் ஆறாவது முறை முதலமைச்சர் ஆனால் அது இந்திய அளவில் ஒரு சாதனை. ஆகவே அடுத்து முதல்வராக(ஜெயித்தால்) அவர் அமரும் வாய்ப்புகள் அதிகம்.

  பதிலளிநீக்கு
 8. அவர்க்கே இப்ப தான் ஓய்வெடுக்கணும்னு தோணூதா???

  பதிலளிநீக்கு
 9. இப்பவாச்சும் ஓய்வெடுக்க மனசு வந்திச்சே அதுக்கே பாராட்டலாம்

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....