16 நவம்பர் 2010

மூன்று முட்டாள்களில் விஜய்யும் ஒருவர்...ஷங்கர்..


டிசம்பர் 5 ஆம் தேதி டெல்லியில் 3இடியட்ஸின் தமிழ், மற்றும் இந்தி ‌ரிமேக்கை தொடங்குகிறார் ஷங்கர். படப்பிடிப்பு எந்த இடத்தில் நடைபெற இருக்கிறது என்பது இன்னும் முடிவாகவில்லை....
முதன்முதலாக ஒரு ரீமேக் படத்தை ஷங்கர் இயக்குவதால் அவரின் தனிப்பட்ட முத்திரை இப்படத்தில் இருக்குமா என தெரியவில்லை......

3இடியட்ஸின் தமிழ் ‌ரிமேக்கில் விஜய், ஆர்யா, ‌‌ஜிவா நடிக்கின்றனர். தெலுங்கில் மகேஷ்பாபு அமீர் நடித்த வேடத்தில் நடிக்கிறார். மற்ற இரு வேடங்களில் தமிழில் நடிக்கும் ஆர்யா, ‌‌ஜிவாவை பயன்படுத்த ஷங்கர் திட்டமிட்டுள்ளார்.

ஆனால் மூன்று முட்டாள்கள் ( தமிழில் இதுதானே கரெக்ட் அப்பதானே வரிவிலக்கு கிடைக்கும்) வேடத்திலும் விஜய் நடிக்கலாம்.....என்பது என் கருத்து ...என்னங்க முட்டாள் வேடத்துக்கு விஜய் சரியான சாய்ஸ் தானே......ஹி ஹிஹி......

தனது மற்ற படங்களைவிட இதில் காமெடிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க தீர்மானித்துள்ளார் ஷங்கர்.

விஜய்யை தவிர்த்து மற்ற அனைவரையும் தமிழ், தெலுங்கு இரு பதிப்பிலும் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் ஷங்கர். இதில் ஹீரோயின் இலியானாவும் அடக்கம். ஆர்யா, ‌‌‌‌‌‌ஜீவா, தமிழ் காமெடி நடிகர்கள் என தெலுங்கிலும் தமிழ் நடிகர்கள் ஆதிக்கம் அதிகம்......

பார்ப்போம் மூன்று முட்டாள்கள் எப்படி இருக்க போகிறார்கள் என்று.......

3 கருத்துகள்:

 1. தொப்பி தொப்பியின் இந்த காமெடி படிக்கவும்
  இயக்குநர் ஷங்கர் - நான் இதுவரைக்கும் எடுத்த எல்லா படங்களும் சூப்பர் ஹிட்ஸ்,ஒரு படம் கூட இது வரை ஃபிளாப் ஆனதில்லை.


  விஜய் - அது நேத்து வரைக்கும்,இப்போதான் என்னை வெச்சு 3 இடியட்ஸ் படம் பண்றீங்களே,மறந்துட்டீங்களா?

  பதிலளிநீக்கு
 2. இப்படியே அடுத்தவன் படத்தில நடிக்கிறதுன்னே தீர்மானம் பண்ணிட்டாரு நம்ம சுரா!

  3 ஹீரோக்கள் நடிக்க முன்வந்ததுக்கு பாராட்ட வேண்டும் (தமிழில் இது எப்போதாவது நடக்கும் அசம்பாவிதம்)

  //என்னங்க முட்டாள் வேடத்துக்கு விஜய் சரியான சாய்ஸ் தானே.//
  என்னங்க இப்படி கேட்டுபுடீங்க? கர்பூர சத்தியமடிச்சு சொல்லுவேன். சொன்னதெல்லாம் உண்மை.உண்மை தவிர வேறொன்றுமில்லை :)

  பதிலளிநீக்கு
 3. அப்போ விஜய் முட்டாள்ன்னு சொல்றீங்களா...

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....