29 நவம்பர் 2010

நெட் பைத்தியமா ? சிகிச்சை தேவை .......

க‌‌ணி‌னி மு‌ன் அம‌ர்‌ந்து உலக‌த்தையே மற‌ந்து‌வி‌ட்டவ‌ர்க‌ள் அ‌திக‌ரி‌த்து வரு‌ம் கால‌ம் இது.
நாமும் நெட் இல்லாமல் வாழ முடியாது என்ற நிலைமைக்கு வந்துவிட்டோம்.....ஆனால் வலைதளத்தை உபயோகிக்கும் நாம் அதற்க்கு அடிமையா இல்லையா என எனக்கு சரியாக சொல்ல தெரியவில்லை......
அதேநேரத்தில் வலைதளத்தை தவிர ஆர்குட், பேஸ்புக் போன்ற சமுக இணையதளங்கள் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட அதற்கு அடிமை போலவே தெரிகிறார்கள்.....

இ‌ந்த நெ‌‌ட் பை‌த்‌திய‌ங்களா‌ல் பண‌ம் ச‌ம்பா‌தி‌ப்பது நெ‌ட் செ‌‌ன்ட‌ர்க‌ள் ம‌ட்டும‌ல்ல‌, நெ‌ட் பை‌த்‌திய‌ங்களு‌க்கு ‌சி‌கி‌ச்சை அ‌ளி‌‌க்‌கிறோ‌ம் எ‌ன்று அமெ‌ரி‌க்கா‌வி‌ல் ஒரு மைய‌ம் ஆர‌ம்‌பி‌த்து‌வி‌ட்டது ‌வியாபார‌த்தை.

இணைய‌ம் ப‌ற்‌றி வகு‌ப்பு எடு‌த்து ச‌ம்பா‌தி‌த்தவ‌ர்களு‌க்கு இப‌்போது வேலை இ‌ல்லை. அ‌ந்த ‌நிலை மா‌றி அதில் அடிமையாகிக் கிடப்போரை மீட்பதற்கான சிகிச்சை மையம் ஏற்படுத்தும் நிலை வந்து விட்டது. அமெரிக்காவில் முதலாவது மையம் இப்போது பணியை தொடங்கியுள்ளது.

எப்போதும் இணைய‌த்‌தி‌ல் எதையாவது செ‌ய்து கொ‌ண்டு க‌ணி‌னி முன் ‌சிலையாக‌க் கிடப்பவர்களுக்கு இன்டர்நெட் அடி‌க்ச‌ன் சின்ட்ரோம் (ஐஏடி) என்ற மனநோய் ஏற்படுகிறதாம்.

இதுபோன்றவ‌‌ர்களு‌க்கு மனநோய் பாதிப்பில் இருந்து மீட்பதற்கென அமெரிக்காவின் ஹெவன்ஸ்பீல்டு மறுவாழ்வு அமைப்பு, முதல்முறையாக ஒரு ஐஏடி மீட்பு மையத்தைத் தொடங்கியுள்ளது. இ‌ந்த ‌சி‌கி‌ச்சை‌க்கு பெ‌ய‌ர் எ‌ன்ன‌த் தெ‌ரியுமா? ‌ரீ-‌ஸ்டா‌ர்‌ட் எ‌ன்பதுதா‌ன். க‌ணி‌னியா‌ல் ஹே‌ங்‌க் ஆ‌‌கி‌ப் போனவ‌ர்களு‌க்கு ரீ-ஸ்டார்ட் எ‌ன்ற இ‌ந்த ‌சி‌கி‌ச்சை 45 நாட்கள் அளிக்கப்படும்.

இதுபற்றி ரீ-ஸ்டார்ட் இணை நிறுவனர், மனவியல் நிபுணர் மரு‌த்துவ‌ர் லாரி கேஷ் கூறுகையில், இணைய‌ம் துவ‌ங்‌கிய‌ப் ‌பிறகு ப‌ல்வேறு ‌பிர‌ச்‌சினைகளு‌ம் துவ‌ங்‌கி‌வி‌ட்டன. சமூக மா‌ற்ற‌ங்களு‌ம் ஏ‌ற்ப‌ட்டுவ‌ி‌ட்டன. இ‌தி‌ல் இணைய‌த்தை ஒரு வரைமுறை‌யி‌ல் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்க‌ள் ம‌ட்டுமே த‌ப்‌பி‌க்‌கி‌ன்றன‌ர். அ‌ப்படி த‌ப்‌பி‌க்க முடியாதவ‌ர்களு‌க்கு இ‌ங்கு ‌‌சி‌கி‌ச்சை அ‌ளி‌க்க‌ப்படு‌ம் எ‌ன்றா‌ர்.இ‌ந்த மைய‌த்‌தி‌ல் ஒரே நேரத்தில் 2 முதல் 6 பேர் வரை சிகிச்சை மற்றும் மறுவாழ்வு பெறலாம். அங்கு சேர்பவர்களை இன்டர்நெட், ‌வீடியோ/க‌ணி‌னி ‌விளையா‌ட்டுக‌ளி‌ல் இருந்து 45 நாளும் பிரித்து வைப்பதுதான் முதல் வேலையாம். பிறகு, உடற்பயிற்சி, பாராயணம், யோகா, பிரசங்கம், மசாஜ், நடை‌ப் ப‌யி‌ற்‌சி, கல‌ந்தா‌‌ய்வு என பல க‌ட்ட ‌சி‌கி‌ச்சைக‌ள் உண்டு. இத‌ற்கென உ‌ள்ள சிகிச்சை நிபுணர்கள், பா‌தி‌க்க‌ப்ப‌ட்டவ‌ர்களை‌த் த‌னி‌த்த‌னியாக கவ‌னி‌க்‌கிறா‌ர்க‌ள்.

ஆனா‌ல் நெ‌ட் பை‌த்‌திய‌ம் ‌பிடி‌த்தவ‌ர்களு‌க்கு முழு‌ப் பை‌த்‌திய‌ம் ஆ‌கி‌விடு‌ம், இத‌ற்கான க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்டா‌ல். ஆ‌ம்.. ஒ‌ன்றரை மாத‌த்‌தி‌ற்கு அதாவது 45 நா‌‌ட்களு‌க்கு ரூ.6.75 ல‌ட்சமா‌ம்.

அ‌ம்மாடியோ‌வ்...

இ‌ந்த க‌ட்டண‌த்தை‌க் கே‌ட்ட ‌பிறகு தலை லேசாக சு‌ற்று‌ம். எனவே நாமாகவே நெ‌‌ட்டி‌ல் இரு‌ந்து ‌ஓரள‌வி‌ற்கு ‌வில‌கி‌க் கொ‌ள்ளலா‌ம் அ‌ல்லவா? அதற்காக என் வலைதளத்தை பார்ப்பதை குறைத்துவிடதீர்கள்......

28 நவம்பர் 2010

அடிமேல் அடிவாங்கும் விஜய்......

புகழின் உச்சத்தில் இருந்த விஜய்க்கு இப்போது தொடர்ந்து ராகு காலம்தான்......
தொடர்ச்சியாக தோல்வி படங்களை கொடுத்த விஜய் அடுத்து சித்திக் இயக்கத்தில் காவலன் படத்தில் நடித்து முடித்தார்......அந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்தும் இருந்தார்........


ஆனால் பட்ட காலிலே படும் என்பது போல விஜய் நடிக்கும் படத்துக்கு ஒத்துழைப்பு குடுக்க மாட்டோம் என தியேட்டர் அதிபர்கள் அறிவித்துள்ளனர்.......

சுறா படத்தில் ஏற்பட்ட நஷ்டத்திற்கு நஷ்ட ஈடு கொடுத்தால்தான் விஜயின் படத்துக்கு ஒத்துழைப்பு குடுப்போம் எனவும் கூறியுள்ளனர்......இதனால் விஜய்யின் படத்துக்கு தியேட்டர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.....


பாவம் நம்ம டாக்டர் விஜய்..... யானை கீழே படுத்தால் பூனைக்கு கூட கொண்டாட்டம் என்பது போல இருக்கிறது அவர் கதை......முதலில் கோர்ட்டு அவர் நடித்த காவலன் படத்துக்கு இடைக்கால தடை விதித்தது......இப்போது இந்த சோதனை வேறு......இது இருக்கட்டும்.....


நான் கேட்கிறேன்.....நஷ்டம் வந்தால் படத்தில் நடித்த நடிகரிடம் நஷ்ட ஈடு கேட்க வேண்டுமா? இல்லை படத்தின் தயாரிப்பாளரிடம் கேட்க வேண்டுமா?

நஷ்டம் வந்தால் நஷ்ட ஈடு கேட்கும் தியேட்டர் அதிபர்கள் லாபம் வந்தால் அதை அப்படத்தின் ஹீரோவிடம் குடுப்பர்களா?

26 நவம்பர் 2010

ஸ்டாலின் கின்னஸ் சாதனை......


ஸ்டாலின் அவர்கள் நூறு மணி நேரம் நின்று கொண்டே மகளிர் சுய உதவி குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியதாக அவரே பெருமையுடன் கூறியுள்ளார்.....


தொடர்ச்சியாக நூறு மணி நேரம் நின்று கொண்டு உதவிகள் வழங்கவில்லை......அது யாராலும் முடியாது.....அவர் கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்ததைத்தான் இவ்ளோ பெருமையாக கூறுகிறார்......அட கொடுமையே .....மக்களுக்கு உதவத்தானே மந்திரி பதவி.....


நான்கரை ஆண்டுகளில் நூறு மணி நேரம் நின்று கொண்டே உதவிகள் வழங்குவது ஒரு பெரிய விசயமா? கணக்கு பண்ணினால் ஒரு நாளுக்கு பதினைந்து நிமிடங்களாவது வருமா? இதுக்கு எல்லாமா பெருமை பட வேண்டியது?


நீங்க நின்று கொண்டே உதவிகள் வழங்கியது உங்க அப்பா வீட்டு சொத்தா நீங்க பெருமைப்பட?அது எல்லாம் மக்களின் வரிப்பணம் தானே......


மக்களின் வரிபணத்தை எடுத்து உதவிகள் வழங்கியது ஒரு சாதனையா?


இது எல்லாம் செய்வதற்கு தானே அரசு?இனி நின்று கொண்டே உதவிகள் வழங்குவது உங்களுக்கு கஷ்டமாக இருந்தால் உட்கார்ந்து கொண்டே வழங்குங்கள்.....


நம்ம ஸ்டாலின் நூறு மணி நேரம் நின்று கொண்டே நல திட்ட உதவிகள் வழங்கியது கின்னஸ் சாதனை என்கிறேன் நான் .....நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

25 நவம்பர் 2010

உண்மையை சொல்வாரா மிஸ்கீன்...?

மிஸ்கீன் ஒரு சிறந்த படைப்பாளி என்பதில் ஐயம் இல்லை......ஆனால் மிஸ்கீன் என்றால் சர்ச்சை என்று சொன்னாலும் அதையும் மறுப்பதற்கு இல்லை......முதலில் இளையராஜாவுடன் பிரச்சினை, சமிபத்தில் உதவி இயக்குனர்களை பற்றி தவறாக பேசியது என சர்ச்சை நாயகனாகவே உள்ளார்.....
அவரது நந்தலாலா வேறு படத்தின் தழுவல் படித்தேன்.......அதை பகிர்ந்துகொள்கிறேன்......

மிஷ்கினின் நந்தலாலா திரைப்படத்தைப் பார்த்த கமல்ஹாசன் தனது வழக்கத்தை மீறி அது பற்றி பல‌ரிடமும் பாராட்டிப் பேசியுள்ளார்.... நந்தலாலா போன்ற திரைப்படங்களுக்கு உங்களைப் போன்றவர்கள் ஆதரவு தர வேண்டும் என்று சன்பிக்சர்ஸ் தலைமை செயல் அதிகா‌ரியிடம் நேரடியாக கூறவும் செய்தார்.

நந்தலாலா திரைப்படத்தை இந்தியாவின் மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்றாக தமிழ் எழுத்தாளர்கள் சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன், பவா செல்லத்துரை போன்றவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இவ்வளவும் ஏன், ப்‌ரிவியூ பார்த்த பத்தி‌ரிகையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி படத்தை வரவேற்றுள்ளனர்.

ஆனால்...

இத்தனைக்குப் பிறகும் மிஷ்கின் உண்மை பேசுவதாக இல்லை என்பதுதான் வருத்தமான விஷயம்.

நந்தலாலா படம் ஐப்பானிய இயக்குனர் டகேஷி கிட்டானோ 1999ல் இயக்கிய கிகு‌ஜிரோ படத்தின் அப்பட்டமான தழுவல். கிகு‌ஜிரோவின் ஆன்மாவை சிதைக்காமல் தமிழ் சினிமாவுக்கும், தமிழ் கலாச்சாரத்துக்கும் ஏற்ப அற்புதமாக படமாக்கியிருக்கிறார் மிஷ்கின். மற்றொருவ‌ரின் படத்தை அதன் ஆன்மா கெடாமல் எடுப்பது மிகப்பெ‌ரிய கலை. உலகின் புகழ்பெற்ற இயக்குனர்கள் பலரும் இதனை செய்திருக்கிறார்கள்.ஷேக்‌ஸ்பிய‌ரின் நாடகத்தை அகிரோ குரோசவா, கொடார்ட் போன்ற மேதைகள் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். அப்படி படமாக்கப்பட்ட ரான், த்ரோன் ஆஃப் பிளட் போன்றவை இன்றும் உலக ரசிகர்களால் காவியமாகக் கொண்டாடப்படுகிறது. குரோசவா ப்‌ரியரான மிஷ்கினுக்கு தெ‌ரியாததல்ல.

இந்தியாவிலும்கூட கப்போலோவின் காட்ஃபாதர் திரைப்படத்தைதான் ராம்கோபால் வர்மா சர்க்கார் என்ற பெய‌ரில் திரைப்படமாக்கினார். ஷேக்ஸ்பிய‌ரின் மெக்பத் நாடகம்தான் விஷால் பரத்வா‌ஜ் இயக்கிய மெக்பூல். அவரது ஓம்காராவும் ஷேக்ஸ்பிய‌ரின் நாடகத்தின் தழுவலே. இன்று இந்தியா கொண்டாடும் அனுராக் காஷ்யபின்; தேவ் டி படம் கூட பழைய தேவதாஸின் மாடர்ன் வடிவமே.

இந்தப் படைப்பாளிகளின் படைப்புக்கும் நந்தலாலாவுக்கும் உள்ள ஒரேயொரு வித்தியாசம், அந்தப் படைப்பாளிகள் அவை எந்த நாடகத்தின் பாதிப்பில் எந்த திரைப்படத்தின் பாதிப்பில் எடுக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவித்தார்கள். அப்படி அறிவித்த பிறகே படப்படிப்புக்கு கிளம்பினார்கள்.

ஆனால் நந்தலாலாவின் படைப்பாளி அதனை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்பதுடன் அதனை மறைப்பதற்கான அத்தனை இருட்டுப் பொந்துகளையும் படம் வெளியாகும் நிலையிலும்கூட துழாவி வருகிறார். மிஷ்கினிடமே நேரடியாக இதுகுறித்து கேட்ட போதும், உண்மையை ஒத்துக் கொள்ள அவர் மனம் ஒப்பவில்லை. ஒரு சிறந்த கலைஞனிடம் இருக்க வேண்டிய வெளிப்படையான நேர்மை மிஷ்கினிடம் இல்லாது போனது நமது துரதிர்ஷ்டமே.

சாரு நிவேதிதா தனது நண்பரான மிஷ்கினைப் பற்றி செய்தி ஒன்றை எழுதியிருந்தார். மிஷ்கினை ஒரு உதவி இயக்குனர் சந்தித்த போது சாருவும் உடனிருந்திருக்கிறார். உதவி இயக்குனர் மிஷ்கினிடம், ஒரு நல்ல படத்தை உருவாக்க என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுள்ளார். அதற்கு மிஷ்கின், நல்லவனாக இருக்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.

மிஷ்கின் அவர்களே... நேர்மை இல்லாத ஒரு மனிதன் எப்படி நல்ல மனிதனாக இருக்க முடியும்?

24 நவம்பர் 2010

ஒரு வேட்பாளருக்கு ஒரு தொகுதிதான்.....விஜயகாந்த்...


விஜயகாந்த் நடித்த தென்னவன் படம் பார்த்தேன்.....முழுதாக பார்க்கவில்லை.....கொஞ்சம்தான் பார்த்தேன்.....அந்த படம் நன்றாக ஓடவில்லை.....அதில் தேர்தல் கமிசன் அதிகாரியாக நம்ம கேப்டன் டாக்டர் விஜயகாந்த் நடித்து இருப்பார்.....அதில் அவர் அரசியல் கட்சிகளுக்கு விதிக்கும் கட்டுபாடுகள் நன்றாக இருந்தன......முதலாவதாக ஒரு வேட்பாளர் ஒரு தொகுதியில்தான் போட்டியிட வேண்டும் ...இரண்டு தொகுதிகளில் போட்டியிட முடியாது.....இடைத்தேர்தல்கள் நடந்தால் முதல் அமைச்சர், அமைச்சர் ,போன்ற பதவியில் இருக்கும் நபர்கள் பிரசாரத்துக்கு போக கூடாது......இது அப்படத்தில் விஜயகாந்த் சொன்னது.....நல்ல விசயம்தான்....கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது....ஆனால் நடைமுறையில் அரசியல்வாதிகள் இதை செயல் படுத்த விரும்ப மாட்டார்கள்.....இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு இரண்டிலும் வெற்றி பெரும் வேட்பாளர் ஒரு தொகுதியில் வெற்றி பெற்றதை ராஜினாமா செய்ய வேண்டும்..மீண்டும் அத்தொகுதியில் தேர்தல் நடக்கும்..மக்கள் வரிப்பணம் மீண்டும் செலவாகும்....இதனால் அரசுக்கு எவ்வளது இழப்பு..?????இடைதேர்தல்களில் நடக்கும் கூத்தைத்தான் நாம் இப்போது நெறைய பார்க்கிறோமே.........முதல் அமைச்சர் முதற்கொண்டு அணைத்து அமைச்சர்களும் அங்கு பிரசாரத்துக்கு செல்கின்றனர்.....இது தேவையா????முதல் அமைச்சராக பொறுப்பில் இருப்பவர் அம்மாநில மக்கள் அனைவருக்கும் பொதுவானவர்....அவர் எப்படி ஒருவருக்கு ஆதரவாக ஒட்டு கேட்க முடியும்? அது எவ்வளவு முரண்பாடு போன்ற கேள்விகள் என் மனதில் எழுகின்றன.....ஆனால் இதெல்லாம் அரசியல்வாதிகளுக்கு ஒரு பொருட்டே அல்ல.....


23 நவம்பர் 2010

உன்னத கலைஞன் எம்ஆர் ராதா...

எம்ஆர் ராதாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.....அவரை நமக்கு ஒரு நடிகராகத்தான் அதிகம் தெரியும்......அவரின் மற்ற பண்புகளைப்பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம்......

மயிலாடுதுறை தில்லையாடி வள்ளியம்மையை காண வந்த காந்தியடிகள் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார். எங்கும் மக்கள் வெள்ளம். அந்நிய துணிகளை விலக்க வேண்டும் என்று தனது பேச்சில் வலியுறுத்துகிறார் காந்தி. கேட்டுக் கொண்டிருக்கும் ஜனம் உணர்ச்சிவசப்படுகிறது.

ஆனால், ஒரேயொருவர் மட்டும் அங்கேயே, அப்போதே தான் போட்டிருந்த அந்நிய துணிகளை கழற்றி எறிகிறார். நல்லவேளை, உள்ளாடை உள்ளூர் தயாரிப்பு. இல்லையென்றாலும் அவர் கவலைப்பட்டிருக்க மாட்டார். சுற்றி நின்றிருந்தவர்கள் நிலைதான் தர்ம சங்கடமாகியிருக்கும்.

அவர்தான் ராதா.....
கொள்கைக்காக எதையும் செய்பவர்......
யாருக்கும் அடிபணியாதவர்.....
தனக்கு எது சரி என படுதோ அதை உடனே செய்பவர்.....
இவரின் ரத்தக்கண்ணீர் படம் தமிழ் சினிமாவின் மைல் கல்.....


நியாயம் என்று தோன்றியதை எந்த சூழலிலும் செய்யத் துணிந்தவர் நடிகவேள் எம்.ஆர். ராதா. மேலே உள்ளது சின்ன உதாரணம். ராதாவை எப்படி வகைப்படுத்தலாம்? நாடக நடிகர்... சினிமா நடிகர்... மெக்கானிக்... எலெக்ட்ரீஷியன்... பெரியாரிஸ்ட்... கலகக்காரர்...

நாடக நடிகர் என்றால் ராதா மகிழ்ச்சியடைவார். நடிப்புன்னா ரீ-டேக் இல்லாமல் மூணு மணி நேரம் நாடகத்தில் நடிக்கிறதுதான் என்பது ராதாவின் வாதம். சினிமா? அது ரிட்டையர்ட்மெண்ட். மெக்கானிக்கும், எலெக்ட்ரீஷியனும் வாழ்க்கை ப்ளோவில் அவர் கற்றுக்கொண்டவை. கல்யாணத்திற்கும் இது உதவியது.

அந்தக் காலத்தில் நாடக நடிகர்களுக்கு யார் பெண் தருவது. மெக்கானிக் என்று தனது பார்ட் டைம் வேலையை சொல்லி முதல் மனைவி சரசுவதியை திருமணம் செய்தார் ராதா. சிறிது காலத்துக்குப் பின் சரசுவதியின் தங்கை தனலட்சுமியையும் மணந்து கொண்டார்.

இறுதி மூச்சுவரை ராதா பின்பற்றியது பெரியார். இந்தியாவின் சிறந்த தலைவர் யார் என்று கேட்டால் பெரியார் என்றே சொல்வார் ராதா. அதே நேரம் தி.க. உட்பட எதிலும் உறுப்பினர் அல்ல ராதா. இறுதி வரை சுதந்திர பறவையாக வாழ்ந்தவர் அவர்.

ராதாகிருஷ்ணன் என்ற இயற்பெயர் கொண்ட எம்.ஆர். ராதா பிறந்தது சென்னையிலுள்ள சூளை. வருடம் 1907. தந்தை ராஜகோபால் நாயுடு முதலாம் உலகப் போரில் ரஷ்ய எல்லை பஸ்ஸோவியாவில் மரணமடைகிறார். தாய் ராசம்மமாள். உடன் பிறந்தவர்கள் அண்ணன் ஜானகிராமன், தம்பி பாப்பா.

ராதா கலகக்காரரா என்றால் இல்லை. வாழ்வதற்காக கூழை கும்பிடு, குறுக்கு வழி என்றிருப்பவர்கள் மத்தியில், தன்மானத்தை இழக்காத ராதாவின் சுயமரியாதை வாழ்க்கை மற்றவர்களுக்கு கலகமாக தோன்றியதில் வியப்பில்லை.

22 நவம்பர் 2010

வாழ்க்கை இவ்ளோ இன்பமா???????

நாம் வாழும் வாழ்க்கை எவ்வளவு சந்தோசமானது......எவ்வளவு துன்பங்கள் இருந்தாலும் சில இன்பங்கள் போதும் நாம் நீண்ட நாள் வாழ ஆசைப்படுவதற்கு.......

மருத்துவமனை பல பேருக்கு துன்பத்தையும் பல பேருக்கு இன்பத்தையும் ஒரே நேரத்தில் தரக்கூடியது.....இதில் துன்பங்கள் பலவித நோய்களினால் அவதிப்படும் நோயாளிகளுக்கும், அவர்களின் உறவினர்களுக்கும் ஏற்படக்கூடியது...


ஆனால் இன்பம்????.....


உறவினர்கள் படைசூழ நாம் ஒரு இக்கட்டான நிலைமையில் ஆபரேஷன் தியேட்டரில் பதட்டத்துடனும், அதே சமயம் ஆவலுடனும் நிற்போம்.....


மயக்க டாக்டர் உள்ளே போகிறார்.....அறுவை சிகிச்சை செய்யும் டாக்டர் உள்ளே போகிறார்....


அந்த நேரத்தில் நாம் அனைவரும் பிரார்த்தனையில் இருப்போம்......


சிறுது நேரத்தில் நர்சு வெளியே வருவார்......நாம் அனைவரும் அவரிடத்தில் ஒரே விதமான கேள்வியை கேட்போம்...அவர் பதில் கூறியவுடன் அங்கு நிற்கும் அனைவரும் அடையும் சந்தோசத்துக்கு அளவே இல்லை.....


அனைவரும் கேட்ட கேள்விக்கு நர்சு சொன்ன பதில் இதுதான்.....


குழந்தை நல்லபடியாக பிறந்துவிட்டது............


இதை நாம் அனைவரும் வாழ்கையில் அனுபவித்து இருப்போம்.....அனுபவிக்காதவர்கள் இனி அனுபவிக்க போகிறார்கள்......


ஆம் அந்த அளவில்லா ஆனந்தத்தை நானும் அனுபவித்தேன்......நான்கு நாட்களுக்கு முன்பு எனக்கு ( தப்பு தப்பு ,என் மனைவிக்கு ) குழந்தை பிறத்தது.....


வாழ்கையில் அடுத்த கட்ட நகர்வை நான் இப்போது சந்தித்து உள்ளேன்......


இந்த உலகத்தில் குழந்தை செல்வம்தான் ஈடற்ற ,மாசற்ற சந்தோசம்......

17 நவம்பர் 2010

மதுரை குலுங்க குலுங்க......


நாளை மதுரை குலுங்க போகிறது......நில நடுக்கத்தால் அல்ல.......

கள்ளர் ஆற்றில் இறங்கும் திருவிழாவும் அல்ல.......

அரசியல் கட்சிகளின் கூட்டமும் அல்ல......

வேற எதனால......??????மதுரைய மீட்ட !! மதுரைய காத்த !!!! அழகிரியின் மகனாகிய....நாளைய தமிழகம்!!!!

வருங்கால முதல்வர்!!!!!

துரை தயாநிதியின் திருமணத்தால்தான்.......

ஹிஹிஹி....எப்புடி நம்ம பில்ட்அப்.....ஆனால் நாம் நினைப்பது போல மதுரை முழுக்க போர்டு, கட் அவுட், மற்றும் எந்த விளம்பரமும் அதிகம் இல்லை......மதுரை திமுக சார்பில் மட்டும் போர்டுகள் வைக்க பட்டுள்ளன............வேற எந்த ஆடம்பரமும் இல்லை......திருமணத்தில் கலந்து கொள்ள கருணாநிதி மதுரை வந்துவிட்டார்....நாளை எல்லா அமைச்சர்களும் ஆஜர் ஆகிவிடுவார்கள்......ஆனால் சோனியாவோ ,பிரதமரோ வருவது உறுதி செய்யப்படவில்லை..........மத்திய மந்திரிகள் குறிப்பிட்ட பேர் வருவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது........ஆடம்பரம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம் ,ஜெயலலிதாவால் எழும் கடும் விமர்சனத்தை தவிர்க்கத்தான்......ஏனென்றால் அவரது வளர்ப்பு மகன் திருமணத்தை திமுக கடுமையாக விமர்சித்தது.....பொதுமக்களும் கடுமையாக அதிருப்தி அடைந்தனர்......அதை மனதில் வைத்துதான் அழகிரியின் அதிரடி அடக்கிவாசிக்கப்படுகிறது......
ஆனாலும் அவரின் ஆதரவாளர்களும், மாநில மந்திரிகளும் கூடுவதால் மதுரை குலுங்க போகிறது என்பதில் மாற்றமில்லை.......

16 நவம்பர் 2010

மூன்று முட்டாள்களில் விஜய்யும் ஒருவர்...ஷங்கர்..


டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் 3இடியட்ஸின் தமிழ், மற்றும் இந்தி ‌ரிமேக்கை தொடங்குகிறார் ஷங்கர். படப்பிடிப்பு எந்த இடத்தில் நடைபெற இருக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை....
முதன்முதலாக ஒரு ரீமேக் படத்தை ஷங்கர் இயக்குவதால் அவரின் தனிப்பட்ட முத்திரை இப்படத்தில் இருக்குமா என தெரியவில்லை......

3இடியட்ஸின் தமிழ் ‌ரிமேக்கில் விஜய், ஆர்யா, ‌‌ஜிவா நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு அமீர் நடித்த வேடத்தில் நடிக்கிறார். மற்ற இரு வேடங்களில் தமிழில் நடிக்கும் ஆர்யா, ‌‌ஜிவாவை பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் மூன்று முட்டாள்கள் ( தமிழில் இதுதானே கரெக்ட் அப்பதானே வரிவிலக்கு கிடைக்கும்) வேடத்திலும் விஜய் நடிக்கலாம்.....என்பது என் கருத்து ...என்னங்க முட்டாள் வேடத்துக்கு விஜய் சரியான சாய்ஸ் தானே......ஹி ஹிஹி......

தனது மற்ற படங்களைவிட இதில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளார் ஷங்கர்.

விஜய்யை தவிர்த்து மற்ற அனைவரையும் தமிழ், தெலுங்கு இரு பதிப்பிலும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதில் ஹீரோயின் இலியானாவும் அடக்கம். ஆர்யா, ‌‌‌‌‌‌ஜீவா, தமிழ் காமெடி நடிகர்கள் என தெலுங்கிலும் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் அதிகம்......

பார்ப்போம் மூன்று முட்டாள்கள் எப்படி இருக்க போகிறார்கள் என்று.......

15 நவம்பர் 2010

ஜெட்டின் ஜெட் வேக அதிபரானார் கலாநிதிமாறன்.....


குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட்டின் பெரும்பான்மை பங்குகளை வாங்கியுள்ள சன் தொலைக்காட்சி நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அதன் தலைவராகவும், மேம்பாட்டு இயக்குனராகவும் ஆகியுள்ளார்.
இதுவரை நேரடியாக தன்னை இந்நிறுவனத்தில் முன்னிறுத்தாத கலாநிதி தற்போது இதன் தலைவர் ஆகி இந்நிறுவனத்தை முழுமையாக கைப்பற்றியுள்ளார்......


ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மும்பை பங்குச் சந்தைக்கு அனுப்புள்ள அறிக்கையில் இந்த விவரத்தை தெரியப்படுத்தியுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள கலாநிதி மாறன், உடனடியாக அதன் நிர்வாக அமைப்பிற்கு புதிதாக ஐந்து இயக்குனர்களை நியமித்துள்ளார்.

எஸ. ஸ்ரீதரன், ஜே.இரவீந்திரன், நிக்கலாஸ் மார்ட்டின் பால், எம்.கே.ஹரிநாராயணன் ஆகியோர் இயக்குனர்களாகவும், தனது மனைவி காவேரியை முடிவெடுக்கும் அதிகாரமற்ற இயக்குனராகவும் நியமித்துள்ளார்.

பணம் உள்ள இடத்தில்தான் பணம் சேரும்......இனி இந்த ஜெட்டின் வியாபார சேவை ஜெட்டின் வேகத்தை காட்டிலும் வேகமாக செல்லும் ......

அவமானப்பட்ட ராஜாவும், திமுகவும்


கடைசியாக ராஜா ராஜினாமா செய்தார்.......இல்லை செய்ய வைக்க பட்டார்......இத முன்னாடியே செஞ்சு தொலைச்சு இருக்கலாமே? ராஜினாமா பண்ணிவிட்டு நாடாளுமன்றம் சுமுகமாக நடக்கவே ராஜினாமா செய்தோம் என கூறுவது கீழ விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று சொல்லுவதைப்போல இருக்கிறது......


இவ்ளோ காயங்கள் தேவையா? இரண்டு நாளுக்கு முன்பு கூட ராஜா ராஜினாமா பண்ண தேவை இல்லை என கருணாநிதி அறிக்கை விட்டார்......இப்போது என்ன ஆச்சு? ராஜாவுக்கு மட்டுமல்ல கருணாநிதிக்கும், திமுகவுக்கும் சேர்ந்தே மூக்கு உடைந்து போனது.......


இந்த விசயத்தில் திமுக காங்கிரஸ் கட்சியின் மிரட்டலுக்கோ இல்லை கட்டாயத்துக்கோ அடிபணிந்து போனது என்பதுதான் உண்மை......இது ஜெயலலிதாவுக்கு ஒரு வகையில் வெற்றியும் கூட.....மூன்று நாட்களுக்கு முன்பு ராஜாவை பதவியை விட்டு தூக்கினால் அதிமுக காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு

அளிக்க தயார் என பேட்டி குடுத்தார்.....இப்போது அவர் நான் சொல்லியதால்தான் ராஜா கட்டாயப்படுத்தி ராஜினமா செய்ய வைக்க பட்டார் என அடுத்த அறிக்கை விட்டாலும் விடுவார்........


இதெல்லாம் தேவையா? அடித்த காசு வரை லாபம் என ராஜினாமா பண்ணி தொலைச்சு இருக்கலாமோ என இப்பொது ராஜா எண்ணுவார்....பாவம் உடைந்த மூக்கு இனி என்ன ஒட்டவா போகிறது......


இது திமுக ,காங்கிரஸ் கட்சி கூட்டணியின் அஸ்திவாரத்தை ஆட்டி பார்க்கும் சம்பவம் என்பது மட்டும் உண்மை.....

13 நவம்பர் 2010

ஸ்பெக்ட்ரம்...நடப்பது என்ன?


ஸ்பெக்ட்ரம் ....இந்த வார்த்தையினால் இன்று தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலும் ரணகள பட்டுக்கொண்டிறிக்கிறது ... ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது......இதில் தொடர்புடைய மத்தியமந்திரி ராஜா பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தி கொண்டிருக்கின்றன...


ராஜாவை பதவியை விட்டு நீக்கினால் அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்று ஜெயலலிதா காங்கிரஸ் கட்சிக்கு வலியப்போய் ஆதரவு குடுத்து வாங்கி கட்டி கொண்டார்.....


கருணாநிதியோ இதில் ராஜா குற்றவாளி இல்லை என்றும் ,பதவி விலக தேவை இல்லை என்றும் ,இதற்க்கு முன் இத்துறைக்கு மத்திய அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், அருண் சோரிஆகியோர் டெண்டர் விடாமல் பின்பற்றிய நிலையே தற்போது ராஜா பின்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்....


ஏங்க உங்களுக்கு முன்னாடி உள்ளவங்க டெண்டர் விடாமல் முறைகேடு பண்ணினால் நீங்களும் அதை தொடர்ந்து பண்ணனுமா? இந்த முறைகேட்டினால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என தெரிந்தும் அந்த முறையை ராஜா பின்பற்றியது தவறா இல்லையா கலைஞர் அய்யா? உங்களுக்கு என்ன ராஜா அடித்த காசில் உங்களுக்கும், உங்க குடும்பத்திற்கும் பங்கு வந்தாச்சு .....அரசுக்கு வர வேண்டிய வருவாய் எப்படி போனால் உங்களுக்கு என்ன?...

நீங்கள் உண்மைலேயே தவறு செய்ய வில்லை என்றால் நீதிமன்றமே ராஜா மீது பாய்வதன் காரணம் என்ன? இதற்க்கு பிறகும் பதவியில் நீடிக்கலாமா? தவறு செய்யவில்லை எனில் பதவியை விட்டு விலகி நாங்கள் சுத்தமானவர்கள் ,எங்கள் மீது அபாண்ட குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.....அதனால் இந்த பதவி எங்களுக்கு வேண்டாம் என தூக்கி வீச தயாரா?


12 நவம்பர் 2010

விஜய்க்கு ஆஸ்கார் வேணுமாம்: கவுண்டமணி....


கவுண்டமணி: வாப்பா கிண்ணி கோழி மண்டையா நல்லா இருக்கியா?


விஜய்: நான் நல்லா இல்லைங்கண்ணா....


க.மணி: அதான் தெரியுமே சிம்கார்ட் தலையா......ஊதி போன பலூன் மாதிரி இருக்கிற உன் மூஞ்சிய கேக்கல நான்....சும்மா நல்லா இருக்கியான்னு நலம் தான் விசாரிச்சேன்......


விஜய்: கிண்டல் பண்ணாதிங்க அண்ணே...நான் நடிச்ச படம்லாம் ஓடலன்னு நானே கவலைல இருக்கேன்....நீங்க வேற....


க.மணி: அட போண்டா வாயா.....நீ எல்லாம் படத்துல பண்றதுக்கு பேரு நடிப்புனு நெனச்சிக்கிட்டு இருக்கியா ? கலிகாலம்டா கடவுளே......


விஜய்: சும்மா போங்கண்ணே.....நான் எவ்ளோ கஷ்டப்பட்டு நடிக்கிறேன்.....அதுக்குலாம் ஆஸ்கார் அவார்டே குடுக்கலாம்......


க.மணி: அட தேங்கா தலையா......ஆஸ்கார் என்ன இப்ப புதுசா வந்த கார் மாடல்னு நெனச்சு கிட்டு இருக்கியா?பாருங்க பாவப்பட்ட ரசிகர்களே இவருக்கு ஆஸ்கார் வேணுமாம்......


விஜய்: நீங்க வேணும்னா பாருங்க அண்ணே....நா ஒருநாள் அத வாங்கி காட்டுறேன்....


க.மணி: ஆமா ஆமா ..இந்த உலகத்திலே யாருமே நடிக்காம நீ மட்டும் நடிச்சாலும் உனக்கு அத குடுக்க மாட்டாங்கடா ....குண்டூசி வாயா........


விஜய்: அடுத்த படம் நல்லா ஓடுறதுக்கு ஒரு நல்லா ஐடியா குடுங்கன்னா ....


க.மணி: அடுத்து ராம.நாராயணன் படத்துல நடி ...படம் நல்லா ஓடும்.....


விஜய்: அட போங்கண்ணே...அவரு படத்துல எல்லாம் மிருகங்கள்தான் நடிக்கும்...


க.மணி: அதுக்கு தாண்டா உன்னைய போயி நடிக்க சொன்னேன்....ஆப்ப தலையா...


விஜய்: என்னைய கிண்டல் பண்றதே உங்களுக்கு வேலையா போச்சு அண்ணே....


க.மணி: ஆமா நீ அரசியலுக்கு வர போறதா டகால்டி வேலை காட்டுனியே அது என்ன ஆச்சு.....


விஜய்: அதுலாம் சும்மா ஒரு பப்ளிசிட்டி அண்ணே....அடுத்த படம் வெளியாகும்போது அரசியலுக்கு வந்தாலும் வருவேன்னு ஒரு அறிக்கை விட்டா போதும்....நம்ம ரசிக கூட்டமெல்லாம் அலை போல திரண்டு படம் பார்க்க வருவாங்க இல்ல.......


க.மணி: அட சுண்ணாம்பு வாயா......இதுதான் நீங்க அரசியலுக்கு வர லட்சணமா....


உங்கள எல்லாம் நிக்க வச்சு நெருப்புல அபிசேகம் பண்ணனும்டா.....உன்னோட பேசிகிட்டு இருந்தா நானும் அரசியலுக்கு வருவேன்னு அறிக்கை விட்டாலும் விடுவேன்....ஆளை விடுடா அடுப்பு வாயா......எஸ்கேப் டா.....

11 நவம்பர் 2010

தீபாவளி படங்களின் வசூல்.........


சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் எந்திரன் நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. ர‌ஜினி படம் சில வாரங்களிலேயே முதலிடத்தை தவறவிட்டது ஆச்ச‌ரியம். என்றாலும் எந்திரனின் இதுவரையான வசூல் அசரடிக்கிறது.

5. வல்லக்கோட்டை : அர்ஜுன் இன்னும் எத்தினை நாளைக்குதான் இதுமாதிரி நடித்து மக்களை மண்டை காய வைக்க போகிறார் என தெரியவில்லை.....

தீபாவளிக்கு வெளிவந்த வல்லக்கோட்டை தனது முதல் மூன்று நாள் வசூலிலேயே தகர்ந்துவிட்டது பெரும் சோகம். ஏ.வெங்கடேஷின் இந்தப் படம் ஆ‌க்சன் கிங் இருந்தும் பாக்ஸ் ஆஃபிஸில் பணாலானது ஆச்ச‌ரியமே. இதன் முதல் மூன்று நாள் சென்னை வசூல் 11.13 லட்சங்கள்.

4. எந்திரன் : ரஜினி படங்களின் உச்ச கட்ட சாதனை......

ஷங்கர், ர‌ஜினி, ரஹ்மான் காம்பினேஷனில் வந்திருக்கும் எந்திரன் தனது ஐந்தாவது வாரம் வரை சென்னையில் மட்டும் 15.8 கோடிகளை வசூலித்துள்ளது. இது தமிழ் சினிமா ச‌ரித்திரத்தில் மிகப் பெ‌ரிய சாதனை. இதன் சென்ற வார இறுதி மூன்று நாள் வசூல், 26.2 லட்சங்கள்.

3. மைனா : சின்ன படத்தின் பெரிய வெற்றி.......

தீபாவளிப் படங்களில் சிறந்த படம் என பாராட்டப்படும் மைனா முதல் மூன்று தினங்களில் மூன்றாவது இடத்தையே பிடித்துள்ளது. ரசிகர்கள், ஊடகங்கள் என அனைத்துத் தரப்பினரும் பாராட்டுவதால் மைனா முதல் இடத்துக்கு தாவும் சாத்தியம் அதிகமுள்ளது. இதன் முதல் மூன்று நாள் வசூல், 37 லட்சங்கள்.

2. வ - குவாட்டர் கட்டிங்: போதை இன்னும் ஏறவே இல்ல..........

மிகுந்த எதிர்பார்ப்பை கொடுத்து அதைவிட அதிக ஏமாற்றத்தை அளித்திருக்கும் படம் வ - குவாட்டர் கட்டிங். படத்தில் நடித்தவராலேயே பைத்தியகாரத்தனமான படம் என புகழப்பட்டிருக்கும் இப்படத்தின் முதல் மூன்று நாள் வசூல், 43.2 லட்சங்கள்.

1. உத்தமபுத்திரன் : போக போகத்தான் தெரியும்.........

தீபாவளிக்கு வெளிவந்த சுமாரான படங்களில் இதுவும் ஒன்று. தனுஷ் நடித்திருப்பதால் படத்துக்கு அமோகமான வரவேற்பு. இது இனிவரும் நாளில் தொடருமா என்பது சந்தேகமே. இதன் முதல் மூன்று நாள் வசூல், 59.4 லட்சங்கள்.

10 நவம்பர் 2010

அங்கீகரிக்கப்படவேண்டியவர்களா? பிரபுதேவாவும் நயன்தாராவும்?


பிரபுதேவாவும் நயன்தாராவும் திருமணம் செய்ய போகிறார்கள் என்பதே இப்போது கோலிவுட்டின் ஹாட் நியூஸ்.....

ஆனால் இந்த திருமணம் நல்லா திருமணமா? இல்ல கள்ள திருமணமா?

ஏம்மா நயன்தாரா உனக்கு பிரபுதேவாவை விட்டா வேற ஆளே கிடைக்கலையா?
அடுத்தவர் கணவர் மீது உனக்கு ஏன் இந்த ஆசை?ஒரு பெண்ணின் வாழ்க்கையை
சீரழித்துவிட்டு உனக்கு அப்படி ஒரு வாழ்க்கை தேவையா?காதலித்து மணந்த மனைவியை உனக்காக உதறும் பிரபுதேவா நாளை வேற ஒரு பெண்ணுக்காக உன்னை உதற மாட்டார் என என்ன நிச்சயம்?

ஏம்ப்பா பிரபுதேவா உனக்கு எல்லாம் மனசாட்சியே இல்லையா? ஒருத்தனுக்கு ஒருத்தி என்ற உன் ஹீரோ தனமெல்லாம் படத்தில் மட்டும்தானா?உன் வாழ்கையில் இல்லையா? திருமணம் ஆகிய உங்களை விரும்பும் நயன்தாரா நாளை திருமணம் ஆகாத வேற ஒரு ஆளை விரும்பமாட்டார் என என்ன நிச்சயம்?

சட்டத்தாலோ ,சமுகத்தாலோ இவர்கள் கணவன் மனைவியாக வாழ முடியாத நிலையில் சமிபத்தில் நடந்த ஒரு விருது வழங்கும் விழாவில் கள்ள ஜோடியான இவர்களை சிறந்த ஜோடி என அறிவித்து அவ்விருதுக்குழு பரிசு கொடுத்தது.... கட்டின பொண்டாட்டி இருக்கும்நிலையில் இவர்கள் எப்படி தம்பதி ஆக முடியும்?என்ன கொடுமை சார் இது?.....

தனது கணவனை தன்னுடன் சேர்த்து வைக்குமாறு பிரபுதேவாவின் மனைவி வழக்கு தொடர்ந்திருக்கும் நிலையில் கலைஞர் டிவி சமிபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு இந்த கள்ள ஜோடியை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தது....பொறுப்பான தொலைகாட்சியாக ,தமிழ் கலாசாரத்தை விட்டு கொடுக்காத !! கலைஞரின் !! தொலைகாட்சி இதை செய்யலாமா?இது நியாயமா கலைஞர் (டிவி) ?
இந்த கள்ள ஜோடியை அங்கீகரிக்கலாமா?

09 நவம்பர் 2010

சிறுவர்களை கொன்றவன் என்கவுன்ட்டர் ....போலீஸ் அதிரடி.....


கோவையில் கடந்த வாரம் ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்களை கடத்தி கொலை செய்த கொலைகாரன் இன்று காலையில் போலீசால் சுட்டு கொல்லப்பட்டான்.....

நீதிமன்ற காவலில் இருந்த அவனை போலீஸ் விசாரணைக்காகஇன்று அதிகாலை அலைத்துசென்றது......அப்போது போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் போலீஸ் அவனை சுட்டு கொன்றது......

இது நாடகம் என்பது அனைவருக்கும் தெரியும்.....ஆனால் இந்த மாதிரி நாய்களை இப்படிதான் சுட்டு கொள்ள வேண்டும்......வழக்கம்போல் போலீஸ் தனது கடமையையும் ,பொதுமக்களின் உணர்வுகளையும் சேர்த்து செய்துள்ளது......

இதுதான் எனக்கு சரியான தண்டனையாக தெரிகிறது ....சிறுவர்களை ஈவு இரக்கமில்லாமல் அதவும் பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற அந்த கல்நெஞ்சு காரனுக்கு இதுதான் நியாயமான தண்டனை......இதைவிட்டுவிட்டு கோர்ட்டு, வழக்கு என தேவையில்லாமல் அரசு நேரத்தை,பணத்தை செலவழிக்காமல் இந்த மாதிரி கொடியவர்களுக்கு என்கவுன்ட்டர் தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும்.....இப்போதுதான் அந்த சிறுவர்களை இழந்த பெற்றோர்களின் மனம் சற்று நிம்மதி அடையும்.......

இனி இந்த மாதிரி குற்றங்களும் குறையும்.....இது சரியான தண்டனைதானே நண்பர்களே.....

07 நவம்பர் 2010

தமிழ் பெயர் மட்டும் போதுமா?

தமிழில் பெயர் வைத்தால் வரிசலுகை என அரசு அறிவித்ததால் என்ன என்ன கூத்து நடக்கிறது.....ஒரு எழுத்தை மட்டும் தமிழில் வைத்துக்கொண்டு அதற்கு கீழ என்ன என்னமோ எழுதிக்கொண்டு வரிசலுகை பெற்று கொள்கிறார்கள்?இதனால் அரசுக்கு என்ன பயன்?

எதற்காக கொடுக்க வேண்டும் வரிச்சலுகை? சினிமா தொழில் என்ன நலிந்து போன தொழிலா? இல்ல படம் எடுப்பவர்கள் அரசுக்கு வரி கட்ட முடியாதவர்களா?இதனால் மக்களுக்கு என்ன பயன்? தமிழில் பெயர் வைத்தால் மட்டும் தமிழ் வளர்ந்து விடுமா என்ன?

தமிழில் பெயர் வைத்துக்கொண்டு வன்முறை,ஆபாசம் ,கொலை, கொள்ளை போன்ற இளைய சமுதாயத்தினரை வழிகெடுக்கும் காட்சிகள் எல்லா படங்களிலும் வந்துகொண்டுதான் இருக்கின்றன.......அதை தடுப்பதற்கு அல்லது அக்காட்சிகள் குறைவாக இருப்பதற்கு ஏதாவது செய்தால் என்ன?

நிச்சயமாக சினிமாவில் வரும் வன்முறை,ஆபாசம் போன்றவற்றால் இளைய சமுதாயம் சீரழிந்துதான் போகிறது....படத்தில் வருவது போல ஹெல்மெட் போட்டுக்கொண்டு கொலை செய்கிறார்கள்.....குழந்தைகளை கிட்னாப் செய்கிறார்கள்..இதற்கெல்லாம் சினிமாதான் காரணமா ? என்று கேட்கலாம்...ஆனால் சினிமாவும் ஒரு காரணம்தான்........

வன்முறை,ஆபாசம் இல்லாமல் வரும் படத்திற்கு வரிசலுகை அறிவித்தால் என்ன? அல்லது இக்காட்சிகள் குறைவாக இடம்பெறும் படத்திற்கு வரிசலுகை அறிவிக்கலாமே?செய்யுமா அரசு?

06 நவம்பர் 2010

அஜித்தின் அதிரடி பேச்சு.....

கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் அஜித் பேசிய பேச்சு பலத்த விமர்சனத்திற்கு உள்ளானது......அதேசமயம் உண்மையை தைரியமாக பேசியதால் அவருக்கு ஆதரவும் கூடியது.......

பின்பு சமரசமானது தனிக்கதை......அந்த காரசாரமான பேச்சுதான் இது......

பிரபாகரன் தாயாரின் தற்போதைய நிலை.....விடுதலைபுலிகளின் தலைவராக மட்டுமல்லாமல் ஒடுக்கபட்ட உலகத்தமிழர்களின் தலைவராக தமிழர்கள் அனைவரின் மனதிலும் வாழ்ந்துகொண்டிருப்பவர் பிரபாகரன்........


இங்குள்ள அரசியல்வாதிகளை போல சுயநலம் கருதாமல் தனது குடும்பத்திற்கு கோடிகணக்கில் சொத்துக்கள் சேர்க்காமல் பொதுநலம் கருதி தனது வாழ்நாள் முழுதும் வாழ்ந்தவர் பிரபாகரன்........


அப்படிப்பட்டவரின் தாயார் இன்று பக்கத்தில் இருந்து கவனித்துக்கொள்ள சொந்த பந்தங்கள் இல்லாமல் மருத்துவமனையில் தனது இறுதிக்காலத்தை கழித்து கொண்டிருக்கிறார்.... பக்கவாதம் மற்றும் நினைவு சரியாக இல்லாத நிலையிலும் தனது பிள்ளைகள் தன்னை வந்து பார்ப்பார்களா என எதிர்ப்பார்த்து நாட்களை எண்ணி கொண்டிருக்கிறார்........ஆனால் இதுவரை
பிரபாகரனின் சகோதரியோ,சகோதரோனோ, தனது தாயாரை வந்து பார்க்கவில்லை
இனி எப்போது வந்து பாக்க போகிறார்கள்......அவர்கள் இருவரும் வெளிநாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்துக்கொண்டிரிப்பவர்கள்.......தங்களது தாயாரை தங்களுடன் அழைத்துக்கொண்டுபோக என்ன தயக்கம்.....ஏன் இந்த காலதாமதம்?

இனியும் தாமதிக்காமல் உலகதமிழர்களின் ஒப்பற்ற தலைவரின் தாயாரை தங்களுடன் அழைத்துக்கொண்டுபோய் கவனித்து கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.......செய்வார்களா பிரபாகரனின் கூட பிறந்தவர்கள்?

05 நவம்பர் 2010

அஜித்தின் பில்லா....மீண்டும்...

அஜித் நடித்த பில்லா சூப்பர் ஹிட் ஆனதை தொடர்ந்து மீண்டும் அதே கூட்டணி பில்லா பார்ட் டூ வில் இணைகிறது......

மறைந்த தயாரிப்பாளர் கே பாலாஜியின் மகன் சுரேஷ் பாலாஜி இப்படத்தை தயாரிக்கிறார்......விஷ்ணு வர்தன் டைரக்ட் செய்கிறார்........யுவன் ஷங்கர் ராஜா இசை அமைக்க நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்........

இது பற்றி கூறிய தயாரிப்பாளர் சுரேஷ் ,ரஜினியை வைத்து பில்லா பார்ட் டூ தயாரிப்பது தனது தந்தையின் கனவாக இருந்தது என்றும் இப்போது அஜித்தை வைத்து தான் அதை எடுப்பதாகவும் தெரிவித்தார்.......
பில்லா படத்தை விட இது பல மடங்கு ஸ்டைல் ஆகவும், பிரம்மாண்டவாகவும் இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.....

மங்காத்தா படம் முடிந்தவுடன் இப்படம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.....

03 நவம்பர் 2010

சிரிப்பு போலீசா? சீரியஸ் போலீசா?

சென்னையில் நேற்று சிறுவன் கடத்தப்பட்டு பின்பு பணம் கொடுத்து மீட்கப்பட்டான்........ஆனால் நேற்று கடத்தல் காரர்களை போலீசால் கைது செய்ய முடியவில்லை.....படத்தில் வருவது போல நேற்று போலீஸ் எல்லாம் முடிந்து போன பிறகு வந்து கடத்தல்காரர்களை பிடிக்காமல் கோட்டை விட்டனர்....

இதற்க்கு சிறுவனை உயிருடன் மீட்பதற்காகவே அவர்களை தப்பிக்க விட்டோம் என கூறினர்


இந்நிலையில் நேற்று போலீஸ் கூறியதுபோலவே கடத்தல்காரர்களை இன்று கைது செய்து தாங்கள் சிரிப்பு போலீஸ் அல்ல ,சீரியசான போலீஸ் தான் என்பதை காவல்துறை நிருபித்துள்ளது...... கொடுக்கப்பட்ட பணமும் மீட்கப்பட்டது.........

இதுபோல் சம்பவம் தொடராமல் தடுக்க வேண்டியதே இப்போது காவல்துறையின் தலையாய கடமையாகும்......

சிரிக்காமல் பார்க்கவும்.....

02 நவம்பர் 2010

ஏன் இந்த கோபம் விஜய்?

காமெடி கட்சிகள்......


காமெடி கட்சிகளில் என்றைக்குமே முதலிடம் நம்ம காங்கிரஸ் தான்...கட்சியில் உள்ள தொண்டர்களைவிட கோஷ்டி தலைவர்கள்தான் அதிகம்.....அதுவும் இப்ப தலைவராக உள்ள தங்கபாலையாருமே மதிப்பதில்லை.....இளங்கோவன் ,வாசன்,சிதம்பரம் என கோஷ்டிகளுக்கு அளவே இல்லை....காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லியே நாற்பது ஆண்டுகளாக கட்சி நடத்துபவர்கள் நம்ம காங்கிரஸ்மட்டுமே...

அடுத்ததாக நம்ம சரத்குமார்.....அவர் எதற்கு கட்சி ஆரம்பித்தார் என அவருக்கே தெரியாது.....தனது பிறந்தநாளுக்கு அடுத்த கட்சி தலைவரான கருணாநிதியை நேரில் சந்தித்து ஆசி வாங்கிய ஒரே கட்சி தலைவர் நம்ம ஆளுதான்......

அடுத்து நம்ம டிஆர்....அவரது கட்சில அவர் மகன் சிம்பு கூட உறுப்பினரா இல்ல.....வரும் தேர்தலில் அவரின் அதிரடி சவால்களை ஆட்டம் கொண்டாட்டங்களை சந்திக்க நாம் யாவரும் தயாராக இருக்க வேண்டும்.....

அடுத்து நம்ம வைக்கோ ...பாவம் அவர்.....தனது கட்சி எம் எல் ஏ இறந்து போன தொகுதிக்கு இடைதேர்தல் வந்தபோதுகூட மீண்டும் அவர் கட்சி போட்டி இடவில்லை....அதிமுக தான் போட்டியிட்டது....அதுவும் செய்திதாள்களில் படித்துதான் அவர் தெரிந்துகொண்டிருப்பார்....அந்த அளவுக்கு அதிமுக வின் கொள்கை பரப்பு செயலாளர் ஆகிவிட்டார்......தன்னை சிறையில் தள்ளிய ஜெயலலிதாவுடன் அவர் கூட்டணி வைத்து தனது நம்பகத்தன்மையை இழந்து ஜெயலலிதா பின்னாடி ஓடி கொண்டிருக்கிறார்........

அடுத்து மானம்கெட்ட ராமதாஸ்...... தனது மகனுக்கு எம்பி சீட் வாங்குவதற்காகவே கட்சி நடத்துபவர்.......விஜயகாந்தை நடிகன் என்று வசைபாடிவிட்டு இப்போது அவர் பின்னால ஓடுறதுக்கு ரெடியாக இருக்கார்......

அப்புறம் நம்ம கம்யுனிஸ்ட்,திருமா வளவன் போன்றவர்கள் அடிக்கடி முகாம் மாறி அவ்வப்போது வந்து நம்மை கிச்சு கிச்சு மூட்டுவார்கள்...
என்ன பண்ணுவது இந்த கட்சிகளின் கூத்துகளை எல்லாம் நாம் சகித்துத்தான் ஆக வேண்டும்....ஏன்னா நம்மதான் தமிழர்கள் ஆச்சே.......

01 நவம்பர் 2010

விஜயின் பல வேடங்கள் !!!

எப்படி இப்படி எல்லாம் கேப்டன்?

துருவங்கள் ஒன்றாக ....சில அபூர்வ படங்கள்...

இது அடுத்த தலைமுறையின் தூய(? ) நட்பு......
இந்த தலைமுறையின் தூய நட்பின் எடுத்துகாட்டு.......

சென்ற தலைமுறையின் நட்பு.... யாராலும் நம்மளை பிரிக்க முடியாது என சொல்லுகிறாரோ????


இதுபோல் ஒரு அபூர்வ காட்சி இன்றைய அரசியலில் நடக்குமா....?பெரியாருடன் ராஜாஜி..... இரண்டுபேரும் எதிரெதிர் துருவங்கள்......
இணைபிரியா நண்பர்கள்....

அது ஒரு கனாகாலம்......


மூன்று முதல்வர்கள் ஒன்றாக........இணைபிரியா நண்பர்களாக....