30 செப்டம்பர் 2012

ஜெயக்குமாருக்கு ஆப்பு வைத்த 6 காரணங்கள் !யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியா  ஏதாவது செய்வதுதான் ஜெயலலிதாவின்  ஸ்டைல்....

அந்த வகையில் இப்ப ஜெயகுமார் ராஜினாமா...இது ஒரு புது ஸ்டைல்.....வழக்கமா பதவியை  விட்டுதான் தூக்குவார்...இப்ப ராஜினாமா...ஏன்னா சபாநாக்கரை பதவி நீக்கம்  செய்வது அவ்வளவு நல்லா இருக்காது அல்லவா?

ஒருவேளை ஜெயகுமார்  மந்திரி ஆக்க படுவதற்காக  ராஜினாமா  செய்து இருக்கலாம் என  எண்ணங்கள்  தோன்றினாலும் வேறு சில காரணங்களையும்  பத்திரிக்கைகள்  யூகத்தின் அடிப்படையில் எழுதி வருகின்றன....அவையாவது...


காரணம் 1- பிறந்த நாளில் 'எமகண்டம்':
கடந்த செப்டம்பர் 18ம் தேதியன்று சபாநாயகர் ஜெயக்குமாரின் பிறந்த நாள் கொண்டாட்டங்கள் சென்னையை மிரட்டின. அதிமுகவைப் பொறுத்தவரையில் பிரமுகர்களாக இருந்தாலும் கட்சித் தலைமையின் கோபத்துக்கு ஆளாகிவிட நேரிடும் என்பதால் தடபுடலுக்கு எம்.ஜி.ஆர். காலம் முதலே தடை இருந்து வருகிறது. ஆனால் இம்முறை ஜெயக்குமார் மட்டும் அதிரடி ஆட்டம் காட்டியிருக்கிறார். இந்த அதிரடி ஆட்டத்தை ஜெயக்குமார் தரப்பு உற்சாகமாக கொண்டாடினாலும் இங்குதான் அவருக்கு எமகண்டனம் தொடங்கியதாம்
காரணம் 2- அடுத்த சி.எம். சவடால்:
ஜெயக்குமாரின் கண்ணசைவுடன் களைகட்டிய இந்த பிறந்த நாளுக்கு சிறப்புக் காரணம் ஒன்றும் சொல்லப்படுகிறது. ஜெயக்குமாருக்கு தற்போதைய கிரக நிலைப்படி முதல்வராகும் வாய்ப்பு என்று ஜெயலலிதாவின் ஆஸ்தான ஜோதிட உன்னிகிருஷ்ண பணிக்கரே சொல்லிவிட்டாராம். இதனால் கனவுலகில் மிதக்கத் தொடங்கினார் ஜெயககுமார் என்கின்றனர். அவரே இப்படி மிதக்கும்போது அடிப்பொடிகள் சும்மா இருப்பார்களா .... செம ஆட்டம் காட்டியிருக்கின்றனர்.
காரணம் 3- மேயர் சைதை துரைசாமியுடன் மோதல்:
இது ஜெயக்குமாரின் விலகலுக்கான காரணமாக சொல்லப்பட்டாலும் வேறு சில தகவல்களும் உண்டு. எம்.ஜி.ஆர். காலத்து பிரமுகர் சைதை துரைசாமி தற்போது சென்னை மாநகர மேயராக இருக்கிறார். அவருக்கும் ஜெயக்குமாருக்கும் நீண்டகாலமாக கருத்து வேறுபாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
ஸ்டாலினுக்கு ஆதரவான நிலை:
சட்டப்பேரவைத் தேர்தலின் போதுதான் ஜெயக்குமாருக்கும் சைதை துரைசாமிக்கும் இடையே மோதல் தொடங்கியிருக்கிறது. அதாவது சைதை துரைசாமி வெற்றி பெற்றுவிட்டால் நிச்சயமாக அவர் அமைச்சராகிவிடுவார் என்றும் மீண்டும் சென்னை அதிமுக அவர் கட்டுப்பாட்டின் கீழ் போய்விடும் என்றும் ஜெயக்குமார் தரப்பு கருதியது. இதனால் மு.க.ஸ்டாலினை எப்படியாவது வெற்றி பெற வைப்பது என்று சில ரகசிய உள்ளடி வேலைகளில் ஜெயக்குமார் தரப்பு ஈடுபட அது கார்டனுக்கும் கசிந்து போய் இருக்கிறது.
அப்போதே சைதை துரைசாமியை கூப்பிட்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா, இதில் தோற்றாலும் கவலைப்படாதீர்கள்.. நீங்கள்தான் மேயர் வேட்பாளர் என்று உறுதி கொடுத்திருக்கிறார். இங்கு தொடங்கிய முட்டல் மோதல் பகிரங்கமாக கடந்த சிலவாரங்களாக வெடித்திருக்கிறது. செப்டம்பர் 18ம் தேதியன்று ஜெயக்குமார் பிறந்த நாளன்று அவருக்கு வாழ்த்து சொல்ல மேயர் சைதை துரைசாமி நேரில் சென்றிருக்கிறார். ஆனால் ஜெயக்குமாரோ நீண்ட நேரம் துரைசாமியை காத்திருக்க வைத்ததுடன் நேரில் சந்திக்கவும் இல்லையாம். கடைசியில் பொக்கேவை கொடுத்துவிட்டு போயிருக்கிறார். அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்துக்கும் இதே நிலைமைதான்!
காரணம் 4- சென்னை மாநகராட்சியில் தகராறு:
இத்துடன் ஜெயக்குமார்- துரைசாமி மோதல் முடிந்து போய்விடவில்லை. சில நாட்களுக்கு முன் சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் அண்ணா வளைவு அகற்றம் தொடர்பாக அதிமுக கவுன்சிலர் சந்தானம், மேயர் துரைசாமிக்கு எதிராக கேள்வி கேட்டிருக்கிறார். இது மற்ற அதிமுக உறுப்பினர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. துரைசாமியை எதிர்த்து கேள்வி கேட்ட சந்தானம் ஜெயககுமார் ஆதரவாளர் என்றும் ஜெயக்குமாரின் தூண்டுதலிலேயே அவர் பேசினார் என்றும் கூறப்படுகிறது.
5 ) மதுசூதனின் பங்கு- ஆதரவாளர்கள் கூண்டோடு நீக்கம்:
சைதை துரைசாமி விவகாரம் மற்றும் ஜெயக்குமாரின் பிறந்த நாள் களேபரங்களை கலந்து கட்டி மொத்தமாக அதிமுக அவைத்தலைவராக இருக்கும் மதுசூதனன்தான் (ஜெயக்குமாரின் பரம எதிரி) விரிவாக ஜெயலலிதாவுக்கு கடிதமாகக் கொடுத்திருக்கிறார்.
இதையடுத்தே முதல் கட்டமாக வட சென்னை மாவட்ட தெற்கு செயலாளர் புரசை கிருஷ்ணன் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவர்தான் ஏகப்பட்ட போஸ்டர்களை ஜெயக்குமாரை வாழ்த்தி அடித்தவர். இவருக்குப் பதிலாக பாலகங்காவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டது. புரசை கிருஷ்ணனைத் தொடர்ந்து மேலும் 12 அதிமுகவினரை அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கியது அதிமுக தலைமை. 
ஆதரவாளர்கள் பலரையும் அதிமுக மேலிடம் அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கியதால் ஜெயக்குமார் அதிருப்தியடைந்தாராம்.. தமது அதிருப்தியை வெளிப்படுத்தும் விதமாகஜெயக்குமார்ராஜினாமா செய்தார் என்று கூறப்படுகிறது. (ஆனால் இந்த காரணத்தை ஜெயக்குமாரே ஒப்பு கொள்ள மாட்டார்....ஏன்னா அதிமுகவில் யாரும் எதிர்ப்பை எல்லாம் காட்ட முடியாது என பச்சகுழந்தைக்கு கூட தெரியும் )

6) இதை எல்லாம் விட எனக்கு ஒரு காரணம் தோன்றுகிறது...சமிபத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா முன்னாடியே 
வைரமுத்துவின் அருகில் ஜெயக்குமார் உட்கார்ந்து இருந்தார் .....அது கூட ஜெ  வின் கோப பார்வைக்கு  காரணமாகஇருக்கலாம்.(ஹி ஹி )...ஏன்னா வைரமுத்து கலைஞர்  ஆதரவாளர்....
எது எப்படியோ  ...... மொத்தத்தில் பல அமைச்சர்கள் பயத்தோடு  பல்லை கூடவிளக்காமல் திரிவார்கள் என்பது நிச்சயம்.... 

27 செப்டம்பர் 2012

கருணாநிதியை புகழ்ந்த ரஜினியும், சிண்டு முடியும் குமுதமும் .....ரஜினியின் புது  பட  அறிவிப்பு வந்தால் போதும்  ..இந்த பத்திரிக்கைகள்  பண்ணும் அலப்பறை  இருக்கிறதே....அப்பப்பா....அதிலும் இந்த குமுதம் இருக்கிறதே .....மற்ற பத்திரிக்கைகளைவிட  பத்து மடங்கு ஓவராக பண்ணும்....


கோச்சடயான் பட அறிவிப்பு வந்த சமயங்களில்  கோச்சடயான்  என்ற பெயரில் தொடர்கதை வெளியிட்டது....கோச்சடயான்  பஞ்ச்  வசனங்கள்  என்று தலைப்பிட்டு வாசகர்களை  வசனங்கள்  எழுதி  அனுப்ப சொன்னது  என  ரஜினியை வைத்து,அவர் படத்தை அட்டைபடத்தில்  போட்டு கல்லா கட்டும் வேலையை  மிக அற்புதமாகவே செய்தது.....

அதாவது  பத்திரிக்கை விற்க வேண்டுமென்றால்  ரஜினியை பற்றி ஏதாவது ஒரு செய்தியை போட்டு அட்டையில் அவரது  படத்தையும் போட வேண்டும்  என்பது குமுதத்தின்  எழுதப்படாத விதி....

ரஜினி மட்டுமல்ல  வாரம்தோறும் ஏதாவது ஒரு நடிகனின் பேட்டியும்,கவர்ச்சி படத்தோடு  நடிகைகளின் பேட்டிகளும் இல்லாமல் குமுதம் மட்டுமல்ல  வேற எந்த பத்திரிக்கைகளுமே  வருவதில்லை...நடிகர்களின் பேட்டிகள்தான் வாசகர்களின் ரசனைக்கு தீனி என பத்திரிக்கைகள் நினைப்பதற்கு யார் காரணம்?வாசகர்களும் ஒரு வகையில் காரணம்தான்....சரி மேட்டருக்கு வருவோம்?

 குமுதத்துக்கு  என்னதான் ரஜினி  வேண்டும் என்றாலும் முதல்வரை பகைத்து கொள்ள முடியுமா?சும்மாவே  யார் ஆட்சியில் இருந்தாலும்  ஜால்ரா  அடிக்கும் குமுதம் ஜெயலலிதாவுக்கு  பத்து படி மேலே  போயி ஜால்ரா அடிக்கும்...அடித்து கொண்டு இருக்கிறது....

மற்ற பத்திரிக்கைகள் சுட்டி காட்டும்  இந்த அரசின் தவறுகளில் சிறு தவறை கூட இதுவரை குமுதம் சுட்டி காட்ட வில்லை என்பதே இதற்கு உதாரணம்....


அந்த வகையில்  சமிபத்தில் ஜெயலிதாவை மேடையில் வைத்து  கருணாநிதியை  ரெண்டு வார்த்தைகள் புகழ்ந்து பேசிய ரஜினியை  எந்த மேடையில் எதை பேச வேண்டும் என இங்கிதம் தெரியாதவர்,எப்போதும் எந்த விழாவிலும் தன்னை முன்னிலை  படுத்தி கொள்பவர்,அன்றைய நிலையில் இருக்கும் அரசியல் சூழ்நிலையை  தனக்கு சாதகமாக  பயன் படுத்தி கொள்பவர் என கடுமையாக விமர்சனம் பண்ணி  ஒரு கட்டுரை வெளியிட்டு இருந்தது....ரஜினியை பற்றி குமுதம் எழுதிய  இந்த விமர்சனங்கள்  அனைத்தும் ஏற்று கொள்ளகூடிய உண்மைதான்....ஆனால் இத்தனை  வருடங்கள் ரஜினியின் இந்த செயல்பாடுகள்  குமுதம்  பார்வைக்கு தெரியவில்லையா?ஏன் இதை எல்லாம் ரஜினி முன்பே செய்த போது விமர்சிக்கவில்லை?ஜெயலலிதாவே  இந்த  விசயத்தை பெரிது படுத்தாமல் விட்ட நிலையில் குமுதத்துக்கு ஏன் இந்த  சிண்டு முடிகிற வேலை?பத்திரிக்கை விற்க ரஜினி வேண்டும்..வருமானத்திற்கு அரசின் விளம்பரங்களும்,கருணை பார்வையும் வேண்டும் என்ற  மொள்ளமாரித்தனமே   இதற்கு காரணம்.....


தவிர இப்ப கருணாநிதியை திட்டுபவர்கள்தான்  ஜெயலலிதாவுக்கு பிடித்தமானவர்கள்..முதல்வருக்கு பிடித்தால் குமுதத்துக்கு  பிடிக்கும் ...ஆனால்  ரஜினி கருணாநிதியை புகழ்ந்துவிட்டார் ....எனவே அந்த மேடையில் ரஜினியின் பேச்சு  ஜெ  க்கு  பிடிக்காது..அப்ப குமுதத்துக்கும் கண்டிப்பா பிடிக்காது... ஆக பத்திரிக்கை விற்பனை சூடாக இருக்க ரஜினி பெயரை பயன்படுத்தி ஒரு செய்தியும் போட்டாச்சு,,ஜெயலலிதா மனசையும் குளிர வச்சாச்சு .....ஆனால் இதே போன்று  ரஜினியை  மற்ற விசயங்களிலும்  தொடர்ந்து குமுதம் விமர்சிக்குமா  என்றால் அதுதான் இல்லை...


நீங்க வேணும்னா பாருங்க...இன்னும் கொஞ்ச நாட்களில் கோச்சடயானை பற்றியும்  ,ரஜினி அதிகாலையில் எழுவார்,வாக்கிங் போவார்,பல்லு விளக்குவார் பனியன் போடுவார் என  அவரை பற்றியும் வாரம் தவறாமல் செய்தி  வெளியிடுகிறதா  இல்லையா  என!தேவைக்கேற்ப ,சூழ்நிலைக்கு தக்க, பச்சோந்தி தனமாக  எழுதுவது எப்படி பத்திரிக்கை தர்மமாகும்?


இப்ப  வேண்டும் என்றால் தமிழகத்தின் நம்பர் 1 நாளிதழ் என குமுதம்  போட்டு கொள்ளலாம்....ஆனால்  சினிமா நடிகன்,நடிகைகளை  நம்பித்தான்  பொழப்பை  ஓட்ட வேண்டும் என்ற தங்களின்  பத்திரிக்கை  விதிகளை மாற்றி  கொள்ளாதவரை  இந்த குமுதமும் மற்ற பத்திரிக்கைகளும்  என்றுமே தரம் கெட்ட ஒன்றுதான்!


24 செப்டம்பர் 2012

மக்களை முட்டாள்களாக்கி காசு பார்க்கும் சன் மியூசிக்...நீங்கள் சாலையில்  நடந்து போகிறீர்கள்...திடிரென  உங்கள் முன் ஒருவர் வந்து நடனமாடினால்  எப்படி இருக்கும்?உங்களை பார்த்து பாட்டு பாடுங்கள் என சொல்லி வம்பு இழுத்தால் டென்சன்  ஆகுவீர்களா இல்லையா?

நீங்கள் நடந்து போகும்போது  உங்களை பார்த்து இரண்டு பேர் சிரித்துகொண்டே  உங்களை கிண்டல் பண்ணினால்  எப்படி உணருவீர்கள்?

சாலையில்  போகும் உங்களிடம்  அட்ரெஸ்  கேட்பதுபோல  பேசிக்கொண்டு  உங்கள் மீது  பேனா  மை  கொட்டுவதுபோல  செய்தால் கோபம் வருமா வராதா?

பைக்கில் போகும் உங்களை  மூணு போலீஸ்காரர்கள்  நிற்க வைத்து  அதை இதை சொல்லி  வா காவல் நிலையத்துக்கு  என சொன்னால்  என்ன செய்வீர்கள்?

ஒரு பெண் உங்களிடம் வந்து அவசரமா   ஒரு போன்  பண்ணனும் என உங்கள் செல்போனை  வாங்கி கொண்டு திருப்பி  தராமல்  பேசுவதுபோல ஆக்டிங்  செய்து கொண்டு இருந்தால் ஓங்கி ஒரு இழுப்பு இழுப்பீர்களா இல்லை சும்மா விடுவீர்களா?

இத்தனையும்  தினமும் நடந்து கொண்டுதான் இருக்கிறது...கேண்டிட்  கேமரா ,வடை போச்சே  போன்ற நிகழ்சிகளின் போர்வையில்  ஏதாவது  ஒரு டிவி  காரன் நடத்தி கொண்டுதான் இருக்கிறான்....இப்ப சன் மியூசிக்கில்  வடை போச்சே அப்படின்னு  இந்த நிகழ்ச்சியை பண்றானுக...டி  ஆர்  பி  ரேட்டிங்கில்  அவர்களின் நிகழ்ச்சி மேலே செல்வதற்கு பொதுமக்கள்  பகடை காயாம் !

அட கன்றாவி  பயலுகளா!நீங்க நிகழ்ச்சி ஒளிபரப்பி   காசு  பார்ப்பதற்கு  சாலையில் ஆயிரம்  வேலைகளுடன்  கடந்து  போகும் பொது மக்கள்தானா  கிடைத்தார்கள்?

நேற்று அப்படிதான் ஒரு பைக்கை  நிற்பாட்டி போலீஸ்  உடையில்  மூன்று பேர்  இரண்டு அப்பாவிகளை  அதை இதை சொல்லி  மிரட்டுவதுபோல  கலாயித்து
கொண்டு இருந்தார்கள்...அப்புறம் அந்த நபர் அழுது  விடும் சூழ்நிலைக்கு  வந்த பின்னர்  நாங்க சன் மியூசிக் தான்..சும்மா நிகழ்சிக்காக  இப்படி பண்ணினோம் என்று சொல்கிறார்கள்....ஏண்டா  லூசு பயலுகளா  நிகழ்ச்சி என்ற போர்வையில் மக்களை முட்டாள்களாக்கி  நீங்க என்ன  வேணும்னாலும் பண்ணி பணம் பார்ப்பிங்க....நாங்க வாயை  மூடி கொண்டு போகணும்?

நம் முன் வந்து டான்ஸ்  ஆடுவது,சிரிப்பது, வம்பு இழுப்பது போன்றவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்....போலீஸ் உடையில்  எப்படி ஒருவன் வந்து நிகழ்ச்சி என்ற போர்வையில் மிரட்டலாம்?கலாயிக்கலாம் ? நிஜ போலீஸ் ,சும்மா போலீஸ் என பொது மக்கள் எப்படி அடையாளம் காண்பார்கள்?ஒருவேளை உண்மையான போலீஸ் நீங்கள் பைக்கில்  போகும்போது உங்களிடம் லைசென்ஸ்  கேட்டு நீங்கள் அதை டிவி போலீஸாக  இருக்குமோ என நினைத்து பதில் சொன்னால் அவர்கள் காண்டாகி பதம் பார்த்து விட மாட்டார்கள்?

இதற்கெல்லாம் வேறு யாரும் வந்து முடிவு கட்ட மாட்டார்கள்.. நாம்தான் பதிலடி கொடுக்கணும்....இதுபோல ஏதாவது என் முன் நடந்து என்னை கலாயித்து விட்டு  நாங்கள் சன் மியூசிக்  நிகழ்ச்சிக்காகத்தான்  இப்படி செய்தோம் என கூறினால் ஓங்கி நாலு அப்பு அப்பிடுவேன்...நாளை உங்களுக்கும் நடக்கலாம்...என்ன செய்ய  போகிறீர்கள் நண்பர்களே...?

இது சும்மா ஒரு நிகழ்ச்சிதானே  இதை ஏன் போயி  பெரிதுபடுத்திகிட்டு என கேட்பவர்களுக்கு .......நாளை  நீங்கள் ஏதோ மன கஷ்டத்தில்  ,அல்லது ஏதோ அவசரத்தில்,அல்லது மருத்துவமனைக்கு   போகும்போதும் கூட  உங்களை அவர்கள் இப்படி கலாயிக்கலாம் ...அப்ப  என்ன செய்வீர்கள்?

 மக்களை  கேனயனாக்கி  அதை டிவியில்  காட்டி அந்த  மக்களையே பார்க்கவைத்து அந்த TVக்காரன்    லாபம் பார்ப்பான் ....அதை நாம வேடிக்கை பார்த்துவிட்டு  டேக் இட் ஈசின்னு  எடுத்துகிட்டு போக முடியுமா?போங்கடா  நீங்களும் உங்க  கேனத்தனமான  நிகழ்ச்சியும்....!


23 செப்டம்பர் 2012

வீட்டு உபயோக பொருட்களாலும் கேன்சர் வரும்!...அதிர்ச்சி தகவல்கள்..கேன்சர்  ............பேரை கேட்டாலே  சும்மா அதிருதுல .............ஏன்னா இன்றைய நிலவரப்படி உலகில் அதி பயங்கர உயிர்கொல்லி நோய்  இதுதான்....பெரும்பாலும் கேன்சர் உருவாக புகை பிடித்தல்  ஒரு முக்கிய காரணம்....இதை நாம் அனைவரும் அறிவோம்....இன்னும் நாம்  சரியாக அறியாத  சின்ன சின்ன காரணங்களும்  இருக்கின்றன...அதுவும் நாம் அன்றாடம் உபயோகப்படுத்தும்  பொருட்களிலே  இருக்கின்றன...நான் படித்த அந்த  தகவல்களை  பகிர்ந்துள்ளேன்....

 கேன்சர்  வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் சில பொருட்களாலும் வருகிறது. அத்தகைய பொருட்களில் புற்றுநோயை உருவாக்கும் பொருளான கார்சினோஜென் இருக்கிறது. இதனை தினமும் வீட்டில் பயன்படுத்துவதாலே வீட்டில் உள்ளோருக்கு பெரும்பாலும் புற்றுநோய் வருகிறது. அப்படி என்னென்ன பொருட்களால் புற்றுநோய் வருகிறது ?
1. பிளாஸ்டிக் பொருட்கள் : வீட்டில் உணவுப் பொருட்களை வைப்பதற்காக இதுவரை சில்வர் பாத்திரங்களை பயன்படுத்தி இருந்தோம். ஆனால் இப்போது அந்த நிலை மாறி, நிறைய வீட்டில் பிளாஸ்டிக்கால் ஆன வண்ண வண்ண பாத்திரங்களை பயன்படுத்துகிறோம். அதுலும் மைக்ரோ ஓவனில் சமைக்க எப்போதும் பிளாஸ்டிக் பொருட்களையே பயன்படுத்துவோம். அப்படி பயன்படுத்துவதால், சூடேற்றும் போது பிளாஸ்டிக் பாத்திரத்தில் உள்ள நச்சுப் பொருளான 'கார்சினோஜென்' சமைக்கும் உணவில் கலந்து புற்றுநோயை ஏற்படுத்துகிறது.
 பிளாஸ்டிக்கில்  அடைத்து விற்கப்படும் பொருட்களும் ஆபத்துதான்... குளிர் பானங்கள்,, வாட்டர் பாட்டில்கள் போன்றவை  இதில் அடக்கம்... குளிர் பானங்கள் மற்றும் தண்ணீரை பிளாஸ்டிக் பாட்டிலில் அடைத்து வைத்து குடிப்பது உடலுக்கு மிகவும் ஆபத்தானது என்று கூறுகின்றனர். எல்லா பிளாஸ்டிக் பாட்டிலிலும் தரம் குறைந்த பிளாஸ்டிக்கை உபயோகிப்பார்கள். அந்த பிளாஸ்டிக்கில் புற்றுநோயை உருவாக்கும் பொருளான கார்சினோஜென் இருக்கிறது. ஆகவே அவை குடிக்கும் நீரில் கலந்து புற்று நோயை உண்டு பண்ணுகிறது.
2. ரூம் ஸ்ப்ரே : வீட்டில் அனைத்து கதவுகளையும், ஜன்னல்களையும் அடைத்து விட்டு நறுமணத்திற்காக ரூம் ஸ்ப்ரே அடிக்கிறோம். அந்த ரூம் ஸ்ப்ரேயில் ஃபார்மால்டிஹைடு மற்றும் நாப்தலீன் போன்ற கெமிக்கல்கள் இருக்கிறது. இவை புற்று நோயை உண்டாக்க கூடியவை. அவ்வாறு அனைத்தை கதவுகளையும் மூடி விட்டு அடிக்கும் போது அந்த நறுமணத்தை சுவாசிக்கிறோம். இதனால் எளிதாக புற்றுநோயானது உடலுக்கு வரும். ஆகவே எப்போது செயற்கையான ரூம் ஸ்ப்ரே அடிப்பதை தவிர்த்து, இயற்கையான முறையில் தயாரிக்கும் ரூம் ஸ்ப்ரேயை நன்கு விசாரித்து வாங்கி பயன்படுத்துங்கள்.
3. வாசனை மெழுகுவர்த்தி : வாசனை மெழுகுவர்த்திகளால் கூட புற்று நோய்கள் வரும். அந்த மெழுகுவர்த்திகள் புற்றுநோயை உருவாக்கும் கார்சினோஜெனிக் புகையை உருவாக்குகிறது. அப்போது இதனை சுவாசிப்பதால், அவை எந்த நேரத்திலும் புற்றுநோயை உருவாக்கும்.
4. பெயிண்ட் மற்றும் வார்னிஷ் : வீட்டில் அடிக்கும் பெயிண்ட் மற்றும் வார்னிஷ் போன்றவற்றில் இருந்து வரும் கெமிக்கல் வாசனையை சுவாசிக்கும் போது சில சமயம் தலைவலி அதிகமாக வரும். ஏனெனில் பெயிண்டில் இருவகைகள் உண்டு. எளிதில் ஆவியாகக்கூடியது மற்றும் எளிதில் ஆவியாகாதது. இவற்றில் தலைவலி மற்றும் அதைவிட கொடூரமான புற்றுநோயை உருவாக்கக்கூடியவை எளிதில் ஆவியாகக்கூடிய பெயிண்ட்களே. ஆகவே இவற்றை அடிப்பதை தவிர்த்து, வீட்டிற்கு எளிதில் ஆவியாகாத பெயிண்ட்களை வாங்கி அடித்தால் புற்றுநோய் வராமல் தவிர்க்கலாம்.
இத்தகைய சிறுசிறு பொருட்களே புற்றுநோயை உண்டாக்குகிறது...

நன்றி : தட்ஸ்தமிழ் 

நம்மால் முடிந்தவரை  இவற்றை தவிர்க்க  முயற்சி செய்வோம்... ஆரோக்யமாக வாழ்வோம்...

21 செப்டம்பர் 2012

சூடு போட்ட மம்தாவும் வைகோவும், சொரணை இல்லாத கருணாநிதியும் மற்றவர்களும் .....


  அட்ட கத்தியில் அரசியல் செய்யும் வாய் சொல் வீரரான கருணாநிதிக்கு   மம்தாவும்,வைகோவும்  இதுதான் வீரம் என  சொல்லி அடித்துள்ளனர்..


மம்தா பானர்ஜி ...........இந்தியாவின் பெண் முதல்வர்களுள்   ஒருவர்...மத்தியில் உள்ள அரசில் அங்கம் வகித்தாலும் அவ்வப்போது  சண்டை கோழியாக வளம் வந்தவர் ....குடியரசு தலைவர் தேர்தலில்  ஆளும் கூட்டணிக்கு எதிராக இருந்தவர்...அவரின்  கொள்கைகளும், செயல்பாடுகளும்  விமர்சனத்துக்கு  உரியதாக இருந்தாலும் கூட்டணியில் இருந்துகொண்டே கருணாநிதி போல   கும்மியடிக்காமல் குண்டுகளை  தூக்கி போடுபவர்...

சும்மா சும்மா  அரசுக்கு அளித்து வரும் ஆதரவை  விளக்கி கொள்வதாக  கூறி  மிரட்டுவதுபோல  இல்லாமல் டீசல் விலை உயர்வு,சிலிண்டருக்கு  விதித்த கட்டுபாடுகள் போன்றவற்றை எதிர்த்து  மத்திய  அரசுக்கு அளித்து வந்த ஆதரவை உண்மையாகவே  விளக்கி கொண்டவர்...மத்தியில் 1 கேபினட் உள்பட 6 மந்திரிகளை அதிரடியாக இன்று

பதவி விலக வைத்தவர்....சும்மா பேச்சோடு நிற்காமல்  சோனியாவுக்கு சூடு போட்டவர்...


இவரல்லவா ரோசக்காரி...!

நம்ம தமிழ்நாட்டிலும் ஒருவர் இருக்கிறார்....ஈழத்தில் தமிழர்கள் கொத்து  கொத்தாக  சாகும்போதும் கூட மத்திய  அரசுக்கு எதிராக  மூச்சு கூட விடாதவர்..சும்மா சும்மா  சின்ன குழந்தைகளை  பூச்சாண்டி காட்டி மிரட்டுவதுபோல  கூட அன்றைய மத்திய  அரசை மிரட்டாதவர்...

உண்ணாவிரதம்  என்ற பெயரில் காலை  உணவுக்கும்,மதிய உணவுக்கும்  இடைப்பட்ட நேரத்தில் ரெஸ்ட்  எடுத்தவர்....

தமிழ்  இனம் ஈழத்தில் அழிந்தபோது மத்திய  அரசிலிருந்து விலகாத பதவி ஆசை கொண்ட  கருணாநிதி எங்கே? மக்களுக்காக பதவியை உதறி தள்ளிய மம்தா எங்கே?

தலைவர்கள் அமைவது கூட  இறைவன் கொடுக்கும் வரம்தானோ!

............................ ..................................... ............................................

தமிழ் ஈழம்தான் கனவு,லட்சியம்  என உதார் விடுவது ,கொடுங்கோலன் கொலைகாரன் என ராஜபக்சேவை வசைபாடுவது என ஒயிட் காலர் அல்லது எல்லோ  துண்டு அரசியல் பண்ணாமல்  தான் ஒரு வீரன் என்பதை நிருபித்துள்ளார்  வைகோ....


  மத்தியப் பிரதேச மாநிலம் சாஞ்சிக்கு வருகை தந்த ராஜபக்சேவை எதிர்த்து அங்கு நாற்பது மணி நேரத்திற்கும் மேலாக வைகோ போராடி கைதாகி இருக்கிறார்....இங்கு உட்காந்து கொண்டு  ராஜபக்சே  வருகைக்கு அறிக்கைகள் மூலம் எதிர்ப்புகள்  தெரிவித்து கொண்டு இருக்கும் கருணாநிதி,விளையாட வந்தவர்களையும்,சுற்றுலா வந்தவர்களையும்   விரட்டி அடிக்கும் ஜெயலலிதா,சீமான்  போன்றவர்கள் இனி வைகோவை  அண்ணாந்துதான்  பார்க்க வேண்டும்...


இங்கே ராஜபக்சேவை  கன்னா  பின்னாவென  திட்டிவிட்டு பின்பு எம்பிக்கள்  குழு என்ற போர்வையில் இலங்கை சென்று  அதே ராஜபக்சேவுடன்  கைகுலுக்கி விட்டு திரும்பிய கனிமொழி,திருமா வளவன்  போன்றவர்கள் நிச்சயம்   சவுக்கால் அடித்தது போல உணர்ந்து இருப்பார்கள்....

 தமிழகத்தில் உள்ள  அட்ட கத்தி  அரசியல்வாதிகளுக்கு இடையே வைகோ ஒரு உண்மையான  போர்வாள் என்று சொன்னால் அது மிகையல்ல....17 செப்டம்பர் 2012

மூக்கையும்,கண்ணீரையும் துடைத்து விடுபவருக்காக...!

நான் எழுதிய  ஒரு பதிவுக்கு  எதிர்பதிவு என்று  மூக்கு,கண்ணீரை எல்லாம் துடைத்து விடுவதாக எண்ணிக்கொண்டு    சகோ கோவி கண்ணன்  ஒரு பதிவு எழுதி இருக்கிறார்...

முக்கியமாக  அந்த பதிவு  ஹாஜா மைதின்  என்ற பெயருக்காக  மட்டுமே  எழுதப்பட்ட  ஒரு பதிவு (பெயர்  என்றால் என்ன என  புரிந்து இருக்கும்)

ஏனென்றால் இது போல பீர் என்ற ஒரு நண்பர் இந்தி கற்பது பாவ  செயலா  என எழுதிய ஒரு பதிவுக்கும்( பார்க்க=http://jaihindpuram.blogspot.com/2009/08/blog-post_28.html)இவர் பதில் சொல்வதாக கூறி ஒரு எதிர்பதிவு போட்டு உள்ளார்...(கவனிக்க இங்கும் பேர் பீர் முகம்மது )..இப்ப புரிந்து இருக்குமே  இவர் எதுக்கு இப்படி ஓடி ஓடி வந்து எதிர்பதிவு போடுகிறார் என்று...!

கோவி கண்ணன் என் பதிவை பற்றி எழுதிய அன்றே நான் அதை படித்து இருந்தால் நான் அன்றே பின்னூட்டத்தில் பதில் சொல்லி இருப்பேன்..ஆனால்  இன்றுதான் படிக்க நேர்ந்தது...இனி பின்னூட்டத்தில் பதில்  சொல்லி  பலனில்லை என்பதால் இந்த பதிவு....


அப்படி நான் என்னத்த  எழுதிபுட்டேன்?இந்திதான் உயர்ந்தது என்றா?இந்தி தெரியாட்டி அவன் இந்திய குடியுரிமையை  இழந்து விடுவான் என்றா?இந்தி தெரியாவிடில் அவன்   இந்தியாவில் இருக்க கூடாது  என்றா? ஒன்றுமே இல்லை ....எனக்கு நேர்ந்த ஒரு  சம்பவத்தை சொல்லி ஓரளவு கூட இந்தி தெரியாமல்  இருப்பது சரியா எனதான் கேட்டு இருந்தேன்...

அதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும்  அந்த பதிவிலே  நிறைய  நண்பர்கள் பின்னூட்டத்தில்  பதில் சொல்லி இருந்தார்கள்....அது போல கோவி  கண்ணனும்  பதில் சொல்லி இருக்கலாம்...

ஆனால்  அவருக்கு யாரையாவது  (குறிப்பாக  இஸ்லாமிய  பதிவர்கள்) தாக்கி பதிவு போட்டால்தான் தூக்கம் வரும் போல...வேற  வழி ....பதிவு  ஹிட்  அடிக்கணும்ல !அதற்காக  அந்த பதிவை எழுதி இருக்கிறார்...ஒருவேளை கோவி கண்ணன் தன்னையே  நினைத்து கொண்டு   அவர்  எழுதிய  பதிவுக்கு "அப்படி"ஒரு தலைப்பை  வைத்து இருப்பார் என நினைக்கின்றேன் .....

நான் என்னுடைய  பதிவில் எழுதியதை  மிகைப்படுத்தி  அவர் எழுதியதை பாருங்கள்..

#நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன் ...

நாம்  இனத்தால் தமிழன்  ஆனாலும்  ஒரு குடிமகனாக  மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது  இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான  இந்தியை தமிழர்களான  நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?

ஒரு இந்திய குடிமகனாக  வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய  விசயம்  அல்லவா ?#

இதுதான் நான் எழுதியது....நான் கேள்விதான் கேட்டு இருந்தேன்...ஆனால் அதற்கு அவர் 

#ஹாஜா மைதீன்
 என்பவர் மலேசியாவில் ஒரு மலாய்காரனால் வெட்கம் அடைந்தாராம்,#

 மேலும் இந்தி தெரியாமல் இருப்பதே தமக்கு பெருத்த அவமானம் என்றும் எழுதியுள்ளார்,#

என எழுதி இருக்கிறார்....நான் அவமானம்  அடைந்தேன் என்று  என் பதிவில் எங்குமே குறிப்பிடவில்லை ...நான் சொல்லாததை சொன்னதாக  திரித்து எழுதி உளறி இருக்கிறார்...


நான் எழுதாத  வார்த்தைகளை  எழுதியதாக  திரித்து கூறுவது என்ன எழவு   பண்பாடோ  தெரியவில்லை.....உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்களேன்...!


ஆண்டுக்கு ஒருவராவது  இந்தி தெரியவில்லை என இவரிடம் வந்து கண்ணீர் வடிக்கிரார்களாம்  ...இவர் என்ன இந்தி வாத்தியாரா?!இவர் எத்தனை  பேருக்கு  கண்ணீரை துடைத்து விட்டு இருக்கிறார்  என தெரியவில்லை...

தவிர இந்தி தெரியவில்லை என யாராவது சமுக அக்கறையுடன்  மூக்கு சிந்தினால் இவர் அமிர்தாஞ்சன் கொடுப்பாராம்...எத்தனை பேருக்கு அமிர்தாஞ்சன் தடவி விட்டு இருக்கிறார் என தெரியவில்லை...பதிவுலகில் பதிவு மட்டும் எழுதாமல் அமிர்தாஞ்சன் தடவுவதையும்  சைடு business  ஆக வைத்து இருக்கிறார் போல 

ஓகே...அவர் இதற்கும் ஏதாவது  பண்பாடற்ற நாகரிகமற்ற  தலைப்புகளையும்,வார்த்தைகளையும்,கூடவே  கர்சீப்பையும் (கண் துடைத்து விடுவதற்கு...)அமிர்தாஞ்சனையும்(மூக்கிற்கு) வைத்து கொண்டு  இந்நேரம் தயாராகி  இருப்பார்...முதலில் அவர் அதை தனக்கு  உபயோகப்படுத்தி  கொள்ளட்டும்...அப்புறம் பிறரை  பற்றி யோசிக்கலாம்...

போலாம் ரைட்....
கொஞ்சம் இருங்க ...எனக்கும் அவரைப்போல  புத்தி கெட்டவர்களுக்காக ,நாகரிகம் அற்றவர்களுக்காக என தலைப்பு  வைக்க தெரியும்....ஆனால் அவர் செய்த தவறை நான் செய்ய  விரும்பவில்லை....

15 செப்டம்பர் 2012

மத சண்டைகளை உருவாக்கும் ஐடியா மணி.....என்ன முடிவெடுக்க போகிறது தமிழ்மணம்?


நண்பர் ஐடியா  மணிக்கு என்னதான் பிரச்சினை?ஆரோக்யமாக  இருக்கும் பதிவுலகத்தை ஐடியா மணி     சண்டை களமாக  மாற்றி வருகிறார்....

முஸ்லிம்களா ?முஸ்லிம்களின் புனித நூலான குர் ஆனா  ?முஸ்லிம்களே அவருக்கு பிடிக்காதா?நோ பிராப்ளம்...இல்லை குரானை  வெறுக்கிறாரா?வெறுக்கட்டும்...ஆனால் விமர்சிப்பதில் ஒரு கண்ணியம் வேண்டும்,நாகரிகம் வேண்டும் .....ஆனால் ஐடியா மணி பயன்படுத்தும் வார்த்தைகள்  எந்த சர்ச்சைகளுக்கும்  சிக்கி கொள்ளாமல்  ஐடியா மணி பக்கமோ,சுவன பிரியன்  பக்கமோ  சாய்ந்து இருக்காமல்  பொதுவாக பதிவெழுதும் என்னை போன்ற முஸ்லிம்  பதிவர்களின் மனதை  காயப்படுத்தி வருகிறது ...

தினம் தினம் இஸ்லாத்தை பற்றி   குறை கூறி அவதூறான வார்த்தைகளால்  பதிவிடுவதன் அவசியம் ஏன்?

அவருக்கும் சுவன பிரியனுக்கும்   பிரச்சினை என்றால்  அவர் எதற்காகக்  குரானையும்  இஸ்லாத்தையும் இழுக்க வேண்டும்?


குர்ஆன்   புனிதநூலாக  இருந்தால் அவருக்கு என்ன  இல்லாவிட்டால்  அவருக்கு என்ன?குரான் இஸ்லாமியர்களுக்குத்தான்  புனித நூல்...நான் அல்லவா  அது புனித நூலா  புதிரா என கவலைப்பட வேண்டும்?என் வீடு எப்படி இருந்தால் அவருக்கு என்ன?அவரவர் வீடு அவரவருக்கு...அவரவர்  மதம் அவரவருக்கு...

குர் ஆனில்   சொல்லப்பட்ட  விசயங்களை  பின்பற்றும்  இஸ்லாமியர்களுக்கு  அல்லவா  அது தவறா   இல்லை சரியா என  சந்தேகம் இருக்க வேண்டும்?பின்பற்றாத ஐடியா மணிக்கு என்ன கவலை?

இஸ்லாத்தை பற்றிய உங்களின் சந்தேகங்களை  நாகரிகமான  வார்த்தைகளை  பயன்படுத்தி கேளுங்கள்....பதில் தர  சக  இஸ்லாமிய பதிவர்கள்  தயாராக  இருக்கிறார்கள்....சக நாத்திக பதிவர்கள்  அவர்களின் விமர்சனங்களை  கண்ணியமான  முறையில்தான்  விவாதமாக  எழுதி வருகிறார்கள்....ஆனால் இவர் ?விவாதமாக  எழுதாமல்  விவகாரமாகவே எழுதி வருகிறார்...

இஸ்லாமை பற்றியும்  குர்ஆனை  பற்றியும்   தேவை இல்லாமல் கண்டபடி எழுதி  மத பயங்கரவாதத்தை   ஐடியா மணி  பதிவுலகில்  தூண்டி விட்டு கொண்டு இருக்கிறார்

ஐடியா மணி  அதிகமாக எழுதாத  இந்த மூன்று மாத காலங்களில் பதிவுலகில் எந்த சண்டை சச்சரவுகளும் இல்லை....இவர்தான் அடுத்தவர்களின் மத சம்பந்தப்பட்ட விசயங்களை  விரோதத்தை  வளர்க்கும் வார்த்தைகளால் எழுதி மத சண்டைகள்  ஏற்பட  காரணமாகி  கொண்டு இருக்கிறார்...

உங்களுக்கு முஸ்லிம்களை பிடிக்காதா?குர்ஆனை  பிடிக்காதா?அது பற்றி எனக்கோ சக முஸ்லிம் பதிவர்களுக்கோ  எந்த பிரச்சினையும் இல்லை...ஆனால் பிடிக்காத  ஒன்றை பற்றி தினம் தினம் எழுத வேண்டிய அவசியம் என்ன?

இதுவரை சக இஸ்லாமிய பதிவர்கள் மற்ற  மத கடவுள்களை  பற்றி எந்த பதிவிலும்  நீங்கள் எங்கள்  இறைவனை பற்றி ,குரானை  பற்றி எழுதி இருப்பதை போல நிச்சயம் எழுதி இருக்க மாட்டார்கள் ...ஏனென்றால் மற்ற  மத கடவுள்களை  திட்டாதீர்  என குர் ஆன்  கூறி இருக்கிறது...

பதிவுலகில்  மத சண்டைகள்  தேவை இல்லாதது....அதை உருவாக்கும் ஐடியா மணியின் பதிவுகள்  அதை விட தேவை இல்லாதது....மத சண்டைகளை ,வீண்  கலவரங்களை, குழப்பங்களை  உருவாக்கும் பதிவுகளை  தமிழ்மணம் திரட்டியில்  இணைத்து கொள்ள அனுமதிப்பது  தேவையோ தேவை இல்லாதது....

தமிழ்மணம்  இதுபோன்ற மத விரோதங்களை ,மத சண்டைகளை  உருவாக்கும் பதிவுகளை  தங்கள்  திரட்டியில்  இணைத்து கொள்ளாமல் இருப்பது  பற்றி விரைவில் முடிவெடுப்பது  எல்லாருக்கும்  நல்லது...

உடனே ஐடியா மணி  என்னை திட்டியோ  விமர்சித்தோ பதிவெழுத தயாராகி இருப்பார் ..அது மேலும் மேலும் பதிவுலகில் விரோதங்களை  வளர்க்கவே உதவுமே தவிர  வேறு ஒன்றுக்கும் உதவாது....நான்  இது போன்ற மத சண்டைகள் பதிவுலகில் முடிவுக்கு வரணும் என்ற நோக்கில்  இந்த பதிவை எழுதி இருக்கிறேன்...ஆனால் முடிவு ஐடியா மணி  மற்றும் தமிழ்மணம்  கைகளில் ...


13 செப்டம்பர் 2012

தமிழ்மணமும்,வாசகர் பரிந்துரையும், ஒரு முரணும்...


நம்முடைய  வலைதளங்களுக்கு  வரும் வாசகர்களில்  பெரும்பான்மையான  வாசகர்கள்  தமிழ்மணம்  திரட்டியில்  இருந்துதான் வருகிறார்கள்...

தமிழ்மணம்  திரட்டியில்  நுழைந்தவுடனே  நாம் உடனே பார்ப்பது சூடான  இடுகைகளையும்,வாசகர் பரிந்துரையில்  இடம்பெறும்  இடுகைகளையும்தான் .....இதில் உள்ள  இடுகைகள்தான்  முதலில் நம் கவனத்தை  ஈர்க்கின்றன...


அதிகமான  வாசகர்கள் படிக்கும் இடுகைகள்  சூடான  இடுகைகளில்  இடம்பெறுகிறது  என நினைக்கின்றேன்.... வாசகர் பரிந்துரையில்  7 ஓட்டுகளை  பெரும் பதிவுகள்  இடம்பெற்றுவருகின்றன....

ஆனால் அந்த ஏழு ஓட்டில் நம்முடைய  ஒரு ஓட்டை தவிர  மீதி ஆறு ஓட்டுகள் அதாவது  6 பேர்  பரிந்துரைக்கும் பதிவு  எப்படி வாசகர் பரிந்துரையில்  இடம்பெறலாம் என்பது  எனக்குள் எழுந்த கேள்வி....


உதாரணத்துக்கு  இப்ப எனக்கு தெரிந்த 10 நண்பர்கள் பதிவர்களாக இருக்கிறார்கள் என்று வைத்து  கொள்வோம்...நான் எழுதும் அல்லது என் நண்பர்கள் எழுதும் எல்லா பதிவுகளுக்கும் கேரன்டியாக  எங்களின்  10 ஓட்டுகள் விழுந்துவிடும்....அது எவ்வளவு பெரிய  மொக்கையான  பதிவுகளாக இருந்தாலும் கூட...

அதாவது என் நண்பர்கள்  எனக்கு  6 ஒட்டு போடுவதாலேயே  என்னுடைய  மொக்கையான  பதிவு (உதாரணத்துக்கு மட்டும்தான் ஹி ஹி....)ஒன்று வாசகர் பரிந்துரையில் இடம் பெற்று தமிழ்மணத்துக்கு  வரும் வாசகர்களின் கவனத்தை  பெற்றுவிடுகிறது...

ஆனால் நண்பர்கள் இல்லாமல்  பதிவு எழுதும்,அல்லது புதிதாக  பதிவு எழுதும் பதிவர்கள் இதனால் நிச்சயம் பாதிக்கப்படுகிறார்கள்   என்பது என் கருத்து ...இதனால் பல நல்ல பதிவுகள் வாசகர் பரிந்துரைக்கு வராமலே போய்விடுகின்றன.......அதாவது தமிழ்மணம் வாசகர் பரிந்துரையில் இடம்பெற  ஒரு பதிவு நல்ல கருத்துக்களை கொண்டதாக இருக்கோ இல்லையோ  வெறும் 7 ஓட்டுகளே போதும்  என்ற  சிஸ்டம்  முரணாக இருப்பதாக நினைக்கின்றேன்....


பல நூறு பதிவர்கள் தங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்கும்போது    வெறும் 6 நபர்கள்  மட்டும் ஒட்டு போட்டு அதை வாசகர் பரிந்துரைக்கு  கொண்டு வருவது சரியல்ல...வாய்ப்புகள் என்பது  எல்லாருக்கும் சரிசமமாக  இருக்க வேண்டும்... 6 நபர்கள் ஒட்டு போட்டு ஒரு பதிவை வாசகர்களின்  பார்வைக்கு கொண்டு வருவது  நிச்சயம் பல நல்ல பதிவுகளை பாதிக்கும்....

எனக்கு தெரிந்து  வாசகர் பரிந்துரைக்கும்  குறிப்பிட்ட வாசகர்கள்  அந்த பதிவை (அதாவது ஒரு 100 அல்லது 150 நபர்கள்) படிக்கும் பட்சத்தில்  அதை வாசகர் பரிந்துரைக்கு எடுத்து கொள்ளலாம்...வெறும் ஓட்டால் மட்டும் தீர்மானிக்க கூடாது என்பது என் எண்ணம்....

இதை தமிழ்மணம் பரிசீலிக்குமா?

இதை படிக்கும் நண்பர்களின் கருத்துக்களையும்  அறிய  விரும்புகிறேன்...


08 செப்டம்பர் 2012

இந்தி தெரியாதவன் இந்தியனாக முடியுமா?


இந்தியாவில்  1652 க்கும்  மேற்பட்ட  மொழிகள்  பேச்சு வழக்கில் உள்ளன .....

ஆனால் இந்தியாவின்  அலுவல் மொழி     இந்திதான்....இந்தியுடன் சேர்த்து  அங்கீகரிக்கப்பட்ட  அலுவல் மொழிகள் 22..இதில் தமிழ் மொழியும் ஒன்று ...

 ஆனால் இதில்  இந்திதான் பெரும்பாலான  இடங்களில்  அலுவல் மொழியாக  பயன்படுத்தப்பட்டு  வருகிறது....உடன்பாடு இருந்தாலும் இல்லை என்றாலும்  இதை ஏற்றுதான் ஆக வேண்டும்....

ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அலுவல்  மொழியை அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பேசுவான்....அறிந்து இருப்பான்...

நான் வேலை பார்க்கும் மலேசியாவின்  அலுவல் மொழி மலாய் மொழி....மலேசியாவில் சீனர்கள், இந்தோனோசியர்கள் என பல தரப்பட்ட  மக்கள் வாழ்ந்தாலும் அனைவரும் மலாய் மொழி  பேசுபவர்களாகத்தான்  இருப்பார்கள்....

நேற்று  வேலை முடிந்து  ஒரு டேக்ஸியில்  வீடு திரும்பி கொண்டு இருந்தேன்...டிரைவர்  ஒரு  மலாய்காரர்...நான்  இந்தியன் என்றவுடன் என்னுடன் சரளமாக  பேசி கொண்டு வந்தவர் உங்களுக்கு   இந்தி தெரியும்தானே  என்றார்....நான் தெரியாது என்றேன்....இந்தியாவின் மொழி இந்திதானே..அப்புறம் எப்படி தெரியாது என்கிறீர்கள் ? என்றார்....

நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன் ...

நாம்  இனத்தால் தமிழன்  ஆனாலும்  ஒரு குடிமகனாக  மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது  இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான  இந்தியை தமிழர்களான  நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?

ஒரு இந்திய குடிமகனாக  வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய  விசயம்  அல்லவா ?

ஆரம்ப பள்ளிகளில் இந்தியை கற்று  தராமல்  போனதற்கு நம் சுயநல அரசியல்வாதிகள்தானே காரணம்?தமிழ் ,தமிழ்நாடு என சொல்லி ஒட்டு பிச்சைக்காக  அரசியல் நடத்திய  அயோக்கிய  அரசியல்வாதிகள்தானே  இதற்கு காரணம்...?

இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை நான்  குறை கூறவில்லை ....ஆனால் ஒரு மொழியாக ஆங்கிலத்தை நமக்கு பள்ளிகளில்  கற்று  தந்ததை போல இந்தியை  ஏன் கற்று தரவில்லை?இந்தி திணிப்பை  எதிர்த்து இருக்கலாம்...இந்தி தெரிந்து கொள்வதையுமா  எதிர்ப்பது?

உலகின் பன்மையான மொழியான தமிழை பேசுவதால் பெருமை அடையும் அதே வேளையில்   நம் நாட்டின் தேசிய  மொழியான இந்தியை  தெரியாததால்  நிச்சயம்  கவலையும்  அடைய வேண்டும்....

தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன்  ஆக முடியாதோ  அது போல இந்தி தெரியாதவன்  இந்தியனாக இருக்க முடியுமா?பதில்தான் தெரியவில்லை....

07 செப்டம்பர் 2012

பயோ டேட்டா : மன் மவுன சிங்


பெயர் :  மன் (மோகன் )மவுன  சிங்
பிடித்த வேலை : மவுன  விரதம் இருப்பது
பிடித்த வார்த்தை :  எனக்கு தெரியாது
பிடிக்காத வார்த்தை:  ராஜினாமா
சோனியா :   ஆட்டுவிக்கும்  ரிங் மாஸ்டர்
இருக்கும் பதவி :  சோனியாவின்  கைக்கூலி (அதாங்க  பிரதமர்)
ஸ்பெக்ட்ரம் :  பாதி மானத்தை  வாங்கியது
நிலக்கரி சுரங்க ஊழல் :  மிச்சமிருக்கும் மானத்தையும் காவு வாங்கியது
மத்திய  அமைச்சர்கள் :  ஊழல்  செய்வதற்காகவே  தேர்ந்தெடுக்க பட்டவர்கள்
ஒரே சாதனை : ஒன்றுமே செய்யாமல்  இரண்டு தடவை பிரதமராக  இருப்பது
நீண்ட கால எரிச்சல் : பாஜகவும், பத்திரிக்கைகளும்
சமிபத்திய எரிச்சல்: அன்னா  ஹசாரேவும், வெளிநாட்டு பத்திரிக்கைகளும்

அமெரிக்கா :  நண்பனாக  காட்டிகொள்ளும்  எதிரி

சீனா:  எதிரியாகவே காட்டிகொள்ளும்  விரோதி
இந்தியா :  எப்படியோ  போகட்டும் எனெக்கென்ன ......
06 செப்டம்பர் 2012

2022 -கருணாநிதி ..ஜெயலலிதா ..விஜயகாந்த் !?!?கருணாநிதி: தமிழ் ஈழம்தான்  என் கனவு,லட்சியம்,உயிர்மூச்சு.....அதை  அடையும்வரை நான் ஓயமாட்டேன்....அதேசமயம்  தமிழீழம்  கிடைக்காமல்  போனதற்கு காரணம்  போராளிகளுக்கு இடையே  நடந்த சகோதர  சண்டைதான்....தமிழ் ஈழம் கிடைக்க மத்திய  அரசை தொடர்ந்து வற்புறுத்தி  கொண்டு இருப்பதற்காகவே நாங்கள் மத்திய  அமைச்சரவையில் இடம் பெற்று உள்ளோம்.... மத்தியில்  உள்ள அரசுடன்  மனகசப்புடன் எங்கள்  உறவு தொடர்கிறது....ஜெயலலிதா :எனக்கு  உடல்நிலை சரி இல்லாத  காரணத்தால்   பெங்களூரில்  நடை பெற்று வரும் சொத்து குவிப்பு  வழக்கில் நேரில் ஆஜராகாமல்  இருப்பதற்கு  விதிவிலக்கு  அளிக்க வேண்டும் எனவும், இவ்வழக்கை விசாரித்து வரும் நீதிபதியின்  நியமனம்  செல்லாது எனவும் உச்ச நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளேன்....விஜயகாந்த்:  திமுகவும்,அதிமுகவும்  மாறி மாறி ஆண்டு தமிழகத்தை சீரழித்து  விட்டன.....தமிழகத்தின்  விடிவெள்ளி தேமுதிக தான்...நான் சட்டமன்றத்துக்கு  போனால் என்ன ?போகாவிட்டால் என்ன?மக்களுக்காக  குரல் கொடுத்து கொண்டுதானே  இருக்கின்றேன்....!?ராமதாஸ் :இனி எந்த கட்சியிடனும்  கூட்டணி இல்லை....திராவிட கட்சிகளால்  தமிழ்நாடு  சீரழிந்தது போதும்....இனி வரும் தேர்தல்களில் பாமக  தனித்தே  போட்டியிடும்....!திருமாவளவன் :  திமுகவும்,விடுதலை சிறுத்தைகளும்தான்   ஈழத்தமிழர்களுக்காக  போராடும் உண்மையான கட்சிகள்.....அதே சமயம் கூட்டணியில்  இருந்தாலும் காங்கிரஸ் எங்களுக்கு   எதிரிதான்....!


வைகோ:   மக்களுக்கு தீமைகளை  மட்டுமே செய்து கொண்டு இருக்கும் மத்திய ,மாநில  அரசுகளை  கண்டித்து கன்னியாகுமரியில்  இருந்து சென்னை நோக்கி   புயலென  புறப்படுவோம் ....அலைகடலென  கூடுங்கள்  ....ஆர்ப்பரித்து  வாருங்கள்...நடை பயணத்தால்  விரைவில் நாட்டை ஆளுவோம்...!மத்திய  அமைச்சர் நாராயணசாமி : கூடங்குளம்  அணு உலையில்   விரைவில் மின் உற்பத்தி தொடங்கும்....!!

இன்னும் 10 வருடங்கள் கழித்து  இவர்கள் எல்லாம்  என்ன பேசுவார்கள் அல்லது அறிக்கை விடுவார்கள் என இப்பவே  நான் சொல்லிவிட்டேன்  .....என்ன சரிதானே ....!04 செப்டம்பர் 2012

கருணாநிதி ......கொஞ்சம் திரும்பி பார்ப்போமா....!


 திமுக தலைவர் கருணாநிதி மீது பல்வேறு விமர்சனங்கள்  இருந்தாலும் கடந்த   ஐம்பது வருடங்களாக  தமிழகத்தில் இவர் இல்லாமல் அரசியலில் நல்லதும் நடந்தது இல்லை கெட்டதும் நடந்தது  இல்லை என்பது  யாராலும்  மறுக்க  முடியாத உண்மை...அப்படிப்பட்ட  மேடு பள்ளங்கள் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த அவரின்  வாழ்க்கை  வரலாற்றை  கொஞ்சம் பார்க்கலாம்...அவரை விமர்சிப்பவர்களில் பதிவுலகில் நானும் ஒருவன்....ஆனால்  விமர்சித்தாலும்,ஆதரித்தாலும்  அவரை பற்றி தெரிந்து கொள்வது  தேவையான  ஒன்று என்றே நினைக்கின்றேன்...


திருவாரூரில் இருந்து 15 மைலில் உள்ள திருக்குவளை என்ற கிராமத்தில் 1924 ஜுன் 3 ந்தேதி கருணாநிதி பிறந்தார். பெற்றோர்: முத்துவேலர், அஞ்சுகம் அம்மையார். கருணாநிதிக்கு சண்முகசுந்தரம், பெரியநாயகி என்று இரு தமக்கைகள். குடும்பத்திற்கு ஒரே ஆண் பிள்ளை கருணாநிதி. முத்துவேலர் கவி எழுதும் ஆற்றல் பெற்றவர்.
வடமொழிக் கிரந்தங்களிலும் நல்ல தேர்ச்சி பெற்றவர். அத்துடன் மிகுந்த கடவுள் பக்தர். பள்ளியில் படிக்கும்போதே அரசியலிலும், இலக்கியத்திலும் ஆர்வம் மிக்கவராகக் கருணாநிதி விளங்கினார். அப்போது, "மாணவ நேசன்" என்ற கையெழுத்துப் பிரதியை நடத்தினார்.இதுதான் பிற்காலத்தில் முரசொலி என்ற பெயரில் துண்டு வெளியீடாகவும், அதன்பின் வார இதழாகவும், நாளிதழாகவும் வளர்ந்தது. "தமிழ்நாடு தமிழ் மாணவர் மன்றம்" என்ற அமைப்பைத் தொடங்கி, அப்போது அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்களாக விளங்கிய அன்பழகன், கே.ஏ.மதியழகன் ஆகியோரை அழைத்து, மன்றத்தில் பேசச் செய்தார்.1942 ல் அண்ணா நடத்தி வந்த "திராவிட நாடு" ஏட்டின் மூன்றாவது இதழில், கருணாநிதி எழுதிய "இளமைப்பலி" என்ற எழுத்தோவியம் பிரசுரமாகியது. இக்கட்டுரை அண்ணாவை வெகுவாகக் கவர்ந்தது. ஒரு விழாவுக்காகத் திருவாரூர் வந்த அண்ணா, "இந்த ஊரில் கருணாநிதி என்பவர் யார்? அழைத்து வாருங்கள்.
நான் பார்க்கவேண்டும்" என்றார். சில நிமிடங்களில் கருணாநிதி அவர் முன் போய் நின்றார். `கருணாநிதி ஒரு பெரிய ஆளாக இருப்பார்' என்று நினைத்திருந்த அண்ணா, ஒரு சிறுவனைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினார்.  1944 செப்டம்பர் 13ந்தேதி கருணாநிதிக்குத் திருமணம் நடந்தது. மணமகள் பெயர் பத்மா.
கருணாநிதியின் நாடகங்களில் ஒன்றைப் பார்த்து பாராட்டிய தந்தை பெரியார், அவர் நடத்தி வந்த "குடியரசு" வார இதழின் துணை ஆசிரியராகக் கருணாநிதியை நியமித்தார். 1946 ல் திராவிடக் கழகத்தின் கொடி உருவாக்கப்பட்டபோது, நடுவில் உள்ள சிவப்பு வண்ணத்துக்கு கருணாநிதி தன் ரத்தத்தைக் காணிக்கை ஆக்கினார். பெரியாருடன் கூட்டங்களில் கலந்து கொண்டு, சொற்பொழிவுகள் நிகழ்த்தினார்.


இந்தச் சமயத்தில் கோவை ஜுபிடர் நிறுவனத்தினர் தயாரித்த "ராஜகுமாரி" படத்துக்கு வசனம் எழுதும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தப் படத்தில்தான் எம்.ஜி.ஆர். முதன் முதலாக கதாநாயகனாக நடித்தார். இந்தப்படம் வெளிவந்தபோது, கருணாநிதி தந்தையின் கண் ஒளி மங்கியிருந்தது. எனினும் தியேட்டருக்குச் சென்று, வசனங்களைக் கேட்டு மகிழ்ந்தார். மகனின் ஆற்றலைக்கண்டு பெருமிதம் கொண்டார்.
இந்த நிகழ்ச்சி நடந்து சில நாட்களுக்குப்பின், அவர் காலமானார். கருணாநிதிக்குத் தொடர்ந்து சினிமா வாய்ப்புகள் வரத்தொடங்கின. மனைவி பத்மாவுடன் கோவையில் குடியேறி, "அபிமன்யு" படத்திற்கு வசனம் எழுதினார். ஆனால், படத்தில் அவர் பெயர் விளம்பரப்படுத்தப்படவில்லை.


திராவிடக் கழகத்தில் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், திரைப்பட வசனகர்த்தாவாகவும் கருணாநிதி வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில், அவர் மனைவி பத்மா, கணவரையும், கைக்குழந்தை முத்துவையும் கலங்க வைத்துவிட்டு இயற்கை எய்தினார்.
 மனைவி பத்மாவின் மரணம் கருணாநிதியைப் பெரிதும் பாதித்தது. உறவினர்கள் அவரைத்தேற்றி, குழந்தையாக இருக்கும் முத்துவை கவனித்துக் கொள்வதற்காகவாவது மறுமணம் செய்து கொள்ள வேண்டும் என வற்புறுத்தினார்கள்.
முடிவில் 1948 செப்டம்பர் 15 ந்தேதி, தயாளு அம்மாளை கருணாநிதி மணந்து கொண்டார். திருமாகாளம் என்ற ஊரைச் சேர்ந்த கோவிந்தசாமியின் மகள் தயாளு.


 1949 ஜுலை 9 ந்தேதி, தனக்கு வாரிசுரிமை வேண்டுமென்பதற்காக மணியம்மையை பெரியார் மணந்தார். இதனால் திராவிடக் கழகம் பிளவுபட்டு, செப்டம்பர் 17 ந்தேதி அண்ணா தலைமையில் தி.மு.கழகம் உதயமாயிற்று.
தி.மு.கழகத்தின் முக்கியத் தலைவர்களில் ஒருவராய் முன்னேறிய கருணாநிதி, மாடர்ன் தியேட்டர் தயாரித்த "மந்திரி குமாரி" படத்துக்கு வசனம் எழுதிப் புகழ் பெற்றார். 1952 ல் "பராசக்தி" படத்திற்கு வசனம் எழுதி, புகழின் சிகரத்தைத் தொட்டார். இப்படத்தில்தான் சிவாஜி கணேசன் அறிமுகமானார்.


1953 ஜுலை மாதத்தில் தி.மு.கழகம் "மும்முனைப் போராட்டம்" நடத்தியது. டால்மியாபுரத்தின் பெயரைக் "கல்லக்குடி" என்று மாற்றக்கோரி நடந்த போராட்டத்தில், தண்டவாளத்தில் தலைவைத்துப்படுத்தார், கருணாநிதி. அவரைப் போலீசார் கைது செய்தனர்.
அவருக்கு 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. 1954 ல் வெளியான `மனோகரா' படத்தில் இடம் பெற்ற கருணாநிதியின் வசனங்கள், அவர் புகழை இமயத்துக்குக் கொண்டு சென்றன. கொஞ்சம் கேப் விட்டாச்சு .....மீண்டும்  பார்க்கலாம் ......

நன்றி மாலைமலர் காலசுவடுகள்...


01 செப்டம்பர் 2012

உங்களுக்கு தொப்பை இருக்கா?அப்ப இதை நீங்கள் படித்தே ஆக வேண்டும்..!


இன்றய நவீன உலகில் தொப்பை இல்லாத மனிதன்  அரை மனிதன் என்பது இப்ப புது மொழி...

ஆனால் அந்த தொப்பையினால்  ஏற்படும் ஆபத்துகள் என்ன?

நான் படித்த தகவல்களை பகிர்ந்துகொள்கிறேன்....

வயிறும், இடுப்பும் சுற்றளவு அதிகமாக, அதிகமாக மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்கின்றனர் நிபுணர்கள். எனவேதான் உடல் எடையை குறைக்க காட்டும் அக்கறையை தொப்பையை குறைக்கவும் காட்டுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
வயிறு கொழுப்பு அதிகமாவதால் இன்சுலின் சுரப்பு குறைபாடு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு ஏற்படுகிறது. பெண்களுக்கு புரோஜெஸ்ட்ரோன் சுரப்பின் அளவு குறைகிறது. பெண்மைத் தன்மைக்கான ஹார்மோன் சுரப்பு குறைவதால் முகத்தில் முடி முளைக்கிறது. மலட்டுத்தன்மை, பாலிசிஸ்டிக் ஓவரி பிரச்சினை ஏற்படுகிறது என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே தொப்பை அதிகம் உள்ளவர்களுக்கு திடீர் மரணங்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இதற்குக் காரணம் கெட்ட கொழுப்புகள் அதிகமாக படிவதே காரணம் என்பது நிபுணர்களின் கருத்து. இது குறித்து National Health and Nutrition Examination Survey (NHANES III) ஆய்வாளர்கள் 12 ஆயிரத்து 785 பேரிடம் ஆய்வு மேற்கொண்டனர்.
அந்த ஆய்வின் படி ஆண்,பெண்களில் பி.எம்.ஐ ரிப்போர்ட்படி தொப்பை இருந்த 2,562 பேருக்கு திடீர் மரணங்கள் ஏற்பட்டது தெரியவந்தது. அதேபோல் 1,138 பேருக்கு இதயம் தொடர்பான நோய் ஏற்பட்டதும் கண்டறியப்பட்டது. சராசரி எடையோடு இருப்பவர்களைக் காட்டிலும் வயிற்றில் கொழுப்பு அதிகம் சேர்ந்தால் 2.75 சதவிகிதம் அளவிற்கு ஆபத்து அதிகம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
எனவே உடல்பருமனை குறைக்கும் அதே நேரத்தில் வயிற்றில் தொப்பையை குறைக்கவும் முயற்சி மேற்கொள்ளவேண்டும் என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.


நன்றி: தட்ஸ்தமிழ்...

ஓகே  இப்ப தொப்பை குறைய ஒரு எளிய உடற்பயிற்சியை பற்றி தெரிந்துகொள்வோம்...
தரையில் முதலில் மல்லாந்து படுத்துக் கொள்ள வேண்டும் .இரண்டு கைகளையும் உடலின் பக்கத்தில் தளர்ந்த நிலையில் வைக்கவும். .தலை,கைகள்,கால்கள் மற்றும் உடல் முழுவதும் மிகவும் தளர்ச்சியான நிலையில் வைக்க வேண்டும்.
 
பிறகு மூச்சை இழுத்துக் கொண்டே தலையை தூக்காமல் கைகளைக் கொண்டு தரையை அழுத்தாமல் கால் கட்டை விரல்களை சேர்த்து வைத்து மேலே தூக்கவும் ரொம்பவும் மேலே தூக்கி விட கூடாது.
 
திருப்பி கால்களை கீழே இறக்கும் போது மூச்சை வெளியே விட்டுக் கொண்டே மெதுவாக இறக்கவும் குதிங்கால்களை எக்காரணத்தைக் கொண்டும் தரையை தொடக் கூடாது. அப்படி தொட்டு விட்டால் பயிற்சி முடிந்துவிடும்.
 
இப்படி ஒரு நாளைக்கு 25 முறை செய்ய வேண்டும் புதியவர்கள் 10 முறை செய்தால் போதும்.
 
பலன்கள்:
 
இந்த பயிற்சி முழுக்க முழுக்க வயிற்றுக்காகவே உள்ள பயிற்சி இப்பயிற்சியை தொடர்ச்சியாக செய்து வந்தால் தொப்பை குறைவது உறுதி. பெருங்குடல், சிறுகுடல் அனைத்தும் தூண்டப்பட்டு நன்கு வேலை செய்வதால் வயிறு மந்தமான நிலையில் பசியெடுக்காதவர்களுக்கும் பசி எடுக்கும். இடுப்பு தேவையில்லாத சுற்று சதை குறைந்து வலிமை பெறும் முதுகெலும்பும் வலிமை பெறும் தொடை பகுதியும் வலிமை பெறும்.
 
நன்றி : பத்திரிக்கை செய்தி...