30 ஜனவரி 2011

கொழுப்பைத் தவிர்க்கும் எளிய வழிகள்...


பொதுவாக ஆண்களுக்கு 1600 முதல் 2000 கலோரிகளும், பெண்களுக்கு 1200 முதல் 1600 கலோரிகளும் தினமும் தேவைப்படுகிறது. இவற்றை எரிப்பதற்கு வசதியாக தசைத் திசுக்களின் அளவை அதிகரிக்க வேண்டும். கை, கால்களுக்கு பயிற்சி தந்தாலே போதும் தசைத் திசுக்கள் அதிகரிக்கும். இதனால் கூடுதல் கலோரிகள் எரிக்கப்படும்.

உடற்பயிற்சி இல்லாததால் உடற்பருமன் ஏற்பட்டிருந்தால் நடத்தல், நீந்துதல், ஓடுதல், சைக்கிள் ஓட்டுதல், ஏரோபிக் பயிற்சி போன்றவற்றில் ஈடுபடலாம்.

15 நிமிடங்கள் நடந்தாலே போதும் சுமார் 60 கலோரிகள் எரிக்கப்படும். அதிலும் காலைப் பொழுதில் நடந்தால் உடம்பில் இருக்கும் கொழுப்பு விரைவில் எரிக்கப்படும். இதய நோய் இருப்பவர்கள், கால் மூட்டு பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி நடை பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

நேரத்திற்குச் சாப்பிடுவது முக்கியமானது. ஒரே நேரத்தில் அதிகமாக உணவை உட்கொள்வதைவிட, அவ்வ‌ப்போது சாப்பிட்டால் கொழுப்பு தேங்குவதற்கான வாய்ப்பு குறைகிறது. இவ்வாறு சிறுகச் சிறுகச் சாப்பிடுவதால் ‌ஜீரண‌ம் எ‌ளி‌தி‌ல் நட‌ந்து உடல் புத்துணர்ச்சியுடனும் இருக்கும். ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரிகள் தேவை என்பதை கவனத்தில் வைத்துக்கொண்டு சாப்பிடுவது மிகவும் நல்லது.

கொழுப்புச் சத்துக்களை விட கார்போஹைட்ரேட் பொருட்கள்தான் ‌சீக்கிரமாக எரிக்கப்படும். எனவே கொழுப்புச் சத்துள்ள பொருட்களைக் குறைத்துக் கொள்வது நல்லது.

சாப்பிட்டவுடன் படுத்துவிடாமல் சிறிது தூரம் நடந்துவிட்டுப் படுத்தால் ஜீரணத்திற்கு உதவியாகவும், காலையில் எழும்போது மந்தத்தன்மை இல்லாமலும் இருக்கும். கொழுப்பும் தேங்காது. நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது.

பக்கத்து தெருவில் இருக்கும் நண்பரிடம் பேசுவதென்றாலும் கூட செல்ஃபோனை எடுத்துக்கொண்டு பேசுவதைத் தவிர்த்துவிட்டு, நடந்து சென்று அவரை நேரில் சந்தித்து பேசிவிட்டு வரலாம். தோட்டம் இருந்தால் காலையிலோ மாலையிலோ சிறு சிறு வேலைகளைச் செய்யலாம்.

இதேபோல, பக்கத்தில் இருக்கும் கடைக்குக்கூட பைக்கை எடுத்துச் செல்வதைத் தவிர்த்துவிட்டு நடந்து சென்று அவற்றை வாங்கி வரலாம். அலுவலகத்தில் லிஃப்டுகளைப் பயன்படுத்தாமல் படிகளின் மூலம் ஏறி இறங்குவதாலும் கூட தேக்கிவைக்கப்பட்ட கொழுப்பு வேகமாக எரிக்கப்பட்டு உடல் நலம் சீராகும்.

இவ்வாறாக அன்றாட வாழ்க்கையில் சின்னச் சின்ன விஷயங்களில் கவனம் செலுத்தினாலே போதும் உடம்பில் கொழும்பபுச் சத்து சேராமல் பார்த்துக் கொள்ளலாம். உடற்பருமனையும் தவிர்த்துவிடலாம்.

நான் படித்ததை பகிர்ந்துள்ளேன்.....

11 கருத்துகள்:

  1. மனித உடலின் கொழுப்பு குறைக்க வழிகள் சொன்னதற்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. அருமையான விஷயங்கள் சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே! நமக்கெல்லாம் இங்கு நடப்பதற்கு சந்தர்ப்பமே கிடைப்பதில்லை! இனிமேல்தால் முயல வேண்டும்!

    பதிலளிநீக்கு
  3. நல்ல பதிவு...பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  4. // நடப்பதற்கு வாய்ப்பில்லாதவர்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தாலே போதும் அதுவே சில கலோரிகளை எரிக்க உதவுகிறது//

    இது உண்மை என்றல் தமிழ் நாடில் கொழும்பே இருக்காதே.........

    பதிலளிநீக்கு
  5. எனக்கு இது உபயோகமான விஷயம்தான். இப்போதான் கொஞ்சம் லைட்டா உடம்பு வெயிட் போட ஆரம்பிக்குது.

    நன்றி

    பதிலளிநீக்கு
  6. நல்ல கருத்துக்கள் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....