13 நவம்பர் 2010

ஸ்பெக்ட்ரம்...நடப்பது என்ன?


ஸ்பெக்ட்ரம் ....இந்த வார்த்தையினால் இன்று தமிழக அரசியல் மட்டுமல்ல இந்திய அரசியலும் ரணகள பட்டுக்கொண்டிறிக்கிறது ... ஸ்பெக்ட்ரம் முறைகேட்டினால் ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது......இதில் தொடர்புடைய மத்தியமந்திரி ராஜா பதவி விலக வேண்டுமென எதிர்கட்சிகள் ஆர்பாட்டம் நடத்தி கொண்டிருக்கின்றன...


ராஜாவை பதவியை விட்டு நீக்கினால் அதிமுக மத்திய அரசுக்கு ஆதரவு அளிக்கும் என்று ஜெயலலிதா காங்கிரஸ் கட்சிக்கு வலியப்போய் ஆதரவு குடுத்து வாங்கி கட்டி கொண்டார்.....


கருணாநிதியோ இதில் ராஜா குற்றவாளி இல்லை என்றும் ,பதவி விலக தேவை இல்லை என்றும் ,இதற்க்கு முன் இத்துறைக்கு மத்திய அமைச்சராக இருந்த பிரமோத் மகாஜன், அருண் சோரிஆகியோர் டெண்டர் விடாமல் பின்பற்றிய நிலையே தற்போது ராஜா பின்பற்றியதாகவும் குறிப்பிட்டுள்ளார்....


ஏங்க உங்களுக்கு முன்னாடி உள்ளவங்க டெண்டர் விடாமல் முறைகேடு பண்ணினால் நீங்களும் அதை தொடர்ந்து பண்ணனுமா? இந்த முறைகேட்டினால் அரசுக்கு வருமான இழப்பு ஏற்படும் என தெரிந்தும் அந்த முறையை ராஜா பின்பற்றியது தவறா இல்லையா கலைஞர் அய்யா? உங்களுக்கு என்ன ராஜா அடித்த காசில் உங்களுக்கும், உங்க குடும்பத்திற்கும் பங்கு வந்தாச்சு .....அரசுக்கு வர வேண்டிய வருவாய் எப்படி போனால் உங்களுக்கு என்ன?...

நீங்கள் உண்மைலேயே தவறு செய்ய வில்லை என்றால் நீதிமன்றமே ராஜா மீது பாய்வதன் காரணம் என்ன? இதற்க்கு பிறகும் பதவியில் நீடிக்கலாமா? தவறு செய்யவில்லை எனில் பதவியை விட்டு விலகி நாங்கள் சுத்தமானவர்கள் ,எங்கள் மீது அபாண்ட குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.....அதனால் இந்த பதவி எங்களுக்கு வேண்டாம் என தூக்கி வீச தயாரா?


5 கருத்துகள்:

 1. ஏன் சார் உங்களுக்கு விஷயே தெரியாதா? கனிமொளியதான் ராஜா வச்சுருக்காரே...அப்பறம் எப்டி கருணாநிதி மருமகனை பதவி விலக சொல்லுவாரு.

  பதிலளிநீக்கு
 2. பாராளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்று சொல்வதை எதிர்க் கட்சிகள் எதிர்ப்பது ஏன் ? உண்மைகள் வெளிவர அது தானே வழி. உண்மைகளை உள்ள படிச் சொல்லாமல் பத்திரிக்கைகளிலேயே தீர்ப்பளித்து விடுவதுதான் முறையா? முதலில் உண்மைகள் வெளி வர வேண்டும். கண்டபடி எண்களைப் பயன் படுத்தி இழப்பு,இழப்பு என்பது உண்மையா?

  பதிலளிநீக்கு
 3. Raja : நான் பலமுறை எழுப்பும் கேள்விதான் இங்கும்... இந்தத் துறையில் நான் மட்டும் ஏன் கடுமையாக விமர்சிக்கப்படுகிறேன்... குற்றம் சாட்டப்படுகின்றேன்.? புதிதாக நான் ஏதாவது சட்டம் கொண்டு வந்தேனா? அல்லது இருக்கிற சட்டத்தை தூக்கியெறிந்து விட்டேனா? இல்லையே! ஸ்பெக்ட்ரம் அலைவரிசை இருப்பை வெளியுலகுக்கு காட்டாமல் மறைத்து வைத்துவிட்டு ஏர்டெல், ஏர்செல், வோடஃபோன், ஐடியா போன்ற ஏற்கனவே இருக்கும் நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து தொலைபேசி சேவை வழங்கினால் தொலைபேசி இணைப்புகளின் எண்ணிக்கையும் உயராது. மக்கள் அளிக்கவேண்டிய கட்டணமும் குறையாது. அதனால் புதிய நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படவேண்டும் என்ற ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கையை பிடிவாதமாக இருந்து நிறைவேற்றினேன். கால் நூற்றாண்டு காலமாக தங்கள் கையில் மட்டுமே இருந்த தொழில், இன்னும் சிலபேருக்கு கை மாறுகிறது என்ற கோபத்தில் - ஒரு வர்த்தக கூட்டு உடைக்கப்படுகிறது என்ற எரிச்சலில் சிலர் இருந்திருக்கலாம். இது இயற்கையான, சராசரி வியாபார உணர்ச்சிதான் அதன் விளைவுகளையும் நான் எதிர்கொள்ளத்தான் வேண்டும்.

  பிரதமர் இதுகுறித்து நன்றாகவே அறிவார். இந்த முயற்சியில் நான் இறங்காமல் இருந்திருந்தால் எனக்கு பிரச்சனையே இருந்திருக்காது. நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி வந்தபோது, நான் தேங்கிக் கிடக்கும் சாக்கடையாக இந்தத் துறையில் இருக்க விரும்பவில்லை. நீரோட்டத்தில்தான் மின்சாரம் வெளிப்படும். என்று குறிப்பிட்டு இருக்கிறேன். அது மட்டுமல்ல இந்தத் துறையில் எவ்வளவு அலைவரிசை கையிறுப்பு இருக்கிறது என்று முதன்முதலில் இணையதளத்தில் வெளியிட்ட இந்தக் துறையின் ஒரே அமைச்சர் நான்தான் என்பதையும் நாடாளுமன்றத்தில் பதிவு செய்துள்ளேன். இவையெல்லாம் சிலருக்கு தொழில்ரீதியான பின்னடைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம்... அதன் காரணமாகவும் நான் குறி வைக்கப்படுகின்றேன்.

  2ஜி என்பது பொது விநியோகத்திட்டத்தில் வழங்கப்படும் அரிசி போன்றது. 3ஜி என்பதோ பிரியாணிக்கு பயன்படும் உயர்தர பாசுமதி அரிசிபோல! பொதுவிநியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒருரூபாய்க்கு வழங்கப்படுகிறது. என்பதற்காக பாசுமதி அரிசியை ஒப்பிடு காட்டி ஒரு ரூபாய் அரிசி விநியோகத்தால் அரசுக்கு நஷ்டம் என்று சொன்னால் ஏற்றுக்கொள்வீர்களா? 2ஜி சேவை எனபது சதாரண மனிதனுக்கும் போய்ச் சேரவேண்டிய குரல் சேவை. 3ஜி என்பது வர்த்தக ஆவணங்களை அனுப்புவதற்க்கும், விடியோ சினிமா போன்ற உயர்ரக சேவைக்கும் உரியது. 2ஜி சேவை கல்வி, சுகாதாரம், கிராமிய வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கடைசி மனிதனுக்கும் பயன்படவேண்டிய ஒன்று 3ஜி என்பது வர்த்தகம் சார்ந்த மற்றும் வசதி படைத்தவர்களுக்கு சேவை அளிக்கக் கூடியது. ஒழுங்குமுறை ஆணையம் உலக நாடுகளில் உள்ள நடைமுறைகளை எல்லாம் கருத்தில்கொண்டுதான், 3ஜி அலைவரிசையை ஏலம் விட வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இப்போதைய இந்தியாவின் சமூகப் பொருளியல் புள்ளி விவரங்களின் அடிப்படையில் சாதாரண குரல் வழி சேவை வழங்கும் 2ஜி சேவைதான் சாதாரண சாமானிய மக்களுக்கு தேவையே தவிர 3ஜி அல்ல! இன்னுமொரு 10,20 ஆண்டுகள் கழித்து நிலைமை மாறலாம். 1994-ம் ஆண்டு 2ஜி சேவை வந்தபோது எத்தனை பேர்கள் செல்போனை பயன்படுத்தினார்கள்? இப்போது நிலை என்ன? அதேபோல கல்வி அறிவும், தொழில்நுட்பதாக்கமும் சாதாரண மக்களிடையே உயருமானால் இன்னும் சில ஆண்டுக்குப் பிறகு 3ஜி சேவை கூட எளிதாக்கப்படலாம்; பட வேண்டும். அப்போது 4ஜி சேவையும் வந்துவிடும். இது குறித்து ஒழுங்குமுறை ஆணையம் உரிய முடிவுகளை சூழலுக்கு ஏற்ப எடுக்கும் இப்போதைய ஒழுங்கு முறை ஆணையத்தின் முடிவின்படி 3ஜி ஏலம் விடப்படுகிறது.

  தொலைபேசி இணைப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது மட்டுமல்லாமல்... கட்டணம் குறைந்துள்ளது. நாட்டில் எல்லா பொருளும் விலை ஏற்றத்தில் உள்ளன,. ஆனால், தொலைபேசிக் கட்டணம் மட்டுமே குறைந்து கொண்டே இருக்கிறது. மேலும் பல வசதிகள் கிடைக்கவுள்ளது. உள்ளூர் அழைப்பு 10 பைசாவுக்கும், அகில இந்தியக் கட்டணம் 25 பைசாவுக்கும் விரைவில் வரவுள்ளது.

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் உண்மைலேயே தவறு செய்ய வில்லை என்றால் நீதிமன்றமே ராஜா மீது பாய்வதன் காரணம் என்ன? இதற்க்கு பிறகும் பதவியில் நீடிக்கலாமா? //

  நியாயமான கேள்வி..

  பதிலளிநீக்கு

உங்களின் பின்னூட்டமே என்னோட முன்னேற்றம்....