07 ஜனவரி 2011

நித்தம் + ஆனந்தம் = நித்யானந்தா.....!!


மீண்டும் நித்யானந்தா.....

வழக்கம்போல இம்முறையும் பெண்கள் படை சூழ திருவண்ணாமலைக்கு தைரியமாக வந்தார்......

அவருக்கே அருகே ஆண் பக்தர்களை வைத்து கொள்ளவே மாட்டாரா?

பொதுமக்கள் மற்றும் சில அமைப்புகளின் ஆர்ப்பாட்டத்தால் அவர் விரைவாக பூஜையை(!!!) முடித்து கொண்டு ஓடியது வேறு கதை.....


சென்ற வருடத்தின் ரொம்ப ரொம்ப ஹாட்டான விசயமே நம்ம (ஆ)சாமியை பற்றிதான்.....மலையாள பிட்டு பட பணியில் அவர் அடித்து கூத்துக்கள் இந்திய தொலைகாட்சிகளில் முதல்முறையாக கூசாமல் ஓடியது.....

அதை தொடர்ந்து தலைமறைவான அவர் பின்பு கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியாகி இருக்கிறார்....


பத்து மாசமாக காணமல் போன ரஞ்சிதா வந்து இப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று பேட்டி கொடுக்கிறார்...கவனிக்கவும் நான் அவள் இல்லை என்றுதான் சொல்லி இருக்கிறாரே தவிர அது நித்யானந்தா இல்லை ... என்று கூறவில்லை....
நான் அவள் இல்லை என சொல்லும் ரஞ்சிதாவுக்கு ஒருவேளை ரஞ்சிதா மாதிரியே ஒரு சகோதரி இருக்கலாமோ !!!அப்படியா ரஞ்சிதா?

அந்த வீடியோ பதிவு காட்சியும் ஹைதராபாத் தடயவியல் ஆய்வு கூடத்தில் சோதனை செய்யப்பட்டு அது உண்மையான காட்சிதான் என்றும் .அதில் இருப்பது நித்யானந்தாவும் ரஞ்சிதாவும் தான் என்றும் கூறியுள்ளது.....


இப்படி நாறிப்போன நித்யானந்தாவை சுற்றி இப்போதும் பெண்கள் கூட்டம்..அவருக்கு ஆதரவாக சில அமைப்புகள்.....என்ன கொடுமை சார்?

நமது சமுகம் எப்போது மாறும்?

தான் என்ன தவறு செய்தாலும் கொஞ்ச நாட்களில் மக்கள் அதை மறந்து விடுவார்கள் என்ற எண்ணம் நித்யானந்தாவுக்கு வருவதற்கு யார் காரணம்? அவரை சுற்றி இப்போதும் நிற்கும் பெண்கள்தான் காரணம்.....

இம்மாதிரியான மக்கள் இருக்கும்வரை ஆயிரம் நித்யானந்தாக்கள் உருவாகிக்கொண்டுதான் இருப்பார்கள்.....

7 கருத்துகள்:

 1. //நித்தம் + ஆனந்தம் = நித்யானந்தா//

  ஓ இதுதான் நித்யானந்தா என்பதற்கு விளக்கமா!

  பதிலளிநீக்கு
 2. பெயரில்லா2:52 PM, ஜனவரி 07, 2011

  ம்ம்ம்..அதானே அது நித்தி இல்ல.அது ரஞ்சிதாவும் இல்லை நு சொல்ல வேண்டியதுதானே அப்போ நித்தி ஒரு பொன்னை கெடுத்ததை ஒத்துகிச்சு ரஞ்சு குட்டி

  பதிலளிநீக்கு
 3. ஹி ஹி கரெக்டா சொன்னிங்க சதிஸ்குமார் அண்ணே....

  பதிலளிநீக்கு
 4. வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி நண்பர்களே...

  பதிலளிநீக்கு
 5. // பத்து மாசமாக காணமல் போன ரஞ்சிதா வந்து இப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்று பேட்டி கொடுக்கிறார்...//

  இந்த பத்து மாதக் கணக்கில் ஏதாவது உள்குத்து இருக்கா...

  பதிலளிநீக்கு
 6. இப்போ இந்த ராசா இருக்கானே அவன் ஊழல் பண்ணுனேன்னு ஒப்புக்கொள்வானா? மாட்டவே மாட்டான். அதே மாதிரிதான், இவனும் ஒருபோதும் ஒப்புக்கொள்ளவே மாட்டன். அந்த வீடியோ மார்பிங் செய்யப் பட்டதுன்னுவான், ஹைதராபாத்தில் சூழ்ச்சி பண்ணிட்டாங்கன்னு சொல்வான், அரசியல் சதி அது.. இது.. என்று தான் சொல்வான். இவனை அது பத்தி எதுவும் கேட்காம, பிடிச்சு ரஞ்சிதா கழுத்துல தாலிய கட்டச் சொல்லி குடும்பம் நடத்த சொல்லி விட்டு இவன் சேர்த்துள்ள சொத்துகளை மக்கள் நலத் திட்டங்களுக்குச் சேர்த்து விட வேண்டும், மேலும் இவனை பிரசங்கம் செய்யக் கூடாதுன்னு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்.

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....