வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.
வெளிநாட்டு வங்கிகளில் ஏராளமான இந்தியர்கள் கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளனர். இந்த பணத்தை மீட்க வேண்டும் என்று கோரிக்கை பல தரப்பிலும் பலமாக எழுந்தது.
அதன்பேரில் வெளிநாட்டு கறுப்புப்பணம் குறித்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஸ்விட்ஸர்லாந்து உள்பட பல்வேறு நாடுகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் உள்ளது. எவ்வளவு பணம் பதுக்கப்பட்டுள்ளது என்று துல்லியமாக தெரியவில்லை என்றாலும் சுமார் ரூ.20 லட்சம் கோடி கறுப்பு பணம் இருக்கலாம் என்று கருதுகிறோம்.( அட பாவிகளா...தொகை கம்மியா தெரியுதே )
இந்த கறுப்புப் பணத்தை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தியர்களின் கறுப்பு பணத்தை முழுமையாக மீட்க 5 அம்ச தீட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதை நிறைவேற்ற 65 நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். ( சுமார் ஐம்பது வருடங்கள் பேச்சு வார்த்தை நடக்குமா?)
கடந்த 18 மாதங்களில் நாங்கள் நடத்திய ஆய்வில் வெளிநாடுகளில் கணக்கில் வராத ரூ.15 ஆயிரம் கோடியை கண்டுபிடித்து இருக்கிறோம். வெளிநாடுகளில் வருவாய் ஈட்டும் இந்தியர்கள் பற்றியும் கணக்கெடுத்து வருகிறோம்.
வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களால் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப்பணத்தை மீட்க தனிக்குழு உருவாக்கி உள்ளோம். கறுப்பு பண மீட்பு விவகாரத்தின் போது பன்னாட்டு தொடர்புகளை துண்டிக்க இயலாது. ஏனெனில் கறுப்புப் பணம் பதுக்கப்பட்டுள்ள வங்கிகள் அமைந்துள்ள நாடுகள் நம்முடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள தயாராக இல்லை.
சுவிஸ் நாடு இதுவரை தன் நாட்டு வங்கிகளில் உள்ள கறுப்புப் பணம் பற்றி இதுவரை எந்த ஒரு நாட்டிடமும் ரகசியத்தை வெளியிடவில்லை. கறுப்புப் பணத்தை பதுக்கி வைத்துள்ளவர்களின் பெயர்களை வெளியிட்டால் கூட்டணி மந்திரி சபை கவிழ்ந்து விடும் என்று மத்திய அரசு ஒருபோதும் பயப்படவில்லை.(ஹி ஹி சும்மா பம்மாத்து பண்ணாதிங்க குருவிக்கூடு தலையா)
அதேநேரம், இதுவரை அரசு திரட்டியுள்ள கறுப்புப் பண பதுக்கல்காரர்களின் பெயர்களை வெளியிட முடியாது. காரணம்(ஹி ஹி நீங்க எல்லாரும் அதுல இருப்பிங்கன்னுதானே ) இந்த விஷயத்தில் தகவல் தந்த நாடுகளின் நிபந்தனையையும் மீற முடியாது. சில ரகசியங்களை பாதுகாப்பதாக உறுதியளித்தால்தான், மேலும் விவரங்களைப் பெற முடியும், என்றார்.
நல்லா சொல்றாங்கயா விபரங்களை....
Tweet |
first vote from me! kalakkal pathivu.
பதிலளிநீக்குSuper,
பதிலளிநீக்குநான் ஓட்டு போட்டுட்டேன்..
பச்சை கலரில் நீங்க கொடுத்த கமெண்ட்கள் கவுண்டர் அட்டாக்...
பதிலளிநீக்கு//ஹி ஹி சும்மா பம்மாத்து பண்ணாதிங்க குருவிக்கூடு தலையா//
பதிலளிநீக்குகமெண்ட் சூப்பர்...
Well Said how they are going to bring back it
பதிலளிநீக்கு//வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்புப் பணம் ரூ 20 லட்சம் கோடி என தகவல் தெரிவித்தார் மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி.//
பதிலளிநீக்குஇதுல இவருக்கு எவ்வளவு இருக்கும்???
http://virtualworldofme.blogspot.com/2011/01/blog-post_25.html
நண்பா... உங்க பதிவு திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... திறந்த பிறகும் ஒருவித ஹேங் ஓவருடனேயே இயங்குகிறது... இதை நானும் பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன்...
பதிலளிநீக்கு3Philosophy Prabhakaran சொன்னது…
பதிலளிநீக்குநண்பா... உங்க பதிவு திறப்பதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்கிறது... திறந்த பிறகும் ஒருவித ஹேங் ஓவருடனேயே இயங்குகிறது... இதை நானும் பலமுறை உங்களிடம் கூறிவிட்டேன்...#
நன்றி நண்பரே...சரிபண்ணி விடுகிறேன்.....
#பாரத்... பாரதி... சொன்னது…
பதிலளிநீக்குபச்சை கலரில் நீங்க கொடுத்த கமெண்ட்கள் கவுண்டர் அட்டாக்...#
நன்றி..நன்றி...
உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பர்களே....
பதிலளிநீக்குஎன்னது
பதிலளிநீக்கு20 லட்சம் கோடியா ............... இதை already சிவாஜி படதுல ரஜினி சொன்ன ப்ளக் மனி கான்செப்ட் இது தானா.............