13 ஜனவரி 2011

காணாமல் போனவர்கள்...(பாகம் 10 )


கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் மாறி மாறி ஆட்சியில் அமர வைப்பதில் அலாதி பிரியம் இவனுக்கு....

சினிமா ஒரு கண் என்றால் கிரிக்கெட் மற்றொரு கண் இவனுக்கு....

நடிகர்,நடிகைகளுக்கு ரசிகர் மன்றங்கள் வைத்து பால் அபிசேகம் பண்ணுவதை தனது பிறவி பயனாக எண்ணி பெருமை கொள்பவன் இவன்.....

டீ கடைகளில் அரசியல் பேச்சு பேசுவது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி இவனுக்கு...


வேறு யார்? நீங்களும் நானும் தான்...நம்ம வீர தமிழினம்தான்....


ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லணை கட்டினான் வீரத்தமிழன்....


ஆயிரம் ஆண்டு கால சிறப்புமிக்க தஞ்சை பெரிய கோவிலை கட்டியவன்தான் எம் வீரத்தமிழன்...

நாட்டை பிடிக்க வந்த அண்டை நாட்டு மன்னர்களை ஓட ஓட விரட்டியவன்தான்
எம் வீரத்தமிழன்....

சுதந்திர போராட்டத்தில் வெறி கொண்ட வேங்கையாய் சீறிய வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை, புலித்தேவன், திருப்பூர் குமரன், பாரதியார், கப்பலோட்டிய தமிழன் போன்றவர்கள் வீர தமிழர்கள்தான்....

இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் நாட்டையே நடுங்க வைத்தவர்கள் எம்முடைய வீர தமிழர்கள்தான்....

இந்தியாவின் பிரதமரையே தேர்ந்தெடுத்த பெருந்தலைவர் காமராஜர் வீர தமிழன்தான்.....

கொள்கைக்காக திராவிட நாடு கேட்ட தமிழன் எம் வீர தமிழன்தான்.....


அப்படிப்பட்ட வீரத்தமிழன் இன்று ஸ்பெக்ட்ரம் ஊழலை பார்த்து மூக்கின் மேல் விரல் வைத்து திகைத்து நிற்கின்றான்...

இலங்கையில் கொத்துகொத்தாக எம் தமிழினம் செத்து மடிந்தபோது கைகட்டி வேடிக்கை பார்த்தான் ...

ஈழத்தில் எம் சகோதரிகள் சீரழிக்க பட்டபோது சிலிர்த்து சீறாமல் மெளனமாக நின்றான்...

லண்டனுக்கு வந்த கொடுங்கோலன் ராஜபக்சேயை அங்குள்ள தமிழர்கள் துரத்தி அடித்தார்கள்....ஆனால் டெல்லிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அந்த ராட்சசனை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாமல் ஓரமாக நின்று வேடிக்கை பார்த்தான்...


தமிழன் இருக்கிறான்....ஆனால் வீரம் தான் இல்லை.....

தமிழன் இருக்கிறான் தமிழ்நாட்டிலே...ஆனால் வீர தமிழன்தான் காணாமல் போய்விட்டான்....!

11 கருத்துகள்:

  1. ஒத்துக்கொள்கிறேன்

    வெட்கக்கேடு

    பதிலளிநீக்கு
  2. தமிழன் இருக்கிறான் தமிழ்நாட்டிலே...ஆனால் வீர தமிழன்தான் காணாமல் போய்விட்டான்....!
    சாட்டையடி....

    பதிலளிநீக்கு
  3. முதல்வரை சினிமாவில் தேடும் மக்கள் உள்ளவரை இதுதான் நம் நிலை..தோழா!!

    பதிலளிநீக்கு
  4. மன்னிக்கவும் - நண்பரே சூழ் நிலையே ஒரு மனிதனின் தோல்விக்கு காரணம்

    பதிலளிநீக்கு
  5. நண்பரே உங்களை வலைச்சரத்த்தில் அறிமுகப்படுத்தி உள்ளேன். நன்றி

    http://blogintamil.blogspot.com/2011/01/2.html

    பதிலளிநீக்கு
  6. வெட்கப்பட வேண்டிய விஷயம் தான் :(

    பதிலளிநீக்கு
  7. உங்க பினிஷிங் டச் சூப்பர்... இன்னும் பாகங்கள் இருக்கா...

    பதிலளிநீக்கு
  8. உங்களுக்கும் என்னுடைய இனிய மனமார்ந்த போகி, பொங்கல், மாட்டு பொங்கல், மற்றும் பூப்பொங்கல் நல்வாழ்த்துக்கள்.
    இன்னும் இரண்டு நாளைக்கு பின்னூட்டம் இதுதான்...

    பதிலளிநீக்கு
  9. நன்றி நண்பரே ,
    ஒரு பயனுள்ள தகவல் தந்திருக்கிறீர்கள் .
    இந்தப் பதிவு அனைவருக்கும் விழிப்புணர்வை ஏற்ப்படுத்தும் வகையில் அமையும் .
    பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  10. Philosophy Prabhakaran சொன்னது…

    உங்க பினிஷிங் டச் சூப்பர்... இன்னும் பாகங்கள் இருக்கா...


    நன்றி நண்பரே....எழுதிவிடுவோம்....

    பதிலளிநீக்கு
  11. உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...

    பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....