இந்தியாவில் 1652 க்கும் மேற்பட்ட மொழிகள் பேச்சு வழக்கில் உள்ளன .....
ஆனால் இந்தியாவின் அலுவல் மொழி இந்திதான்....இந்தியுடன் சேர்த்து அங்கீகரிக்கப்பட்ட அலுவல் மொழிகள் 22..இதில் தமிழ் மொழியும் ஒன்று ...
ஆனால் இதில் இந்திதான் பெரும்பாலான இடங்களில் அலுவல் மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது....உடன்பாடு இருந்தாலும் இல்லை என்றாலும் இதை ஏற்றுதான் ஆக வேண்டும்....
ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அலுவல் மொழியை அந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனும் நிச்சயம் பேசுவான்....அறிந்து இருப்பான்...
நான் வேலை பார்க்கும் மலேசியாவின் அலுவல் மொழி மலாய் மொழி....மலேசியாவில் சீனர்கள், இந்தோனோசியர்கள் என பல தரப்பட்ட மக்கள் வாழ்ந்தாலும் அனைவரும் மலாய் மொழி பேசுபவர்களாகத்தான் இருப்பார்கள்....
நேற்று வேலை முடிந்து ஒரு டேக்ஸியில் வீடு திரும்பி கொண்டு இருந்தேன்...டிரைவர் ஒரு மலாய்காரர்...நான் இந்தியன் என்றவுடன் என்னுடன் சரளமாக பேசி கொண்டு வந்தவர் உங்களுக்கு இந்தி தெரியும்தானே என்றார்....நான் தெரியாது என்றேன்....இந்தியாவின் மொழி இந்திதானே..அப்புறம் எப்படி தெரியாது என்கிறீர்கள் ? என்றார்....
நான் தமிழ்நாட்டுக்காரன் அதனால் என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா என கேட்டார் ?நான் முழிக்க ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை பார்க்க வந்த நாட்டின் மொழியான மலாய் மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின் மொழியான இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை மவுனத்தையே அவருக்கு பதிலாக கொடுத்தேன் ...
நாம் இனத்தால் தமிழன் ஆனாலும் ஒரு குடிமகனாக மற்ற நாட்டினரால் அடையாளப்படுத்தப்படுவது இந்தியனாகத்தான் ...... அப்படி இருக்க இந்தியாவின் தேசிய மொழியான இந்தியை தமிழர்களான நம்மில் எவ்வளவு பேருக்கு சரளமாக எழுத படிக்க பேச தெரியும்?
ஒரு இந்திய குடிமகனாக வெட்கப்பட்டு கொள்ளக்கூடிய விசயம் அல்லவா ?
ஆரம்ப பள்ளிகளில் இந்தியை கற்று தராமல் போனதற்கு நம் சுயநல அரசியல்வாதிகள்தானே காரணம்?தமிழ் ,தமிழ்நாடு என சொல்லி ஒட்டு பிச்சைக்காக அரசியல் நடத்திய அயோக்கிய அரசியல்வாதிகள்தானே இதற்கு காரணம்...?
இந்தி திணிப்பை எதிர்த்து நடந்த போராட்டத்தை நான் குறை கூறவில்லை ....ஆனால் ஒரு மொழியாக ஆங்கிலத்தை நமக்கு பள்ளிகளில் கற்று தந்ததை போல இந்தியை ஏன் கற்று தரவில்லை?இந்தி திணிப்பை எதிர்த்து இருக்கலாம்...இந்தி தெரிந்து கொள்வதையுமா எதிர்ப்பது?
உலகின் பன்மையான மொழியான தமிழை பேசுவதால் பெருமை அடையும் அதே வேளையில் நம் நாட்டின் தேசிய மொழியான இந்தியை தெரியாததால் நிச்சயம் கவலையும் அடைய வேண்டும்....
தமிழ் தெரியாதவன் எப்படி தமிழன் ஆக முடியாதோ அது போல இந்தி தெரியாதவன் இந்தியனாக இருக்க முடியுமா?பதில்தான் தெரியவில்லை....
| Tweet |


